Originally Posted by
Gopal,S.
ஞான ஒளி(தொடர்ச்சி)
மேற்கூறிய எந்த விஷயங்களும் என் மூளையில் உதித்தவை அல்ல. இவையெல்லாம் பிரபல மெடிக்கல் journals இல் இருந்து post -orphanage behaviour பற்றி திரட்ட பட்ட சில points .
அந்தோணி ஒரு ஒழுங்கற்ற கோபகார தகப்பனுக்கு பிறந்து ஏழ்மையில் வாழ்ந்த போது இல்லாத பிரச்சினைகள், தகப்பன் தன்னை அடித்தவனை வெட்டி விட்டு தண்டனை பெற்று ,தாயையும் இழக்கும் போது ,அவன் trauma மற்றும் அநாதை நிலை ,பாதிரியாரால் படிப்பறிவின்றி , மத நம்பிக்கைகள் மட்டும் சொல்லி வளர்க்க பட்டு ஆதரிக்க பட்டாலும், அவன் அடிப்படை குணங்கள் மாறாமலே வாழும் ஒருவன். பாதிரியாரால் கூட அவன் அடிப்படை குணங்களை மாற்ற முடியாமல் ,பெயில் கொடுத்து போலீஸ் ஸ்டேஷன் போய் அடிக்கடி அழைத்து வந்து damage control தான் செய்ய முடிந்திருக்கிறது.
தனக்கென்று இலட்சியங்கள் இல்லாத அந்தோணி,பாதிரியாரின் லட்சியங்களை சுவீகரிக்கிறான்.. அது சார்ந்த கோட்பாடுகள் மட்டுமே ,அவன் master - morality என்பதை தீர்மானிக்கிறது.தொடர்ந்து தனக்கென்று அமைத்து கொண்ட உறவுகளை இழந்தோ,உறவுகள் சிதைந்தோ அவனின் மற்ற எல்லா ஆசைகளையும் தகர்க்கிறது.
poor self regulation and emotional volatility என்பது முதல் காட்சியில் இருந்தே வெளிபடுத்த படும். மற்ற கதாபாத்திரங்களின் வசனங்களும் அதையே நமக்கு சொல்லும். சிவாஜி அதை இளமையில் ஒரு விதமாகவும், நடு வயதில் ஒரு விதமாகவும், பணக்கார வயதான அருணில் வேறு விதமாகவும் வெளிப்படுத்தும் விதம் பிறகு விவரமாக அலச படும்.
தன் மகளிடம் கூட அவர் ஆசை brolier கோழி போல அவள் வளருவதே தான் தன் பாதிரி சார்ந்த விருப்பங்களை நிறைவேற்றவே ,அவளுக்கு மற்ற ஆசைகள் தவிர்க்க பட வேண்டும் என்று மகளின் விருப்பங்களை சாராத முரட்டு தனமான ஆதிக்க அன்புதான். ஊரில் அநியாயங்களை தட்டி கேட்பதில் சட்டத்தை கையில் எடுக்கும் புத்தி ,மகளுக்காக செய்யும் செயல்களிலும் வெளிப்பட்டு ,நினைத்ததை நினைத்த படி அப்பொழுதே செய்ய துடிக்கும் விளைவுகள் பாராத உணர்வெழுச்சி நிலை.மகள் தவறி விட்டாளே என்பதை விட கனவுகளை தகர்த்த கொடுமைதான் வாழைகளுக்கு யமனாகிறது.சில சமயம் அதீத புத்தியை காட்டி அதிசயிக்க வைத்தாலும், அப்பாவித்தனம் தொனிக்கும், சமயா சந்தர்ப்பம் தெரியாமல் எட்டி பார்க்கும் விளையாட்டு தனம், சவாலை ஜெயிக்க விரும்பும் (அல்லது ஜெயித்து விட்ட) அசட்டு தனம் கலந்த சவடால்கள், சிறு சிறு தற்காலிக வெற்றிகளில் இன்பம் காணும் mixed maturity,learned helplessness ,Idiosynchrosies எட்டி பார்க்கும் இடங்கள் ஏராளம்.
obsessive compulsive நிறைந்த தோள் தடவும் mannerism ,யாராவது ஒன்றை அழுத்தி சொல்லும் போது அதற்கு கூடுதல் அழுத்தம் கொடுப்பது (வரேன்டாடாடா )என இடது கை aggressive முரடனுக்கு இந்த படத்தில் நடிப்பிலும் , திரைக்கதை அமைப்பிலும் கொடுக்க பட்டிருக்கும் அற்புதமான psychology கொண்ட ஒத்திசைவு ,சிவாஜி இந்த பாத்திரத்தில் கூடு விட்டு கூடு பாய்ந்து ஒவ்வொரு அசைவிலும் நெளிவிலும் வெளிபடுத்தும் அதிசயத்தை எப்படி வியப்பது?
துளி கூட தன் நண்பனின் லட்சியங்களுக்கு,நம்பிக்கைக்கு,எதிர்காலத்துக்க ு உலை வைப்பதில் குற்ற உணர்ச்சி கொள்ளாமல், அவனை ஜெயித்து விட்ட தொனியில் சவால் விட்டு உலவும் அந்தோணியை எப்படி விவரிப்பது?
(தொடர்வேன்)