http://i58.tinypic.com/e0fpll.jpghttp://i62.tinypic.com/bg4pza.jpghttp://youtu.be/Qk6DQWsacbo
Printable View
எஸ்வி சார்
நா காமராசனின் அருமையான பாடலை எழுதி உள்ளீர்கள் . இப்ப சி கே ஓடி வருவார் பாருங்க லத்துவிர்காக :)
இன்று காலையில் வந்த மெயில் நண்பர் அனுப்பியது. நல்ல பல கருத்துகள் உள்ளன
ஏன் இந்த மனிதர்கள் பணத்திற்காக இப்படி அடித்துக் கொள்கிறார்கள்..
மனிதன்தானே பணத்தை படைத்தான்..
ஆனால் இன்றைய நிலையில் பணம்தான் மனிதனை ஆட்டி படைக்கிறது..
உறவுகளுக்கு நாம் தந்து வந்த முக்கியத்துவம் பணம் நம் வாழ்வில் வந்ததும் மறைந்து போயிற்று..
நல்வழியிலோ தீயவழியிலோ பணத்தை சேர்ப்பதிலேயே பெரும்பாலான மக்கள் கண்ணும் கருத்துமாய் இருக்கின்றனர்..
கல்வியையும் வியாபாரம் ஆக்கி விட்டார்கள்..
மருத்துவத்தையும் சேவையென்னும் பாதையிலிருந்து வியாபார பாதையில் மாற்றிவிட்டார்கள்..
அன்பு என்பது காணாமலேயே போய்விட்டது..
நன்றாக படிக்கும் ஏழை சிறுவனுக்கு பணம் இல்லை என்னும் காரணத்தால் மேற்படிப்பு படிக்கும் வாய்ப்பு மறுக்கப் படுகிறது..
பணம் தந்தால்தான் இன்றைய அரசு அலுவலகங்களில் நமது வேலைகள் சீக்கிரம் நடைப்பெறுகிறது..
பணம் இருந்தால்தான் உறவுகளும் நம்முடன்..
பணம் இல்லையென்றால் உறவுகள் நம்மை திரும்பிகூட பார்ப்பதில்லை..
ஒரு சில நேரங்களில் காதலும்கூட பணத்தை பார்த்துவருவது வேதனையான விஷயம்..
பணம் இருப்பவர்களிடம் அதிகமான நண்பர்கள் இருப்பார்கள்..
அது அவருக்கு தெரியாது வெறும் பணத்திற்காகவே அவர்கள் தன்னை சுற்றி இருக்கின்றனர் என்று..
இன்னும் இப்படி நீண்டுக் கொண்டிருக்கிறது இந்த பணப் பேய்களின் பட்டியல்..
பணம் என்பது உற்று நோக்கினால் வெறும் காகிதம் மட்டுமே.. காகிதத்திற்கு தரும் மதிப்பும் மரியாதையும் இந்த பாவப்பட்ட மனிதனுக்கு கிடைப்பதில்லை..
பணம் சம்பாதிப்பதையே தன் வாழ்நாளின் குறிக்கோளாக வைத்திருக்கின்றனர் பலர் இங்கே..
மனிதர்களையும் மனித உணர்வுகளையும் கொஞ்சம் மதிக்க கற்றுக் கொள்ளுங்கள்..
ஒரேயொரு எடுத்துக்காட்டு சொல்ல விரும்புகிறேன்..
நாம் இறந்துவிட்டால் நம் பணம் நம்மோடு வரப்போவதில்லை..
நம்மை இடுகாட்டிற்கு எடுத்து செல்லப்போவது மனிதர்கள்தான்..
நீ சேர்த்துவைத்த பணம் இல்லை..
வாழ்வில் நல்ல மனிதர்களை சம்பாதிக்க கற்றுக்கொள்..
அதிகமான மனிதர்களை தெரிந்திருப்பவன் அதிர்ஷ்டக்காரன் இல்லை..
நீ அறிந்திருப்பவர்களில் எத்தனைப்பேர் உன்னிடம் உண்மையாக இருக்கிறார்கள் என்பதே முக்கியம்..
வாழ்க்கையை கண் திறந்துப் பாருங்கள்.. பணம் என்னும் கோட்டையிலிருந்து வெளியே வாருங்கள்.. வாழ்வின் பயணத்தை தொடங்குங்கள் ஒரு புத்தம்புது
மனிதனாய்.....
