Dear venkiram, thanks for those wonderful pictures of NT. Just superb !!! Pls convey our wishes to Mr. Jeeva.
Dear Kaveri Kannan, warm welcome to NT's thread.
Printable View
Dear venkiram, thanks for those wonderful pictures of NT. Just superb !!! Pls convey our wishes to Mr. Jeeva.
Dear Kaveri Kannan, warm welcome to NT's thread.
Pammalar sir, what a great news about Pasa Malar. Surprise after surprise. First thing I'm going to do is to share this with my F-I-L. Meet you all @ Mahalakshmi theatre this weekend.
As Murali sir said, it's been very heartening to see more and more NT related news & events happening in the city.
உங்கள் அனைவரின் அன்பான வரவேற்பைக் கண்டதும் - பிறந்த ஊர் வந்த மனநிலை எனக்கு..
வீடு நோக்கி ஓடி வந்த நம்மையே....
------------------------------
நண்பர் மகேஷின் பகிர்வுக்கு நன்றி..
----------------------
அன்னை இல்லத்துக்கு தனது விஜயம் குறித்து மலையாள மனோரமா பத்திரிகையில் மோகன்லால் குறிப்பிட்டதன் தமிழாக்கம்
-- நன்றி திரு. மோகன்காந்தி அவர்களுக்கு..
-------------------------------------------------------------------------
சிவாஜி சார் ஓவ்வொரு அறைக்கும் என் கையை பிடித்து கூட்டிக்கொண்டு போனார் . தொங்கிக் கொண்டிருந்த நட்சத்திர விளக்கு ,சுவரில் மாட்டியிருந்த பெரிய புகைப்படங்கள் ,அறையை அலங்கரித்த கலைப்பொருட்கள் மற்றும் அன்பளிப்புகள் இவற்றையெல்லாம் ஒரு சின்னக்குழந்தையின் மனோபாவத்தோடு பார்த்துக்கொண்டு நடந்து போனேன்.
சிவாஜி சாரின் மிகப்பெரிய பங்களா அது . அந்த நேரம் என் மனைவி சுசி (நடிகர் பாலாஜியின் மகள் சுசித்ரா) அங்கே இல்லை .எங்கோ வேறு ஒரு அறையில் இருந்தாள் என நினைக்கிறேன். நான் சொன்னவையெல்லாம் அவள் பார்க்கவில்லையென்றே தோன்றுகிறது. சிவாஜி சாரின் கைவிரல் குளிர்ச்சி மட்டுமே என் மனதில் நிறைந்திருந்தது .வாழ்க்கையில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு அந்த விரல்களும் அந்த ஸ்பரிசமும்.
சிவாஜி சார் ஸ்டுடியோவுக்கு வருவதை பார்த்திருக்கிறேன் .அவர் வரும் போது எல்லா படப்பிடிப்பும் ஒரு நிமிடம் நின்று போகும் .அவர் போகும் வழியில் அனைவரும் எழுந்து நின்று அவரை கை கூப்பி வணங்குவார்கள் . அவர் வந்து போவதே ஒரு ராஜா வருவது போல இருக்கும் . அவர் சிரித்துக்கொண்டே கடந்து போகும் போது வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு ஒளி வட்டம் நமது மனதில் வெளிச்சம் வீசி விட்டு செல்லும்.
சிவாஜி சாரைப் போல மற்றவர்களிடம் பழக வேண்டும் என்று எப்போதும் ஆசைப்படுகிறேன். தமிழில் மன்னனாக கோலோச்சிய அவர் மலையாளத்தில் நடிக்க வந்த போது ஒரு சாதாரண நடிகராக பழகினார் . இயக்குநருக்கும் மற்ற நடிகர்களுக்கும் மிகுந்த மரியாதை அளித்தார் .
குறையோ குற்றங்களோ எதுவுமே சொன்னதில்லை . தவிர்க்க முடியாத காரணங்களால் நடுவில் படப்பிடிப்பு தடை பட்ட போதும் சிறிதளவு கூட கோபமோ வருத்தமோ இல்லாமல் அனைவரிடமும் விடை பெற்று சென்றார் . மீண்டும் படப்பிடிப்பு தொடங்கிய போதும் மகிழ்ச்சியோடு வந்து நடித்துக் கொடுத்தார் .
