vaanga ji
Printable View
vaanga ji
பிறந்த நாள் எப்படி போச்சு
ராஜேஷ்....
பாடு பாடு பாடு... மறக்கவே முடியாத பாடல்... அனேகமாக தினமும் சமையல் முடித்து சுற்றுக் காரியங்கள் செய்யும் நேரத்தில் என் அம்மா இந்தப் பாடலை பாடியபடி வேலை செய்வாங்க... அப்பா கூட தன் பெயரை ஸ்ரீராம் என்று மாற்றிக் கொண்டதாக கிண்டல் செய்வார். மீண்டும் அந்த சந்தோஷத்தை மனதுக்குள் கொண்டு வந்ததற்கு நன்றி
https://www.youtube.com/watch?v=FOWQfiTuadw
வாசு ஜி...
மௌனமாகப் போகும் மதுர கானத் திரியில் ராஜேஷ் கார்த்திகை விளக்கு ஏற்றி வைத்திருக்கிறார். நீங்க ஒரு சரவெடி வையுங்க பார்ப்போம் ( சிக்கா பயப்படாம காதைப் பொத்திக்குங்க )
வாசு ஜி..
நம் போனாடலில் சிக்கிய பாடல்களில் ஒன்று என்னிடம் சிக்கி விட்டது. உங்க ராட்சசியின் இனிய குரலில் கற்பூரம் படத்தில் அம்மா வேணுமா... கண்ணா அக்கா வேணுமா ?
https://www.youtube.com/watch?v=vikdw2L24wY
ராட்சஸி பாடல்.
மதுண்ணாவின் விருப்பம்.
கேபரே பாடல் கிடையாது. குழந்தையை கொஞ்சி மகிழும் பாடல்.
பாவாடை தாவணி கட்டிய பருவச்சிட்டாக அன்றைய வாலிப மனங்களை நாளுக்கு நாளாய் வாடைக்காற்றாய் வாட்டி எடுத்த புஷ்பலதா. கற்பூரமாய் இப்போது பிடித்துக் கொள்வீர்கள்தானே! இரட்டைஜடை பின்னலில் ஒற்றை ரோஜா வைத்து அம்மா என்று தேடி அழுது தவழும் குழந்தையைத் தூக்கி
அம்மா வேணுமா! கண்ணா!
அக்கா வேணுமா
அம்மா என்றால் பால்தருவாள்
அக்கா என்றால் பழம் தருவாள்
பால் வேணுமா இல்லே பழம் வேணுமா
இளம் தண்டான ஈஸ்வரி குரலில் புஷ்பலதா பாடும் பாடல்.
'கட்டில் இங்கே போடவில்லை
தொட்டில் போடணும்'
பாடி முடித்து ராட்சஸி 'லுலுலுலுலுலுலுலு..................லாயி' போடுவது டாப். எவ்வளவு பெரிய 'லுலுலுலுலாயி'!
பாடலின் டியூன் அங்கிட்டு இங்கிட்டு இருந்தாலும் ஈஸ்வரியின் குரல்வளத்தால் அத்தனையும் மறந்து போய்விடும்.
பதிவை முடித்து போடப் பார்த்தால் மதுண்ணா முந்திக் கொண்டாரே! அதனால் வீடியோவைக் கட் பண்ணிடறேன்.:)
மதுஜி
கற்பூரம் படத்தில் ஈஸ்வரியின் இந்தப் பாடலை வைத்து, டிக்கெட் வேணுமா, காசு வேணுமா என பள்ளியில் நண்பர்கள் ஒருவரை ஒருவர் கிண்டல் செய்ததுண்டு. பாடல் ஹிட்டாகவில்லை. ரேடியோவில் எப்போதாவது ஒலிபரப்புவார்கள். எதேச்சையாக நண்பர்கள் சிலர் இந்தப் படத்தைப் பார்த்து விட்டு மறுநாள் பள்ளியில் இந்தப்பாட்டைப் பாடி கிண்டல் செய்வார்கள்.
கற்பூரம் படம் வெளிவந்த புதிதில் அழகு ரதம் பொறக்கும் பாடல் தான் அடிக்கடி ஒலிபரப்புவார்கள். அம்மா வேணுமா பாடல் கூட சிலோன் ரேடியோவில் தான் அதிகம் இடம் பெற்றது.
