http://oi65.tinypic.com/34fobvs.jpghttp://oi66.tinypic.com/24l20qs.jpghttp://oi63.tinypic.com/1z6z4pl.jpg
நன்றி V C G Thiruppathy
Printable View
http://oi65.tinypic.com/1zxqcu1.jpg
நன்றி V C G Thiruppathy
http://oi63.tinypic.com/vzzbqp.jpg
நன்றி V C G Thiruppathy
http://oi64.tinypic.com/nvek45.jpg
நன்றி nilaa
கோவை அசோக்நகரில் நடிகர்திலகத்தின் ரசிகர்கள் பலர் உள்ளனர்.30, 40 வருடங்களாகவே எதிர்முகாம் ரசிகர்கள் நம் ரசிகர்களிடம் முரண்பாடாகவே பேசியும், நடந்து கொண்டும் இருப்பார்களாம்.இப்பொழுதெல்லாம் அவர்களில் சிலர் நடிகர்திலகத்தின் படங்களை தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு அதை நம் ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்கிறார்களாம்.நடிகர்திலகத்தின் உணர்ச்சி மிகு நடிப்பை பார்த்து பரவசம் கொள்கிறார்களாம்.சென்ற வாரம் கூட பாசமலர் பார்த்து கண் கலங்கியதாக ஒருவர் கூறியுள்ளார்."என்னய்யா, உங்காளு நடிப்பு, இதெல்லாம் என்ன படம், இதெல்லாம் எந்த மொழியிலும் யாரு கிட்ட பாக்க முடியும் "என்று உருகியுள்ளார்.
காலம் வரும் போது தான் சில நல்ல விஷயங்களை மனிதர்கள் உணர்ந்து கொள்கிறார்கள். எதற்காக எதிர்த்தோம் என்ற விஷயத்தை எண்ணி கூச செய்கின்றது.
நன்றி செந்தில்வேல்
http://oi64.tinypic.com/14x1cwp.jpg
இவர்கள் நமது பங்காளிகள்..
ஒரு சிவாஜி ரசிகர் வயது எழுபதுக்கு மேல் ஆனாலும் ஊர் ஊராய் சென்று அய்யன் படத்தை கண்டு பரவசம் அடைகிறார் இன்றும்.வசிப்பதோ கோவையில்.திருச்சி எங்கே? மதுரை எங்கே? சென்னைஎங்கே?.. எங்கே? எங்கே? என்று தேடி நடிகர்திலகத்தின் திரைப்படங்களை கண்டு களிப்பதையே கடமை என்பது போல் வாழ்ந்து வருகிறார் இவர்.
50 பெயர்களை வரிசையாக சொல்வதற்கே திணறும் நிலையில் 300 படங்களையும் திக்காமல் திணறாமல் ஆ...ண்டு வாரியாகவும் விவரிக்கும் ஒருவரும் நம்மவரே! அய்யனின் பால் பேரன்பு கொண்டவர்.
சின்ன ஸ்டேம்ப் சைஸ் போட்டோவாக இருந்தாலும் கூட அதை விட்டு விடாமல் சேகரித்து வைப்பது மட்டுமல்லாமல் நடிகர்திலகத்தின் ஏராளமான புத்தகங்கள், செய்திகள் என விடாமல் சேகரித்து பெரிய ஆவண காப்பகம் போல் இல்லத்தில் வைத்து காத்து வரும் ஒருவரும் நடிகர்திலகத்தின் பக்தரே! இவர் போலே நாட்டில் ஏராளமானோர் உண்டு.
சுயநலமில்லாத அரசியல் கட்சி தொண்டர்களை பார்ப்பதென்பது கடினம் என்ற இக்கால அரசியல் சூழ்நிலையில்... அய்யன் மறைந்து 17 வருடங்களுக்கு மேலாகி விட்டது.இப்பொழுதும் போய் அவரிடம் நீங்கள் எந்தக் கட்சி என்று கேட்டால் "நான் சிவாஜி கட்சி "என்றுதான் பதில் சொல்வார்.இது போலும் ஏராளமானோர் சொல்ல கேட்டிருக்கிறேன். எப்படிப்பட்ட ஆளுமையை நடிகர்திலகம் இவர்களுக்குள் விதைத்திருக்கிறார்.
"ஊருக்குள்ளே நான் வீட்டை வைக்கலே.என் வீட்டுக்குள்ளேதான் இந்த ஊரையே வச்சிருக்கேன் "னு ஒரு படத்தில் வசனம் வரும்.ஒரு நடிகனுக்கு நிறைய ரசிகர் இருக்கலாம்.கட்சித் தலைவனுக்கு தொண்டர்கள் ஏராளம் இருக்கலாம்.ஆனால், எந்தவித எதிர்பார்ப்புகளுமின்றி அன்னை இல்லத்திற்கு இருக்கும் லட்சக்கணக்கான விசுவாசிகளை போல் யாரையும் பார்க்க முடியாது.
