http://youtu.be/FhoNnGXUv_g
மதுரை வீரன் -1956
மக்கள் திலகத்தின் மகத்தான வெற்றி படம் .
தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு சகாப்தம் புரிந்த படம் .
பல சாதனைகள் பெற்ற படம் .
மக்கள் திலகத்தின் அற்புதமான நடிப்பு நிறைந்த படம் .
Printable View
http://youtu.be/FhoNnGXUv_g
மதுரை வீரன் -1956
மக்கள் திலகத்தின் மகத்தான வெற்றி படம் .
தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு சகாப்தம் புரிந்த படம் .
பல சாதனைகள் பெற்ற படம் .
மக்கள் திலகத்தின் அற்புதமான நடிப்பு நிறைந்த படம் .
1956 - ஆம் ஆண்டு வெளிவந்து பெரும் வெற்றிபெற்ற ‘மதுரைவீரன்’ படத்தில் இடம்பெற்ற,
‘நாடகமெல்லாம் கண்டேன் உந்தன்
ஆடும் விழியிலே
ஆடும் விழியிலே! - கீதம்
பாடும் மொழியிலே!…”
இவ்வாறு தொடங்கும், இப்பாடலை இன்றைய இளைஞர்களும் மெய்மறந்து இன்றும் இரச்த்துக் கேட்கக் காண்கிறோம்.
இப்பாடலில்,.
“தேடிய இன்பம் கண்டேன்! இன்று
கண்ணா வாழ்விலே - உங்கள்
அன்பால் நேரிலே!…”
“ஸ்வாமி!
உன் அழகைப் பார்த்திருக்கும்
எந்நாளும் திருநாளே!
அலைபாயும் தென்றலாலே
சிலை மேனி கொஞ்சுதே!”
என்று, காதல் வயப்பட்டு படத்தில் பத்மினியின் எழிலார்ந்த நடிப்பிற்கு ஏற்ப ‘ஜிக்கி’ பாடும் போதும்; அதற்கேற்ப அன்றைய பேரழகுத் தோற்றத்துடன் எம்.ஜி.ஆர். நடிக்க, அவருக்கு ஏற்பக் குரல் எடுத்து, டி. எம். சௌந்தரராஜன் பாடும் பாடல் காட்சியை யார்தான் இன்றும் இரசிக்காமல் இருக்க முடியும்?
எம்.ஜி.ஆரின் அழகைப் பார்த்திருக்கும் எந்நாளும் திருநாளாம்? அவர், அலைபாயும் சுகம் தரும் தென்றலாம்!’ இப்படியும் பாடலில் பதமான வார்த்தைகள் போட்டு, எம்.ஜி.ஆரை அன்றே வர்ணித்த கவிராஜன் வார்த்தைகள், காலத்தை வென்ற வார்த்தைகள்தானே!
Esvee,
According to sources this song scene was added after the whole film was completed. It seems the team found that there is something lacking in the ingredients and that was how Kaviarasu Kannadhasan ( he rarely does studio appearances) was approached as a last-minute ditch. He wrote this song having both MGR and Padmini as persons and not as artistes. After the picturisation of this song scene they saw the rushes and the end results were more than as expected. The film is now wholesome they reckoned. As a surprise gesture Kannadhasan was called to the studio the following day and he reluctantly came. He was surprised to be garlanded by Lena Chettiar, the producer with the others present, for having written such a beautiful romantic song. At that moment itself those present were very optimistic that Madurai Veeran will be a colossal success.
If I am not mistaken this song scene with its added camera techniques was the fore-runner to the dream songs featured in most of MGR films.
எங்கள் ரத்தினம் நடித்த நவரத்தினம் என்றுமே தங்க ரத்தினம்தான். தகவல் அனுப்பிய திருப்பூர் திரு. ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி..
தலைவரின் படங்கள் ஓடுவது தலைவருக்காக...மற்றவை சிறு காரணங்களே...எம்ஜிஆரும் தோற்பதில்லை எம்ஜிஆர் படங்களும் தோற்பதில்லை என்பதைக் காட்டவே இந்த வெற்றிகள்..
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i42.tinypic.com/2r5ep3k.jpg
உலக பேரழகன் நம் மணிமாறன் விரைவில் வெள்ளி திரையில் நம் எல்லோரையும் மகிழ்விக்க வருகை புரிய உள்ளார் .
ஆயிரத்தில் ஒருவன் - 1965
ஆங்கில படங்களுக்கு இணையான ,
தரமான படமாக
மக்கள் திலகத்தின் வெற்றி காவியமாக
சரித்திர சாதனை படைத்த காவியம் .
மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் பொழுது போக்கு சித்திரம் .
48 ஆண்டுகள் கடந்த பின்னரும் மக்கள் திலகம்
மீண்டும் ஒரு இமாலய வரலாறு படைக்க போகிறார் .
http://i42.tinypic.com/rk77fa.jpg
என்ன அப்படி வியப்பாக என்னை பார்க்கிறீர்கள் ?
நான்தான் மணிமாறன்
உங்களில் ஒருவன்
1965 ல் வந்த என்னை தொடர்ந்து
48 வருடங்களாக '
பல அரங்குகளிலும்
பின்னர் குறுந்தகடுகளிலும்
சின்ன திரையிலும்
கண்டு மகிழ்ந்த உங்களுக்கு
எனது வாழ்த்துக்கள் .
நவீன தொழில் நுட்பத்தில்
என்னை மேலும் மெருகேற்றி
புத்தம் புதிய
ஆயிரத்தில் ஒருவனை
என்னை மீண்டும் காண போகிறீர்கள்
விரைவில் சந்திப்போம்
coutesy- saradha madam
தமிழ்ப் படங்களில் ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு ஒரு தனிச் சிறப்பு எப்போதுமே உண்டு. தமிழ்ப் படங்களில் புராணப் படங்கள் ஏராளமாக வந்திருக்கின்றன. ராஜா ராணியை மையமாக வைத்து சரித்திரப் படங்களும் அதிக அளவில் வந்துள்ளன. சமூகப் படங்கள், மற்றும் நாட்டு விடுதலையை மையமாகக் கொண்ட படங்களும், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் அராஜகங்களை தோலுரித்துக் காட்டும் படங்களும் அதிகமாக வந்துள்ளன. நகைச்சுவைப் படங்களின் பட்டியலும் நீளம்தான். காதலை மையமாகக் கொண்ட படங்களோ திகட்டத் திகட்ட வந்திருக்கின்றன.
ஆனால் இது வரை கடற் கொள்ளையர்களை கதைக் கருவாகக் கொண்டு வெளி வந்த ஒரே படம் ஆயிரத்தில் ஒருவன் மட்டுமே. கதை, வசனம், காட்சியமைப்புகள், பாடல்கள், இசை, பொருத்தமான நடிகர் நடிகையர் தேர்வு, பொழுதுபோக்கு அம்சங்கள், கதையோடு ஒன்றிய கதைக் களங்கள் என, ஒரு வெற்றிப் படத்துக்குரிய எல்லா அம்சங்களும் ஒரு சேர அமைந்த படம் ஆயிரத்தில் ஒருவன்.
இப்படத்தின் கதாநாயனான ‘மக்கள் திலகம்’ எம்ஜியார் ஏற்றிருந்த மணிமாறன் என்ற கதாபாத்திரம், ஒரு கை தேர்ந்த தையற் கலைஞர் அளவெடுத்து தைத்த சட்டை பொருந்துவது போல வெகு அருமையாகப் பொருந்தியது. அவர் திறமைக்குத் தீனி போடுவது போல கத்திச் சண்டைக் காட்சிகள், அளவு மீறாத காதல் காட்சிகள், அவருக்கே பொருந்துவது போல அற்புதமாக அமைந்த பாடல்கள் என கனகச்சிதமாகச் சேர்ந்திருந்தது.
