http://i1065.photobucket.com/albums/...psnpxbkclf.jpg
http://i1065.photobucket.com/albums/...pshcyjastj.jpg
Printable View
டியர் செந்தில்
நமது சிவாஜி, நம் அருமை நண்பர் ஜவஹர் அவர்கள் நடத்தி வந்த பருவ இதழ். வெறியன் என்றால் அப்படி ஒரு வெறியன் என்று தம்மை சொல்லிக் கொள்வார் ஜவஹர். இந்த இதழின் ஒவ்வொரு பக்கத்திலும் அது நிரூபணமாகும். அது மட்டுமின்றி மனதில் பட்டதைப் பளிச்சென்று எழுதி விடுவார்.
சிவாஜி ரசிகன், சினிமா ஸ்டார், மின்மினி, சினிமா குண்டூசி, திரைவானம், மதி ஒளி, நமது சிவாஜி, எங்கள் சிவாஜி, சிவாஜி முரசு என்று ஏராளமான பத்திரிகைகள் வெளிவந்ததும் நடிகர் திலகத்தின் சாதனைகளில் ஒன்று. கிட்டத்தட்ட 20 முதல் 30 வரைக்கும் அதற்கும் மேலும் பருவ இதழ்கள் வெளிவந்தது அக்காலத்தில் நடிகர் திலகத்திற்கு மட்டுமே கிடைத்த பேறு. ரசிகர்கள் என்றால் சிவாஜி ரசிகர்கள் தான் என இன்று வரைக்கும் தொடர்ந்து வருவது நம் மக்கள் தலைவரின் மிகப் பெரிய பலம்.
நான் அடிக்கடி சொல்வது தான். நடிகர் திலகத்தின் செல்வாக்கு அளவிட முடியாது. அது பலனளிக்கும் போது தான் அதனுடைய ஆழம் புரியும். கர்ணன் திரைக்காவியத்தின் மாபெரும் வெற்றி மூலம் அது உள்ளங்கை நெல்லிக்கனியாக விளங்கி விட்டது. திருச்சி கெயிட்டியில் வசந்த மாளிகையின் அரங்கு நிறைவு இதற்கோர் சான்று.
சிலர் சொல்லலாம், வசந்த மாளிகை போன்று சில படங்களை வைத்து சொல்கிறார்கள் என்று. மிகவும் கடுமையாக விமர்சிக்கப் பட்ட சந்திப்பு திரைப்படம் சமீபத்தில் பெற்ற மிகப் பெரிய வசூல் இந்த மாதிரியான மேம்போக்கான விமர்சனங்களையெல்லாம் தவிடு பொடியாக்கி, எந்தப் படமாக இருந்தாலும் ரசிகர்கள் red carpet வரவேற்புத் தருவார்கள், மிகப் பெரிய வசூலை வாரிக்குவிக்கும் என்பதை உறுதிப்படுத்தி விட்டது.
அன்பு நண்பர் செந்தில்வேல்,
அள்ள அள்ளக் குறையாத அதே சமயம் சற்றும் அலுப்பூட்டாத அட்சய பாத்திரமாய் ஆவணங்களைத் தொகுத்தளிக்கும் தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள். குறிப்பாக விமான நிலையத்தில் நடிகர் திலகத்தை வரவேற்க காத்திருந்த ரசிகர்களின் ஆர்வமிகுதியால் நடிகர் திலகத்தின் ஒப்பனையாளர் திரு ரங்கசாமி அவர்களின் கால் முறிவு அன்று பெரும்பாலான ரசிகர்களுக்கு சற்று மனவருத்தம் ஏற்படுத்தியது. தன் உடல் நிலையையும் பொருட்படுத்தாமல், தான் முற்றிலும் குணமடையாத நிலையிலும் திரு ரங்கசாமி அவர்கள் நடிகர் திலகத்திற்கு ஒப்பனைப் பணியைத் தொடர்ந்தார்கள். இந்த செய்தியை உறுதிப்படுத்தும் சிவாஜி ரசிகன் பக்கத்தை இங்கு பார்த்ததும் தங்களுக்கு உடனே நன்றியும் பாராட்டும் தெரிவிக்க வேண்டும் என எண்ணினேன்.