அவர் படப்பிடிப்புக்காக கேரளத்துக்கு வந்த போது என்னுடன் தான் தங்கியிருந்தார் . ஒரு குழந்தை எப்படி சாக்லெட்டை விரும்பி கேட்குமோ ,அது போல வாத்து இறைச்சியும் மற்ற அசைவ உணவு வகைகளையும் விரும்பிக் கேட்பார் . அவர் கேட்டவையெல்லாம் தயார் செய்து அவர் சாப்பிட அமரும் மேசையில் வைக்கும் போது அவர் முகத்தை பார்க்க வேண்டுமே ,தான் கேட்டது கிடைத்தால் சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்குமே குழந்தை ,அது போல மாறி விடுவார் . ஒவ்வொரு அயிட்டம் பற்றியும் அதன் ருசி பற்றியும் அவர் அடிக்கும் கமெண்ட் இருக்கிறதே ,அழகோ அழகு . அதே சமயம் தான் என்ன சாப்பிடுகிறோமோ அது தன்னுடைய பணியாட்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார்.
வாரி வழங்கும் வள்ளலாக இருந்த அவர் தனக்கு பிடித்த சில பொருட்களை மட்டும் யாருக்கும் கொடுக்காமல் வைத்திருந்தார் . சொந்த மகனோ அல்லது மகளோ கேட்டால் கூட கொடுக்க மாட்டாராம் . ஒரு தடவை அவர் கையில் கட்டியிருந்த வாட்ச் நன்றாக இருக்கிறது என்று நான் சொன்னவுடன் உடனே கழற்றி என்னிடம் கொடுத்து விட்டார் . அதன் பிறகு பிரபு என்னிடம் பேசிக்கொண்டிருக்கும் போது அந்த வாட்ச்சை பலர் கேட்டும் கொடுக்காமல் வைத்திருந்தார் என்ரு சொன்னார் .
ஒரு முறை பாலச்சந்திரன் சுள்ளிக்காடும் ( மலையாள எழுத்தாளர்) அவரது நண்பர்களும் சிவாஜி சாரைப் பார்க்க அவர் வீட்டுக்கு சென்றிருந்தனர் .அவர்கள் விருப்பத்திற்காக சிவாஜி சார் ஒரு கையில் வேட்டியின் முனையைப் பிடித்துக் கொண்டு ,நெஞ்சை விரித்து ,கண்களில் தீப்பொறி பறக்க ,வீர பாண்டிய கட்டபொம்மன் வசனம் பேசிக் காண்பித்தார் (இங்கே 'வரி வட்டி' வசனத்தை மோகன்லால் குறிப்பிடுகிறார் ) .லட்சக்கணக்கான மக்களை மெய் மறக்கச் செய்த அந்த சிம்ம கர்ஜனையை நேரடியாக கேட்ட பாலச்சந்திரன் உணர்ச்சிவசப்பட்டு சிறுநீர் கழித்து விட்டார் என்கிறார் லால்.
இந்த வசனத்தை தமிழ்நாட்டுக்காரன் பேசச் சொல்லி கேட்டால் பேசுவாரா என்றால் இல்லை என்றே தோன்றுகிறது .அயல் மாநிலத்திலிருந்து வந்திருக்கக் கூடிய விருந்தினர்களுக்காக அவர்கள் விருப்பப்படும் எதையும் செய்யத் தயாராக இருந்தார் சிவாஜி சார் .தமிழகத்தின் தலை வணங்காத ராஜாவாக வாழ்ந்த அவர் , விருந்தினர் முன்னிலையில் பூமி போல பணிவாக நடந்து கொண்டார் . விருந்தினர் கடவுளுக்கு நிகர் என்று
அவர் உறுதியாக நினைத்து அது போல நடந்தார் . விருந்தினர்க்கு முன்னிலையில் ஒரு மலையாளியும் அது போல பணிவாக நடப்பதை நான் பார்த்ததே இல்லை .