ஆயிரத்தில் ஒருவன் படத்தின் கதைச் சுருக்கத்தைச் சொல்வது என்பது அவசியமில்லாத ஒன்று. அந்த அளவுக்கு தமிழ்நாட்டு மக்களுக்கு பழகிப்போன திரைப்படம் இது. இன்றைய இளம் தலைமுறையினரும் கூட அறிந்து கொள்ளும் விதமாக, இன்றைக்கும் ஏதாவது ஒரு தொலைக்காட்சி அலைவரிசையில் ஒளிபரப்பாகிக் கொண்டே இருக்கும் படம்.
கதாநாயகியாக ஜெயலலிதா. இதிலும் பந்துலு மற்றும் எம்ஜியாரின் துணிச்சல் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. அது வரை (பானுமதிக்குப் பின்) சரோஜா தேவிதான் எல்லாப் படங்களிலும் தொடர்ந்து கதாநாயகியாக நடித்து வந்தார். அப்படியிருக்க, திடீரென்று அப்போதுதான் அறிமுகமாகி ஒன்றிரண்டு படங்களில் மட்டுமே நடித்திருந்த ஜெயலலிதாவை கதாநாயகியாக (அதுவும் எம்ஜியாருக்கு ஜோடியாக) போட்டிருந்தார்கள். (ஜெயலலிதா இப்போது நாடறிந்த புள்ளியாக இருந்தாலும், அப்போது அவர் புது முகம்தானே). ஆனால் படத்தில் அவர் நடிப்பைப் பார்க்கும்போது அவரை புதுமுகம் என்று யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அந்த அளவுக்குத் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
பருவம் எனது பாடல் என்ற பாடல் காட்சியில் ஜெயலலிதாவை அறிமுகம் செய்வதே அழகாக இருக்கும். கண்ணின் கருவிழியிலும், தாமரைப்பூவின் நடு இதழிலும்,கோயிலின் நடு மண்டபத்திலும் அவருடைய முகத்தை அறிமுகப்படுத்துவதே ஒரு அழகு.
எம்.ஜி.ஆரின் அறிமுகம் வழக்கம் போல “வெற்றி… வெற்றி…” என்ற வசனத்துடன் துவங்கும். (பாம்பு கடிக்கு மருந்து கண்டுபிடிப்பதில் வெற்றியடைந்திருப்பார்). சர்வாதிகாரி மனோகரால் கன்னித் தீவுக்கு அடிமைகளாக விற்கப்படும் போதாகட்டும், கப்பலில் பாயாசம் கேட்டு போராட்டம் செய்வதாகட்டும், தன்னை விரும்பும் இளவரசி பூங்கொடியிடம் அவருடைய காதலுக்கு கொஞ்சமும் தகுதியில்லாதவன் என்பதை விளக்குவதாகட்டும், நம்பியாரை நல்லவர் என்று நம்பி அவரிடம் மாட்டிக் கொண்டபின் தன்னை நம்பி வந்தவர்களின் உயிரைக் காக்க தன் மனச்சாட்சிக்கு விரோதமாக ‘கடற் கொள்ளையனாக’ சம்மதிப்பதாகட்டும், மனோகர் தன் எதிரியாக இருந்தபோதும் கூட கோழைத்தனமாக நம்பியார் விஷம் தோய்ந்த கத்தியை அவர் மீது வீசியதைக் கண்டு கொதித்துப் போய் அவரைக் காப்பாற்றும் இடத்திலாகட்டும்… இப்படி எல்லா காட்சிகளிலும் எம்.ஜி.ஆரின் நடிப்பு பாராட்டும்படியாக இருக்கும்.
கத்திச் சண்டைக் காட்சிகள் மூன்று இடங்களிலும் மிக அருமையாக படமாக்கப் பட்டிருக்கும். மணிமாறனும் பூங்கொடியும் (எம்ஜிஆர்+ஜெ) குடியிருக்கும் குடிலில் எம்ஜியாருக்கும் நம்பியாருக்கும் நடக்கும் கத்திச் சண்டை (முழுக்க முழுக்க மூங்கிலிலேயே அமைக்கப்பட்ட அருமையான செட்), கார்வார் மலைப் பகுதியில் அவர்கள் இருவருக்கும் இடையே மீண்டும் வாள் சண்டை (நம்பியார்: “இப்போட்டியில் வெற்றி பெறுபவனே இந்த தீவின் தலைவனாவான். முடிந்தால் நீ தலைவனாகு. இருந்தால் நான் தொண்டனாகிறேன்”), மூன்றாவதாக மனோகரின் படை வீரர்களோடு கப்பலில் மோதும் வாள் சண்டை. இவையனைத்திலும் எம்.ஜி.ஆர். (வழக்கம் போல) தன்னுடைய திறமையைக் காட்டி அசத்தியிருப்பார்.
பின்னர் வரப் போகும் மூன்று கத்திச் சண்டைக் காட்சிகளும் ரொம்ப சீரியசாக இருக்கும் என்பதால்தானோ என்னவோ, இவற்றுக்கு முதலில், கன்னித் தீவில் கொள்ளையடிக்க வரும் நம்பியாரின் ஆட்களோடு நடக்கும் சண்டையை ரொம்பவும் நகைச்சுவை ததும்பும் விதமாக படமாக்கியிருப்பார் பந்துலு.
பாடல்களும் இசையும்:
இப்படம் இன்னொரு விதத்திலும் மறக்க முடியாத படமாக அமைந்தது. ஆம், அது வரை தமிழ்த் திரை இசையில் இரட்டையர்களாக கோலோச்சி வந்த ‘மெல்லிசை மன்னர்கள்’ விஸ்வநாதன் ராமமூர்த்தி இருவரும் கடைசியாக இணைந்து இசையமைத்தது ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்திற்குத்தான். அதனால்தானோ என்னவோ இப்படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் வெரைட்டியாகவும், இசையில் இன்றைக்கும் ஒரு சாதனையாகவும் திகழ்கின்றன. பாடல்கள் அனைத்தும் கிட்டத்தட்ட தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மனப்பாடம் ஆகிவிட்ட ஒன்று. இன்றைக்கும் ஏதாவது ஒரு வகையில் தமிழ் ரசிகர்களுக்கு விருந்தாக தொலைக்காட்சிகளில் வந்து கொண்டிருக்கின்றன. சிறப்பு தேன்கிண்ணம் வழங்க வரும் திரையுலக வி.ஐ.பி.க்கள் மறக்காமல் தொடும் பாடல்கள் இடம் பெற்ற படங்கள் ஆயிரத்தில் ஒருவன், புதிய பறவை, அன்பே வா… இவற்றிலிருந்து பாடல்களைச் சொல்லாமல் அவர்கள் நிகழ்ச்சிகளை நிறைவு செய்வதேயில்லை. காரணம் அந்த அளவுக்கு தேன் சொட்டும் பாடல்கள்.
1. பருவம் எனது பாடல்
நான் முதலிலேயே சொன்னபடி, கதாநாயகி ஜெயலலிதா அறிமுகம் ஆகும் பாடல். தோழிகளோடு அவர் ஆடிப்பாடும் காட்சி என்பதால், பி.சுசீலாவின் குரலோடு கோரஸ் சிறப்பாக சேர்க்கப்பட்டிருக்கும்.
