Originally Posted by
DHANUSU
4. மருட்கை (வியப்பு)
வியப்பு என்பது புதுமைகண்டும், மிகப்பெரியது கண்டும், மிகச்சிறியது கண்டும், மனித செயல்களினால் விளையும் அரும் பொருள்கள் கண்டும் பிறக்கும் என்ற தொல்காப்பிய உரையையும், ‘முன்னர் காணப்படாத ஒன்றைக் கொண்டு உண்டாகும் மனவிரிவு’ என்ற தண்டியலங்கார உரையையும் அறிவால் விளையாத்தே வியப்பு என்றும் கண்டோம்.
ஆனால் பாடல் வடிவங்களை தண்டியலங்கார உரையைவிட பேராசிரியரன் வழிநின்றே வழங்க வாய்ப்புகள் அதிகம்.
அ. புதுமை
இயற்கையின் படைப்பில் என்றும் புதமையானதும் – வியக்கத் தக்கதுமான பொருள் ஒன்றே ஒன்றுதான். அதுவே பெண்மையின் அழகு. எது அழகு என்பதில்மனிதனுக்கு கருத்து வேறுபாடு வரலாம். ஆனாலும் ஒரு பெண்ணின் அழகு என்பது புதுமைதான். அதனால்தான் பெண்ணின் அழகை ஆராய்ந்து பார்க்க இயலாது.
“அம்மா………..டி…………….
பொண்ணுக்குத் தங்க மனசு
பொங்குது சின்ன வயசு
கண்ணுக்கு நூறு வயசு – அவள்
சொல்லுக்கு நாலுவயசு….”
என்று பாடி தன் வியப்பை வெளிப்படுத்துகிறான். வியப்பின் வடிவம் வெளிப்படும் இப்பாடல் ‘ராமன் எத்தனை ராமனடி’ (1970)யில், டி.எம்.எஸ். குரலில் கிடைக்கும்.
ஆ.பெருமை
இயற்கையின் படைப்பில் செயற்றை அழகும் சேர்ந்து மயக்கம் தந்து, மதிமயங்கி வியந்து நிற்கும் மனிதன்,இயற்கையின் பேலெல்லையான காடு, மலை, அருவி இவற்றைக் கண்டு வியப்படையாடு இருக்க முடியுமா? இவையெல்லாம் எப்படி உண்டாயிற்று, யார் உண்டாக்கினார்கள் என்ற கேள்விக்கு விடைதெரியாது, முடிவில்,
“ஆயிரம் கண்போதாது வண்ணக்கிளியே
குற்றால
அழகை நாம் காண்பதற்க வண்ணக்கிளியே”
என வியந்து பாடுகிறான் மனிதன், வியப்பின் வடிவம் கிடைகக்உம் படம் பாவை விளக்கு (1960); குரல் சி.எஸ். ஜெயராமன். இதுவே பெருமை’ கண்டு தோன்றும் வியப்பின் வடிவம்.
இ. ஆக்கம் (செயலால் விளைவது)
தெய்வத்தின் கால் பட்டதும் கல் பெண்ணானதோ இல்லையோ, ஆனால் மனிதனின் கை பட்டும் கல் பெண்ணாவதென்னவோ கண்கூடான உணைம். கரடுமுரடான வடிவமுடைய கருங்கல்லானது, சிற்பக்கலைஞனின் கை வண்ணத்தால் அழகிய வடிவமுடைய பெண்ணாகி, அவனையே மயக்கி, வியப்புக்குள்ளாக்கும். அப்படி வியந்த கலைஞன்தான்-
“மலையே உன் நிலையை நீ பாராய்
கலைஞன் கை உளியாலே
காவியச் சிலையான
மலையே உன் நிலையை நீ பாராய்”
- என வியந்து பாடும் வடிம் வணங்காமுடி (1957) யில் கிடைக்கும்; குரல் சீர்காழி கோவிந்த ராஜன்.
5. அச்சம்
அச்சம் என்பது பேய், விலங்கு, கள்வர், தாய், தந்தை, ஆசிரியன், அரசன், வழிபடும் தெய்வம், தன்தவறு ஆகியவற்றால் விளையும் என்பது தொல்காப்பிய விளக்கம்.
இவ்விளக்கங்கள் அனைத்திற்கும் வடிவம் காணுதல் கடினம் என்பதின் காரணம் என்னவென்று இச்சுவையின் காட்சிகளில் வடுவம் தேடும் பகுதிய்ல கூற்ப்பட்டுள்ளது. அதே அடிப்படையில் பெண் பேய் (பைத்தியக்காரப் பெண்) மற்றும் தன் தவறுக்கான நிலைக்களத்திலிருந்து பிறக்கும் அச்சத்தின் வடிவங்களைக்காணலாம்.
