மந்திரி குமாரி படத்திலிருந்து - நம் தெய்வத்தின் அழகான தோற்றம்
http://i49.tinypic.com/1zyzuc9.jpg
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்
Printable View
மந்திரி குமாரி படத்திலிருந்து - நம் தெய்வத்தின் அழகான தோற்றம்
http://i49.tinypic.com/1zyzuc9.jpg
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் 22 வது திரைப்படம் "மந்திரி குமாரி" கதைச்சுருக்கம்++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ +++++++++++++++++++++++++++++++++++++++++++
கொள்ளையடிப்பது அவனுக்கு ஒரு கலை. கொலை செய்வது சர்வ சாதாரண பொழுது போக்கு. இப்படி ஒரு கொடியவன் முல்லை நாட்டில் உலவுகிறான்,. மக்களின் தலைகளை பந்தாடுகிறான். நாட்டினரின் ஓலம் அரசன் சாந்தவர்மனின் சபா மண்டபத்துக்கு எட்டுகிறது. சாந்தவர்மன் ஒரு உருட்டு சட்டி பொம்மை.. ஆனால் நல்லவன். கள்வர்களை எட்டே நாட்களில் பிடிக்க வேண்டும் என்று ஆணையிடுகிறான். தளபதி வீரமோகனிடம் உத்தரவு நீட்டப்படுகிறது. ராஜகுரு இடையே தலையிட்டு வேள்வி செய்து கள்வர்களை வேக வைக்கலாமென்கிறார். வீரமோகனின் விவேக மொழிகளுக்கு முன் ராஜகுருவின் பேச்சு எடுபட வில்லை மந்திரி நீதிதேவரும் ராஜகுருவின் யோசனைக்கு மறுப்புரை கூறுகிறார்.
நீதி தேவரின் மகள் தான் அழகே உருவெடுத்த அமுதவல்லி. அவளும் அரசரின் மகள் ஜீவரேகாவும் ஆருயிர் தோழிகள். ஜீவரேகாவுக்கு ஒரு காதலன். ...... வீர மோகன்.
ஜீவாவும் மோகனும் நீல நிலவையும் வசந்த காலத்து தென்றலையும் வீணாக்குவதேயில்லை. அடிக்கடி இன்ப சந்திப்புகள்.
ராஜகுருவின் மகன் பார்த்திபன், ஒரு நாள் மாலை ஜீவரேகாவைப் பார்த்து விடுகிறான். அவள் மீது ஆசை வெறி அலை மோதுகிறது. நதிக்கரையில் தன்னை சந்திக்குமாறு ஓலை எழுதுகிறான். தன் தோழன் அப்பாவியிடம் ஓலையைக் கொடுத்து ராஜகுமாரியின் அந்தபுரத்தில் போடச் சொல்கிறான்.
ஆனால் அங்கு ...... அந்த மடலை மந்திரி குமாரி பார்த்து விடுகிறாள். அவளுக்கு ஜீவரேகாவின் மீது சந்தேகமும், வெறுப்பும் உதயமாகிறது. வீரமோகனையும் - பார்த்திபனையும் தன் வலைக்குள் போட்டுக்கொண்டு, ஜீவரேகா கற்பரசி போல் நடிப்பதாக, அவள் தவறாக நினைக்கிறாள். அதை சோதிப்பதற்காக...... மறுநாள் ஜீவரேகாவை தொடருகிறாள். ஜீவா வழக்கம் போல் வீர மோகனிடம் போகிறாள். அமுதவல்லியை பார்த்திபன் பார்த்து விடுகிறான். காம வேட்டைக்காரனான அவன் ஜீவரேகா வராத கவலையை மறந்து அமுதவல்லியிடம் சரசம் பேசி அவளை மயக்கி விடுகிறான். பார்த்திபனும் அமுதவல்லியும் இப்போது காதலர்கள்.