பருவம் எனது பாடல்
பார்வை எனது ஆடல்
கருணை எனது கோயில் கலைகள் எனது காவல்
கருணை உனது கோயில் கலைகள் உனது காவல்
பல்லவியை பாடி முடித்த சுசீலா, உச்ச ஸ்தாயியில் ஹம்மிங் ஆரம்பித்து அப்படியே படிப்படியாக கீழ் ஸ்தாயி வரையில் கொண்டு வர*, கூடவே அதுக்கு அனுசரணையாக கோரஸ் கலந்து ஒலிக்க, அப்பப்பா.. மெல்லிசை மன்னர்கள் இங்கு மெல்லிசை சக்கரவர்த்திகளாக உயர்ந்து நிற்பார்கள். பல்லவி முடிந்து
இதயம் எனது ஊராகும் இளமை எனது பேராகும்
என்று சரணம் தொடங்கும்போது, பாங்கோஸ் அருமையாக பாடலை அணைத்துச் செல்லும். அதனால்தான், பிற்காலத்தில் எத்தனையோ இசைக்கொம்பர்கள் வந்தும் கூட இந்தப் பாடல்களை மக்கள் மனத்திலிருந்து அகற்ற முடியவில்லை.
(நண்பர்கள் நிச்சயம் இங்கு அதற்கான ‘LINK’ தருவார்கள். SONGS கேட்டுப் பாருங்கள். வேறொரு உலகத்துக்குப் போவீர்கள்).
2. ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கையில்லை
வழக்கம் போல எம்.ஜி.ஆரின் தன்னம்பிக்கை ஊட்டும் பாடல் வரிசையில் ஒன்று.
ஓராயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே
நம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே
வரும் காலத்திலே நம் பரம்பரைகள்
நாம் அடிமையில்லை என்று முழங்கட்டுமே
இந்திய சுதந்திரப் போராட்ட தியாகிகள் எல்லாம் இப்படி எண்ணியதால்தானே இன்று நாம் சுத*ந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டு இருக்கிறோம்.
3. ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ
இந்தப் பாடலைப் பற்றி நண்பர்கள் ஏற்கெனவே இங்கு சொல்லியிருக்கிறார்கள். மக்கள் திலகம் பல கவிஞர்களிடம் பாடல் எழுதியும் திருப்தியடையாமல், அப்போது தன்னிடம் கருத்து வேறுபாடு கொண்டிருந்த கவியரசர் கண்ணதாசனை அழைத்து இந்தப் பாடலை எழுதச் சொல்லி திருப்தியடைந்தார் என்பார்க*ள். பாதிப் பாட*ல் அர*ண்ம*னை செட்டிலும் பாதிப்பாட*ல் கார்வார் க*ட*ற்க*ரையிலும் க*ண்டினியூட்டி கெடாம*ல் எடுக்க*ப்ப*ட்டிருக்கும்.
4. உன்னை நான் ச*ந்தித்தேன் நீ ஆயிர*த்தில் ஒருவ*ன்
பி.சுசீலா தனியாக*ப் பாடிய* பாட*ல். கூட*வே ஆண்க*ளின் கோர*ஸ். ம*ணிமாற*னைப் பிரிந்த* பூங்கொடி, செங்க*ப்ப*ரின் அர*ண்ம*னையில் சோக*மே உருவாக* பாடும் பாட*ல், கூட*வே க*ப்ப*லில் போய்க்கொண்டிருக்கும் ம*ணிமாற*னைக் காண்பிக்கும்போது, அவ*ர*து கூட்டாளிக*ளின் உற்சாக*மான* கோர*ஸ்.
பொன்னைத்தான் உட*ல் என்பேன் சிறு பிள்ளை போல் ம*ன*மென்பேன்
க*ண்க*ளால் உன்னை அள*ந்தேன் தொட்ட* கைக*ளால் நான் ம*ல*ர்ந்தேன்
உள்ள*த்தால் வ*ள்ள*ல்தான் ஏழைக*ளின் த*லைவ*ன்
அடுத்து வ*ரும் இசை ‘பிட்’டைக் கேட்க* முடியாது, கார*ண*ம் ப*ல*த்த* கைத*ட்ட*லும், விசில் ச*த்த*மும். பாட*ல் முடியும்போது, கோர*ஸுட*ன் க*ப்ப*ல்க*ள் முல்லைத்தீவு க*ரையில் ஒதுங்குவ*தாக* காட்டுவ*து அருமை. (கப்பல்கள் கரை ஒதுங்கும்போது, முல்லைத்தீவின் அரசியான எல்.விஜயலட்சுமி கறுப்பு நிற உடையில் அழகுப் பதுமையாக நடந்து வருவது எடுப்பான காட்சி).
4. ஆடாமல் ஆடுகிறேன்
கடற்கொள்ளையின்போது கிடைத்த பொருட்கள் மட்டுமின்றி, மனிதர்கள் கூட பொருட்களாக கருதப்பட்டு ஏலத்தில் விடப்பட வேண்டும் என்ற தீவின் சட்டப்படி, ஜெயலலிதா ஏலம் விடப்படும்போது அவர் மனம் நொந்து ஆண்டவனை அழைக்கும் பாடல். சுசீலா மேடத்துக்கு இப்படத்தில் அற்புதமான மூன்று தனிப்பாடல்கள், அதில் இதுவும் ஒன்று. இசை அருமையோ அருமை. முதலில் சாட்டையடி சத்தம், அதைத் தொடர்ந்து ஒவ்வொரு சாட்டையடிக்கும் அதைப் பிரதிபலிக்கும் வண்ணம் வயலினின் ஓசை.
ஆடாமல் ஆடுகிறேன்… பாடாமல் பாடுகிறேன்
ஆண்டவனைத் தேடுகிறேன் வா…வா…வா….
நான் ஆண்டவனைத் தேடுகிறேன்
வா…வா…வா…. வா….வா…வா…
முதல் இரண்டு வரிகளுக்கு பாங்கோஸ் இசைக்க, ‘ஆண்டவனைத் தேடுகிறேன்’ என்ற வரி ஆரம்பிக்கும்போது அருமையாக தபேலா ஆரம்பிக்கும். இடையிசையில் முதலில் வயலின், பின்னர் கிடார், அடுத்து ஃப்ளூட், பின் மீண்டும் வயலின் அடுத்து தபேலா சோலோ என்று மாறி மாறி ஒலித்து பாடலை எங்கோ கொண்டு செல்லும்.
விதியே உன் கை நீட்டி வலை வீசலாம்
ஊரார்கள் என்னைப் பார்த்து விலை பேசலாம்
அழகென்ற பொருள் வாங்க பலர் கூடலாம்
அன்பென்ற மனம் வாங்க யார் கூடுவார்
‘கன்னித்தீவின் இளவரசியாக கவலையில்லாமல் வாழ்ந்தேனே, இன்று இவர்கள் கையில் மாட்டி ஏலம் போகவா செங்கப்பரை வற்புறுத்தி கடல் பயணம் வந்தேன்’ என்ற ஏக்கம் பொங்க ஜெயலலிதா காட்டும் முகபாவம் நம் கண்களில் நீரை வரவழைக்கும். வயலினும் தபேலாவும் உச்ச ஸ்தாயியில் போய் பாடல் முடியும்போது மழை பெய்து ஓய்ந்த மாதிரி இருக்கும்.
(மெல்லிசை மன்னர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் அருமையான ‘SEND OFF ‘கொடுத்திருக்கிறார்கள் இப்படத்தில்).
