:lol:Quote:
Originally Posted by Murali Srinivas
இப்போ ஒரு வேளை எம் எல் ஏ அல்லது எம் பி ஆக இருப்பாரோ? ஒரு வேளை மந்திரி? ஆனந்த விகடன் ஜோக் நினைவுக்கு வருகிறது...
NOM :-)
Printable View
:lol:Quote:
Originally Posted by Murali Srinivas
இப்போ ஒரு வேளை எம் எல் ஏ அல்லது எம் பி ஆக இருப்பாரோ? ஒரு வேளை மந்திரி? ஆனந்த விகடன் ஜோக் நினைவுக்கு வருகிறது...
NOM :-)
From this thread i notice
still old artist popular i within the people
OLD IS GOLD
There is another web site for old artist with more information
here is the link
http://www.goldentamilcinema.net/
அந்த நாள் ஞாபகம்
படம் ஆரம்பித்தது. முதலில் மதுரையை காண்பித்தவுடனே தியேட்டர் களை கட்டி விட்டது. மதுரை விமான நிலையத்தில் முதல் காட்சி. அப்போது வி.கே.ஆர் ஒரு வசனம் சொல்லுவார். மதுரையை சுத்தின கழுதை கூட மதுரையை விட்டு போகாது. ஆரவாரம் அதிகமானது. அடுத்த காட்சி. படம் சட்டென்று நெகடிவ்-ல் மாறியது. தீசட்டி ஏந்திய ஒரு கை மட்டும் திரையில் தெரிய நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அளிக்கும் என்ற வார்த்தைகள் மின்ன, காதடைக்கும் கைதட்டல் ஒலி, பேப்பர் மாரி பொழிய ஆட்டம் தொடங்கியது. முதலில் ஒரு கை பிறகு கால், சைடு போஸ் என்று கொஞ்ச கொஞ்சமாக காட்டிக் கொண்டே வந்து இறுதியில் டைரகஷன் பி.மாதவன் என்று போடும்போது நடிகர் திலகத்தின் முகம் தெரிய அரங்கத்தில் மீண்டும் ஒரு அணைக் கடந்த ஆரவாரம்.
உடனே அம்பிகையே ஈஸ்வரியே பாடல் ஆரம்பிக்க தியேட்டர் இரண்டுப்பட்டது.
இரண்டாவது சரணம் வந்தது
ஏழைகளை ஏச்சதில்லை முத்துமாரி; நாங்க
ஏமாத்தி பொழச்சதில்லை முத்துமாரி
வாழ விட்டு வாழுகிறோம் முத்துமாரி; இனி
வருங்காலம் எங்களுக்கே முத்துமாரி
1971 தேர்தலில் ஏமாந்த/ஏமாற்றப்பட்ட மக்கள் உண்மை நிலையை புரிந்துக் கொண்டு பெருந்தலைவரின் காங்கிரஸ் இயக்கத்திற்கு பெருவாரியாக ஆதரவாக மாறிக் கொண்டிருந்த அன்றைய சூழலில் இந்த வரிகளை கேட்டவுடன் ஒட்டு மொத்த ரசிகர்களும் ஆரவாரம் செய்தனர் அது அப்படியென்றால் அடுத்து வந்த மூன்றாவது சரணம்
சிவகாமி உமையவளே முத்துமாரி; உன்
செல்வனுக்கும் காலமுண்டு முத்துமாரி
மகராஜன் வாழ்கவென்று வாழ்த்து கூறி;இந்த
மக்களெல்லாம் போற்ற வேணும் கோட்டை ஏறி,
ரசிகர்களை அளப்பரையின் உச்சத்திற்கே அழைத்து சென்று விட்டது. அடுத்த சில நிமிடங்கள் வரை பெருந்தலைவரையும் நடிகர் திலகத்தையும் வாழ்த்தி கோஷங்கள் தியேட்டரில் எதிரொலித்துக் கொண்டேயிருந்தன.
பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் வந்த ரசிகர்களுக்கு இந்த பாடலும், வரிகளும் பயங்கர சந்தோஷத்தை கொடுக்கவே ரசிகர்கள் படத்தில் ஐக்கியமானார்கள். படத்தின் திரைக்கதையமைப்பு படத்தை விறுவிறுப்பாக கொண்டு சென்றது. அடுத்து சோழவந்தான் வீதியில் நடக்கும் சண்டை. அந்த சண்டை தொடங்குவதற்கு முன்னால் நடிகர் திலகம் ஒரு வசனம் பேசுவார். "ஏண்டா! தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்! கத்தி எடுத்தவன் எல்லாம் வீரனா?" தியேட்டரில் அதிகபட்ச அலப்பறை இந்த வசனத்திற்கு தான். அடுத்து கல்யாணம். முதலிரவு காட்சி. அதில் கேட்டுக்கோடி உருமி மேளம் பாடல். அந்த வரிகள், அந்த ட்யுன், மெதுவாக வரும் பீட்ஸ் சட்டென்று டப்பாங்குத்துக்கு மாறுவது, கேட்க வேண்டுமா? ரசிகர்களின் உற்சாகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. அந்த பாடல் காட்சியை அடுத்த தடவை பார்க்கும் போது தான் சரியாக பார்க்க முடிந்தது. இது முடிந்து சிறிது நேரத்தில் அதையும் தூக்கி சாப்பிடும் விதமாக என்னடி ராக்கம்மா பாடல். திகட்ட திகட்ட சந்தோஷம் என்பார்களே அதை அங்கே சிவாஜி ரசிகர்கள் நேரிடையாக அனுபவித்தார்கள். தன்னை மறந்த நிலை என்பார்களே அந்த ரேஞ்சுக்கு போய் விட்டார்கள். இதற்கு நடுவில் அத்தை சுகுமாரிக்கும் நடிகர் திலகத்திற்கும் நடுவில் வரும் சின்ன சண்டைகள், அந்த பதிலுக்கு பதில் வசனங்கள் வேறு ரசிகர்களை குஷிப்படுத்தியது. இடைவேளை. வெளியே வரும் ரசிகன் துள்ளிக் குதிக்கிறான். இது எதிர்பாராமல் கிடைத்த ஜாக்பாட். அதே சமயம் செகண்ட் ஹாப் இதே போல் சுவாரஸ்யமாக இருக்க வேண்டுமே என்ற சின்ன பயமும் இருந்தது.
(தொடரும்)
அன்புடன்
பத்மினி பிக்சர்ஸ் வீரபாண்டிய கட்டபொம்மன் திரையரங்கு வெளியீட்டு 50வது ஆண்டு விழா (16.05.1959-16.05.2009) கொண்டாடப் படுகிறது. இடம் சென்னை ஆழ்வார்பேட்டை ரஷ்யன் கலாச்சார மையம், நாள் 16.05.2009. நிகழ்ச்சிகள் வடிவமைக்கப் பட்டு வருகின்றன. மேலும் விவரங்கள் விரைவில்.
ராகவேந்திரன்
Murali,
Good writings on NT - more than that, your memory power is amazing.
Gnana Oli: A fast-paced movie. In my opinion, considering sharp dialogues between lawrence and anthony, the movie maker should have avoided songs. In fact, songs slow down the pace of the movie. This even applies to the classic hit - தேவனே என்னை பாருங்கள். When you watch this movie next time - exclude all songs, you would enjoy the movie more.Quote:
Originally Posted by Murali Srinivas
By the way, TMS has done wonders - what a beautiful song: தேவனே என்னை பாருங்கள். A thunderous voice, beautiful modulation!!
முரளி சார்,
1988ல் பெங்கலூர் ஸ்ரீ டாக்கீசில் நான் இந்த படத்தை பார்த்த போதும் இதே ரனகளம் தான்.சொல்லப்போனால் இதைவிட ஒரு படி மேலே போய் கத்திக்குத்து சம்பவமெல்லாம் நடந்தது.ஞாயிறு மாலைக்காட்சி தொடங்குவதற்கு முன்னதாக கட்-அவுட்டிற்க்கு மாலை போட்டுக்கொன்டிருந்தபோது ஜெயலலிதாவிற்க்காக படத்தை பார்க்க வந்த சில அதிமுக வினர் நடிகர்திலகத்தை பற்றி ஏதோ கமென்ட் அடிக்க இவர்கள் அதை தட்டி கேட்க கடைசியில் அந்த ஜெஜெ ரசிகருக்கு கத்திக்குத்து விழுந்தது.இந்த களேபரங்களால் படம் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக தொடங்கியது.உள்ளே சென்றால் நீங்கள் குறிப்பிட்ட அத்தனை அலப்பரைகளும் அரங்கேறியது.ஆனால் ஒரே ஒரு வித்தியாசம்,பேப்பர் மாரி என்பது தமிழக ஸ்டைல்,இங்கே சில்லரை நானய மாரிதான் வழக்கம்.