வாழ்க மனிதநேயம்..
அன்புடன் -
நினைவிருக்கிறதா இந்த பாடல்.. இல்லையெனில் இனியாவது நினைவிருக்கட்டும்...
நடிகர் திலகம் நடித்த முக்தா ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் மெல்லிசை மன்னர் இசையில் வெளிவந்த அந்தமான் காதலி
திரைபடத்தில் இடம் பெற்ற ஒரு அருமையான பாடல். கண்ணதாசனின் அனுபவத்தில் விளைந்த கவித்துவமான வரிகள்
பணம் என்னடா பணம் பணம்...
குணம் தானடா நிரந்தரம்...
பணம் என்னடா பணம் பணம்
குணம் தானடா நிரந்தரம்
பணம் என்னடா பணம் பணம்
குணம் தானடா நிரந்தரம்
என்னிடத்தில் இல்லாததா
நல்ல விலை பேசாததா
அத்தனையும் பெற்றேனடா
தத்துவத்தை கற்றேனடா
இரக்க மனத்தை கெடுக்கும் அரக்கன்
பணம் பணம் பணம் ஆ...
பணம் என்னடா பணம் பணம்
குணம் தானடா நிரந்தரம்
இசை சரணம் - 1
சொந்தமில்லை பந்தமில்லை ஏறி மிதிக்கும்
தோள் மீது ஏறி நின்று காதை கடிக்கும்
பல கோடி சேர்த்தாலும் மேலும் நினைக்கும்
படுபாவி என்கின்ற பேரை கொடுக்கும்
பணத்தாலே நல்ல உள்ளம் பேயானது
குணத்தாலே அது மீண்டும் தாயானது
பொன்னுலகில் நீராடினேன்
கண்ணிழந்து கொண்டாடினேன்
மன்னனுக்கும் மேலாகினேன்
தன்னந்தனி ஆளாகினேன்
இரக்க மனத்தை கெடுக்கும் அரக்கன்
பணம் பணம் பணம் ஆ...
பணம் என்னடா பணம் பணம்
குணம் தானடா நிரந்தரம்
இசை சரணம் - 2
காசு என்ற சொல்லின் பொருள் குற்றம் என்பது
காசு வர ஓடி விடும் சுற்றம் என்பது
நாணயம் என்றால் அதன் பேர் நேர்மை என்பது
நல்லவர்க்கு காசு பணம் தேவையற்றது
பகவானின் மணியோசை கேட்கின்றது
பணம் என்னும் பேராசை மறைகின்றது
நல்ல புத்தி யார் தந்தது...
பிள்ளையிடம் தான் வந்தது...
எந்த நிலை வந்தால் என்ன
நல்ல வழி நான் செல்வது
இரக்க மனத்தை கெடுக்கும் அரக்கன்
பணம் பணம் பணம் ஆ...
பணம் என்னடா பணம் பணம்
குணம் தானடா நிரந்தரம் ( இசை )
http://www.youtube.com/watch?v=QBVKYfEyMeo
சிக்காவுக்கு வீடியோ பாக்காமல் போனால் ஏது தூக்கம் ?
http://youtu.be/RIolmtI-Js4
இன்றைய ஸ்பெஷல் (94)
மூவாயிரம் முத்தான பதிவுகள் அளித்த கோபால் அவர்களுக்கு என் அன்புப் பரிசு
1969-களில் ஒரு பாடல். அப்போதும் கூட அது அபூர்வ பாடல்தான். வழமை போல் சிலோன் ரேடியோ புண்ணியம் கட்டிக் கொண்டது.
துள்ளல் இசையுடன் உற்சாகம் கொப்பளித்த அந்தப் பாடல் முதல் முறை கேட்டவுடன் வஜ்ரம் போல் அப்படியே என் மனசுக்குள் 'ப்பச்சக்' என்று குந்திக் கொண்டது. அது என்ன படம் ஏது படம் என்று தெரியாது. ஷார்ட்வேவ் (SW2) அலைவரிசைகளில் 'இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனம்' பட்டும் படாமலும், விட்டும் விடாமலும் கிடைக்கும் போது, இந்தப் பாடல் போடும் போது, அப்படியே காதை ரேடியோ பொட்டியின் ஸ்பீக்கரோடு ஸ்பீக்கராக ஒட்டி வைத்து அந்த மூன்று நிமிடங்களுக்கு மேலாக கேட்டு அனுபவித்த சில நாட்களின் இன்பங்கள் இருக்கிறதே. வார்த்தைகளில் கொட்டி விட முடியாது அதை.
