http://i1302.photobucket.com/albums/...ps65de67ae.jpg
Printable View
http://i1302.photobucket.com/albums/...ps1d5a08df.jpg
உழைப்பின் வழி நடந்து
வெற்றிக் கோட்டைக்குச்
சென்றவர்.
உயர்வான கலை தருவேன் என
ஒற்றைக் காலில்
நின்றவர்
பட்டணங்களில் 'சிவாஜி'
ரசிகர்கள் அதிகம்.
பட்டிக்காடுகளில் 'ஜிவாஜி'
ரசிகர்கள் அதிகம்.
http://i1302.photobucket.com/albums/...ps33737425.jpg
பிரமாதம் கோல்ட் ஸ்டார் , வில்லில் இருந்து புறப்பட்ட அம்புகள் போல அடுத்து அடுத்து பதிவுகள் - அதுவும் இதுவரை யாரும் பார்க்காத பதிவுகள் - இந்த சுவை போறாது என்று மேலும் கவி மாலை வேறு - வார கடைசியில் எல்லோரையும் திக்கு முக்காட வைத்துவிட்டீர்கள் - சரக்கு இன்னும் உள்ளதா அல்லது இவைகள் மட்டுமேவா ??
அன்புடன் ரவி
கோவையில் பைரவனின் அனல் வீச்சு இன்றும் தொடர்ந்திருக்கிறது. இன்றைய நாளில் 474 அனுமதி சீட்டுகள் விற்பனையாகி உள்ளன. பொதுவாக சனிக்கிழமைகளில் இந்தளவு பழைய படங்களுக்கு டிக்கெட் போகாது. அதையும் மீறி சரித்திரம் படைத்துக் கொண்டிருக்கிறார் பைரவன். நாளை சொல்லவே வேண்டாம்.
அதே போன்று சென்னை மகாலட்சுமியில் என்ஜீனியர் ராஜாவிற்கும் வரவேற்பு குறையவில்லை. இன்றும் தியாகம் திரைப்படத்தை 624 பேர் கண்டு மகிழ்ந்திருக்கின்றனர்.
சென்னையிலும் கோவையிலும் முறையே தியாகமும் எங்கள் தங்க ராஜாவும் இரண்டே நாளில் பெற்றிருக்கும் வசூல் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதியிருக்கிறது என்பதை சொல்லவும் வேண்டுமோ?
மதுரையிலும் இன்றைய தினம் ஹீரோ தன செல்வாக்கை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். கிட்டத்தட்ட நேற்றைய அளவிலேயே வைர நெஞ்சம் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நாளை மாலை வெகு சிறப்பாக இருக்கும் என்று செய்திகள் .
அன்புடன்
நம்முடைய ரசிகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். இப்போது வெளியாகியிருக்கும் படத்தை பற்றிய கமன்ட்களை நமது திரியில் தவிர்க்கலாமே. பாச மலர் வெளியான நேரத்தில் அவர்கள் அப்படி நடந்துக் கொண்டனர் என்பதற்காக நாமும் அதை செய்ய வேண்டாமே! இன்றைய கால கட்டத்தில் அனைத்து தகவல்களும் நமக்கு மட்டுமல்ல பொது மக்களுக்கும் தெரியும். ஆகவே யாரும் யாரையும் ஏமாற்ற முடியாது. தவறான தகவல்களை சொல்லி பிம்பத்தை வளர்க்க முடியாது.
இப்போது என்றல்ல எப்போதும் உண்மை செய்திகள் தமிழ்கமெங்கும் நடக்கும் உண்மை செய்திகள் நம் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் யார் மனதையும் புண்படுத்தும் எண்ணம் நமக்கில்லை.ஆகவேதான் நடிகர் திலகத்தைப் பற்றிய தவறான செய்திகளுக்கு மட்டும் அல்லது வரலாற்று பிழைகளுக்கு மட்டும் நாம் பதில் சொல்கிறோம்.
எனவே அனைவரும் நமது படங்களைப் பற்றி மட்டும் பதிவிடுவோம். உண்மைகளை காலம் உரக்க சொல்லும். அதை மனதில் இருத்தி பதிவிடுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
You have just tied my hands I was about write many many bare facts of things happened in seventies about other side FILMS. when they have dragged NT unnecessarily about TRISULAM AND SORGAM in their thread, as you say let us simply ignore them TRUTH ALWAYS WINS SATYAMEVE JAYATE.