5. நாணமோ… இன்னும் நாணமோ
நீ இளவரசி, நான் அடிமை யென்று பேதம் பார்த்து ஒதுங்கிருந்த மணிமாறனை ஒருவழியாக (விஷம் அருந்தியதாக பொய் சொல்லி) தன் காதலுக்கு சம்மதிக்க வைத்தாயிற்று. பின்னர் என்ன? காதலர்களுக்கு ஒரு பாடலாவது வேண்டாமா? அதுதான் இந்தப் பாடல். சிங்கம் ஒரு குட்டி போட்டாலும் அது சிங்கக் குட்டியாக இருக்கும் என்பது போல, படத்தில் இடம் பெற்றது ஒரேயொரு டூயட் பாடல் என்றாலும், மனதை அள்ளிக்கொண்டு போகும் பாடல். பாடலின் ‘PRELUDE’அருமையாக துவங்கும். (PRELUDE, INTERLUDE என்பவை என்ன என்று தெரிந்து கொள்ள இன்றைய இளைஞர்கள் இதுபோன்ற படங்களின் பாடல்களைக் கேட்பது நல்லது).
தோட்டத்துப் பூவினில் இல்லாதது
ஒரு ஏட்டிலும் பாட்டிலும் சொல்லாதது
ஆடையில் ஆடுது வாடையில் வாடுது
ஆனந்த வெள்ளத்தில் நீராடுது – அது எது?
ஆடவர் கண்கள் காணாதது
அது காலங்கள் மாறினும் மாறாதது
காதலன் பெண்ணிடம் தேடுவது
காதலி கண்களை மூடுவது – அது இது
பாடலின் முதல் பாதியில் ஜெயலலிதாவுக்கு பூக்களால் ஆடை செய்திருப்பார்கள். மறுபாதியில் எம்ஜியார், ஜெயலலிதா இருவருக்கும் ஆடை அழகாக கண்ணைக் கவரும் வண்ணம் இருக்கும்.
6. அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்
அடிக்கடி தொலைக்காட்சியில் கேட்டு, பார்த்து ரசித்த பாடல். எல்லோருமே இப்பாடலை பாராட்டிப் பேசுவார்கள். ஆகவே நானும் இழுத்துக் கொண்டு போவது அவசியமற்றது. கப்பலில் எம்ஜியார், ஜெயலலிதா, நாகேஷ், நம்பியார் என அனைவரும் இடம்பெறும் பாடல் காட்சி. பாடலின் பல்லவியை முதலிலேயே கிடாரில் ‘PRELUDE’ ஆக வாசித்துக் காட்டுவார்கள். இதன் இடையிசையில் வரும் ல..லா..லா.. ல..லா.. லா என்ற கோரஸ் ரொம்ப பிரசித்தம்.
கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை
கோயில் போல நாடு காண வேண்டும் விடுதலை
அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை
அடிமை வாழும் பூமியெங்கும் வேண்டும் விடுதலை
இன்றைக்கு இந்தப்பாடல்களை தொலைக்காட்சியில் வசதியாக கண்டு ரசிக்கிறோம். ஆனால், இது போன்ற வசதியற்ற அந்நாட்களில் இப்படத்தின் பாடல்களை தமிழர்களின் காதுகளுக்கு கொண்டு சென்று சேர்த்த பெருமை இலங்கை வானொலியைச் சேரும் என்பதை நாம் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறோம்.
இப்படத்தில் நாகேஷின் நகைச்சுவை நம்மை வயிறு குலுங்க சிரிக்கவைக்கும். உதாரணத்துக்கு ஒன்று. பூங்கொடியின் தோழி தேன்மொழியை (மாதவி) நாகேஷ் ஏலத்தில் எடுத்து வருவார். அப்போது எம்ஜியார் “என்னப்பா, தேன்மொழியை நீ ஏலத்தில் எடுத்தியா?”
நாகேஷ்: “அட நீங்க வேறே. இவள் வாயைப் பார்த்ததும்தான் திடலே காலியா போச்சே. பழகின தோஷத்துக்காக சும்மா பாத்துக்கிட்டு நின்னேன். என்னைப்பார்த்து ‘ஈ’ன்னு சிரிச்சா. ‘கொன்னுடுவேன்’ அப்படீன்னு ஒரு விரலைக் காட்டினேன். அந்த ஏலக்காரன், நான் ஒரு பவுனுக்கு இவளைக் கேட்கிறேனாக்கும்னு நினைச்சு இவளை என் தலையில் கட்டிட்டான்”.
‘ஆயிரத்தில் ஒருவன்’ திரையிடப்பட்டபோது சென்னை புரசைவாக்கம் மேகலா தியேட்டரில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருடன் பந்துலுவும் அமர்ந்து படத்தைப் பார்த்தார். படத்தின் முதல் நாள் முதல் காட்சியிலேயே தெரிந்து விட்டது, படம் மாபெரும் வெற்றி யென்பது. தமிழ்நாட்டின் பல ஊர்களில மாபெரும் வெற்றி பெற்று சாதனை புரிந்தது.
எப்போது பார்த்தாலும் புத்தம் புதியதாகவும் பிரமிப்பூட்டும் படமாகவும் அமைந்த படம் தான் ஆயிரத்தில் ஒருவன். இப்படத்தைப்பற்றிய கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டது பற்றி மிகவும் சந்தோஷம்.
‘ஆயிரத்தில் ஒருவன்’ பற்றிய எனது கருத்துக்களைப் படித்த அன்பு இதயங்களுக்கு நன்றி.
தொகுக்கப்பட்ட பக்கம்: சாரதா பதிவுகள், திரைப்படங்கள்
"ஆயிரத்தில் ஒருவன்" ஒரு க்ளாசிக்!
எம் ஜி ஆர் படங்களிலேயே சிறப்பான ஒரு படம்னா அது, பி ஆர் பந்துலு வின் ஆயிரத்தில் ஒருவன் தான் என்பேன் நான். 1965 ல் வந்த படம் இது. பாடல்கள் அனைத்துமே முத்தானவை. ஜெயலலிதா அறிமுகமான (வெண்ணிற ஆடை) அதே வருடத்தில் முதல் முதலாக எம் ஜி ஆர் வுடன் ஜோடியாக நடித்த படம் இதுதான்.
நம்ம எம் ஜி ஆர், மணிமாறன், ஒரு நாட்டு வைத்தியர், பாம்புகடி விஷத்துக்கு மருந்து கண்டுபிடிப்பார். அவர் வாழும் நெய்தல் நாட்டில் ஒரு சர்வாதிகாரியின் கொடுமையால் புரட்சி வெடிக்கும். மணிமாறன் சில புரட்சியாளர்கள் உயிரைக் காப்பாற்றுவார். உடனே அங்கே உள்ள சர்வாதிகாரி மனோகர் அவரை குற்றம் சாட்டி அடிமையாக விற்க அவரை கன்னித்தீவுக்கு நாடுகடத்துவார். அடிமையோட அடிமையாக கன்னித்தீவுக்கு அனுப்பப்படுவார் அழகும், வீரமும் நிறைந்த மருத்துவர் மணிமாறன்.
கன்னித்தீவின் இளவரசி, பூங்கொடி (நம்ம அம்மையாருக்கு 16 வயது இருக்கும்).
* "பருவமெனது பாட"லில் அழகும் இளமையுமாக அறிமுகமாவார்!
* "ஏன் என்ற கேள்வி" கேட்கும் ஆயிரத்தில் ஒருவன், மணிமாறனின் அழகில் மயங்கி தன் இதயத்தைப் பறிகொடுப்பார்.
* "ஓடும் மேகங்களே" என்று பாடி, நாடாளும் வண்ண மயில் நீ, நாட்டிலுள்ள அடிமை நான்! உனக்கும் எனக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது என்று சொல்லி இளவரசியின் காதலை நிராகரித்துவிடுவார், மணிமாறன்.
* "உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன்" என்று காதல் தோல்வியில் ஏங்குவார், பூங்கொடி!