அப்புறம் இந்தப் பாடல் கேட்க முடியாத பாடலாகி விட்டது. ஆனால் பசுந்தாள் உரம் போட்ட மாமரச் செடிபோல மனது உள்ளேயே இந்தப் பாடலின் தாக்கம் ராட்சஷத்தனமாக என்னையுமறியாமல் வளர்ந்து கொண்டிருந்தது.
ஒருமுறை கண்ணதாசன் அவர்களின் பாடல்களின் தொகுப்பு கொண்ட புத்தகம் ஒன்றை 1986 இல் படிக்க நேரிட்டது. அதில் கண்ணதாசனின் அபூர்வ பாடல்கள் சில தென்பட்டன. அதில் இந்தப் பாடலும் பதிக்கப்பட்டிருந்தது. அப்போதுதான் இந்தப் பாடல் இடம் பெற்ற படம் 'ஓடும் நதி' என்று தெரிந்து கொண்டேன்.
ஏற்கனவே 'ஓடும் நதி' என்ற படம் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆனால் அந்த அபூர்வமான படத்தை இன்றுவரை என்னால் பார்க்க முடியவில்லை. அந்தப் படத்தில் ரவிச்சந்திரன், சரோஜாதேவி, நாகேஷ் போன்றவர்கள் நடித்திருப்பார்கள் என்று படித்திருந்தேன் நூலகங்களில். இயக்கம் தாதாமிராசி என்றும், இசை 'மெல்லிசை மன்னர்' என்றும், பாடல்கள் எழுதியது கவிஞர் என்றும் தெரிந்து கொண்டேன்.
அடுத்த நிமிடமே ஆடியோ ரிகார்டிங் கடைக்கு சென்று 'இந்தப் பாடல் கிடைக்குமா? அவசியம் வேண்டுமே" என்றேன். ம்... கடைகாரர் கைவிரித்து விட்டார். 'விழுப்புரம் சென்றால் அங்கொரு கடையில் கிடைக்கலாம்' என்று அட்ரஸ் வேறு தந்து விட்டார். அடுத்த நாள் விழுப்புரம் பயணித்து அந்த குறிப்பிட்ட கடையில் இந்தப் படத்தின் எல்லாப் பாடல்களையும் ரிகார்ட் செய்து கொண்டு வந்து விட்டேன். என் ஆசை தீர அன்று முழுதும் இந்தப் பாடலைக் கேட்டு கேட்டுக் களித்தேன். ஒன்றிரண்டு வரிகள் மட்டுமே வானொலியில் கேட்டு தெரிந்த எனக்கு பாடல் முழுதும் அன்று மனப்பாடம் ஆயிற்று. (இந்தப் பாடலை நான் திரும்பத் திரும்ப கேட்டதனால் என் தந்தை கோபம் வந்து தாங்க முடியாமல் பக்கத்து டீக்கடைக்கு ஓடியே போய்விட்டார். ஒரு இரண்டு மணி நேரம் சென்று திரும்பி வந்தும் இதே பாடலைக் கேட்டு டென்ஷன் ஆகி விட்டார். அப்புறம் மனமில்லாமல் இப்பாடலை நிறுத்தினேன்)
அப்புறம் வீடியோக்களின் காலம் வந்ததும் இந்தப் படத்தின் கேசட் தேடித் தேடி அலைந்தேன். இப்பாடல் படத்தில் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள ஆர்வம். ஆனால் ஏமாற்றம். 60 வருட தமிழ்ப் படங்கள் எல்லாம் ஈஸியாகக் கிடைத்தன. 1969 -ல் வெளிவந்த இப்படம் இன்றுவரை எனக்குக் கிடைக்கவில்லை.