வாயில் படியிறங்கி வந்து அவர் விருந்தினரை கார் கதவு திறந்து உள்ளே உட்கார வைத்து வழி அனுப்புவார் .அவர் அருகில் அவர் மனைவியும் சிரித்த முகத்துடன் நிற்பார் . நாம் வந்து விட்டு செல்வது அவர்களுக்கு கிடைத்த மிகப் பெரிய பாக்கியம் என்பது போல அந்த முகத்தில் உணர்ச்சிகள் வெளிப்படும் . தான் சந்திப்பவர்கள் எல்லாம் தன்னை விட பெரியவர்கள் என்றே அவர் நினைத்தார் . ஒருவரை அறிமுகப்படுத்தும் போது கூட இவர் பெரிய மனிதன் என்றே அறிமுகம் செய்வார் . அவர் பள்ளிக்கூடத்தில் படிக்கவில்லை . ஆனால் நடிப்பு உலகம் அவருக்கு சொல்லிக் கொடுத்த பழக்க வழக்கங்கள் யாராலும் காப்பி அடிக்க முடியாதவை .
நான் எப்போதாவது தலை குனிந்து வணங்க நேரிட்டால் என் உள்ளத்தில் இருக்கும் மலையாளி குணம் என்னிடம் " இந்த அளவுக்கு தலை குனிந்து வணங்க வேண்டுமா ?" என்று கேள்வி எழுப்பும் . அப்போது என்னை அறியாமலே சிவாஜி சார் நினைவு வரும் .தானே தலை குனிந்து போகும் .
இந்த வார விகடன் பொக்கிஷம் பகுதியில் இருந்து --
நடிப்பாசிரியர்!
டைரக்டர் பீம்சிங்குக்கு, படத் தின் பெயர் 'ப'வில் துவங்கவேண் டும் என்று ஆசை. தயாரிப்பாளர் பி.எஸ்.வீரப்பாவுக்கோ 'ஆ'வின் மேல் ஆசை! ஆலயமணியும், ஆனந்தஜோதியும் வந்து போயிற்று. இப்போது 'ஆண்டவன் கட்டளை' தயாராகிறது.
அப்படத்தில் கல்லூரிப் பேரா சிரியராக நடிக்கும் சிவாஜிகணே சன், அன்று செட்டில் இடைவேளை யின்போது புதுமுகம் ராஜனுக்கு ஏதோ சொல்லிக்கொடுத்துக்கொண் டிருந்தார். அருகில் சென்று பார்த்த போதுதான், விஷயம் புரிந்தது. சிகரெட் ஒன்றைக் கையில் வைத் துக்கொண்டு, "இதை விரல்களுக் கிடையில் வைத்துக்கொள்ளும் தினுசிலிருந்தே ஒருவனின் குணச் சித்திரத்தைச் சொல்லிவிடலாம். சிகரெட் பிடிக்கும் பாணியிலி ருந்தே ஒருவன் கதாநாயகனா, வில்லனா, காமெடியனா என்று காட்டிவிட முடியும்" என்று சொல்லி, பல 'ஸ்டைல்'களில் பிடித்துக் காட்டினார். நடிப்புக் கலையின் நுணுக்கங்களை விரல் நுனியில் வைத்திருக்கிறார் நடிகர் திலகம்!
நாஞ்சில் மாநகராம், நாகர்கோவில் நமது நடிகர் திலகத்தின் கோட்டை. கோலிவுட்டைப் பொறுத்த வரை நாகர்கோவில் ஒரு பி சென்டர்.
எதிரிகளை உதிரிகளாக்கி, சவால் சவால் என சவால் விட்டவர்களின் சவால்களையெல்லாம் (சவடால்களையெல்லாம்) சமாளித்து, தவிடு பொடியாக்கி, வெற்றி கண்டு, எதிர்ச் சவால் விட்டு, சாதனைகளின் உச்சம் தொட்ட சக்கரவர்த்திக்கு சீரோடும், சிறப்போடும் என்றென்றும் வெண்சாமரம் வீசும் புண்ணிய ஸ்தலம் நாகர்கோவில்.
இத்தகைய திருத்தலத்தில் அமைந்துள்ள ராஜேஷ் திரையரங்கில் ராஜபார்ட் சிவாஜி துரையின் ராஜாங்க சாதனைகளை கண்டு களிப்பீர்!