நடிகர் திலகத்தின் பழைய படங்கள்
மறு வெளியீடகளில் சாதிப்பதில்லை என்பதுபோல
சில வாதங்கள் அண்மையில் அங்கே வந்து போயின
குறிப்பு எடுத்து வைக்கவில்லை என்பதற்காக
சாதனைகள் இல்லை என்று ஆகிவிடாது
80களில் நமது நண்பர்கள் நடிகர் திலகத்தின்
பழைய பட சாதனைகளை புள்ளி விபரத்துடன்
வெளியிட்டிருந்தார்கள் அது
இங்கே பார்வைக்கு
http://i157.photobucket.com/albums/t...psf07a4c52.jpg
http://i157.photobucket.com/albums/t...psc1297dfa.jpg
அன்புள்ள முரளி
நீங்கள் இந்த திரியை ஒரு அஹிம்சாவதத்தின் முன்னோடியாக கொண்டு செல்வதை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம் - அனால் அதையே சிலர் நமது மிக பெரிய பல வீனம் என்றும் எடுத்துக்கொள்ள வாய்ப்பு இருகின்றதே ! சிவாவின் ஆவணங்கள் , ரவிகிரணனின் பதிவுகள் , சதீஷின் உறக்கமில்லாத உழைப்பு - இவ்வள்ளவு இருந்தும் , மன வளர்ச்சி கோளாறால் பலர் புரிந்து கொள்ள முடியாமல் , மனம் வந்தபடி உளர்வதில் docterate பண்ணி உள்ளார்கள் - அவர்களுக்கு அவர்கள் வழியில் சென்று தான் பதில் கொடுக்கவேண்டும் என்று சொல்லவில்லை - ஆனால் கண்டு கொள்ளாமல் சென்று விட்டால் அவர்கள் இன்னும் பேத்துவதர்க்கு நாம் இன்னும் நிறைய வாய்ப்பு கொடுகின்றோமோ என்று தோன்றுகின்றது - பலர் படிக்கும் திரி இது - குறிப்பாக இன்றைய தலைமுறை இந்த இரு மேதைகளை பற்றி இன்னும் நிறைய தெரிந்துகொள்ள , புரிந்துகொள்ள இந்த திரிகள் பலமாகவும் , பாலமாகவும் இருக்கும் - அப்படி பட்ட ஒரு திரி பொயின் மொத்த வடிவமாக ஆகிவிட நாம் அனுமதிக்க கூடாது - அப்படி பொய் பேசுபவர்களுக்கு , கற்பனைக்கும் அதிகமாக பேத்துபவர்களுக்கு நாம் தான் ஒரு நல்ல பதிலடி கொடுக்க வேண்டும் --
நாம் ஒரு பண்பு என்ற ஒரு நல்ல பட்டரையில் வளர்ந்தவர்கள் - பிறரை திட்டித்தான் நம் தலைவருக்கு புகழ் சேர்க்கவேண்டும் என்ற நிலையில் இல்லாதவர்கள் - சாதிக்காததை சாதித்ததாக சொல்ல தெரியாதவர்கள் - படம் வெற்றி பெறவில்லை என்றால் -- அதையும் அழகாக மழுப்ப தெரியாதவர்கள் - நம் பதிவுகளில் முதல் வரியிலேயே - படம் ஏனோ வெற்றி இல்லக்கை அடைய வில்லை , மிகவும் கண்டு கொள்ளாத படம் என்றுதான் எழுதுவோம் - 8 round இல் - 8 இலட்சம் சம்பாதித்தது என்று நமக்கு எழுத வராது - ஒரு புதிய முறையில் தலைவர் நடித்து தயாரிப்பாளர்களை மகிழ்வித்த படம் என்று நமக்கு எழுத தோணாது - ஒரு சிரஞ்சீவியை கூட அல்ப்ப ஆயுசு என்று சொன்னவர்கள் நாம் - இந்த திரியின் பிதாமகரை பற்றி கூட , அப்படி சொல்லும்போது நாம் கவலை பட்டதில்லை - திரை அரங்குகளில் தப்பி தவறி ஒரே ஒரு காக்கா உட்காந்து விட்டாலுமே , கூட்டம் நிரம்பி வழிகின்றது என்று நமக்கு சுட்டு போட்டாலும் சொல்ல வராது - இப்படி இவளவு குறைகள் நமக்கு உண்டு - அதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்
ஒன்று மட்டும் நிச்சயம் - நாம் பலவீனர்கள் அல்ல - நமக்கு புலியாக பாய தெரியும் - சிங்கமாக கர்ஜிக்க தெரியும் -
ஆனால் மிருகத்தனமாக எழுத தெரியாது , பிறரை புண்படுத்த வராது -
-தன் வினை தன்னை சுடும் என்று புரிந்து கொள்ளாதவர்களுக்கு விளக்கம் தேவை இல்லை ;
-தூங்குவது போல நடிப்பவர்களுக்கு அனுதாபம் தேவை இல்லை -
-வெளிச்சத்திற்கு வராதவர்களுக்கு edison யை பற்றி பேச என்ன யோகிதை இருக்கின்றது ??