ஒரு பெரிய கட்அவுட் வைத்து ரூபாய் நோட்டுக்களை மாலையாக அணிவித்து, ரூபாய் மதிப்பை யார் சரியாக கூறுகிறார்களோ அவர்களுக்கு பரிசு தரும் வித்தியாசமான ரசிகர் படையும் நடிகர்திலகத்துக்கு உண்டு. தமிழ்நாட்டிலேயே யாரும் நடத்தியிராத நிகழ்வுதான் இது. இவர்களுக்கும் நடிகர்திலகமே மூச்சு.இந்த பங்காளிகளும் வித்தியாசமானவர்களே!
அன்னதானம்!
வாரந்தோறும்!
வருடம் முழுவதும்!
யாரின் பங்களிப்பு .
அரசியல் கட்சிகளா!
சமுதாய மன்றங்களா!
தொழில் அதிபர்களா!
ஜாதி கட்சிகளா!
?
அதை நடத்துபவர்களும் நாம் பெருமை கொள்ள வைப்பவர்களே! எவ்வளவு செலவு, எவ்வளவு உழைப்பு.
அய்யன் பற்றிய விஷயங்களை சொன்னால் போதும்.அதையே பாடலாக பாடுகிறார் ராக தாளங்களுடன் இனிமையாக ஒருவர்.அவர் தமிழ் கற்ற புலவரல்ல.ஐந்தாம் வகுப்பு தாண்டாதவர் என்ற விஷயமும் ஆச்சர்யப்படுத்துகின்றது.வயது அறுபதுக்கு மேலே.நடிகர்திலகத்தின் நிகழ்ச்சிகளுக்கு அவர் படம் போட்ட பனியனைத்தான் அணிவார்.
இன்னிசை கச்சேரிகள், பொது நிகழ்ச்சிகள் என்று எங்கே நடந்தாலும் சரி இடம், பொருள், ஏவல் பார்க்க மாட்டார் இவர்.பாடல் வரிகளுக்கு நடிகர்திலகம் என்ன அசைவை வெளிப்படுத்தியிருப்பாரோ அதே போல் வெளிப்படுத்தி ஆனந்த கூத்தாடுவார் இந்த பங்காளி.சிறிது கூட கூச்சப்பட மாட்டார்.மேடைக்கு அருகிலேயே நடித்து நம் கவனம் ஈர்ப்பார்.இவரும் எழுபதை தொட்டவர்.
இப்படி ஏராளமானோர் உண்டு.
இப்பதிவு பங்காளிகளுக்கு சமர்ப்பணம்.
நன்றி செந்தில்வேல்
#ஞானஒளி 11:03:1972
#47ஆண்டுகள்நிறைவு
#ஜேயார்மூவீஸ் PKV சங்கரன் ஆறுமுகம் தயாரிப்பு
#இயக்கம் P.மாதவன்
#இசை MS.விஸ்வநாதன்...
#ஒளிப்பதிவு பி.என்.சுந்தரம்
#நடிகர்திலகத்துடன், மேஜர் சுந்தரராஜன், சாரதா, விஜயநிர்மலா, ஸ்ரீகாந்த், மனோரமா, வி.கே.ராமசாமி
#கதைவசனம் வியட்நாம் வீடு சுந்தரம் ( மேடை நாடகத்தின் திரை வடிவம்)
#1972 ஆம் ஆண்டின் சிறந்த நடிகராக நடிகர்திலகத்தையும், இயக்குநராக பி.மாதவனையும், சிறந்த படமாக ஞான ஒளியினையும் பிலிம்பேர் பத்திரிகைத் தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்கியது.
சினிமா ரசிகர் சங்கமும் அவ்வாண்டு சிறந்த படமாக இப்படத்தைத் தேர்ந்தெடுத்தது.
சென்னை மாநகரில் அதிக திரைகளில் விசேசக் காட்சிகள் திரையிடப்பட்ட கருப்பு-வெள்ளைப் படம் ஞானஒளி.
இப்படம் வெளியான நேரத்தில், சென்னை மாநரில் 80 சதவிகிதத் திரைகளில் புதியதும் பழையதுமாக நடிகர்திலத்தின் 20 க்கும் மேலான திரைப்படங்கள் திரையிட்டும்கூட சென்னையில் ஞானஒளி பெரும் வசூல் சாதனையைப் படைத்தது.
தெய்வப்பிறவி படத்திற்குப் பின்பு சென்னை பிளாசாவில் 130 காட்சிகளுக்கும்மேல் தொடர்ந்து அரங்கு நிறைந்த கருப்பு-வெள்ளைப் படம் ஞானஒளி.
இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக வேளாங்கண்ணி கோயிலுக்கு ஒரு பெரிய மணியை காணிக்கையாய் தந்தார் நடிகர்திலகம்.