அபூர்வமான பாடலை நினைவூட்டியமைக்கு உளமார்ந்த பாராட்டுக்கள். நன்றி.
குணசுந்தரி படம் டிவிடியில் வந்த போது ஆர்வத்துடன் வாங்கி ஏமாந்ததுண்டு. கலையே உன் விழி கூட கவி பாடுதே பாடல் இல்லை.
பின் நீண்ட நாட்களுக்குப் பின் யூட்யூபில் இப்பாடலின் காணொளி தரவேற்றப்பட்டுள்ளது. வேம்பார் மணிவண்ணன் அவர்கள் தரவேற்றியுள்ளார்.
https://www.youtube.com/watch?v=xj886t5Hw64
இந்தப பாடலின் ஒரிஜினல் வீடியோ தானா என்பது சரியாக எனக்குத் தெரியவில்லை. என்றாலும் பாடலைப் பார்க்கும் வாய்ப்பிற்கு நமது உளமார்ந்த் நன்றி.
பாவாடை தாவணி கட்டிய பருவச்சிட்டாக அன்றைய வாலிப மனங்களை நாளுக்கு நாளாய் வாடைக்காற்றாய் வாட்டி எடுத்த புஷ்பலதா. கற்பூரமாய் இப்போது பிடித்துக் கொள்வீர்கள்தானே! இரட்டைஜடை பின்னலில் ஒற்றை ரோஜா வைத்து அம்மா என்று தேடி அழுது தவழும் குழந்தையைத் தூக்கி // அந்தக்குழந்தையே இப்போ பாட்டி ஆகியிருக்குமோன்னோ..:) அம்மா வேணுமா அக்கா வேணுமா பாட் முத தபா கேக்கறேன் பாக்கறேன். ட்டாங்க்ஸூ மதுண்ணா அண்ட் வாசுவிற்கு..
ராம பக்த ஹனுமான் பாடலுக்கும் ரா அண்ட் ம விற்கு தாங்க்ஸ்..
சரவெடியா.. ஏற்கெனவே இருமல் லொக்லொக் மீட்டிங் கில் பேச்சு பாதி லொக்கில் போய் காற்று வந்து வர்றேங்க்ணா எனச் சொல்லி வீட் வந்தாயிற்று..சரி என்பங்கிற்கு - இப்போது என்னால் முடியா விட்டாலும் - நா ஆஆன் சத்தம் போட்டு தான் பாடுவேன்..:).
https://youtu.be/0mnfdli34Gw
காமெரா மேதை கர்ணன் படங்களின் பாடல்கள்.
குறுந்தொடர் 5
மதுண்ணா!
சரவெடியா இல்லையா தெரியாது. ஆனால் புதுவெடி. 'கர்ணன்' படங்களின் வரிசையில்.
எதற்கும் துணிந்த கர்ணனைப் பற்றி நமக்குத் தெரியும். அதையும் மீறி சிவக்குமார் கர்ணனின் படத்தில் 'கௌபாய்' பாணியில் நடித்தது உண்மையாகவே மகா துணிச்சல்தான். அதனால்தான் சிவக்குமார் 'எதற்கும் துணிந்தவ'(ரோ)னோ.
பாரதிராஜா பாடல்களின் வெள்ளை உடை தேவதைகளை அப்போதே கர்ணன் ஜெயலட்சுமி ரூபத்தில், அதுவும் ஸ்லோமோஷனில் காட்டியிருப்பது வியப்புதான். அசாத்திய திறமை. அதை விழலுக்கிறைத்த நீராய் வீணாக்கிக் கொண்டவர் கர்ணன். இந்த உழைப்பையெல்லாம் வேறு இயக்குனர்களிடம் சிந்தியிருந்தால் பின்னாளில் நல்ல பெயர் பெற்று இருக்கலாம்.
சிவக்குமாரும் வெள்ளை உடையில் ஸ்லோமோஷனில் எகிறி எகிறிக் குதித்து ஓடி வருகிறார்.
அப்புறம் வழக்கம் போல குதிரை சப்ளையர் :)கொடுத்த குதிரைகள் மேல் நாயகன், நாயகி உல்லாசம்.