-குறுகிய வட்டத்துள்ளே இருப்பவர்கள் கொலம்பஸ் யை பற்றி என்ன பேசி விட முடியும் ?
-அம்மாவாசையின் இருளை ரசிப்பவர்களால் அழகிய கதிரவனின் இளம் கதிர்களை பற்றி பேச தெரியுமா ??
சிங்கம் ருத்திரத்தை சொல்லிகொண்டு வாழ முடியாது - சீண்டுபவர்கள் சிதறி ஓட நாம் சிறிதே அஹிம்சைக்கு விடுமுறை கொடுக்கலாமே முரளி ??? !!!!
அன்புடன் ரவி
:smile2::smokesmile:
அன்பு ரவி,
உங்கள் உணர்வுகளை நிச்சயமாக புரிந்துக் கொள்கிறேன். அந்த உணர்வுகளையும் மதிக்கிறேன். காந்தியவாதியாக அஹிம்ஸா வழியைதான் இங்கே அனைவரும் பின் தொடர வேண்டும் என்றும் சொல்லவில்லை. நான் சொல்ல வந்தது என்னவென்றால் அங்கே ஒரு நண்பர் தவறாக பேசினார் என்பதற்காக நாமும் அதை செய்தால் இங்கே படிப்பவர்கள் என்ன நினைப்பார்கள்? சிவாஜி ரசிகன் என்று சொன்னால் அது ஒரு பெருமை, தவம் செய்து கிடைக்கும் வரம். அதற்கு மாசு வரவேண்டாம்.
மாற்று முகாம் நண்பர்கள் பலரிடம் இருக்கும் வேதைனைக்குரிய சிந்தனை என்னவென்றால் கண்மூடித்தனமான சிவாஜி விரோதம். சிவாஜி ரசிகர்களை எதிரிகளாக பார்ப்பது. சிவாஜி ரசிகனை பார்க்காதே, சிரிக்காதே, பேசாதே, பழகாதே என்றெல்லாம் விதிக்கப்பட்டிருக்கும் கற்கால கட்டுப்பாடுகள். அந்தக் காரணத்தினால்தான் இப்படிப்பட்ட வார்த்தைகள் வருகின்றன. இன்னும் சொல்லப் போனால் அடுத்த தலைமுறைக்கும் கூட இந்த வெறுப்பு கடத்தி செல்லப்படுகிறது. ஏன் இதை கூறுகிறேன் என்றால் இன்று நம் மீது அமிலத்தை கக்கும் நண்பர் கூட நம்முடைய தலைமுறையை சேர்ந்தவர் இல்லை. இதை கூற காரணம் அவரே ஒரு முறை தன் பதிவில் 1983-ம் ஆண்டு நடந்த ஒரு நிகழ்வை குறிப்பிட்டு அந்த நிகழ்ச்சிக்கு 9 வயது சிறுவனாக தன தந்தையுடன் சென்றதாக எழுதியிருந்தார். அப்படியென்றால் 1974-ல் பிறந்தவராக இருக்க வேண்டும். 1974 என்றால் அவருக்கு நினைவு தெரிந்து சினிமாவை புரிந்துக் கொள்ளும் போது சிவாஜி எம்ஜிஆர் போட்டி எல்லாம் முடிந்து விட்ட காலம். ஆகவே அவருக்கு நேரிடையான அனுபவம் கிடையாது. எல்லாமே செவி வழி செய்திதான். அப்படி பரப்பபடும் செய்திகளில் என்ன உண்மை இருக்க முடியும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆக நேரிடையான அனுபவம் இல்லாமல் நடிகர் திலகத்தின் மீது உருவாக்கப்பட்ட வெறுப்பை சுமந்து கொண்டு [நான் புரிந்து கொண்ட வகையில் தனக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டிருப்பவை தவறான தகவல்கள் என்பது தெரியாமலே] ஒரு இளைய நண்பர் ஏதோ சொல்லி விட்டார் என்பதற்காக நாமும் அதே பாணியில் பேச வேண்டுமா என்பதை சற்று யோசித்து பாருங்கள்.
