-
Quote:
Originally Posted by
makkal thilagam mgr
ஊருக்குத்தான் உபதேசம் என்றில்லாமால் தானே முன்மாதிரியாக திகழ்ந்து, புரட்சித்தலைவர் பச்சை குத்திகொண்டபோது எடுத்த படம் :
http://i57.tinypic.com/28k1u75.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
நண்பர்களுக்கு வணக்கம்.
திரு.எஸ்.வி.சார், உலகம் சுற்றும் வாலிபன் பற்றிய நினைவலைகள் அருமை. வாலிபனைப் பற்றிய திரு.ராமமூர்த்தி சார் அவர்களின் நாளிதழ் பதிவுகள் அற்புதம். அதிலும் ஹாங்காங்கில் தலைவருக்கு வரவேற்பு என்ற செய்தியில், நாகேஷ் பிறந்த நாளையொட்டி அவருக்கு தலைவர் வைரமோதிரம் பரிசளித்த தகவல் இடம் பெற்றுள்ளது. நாகேஷின் பிறந்த நாளில் அந்த பதிவை வெளியிட்டு அவருக்கு சிறப்பு சேர்த்துள்ளீர்கள்.
குறிப்பாக, திரு. செல்வகுமார் சார் அவர்களின் தலைவரைப் பற்றிய அரிய புகைப்படங்களின் அணிவகுப்பு அபாரம். அதிலும் கையில் பச்சை குத்திக் கொண்டு அவர் போஸ் கொடுக்கும் படம் பழைய நினைவுகளை கிளறிவிட்டது.
அதிமுக கட்சி ஆரம்பித்த புதிதில் தொண்டர்களிடம் உணர்வுபூர்வமான நெருக்கத்தை ஏற்படுத்தவும் பார்த்தவுடன் இவர் நமது ஆள் என்று தெரிந்து கொள்ளும் வகையிலும் தொண்டர்கள் கையில் கழகக் கொடியை பச்சை குத்திக் கொள்ள வேண்டும் என்று தலைவர் ஆணையிட்டார். மேலும், இரண்டாம் கட்ட தலைவர்கள் அளவில் பார்த்தால், பச்சை குத்திக் கொள்பவர்களுக்கு கட்சி மாற உளவியல் ரீதியாக ஒரு தயக்கம் இருக்கும். அதற்காகவும் ராஜதந்திரத்துடன் கட்சியினர் அனைவரையும் பச்சை குத்திக் கொள்ளச் சொன்னார் தலைவர். தொண்டர்களுக்கு மட்டுமே உபதேசம் என்றில்லாமல் தானும் கையில் பச்சை குத்திக் கொண்டார்.
ஆனால், பச்சை குத்திக் கொண்ட பின்னும், தலைவரின் முதல் ஆட்சிக் காலத்தில் பதவி சுகத்தை அனுபவித்து விட்டு பின்னர், நாஞ்சில் மனோகரன் போன்றவர்கள் கையில் பச்சையுடனேயே திமுகவில் சேர்ந்தனர். 1980ம் ஆண்டு நடந்த தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட மனோகரனை மாவீரன் டி.கே.கபாலியை அதிமுக வேட்பாளராக்கி தலைவர் தோற்கடித்தது வரலாறு.
அய்யாவும் பேரறிஞர் அண்ணாவும் வளர்த்த திராவிட இயக்கக் கொள்கைகளை உயர்த்திப் பிடிக்க தலைவர் தொடங்கிய அதிமுக தலைமையிலான அரசின் புதிய முதல்வராக பதவியேற்க இருக்கும், ஆரம்ப காலத்தில் இருந்தே தலைவரின் விசுவாசியும் பச்சைத் தமிழ் மறவனுமான திரு. ஓ.பன்னீர் செல்வம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
அன்புடன் கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
now telecasting in sunlife -channel MGR.,'S evergreen meha hit movie ENGA VEETTU PILLAI...
-
வஞ்சகர்களின் மொத்த உருவத்தின் சதிராட்டம்- குள்ளநரித்தனம் தற்பொழுது வென்றிருக்கிறது என சொல்லலாம்...குற்றசாட்டுகள் யார் வேண்டுமானாலும் கூறலாம்... ஆனால்...அந்த குற்றங்கள் ஏதும் நம்மிடம் இல்லாமல் இருக்க வேண்டும்!!! அந்த அருகதை நாம் பெற்றிருக்க வேண்டும் ... அதுதான் மனசாட்சி படி நியாயமான செயலாகும்...இதை மக்கள்திலகம் - "விவசாயி" - காவியத்தில் தெளிவாக உணர்த்தி இருப்பார்...தர்மம் மீண்டும் வெல்லும்...
-
-
-
-
-
http://i62.tinypic.com/1rsr6d.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Idhayam Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia
-
-
http://i60.tinypic.com/mptgw.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Idhayam Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia