-
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்
மன்னாதி மன்னன் எம்.ஜி.ஆர்
#மக்கள்திலகம்_எம்ஜிஆர்
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.
#ஆசியோடு_நண்பர்கள்
#அனைவருக்கும்_இனிய
#புதன்கிழமை_காலை_வணக்கம்...
கவிஞர் கண்ணதாசன் வரிகளில்
மக்கள் திலகம் எம்ஜியாரின் கருத்துக்களை தொடர் பதிவாக பார்த்து வருகின்றோம் அந்த வகையில் இன்றைய பதிவை சமர்ப்பிக்கிறேன்..
1966 – ஆம் ஆண்டில் புரட்சித்தலைவர் நடித்த ஒன்பது படங்கள் வெளியாயின. 1963 – ஆம் ஆண்டிற்குப் பின் இந்த ஆண்டில்தான், ஒன்பது படங்கள் வெளியாயின.
இவற்றுள், அன்பே வா, நாடோடிமன்னன், நான் ஆணையிட்டால், பறக்கும் பாவை, தாலி பாக்கியம், பெற்றால்தான் பிள்ளையா உள்ளிட்ட ஆறு படங்களில் சரோஜாதேவியும், முகராசி, சந்திரோதயம், தனிப்பிறவி முதலிய மூன்று படங்களில் ஜெயலலிதாவும் எம்.ஜி.ஆரோடு இணைந்து நடித்திருந்தனர்.
இவற்றுள் நாடோடி, பறக்கும் பாவை, முகராசி, தனிப்பிறவி ஆகிய நான்கு படங்களில் கண்ணதாசனின் பாடல்கள் முழுமையாக இடம் பெற்றிருந்தன.
முகராசி – மகராசி – பொருத்தம்!
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரோடு, காதல்மன்னன் ஜெமினி கணேசன் சேர்ந்த ஒரே படம் ‘முகராசி’ தான். இப்படத்தில் எம்.ஜி.ஆரோடு இணைந்து நடித்தவர் கலைச்செல்வி ஜெயலலிதா.
‘முகராசி’ திரைப்படத்தை பதின்மூன்று நாட்களிலே தயாரித்து வெளியிட்ட பெருமை தேவர் பிலிம்ஸ் நிறுவனத்தையே சாரும்.
எம்.ஏ.திருமுகம் இயக்கத்தில்,
கே.வி.மகாதேவன் இசையமைப்பில், கண்ணதாசனின் கருத்துமிக்க பாடல்களும் நிறைந்த இப்படம் 18.2.1966 – ஆம் நாளில் வெளியானது. நூறு நாட்களுக்கும் மேலாக ஓடி மகத்தான வெற்றியையும் பெற்றது.
புரட்சி தலைவரோடு, கலைச்செல்வி ஜெயலலிதா நடித்து வெளிவந்த மூன்றாவது படமே ‘முகராசி’ இப்படம் வெளிவந்த இதே ஆண்டில் மட்டும் ஜெயலலிதா நடித்த பதினான்கு படங்கள் வெளிவந்தன. இவற்றுள் தமிழ்ப்படங்கள் மட்டும் ஒன்பது; தெலுங்குப்படங்கள் மூன்று; கன்னடப் படம் ஒன்று; ‘எபிசில்’ என்ற ஆங்கிலப்படம் ஒன்று.
இதில் பெரும் வியப்பு என்னவெனில் 1965 – ஆம் ஆண்டு ஜெயலலிதா கதாநாயகியாக நடித்து, சித்திரைத் திருநாளில் ‘வெண்ணிற ஆடை’ படமும், அதனையடுத்து மக்கள் திலகத்தோடு இணைந்து நடித்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ படமும், ‘கன்னித்தாய்’ படமும்; இவற்றோடு வேறு நான்கு படங்களுமாக மொத்தம் ஏழு படங்கள் வெளியாயின. ஆக நடிக்க வந்த இரண்டே ஆண்டுகளில் ஜெயலலிதாவின் இருபத்தோரு படங்கள் வெளியானது சாதனையல்லவா!
எனவேதான் இந்த மகராசியையும், எம்.ஜி.ஆரின் முகராசியையும், தனது கருத்துப் பார்வையில் பார்த்த கவியரசர்,
“எனக்கும் உனக்கும்தான் பொருத்தம்! – இதில்
எத்தனை கண்களுக்கு வருத்தம்! – நம்
இருவருக்கும் உள்ள நெருக்கம் – இனி
யாருக்கு இங்கே கிடைக்கும்?….”
என்று, புரட்சித்தலைவரும், தலைவியும் அன்றே பாடல் காட்சியில் பாடித் தோன்றிடும் விதமாகப் பாடலொன்றை எழுதினார்.
எம்.ஜி.ஆர். ஜெயலலிதா எனும் ஜோடி மிகவும் பிரபலமாக இருந்த நேரத்தில், எழுந்த பலதரப்பு விமர்சனங்களுக்கும், கண்ணதாசனின் இப்பாடலே பதிலாக அமைந்தது என்று, அன்றே பலரும் கூறிய கூற்றுகள் இன்று வரை, பொய்க்கவில்லை.
‘அவர்களது பொருத்தம்!
இன்றுவரை பலருக்கும் ஏற்படும் வருத்தம்!
அரசியலில் அவர்களுக்குள் உருவான நெருக்கம்!
இப்புவியில், இனியும் யாருக்காவது
கிட்டுமா? யோசியுங்கள்!
எனவே காலக்கவிஞர் தந்திட்ட கவிதை வார்த்தைகள், வாக்குப் பலிதமாக, இன்றும் புரட்சித் தலைவரின் வாரிசு புரட்சித்தலைவியே என்று புவி போற்றிடும் அளவிற்கு உயர்ந்துள்ள உண்மையை யார்தான் மறுக்க முடியும்?’
புரட்சிதலைவர் புகழ் ஓங்குக...
அன்புடன்
படப்பை
ஆர்.டி.பாபு.........
-
நாம் வாழ்கின்ற காலத்தில் முன்னோர்கள் வாழ்ந்த வரலாற்றையும் அவர்களின் சரித்திரத்தையும் நாம் புத்தக வடிவிலும் பிறர் மூலம் சொல்வது மூலமும் திரைப்படங்கள் மூலமும் தெரிந்தும், பார்த்தோம் , கேட்டுள்ளோம். வரலாற்றில் எத்தனையோ மகான்கள் மனிதப் பிறப்பாக பிறந்து பின்னாளில் மக்களால் ஏற்றுக் கொண்டு அவர்களை கடவுளாக மதித்து வணங்கி வருகின்றனர்.
புத்தன், இயேசு, காந்தி பிறந்தது பூமியில் எதற்காக - தோழா ஏழை நமக்காக என திரைப்படத்தின் மூலமாக மக்கள் திலகம் பாடிய பாடல்கள் சாகாவரம் பெற்றது. ஆனால் இந்த மகன்கள் யாவரும் மக்களால் நேசிக்கப்பட்ட பிறகு பின்பு கடவுளாக உலகமெங்கும் வழிபடுகின்றனர் என்பது வரலாறு. அது மட்டுமல்ல நாம் கண்கூடாக பார்க்கும் நிகழ்ச்சிகள்.
அந்த மகான்களின் வரிசையில் ஒரு சாதாரண மனிதராக பிறந்து பின்னாளில் திரையுலகிலும், அரசியல் வானிலும் பொது வாழ்க்கையிலும் நிலையான இடத்தைப் பெற்றவர் மக்கள் திலகம். வலியோருக்கு வாரி வழங்கிய மாபெரும் கொடைவள்ளல் நம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கோடிக்கணக்கான மக்கள் தங்கள் இதயத்திலும் இல்லத்திலும் கடவுளாக நிலைநிறுத்தி வணங்குகின்றனர். ஏழைகளுக்காக உழைத்த உத்தமரை நாம் இறைவனாக ஏற்றுக் கொள்கிறோம். பசியைத் தீர்த்த பகலவனை நாம் போற்றுகின்றோம். நல்ல ஒழுக்கமான கருத்துக்களை திரைப்படங்கள் மூலம் விதைத்த அறிவுச் செல்வத்தை புரட்சித் தலைவரை நாம் பின்பற்றுகின்றோம். எங்கு துன்பம் நேர்ந்தாலும் அங்கு தூய மகானின் தொண்டு நிற்கும். எண்ணற்ற பள்ளிகள் வளர்க்க முடியாத கல்விதனை தன் காவியங்கள் மூலமும் பாடல்கள் மூலமும் தமிழக மக்களுக்கு கற்பித்த ஆசானாக இன்றும் திகழ்கிறார் நம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க....ssn
-
மணியக்காரர் என்ற ஒரு கிராம நிர்வாக அதிகாரி பதவி தமிழகத்தில் பிரிட்டிஷ் காலம் தொடங்கி திமுக ஆட்சி வரைக்கும் இருந்தது.!
மணியக்காரர் பதவி தலைமுறை தலைமுறையாக ஒரே குடும்பத்திற்கே வரும் வாரிசுரிமை பதவி.!
100% உயர் சாதியினர்/ ஆண்ட சாதியினர் என சொல்லப்பட்டவர்கள் மட்டுமே வகித்துவந்த பதவி அது. அதற்கு அரசும் சம்பளம் கொடுத்துக்கொண்டிருந்தது!.
பட்டியலின, பழக்குடியின மக்களில் யாரும் மணியக்காரர் பதவியை நினைத்துக்கூட பார்க்க முடியாது.!
அந்த ஒரு சூழலில் அனைத்து சமூகத்தினரும் மணியக்காரராக ஆக வேண்டும். குறிப்பிட்ட சமூகம், குறிப்பிட்ட சில குடும்பங்களுக்கே மட்டுமேயான பதவியாக இது இருக்கக்கூடாது என நினைத்தார் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்!.
பரம்பரை மணியக்காரர் முறையை அவசர சட்டம் மூலம் ரத்து செய்துவிட்டு அனைத்து சாதியினரும் கிராம நிர்வாக அலுவலராகலாம் (VAO) என சட்டம் கொண்டு வந்தார்.!
பல நூறு ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டு வந்த தாழ்த்தப்பட்ட, பழங்குடியின சமூகத்தினரும் VAO ஆனார்கள்.!
இதெல்லாம் பல அதிமுகவினரும் மறந்துபோன சாதனைகள்.!
இதெல்லாம் எம்.ஜி.ஆர் போட்ட பிச்சை என யாரும் பேசிக் கேட்டதில்லை. ஒரு முதலமைச்சராக இதெல்லாம் எம்.ஜி.ஆர் செய்திருக்க வேண்டிய கடமை இது. அதைத்தான் செய்தார்!.
தற்போது தமிழகத்தில் 69% இட ஒதுக்கீட்டின் மூலம் மொத்தம் 12,606 கிராம நிர்வாக அலுவலர்கள் பணியாற்றுகிறார்கள்!.
கீழ் மட்ட சமூக கட்டமைப்பில் எழுந்த முக்கியமான புரட்சிகளில் இதுவும் ஒன்று.!
இந்த புரட்சி நடக்காவிட்டால் இன்னும் பல கிராமங்களில் குறிப்பிட்ட சில சான்றிதழ்கள் வாங்க ஆண்டைகள் வீட்டு வாசலில்தான் நாம் காத்திருக்க வேண்டும்.!
எம்.ஜி.ஆர் இன்னொன்றையும் செய்தார். அது தனியாரிடம் இருந்த ரேஷன் கடைகளை ரத்து செய்து ஆண்டைகளின் கோபத்திற்கு ஆளானார்!.
திமுக ஆட்சி முடியும்வரை ரேஷன் கடைகள் தனியாரிடம்தான் இருந்தன. ஊர் முக்கியஸ்தர்களாக இருக்கும் ஆண்டைகள்தான் அந்த தனியார் . அவர்களை அவ்வூரில் எதிர்த்து கேள்வி கேட்க ஆளில்லாததால் ரேஷன் விநியோகத்தில் கொள்ளை நடந்தது!.
அந்த அவலத்தை மாற்றி அரசு மூலம் 22 ஆயிரம் ரேஷன் கடைகளை திறந்தார். அப்போதே அனைத்து சாதிகளையும் சேர்ந்த 22,000 பேருக்கு ரேஷன் கடையில் அரசு வேலை கிடைத்தது. ஆதிக்க சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து புரட்சி செய்தார்!
அப்போதுமுதல் ரேஷன் கடைகள் அனைவருக்கும் பொதுவானதாக மாறியது.!
அதனால்தான் அவர் மக்களால்
புரட்சித்தலைவர் என அழைக்கப்பட்டார்.!........Rah.Shari.
-
அதிகப் பிரசங்கம்!!
-----------------------------
எம்.ஜி.ஆரின் சினிமா,,பொது வாழ்க்கை--அரசியல் என மூன்று பயணங்களையும் வித்தியாசமாக அலசும் ஆர்வம் நமக்கிருக்கிறது!
எந்த அளவு என்னால் சிறப்பாகச் செய்ய முடியும் என்ற தயக்கத்தாலேயே அந்த முயற்சி தள்ளிப் போகிறது!
நாகேஷ் அருமையான ஒன்றை சொல்லியிருக்கிறார்--
இந்திய அளவில் எவரையுமே எம்.ஜி.ஆருடன் ஒப்பிடக் கூடாது!
கிரேட் அலெக்ஸாண்டர்--மா வீரன் நெப்போலியன்--கென்னடி இப்படி உலகத் தலைவர்களுடனேயே அந்த உத்தமத் தலைவனை ஒப்பிட வேண்டும்!!
எம்.ஜி.ஆரது திரைப்படங்களை எடுத்துக் கொண்டால்--எவரையுமே வசவுச் சொற்களைப் பயன்படுத்தி திட்ட மாட்டார்! கூர்ந்து கவனித்தால் அது புரியும்!
எதிரி எவ்வளவு தவறு செய்திருந்தாலுல்--
ஏறிடுவார்--எதிர்ப்பார்--வெல்வார்--மன்னிப்பார்!
இந்த நான்கு நிலைகளிலேயே அனைத்துப் படங்களிலும் அவரது பாணி அமைந்திருக்கும்!
அது தலைவன் பட ஷூட்டிங்!
சித்து விளையாட்டு,,யோகா இவற்றின் அருமைகளை விளக்கும் படம் அது!
ஒரு காட்சியில் நாகேஷ்,,எம்.ஜி.ஆரிடம் வேலை கேட்டு வருவார்.
தனது பிரதாபங்களையெல்லாம் எம்.ஜி.ஆரிடம் அள்ளி விடுவார்!
எம்.ஜி.ஆர்,,நாகேஷிடம் கேட்பார்--
உனக்கு என்ன வேலை தெரியும்?
நாகேஷ் உற்சாகமாக பதில் சொல்வார்--
நீங்க எந்த வேலைக் கொடுத்தாலும் செய்வேன்.
நீங்க எள்ளைக் கேட்டால் எண்ணையையேக் கொண்டு வருவேன்!!
எள்ளுன்னா--எண்ணையா இருப்பான்
வெட்டிக் கொண்டு வா என்றால் கட்டியே கொண்டு வருவான்---இவையெல்லாம் சுறுசுறுப்புக்கான சொல் வாடைகள்!
ஆனால் இங்கே எம்.ஜி.ஆரோ நறுக்குத் தெறித்தார் போல் நாகேஷிடம் சொல்வார்--
அது அதிகப்பிரசங்கித் தனம்??
நான் எள்ளு கேட்டால் நீ எள்ளு தான் கொண்டு வரணும்!!!
மிகக் கூர்மையான பதில் இது.
உளவு வேலை,,ராணுவம் போன்ற பணிகளில் மேலதிகாரி சொல்லும் வேலையை மட்டுமே செய்ய வேண்டுமே அல்லாது ஆர்வக் கோளாறினால் அதிகப்படியாகச் செய்து அவஸ்தையில் விழக் கூடாது!
எம்.ஜி.ஆர் பட வசனங்கள் அதனாலோ--
இன்றும் பேசப்படுகின்றன???...vtr......
-
தி.மு.க விற்கு சவால் பதிவு :
புரட்சித் தலைவரின் விவசாயிகளுக்கான சாதனை இதோ :
விவசாயத்திற்கு வழங்கும் மின்சாரக் கட்டணத்தை யூனிட்டுக்குப் பன்னிரண்டு காசுகளாகக் குறைத்தார் புரட்சித் தலைவர்.
விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம்
வழங்கும் கடனை விரிவுபடுத்தினார்.சுமார்
40 கோடி ரூபாயை உடனடியாக வழங்கச் செய்தார்.
அடுத்து, விவசாயத் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியங்களை நிர்ணயம் செய்து ஒரு சட்டத்தை நிறைவேற்றினார்.
இதனால் நெல் உற்பத்தி ஆண்டுக்கு 60
இலட்சம் டன்களாக உயர்ந்தது.
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்:
பாசனத்திற்கு நிலத்தடி நீரைப் பயன்படுத்த
3.31 இலட்சம் பம்பு செட்டுகளுக்கு புதிதாக
மின்சார இணைப்புக் கொடுக்க ஏற்பாடு செய்தவர் புரட்சித் தலைவர்.
அவர் 10.5 இலட்சம் சிறு விவசாயிகளுக்கு
இலவச மின்சாரம் வழங்கினார்.இவை தவிர
விவசாயிகளின் கடன் சுமை ரூ.325 கோடியை
தள்ளுபடி செய்தும் நிவாரணமளித்தார்.
தன்னிகரில்லாத தன்னிறைவு திட்டம் ஒன்றை வகுத்தளித்து ரூ.215 கோடியை
அதற்கென ஒதுக்கினார்.
இதுபோல் பல்வேறு நலத்திட்டங்கள் புரட்சித் தலைவரால் வழங்கப்பட்டதே!இது போதாதென்றால் அனைத்திற்கும் பதில் நாங்கள் தருவோம்.ஏனென்றால் நாங்கள் எம்.ஜி.ஆர் என்ற தெய்வத்திற்கு பக்தர்கள்!!
வாழ்க புரட்சித் தலைவர் புகழ்!!.........Rnjt
-
M.G.R. மிகவும் அழகானவர், தோற்றப்பொலிவு மிக்கவர், பொன்னைப் போன்ற நிறம் கொண்டவர், சிரித்தபடி அவர் வரும்போது, ரோஜாத் தோட்டமே நடந்து வருவது போலிருக்கும். இதெல்லாம் அவரது வசீகரமான அம்சங்கள்தான்; சந்தேகமில்லை. என்றாலும், இதையெல்லாம் கடந்த அவரது அரவணைத்துச் செல்லும் பண்பும், மனிதநேயமும்தான் அரசியல் எதிரிகளையும் அவர்பால் ஈர்த்தன!
திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர். நீக்கப் பட்ட சமயம். அவருக்கு ஆதரவாக மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது ஒரு வரலாற்று சம்பவம். கொந்தளிப்பான சூழ்நிலையில், அதிமுகவை எம்.ஜி.ஆர். தொடங்கியதுடன், ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தை வெளியிடுவதில் மும் முரமாக இருந்தார். அதற்கு எத் தனையோ முட்டுக்கட்டைகள். அப் போது, திமுகவில் இருந்த மதுரை முத்து, ‘‘அந்தப் படம் வெளிவராது. படம் வெளியானால் புடவை கட்டிக் கொள்கிறேன்.’’ என்று சவால் விட்டார். எம்.ஜி.ஆர். பற்றியும் கடுமையாக மேடைகளில் விமர்சித்தார்.
அந்த சமயத்தில் சென்னை சத்யா ஸ்டுடியோவில் தமிழகம் முழுவதும் இருந்து திரண்டு வந்த ரசிகர்களை தினமும் எம்.ஜி.ஆர். சந்தித்து, அவர் களிடம் பேசுவார். ஒருநாள், அப்படிப் பேசும்போது ‘‘மதுரை முத்தண்ணன் அவர்கள் கூட…’’ என்று குறிப்பிட்டார். அப்போது குப்புதாஸ் என்ற ரசிகர், முத்துவைப் பற்றிக் கடுமையாக விமர் சித்து, ‘‘அவரைப் பற்றி பேசாதீர்கள்’’ என்று கத்தினார்.
அரசியலில் எதிரிகளாக இருந்தாலும் மரியாதையோடு பேசும் எம்.ஜி.ஆருக்கு கோபம் வந்தது. கத்திய ரசிகரைப் பார்த்து, ‘‘அவர் யாரு? நம்ம ஆளா? குழப்பம் விளைவிக்க வந்திருக்கும் மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவரா?’’ என்று கேட்டார். அந்த ரசிகரும் ‘‘நான் எம்.ஜி.ஆர். மன்றத்தைச் சேர்ந்தவன்’’ என்று சொல்லி தன்னிடம் உள்ள அடையாள அட்டையைக் காண்பித்தார். அதைப் பார்த்த எம்.ஜி.ஆர்., சற்று கோபம் தணிந்தார்.
கத்திய ரசிகரைப் பார்த்து, ‘‘தம்பி, முத்தண்ணன் இன்று என்னை கடுமையாக விமர்சிக்கலாம். ஆனால், அவர் திராவிட இயக்க வளர்ச்சிக்காக செய்த தியாகங்களை மறக்கலாமா? ஏன்? முத்தண்ணனே காலப்போக்கில் நம் பக்கம் வரலாம். யாரை யும் கண்ணியக்குறைவாக பேசாதீர்கள்’’ என்று கூறிவிட்டு பேச்சைத் தொடர்ந்தார்!
அதைப் போலவே, சில ஆண்டுகளில் நிலைமைகள் மாறின. அதிமுகவில் சேர விரும்பினார் மதுரை முத்து. கட்சியினர் சிலர் எதிர்ப்பு தெரிவித்தபோதும் அவரை அதிமுகவில் சேர்த்துக் கொண்டார் எம்.ஜி.ஆர்.! இதுகூட பெரிதல்ல; பின்னர், முத்துவை மதுரை மேயராகவும் ஆக்கினார்!
எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த போது, ஊட்டியில் அரசு விருந்தினர் விடுதியில் தங்கியிருந்தார். அதைக் காரணம் காட்டி, அந்த சமயத்தில் கமல்ஹாசன் நடித்த ‘ஒரு கைதியின் டைரி’ படத்தின் படப்பிடிப்பை அங் குள்ள அரசுக்கு சொந்தமான பூங்கா வில் நடத்த அதிகாரிகள் அனுமதி மறுத்தனர்....Suj.Kum...
-
தன்னை மக்களிடம் நெருக்கமாக்கிய திரையுலகுக்கும், கலைஞர்களுக்கும் எம்.ஜி.ஆர். எவ்வளவோ உதவிகள் செய் துள்ளார். திரையரங்கு உரிமையாளர் களுக்கு சுமையாக இருந்த விற்பனை வரி செலுத்தும் முறையை நீக்கி, ஒரு காட்சி நடந்தால் இவ்வளவு வரி கட்ட வேண்டும் என்ற அடிப்படையில் ‘காம்பவுண்டிங் டாக்ஸ்’ முறையை முதல்வர் எம்.ஜி.ஆர். அமல்படுத்தினார்.
அப்படிப்பட்டவர், படப்பிடிப்பு நடத்த அனுமதி மறுப்பாரா? விஷயம் அறிந்து ‘ஒரு கைதியின் டைரி’ படப்பிடிப்பை அரசு பூங்காவில் நடத்தச் சொன்ன எம்.ஜி.ஆர்., படப்பிடிப்பைக் காணவும் வந்துவிட்டார்.
படப்பிடிப்பின்போது தொழில்நுட்பக் கலைஞர்கள் இரண்டு பேர் எம்.ஜி.ஆரைப் பார்ப்பதை தவிர்த்துக் கொண்டே இருந்தனர். இதை கவனித்து அவர்களைப் பற்றி விசாரித்து இருவரும் திமுகவைச் சேர்ந்தவர்கள் என்று எம்.ஜி.ஆர். அறிந்து கொண்டார். அவர்களது பெயர்களையும் கேட்டுத் தெரிந்து கொண்டார்.
பின்னர், படப்பிடிப்புக் குழுவினர் அனைவருக்கும் எம்.ஜி.ஆர். தனது சொந்த செலவிலேயே மதிய விருந்து அளித்தார். சுற்றிச் சுற்றி வந்து எல்லோ ரையும் உபசரித்தார். அந்த தொழில் நுட்பக் கலைஞர்கள் இரண்டு பேரும் ஒரு மூலையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். எம்.ஜி.ஆர். அளிக்கும் விருந்தை சாப்பிடுவதில் அவர்களுக்குத் தயக்கம். அதேநேரம், விருந்தை புறக்கணிக்கவும் முடியாத நிலைமை. இந்த தர்மசங்கடத்தாலும் எம்.ஜி.ஆரைப் பார்க்க விரும்பாததாலும் குனிந்த தலை நிமிராமல் சாப்பிட்டனர்.
அந்தத் தொழில்நுட்பக் கலைஞர் கள் அருகில் எம்.ஜி.ஆர். வந்தார். அவர் களது தலைகள் இன்னும் குனிந்தபோது, சத்தமாக அவர்களின் பெயரை சொல்லி அழைத்தார்! அதிர்ச்சியுடன் இருவரும் நிமிர்ந்து பார்த்தனர். எம்.ஜி.ஆர். சிரித்துக் கொண்டே அவர்களது தோளைத் தட்டி, ‘‘நல்லா சாப்பிடுங்க’’ என்றார். சொன்னதோடு மட்டுமில்லாமல், ‘‘இதை சாப்பிடுங்கள், நல்லா இருக்கும்’’ என்று சொல்லி சில பதார்த்தங்களை அவர்களது இலையில் வைத்து உபசரித்தார். ஒரு முதல்வர், தங்கள் மீது இவ்வளவு அன்பு காட்டியதில் இருவரின் கண்களும் கலங்கி விட்டன. அதற்கு மறுநாள் அந்தத் தொழில்நுட்பக் கலைஞர்கள் இருவரும் அதிமுகவில்!...Suj.Kum...
-
இதோ விழுந்த அடியிலேருந்து சுப்புரமணியன் சுப்புராமன் இப்பதான் 4 நாள் கழிச்சு மயக்கம் தெளிஞ்சு எழுந்திரிக்கிறார். 8 நிமிசம் முன்னாடி பதிவு போட்டுருக்காரு. சென்னை ஆல்பட் தியேட்டரில் அன்னதானம் போட்டு கூட்டம் சேர்க்க பாத்திருக்கானுக. அப்படியும் கூட்டம் வரலை. 10 பேர் இவனுகளே நிக்கிறானுக. பின்ன அன்னதானம் யாருக்கு போட்டானுங்க. இவனுங்களே சாப்பிட்டானுங்க போலருக்கு. எம்ஜிஆர் ரசிகர்களுக்கு ஜாதி மதம் கிடையாது. எல்லாரும் எம்ஜிஆர் ஜாதி. ஆனா சுப்புரமணி போட்ட பதிவில் ஒரு ஆளு கனேசனுக்கு அய்யர் ரசிகர்தான் ஜாஸ்தின்னு பேசறான். அவனுங்க ஜாதியாலயும் மதத்தாலும் பிரிஞ்சுருக்கானுக. கணேசன் படங்களில் தேவை இல்லாமல் தன் ஜாதிப் பெருமை பேசுவார். கணேசன் எவ்வழி. பிள்ளைங்க அவ்வழி. ஜாதி மதம் கடந்த ஒரே தலைவர் புரட்சித் தலைவர் புகழ் வாழ்க....rrn...
-
எங்கள் தலைவர் எம்.ஜி.ஆர் கதாநாயகியரில்
முதன்மையானவர்.புரட்சித் தலைவருக்கேற்ற
சூப்பர் ஹிட் ஜோடியாக வலம் வந்தவர்.
கன்னடத்து பைங்கிளி என அனைத்து ரசிகராலும் அழைக்கப்பட்ட அபிநய சரஸ்வதி
திருமதி.சரோஜா தேவி அவர்களுடைய
பிறந்த நாளான இன்று (7.1.2021) அவரை வாழ்த்தி வணங்குவதில் புரட்சித் தலைவர்
ரசிகர்கள் பெருமைகொள்கிறோம்.இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!
எந்த இடத்தில் பேசினாலும் எங்கள் தலைவர் எம்.ஜி.ஆர் புகழைப் போற்றி பேசுவதில் அக்கறை கொண்டவர்.என் தெய்வம் எம்.ஜி.ஆர் என்றே பேசத் தொடங்குவார்.
புரட்சித் தலைவர் திரைப்பட காலங்களில் 1960 முதல் 1967 வரை அற்புத படங்கள்,
பாடல்களால் புரட்சித் தலைவர் ரசிகர்களை
கொள்ளை கொண்ட அழகான ஜோடி.
வாழ்க புரட்சித் தலைவர் புகழ்!!.........Rnjt
-
இது நிஜம்!!
-----------------
அபூர்வ விஷயம் ஒன்றைத் தாங்கிய பதிவு இது!
செல்வி ஜெ.ஜெயலலிதா!
இவரின் இரண்டு குணாதிசயங்கள் நம்மைக் கவர்ந்ததே!
புத்தகம் படிக்கும் பழக்கம் ஒன்று
எதிராளியிடம் சட்டென்று கோபம் கொள்வது இன்னொன்று!!
அதென்ன? கோபம் கொள்வது பிடிக்குமா என்று கேட்கிறீர்களாஃ??
ஆம்! அதுவும் அரசியலில் இருந்து கொண்டு கோபம் கொள்வது சாதாரண விஷயம் அல்ல?
சந்தர்ப்பவாதிகள் தான் அரசியலில் சட்டென்று கோபப்படாமல் சரியான சமயம் பார்த்து எதிரியைக் கருவறுப்பார்கள்!
உள் மனதில் ஒன்றுமில்லாமல் அந்தக் கணத்தில் கோபப்பட்டு அடுத்த கணமே அதை மறப்பவர்களின் வெளிப்படைத் தன்மைக்கும் நேர்மைக்கும் உத்தரவாதம் எளிதாகக் கொடுத்து விடலாம்!!
இன்னொன்று அவரின் புத்தகம் படிக்கும் பழக்கம்!!
அது ஒரு மதியப் பொழுது!
பூங்க்குன்றனிடம் ஒரு வேலையைக் கொடுக்க--
அவர் அந்த வேலையை முடித்து விட்டு ஜாலியாக டிவியில் பாட்டுக் கேட்டுக் கொண்டிருக்க--
அடுத்த கணமே ஜெ ஆகிறார்---
அம்மனோ சாமியோ???
உண்மையை அறிந்து அடுத்த நொடியே அமைதி ஆனவர்,,தாமும் அந்தப் பாட்டைக் கேட்கிறார்--
அந்தப் பாட்டு??
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
வாறி வாறி வழங்கும்போது வள்ளலாகலாம்1!
சிரித்துக் கொண்டே பூங்குன்றனிடம் சொல்கிறார்--
இந்தப் பாட்டை முழுசா,,,நிதானமாக் கேளு. இது என் அரசியல் குரு நாதர் எம்.ஜி.ஆருக்கு அப்படியேப் பொருந்தும்.
நான் ஒரு நாள்,,கவிஞர் கண்ணதாசனிடம் கேட்டேன்--இந்தப் பாட்டை நீங்க எம்.ஜி.ஆர மனசுல வச்சு எழுதினீங்களான்னு!!
ஜெவின் நுட்பமான ரசனையைக் கண்டு வியந்து போகிறார் பூங்க்குன்றன்!
நாமும் தானே???..........vtr...
-
எம் ஜி ஆரால்
மட்டும் முடியும்.........