தேவன் கோயில் மணிஓசை படத்திற்கு ஒப்பந்தம் ஆனவுடனே திரு விஜயரமணி அவர்களுக்கு தமிழகத்தின் பல ஊர்களிலிருந்தும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்தன. உயிர் படத்தின் சூப்பர்ஹிட் பாடல்கள் மூலம் தமிழகமெங்கும் அறியப்பட்ட விஜயரமணியின் இசையில் தேவன் கோயில் மணி ஓசை படத்திற்காக அருமையான பாடலும் பதிவானது. அது மட்டுமின்றி அவருடைய இசைக்குழு தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் செய்து நடிகர் திலகத்தின் படப்பாடல்களை இசைத்தனர். அதற்கு முன்னோட்டமாக அமைந்தது 175வது படவிழா விளம்பரம். இதையும் தங்கள் ஆவணம் எடுத்துரைக்கிறது.
தொடர்ந்து தாருங்கள் தங்கள் பங்களிப்பின் மூலம் அபூர்வ ஆவணங்களை..
Delete
கிட்டத்தட்ட நாற்பதாம் முறையாக அமெரிக்க பயணம் வந்தாலும், இது என் வாழ்வில் மறக்க இயலாத ஒன்று.
என் இளைய மகன், வாழ்வில் எதையுமே, சக மனிதர்களுக்கும்,பூமிக்குமான நன்மை பயக்கும் காரியத்தையே தொழிலாக கொள்வேன் என்று கொள்கை ரீதியான வாழ்வை தேர்ந்தெடுத்தவன்.
ஓஹயோ மாநிலத்தில் நேற்று அவனுக்கு மேற்படிப்பு பட்டமளிப்பு விழா.(மரபு சாரா பசுமை எரிபொருள் மற்றும் சக்தி சேமிப்பு ,சேதாரம் தவிர்த்தல் துறைகளில் ).அவனுக்கு அமெரிக்க அரசால் ஏற்கெனெவே Excellence அவார்ட் வழங்க பட்டாலும், அவனது பல்கலை கழகம்(165 Years Old ) அவனது துறையில் அவனை சிறந்தவனாக கௌரவித்து பட்டயம் வழங்கியது. இதற்கு சிறப்பு அழைப்பாளர்களாக நானும் என் மனைவியும். இதை பெரும் ஒரே இந்திய மாணவனாக எங்கள் செல்வம்.
இதைவிட முக்கியம். அவனை பேராசிரியர்கள்(Professors), வழிகாட்டி(Guide), பல்கலை முன்னாள் இந்நாள் முதல்வர்கள்(Deans), சக மாணவர்கள் (அமெரிக்க,லாடின் அமெரிக்க,ஐரோப்பிய,மத்திய கிழக்கு ,ஆப்பிரிக்க,இந்திய,தென் கிழக்கு நாடுகள்) எல்லோருமே பிறவி தலைவன், தேர்ந்த அறிவு நிறை உழைப்பாளி,குழுவை அணைத்து செல்பவன்,சக மாணவர்களுக்கு உதவும் தன்னலம் கருதாதவன் என எங்களிடம் சொல்லி, எங்களை வாழ்த்தியது.
தந்தை மகற்காற்றும் உதவி அவையிருப்ப முந்தியிருக்க செயல் என்று நானும் ,மகன் தந்தைக்காற்றும் நன்றி இவன் தந்தை என்னோற்றான் கொல் என்னும் சொல்லாக,
தாயும் ஈன்ற பொழுதின் பெரிதுவந்தாள் தன மகனை சான்றோன் என கேட்டு.
நண்பர்களுடன் சந்தோஷத்தை பகிரும் பொருட்டே இதை குறிக்கிறேன்.
செந்தில் வேல்,
உங்கள் ஆவணங்களுக்கு என் கோடானு கோடி நன்றிகள்.இளைய பம்மலாராக (வயதில் அல்ல.செயலில்)பரிமளிக்கிரீர்கள்.நன்றி.
முத்தையன் அம்மு ,
மூச்சடைக்க செய்து விட்டீர்கள் ஆனந்தத்தில். நேற்றைய ஆனந்த தினத்தில் ,என் மகனின் பெயருக்கு காரணமான தெய்வ மகனின் புகை படங்களை தந்து சொக்க வைத்து விட்டீர்கள். நன்றி.நன்றி .நன்றி.
வாசு,
மீண்டு வந்ததற்கு நன்றி. மதுர கானம் புத்துயிர்க்கிறது.இங்கும் வந்து தூள் கிளப்புங்கள். என் விஸ்வநாதன் தொடருக்கு ,தங்களிடமிருந்தும் ,ரகவேந்தரிடமிருந்தும் கருத்துக்களை எதிர் நோக்கியுள்ளேன். (கார்த்திக்,சாரதாவிடமிருந்தும்)