கோபாலின் நட்பு கிடைத்ததும் நடிகர் திலகத்தைப் பற்றிய பேச்சுக்களை முடித்துவிட்டு பிறர் நடித்த பாடல்களைப் பற்றி மணிக்கணக்கில் பேசுவோம். இருவரின் ரசனை வேறு ஒரே ராஜபாட்டையில் பயணித்ததால் இந்தப் பாடல் பற்றி விரைவிலேயே பேச்சு வந்தது. அலாவுதீன் பூத விளக்கு கிடைத்தது போல ஒருநாள் இருவரும் இந்தப் பாடலைப் பற்றி பேசிப் பேசி மகிழ்ந்தோம். இந்தப் பாடல் 'எனக்குத்தான் சொந்தம்' என்று அவர் சொந்தம் கொண்டாட, 'இல்லை இல்லை எனக்குத்தான் உரிமை' என்று நான் ராம் ஜெத்மாலனியாக வாதாட, இன்பச் சண்டை இனிதே இன்றுவரை நடந்து வருகிறது எங்களுக்கிடையில்.
தினமும் 'யூ டியூபி'ல் இப்பாடலைக் search செய்வேன். அப்படி சமீபத்தில் தேடிய போது யாரோ ஒரு புண்ணியவான் இந்தப் பாடலை அப்லோட் செய்து வைத்திருந்தார். அந்த மனிதரின் பெயரைத் தொட்டு ஒரு 'உம்மா' தந்துவிட்டு, அவரை வாயார வாழ்த்திவிட்டு, பாடலை அப்படியே 'லபக்'கிக் கொண்டேன். கோபாலின் 3000 பதிவுகளுக்காக பரிசாக கொடுக்க நினைத்து அது இன்று நிறைவேறியது.
இந்தப் படத்தின் பிற பாடல்களும் ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல.
1. சுசீலாம்மா பாடும்
'காலமகள் மடியினிலே ஓடும் நதி'
என்ற பாடல் அப்படியே உள்ளத்தை பனிக்கட்டியாய் உருக வைக்கும். இது அப்போது சூப்பர் ஹிட் பாடல்.
2. 'குன்றத்தில் கோவில் கொண்ட நம்பி நம்பி' என்ற இன்னொரு அருமையான பாடல். சுசீலா பாடியது.
3. 'தங்கச் சலங்கை கட்டி தழுவுது தழுவுது பூச்செண்டு'
என்ற இன்னொரு அதியற்புதமான பாடல் உண்டு. கோபாலுக்கும், எனக்கும் இதுவும் மிக மிகப் பிடித்த பாடல். இந்தப் பாடலை எனக்கு ஞாபகப்படுத்தியவர் 'கோ' தான். தேங்க்ஸ் கோ.
4. அடுத்தது தான் நான் பெரிய பீடிகை போட்டு உங்களை 'சொல்லித் தொலையேண்டா' என்று நீங்கள் என்னை அடிக்க வரும் 'இன்றைய ஸ்பெஷல்' பாடல்.
http://i.ytimg.com/vi/Cb7Aiy58Wfc/hqdefault.jpg
'வா அந்த உலகத்தின் ஒரு பக்கம் இங்கே
காதல் பருவத்தின் மறுபக்கம் இங்கே'
இந்த வரிகளை டைப் செய்யும் போதே மனவலிகள் அப்படியே கற்பூரமாய் கரைந்து போகின்றன. ஒன்றுமே இல்லைதான் இந்தப் பாடலில். ஆனால் இந்தப் பாடலில் விட்டலாச்சாரியாவின் மந்திர தந்திரங்கள் போல ஏதோ ஒரு அசாத்திய ஈர்ப்பு குடிகொண்டிருக்கிறது. அது என்னவென்றுதான் தெரியவில்லை.
'வா' என்று 'பாடகர் திலகம்' முதல் எழுத்தை ஒரு இழுப்பு இழுப்பு ஆரம்பித்து பாடத் தொடங்கும் போதே செத்தான் ரசிக்கத் தெரிந்த ஒவ்வொருத்தனும்.
அப்புறம் சுசீலாவும், டி.எம்.எஸ்ஸும் சும்மா விசிறி வீசியடிக்கும்,
அந்த
'பாயப்ப பாயப்ப பய பாயப்ப பாயப்ப பய'
(சுசீலாம்மா சில பாடல்களை ரொம்ப ரொம்ப அழகாகப் பாடுவார். அப்படிப்பட்ட ஒரு சில பாடல்களில் இது ஜனரஞ்சக உச்சம் என்று அடித்துச் சொல்வேன்)
அடப் போங்கப்பா! கர்ணன் காமெராவில் மாட்டி பறக்கும் 'கங்கா' குதிரை போல மனசு அப்படியே பறக்கும் பாருங்க.