இந்தியா சுதந்திரம் கண்ட பின் மாநிலங்கள் பிரிக்க பட்ட பின் ஒரு துளி நீர் பகிர கூட நீதி மன்றம் நாடவேண்டி உள்ளது
இதே இந்தியாவில் கருணை தேவனாக தமிழகத்தை ஆண்ட எம் ஜி ஆர் ஒரு நதியையே கிருஷ்ணா வை தமிழகத்தில் ஓடவைத்தார் இது அன்பினால் நடந்தது எம் ஜி ஆரை அரசியல் குருவாக எம் ஜி ஆர் சூட்டிய தெலுங்கு தேசம் பெயரோடு ஆந்திராவை ஆண்ட என்டி ராமராவும் இந்திரா காந்தி முன்னிலையில் நடை முறை ஆகியது
நீதி மன்றம் சென்று வாதாடி பெறும் வரை விவசாயிகளை காய விட மாட்டேன்
எம் ஜி ஆர்
ஒரு முறை காவிரி நீர் திறக்கவில்லை கர்நாடகா தஞ்சை வறச்சியில் காய விவசாயிகள் துயரபட முதல்வர் எம் ஜி ஆர் அதிகாரிகளிடம் விவாதிக்க நீதி மன்றம் போகலாம் என அவர்கள் கூற கூட்டத்தை பிரித்து விட்ட எம் ஜி ஆர் தன் காரில் ஏறி எந்த முன்னறிவுப்பும் இல்லாமல் அப்போதைய கர்நாடகா முதல்வர் குண்டுராவ் இல்லம் சென்றார் எம் ஜி ஆர் எம் ஜி ஆரை கண்ட குண்டுராவ் குடும்பம் திகைத்து வரவேற்று விரூந்து அளிக்கிறார்கள் விரூந்துண்ட எம் ஜி ஆர் நீர் அரூந்தவே இல்லை குண்டு ராவ் மனைவி தண்ணீர் அருந்த வேண்ட அதற்க்கு எம் ஜி ஆர் அது தான் உங்க கணவர் தரமாட்டேன் என்கிறாரே என கூற காரணம் புரிந்த குண்டுராவ் சிரித்து கொண்டே அண்ணே நீர் அருந்துங்கள் நீங்கள் சென்னையை அடையும் மூன் காவிரி நீர் தஞ்சயை அடையும் என கூற நீர் அருந்துகிறார் பொன்மனசெம்மல் எம் ஜி ஆர்
நினைத்ததை முடிக்கும் எம் ஜி ஆர் கருணை தேவனே
வாழ்க எம்ஜி ஆர் புகழ்.........vrh...
-
" என்தம்பி எம்.ஜி.ஆர் ஒருவரின் புகழுக்காக என்றால் இவ்வளவு பெரிய கூட்டத்தைக் கூட்டியிருக்க வேண்டியதில்லை. வீட்டிலிருந்து கொண்டே எம்.ஜி.ஆர் ரிக்ஷாக்காரர்களை ஒவ்வொருவராக அழைத்துக்கொடுத்திருந்தால் அந்த மழை அங்கி அவர்களின் உடலிலே ஒட்டிக்கொள்ளாதா’ ‘எம்.ஜி.ஆர் வாழ்க’ என்று அவர்களும் சொல்லியிருக்க மாட்டார்களா? தானாகவே ‘எம்.ஜி.ஆர் வாழ்க’ என்று கூறக்கூடியவர்கள், மழை அங்கி வாங்கிக்கொண்டு சும்மாவா இருப்பார்கள்?
இதை இவ்வளவு பெரிய விழாவாக நடத்தியதற்குக் காரணம், ஒவ்வொருவருக்கும், ‘நாம் என்ன உதவி செய்ய வேண்டும்?’ என்ற எண்ணம் உருவாகவேண்டும் என்பதற்குத்தான். ‘அவர் மழை அங்கி தருகிறார் நாம் ஏதாவது தருவோம்; அவர் பெரும் பொருள் ஈட்டுகிறார்-அவர் தருகிறார், நாம் ஈட்டுகிற அளவுக்கு ஏதாவது செய்வோம்’ என்ற எண்ணம் உருவாக வேண்டும் என்பதற்காகத்தான்.
எம்.ஜி.ஆர் மக்களுக்கு அறிமுகமாகாதவரல்ல; அவர் தலையைக் கண்டாலே, ‘எம்.ஜி.ஆர். வாழ்க. எம்.ஜி.ஆர். வாழ்க’ என்ற குரலெழுப்புகிறார்கள். எம்.ஜி.ஆர் தலைகாட்டப் பயப்படுகிறார்; காரணம், மக்கள் அன்புத்தொல்லை கொடுப்பதால்.
‘ஐயோ, மக்களைப் பார்த்தால் என்ன ஆகுமோ?’ என்று பயப்படுகிறார்கள், மற்றவர்கள்."
- ரிகஷா தொழிலாளர்களுக்கு மழைக்கோட்டு
வழங்கும் விழாவில் அறிஞர் அண்ணா, 4-12-1961 ,
நம்நாடு இதழில் ...........skr...
-
எம்.ஜி.ஆர் காலம் மட்டுமே பொற்காலம் !...
அவர் ஆளுமை செய்த கட்சிதான் தொண்டர்களின் கட்சி.!!
1972ல் அவர் கட்சி துவங்கியபோது நானும் நெல்லை ப.இளமதியும் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற நிர்வாகிகளாக தலைவர் நியமித்தார்.அப்போது 1977 முதல் பொதுத்தேர்தலில் அ.தி.மு.க mla தேர்வுக்கு எம்.ஜி.ஆர் மன்ற தோழர்களின் பரிந்துரை முதன்மை பெற்ற பொற்காலம் அது.1977ல் தொண்டர்கள் தேர்தலில்
போட்டியிட விண்ணப்பம் செய்து விட்டு வூர் திரும்புவது வழக்கம்.1977ல் நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வு.1977 தேர்தல் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு மனுதாக்கலின் போது நாங்கள் ஒரு தொகுதி வேட்பாளரை தேடுகின்ற நிலை.அவரை தேடி சென்றோம்.அவர் வயலில் உழுது கொண்டிருந்தார்.அவரிடம் போய் தலைவர் உங்களை வேட்பாளராக தெரிவு செய்துள்ளார்.உடன் கிளம்புக்கள் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என்றோம்.அவருக்கோ ஆச்சரியம்.மகிழ்ச்சியில் திளைத்து வேட்பு மனு தாக்க புறப்பட்டார்.போட்டியிற்றார்.வென்றார் அந்த தொண்டன்.ஆக தொண்டனுக்காக ஆரம்பித்த கட்சி தான் எம்.ஜி.ஆர் ஆளுமை செய்த அ.தி.மு.க.ஆம் எம்.ஜி.ஆர் ஆண்ட காலம் தான் பொற்காலம்.