காமராஜர் மறைவிற்க்கு பிறகு நடிகர்திலகம் பழைய காங்கிரசை தலைமை ஏற்று வழி நடத்தி இருந்தால் தமிழக அரசியல் நிலைமை மாறியிருக்கும்?
காமராஜர் மறைவிற்க்கு பிறகு நடிகர்திலகம் பழைய காங்கிரசை தலைமை ஏற்று வழி நடத்தி இருந்தால் தமிழக அரசியல் நிலைமை மாறியிருக்கும்?
1967க்கு முந்தைய நிலைமை திரும்பியிருக்கும்
RAGHAVENDRA
அந்த நாள் ஞாபகம்
இடைவேளைக்கு பிறகு படம் ஆரம்பித்தது. தன்னை விட்டு பிரிந்து சென்ற மனைவியை நினைத்து வருந்தும் மூக்கையாவிடம் அப்பாத்தா எஸ்.என்.லட்சுமி சொல்லும் " ஆடிக் கறக்கிற மாட்டை ஆடி கறக்கணும்! பாடிக் கறக்கிற மாட்டை பாடிக் கறக்கணும்!" என்ற வசனத்துடன் படம் பட்டிக்காட்டிலிருந்து பட்டணத்திற்கு மாறும். தோழிகளுடன் ஹோட்டலில் அமர்ந்திருக்கும் கல்பனாவிடம் ஹிப்பி ஸ்டைல் தலை முடியுடன் முகேஷ் என்ற பெயரில் நடிகர் திலகம் அறிமுகமாக, அடுத்த ஆட்டம் தியேட்டரில் ஆரம்பமானது. நல்வாழ்த்து நான் சொல்லுவேன் பாடல் உடனே. இடைவேளைக்கு முன் கிராமத்து குத்து என்றால் இப்போது வெஸ்டர்ன் பீட்ஸ். எதுவாக இருந்தால் என்ன, நம்ம ரசிகர்கள் சளைத்தவர்களா என்ன? அதற்கும் தியேட்டரை உண்டு இல்லை என்று பண்ணி விட்டார்கள்.
அடுத்து நடிகர் திலகம் ஜெஜெ-வை சீண்டும் காட்சிகள். அந்த கிண்டல் வசனங்கள், கர்ப்பமாக இருக்கிறார் என்று சொன்னவுடன் சொல்லும் கேலி பேச்சுகள் இதற்கெல்லாம் செம ரெஸ்பான்ஸ். ஆளை விட்டு கடத்தி கொண்டு போய் நடிகர் திலகத்தை சென்னையை சுற்றி காண்பிப்பார்கள். ஊருக்கு வெளியே போன பிறகு அவர் அவர்களை புரட்டி அடிப்பார். "சாந்தி தியேட்டரை எனக்கே காட்றியா?" டயலாகிற்கு தியேட்டர் குலுங்கியது.
ஆனால் அவர் மீண்டும் சோழவந்தான் வந்தவுடன் அது வரை இல்லாத சீரியஸ் நடிப்பு வெளிப்பட, நடிப்பை எதிர்பார்த்து வந்த ரசிகர்களுக்கு சந்தோஷம். பஞ்சாயத்து கூட்டத்திற்கு போய் விட்டு வந்த நடிகர் திலகம் எஸ்.என்.லட்சுமியிடம் பேசும் காட்சி
"பஞ்சாயத்துல எனக்கு கிடச்ச வரவேற்பை நீ பார்த்திருக்கணும்.அப்படியே பூரிச்சு போயிருப்பே.
அப்படியா? நான் வராமே போயிட்டனே
நான் வந்திருக்கனே உயிரோடு
நாக்கு மேல பல்லைப் போட்டு உன்னை எவன்யா பேசினான்?"
மற்றும் நடிகர் திலகம் சொல்லும் "கை கழுவிட்டேன்" போன்ற வசனங்களுக்கு பெரிய வரவேற்பு [கதை வசனம்: பாலமுருகன்]. என்னடி ராக்கமாவின் pathos version -கும் நல்ல வரவேற்பு இருந்தது. கிளைமாக்ஸ் முடிவு இப்படித்தான் இருக்கும் என்று யூகிக்க முடிந்தாலும் அந்த சஸ்பென்சை அழகாக கையாண்டிருந்தார் இயக்குனர் மாதவன்.