(திரைக்காவியம் - வெளியான தேதி - ஓடிய நாட்கள் என்கின்ற ஃபார்மெட்டில்)
[நாகர்கோவில் ராஜேஷ் அரங்கின் இட எண்ணிக்கை : 1036 இருக்கைகள்]
1. ஞான ஒளி - 11.3.1972 - 55 நாட்கள்
2. தர்மம் எங்கே - 15.7.1972 - 34 நாட்கள்
3. தவப்புதல்வன் - 26.8.1972 - 34 நாட்கள்
4. வசந்த மாளிகை - 29.9.1972 - 69 நாட்கள்
5. நீதி - 7.12.1972 - 50 நாட்கள்
6. ராஜ ராஜ சோழன் - 31.3.1973 - 69 நாட்கள்
7. எங்கள் தங்க ராஜா - 15.7.1973 - 102 நாட்கள்
8. கௌரவம் - 25.10.1973 - 53 நாட்கள்
9. சிவகாமியின் செல்வன் - 26.1.1974 - 50 நாட்கள்
10. வாணி ராணி - 12.4.1974 - 50 நாட்கள்
11. அவன் தான் மனிதன் - 11.4.1975 - 63 நாட்கள்
12. மன்னவன் வந்தானடி - 2.8.1975 - 56 நாட்கள்
13. அன்பே ஆருயிரே - 27.9.1975 - 27 நாட்கள்
14. டாக்டர் சிவா - 2.11.1975 - 40 நாட்கள்
15. உனக்காக நான் - 12.2.1976 - 29 நாட்கள்
16. சத்தியம் - 6.5.1976 - 29 நாட்கள்
17. உத்தமன் - 25.6.1976 - 63 நாட்கள்
18. சித்ரா பௌர்ணமி - 22.10.1976 - 28 நாட்கள்
19. அண்ணன் ஒரு கோயில் - 10.11.1977 - 61 நாட்கள்
20. அந்தமான் காதலி - 26.1.1978 - 51 நாட்கள்
21. என்னைப் போல் ஒருவன் - 18.3.1978 - 50 நாட்கள்
22. திரிசூலம் - 27.1.1979 - 77 நாட்கள்
23. கவரிமான் - 14.4.1979 - 48 நாட்கள்
24. பட்டாக்கத்தி பைரவன் - 19.10.1979 - 42 நாட்கள்
25. வெற்றிக்கு ஒருவன் - 8.12.1979 - 27 நாட்கள்
26. ரிஷிமூலம் - 26.1.1980 - 55 நாட்கள்
27. தர்மராஜா - 26.4.1980 - 34 நாட்கள்
28. எமனுக்கு எமன் - 30.5.1980 - 15 நாட்கள்
29. ரத்தபாசம் - 14.6.1980 - 41 நாட்கள்
30. மோகனப்புன்னகை - 14.1.1981 - 14 நாட்கள்
31. சத்தியசுந்தரம் - 21.2.1981 - 27 நாட்கள்
32. அமரகாவியம் - 24.4.1981 - 28 நாட்கள்
33. வா கண்ணா வா - 6.2.1982 - 34 நாட்கள்
34. வசந்தத்தில் ஓர் நாள் - 7.5.1982 - 14 நாட்கள்
35. சந்திப்பு - 16.6.1983 - 68 நாட்கள்
36. வாழ்க்கை - 14.4.1984 - 55 நாட்கள்
37. நாம் இருவர் - 8.3.1985 - 14 நாட்கள்
38. லட்சுமி வந்தாச்சு - 1.11.1986 - 27 நாட்கள்
39. மண்ணுக்குள் வைரம் - 12.12.1986 - 50 நாட்கள்
40. ஜல்லிக்கட்டு - 28.8.1987 - 54 நாட்கள்
ஆக, நாகர்கோவில் ராஜேஷ் திரையரங்கில், நமது நடிகர் திலகத்திற்கு,
100 நாட்களைக் கடந்த காவியம் : 1
9 வாரங்கள் முதல் 14 வாரங்கள் வரை ஓடிய காவியங்கள் : 6
50 நாட்கள் முதல் 62 நாட்கள் வரை ஓடிய காவியங்கள் : 13
5 வாரங்கள் முதல் 7 வாரங்கள் வரை ஓடியவை : 8
5 வாரங்கள் வரை : 12
குறிப்பு:
1. ராஜேஷ் அரங்கில் வெளியான நடிகர் திலகத்தின் புதிய திரைக்காவியங்கள் மட்டும் இங்கே தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.