நான் நேற்றே சொன்னது போல் இது பழைய காலம் அல்ல. உண்மைகளை யாரும் மூடி மறைக்க முடியாது. எந்தப் படமாக இருந்தாலும் அது எப்படி ஓடுகிறது எனபது இப்போது அனைவராலும் அறிந்துக் கொள்ள முடியும், முடிகிறது. யாரும் தவறான தகவல்கள் தந்து பட்டங்களை சூட்டிக் கொள்ள முடியாது. அது மட்டுமல்ல இங்கே பலரின் அயராத உழைப்பினால் இன்று நாம் சொல்லும் கடந்த கால மற்றும் நிகழ் கால உண்மைகளை இதுவரை அதை பற்றி மாற்றுக் கருத்து கொண்டவர்கள் கூட இப்போது உண்மை நிலை உணர்ந்து விட்டனர்.
இதற்கு இரண்டே இரண்டு உதாரணங்கள் சொல்ல விரும்புகிறேன். சென்னை மகாலட்சுமி மற்றும் கோவை ராயல். இந்த இரண்டு திரையரங்குகளும் ஒருவரின் குத்தகை எனபது போன்ற தோற்றம் நிலவி வந்தது. இப்போது தொடர்ந்து நமது படங்கள் வெளியிட ஆரம்பித்தவுடன் உண்மை நிலவரம் என்ன? நமது படங்கள் குவிக்கும் வசூல் என்ன என்பது இப்போது வெளியில் தெரிகிறது. அதிலும் நாம் தோராயமாக இத்தனை வசூல் என்றோ சுமார் 300-400 பேர்கள் வந்திருந்தனர் என்று பொத்தாம் பொதுவாக எழுதுவதில்லை. மொத்தம் விற்பனையான டிக்கெட்கள் எத்தனை என்ற துல்லியமாக கணக்கு சொல்கிறோம். காரணம் தவறான தகவல் தந்து நாம் சாதிக்க போவது ஒன்றுமில்லை.
ஆகவே நான் எப்போதும் சொல்லும் அந்த பாடல் வரிகளை இப்போதும் சொல்லி முடிக்க விரும்புகிறேன்.
யாரும் தீமை செய்தாலும் நீங்கள் நன்மை செய்யுங்கள்
யாரும் பொய்யை சொன்னாலும் நீங்கள் மெய்யை சொல்லுங்கள்
நேர்மையாய் வாழ்வதில் தோல்வியே இல்லையே
அன்புடன்
இன்றும் கோவை ரசிகர்கள் பைரவ துதிப்பாட்டை அமர்க்களமாக தொடர்ந்திருக்கிறார்கள். இன்று மாலை காட்சிக்கு ரசிகர்கள் பெருந்திரளாக வந்திருந்து அரங்க வளாகம் அமைந்திருக்கும் தெருவை ஒரு கலக்கு கலக்கி விட்டனராம். இன்று மாலைக் காட்சி முடிய 655- க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்பனையாகி இருக்கின்றன. அண்மைக் காலங்களில் திரையிடப்பட அனைத்து படங்களின் முதல் மூன்று நாள் வசூலை முறியடித்து முன்னேறுகிறது எங்கள் தங்க ராஜா.