பாடலின் பின்னணியில் தவறாது மணியோசை ஒலிக்கும்.
இப்போது பெய்து வரும் மழை வெள்ளம் போல கழுத்து வரை வெள்ளத்தில் நடந்து வரும் குதிரைகள். ஹீரோயின் துணிச்சல் மிக்கவர்தான். பயமில்லாமல் குதிரையை ஆற்றில் ஓட்டி வருகிறார். இல்லையென்றால் கர்ணன் தோலை உரித்துவிடுவார். குதிரையின் தோலை.:) அப்புறம் நடிகையின் தோலையும். இரு குதிரைகளுக்கிடையில் பால இணைப்பும் உண்டு. 'குளோஸ்-அப்' குதிரைகளின் கால்களுக்கு மத்தியில் தூரத்தில் ஓடி வரும் ஹீரோ..ஹீரோயின். மணியோடு ஒலிக்கும் ஏதோ புரியாத மொழி கோரஸ். சங்கர்-கணேஷ் இசை.
ஆனால் பாடலில் ஏதோ ஒரு இனம் புரியா இனிமை இருக்கிறது என்பதுதான் உண்மை. இரண்டாவது கர்ணன் முத்திரைகளான முகம் சுளிக்க வைக்கும் ஆபாசக் கூத்துக்கள் அவ்வளவாக இப்பாடலில் இருக்காது. அதுவே பெரிய விஷயம்.:)
ஆனால் லொகேஷன்கள், குதிரைகள், பெரிய பெரிய ஆறுகள், வெட்டவெளிப் பொட்டல்கள் என்று கர்ணன் இதிலெல்லாம் காம்ப்ரமைஸ் ஆகவே மாட்டார்.
டி.எம்.எஸ், ராட்சஸி இணைந்த இந்தப் பாடல் பல பேருக்கு இப்போதுதான் அறிமுகமாகும். ஆனாலும் இரண்டு மூன்று முறை திரும்ப திரும்பக் கேட்க ஆரம்பித்தால் சுவையான பாடல்தான். கொஞ்சம் வித்தியாசமும் கூட.
'சுகம் பெற ஒரே வழி துணையென இணைவதுதான்'
என்று பல்லவி வரி கட் அண்ட் ரைட்டாக ஆரம்பிக்கும்.:)
'ஓர் உலகம்.... ஓர் இதயம்' என்று பாடகர் திலகம் இழுத்து லயித்துதான் பாடியிருக்கிறார்.
ஈஸ்வரி கொஞ்சம் குரலைக் கொஞ்சம் கட்டையாக்கி,
'தினம் மேகத்தில் ஊறிய துளிகள்' என்று பாட அது வேறு ஏதோ ஒரு பாடலை நினைவுபடுத்தி படுத்தி எடுக்கிறது.
'தேன்... நிலவு ஹோய்' என்பது அசல் அரக்கி முத்திரை.
https://youtu.be/IZRAHMYs-p8
வாசு சார்
எதற்கும் துணிந்தவன் பாடல் அபூர்வமான ஆனால் அட்டகாசமான பாடலைப் பகிர்ந்துள்ளீர்கள். ஏற்கெனவே ஃபடாபட் ஜெயலக்ஷ்மி இருந்ததால், இவருக்கு கர்ணன் ஜெயலக்ஷ்மி, என்றும் ஒரு பெயர் அந்தக்காலத்தில் இருந்ததுண்டு. பாடல் சூப்பர். விவித்பாரதியில் அடிக்கடி இடம் பெறும். சிலோன் ரேடியோவில் சொல்லவே வேண்டாம். இந்தப் பாடலை இசைத்தட்டில் தான் கேட்கவேண்டும். வீடியோவில் ஒலியமைப்பு சரியில்லை.
இசைத்தட்டின் துல்லியமான ஒலியில் பாடலைக் கேட்டால் அதன் சிறப்பே தனி.
ராகவேந்திரன் சார்!
'கலையே உன் விழி கூட கவி பாடுதே' பாடல் ஒரிஜினல் பாடல்தான் என்று நினைக்கிறேன். வாயசைப்பு எல்லாம் மிகச் சரியாகவே உள்ளது. அதனால் ஒரிஜினலாகவே இருக்கலாம். நல்ல பாடலுக்கு நன்றி.