கள்ளர் கூட்டத்தை தேடிச் சென்ற வீரமோகன், கள்வர் தலைவனை பிடித்து விடுகிறான். யார் அந்த கள்வர் தலைவன் ? தளபதி ஆச்சரியப்படுகிறான். ராஜகுருவின் மகன் பார்த்திபன் தான். அரசனின் சபா மண்டபத்தில் ஒரே குழப்பம். ராஜகுருவின் பசப்பு வார்த்தைகள் -- பாகு மொழிகள் எதுவும் எடுபட வில்லை. மனக்குழப்பமடைந்த மன்னன் வழக்கு விசாரணையை மந்திரி நீதி தேவரிடமே ஒப்புவிக்கிறான். கருணையே உருவெடுத்த நீதி தேவர் காளி பக்தர். நீதி வழங்கும் பொறுப்பை தேவியிடம் அளித்து மன்றாடுகிறார். கள்வனின் காதலியான அமுதவல்லி காட்டாற்று வெள்ளத்தில் அகப்பட்ட துரும்பாகிறாள். துடிக்கிறாள். பார்த்திபன் விடுதலையடைந்து விட்டால் அவனை சீர்திருத்தி விடலாமென நம்புகிறாள். தந்தையிடம் கெஞ்சுகிறாள். சொந்த விஷயத்துக்காக கொள்கையை கொல்லாத நீதி தேவர் பார்த்திபனுக்கு தூக்கு தண்டனை விதிக்கிறார். தேவியின் மீது பாரத்தை போட்டு பிரார்த்திக்க வரும்போது தேவியின் சிலைக்கு பின்னாலிருந்து ஒரு குரல் ...... "பார்த்திபன் குற்றமற்றவன்...... அவனை விடுதலை செய்" என்று கிளம்புகிறது. நிதானமிழந்து நீதி தேவர் மன்னனிடம் ஓடுகிறார். தூக்கு மேடையில் சாவைத் தழுவவிருந்த பார்த்திபன் காப்பற்றப்படுகிறான். வீரமோகனுக்கு ஒன்றுமே விளங்க வில்லை. "தேவியாவது ... பேசுவதாவது" என்று திகைக்கிறான். ராஜகுருவின் எண்ணப்படி வீரமோகன் நாடு கடத்தப்படுகிறான். பார்த்திபன் தளபதியாகிறான். அமுதவல்லிக்கும் கணவனாகிறான், நாடு கடத்தப்பட்ட வீரமோகனை ராஜகுரு ........ மனங்கொண்ட மட்டும் நையப் புடைத்து விட்டு வருகிறார்., இதன் காரணமாய் மன்னருக்கும் குருநாதருக்கும் மனக் கசப்பு வளர்கிறது அந்த நிகழ்ச்சி குருநாதர் மனதில் பேராசைக்கனலை மூட்டுகிறது தானே அரசனாக கனவு காண்கிறார். தீக்கண்ணன் என்ற துரோகி கிடைக்கிறான், அரசனை கொல்ல சூழ்ச்சி முடிவடைகிறது.
காதலனை தேடி ஜீவரேகா ஓடி விடுகிறாள். அவளை இப்போதாவது தனது விருந்தாக்கி கொள்ள நினைத்த பார்த்திபன் அப்பாவியை விட்டு அவளைத் தன் குகைக்கு கொண்டு வரச் செய்கிறான். அவளுடைய கற்பு சூறையாடப்படும் போது, சந்தேகமடைந்து, கணவனைப் பின் தொடர்ந்து குகைக்கு ஆண் உடையில் வந்த அமுதவல்லி குமுறுகிறாள் பார்த்திபனும் அமுதவல்லியும் தீப்பொறி பறக்க பேசுகிறார்கள். அமுதவல்லி ஜீவரேகாவை தன் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறாள். அமுதாவை (அமுதவல்லியை) பழி வாங்க பார்த்திபன் திட்டம் தீட்டுகிறான்.
ஜீவாவை இழந்த வீரமோகன் அவளைத் தேடி அலைகிறான்.
1. அமுதவல்லியை கொன்று விடும் நோக்கத்துடன் அவனிடம் சாகசம் பேசி மருத மலைக்கு அழைத்துப் போகிறான் பார்த்திபன்.
2. இங்கே ஜீவரேகாவைத் தேடிக் கொண்டு அரண்மனைக்குள் நுழைகிறான் வீரமோகன்.
3. வசந்த மண்டபத்தில் உறங்கும் அரசனைக் கொல்ல ராஜகுரு கட்டாரியுடன் நுழைகிறான்.
4. தோழியின் வீட்டில் துடிக்கும் உள்ளத்துடன் குமுறிக் கிடக்கிறாள் ஜீவரேகா.
இவர்களின் முடிவுதான் என்ன ?
பதில் ! திரை சொல்லும்.
================================================== ========================================
இப்படத்தின் பாடல்கள் தொடர்கிறது
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்
Thanks for the information Selvakumar Sir. Even though our beloved Leader is the Hero of this movie S.A.Natarajan part is dominant. In court scene when MGR is trailed the Director of this movie will show only the reaction of MGR from long shot which is unnatural for the scene.
It clearly states that Director did not like our MGR and he wanted to keep our thalaivar profile low.
http://i125.photobucket.com/albums/p...ps63c9cd6f.png
Dear Roop Sir,
It was quite true that the Director Ellis R. Dungan (Doncoln) did not like our beloved God MGR and his natural beauty face. He purposely made our leader, with the thin maslin cloth, to lie on the rock which was so hot, during the day time shooting, in the fighting scene between our affectionate Leader MGR and S.A. Natarajan. With all such insults, he patiently waited for his time to attain a great success in the Tamil Cine Field. He did it and touched the peak. But he never betrayed anybody who Affronted, Abused , Dis-respected , ill-treated, harmed, battered him. Instead he had shown forgiveness and exhonerated everything.
When he was an unbeaten Chief Minister of Tamil Nadu, the so called Director Ellis R. Dungan approcahed him for Help. Our great MGR respected him by way of raising from his Chief Minister Seat and welcomed him at the entrance of his CM's Office.
This incident was already narrated under the topic "இன்னா செய்தாரை ஒறுத்தல் - அவர் நாண நன்னயஞ் செய்து விடல் in the Makkal Thilagam MGR Part - 4 Thread recently.
By virtue of our beloved God's such Acts, he is still remembered and live in the hearts of many people (especially the Tamilians) in the World
Ever Yours : S. Selvakumar
Endrum M.G.R.
Engal Iraivan .