நமது ரசிகர் செந்தில்வேல் சிவராஜ் இன்று மாலை அரங்க வாசலில் எடுத்த முகநூலில் தரவேற்றிய புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு.
https://fbcdn-sphotos-g-a.akamaihd.n...40877271_n.jpg
https://fbcdn-sphotos-c-a.akamaihd.n...93117526_n.jpg
அன்புடன்
இன்றைய ஞாயிறு தினம் மிக இனிமையான தினமாக கடந்து சென்றது. நடிகர் திலகம் ஒரு versatile actor என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதற்கு சான்றாக பல விஷயங்களை சொல்லலாம். அதையே ரொம்ப எளிதாக சொல்ல வேண்டுமென்றால் அவர் ஒருவர்தான் class and mass hero. மிகப் பெரிய உயர் பதவியில் இருப்பவர்களும் அவர் ரசிகர்களாக இருப்பார்கள். அது போன்றே சாதாரண மனிதனும் அவர் ரசிகனாக இருப்பான்.
இன்று காலை Russian cultural Society இணைந்து NT FAnS நடத்திய பச்சை விளக்கு திரை காவியத்தின் பொன் விழ கொண்டாட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. Russian Consulate General, திரு B.லெனின், திரு ராம்குமார் மற்றும் Zeal என்ற ஆளுமை பண்புகளை வளர்க்கும் நிறுவன [Personality Development Training] பயிற்சியாளர் ராஜன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு நடிகர் திலகத்தைப் பற்றிய தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டார்கள். Indo Russian Friendship Society தலைவருமான திரு தங்கப்பன் விழா ஏற்பாடுகளை சிறப்புற செய்திருந்தார். காலை வேளையாக இருந்த போதும் திரளான பொது மக்கள் கூட்டம். நான் முன்னரே குறிப்பிட்டது போல் class audience. விழா முடிந்ததும் படம் திரையிடப்பட்டது. அற்புதமான படம். படம் முடிந்து வெளியே வந்த அனைவரும் ஒரே சுரத்தில் சொன்ன வார்த்தை Thanks! இப்படி ஒரு படத்தை திரையிட்டு எங்கள் மனதை மகிழ்ச்சி படுத்தியதற்கு என்றார்கள். மிக அற்புதமான தருணங்கள் அவை.
காலை இப்படியென்றால் மாலை நடிகர் திலகம் எவ்வளவு பெரிய மாஸ் ஹீரோ எனபது ஒரு முறை கூட நிரூபணம் ஆனது. தியாகம் திரையிடப்பட்டிருக்கும் மகாலட்சுமி அரங்கம் அமைந்திருக்கும் Strahans சாலை மாலை 5 மணி முதல் 6 மணி வரை ஒரு திருவிழா கூட்டத்தையும் திருவிழா atmosphereயையும் எதிர்கொண்டது. அண்மை காலங்களில் இது போன்ற அலப்பரை நான் பார்த்ததில்லை. வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு ஆவேச கொண்டாட்டம். நாங்கள் உள்ளே இருந்த அரை மணி நேரமும் அது தொடர்ந்தது. குறிப்பாக பாடல் காட்சியாக இல்லாமல் வெறும் music பின்னணியில் ஒலிக்க நடிகர் திலகமும் படாபட் ஜெயலட்சுமியும் மற்றும் கூட்டத்தினரும் ஆடும் ஆட்டத்திற்கு அரங்கே அதிர்ந்தது. இரு ஒரு வேலை இருந்ததனால் எழ மனமின்றி எழுந்து வந்தோம்.
கடந்த சில பல வருடங்களில் மகாலட்சுமியில் வெளியான அனைத்து படங்களின் முதல் மூன்று நாள் வசூலையும் முறியடித்து தியாகம் வெற்றி நடை போடுகிறது என்ற தகவலையும் அரங்க உரிமையாளர் மூலமாக தெரிந்துக் கொண்டோம்.
மதுரை வைர நெஞ்சம் தகவல் நாளை பகிர்ந்து கொள்கிறேன்.
அன்புடன்
It was a wonderful sunday for me from Morning at Russian Centre for Pachai Vilakku and
in the evening at Mahalakshmi theatre. I never seen such a function for an old movie where
fans makes the road one of the festive atmosphere. From 5000 wallahs to other crackeres
rocked the road from 4.30 to 6pm and even onlookers were surprised at celebration for
NT's film. Our NT is the one and only BOX Office KING for ever.