ஏதோ கொயந்த பாட் பக்திப் பாட்லாம் போடறாகளே நாமளும் நம்ம பங்குக்கு கொயந்தபாட் போடலாம்னு வந்தா கர்ணன் பாட் வந்துடுச்சு :)
ஆளுக்கொரு முத்தம் உங்க அம்மா கன்னத்திலே
நாளுக்கொரு கனவு உஙக் அம்மா நெஞ்சத்திலே
https://youtu.be/y5jm9sxJ-EU
ராகவேந்திரன் சார்,
என்னைப் போலவே 'சுகம் பெற ஒரே வழி' பாடலும் தங்களுக்குப் பிடித்தம் என்பதில் ஆச்சர்யம் இல்லாத சந்தோஷம். இந்த ஜெயலட்சுமியின் தங்கையோ, அல்லது மகளோதானே டிவி மற்றும் சினிமா நடிகை மோகனபிரியா?
'ஆளுக்கொரு முத்தம்' தராமல் மறுபடியும் 'சத்தம் போட்டு' பாடுகிறீர்களே சின்னா! என்ன ஆச்சு?
//குதிரையை ஆற்றில் ஓட்டி வருகிறார். இல்லையென்றால் கர்ணன் தோலை உரித்துவிடுவார். குதிரையின் தோலை. அப்புறம் நடிகையின் தோலையும்// :) பட்குதிரைக்கால்களுக்கு ப் பின்னால் காமரா வைத்திருப்பது ரிஸ்க் இல்லியோ..பாடல் என்னமோ மனதில் ஒட்டவில்லை.
முத்ல் பாட்டும் பாரதி பாட் என்பதால் இதுவும் அஃதே என்பதை..
நீயில்லாமல் எந்தன் வாழ்வை நினைத்துப் பார்க்க முடியுமா...
https://youtu.be/0i9yXzmqqOc
'ஹச்சோ! ஸாரி! மறந்து போட்டுட்டேன் போல இருக்கு... இப்போ மாத்திடறேன்' ன்னு சொல்லுவீங்க.:) உங்களுக்கு கஷ்டம் கொடுக்கக் கூடாதுன்னுதான் நானே .....ஹி...ஹி:)
சின்னா! 'you tube' ல் பாடலுக்கான url காப்பி பண்ணும்போது இரண்டு மூன்று தடவைக்கு மேல் மறுபடி மறுபடி காப்பி பண்ணி பின் நமது திரியில் பேஸ்ட் செய்யுங்கள். அபோது இது போன்ற பிரச்னை வராது.
//பாடல் என்னமோ மனதில் ஒட்டவில்லை.//
முதல்ல அப்படிதான் தெரியும் சின்னா! ரெண்டு மூணு தரம் 3 குதிரைகளையும்:) பார்க்காமல் கண்களை மூடிக் கொண்டு பாட்டைக் கேளுங்கள். தானாகப் பிடித்துப் போகும். ரொம்ப முக்கியம் குதிரைகளைப் பார்க்கக் கூடாது.:)
பதை பதைக்க மாத்தியாச்சா.:)
Sorry maathiyaach..\\
தங்க நிறம் இதழ் செம்பவளம்
காணாத போது நெஞ்சம்கனாக்கண்டு வாடும்
கண்டாலே ஏனோ வெட்கம் எனை வந்து கூடும்
கண்மணீயே என் விண்ணமுதே இது பெண்மையின் தன்மையன்றோ..
https://youtu.be/ipWbd64Q2H8
போடாத பாட் தானே.. அருமை மகள் அபிராமி பிபிஎஸ் பிஎஸ்..
