-
சென்னை மாநகரில் நமது எழில் வேந்தன் எம்.ஜி. ஆர். அவர்களின் "உழைக்கும் கரங்கள்" திரைப்படம் 1976-ம் வருடம் ஜூலை மாத கடைசி வாரத்தில் 11வது வாரமாக சாந்தம், ஸ்ரீகிருஷ்ணா, உமா ஆகிய அரங்குகளில் வெற்றி உலா வந்து கொண்டிருந்த காலத்தில் சென்னை நகரின் பெரும்பாலான திரை அரங்குகளில் ஆக்கிரமிப்பு செய்த இருபதாம் நூற்றாண்டின் இனையற்ற வள்ளலாம் நமது நாயகனின் திரைப்படங்கள் :
1. கிரவுன் : அன்னமிட்ட கை
2. பிரபாத் : நீதிக்கு தலை வணங்கு
3. பாரத் : விக்கிரமாதித்தன்
4. பாண்டியன் (மகாராஜா) : அன்பே வா
5. மகாராணி : தாய்க்கு தலை மகன்
6. பிரைட்டன் : நாளை நமதே
7. தங்கம் : பெரிய இடத்துப் பெண்
8. ஈராஸ் : அலிபாபாவும் 40 திருடர்களும்
9. நேஷனல் : ஒரு தாய் மக்கள்
10. பாலாஜி : சக்கரவர்த்தி திருமகள்
11. சன் : படகோட்டி
12. பிளாசா : நான் ஆணையிட்டால்
13. மகாலட்சுமி : மாட்டுக்கார வேலன்
14. கமலா : மதுரை வீரன்
15. லிபர்ட்டி : மர்ம யோகி
இது ஒரு சிறு உதாரணம் தான். இது போல் சம்பவங்கள் தமிழகம் எங்கும் இன்றளவும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது
மக்கள் திலகத்தின் படங்களின் வசூலை முறியடிக்கவோ அல்லது வசூலை பாதிப்பதோ அவரது இன்னொரு படத்தால் ம ட்டுமே முடியும் என்பது இதன் மூலம் தெள்ளத் தெளிவாக விளங்குகிறது.
பல திரை அரங்குகள் மூடப்பட்டு வணிக வளாகங்களாக மாறி வரும் தற்போதைய நவீன சூழ் நிலையில், பொன்மனச் செம்மலின் பழைய படங்கள் பல மீண்டும் மீண்டும் மறு வெளியீடு செய்யப்பட்டு தமிழ் திரை உலகத்தை காப்பாற்றி வருவதும், திரை அரங்க உரிமையாளர்களையும், வினியோகஸ்தர்களையும் வாழ வைத்துக் கொண்டிருப்பதும் நிதர்சனமான உண்மை.
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
சென்ற வெள்ளி (28.12.2012) முதல் ஈரோடு ஸ்ரீ லட்சுமி திரை அரங்கில் மக்கள் திலகத்தின் வண்ண ஓவியம் மீனவ நண்பன். தகவல் என் நண்பன் திரு ஹரிதாஸ்.
-
பணத்தோட்டம் படத்தின் இதர சிறப்புகள் :
1. 18 நாட்களில், குறுகிய கால தயாரிப்பாக, இப்படம் எடுக்கப்பட்டது.
2. பத்மஸ்ரீ சிவாஜி கணேசன் அவர்களை வைத்து அது நாள் வரை தயாரித்து வந்த ஜி. என். வேலுமணி அவர்கள் முதன் முறையாக
இப்படத்தின் மூலம்தான், மக்கள் திலகத்துடன் இணைந்தார்.
3. மக்கள் திலகத்தின் பிற படங்களின் கடுமையான போட்டிக்கிடையே, வெற்றிகரமாக 10 வாரங்களை கடந்து விநியோகஸ்தர்களுக்கு
நல்ல இலாபத்தை ஈட்டு தந்தது.
4. சென்னையின் மைய பகுதியில் அமைந்துள்ள "டிரைவ்-இன் உட்லண்ட்ஸ் ஹோட்டல்" வளாக திறந்த வெளி அரங்கில்,
வழக்கமாக ஆங்கில திரைப்படங்களை மட்டுமே காண்பித்து வந்த கால கட்டத்தில் முதன் முதலில் காண்பிக்கப்
பட்ட தமிழ் திரைப்படம்.
5. முத்தான ஆறு பாடல்களாகிய -
ஒரு நாள் இரவில் ..... என்கின்ற பி. சுசீலா பாடிய தனிப் பாடலும்,
ஒருவர் ஒருவராய் பிறந்தோம் என்கின்ற கோரஸ் பாடலும்
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்கின்ற தத்துவ பாடலும்
பேசுவது கிளியா இல்லை பெண்ணரசி மொழியா என்ற இனிமையான ஜோடிப் பாடலும்
மனத் தோட்டம் போடுமென்று மாயவனார் கொடுத்த உடல் என்ற சிந்தனைப்பாடலும்
ஜவ்வாது மேடையிட்டு, சர்க்கரையில் பந்தலிட்டு என்ற போதையேற்றும் பாடலும்
இடம் பெற்ற திரைப்படம்.
பேசுவது கிளியா இல்லை பெண்ணரசி மொழியா என்ற பாடலின் இடையே, சேரனுக்கு உறவா, செந்தமிழர் நிலவா என்று பொன்
மனச்செம்மலைப் போற்றி, தமிழுக்கும் அவருக்கும் இருக்கின்ற தொடர்பினை வெளிப்படுத்தி, கவியரசர் கண்ணதாசன் அவர்கள்
எழுதி இருப்பது குறிப்பிடத்தக்கது .
6. மறு வெளியீடுகளிலும் மகத்தான வசூல் சாதனை புரிந்த படம். 1991 ம் ஆண்டில், "அகஸ்தியா" அரங்கில் 6
நாட்கள் மட்டுமே திரையிடப்பட்டு சுமார் 64,112 ரூபாய் வசூலித்தது. அதே போன்று, 'வசந்தி' அரங்கில் 7 நாட்களில்
52,466 ரூபாய் வசூலித்தது.
இத்துடன் 1963 ல் வெளியான போது, பிரசுரிக்கப் பட்ட தியேட்டர் பாட்டு புத்தகத்தின் முன் மற்றும் பின் அட்டையுடன்
கூடிய கதைச் சுருக்கம், படத்தினை உருவாக்க பாடுபட்ட கலைஞர்கள் விவரம் இணைக்கப் பட்டுள்ளது.
அன்புடன்
சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜி ஆர்.
எங்கள் இறைவன்.
-
-
-
-
கோவை, திருப்பூர், அவிநாசி, மதுரை மற்றும் ஒட்டன்சத்திரம் பகுதிகளில் மக்கள் திலகத்தின் திரைப்படங்கள் வெளியிடப்பட்டபோது (மறுவெளியீடு) ஒட்டப்பட்ட சுவரொட்டி விளம்பரங்களின் தொகுப்பு.
எஸ். ரவிச்சந்திரன்
-------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
--------------------------------------------------
http://s4.postimg.org/s1whkhwdp/image.jpg
-
-
-