காலச்சக்கரம் சுழலும், அடிமை மணிமாறன் கொள்ளைக்காரர் ஆவார் இல்லை ஆக்கப்படுவார். ஆனால் அவர் கொள்ளையரைத்தான் கொள்ளையடிப்பார்!! கொள்ளையர்போல் நடிக்கும் நல்லவர், பூங்கொடியின் இதயம் கவர்ந்த அடிமை, மணிமாறன், இன்று கொள்ளையராகி கொள்ளையர் கப்பல்போல் இருக்கும் உல்லாசக்கப்பலை- பூங்கொடியின் கப்பலையே- சூரையாடுவார்.
இளவரசி அடிமையாவார்! ஏலத்தில் விலைக்குப்போகும் (*ஆடாமல் ஆடுகிறேன்) அவர் இதயத்தைத் திருடிய “திருடன்” மற்றும் கொள்ளைக்காரன் மணிமாறன், தானே அவளை விலைக்கு வாங்கிக்கொள்வார்!
இருவருக்கும் இடையில் ஊடல், ஊடல் முடிந்து கூடலாகும்போது!
* நாணமோ இன்னும் நாணமோ பாடலில் ஜோடிப்பொருத்தம் நல்லாயிருக்கும்! ரொம்ப சிறப்பான டூயட் இது! மிகவும் ரசிக்கத்தக்க இருக்கும் இந்தப்பாடல்.
அதுக்கப்புறம் கொள்ளையர்களை நல்லவராக்கி "அதோ அந்தப்பறவை போல வாழவேண்டும்" பாடல் பாடிக்கொண்டே சொந்த நாடான “நெய்தல் நாட்டுக்கு" திரும்பி வந்து சர்வாதிகாரியிடம் போராடி அவரையும் திருத்தி, குடியாட்சி கொண்டு வருவார்!
எடிட்டிங் பிரமாதம், காமெடி (நாகேஷ்), வில்லன்கள் (நம்பியார், மனோகர்) எல்லாமே அபாரம்!
சண்டைக்காட்சிகள் சிற்ப்பாக இருக்கும். எம் ஜி ஆர், இளமையாகவும் மிகவும் அழகாகவும் இருப்பார்! ஜெயலலிதாவும் சிறப்பா நடித்து இருப்பார்.
A very rare image posted by Kumar Rajendran facebook.
http://i39.tinypic.com/2uzccqd.jpg
Another rare image
http://i44.tinypic.com/14wbrlf.jpg
From net
உற்சாகம் எனும் உணர்வுக்கு உதாரணமாக வரும் பாடல் ஒன்றைச் சொல்லி நிறைவு செய்ய விரும்புகிறேன். தமிழகத்தின் திரைத் துறையிலும் அரசியலிலும் நீங்கா இடமும் மங்கா புகழும் கொண்ட புரத்சித் தலைவரின் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் வரும் "அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்". இந்தப் படத்தில் தான் அவரது அரசியல் வாரிசு அடையாளம் காணப் பட்டது. செல்வி.ஜெயலலிதாவும் மக்கள் திலகம் திரு.எம்.ஜி.ஆரும் இணைந்து தோன்றும் இப்பாடல் சோர்ந்த போதெல்லாம் நெஞ்சை உயிர்ப்பிக்கும். திரு. எம்.எஸ்.வி அவர்களின் மெல்லிசையில், டி.எம்.எஸ் அவர்களின் வெண்கலக் குரலில் வந்த களிப் பாடல் இது.
அந்தக் கூட்டம் அடிமைப் பட்டுக் கிடந்தது. அந்தக் கூட்டம் உய்வு பெற வந்த தலைவன் அவன். அவன் கண்டெடுத்த தலைவி அவள். அந்தத் தேசத்தை அவர்கள் மீட்டெடுக்கப் போகிறார்கள் என்று சொல்லாமல் சொல்லும் பாடல்.
"அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்"
http://i41.tinypic.com/e0lycj.jpg
Rajesh Reddy from facebook
அறிஞர் அண்ணா மருத்துவமனையில்
வாழ்வின் இறுதிக் கணங்களை
எதிர்நோக்கிக் கிடந்தபோது,
கன்னத்தில் கை வைத்தபடி வாசலில்
ஒன்று சேர அமர்ந்திருக்கிறது...
அன்றைய எதிர்க்கட்சியும், ஆளுங்கட்சியும்...!!
இப்போது நடக்குமா.....?
தொலைந்து போன அரசியல் நாகரீகம்
இனிய நண்பர் திரு ரூப்
மக்கள் திலகத்தின் நிழற் படங்கள் அருமை .
உங்களுக்கும் திரு ராஜேந்திரன் அவர்களுக்கும் நன்றி
எஸ்வி சார் ,
முக்கியமாக b .r பந்துலுவின் முதல் திரைப்படம் அல்லவா ஆயிரத்தில் ஒருவன் மக்கள் திலகத்துடன் ! எத்தனை திரை அரங்குகளில் வெள்ளிவிழா ஓடியது?
ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் வெள்ளிவிழா மற்றும் நூறு நாள் விளம்பரங்களை பார்க்க ஆவலாக உள்ளது..இங்கே பதிவிடுவீர்களா ? நான் பதிவிறக்கம் செய்துகொள்ள விரும்புகிறேன் !
இனிய நண்பரே [360]
மக்கள் திலகம் - பந்துலு கூட்டணியில் வந்த வெற்றி காவியம் .
படம் வெள்ளி விழா ஓடவில்லை .
சென்னை - மூன்று அரங்குகள்
திருச்சி - கோவை - நூறு நாட்கள் ஓடியதாக தகவல் .
பத்திரிகை ஆதாரம் கிடைக்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளது .
கிடைத்தவுடன் இங்கு பதிவிடப்படும் .
THANKS PAMMAL SIR
http://i1110.photobucket.com/albums/...ilOruvan-1.jpg
http://tinypic.com/r/5u251u/5
ANDHA 7 NATKAL - MGR SONG LINES
எனக்கு பிடித்த மக்கள் திலகத்தின் பாடல்
மாட்டுக்காரவேலன் -
''ஒரு பக்கம் பார்க்கிறா .... ஒரு கண்ணை சாய்க்கிறா ''
பாடகர் திலகம் அவர்களின் இனிய குரலில் திரை இசை திலகம்
மகாதேவனின் இசையில் மக்கள் திலகம் அவர்கள் தனக்கே உரிய மாறுபட்ட நடிப்பில் அபிநயத்துடன் சிறப்பாக நடித்து
இருப்பார் .
பாடல் வரிகளும் - அதற்கேற்ப மக்கள் திலகத்தின் முக பாவங்களும் , நடிப்பும் பிரமாதமாக இருக்கும் .
ஒரு காதலியின் உணர்வுகளை - பாடல் வரிகளில் மூலம்
எடுத்து கூறும் காட்சியில் மக்கள் திலகத்தின் நடிப்பு
ரசிகர்களை மேலும் தீவிர ரசிகனாக மாற்றியது .
http://i41.tinypic.com/1y070g.jpg
வியட்நாமில் வசிக்கும் ஒரு திரைப்பட ஆய்வாளர்
எல்லோரும் அறிந்த ஒரு இனிய நண்பர்
மக்கள் திலகம் நடித்த '' நீதிக்கு பின் பாசம் '' படத்தின்
கதா பாத்திரத்தின் பெயர் கொண்ட நண்பர்
உதட்டளவில் கோபமிருந்தாலும்
உள்ளத்தில் மக்கள் திலகத்தையே பூஜிக்கும்
உயர்ந்த மனிதரின் கை வண்ணத்தில்
மாட்டுக்காரவேலன் - ஓர் ஆய்வு கட்டுரை
விரைவில் நமக்கு படைக்க உள்ளார் .