முதல்ல அப்படிதான் தெரியும் சின்னா! ரெண்டு மூணு தரம் 3 குதிரைகளையும் பார்க்காமல் கண்களை மூடிக் கொண்டு பாட்டைக் கேளுங்கள். தானாகப் பிடித்துப் போகும். ரொம்ப முக்கியம் குதிரைகளைப் பார்க்கக் கூடாது.// குதிரை தானேங்க நல்லா இருக்கு.. :) சொன்னாப்பல ஹச்சோ பாக்கலை தான் :)
http://www.indya101.com/gallery/Sing...01(dot)com.jpg
குழந்தைக்குப் பாலூட்டுவார்கள், சோறூட்டுவார்கள்.. பார்த்திருக்கிறோம். கேட்டிருக்கிறோம். நுங்கு உண்ண ஒரு குழந்தையைக் கெஞ்சும் பெண்ணைப் பார்த்திருக்கிறீர்களா.. அதற்கு ஒரு பாட்டு.. அதிலும் பாடுபவர் ... நமது ராட்சசி ஈஸ்வரி ...
என்ன ஒரு இனிமையான பாடல்.. மிகச் சிலரே அறிந்திருக்கக் கூடிய அபூர்வமான பாடல்..
கார்த்திகை தீபம்.. எல்.ஆர். ஈஸ்வரியின் புகழ்க் கிரீடத்தில் மகுடம்.. பார்க்காத உலகம் பழகாத இதயம் என அருமையான டூயட்டும் இப்படத்தின் சிறப்பிற்கு சான்று. அது மட்டுமின்றி பாடகர் திலகம் மட்டும் இசையரசி இருவருமே தனித்தனியாக பாடிய எண்ணப்பறவை சிறகடிக்கும் பாடல் இடம் பெற்ற படம்...
படம் வெண்ணிற ஆடையோடு வெளிவந்தது.. வயது வந்தவர்களுக்கு மட்டும் என்கிற அனுமதியோடு...
https://www.youtube.com/watch?v=trsT5NKuVbw
சின்னா!
பாரதியின் குரலில் அமெச்சூர்த்தனம் தெரிந்தாலும் இன்றுவரை நம்மை அப்படியே வசியம் செய்த பாடல். ஒரு மாதிரியான, மாதுரி, வசந்தா, கௌசல்யா இவர்கள் குரல்களையெல்லாம் கலந்து கட்டியமாதிரி ஒரு குரல்.
'மூடிவைத்த மனதினுள்ளே
மோதும் இன்ப நினைவிலே'
என்று இரண்டாவது சரணத்தில் அவர் பாடும்போது கிறங்காத மனமும் உண்டா?
'வேண்டுமென்ற அர்த்தமின்றி
வேறு காண முடியுமா'
என்று அடுத்த அடிகளை அவர் பாடுவதும், அதற்கான அழகான அர்த்தமும் அமர்க்களம்தானே?
இன்னொன்று
'முடியுமா' என்று முடிக்கும் போது பாரதி டோட்டலாக நம்மை 'ஸ்வாஹா' செய்து விடுவார். கொஞ்சலும், கெஞ்சலும், நிதர்சனமான உண்மையுமாக அந்த வரி எப்போதுமே காதில் ஒலித்துக் கொண்டிருக்கும். அதுவும் முடிவெழுத்து 'மா' உச்சரிப்பு மறக்கவே இயலாது.:clap:
பாடகர் திலகத்தைப் பற்றி இந்தப் பாட்டில் கூற வேண்டுமானால் விவேக் சொல்வது போல 'அது வேற டிபார்ட்மெண்ட்'. கை ஊறுது. வேண்டாம். பதிவு நீண்டிடும். இத்தோட முடிச்சுக்கிறேன் சிநேகிதரே.
ஆனா ஒன்னு. இன்னா மாதிரி பாட்டைப் போட்டுட்டு ஒத்த வரியில முடிச்சுட்டீரே! இதெல்லாம் நியாயமா ராசா? உமக்கு எதாச்சும் பனிஷ்மெண்ட் கொடுத்தே தீரணும்.
மதுண்ணா!
பி.எம்.பார்க்கவும்.
சின்னா!
ஜெய், பாரதி ஜோடியாய் நடித்த கீதா சித்ராவின் 'உனக்கும், எனக்கும்' படத்தில்
'சுகம்
என்ன சுகம்
என்ன சுகம்
தாகம்... அது பருவத்தின் ஒருவகை ராகம்
மோகம்... அது பிரிந்தது ஒருவித வேகம்'
என்ற அதியற்புதமான பாடல் எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல்.