பல்லவி முடிந்ததும் அந்த 'விறுவிறு' 'கிடுகிடு' வென ஒலிக்கும் புல்லாங்குழல் பிட் இடையிசை... அதை தொடர்ந்து சில வினாடிகளே வரும் அந்த ஷெனாயின் பங்கு. பட்டிக்காட்டான் 'ஒய்ங்க்' என்ற சத்தத்தை கேட்டுவிட்டு, எங்காவது ஏரோபிளேன் தென்படுகிறதா என்று கைகளை கண்களுக்கு மேல் சல்யூட் போட்டது போல் வைத்து, சூரிய வெளிச்சம் கண்களைக் கூச, வானத்தில் தேடிக் கண்டுபிடித்து 'அதோ பார்ரா 'ஏர்ர்ரோபிளேனு' என்று அதே வானத்துக்கும் பூமிக்கும் துள்ளிக் குதித்து குதூகலமடைவானே... அந்த குதூகலத்தையும் தாண்டிய சந்தோஷத்தை அளிக்கும் அந்த ஷெனாய் ஒலி.
இப்படி பாடல் முழுதும் இனம் காண முடியாத அற்புதம் பரவிக் கிடக்கும்.
'யோக மேடையில் மௌன நாடகம்'
ஆடிப் பார்க்கலாம் வா'
முதல் சரணத்தின் இரண்டாம் வரிகள் முடிந்ததும் 'டங் டங் டங் டங் டங்' என்று கிடார் இசை பின்னி இழையுமே! அப்படியே உச்சி முதல் உள்ளங்கால் வரை ஆனந்த கங்கை ஓடும்.
வழக்கமான சுறுசுறு ரவி. அதே குறும்பு. அதே 'கலகல'. அதே உடல் நெளிவு டான்ஸ். சற்றே சோகமும், மகிழ்வும் கலந்து சுடிதாரில் 'சிக்'கென்று அழகு சரோஜாதேவி. வெளியில் பாலையா.
ஒரு எழுத்தை கூட மாற்றி சாமர்த்தியமாக பாடலை எழுதிய கவிஞர். கண்டு பிடியுங்கள் பார்ப்போம்.
'என்னடா இருக்கிறது இந்தப் பாடலில்!? சாதாரண ஒரு பாடல் போலத்தானே இருக்கிறது... இதற்கு இவ்வளவு அமர்க்களமா?" என்று கண்டிப்பாக நீங்கள் நினைக்கலாம். ஒரு 3 தடவை இடைவிடாமல் நன்கு ரசித்து கேளுங்கள். என்னுடன் இசைப் பைத்தியக்கார இன்ப ஹாஸ்பிட்டலுக்கு என் பக்கத்துக்கு பக்கத்து பெட்டில் உங்களுக்கு இடம் கிடைக்கும். ரிசர்வுக்கு முந்துங்கள்.:) ஏனென்றால் என் பக்கத்து பெட்டில் கோபால் அடமிட் ஆகி ரொம்ப நாளாச்சு.:)
இனி பாடலின் வரிகள்
வா அந்த உலகத்தின் ஒரு பக்கம் இங்கே
காதல் பருவத்தின் மறுபக்கம் எங்கே
அந்த உலகத்தின் ஒரு பக்கம் இங்கே
காதல் பருவத்தின் மறுபக்கம் எங்கே
பூவைப் பார்ப்பதே வாசமா
ஆசைப் பார்வையால் தீருமா
பூவைப் பார்ப்பதே வாசமா
ஆசைப் பார்வையால் தீருமா...ஆ
பாயப்ப பாயப்ப பய பாயப்ப பாயப்ப பய
பாயப்ப பாயப்ப பய பாயப்ப பாயப்ப பய
பாயப்ப பாயப்ப பய பாயப்ப பாயப்ப பய
பாயப்ப பாயப்ப பய பாயப்ப பாயப்ப பய
(புல்லாங்குழலும், ஷெனாயும் பின்னி எடுக்கும்)
ஜன்னல் இல்லாத மாடி வீட்டிலே
மன்னன் பந்தாட வேண்டும்
ஜன்னல் இல்லாத மாடி வீட்டிலே
மன்னன் பந்தாட வேண்டும்
சாயும் கண்ணாடி மேனி மீதிலே