கலை''வாணியின்'' ஆசி பெற்ற
''கோ '' மாதாவின் கொடையான '' ''பால் ''
மாட்டுக்காரவேலன்
வரவேற்க காத்திருப்போம் .
courtesy- kannadasan kavidhaigal - net
எம்.ஜி.ஆர். ஒரு நடிகர் மட்டுமல்லர். அவர் அனைத்துக் கலைநுட்பங்களையும் நுணுக்கமாக அறிந்த கலைவித்தகர். நாட்டு மக்களின் இரசனைகளை நாடிபிடித்து அறிந்தவர். எனவேதான், அவரது படங்களில் வரும் பாடல்களை ஒலிப்பதிவு அறைகளில் அமர்ந்து, சொல்லுக்குச் சொல் கேட்டே, பதிவு செய்திட அனுமதிப்பார். அதேபோல், படங்களில் இடம்பெறும் வசனங்களையும் வார்த்தைக்கு வார்த்தை ஆராய்ந்தே இடம்பெறச் செய்வார். இவையே அவரது வெற்றியின் மூல இரகசியமாகும்.
நாட்டு மக்களுக்குச் சொல்லவேண்டிய, செய்யவேண்டிய நல்ல கருத்துகளையும், செயல்களையுமே தனது படங்களின் பாடல்கள், வசனங்களில் எம்.ஜி.ஆர் இடம்பெறச் செய்தார். அவ்வாறு செய்த காரணத்தால்தான், எம்.ஜி.ஆர். என்ற மந்திர சக்தி இன்றளவும் மக்களின் இதயங்களில் மாமகுடம் தாங்கி வீற்றிருக்கிறது.
இனி, எம்.ஜி.ஆர் படங்களில் கண்ணதாசனின் கவித்துவம் வாக்குப் பலிதமாய் வாகை சூடிய விதங்களை விபரமாய்க் காண்போம்.
ஆரம்பகாலப் பாடல்கள்…. சில!
‘மர்மயோகி’ படம் வெளியான ஆண்டு 1951.
“அழகான பெண்மானைப் பார்!
அலைபாயும் கண்வீச்சைப் பார்!”
என்று தொடங்கும் இப்படப் பாடலில்,
வாடாத ரோஜா – உன்
மடிமீதில் ராஜா!
மனமே தடை ஏனையா! – நிதம்
பொன்னாகும் காலம்
வீணாக லாமோ!
துணையோடு உலகாளவா!
என்ற அருமைமிகு கவித்துவமே துள்ளித் ததும்புகின்றன.
‘உலகாளவா!’ என்ற அழைப்பு கவியரசரின் பாடலில், எம்.ஜி.ஆருக்கு எழுதும் முதல் படப்பாடலிலேயே எழுப்பும் விதம் விந்தையல்லவா!
“கண்ணின் கருமணியே கலாவதி – இசைசேர்
காவியம் நீயே!
கவிஞனும் நானே!”
என்று ஆரம்பம் ஆகும் பாடலில், அடுத்து,
“எண்ணம் நிறை வதனா – எழில்சேர்
ஓவியம் நீர் மதனா!”
“அன்பு மிகுந்திடும் பேரரசே!
ஆசை அமுதே என் மதனா!”
என வரும் தொடர்கள் எம்.ஜி.ஆரின் எழிலார்ந்த வனப்பையும், அன்புள்ளத்தையும், பேரரசாளும் பெருமையினையும் எடுத்துரைக்கும்.
1956 – ஆம் ஆண்டு வெளிவந்து பெரும் வெற்றிபெற்ற ‘மதுரைவீரன்’ படத்தில் இடம்பெற்ற,
‘நாடகமெல்லாம் கண்டேன் உந்தன்
ஆடும் விழியிலே
ஆடும் விழியிலே! – கீதம்
பாடும் மொழியிலே!…”
இவ்வாறு தொடங்கும், இப்பாடலை இன்றைய இளைஞர்களும் மெய்மறந்து இன்றும் இரச்த்துக் கேட்கக் காண்கிறோம்.
இப்பாடலில்,.
“தேடிய இன்பம் கண்டேன்! இன்று
கண்ணா வாழ்விலே – உங்கள்
அன்பால் நேரிலே!…”
“ஸ்வாமி!
உன் அழகைப் பார்த்திருக்கும்
எந்நாளும் திருநாளே!
அலைபாயும் தென்றலாலே
சிலை மேனி கொஞ்சுதே!”
என்று, காதல் வயப்பட்டு படத்தில் பத்மினியின் எழிலார்ந்த நடிப்பிற்கு ஏற்ப ‘ஜிக்கி’ பாடும் போதும்; அதற்கேற்ப அன்றைய பேரழகுத் தோற்றத்துடன் எம்.ஜி.ஆர். நடிக்க, அவருக்கு ஏற்பக் குரல் எடுத்து, டி. எம். சௌந்தரராஜன் பாடும் பாடல் காட்சியை யார்தான் இன்றும் இரசிக்காமல் இருக்க முடியும்?
எம்.ஜி.ஆரின் அழகைப் பார்த்திருக்கும் எந்நாளும் திருநாளாம்? அவர், அலைபாயும் சுகம் தரும் தென்றலாம்!’ இப்படியும் பாடலில் பதமான வார்த்தைகள் போட்டு, எம்.ஜி.ஆரை அன்றே வர்ணித்த கவிராஜன் வார்த்தைகள், காலத்தை வென்ற வார்த்தைகள்தானே!
1957 – ஆம் ஆண்டில், கவியரசரின் கருத்தாழமிக்க திரைக்கதை வசனத்தோடு வெளிவந்த ‘மகாதேவி’ திரைப்படத்திலும், கவிஞரின் பொன்னான பாடல்கள் முத்திரை பதிக்கத் தவறவில்லை.
“கண்மூடும் வேளையிலும் கலை என்ன கலையே!
கண்ணே உன் பேரழகின் விலை இந்த உலகே!”
“சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே
சங்கீத வீணையும் எதுக்கம்மா!”
இந்த இளமை, இனிமை ததும்பும் இவ்விரு பாடல்களோடு,
மகாபாரதப் போரில் அபிமன்யூ மாள, மகன பிரிவால் தாய் சுபத்திரை துடிதுடிப்பதைப் படம்பிடித்துக் காட்டும்,
“மானம் ஒன்றே பெரிதெனக் கொண்டு
வாழ்வது நமது சமுதாயம்!
மரண பயங்கரம் சூழ்ந்து வந்தாலும்
மாறிவிடாது ஒரு நாளும்!”
என்ற பல்லவியுடன், படத்திற்கே முத்தாய்ப்பாய் அமைந்த பாடலும்;
“காமுகர் நெஞ்சில் நீதியில்லை – அவர்க்குத்
தாயென்றும் தாரமென்றும் பேதமில்லை!”
என்ற தத்துவ சமூகநீதிப் பாடலும்; எம்.ஜி.ஆர் படத்திற்குப் புகழ் சேர்ந்த பாடல்களே!
இவற்றுள்,
‘மானம் ஒன்றே!’ என்று தொடங்கும் பாடலின் முழு விளக்கத்தையும் ‘கண்ணதாசன் கவிதைகளில் கடவுள் நெறி’ என்ற எனது முந்தைய நூலில் எழுதியுள்ளேன்.
ஆனந்தஜோதி
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரோடு, நடிகை தேவிகா இணைந்து நடித்த ஒரே படம் ஆனந்தஜோதி! கதாநாயகியின் தம்பியாக கமல்ஹாசன், எம்.ஜி.ரோடு நடித்த படமே ஆன்ந்தஜோதி. இப்படத்தில் எம்.ஜி.ஆரை, ‘மாஸ்டர்! மாஸ்டர்!’ என்று மழலை மொழியில் கமல்ஹாசன் அழைக்கும் குரல் நயம் அருமையோ அருமை.