ஆஹா! செமையான மைண்ட் வாய்ஸ் பாட்டு. பாரதி வாயசக்காவிட்டாலும் அப்படியே பாரதிக்கு தோதாக அவருடைய குரல் போலவே ஒலிக்கும்.
'மெய்யும் மெய்யும் கலந்தது
மையும் சாந்தும் கரைந்தது
என்ன சுகம்'
பாடல் சுகம்....பாடகி குரல் சுகமோ சுகம்...'மெல்லிசை மாமணி' வி.குமாரின் அழகான மெல்லிசை சுகமோ சுகமோ சுகம். பாரதி அப்ஸரசாய் சுகம். ஆலங்குடி சோமுவின் பாடல் வரிகள் தனி சுகம்.
உங்களுக்கும், எனக்கும் மட்டும் அல்ல ஊரிலுள்ள எல்லோருக்கும் சுகம் தரும் ஆனந்தப் பாடல். 1972லேயே இப்படி ஒரு அசத்தலான பாடலை கொடுத்த குமாரின் திறமை அசாத்தியமானது. பாலாவின் தொடர் முடிந்ததும் குமார் இசையைத்தான் எடுக்கப் போகிறேன்.
சொர்ணா என்ற சொர்ணக் கருவூலமாய் என் எண்ணங்களில் என்றும் வலம் வரும் வளமையான பாடகியின் கல்கண்டு குரலுக்காகவே லட்சம் முறை இந்தப் பாடலை சுகமாய்க் கேட்டு மகிழலாம்.
https://youtu.be/dPVatHkTsYI
//ஆனா ஒன்னு. இன்னா மாதிரி பாட்டைப் போட்டுட்டு ஒத்த வரியில முடிச்சுட்டீரே! இதெல்லாம் நியாயமா ராசா? உமக்கு எதாச்சும் பனிஷ்மெண்ட் கொடுத்தே தீரணும்.// வாஸ்ஸூ தப்பு தான் ஒத்துக்கறேன்.. ஆனா ஏதாவ்து பாட் போட்டுட்டு எழுதலாம்னு பார்த்தா நீர் எழுதியிருப்பீரோன்னு நினைக்கற்ச்சயே மனசுக்குள் ஒதறலா இருக்கு.. அதான்.. அப்படியே விட்டுட்டேன்..அதான் நீர் இப்போ அலசிட்ட்டீரே
ஆனா எப்படி ஓய் உனக்கும் எனக்கும் நினைத்தீர்.. நானும் அந்தப் பாட் - நீர் போட்ட தாகம் இல்லை - பாரதி ஜெய்யைக் கேலி செய்து பாடும் பாடல் கேட்டு சரி சுமார் ரகம் தான் என விட்டு விட்டு அப்புறம் கிக்கு கொடுக்குது ரம் பாட்டையும் கேட்டுபுட்டு சே டூயட்டே இல்லையே என நொந்து ( ஒரே வீடியோல்ல நாலு பாட் டிஎம் எஸ் புகழ் வாழ்க உனக்கும் எனக்கும்னு கொடுத்திருந்தாக) பின் தான் தங்க நிலவே பாட் கிடைச்சு அதைப் போட்டேனாக்கும்..
இங்கிட்டுவந்தா தாகம் பாட்.. சூப்பர் வெரி நைஸ் தாங்க்ஸ்லு..
ஒத்தையடிப் பாதையிலே அத்தை மகன் போகையிலே
மாமன் வந்தான் பின்னாடி அம்மாடி அவன்மனசு வந்தது முன்னாடி
எப்போதும் சிலோனில் கேட்ட பாடல்தான்..ஒரு தடவை வாஸ்ஸூ போட்டதாக நினைவு..ஆனால் பார்க்கவில்லை என நினைக்கிறேன்..
இப்ப பார்த்தா நம்ம டாபிகல் பாரதி..
இப்படி ட்ரஸ் போட்டுக்கினு ஸ்ப்ரிங்காட்டம் குதிக்கணும்னு யார் சொல்லியிருப்பாங்க
எனி டைம் கேட்கபிள் பாட்..
https://youtu.be/qzNioUyHYxc
மேலும் மேலும் இது வளரட்டும் வளர்ந்தா தெய்வச் செயல் தானே..