அ. பேய் கண்டு
தன் காதலன் தன்னை ஏமாற்றிவிட்டானென்றும் அவனைப் பழிவாங்காது விடமாட்டேன் என்றும் விரைந்து போனவள் விபத்தில் மாட்டிக்கொண்டு, சுயநினைவை இழந்து பைத்திய்ம கிறாள். அப் பைத்தியக்காரப் பெண் மருத்துவரிடம் அழைத்துச் செல்லப்படும்போது அங்கிருந்த கத்தியை எடுத்து கையில் வைத்துக்கொண்டு மருத்துவரை ஆடவும் – பாடவும் சொல்லி அச்சுறுத்துகிறது. பயந்துபோன மருத்துவர்….
“Ok..Ok……
I wll sing for you
I will dance for you
ஆட்டமென்ன சொல்லு நீ – தோழி நான்
ஆடிடுவேன் கொஞ்ச நாழி! (I wll)”
- என்று பாட ஆரம்பித்து அச்சத்தில் கை, கால்கள் அபிநயக்க வராது ஆடும் இடத்தில் ‘பேய்’ கண்டது போன்ற அச்சத்தின் வடிவத்தைக் காணலாம். இது ‘மனிதரில் மாணிக்கம்(1973) திரைப்படத்தி, டி.எம்.எஸ். குரலில் கிடைக்கும்.
ஆ. தன் தவறுக்காக
ஆத்திரத்தில் மனைவியை ஒரேயொரு அடி அடிக்க சற்றும் எதிர்பாராது இறந்துவிடுகிறாள். அந்த மரணத்தை மறைத்து விடுகிறார். ஆனாலும் அந்தத் தவறு – அந்தக் கொலை அவன் நினைவைவிட்டு அகலாது சுற்றிச்சுற்றி வருகிறது. அச்சத்தால் அவன் நெஞ்சம் தவிக்கிறது. நிம்மதியின்றிப் புலம்புகிறான்.
“எங்கே நிம்மதி! எங்கே நிம்மதி!
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
எங்கே மனிதன் யாருமில்லையோ
அங்கே எனக்கோர் இடம்வேண்டும்(எங்கே)
………………………………………
எனது கைகள் மீட்டும்போது
வீணை அழுகின்றது
எனது கைகள் தழுவும்போது
மலரும் சுடுகின்றது”
என அச்சத்தால் புலம்பும் வடிவம் ‘புதியபறவை’ (1964) யிலும்,
அதேபோன்று தன் மகளின் வாழ்வைக் கெடுத்தவனை ஒரேயொரு அடி அடிக்க, அவன் இறந்துபோக, சட்டத்தின் பிடியிலிருந்து தப்பி ஓடி, தன் நடை, உடை, பாவனைகளையெல்லாம் மாற்றிக் கொண்டு மீண்டும் அதே ஊருக்கே வந்து தன்னை வளர்த்தவரின் ஆசையை நிறைவேற்றும் செயல்கள் புரியும்போது, தன்னைச் சந்தேகிக்கும் நண்பனிடமிருந்து தப்ப முடியாது என்ற எண்ணமும், தன் மகளைத் தானும், தன்னை அவளும் அறிந்தும் ஒன்று சேர முடியாது சட்டத்தின் நெருப்புப் பார்வை தன்மீது பட்டுக்கொண்டேயிருக்க…. நிம்மதியிழந்தவன்,
“தேவனே! என்னைப் பாருங்கள்
என் பாவங்கள் தன்னை வாங்கிக்கொள்ளுங்கள்
ஆயிரம் நன்மை தீமைகள்
நாங்கள் செய்கிறோம் நீங்கள் அறிவீர்
Oh! My Lord! Please Pardon me
தாய்மடியிலே மழலைகள் ஊமையோ
நான் அழுவதா சிரிப்பதா தேவனே
நின் கருணையே திறக்குமா சந்நிதி
ஏன் கர்த்தரே பிறக்குமா நிம்மதி
Oh! My Lord! Please answer my Prayer
மான்களும் சொந்தம் தேடுதே
இம்
மானிடம் செய்த பாவம் என்னவோ!”
என அச்சத்தால் புலம்பும் நவீன நடிப்பு முறைக்கார்ர்க்களான மேற்கு நாட்டினர் குறிப்பிடும் Gestures எனப்படம் அங்க அசைவுகளை எவ்வாறு இந்த இரண்டு பாடல்களிலும் செய்துள்ளார் என்பதை இனிவரும் இயலில் தனியாகக் காணலாம்.
6. பெருமிதம்
இதனை வீரமென்று பொருள் கூறுகிறார் பேராசிரியர். ‘வீர’மாவது மேலான காரியங்களில் உண்டாகும் மனத்துணிவு என்பது தண்டியலங்காரவுரை. கல்வி, வீரம், இசைமை என்ற பழியொடு வருவன செய்யாது, எத்தனை இன்பம் வந்தாலும் புகழொடு வருவன செய்தல், கொடை, ஆகியவற்றால்’பெருமிதம் தோன்றும்.
‘சொல்லப்பட்ட பெருமிதம்’ என்றதனாற் காம்ம் பற்றியும் பெருமிதம் பிறக