படம் முடிந்தது. ஹாலை விட்டு வெளியே வந்தவுடன் தியேட்டர் காம்பவுண்ட்குள்ளேயே ஒரு வெங்காய வெடி சத்தம் காதை அடைத்தது.
தொடர்ந்து படபடவென்று தௌசன் வாலா சர வெடி வெடிக்க, ராஜா திரைப்படத்திற்கு நடந்தது போல ரசிகர்கள் கூட்டம் மேல மாசி வீதியில் ஊர்வலம் வந்து தியேட்டர் வாசலில் குழுமி ஒரு ஆட்டம் போட்டு விட்டு போனார்கள். தொடர்ந்து நான்காவது படம் வெற்றி. 1972 -ம் வருடத்தை பொறுத்த வரை ஹாட்ரிக் வெற்றி.
ஆனால் ஓபனிங் ஷோ பார்த்து விட்டு வரும் போது என்னால் அந்த படத்தின் வெற்றியின் வீச்சை அளவிடமுடியவில்லை என்பதை இங்கே ஒத்துக் கொள்ள வேண்டும். நிச்சயமாக நூறு நாட்கள் ஓடும் என்று நினைத்தேன். ஆனால் அதையும் தாண்டி வெள்ளி விழ கொண்டாடி தமிழ் சினிமாவின் மொத்த கருப்பு வெள்ளை படங்களிலேயே அதிகமான வசூலை பெற்று சாதனை புரியும் என்று எதிர்பார்க்கவில்லை. எங்கள் மதுரையில் மிகப் பெரிய வெற்றிப்படங்கள் வெள்ளி விழா கொண்டாடி (175 நாட்களில்) பெற்ற வசூலையெல்லாம் வெறும் நூறு நாட்களில் முறியடித்தது பட்டிக்காடா பட்டணமா.
அன்புடன்
PS: இந்த படத்தை பொறுத்த வரை எனக்கு வேறொரு மறக்க முடியாத நினைவும் உண்டு. 1986 -ம் வருடம் ஏப்ரல் மாதம் 18-ம் தேதி வெள்ளிக்கிழமை. இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாத நாள். அப்படி ஒரு வருத்தம். அன்று தான் ஷார்ஜாவில் சேத்தன் ஷர்மாவின் கடைசி பந்தில் ஜாவேத் சிக்ஸர் அடித்து வெற்றியை நம்மிடமிருந்து பறித்த நாள். அந்த சோகத்தை மறப்பதற்காகவே அன்று மதுரை மீனாக்ஷி திரையரங்கில் ஒரு மறு வெளியீடாக ரிலீசாகியிருந்த பட்டிக்காடா பட்டணமா பார்க்க நைட் ஷோ போனோம். அங்கேயும் இடைவேளையில் அதைப் பற்றிய கமண்ட்கள் கேட்க நேர்ந்தது ஒரு தனி சோகம்.[பேசாம உருட்டியிருக்கலாம்]
tac,
ஞான ஒளி படத்தை பாடல்கள் இல்லாமலும் பார்க்கலாம் என்பது உண்மைதான். ஆனால் நமது ரசிகர்களுக்கு பாடல்கள் தேவை. நீங்களே சொன்னது போல தேவனே என்னைப் பாருங்கள் பாடலை எல்லாம் நாம் மிஸ் பண்ணி இருப்போம்.
செந்தில்.
நீங்கள் சொல்வது போல் சில நிகழ்வுகளை நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். 90-களின் மத்தியில் சென்னை ஆல்பர்ட் திரையரங்கில் ராஜா வெளியான போது அப்படி ஒரு நிகழ்ச்சி நடந்தது என்று தெரியும். மதுரையில் 2001-ல் அவன்தான் மனிதன் வெளியான போதும் ஞாயிறு மாலை காட்சியில் ஒரு சச்சரவு நானே நேரில் பார்த்தேன், ஆனால் அது பெரிதாகாமல் தடுக்கப்பட்டது.
நீங்கள் கேட்ட அடுத்த கேள்விக்கு வருகிறேன். நிச்சயமாக தமிழ் நாட்டின் அரசியல் வரலாறே மாறியிருக்கும். நடிகர் திலகம் மட்டும் பழைய காங்கிரஸ் இயக்கத்திலே இருந்திருந்தால், மொத்த ரசிகர்களும் அவர் பக்கம் இருந்திருப்பார்கள். தமிழ் சினிமா போல தமிழக அரசியலும் சிவாஜி - எம்.ஜி.ஆர் என்றே இருந்திருக்கும். என்ன செய்வது?
அன்புடன்