படத்துல யானை புலி சிங்கம்லாம் இருக்கு படம் எப்படி இருக்கும்..இங்க மாடாட்டம் பாரதி முத்தை முத்தறார் டைப்போ முட்டறார்..
மடியிலே வந்தகொடியிலே இன்ப மலர்கள் நூறு வரவேண்டும்..ம்ம்
விழியிலே மணி விழியிலே எந்தன் முகத்தைப் பார்த்துக்கொள்ள வேண்டும் (வீட்ல கண்ணாடி வாங்க மாட்டாங்க போலிருக்கு)
பாரதிக்குப்புடவை பாந்தமா இருக்கு சர்ருவ விட ( நாராயண நாராயண )
https://youtu.be/44Z2W8OpTa4
எங்கு பார்த்தாலும் புதுமை புதுமை
என்ன தான் இந்த இளமை இளமை..
பாரதியோட காதில இருக்கற மாட்டல் தோடு இருக்கே அது இப்பவும் ஃபேஷன் தானாக்கும்..
https://youtu.be/ghdV3ZlR5EU
கொஞ்சம் ப்ரோஸ் ஆட்டம் பாடினாலும் பாடல் நன்னாத் தான் இருக்கு..
சின்னா!
பாரதி பாடல்களா போட்டு கலக்குறீர். சபாஷ்! நீடூழி வாழ்க!:)
பாரதியைப் பிடிக்காதவர்களே இருக்க முடியாது. இதற்கே நடிப்பில் அவ்வளவு எல்லாம் கெட்டி அல்ல. அப்போது அழகான முகத்தோற்றமும், அளவான உடல் தோற்றமும் கொண்ட மிக சொற்பமான நடிகைகளில் பாரதிதான் முதன்மையானவர்.
சரி! பாரதி புகழ் பாடுவதை கொஞ்சம் தள்ளி வைத்து விட்டு 'தெய்வச் செயல்' படத்தின் இன்னொரு பாடலைப் பார்க்கலாம். அப்புறம் பாரதியை கண்டிப்பாகத் தொடரலாம்.
'தெய்வச் செயல்' படத்தில் பாடல்கள் எல்லாமே நன்றாகவே இருக்கும். முத்துவும் நன்றாக 'ரிச்'சாக இருப்பார். இந்தப் படத்திலிருந்தே தேவர் பலகாட்சிகளை எடுத்து 'நல்ல நேரம்' படத்தில் உபயோகப்படுத்தி இருப்பார்.
ஒரிஜினல் விலங்குகளை நடிக்க வைத்திருப்பார் தேவர். இதில் இன்னும் வியப்பான விஷயம் காண்டாமிருகத்தைக் கூட சில காட்சிகளில் வெறுமனே காட்டாமல் அதற்கு முக்கியத்துவம் தந்திருப்பார்.
இந்த விலங்குகள் எல்லாம் அப்போது பிரபலமாய் இருந்த 'ஜெமினி சர்க்கஸ்' என்ற சர்க்கஸ் கம்பெனியைச் சேர்ந்த விலங்குகள்.
'மேஜர்'தான் படத்தில் விலங்குகளின் காவலர். அவருக்கு விலங்குகள் மத்தியில் ஒரு மைண்ட் வாய்ஸ் சோகப் பாடல் உண்டு. 'பாடகர் திலகம்' பாடுவார். யானைகள், சிங்கம், காண்டா மிருகம், புலி எல்லாம் கண்ணீர் வடிக்கும். ஆனால் மேஜர் பின்னணி தனிப்பாடலுக்கு நடிக்க கொஞ்சம் திணறுவார்.
'பழகும் வகையில் பழகிப் பார்த்தால் பகைவன் கூட நண்பனே'
இதைக் கூட 'யூ டியூபி'ல்
'பழகும் வகையில்' என்பதற்கு பதிலாக 'அழகு மடியில்' என்று தவறாக கொடுத்திருப்பார்கள். (அந்த லட்சணத்தில் பாடலைக் காதில் வாங்குகிறார்கள்):banghead:
https://youtu.be/kkVB7y98UsE
அதே போல் மேஜருக்கு நேரிடையாக இன்னொரு பாடல் உண்டு. அனைத்து விலங்குகளையும் தடவித் தடவிக் கொடுத்து உருகி உருகி பாடுவார். ஆரம்பத்தில் விலங்குகளுடன் நெருங்கி நடிக்க மேஜர் ரொம்பவும் பயந்தாராம்.