டியர் சதீஷ் (கோல்டு ஸ்டார்) அவர்களே,
நடிகர்திலகத்தின் தமிழ், தெலுங்கு என்று புகைப்படப் பதிவுகளுடன் தங்களுடைய "காவியமே..உனக்கொரு கவிதை..! " மிகவும் சிறப்பாக இருந்தது.
டியர் சிவா சார்,
தங்களுடைய நடிகர்திலகத்தின் தொடர் சாதனைப் பதிவுகள் புதிதாகப் பார்க்கும் பல ரசிகர்களுக்கு ஒரு சிறந்த ஆவணமாக இருக்கும். நன்றி.
டியர் ரவி சார்,
தாங்கள் குறிப்பிட்ட மாதிரிதான் பல ரசிகர்களின் உனர்வுகள் உள்ளன, என்றாலும், முரளி சார் குறிப்பிட்ட மாதிரி எல்லாவற்றுக்கும் நம்முடைய வசூல் சாதனை மற்றும் இதர சாதனைகளையே, ஆவணங்களுடனும், புள்ளி விபரங்களுடனும் பதிவிடுவதே போதுமானது. நாம் எப்போதுமே - நடிகர்திலகத்தின் ரசிகர்கள், நாகரிகத்திற்கு சொந்தக்காரர்கள் என்பதை எப்போதுமே நிரூபித்து வந்திருக்கிறோம்.
Dear all
It was a wonderful experience on sunday along with Murali sir/Ragavendra sir on "Patchai vilakku" at RCC,chennai.
Despite the tragic ending, excellant postive movie
அன்புள்ள முரளி - ஓரளவுக்கு எதிபார்த்த பதில் என்றாலும் , இவ்வளவு சீக்கிரம் பதில் பதிவிடுவீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை - நான் பதிவிடும் போதே இரவு 11 pm ஆகிவிட்டது - அதற்க்கு மேல் அதை படித்து பதில் போடுவது என்பது உங்கள் கடமை உணர்ச்சிக்கு ஒரு எல்லையே இல்லை என்பதை மீண்டும் காண்பிக்கின்றது ---
சுருக்குமாக என் உணர்சிகளை சொல்ல சொன்னால் அது கீழ் கண்டவாரு இருக்கும்
படிப்பவர்களையும் , பழகுபவர்களையும் 5 பாகமாக பிரிக்கலாம்
1. சொன்னாலும் புரிந்து கொள்ளாதவர்கள் - இவர்கள் வாழை மட்டையை போன்றவர்கள் - புரிந்து கொள்ள பல ஜன்மங்கள் வேண்டி இருக்கும் !!
2. புரிந்து கொண்டாலும் உண்மையை சந்திக்க தையிரியம் இல்லாதவர்கள் - இவர்களால் தோல்விகளை ஏற்று கொள்ள முடியாது -அதனால் தோல்விகளை வெற்றி என்று சொல்லி மழுப்புவதில் தேர்ச்சி பெற்றவர்கள் !!
3. சொன்னால் புரிந்து கொள்பவர்கள் - இவர்களுக்கு தான் ஆதாரம் , ஆவணங்கள் தேவைப்படும் - ஆனாலும் தனிப்பட்ட ego வினால் உண்மையை ஒப்புகொள்ள தயங்குவார்கள்
4.புரிந்தும் புரியாதவர்கள் - இவர்கள் மன வளர்ச்சி சற்றே குறைந்து உள்ளவர்கள் - தங்கள் தலைவர் மீது உள்ள கண் மூடி தனமான வெறியினால் அம்மா வாசையில் பௌர்ணமியை தேடுபவர்கள் - அன்று முழு சந்திரன் வராது என்று சொல்பவர்களை தாக்குவார்கள்
5. புரிந்துகொள்ள முயற்சி செய்பவர்கள் - இவர்கள் பாவம் - எடுப்பார் கைபிள்ளைபோல மற்றவர் நிழலில் என்றுமே வாழ்பவர்கள் - சுயமாக சிந்திக்க தெரியாதவர்கள்
மேற்கொண்ட ஓவ்வொரு பாகத்திலும் நாம் தினமும் பலரை சந்திக்கின்றோம் - அவர்களின் நிலைமையை கண்டு பரிதாபமும் அடைகிறோம் - நீங்கள் சொல்வது போல குழந்தை கையை கடித்துவிட்டது - போடா போ !! என்று மட்டுமே சொல்லிவிடுவது ஒருவகையில் நல்லது என்றாலும் - பாய வேண்டிய நிலைமை வரும்போது கூட "மியாவ் மியாவ்" என்று தான் சொல்லவேண்டும் என்பது சற்றே உதைகின்றதே முரளி !!!!!