தொகுப்பு : வான்நிலா விஜயகுமாரன்
http://oi67.tinypic.com/2a7bci0.jpghttp://oi68.tinypic.com/i3c6kg.jpg
நன்றி வான்நிலா விஜயகுமாரன்
http://oi64.tinypic.com/nwgdbr.jpghttp://oi64.tinypic.com/dnfvb4.jpg
நன்றி வான்நிலா விஜயகுமாரன்
http://oi67.tinypic.com/2cfeiiq.jpghttp://oi63.tinypic.com/2njy2xt.jpg
நன்றி வான்நிலா விஜயகுமாரன்
கோயில் நிதி என்றால் இரண்டாயிரம் வெள்ள நிவாரணம் என்றால் 75ஆயிரம் பாரதி விழாவுக்கு 50 ஆயிரம் பள்ளி கட்டிடம் கட்டவா 25ஆயிரம் மருத்துவமனை காட்டவா 50ஆயிரம் தேச பக்தர்களுக்கு சிலை அமைக்கவா இதோ 5ஆயிரம் அறிஞர் பெருமக்களுக்கு பணமுடிப்பு அளிக்கவா இதோ பத்தாயிரம் கலைத்துறையில் யாருக்கேனும் திருமணமா இரண்டாயிரம் என்று வாரிக்கொடுத்த வள்ளல் கணேசன் நேருஜி காமராஜர் அண்ணா கருணாநிதி ஆகியோர் மூலம் நாட்டுக்கு நடிகர்திலகம் கொடுத்த பகிரங்க நன்கொடையே பல லட்சம் தேறும் ஆதாரம் தமிழ் வாணன் எழுதிய நடிகர்திலகம் புத்தகத்தில் இருந்து
http://oi66.tinypic.com/jrbrjn.jpg
நன்றி விஜயா .R
http://oi63.tinypic.com/2zjlyme.jpg
Rare photo of NT. Thanks to NTFans
நன்றி Vasudevan .S
http://oi64.tinypic.com/whcv35.jpg
நன்றி K V Senthilnathan
"உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே" என்கிறது புறநானூற்றுப் பாடல் ஒன்று. அதனை மணிமேகலையும் வழிமொழிகிறது.
"பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்" என்கிறது தமிழ்ப் ப...ொதுமறை.
"இந்த மனிதர்கள் வாழும் பூமியில் ஆறுவகை மனிதர்களை நான் வணங்குகிறேன்" என்கிறார் கிருஷ்ணபரமாத்மா. அந்த அறுவகை மனிதரில் ஒருவர் தினமும் அன்னதானம் வழங்குவோர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படியாக, அன்னதானத்தின் பெருமையை உலகிற்கு எடுத்துச் சொன்னது நம் பண்பாடாகும். அப்பண்பாட்டின் வழித்தோன்றலான நம் நடிகர்திலகத்தின் 90வது பிறந்தநாளை முன்னிட்டு 'குரூப்ஸ் ஆஃப் கர்ணன்' நடத்திவரும் 52 வார தொடர் அன்னதானத்தின் இருபத்து நான்காம் வார அன்னதான நிகழ்ச்சி இனிதே நடந்தேறியது இன்று.
இவ்வார அன்னதானத்தின் உபயதாரர்களாக பத்மஸ்ரீ பாசமலர் சிவாஜி தலைமை மன்றம் மற்றும் திருப்பூர் மாவட்ட வடக்கு தலைமை மன்றத்தினைச் சேர்ந்த SUN STUDIO திரு. G.ராமலிங்கம், திரு.குணா மாஸ்டர், திரு.சண்முக சுந்தரம், திரு.கே.வேலுச்சாமி, திரு.முருகேஷ் ஆகியோர். அவர்களின் சார்பாக திரு.M.L.கான் அவர்கள் கலந்துகொள்ள, அவருக்கு திரு.அண்ணாமலை அவர்களும்,திரு.பாலாஜி அவர்களும் நினைவுச் சான்றிதழ்களையும், நடிகர்திலகத்தின் நூல்களையும் வழங்கி கௌரவித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திரு.S.ராமஜெயம் அவர்களுக்கு திரு.அண்ணாமலை அவர்கள் நடிகர்திலகத்தின் நூல்களை வழங்கிச் சிறப்பித்தார். பின்னர், திரு.M.L.கான் அவர்களும், திரு.S.ராமஜெயம் அவர்களும் அன்னதானத்தைத் துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு சென்னைவாழ் சிகர மன்றத்தின் இதயங்களான திரு. RS.சிவா, திரு.ML.கான், திரு.அண்ணாமலை, திரு.ராமஜெயம், திரு.தணிகாசலம், திரு. சங்கர், திரு. K.S.நரசிம்மன், திரு. நந்தகுமார், திரு.சுகுமார், திரு.பாஸ்கர், திரு. பாலாஜி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அடுத்த வார அன்னதான நிகழ்ச்சி வெள்ளிவிழா வாரம் என்பதால், மூன்று உபயதாரர்களோடு மூன்று பகுதிகளாக அன்னதானம் வழங்கப்படும் என்ற தகவலோடு நன்றி நவில்வது
வான்நிலா விஜயகுமாரன்
http://oi65.tinypic.com/2uot6vm.jpghttp://oi65.tinypic.com/21jt3zr.jpghttp://oi63.tinypic.com/28qqbkn.jpghttp://oi66.tinypic.com/fk5czr.jpg
நன்றி வான்நிலா விஜயகுமாரன்