ஹரிஹரன் பிக்சர்ஸ் தயாரிப்பில், வி.என். ரெட்டி, ஏ.எஸ்.ஏ. சாமி இயக்கத்தில், விசுவநாதன் – ராமமூர்த்தி இசையமைப்பில், கண்ணதாசன் பாடல்கள் நிறைந்த இப்படம் 5.7.1963 அன்று வெளியானது.
படத்தில் எம்.ஜி.ஆர் உடற்கல்வி ஆசிரியராக, ‘ஆனந்த்’ என்ற பெயரில் நடித்துள்ளார்.
ஆனந்தஜோதி படத்தில் வரும் அனைத்துப் பாடல்களும் அனைவரது பாராட்டுகளையும் பெற்றவையே என்றால் உண்மையே.
இப்படத்தில்,
“காலமகள் கண்திறப்பாள் சின்னையா – நாம்
கண்கலங்கி கவலைப்பட்டு என்னையா?”
“நினைக்கத் தெரிந்த மனமே – உனக்கு
மறக்கத் தெரியாதா?”
இவ்வாறு பி. சுசீலாவின் குரலில் சோகமழை பொழியும் பாடல்களும், பலரது ஆதங்கங்களுக்கு ஆறுதல் தரும் பாடல்களே!
தர்மத்தின்சாவி!
“பலப்பலப் பலபல ரகமா இருக்குது பூட்டு – அது
பலவிதமா மனிதர்களைப் பூட்டுது போட்டு
கலகலவென பகுத்தறிவு சாவியைப் போட்டு – நான்
கச்சிதமாய்த் திறந்து வைப்பேன் இதயத்தைக் காட்டு….”
கேட்டீர்களா …. பாட்டு?
பகுத்தறிவு எனும் சாவியால்… இதயங்ளைத் திறந்து வைக்க வருகிறார் எம்.ஜி.ஆர்!
இனி அவர் என்ன சொல்கிறார்?
“அடக்கமில்லாம சபையில் ஏறி
அளந்துகொட்டும் ஆண்களுக்கு வாயிலே பூட்டு!
அடுத்தவர் பையில் இருப்பதைக் கையில்
அள்ளிக் கொள்ளும் திருடருக்கு கையிலே
பூட்டு!”
சரிதானே!
வாய்ப்பேச்சு வீரர்களுக்கு வாயிலும், திருடர்களுக்குக் கையிலும் போட வேண்டியது தானே பூட்டு….
இன்னும் யார் யாருக்குப் பூட்டுப் போடவேண்டும் என்றே எம்.ஜி.ஆர். பட்டியலிடுகிறார். பாடலின் தொடர்ச்சியைக் கண்டு, தெளிவீராக.
அடுத்து அவர் தரும் சாவியைக் காண்போம்!
“அறிவிருந்தாலும் வழி தடுமாறி
அவதிப்படும் மக்களுக்கும் இருக்குது சாவி
வறுமையினாலே வாழ்க்கை யில்லாமே
வாடிப்போன வீட்டினையும் திறக்குது சாவி!
தங்க மக்கள் உள்ளத்திலே
அன்பு மிக்க எண்ணத்திலே
தடை இருந்தா உடைத்துப் போடும்
தர்மத்தின் சாவி!”
என்னே அதிசயம்!
அறிவிருந்தும், அவதிப்படுவோர்க்கும் சாவி உண்டு!
வறுமையில் வாடிப்போனவர் வீட்டையும் வளம்பெறத் திறக்கவும் சாவி! உண்டு
தங்கமான மக்கள் உள்ளங்கள்! – அவற்றுள்
அன்புமிக்க எண்ணங்கள்!
இவைகளுக்குள் தடையா?
உடைத்துவிடும்! – எது?
அதுதான்…தர்மத்தின் சாவி!….”
இங்கே எம்.ஜி.ஆர் எடுத்துச் சொன்ன பகுத்தறிச் சாவி, தம்மத்தின் சாவி இரண்டைனையும் பார்த்தோம்.
யார் சொன்னால் மக்கள் கேட்பார்கள் என்பதை அறிந்தே, கண்ணதாசன், எம்.ஜி.ஆர். படங்களில் இப்பாடல்களைத் தந்து சொல்ல வைத்தார்.
யார் இந்தப் படத்திற்குப் பாடல்கள் தந்தால் நன்றாக இருக்கும் என்பதைத் தெரிந்தே, எம்.ஜி.ஆர். தகுந்த படங்களில் கண்ணதாசனைப் பாடல்கள் எழுத வைத்தார்.
இருவர் பார்வையிலும், இருவரும் எபுபோதுமே இலக்கிய இரசனையில் வேறுபட்டு நின்றவரல்லர்.
கடவுள் இருக்கின்றான்!
கவியரசர், புரட்சிநடிகர் மூலம் புகட்டும் தத்துவம் கேளீர்!….
“கடவுள் இருக்கின்றார் – அது உன்
கண்ணுக்குத் தெரிகின்றதா?
……………..
இசையை ரசிக்கின்றாய் – இசையின்
உருவம் வருகின்றதா?”
என்றெல்லாம் வினாக்களை எழுப்பி, எங்கும் இருக்கும் இறைவனை, இதயத்தால் உணரவைப்பதைக் கேட்டீர்கள்.
இன்னும்…..
“புத்தன் மறைந்தவிட்டான் – அவன் தன்
போதனை மறைகின்றதா?
சத்தியம் தோற்றதுண்டா? – உலகில்
தருமம் அழிந்ததுண்டா? – இதை
சரித்திரம் முழுதும் படித்த பின்னாலும்
சஞ்சலம் வருகின்றதா? -
தேடியும் கிடைக்காது – நீதி
தெருவினில் இருக்காது!
சாட்டைக்கு அடங்காது – நீதி
சட்டத்தில் மயங்காது!
காலத்தில் தோன்றி கைகளை நீட்டி
காக்கவும் தயங்காது!”
காலங்கள் உருண்டோடினாலும், கலங்கும் மனிதருக்கும், கண்ணீர் சிந்தும் மனிதருக்கும், தைரியம் ஊட்டி, சத்தியம் தோற்காது; தருமம் அழியாது; சஞ்சலம் கொள்ளாதீர் என்று கூறி, நீதி மயங்காது; காக்கவும் தயங்காது என்று பெரும் ஆறுதல்களைக் கூறும் இந்தத் தத்துவப் பாடலைத் தரணியில் உள்ளோர் உள்ளங்களால் மறக்க முடியுமா?… முடியவே முடியாது.
அடுத்து,
ஆனந்தஜோதியை கவியரசரும், புவியரசரும் ஏற்றிவைத்துப் புகழ்கொண்ட வித்த்தைப் போர்ப்போமே!
புரட்சித்தலைவராம் எம்.ஜி.ஆரின் படப்பாடல்களில் நாட்டுப்பற்றையும், தேசிய உணர்வையும் ஊட்டிப் புரட்சி கீதம் எழுப்பியவரே கவியரசர். அந்த வகையில்தான்,
“ஒருதாய் மக்கள் நாமென்போம்!
ஒன்றே எங்கள் குலமென்போம்!
தலைவன் ஒருவன் தான் என்போம்!
சமரசம் எங்கள் வாழ்வென்போம்!”
என்று தொடங்கும் பாடலைக் கவியரசர் எழுதினார்.
உடற்கல்வி ஆசிரியராய்த் தோன்றி, மக்கள்திலகம் மாணவர்களுக்கு அறிவு தீபம் ஏற்றிவைக்கும் விதத்திலேயே இப்பாடல் காட்சியில் நடிப்பார்.