அன்புடன் ரவி
டியர் சதீஷ்
மிக மிக அபூர்வமான, நடிகர் திலகத்தின் தெலுங்குத் திரைப்படங்களின் நிழற்படங்களைத் தேடிக் கொண்டு வந்து இங்கே பகிர்ந்து கொண்டதற்கு பாராட்டுக்களும் நன்றியும். பக்கம் பக்கமாக சொல்ல வேண்டிய வசனங்களைத் தன் விழிகளிலேயே கொண்டு வரும் நடிகர் திலகத்தின் முகத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். இதையெல்லாம் பார்க்கும் போது பம்மலாரின் புத்தகம் எப்போது வரும் என்ற ஆவல் அதிகரித்துக் கொண்டே போகிறது.
தொடர்ந்து பகிர்ந்து கொள்ளுங்கள்.
அன்புடன்
ராகவேந்திரன்
Dear Gold Star sir,
You made me so excited by posting many rare pics, kudos for your effort
Dear sivaa sir,
As a fan I like to boast records of NT, you are doing a great work
Dear Ravi sir,
Thanks for giving some behind the scene info about Thangapadumai
expecting such cooperation from you, next Iam writing about Arivaali movie ( I am disclosing it in advance to enable to give more info), I felt it like a relay race , really tons of thanks
அன்புத் தம்பிகள் ராகுல்ராம், மற்றும் ரவி
தாங்களிருவரும் மிகவும் அபூர்வமான திரைப்படங்களாக எடுத்துக் கொண்டு அவற்றை இங்கே விரிவாக வழங்குவது மிகவும் பாராட்டுக்குரியது மட்டுமின்றி, மனதுக்கு மகிழ்ச்சியும் அளிக்கிறது. தொடருங்கள்.
அன்புடன்
ராகவேந்திரன்
Dear Murali sir,
Thanks for giving regular updates of NT re run movies and accurate info of collections in various cities
Many people are under estimating NT BO phenomenon and are saying many facts which is way behind the truth, in that case it is quite expected to reveal the truth, As you said we as NT fans will never cross the border of decency and say the facts as it is , in fact we admit our NT movies which were not up to his standards openly , in this situation I too feel like Ravi sir's view , that we must establish our credentials
this is my humble suggestion , kindly consider
Also many people are making mockery of NT in the name of mimicry performing his just 2 steps in dance and making people to believe that only that 2 steps are performed by out NT
what to say , Grow up
Dear Ragavendran sir,
You have laid a strong foundation and we are walking in that path , thank you very much for your comments ,
16.03.2014 அன்று நடைபெற்ற நமது நடிகர் திலகம் திரைப்பட திறனாய்வு அமைப்பு நிகழ்ச்சியைப் பற்றி மக்கள் குரல் பத்திரிகையில் வெளியிடப் பட்டுள்ள செய்தியின் நிழற்பட வடிவம்
http://makkalkural.net/?cat=8
மக்கள் குரல் பத்திரிகைக்கு நமது நன்றி
Congrats raghavendran sir for the unique landmark achieved,
also warm welcome to the hub after a long gap.
Please continue to write regularly about our nadigar thilagam and his
sadhanaigal,
blessings.
டியர் ராகவேந்திரன் சார்,
தாங்கள் 5000 வது பதிவு என்ற இன்னொரு மைல் கல்லை எட்டியுள்ளதற்கு உளங்கனிந்த வாழ்த்துக்கள்.
தங்களின் பதிவுகள் இனியாவது தொய்வில்லாமல் இத்திரியில் தொடரவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.
எங்கள் குலகுரு ராகவேந்தர் சாரின் 5000 க்கு வாழ்த்துக்கள். 50000 காண முன்கூட்டிய வாழ்த்துக்கள்.