தங்கம் கொண்டாட வேண்டும்
சாயும் கண்ணாடி மேனி மீதிலே
தங்கம் கொண்டாட வேண்டும்
மூடும் கண்ணிலும் முன்னால் தரும்
மூன்று பாஷையும் தன்னால் வரும்
மூடும் கண்ணிலும் முன்னால் வரும்
மூன்று பாஷையும் தன்னால் வரும்
யோக மேடையில் மௌன நாடகம்
ஆடிப் பார்க்கலாம் வா (கிடார் பின்னல்)
வா அந்த உலகத்தின் ஒரு பக்கம் இங்கே
காதல் பருவத்தின் மறுபக்கம் எங்கே
அந்த உலகத்தின் ஒரு பக்கம் இங்கே
காதல் பருவத்தின் மறுபக்கம் எங்கே
பூவைப் பார்ப்பதே வாசமா
ஆசைப் பார்வையால் தீருமா
பூவைப் பார்ப்பதே வாசமா
ஆசைப் பார்வையால் தீருமா...ஆ
பாயப்ப பாயப்ப பய பாயப்ப பாயப்ப பய
பாயப்ப பாயப்ப பய பாயப்ப பாயப்ப பய
பாயப்ப பாயப்ப பய பாயப்ப பாயப்ப பய
பாயப்ப பாயப்ப பய பாயப்ப பாயப்ப பய
ஹாஹஹாஹஹாஹஹாஹா
லாலலாலலாலலால டாடாடடடாஜா
கொஞ்சும் பெண்ணோடு பேசும் வேளையில்
மஞ்சம் திண்டாட வேண்டும்
கொஞ்சும் பெண்ணோடு பேசும் வேளையில்
மஞ்சம் திண்டாட வேண்டும்
வஞ்சம் இல்லாமல் வாடைக் காற்றிலே
ஒன்றில் ஒன்றாட வேண்டும்
வஞ்சம் இல்லாமல் வாடைக் காற்றிலே
ஒன்றில் ஒன்றாட வேண்டும்
கேள்வி ஞானத்தில் வாராதது
கேட்டுப் பார்த்த பின் தீராதது
கேள்வி ஞானத்தில் வாராதது
கேட்டுப் பார்த்த பின் தீராதது
போதும் என்பது இல்லையென்று
நாம் வாழ்ந்து பார்க்கலாம் வா
வா அந்த உலகத்தின் ஒரு பக்கம் இங்கே
காதல் பருவத்தின் மறுபக்கம் எங்கே
அந்த உலகத்தின் ஒரு பக்கம் இங்கே
காதல் பருவத்தின் மறுபக்கம் எங்கே
பூவைப் பார்ப்பதே வாசமா
ஆசைப் பார்வையால் தீருமா
பூவைப் பார்ப்பதே வாசமா
ஆசைப் பார்வையால் தீருமா...ஆ
பாயப்ப பாயப்ப பய பாயப்ப பாயப்ப பய
பாயப்ப பாயப்ப பய பாயப்ப பாயப்ப பய
பாயப்ப பாயப்ப பய பாயப்ப பாயப்ப பய
பாயப்ப பாயப்ப பய பாயப்ப பாயப்ப பய
http://www.youtube.com/watch?v=Cb7Ai...yer_detailpage
வாசு ஜி..
பி.எம். பாருங்களேன் !
கிருஷ்ணா!
கே.எஸ்.ஆர் தாஸ் படங்கள் ஒவ்வொன்று ஜெட் வேகம். படம் போவதே தெரியாது. லாஜிக் இருக்கோ இல்லையோ என்ஜாய் பண்ணிவிட்டு வரலாம்.
வாசு சார்
மாலை வணக்கம் . ஓடும் நதி பாடல் வழக்கம் போல் :) அருமை.
சௌந்தர்ராஜன் குரலுக்கு ஈடு கொடுக்கும் சுசீலாவின் குரல். நீண்ட நாள் மறந்து இருந்த பாடல் நினைவு படுத்தி விட்டீர்கள்.
1977 கால கட்டத்தில் ரவி நடித்து நீ வாழ வேண்டும் என்று ஏதாவது திரைப்படம் வந்ததா ? ரவியின் திரைப்பட வரிசையில் குறிப்பிட்டு உள்ளார்கள் .இந்த படத்தை பற்றி நினைவு இருந்தால் சொல்லவும்