அறிஞர் அண்ணாவின் தாரக மந்திரமாம், ‘ஒன்றேகுலம்! ஒருவனே தேவன்!’ என்ற திருமூலர் செப்பிய ஒப்புயர்வற்றவாக்கும்; ‘தலைவன் ஒருவனே!’ என்ற வாக்குறுதியும்; வள்ளலாரின் சமரச நோக்கும் இப்பாடல் வரிகளிலே நினைவுறுத்தப் பெற்றன.
பாடல் எழுதிய கண்ணதாசனுக்கும்; எடுத்துச் சொன்ன எம்.ஜி.ஆருக்கும்; பாடிய டி.எம். சௌந்தர்ராஜனுக்கும் இன்றும் இப்பாடல் நற்புகழினையே நல்கி வருகிறது.
தொடர்ந்து வரும் பாடல் வரிகளில், தமிழன்னையின் தனித்ததோர் புகழ் கூறப்படுகிறது.
எங்ஙனம்…..?
“பொதிகை மலையில் பிறந்தவளாம்!
பூவைப் பருவம் அடைந்தவளாம்!
கருணை ந்தியில் குளித்தவளாம்!
காவிரிக் கரையில் களித்தவளாம்!”
இப்படித்தான்…!
இவற்றின் விளக்கங்களையெல்லாம், நான் ‘கண்ணதாசனின் புரட்சிப் பூக்கள்’ என்ற நூலில் விளக்கமாக எழுதியுள்ளேன்.
எனவே, இப்பாடலின் பெருமையை அறிய விரும்புவோர் அந்நூலை நுகர்வீர்களாக!
ஆயிரம் இருந்தாலும்,
“தர்மத்தின் சங்கொலி முழங்கிடுவோம்! – தமிழ்த்
தாயின் மலரடி வணங்கிடுவோம்!
அமைதியை நெஞ்சினில் போற்றி வைப்போம்!
ஆனந்த ஜோதியை ஏற்றி வைப்போம்!”
என்ற அர்த்தமுள்ள கருத்துகளை, உங்களோடு பகிர்ந்து கொள்ளாமல் செல்ல என்னால் எப்படி முடியும்?
‘தர்மத்தின் சங்கொலி முழங்கிடுவோம்!’ என்ற கருத்தை எடுத்துச் சொன்ன எம்.ஜி.ஆரே தர்மத்தின் தலைவனாக நின்றார்.
‘தமிழ்த்தாயின் மலரடி வணங்கிடுவோம்!’ என்று, எடுத்துரைத்த அவர்தான், தஞ்சைத் தரணியிலே ‘தமிழ்ப் பல்கலைக்கழகம்’ அமைத்தார். உலகம் போற்ற மதுரை மாநகரில் ஐந்தாவது உலகத்தமிழ் மாநாட்டை மகத்தான முறையில் நடத்திக் காட்டினார்.
அளவிற்கு அடங்காத அக்கிரமங்கள், அடக்குமுறைகள் விளைந்தபோதும்; அமைதியை நெஞ்சினில் தேக்கி, ஆனந்த ஜோதியை ஏற்றிப் புகழ்கண்ட ஒளிவிளக்கே எம்.ஜி.ஆர். தானே!
‘கோட்டையை எட்ட முடியுமா?’ என்ற கேள்வி எழுந்தபோதும்; சூழ்ச்சியின் ஆட்சியின் தளபதிகளாக இருந்தவர்களையும், அதற்குத் துணைபுரிந்த துரியோதன வம்சத்துக் கும்பல்களையும்; மக்கள் சக்தியால் மண்டியிட வைத்து, மாமகுடம் தரித்த மாபெரும் தலைவராய் விளங்கியவரும் எம்.ஜி.ஆர். அல்லவா?
இங்கேதான், கண்ணதாசன் கவிதைகளைப் பற்றி எம்.ஜி.ஆர் ஏற்றமுடன் புகழ்ந்துரைந்தார். அந்தப் புகழுரைகளை நாமும் பூரிப்புடன் பார்ப்போமாக.
எஸ்வி சார்,
'ஆண்டவன் கட்டளை'ப்படி தாங்கள் ஏற்றிவைத்த ஆனந்த ஜோதி. :)
Esvee,
Your indepth knowledge of Kaviarasar Kannadhasan's immortal lines for MGR mesmerizes me! Please continue with this noble cause so that the future generations will know how this duo have voluntarily taken upon themselves to promote the Tamil language. Whatever you are writing on this duo is itself a record of sorts.
இனிய நண்பர் வாசு சார்
1963ல் ஜொலித்த எங்கள் ஆனந்த ஜோதியின் ஒளியால்
http://i43.tinypic.com/rcokrt.jpg
பிரகாசித்த உங்களின் ஆண்டவன் கட்டளை 1964ல்
எல்லா பாடல்களும் சூப்பர் ..
ஆனந்தும் ஜோதியும் பாடும் இரண்டு பாடல்கள் மறக்கக முடியாத காதல் கீதங்கள் ..
இனிய நண்பர் திரு மகேந்திரன் சார்
நான் பதிவிட்ட கண்ணதாசன் கவிதை பதிவு இணைய தளத்தில் ''புரட்சித்தலைவர் வரலாறு '' என்ற தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்ட தாகும் ..
மக்கள் திலகம் அவர்களின் '' நினைத்ததை முடிப்பவன் '' திரைப்படம் இன்று இரவு 7.30 மணிக்கு முரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது .
http://youtu.be/KWD_Lh8XTNs
அனைவருக்கும் உலக தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்
------------------------------------------------------------------
தந்தையைப்போல் உலகிலே தெய்வமுண்டோ - ஒரு மகனுக்கு
சர்வமும் அவரென்றால் விந்தையுண்டோ
- தாய்க்கு பின் தாரம்
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
.................................................. .....
அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம்
தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம்
இரண்டும் இருந்தால் பேரை வாங்கலாம்
பேரை வாங்கினால் ஊரை வாங்கலாம்
- பெற்றால் தான் பிள்ளையா
அன்புடன்
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
----------------------------------------------------------------------
அன்பு ரூப் அவர்களுக்கு,
அபூர்வமான இந்தப் படத்தைப் பதிவிட்டமைக்கு நன்றிகள். இதுவரை பார்த்ததே இல்லை. அற்புதமான படம். இந்தப் படத்தில் மக்கள் திலகத்தின் அழகினை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. இன்னமும் நிறைய உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம். குமார் ராஜேந்திரன் அவர்களுக்கும் நன்றிகள். மக்கள் திலகத்துடன் சதுரங்கம் ஆடும் அந்த அதிர்ஷ்டசாலி யார் என்பதை அறிந்திருந்தால் தெரிவிக்க வேண்டுகிறேன்.
சென்னையில் இன்று
மக்கள் திலகத்திற்கு மற்றுமொரு மணிமகுடம்
உரிமைக்குரல் மாத இதழ் நடத்தும் 7வது விழா
மக்கள் திலகத்தின் சாதனை மலர் வெளியீட்டுவிழா
விழா சிறக்க வாழ்த்துகிறேன்.
அன்புடன்ன்
வ.ஜெய்சங்கர் & வள்ளிநாயகம், கொளத்தூர்.
வினோத் சார்,
ஆனந்த ஜோதி கவியரசு கண்ணதாசன் பாடல்கள் குறித்த தங்களின் பதிவு அருமை.
ஆனந்த ஜோதி மக்கள் திலகத்துடன் (சிறுவனாக) கமல் இணைந்து நடித்த ஒரே படம்.
http://i1318.photobucket.com/albums/...ps4812de0f.jpg
இப்படம் அப்பொழுது நன்கு ஓடியதா?