2. ராஜேஷில் வெளியான முதல் நடிகர் திலகத்தின் திரைப்படம் மட்டுமல்ல, முதல் புதிய திரைப்படமே ஞான ஒளி தான்.
3. இருபதாம் நூற்றாண்டின் ஈடு, இணையற்ற சாதனைக் காவியமான திரிசூலம், ராஜேஷ் அரங்கில் 77 நாட்கள் வெற்றிகரமாக ஓடிய பின்னர், யுவராஜ் அரங்கிற்கு ஷிஃப்ட் செய்யப்பட்டு அங்கே 28 வெற்றி நாட்களைக் கண்டது. ஆக மொத்தம், திரிசூலம் நாகர்கோவிலில் 105 வெற்றி நாட்கள்!
4. ரத்தபாசம் திரைக்காவியத்தை திரையிடுவதற்காக ராஜேஷில் இருந்து 15 நாட்களில் எடுக்கப்பட்ட எமனுக்கு எமன், யுவராஜுக்கு மாற்றப்பட்டு அங்கே 35 நாட்கள் ஓடி, ஆக 50 வெற்றி நாட்கள்.
5. எந்தவொரு திரைப்படமும், பி சென்டர்களில் 5 வாரங்கள் ஓடினாலே நல்ல ஹிட்! 50 நாட்களைத் தொட்டாலோ சூப்ப்ர் டூப்ப்ர் ஹிட்!! 9 வாரங்கள் கண்டால் மகா மெகா ஹிட்!!!
சாதனைகள் எனும் சாம்ராஜ்யத்திற்கு நிரந்தர சக்கரவர்த்தி சிங்கத்தமிழன் சிவாஜி ஒருவரே!
இத்தொகுப்பிற்கு தகவல்களை அளித்து உதவி புரிந்த நாகர்கோவில் நல்லிதயங்கள்,
திரு.கே.பி.மோகன், திரு.எம்.மார்ட்டின் ஜேம்ஸ், திரு.என்.சுப்பிரமணியன், திரு.கே.கோபால், திரு.ஜி.சங்கர், திரு.பி.குணசீலன், திரு..வி.நாகராஜன், திரு.எஸ்.கண்ணன் மற்றும் திரு.எஸ்.ராமஜெயம், திரு.எஸ்.கே.விஜயன், நமது ஹப்பர் திரு.கே.மகேஷ் ஆகியோருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்!
அன்புடன்,
பம்மலார்.
நமது நடிகர் திலகத்தைப் பற்றி நடிகர் மோகன்லால் கூறியுள்ள ஒவ்வொன்றும் மெய் சிலிர்க்க வைக்கிறது. பதிவிட்ட காவேரிக் கண்ணன் அவர்களுக்கு கற்கண்டு நன்றிகள்!
பொக்கிஷப் புதையலுக்கும் கூடுதல் நன்றிகள்!
அன்புடன்,
பம்மலார்.
இதை தமிழாக்கம் செய்தது நமது முரளி ஸ்ரீனிவாஸ் அவர்கள் தானே.Quote:
Originally Posted by kaveri kannan
அதை பிரத்யேகமாக என் வலைப்பதிவில் வெளியிட்டேன்
http://cdjm.blogspot.com/2007/11/blog-post.html
:oops: Haven't seen this post. Posted it on Facebook.Quote:
Originally Posted by joe
:DQuote:
Originally Posted by groucho070
நான் வலைப்பதிவில் வெளியிட்ட போது ,அடுத்த வாரம் தினமணிக்கதிரில் இந்த வலைப்பதிவு இணைப்போடு குறிப்பு வந்திருந்தது 8-)
பம்மலார்,
என்றும் நடிகர் திலகத்தின் கோட்டையாம் எங்கள் நாஞ்சில் நகர் ராஜேஷ் திரையரங்கு தகவல்கள் அருமை .நன்றி 8-)