'என் உயிருக்கு யாரும் காவல் இல்லை என்றே உறவு கொண்டீரோ
என் மேலே உயிரை வைத்தீரோ'
இந்தப் படத்திற்கு இசை பி.எஸ்.திவாகர் என்று நினைவு. காட்டுப் பின்னணி இசை அமைப்பதில் கில்லாடி இவர். கன்னடப் படங்கள் பலவற்றிக்கு இசை அமைத்திருக்கிறார். ராகவேந்திரன் சார் உதவ வேண்டும். இவர் தான் சில தேவர் படங்களுக்கு அப்போதெல்லாம் இசை அமைத்திருக்கிறார் என்று நினைக்கிறேன். டைட்டில் இசை பிரமாதமாக இருக்கும். பாலு என்பவர் இப்படத்தின் இயக்குனர்.
https://youtu.be/4nE7d8AtkpM
தேவர் தயாரித்த 'காட்டு ராணி' படத்திற்கும் திவாகர்தான் மியூசிக்.
திவாகர் இசையமைத்த பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்தது 'காட்டு ராணி' படத்தில் வரும்
காட்டோசையை அப்படியே பிரதிபலிக்கும்
'மூங்கில் இலை மேலே தூங்கும் பனி நீரே' பாடல்தான்.
https://youtu.be/MOJu2BJxrV8
வாசு ஜி... பதில் போட்டாச்.. சுவர்ணா குமாரின் பாடல்களில் பல உள்ளத்தை அள்ளிச்செல்லுமே... பாலாற்றங்கரை அருகே ஒரு சொர்ண ஓடையும் ஓடட்டும்..
சிக்கா.. தெய்வச்செயல் பார்த்ததில்லையா ? இது இங்கே நல்ல நேரமாகி வடக்கே ஹாத்தி மேரா சாத்தியாகி மீண்டும் இங்கே அன்னை ஓர் ஆலயமாகி அங்கே "மா"வாகி. அரைச்சு அரைச்சு அரைச்சு.... யானை தேய்ஞ்சே போச்சாம்..
தெய்வச்செயலில் இன்னும் டி.எம்.எஸ்ஸின் இரு பாடல்கள் உண்டு. "பழகும் வகையில் பழகிப் பார்த்தால்" மற்றும் "என் உயிருக்கு யாரும் காவல் இல்லையென்றே".... கேட்க சுகமாகவே இருக்கும்.
ஆஹா... வாசு ஜி... இது திருப்பதியேதா.... சாரி.. டெலிபதியேதான்.
ஹாய் குட்மார்னிங்க் ஆல்..
வாஸ்ஸூ மதுண்ணா மத்த ரெண்டு பாட்டும் பார்த்தேன் கேட்டேன்..பட் அதை உங்களுக்காக விட்டு விட்டேன்.. கொஞ்சம் அப்புறமா வர்றேன்.. நடிகை பாரதி பற்றி இன்னும் பேச வேண்டியிருக்கு
சிக்கா....
உங்களைப் பொறுத்தவரை பாரதி என்றால் பார்.. ரதி என்பீர்கள்... வெயிட்டிங்... வந்து பேசுங்க..
மலையாள மழைத்துளிகிலுக்கத்தில் திலீப், நவ்யாவுடன்.....சாரதாவும் பாரதியும்
https://www.youtube.com/watch?v=ZBfZD7Ih5qw
வாசு சார்
தெய்வச்செயல் படத்துக்கு இசை திவாகரே தான். திவாகருக்கு மிகவும் புகழ் தேடித்தந்த படம் நேர்வழி. வாய்மையே வெல்லுமடா பாடல் தான் தமிழ் சினிமாவில் திவாகருக்கு அடையாளம் தந்தது. அதற்குப் பிறகு அவருடைய இசையில் மற்ற பாடல்களும் பிரபலமாகின.
குறிப்பாக நேர்வழியில் இந்த டூயட் சூப்பர்..
https://www.youtube.com/watch?v=QvqhoG78Xoc