1977ல் பாளையங் கோட்டை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரின் ஜாதியினர் இல்லாத நாஞ்சிலாரை நிப்பாட்டினார்.அவர் வென்றார்.திருநெல்வேலி தொகுதியில் மீனவர் இனமே இல்லாத தொகுதியில் எட்மண்டை நிறுத்தி வெற்றி பெற்றார்.அதே தொகுதியில் நாவலர் நின்று வெற்றி பெற்றார்.பின்னர் இராம.வீரப்பன் நின்று வெற்றி பெற்றார்.இப்படி தலைவர் ஆளுமை செய்த கட்சி பொற்காலமாக இருந்தது.
இப்போதைய ஆளும் அ.தி.மு.க வில் எப்படி உள்ளது.?1972 ம் வருட உறுப்பினர் கார்டு வைத்துள்ளவர்களின் நிலை என்ன ? அவர்கள் ஏதேனும் பொறுப்புகளில் வருகிறார்களா தெரியவில்லை..........nmi...
-
எம்.ஜி.ஆர்., நடத்திய ஐந்தாவது உலகத்தமிழ் மாநாடு ஐந்தாவது உலகத்தமிழ் மாநாடு, மதுரையில், 1981ம் ஆண்டு ஜனவரி 4ம் தேதி தொடங்கியது. இந்த மாநாட்டை தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்., தலைமையில், கவர்னர் சாதிக் அலி தொடங்கி வைத்தார்.இந்த மாநாடு யுனெஸ்கோ அமைப்புடன் இணைந்த சர்வதேச தமிழ் ஆராய்ச்சி அமைப்பின் கீழ் கொண்டாடப்பட்டது. இதற்கு தமிழக அரசும் நிதியுதவி வழங்கியது. தமிழக அரசு சார்பில் 10 கோடி ரூபாய் செலவிடப்பட்டது.மாநாட்டுக்காக மதுரை நகர் முழுவதும் அலங்கார வளைவுகளும், தமிழ் வளர்த்த அறிஞர்களின் சிலைகளும் நிறுவப்பட்டன. மதுரை நகரில் புகும் பகுதியிலேயே, கம்பீர நுழைவு வாயில் அமைக்கப்பட்டது. நகர் முழுவதும் அமைக்கப்பட்ட தோரண வளைவுகளுக்கு மட்டும் ஏழு லட்ச ரூபாய் செலவிடப்பட்டது. மதுரை மேலூர் சாலையில் அமைக்கப்பட்ட நக்கீரர் தோரண வாயிலை சத்தியவாணி முத்து திறந்து வைத்தார். மதுரை தமிழ்ச்சங்க தலைவர் டி.வி.எம்.பெரியசாமி இதற்கு தலைமை தாங்கினார். சேரன் நுழைவு வாயிலை நெடுஞ்செழியன் முன்னிலையில் கி.ஆ.பெ.விஸ்வநாதம் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு சர் முத்தையா செட்டியார் தலைமை வகித்தார். சோழன் நுழைவு வாயில் திறப்பு விழாவுக்கு தமிழக முன்னாள் முதல்வர் பக்தவச்சலம் தலைமை தாங்கினார். மாநகராட்சி கட்டடங்கள், விருந்தினர் மாளிகைகள் புதுப்பொலிவு பெற்றன. சில விருந்தினர் மாளிகைகள் முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டன.
நகரில் நடமாடிய பிச்சைக்காரர்கள், பிச்சைக்காரர்கள் விடுதிக்கு அனுப்பப்பட்டனர்.உலகம் முழுவதிலும் இருந்து வந்த 600க்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்கள் மற்றும் இலக்கியவாதிகள் பங்கேற்றனர். இலங்கை, மலேசியா நாடுகளில் இருந்து மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர். பிரிட்டன், அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், செனகல், இந்தோனேசியா, மொரிஷியஸ், மேற்கு ஜெர்மனி, ஸ்வீடன், செக்கோஸ்லோவாகியா, நெதர்லாந்து, நேபாளம், பின்லாந்து, பிஜி தீவுகளில் இருந்தும் மாநாட்டில் பங்கேற்க பிரதிநிதிகள் வந்தனர். வெளிநாடுகளில் இருந்து வந்த பிரதிநிதிகளை, தமிழக செய்தி மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் மற்றும் முன்னாள் சென்னை ஐகோர்ட் நீதிபதி எஸ்.மகாராஜன் ஆகியோர் வரவேற்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ரயில்கள், பஸ்கள் மூலம் மக்கள் வந்து குவிந்தனர். இதற்காக 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பல்வேறு இடங்களில் இருந்து மக்கள் பார்க்க வசதியாக 10 இடங்களில் "டிவி'க்கள் வைக்கப்பட்டன. இதில் 9 கோடி ரூபாய் மதுரை நகரில் நிரந்தர வசதிகளுக்காகவே செலவிடப்பட்டது. மதுரை திருமலை நாயக்கர் மகால் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. அங்கு திருமலை நாயக்கரின் வரலாற்றை விவரிக்கும் ஒளி-ஒலி காட்சி துவக்கிவைக்கப்பட்டது.சீர்காழி கோவிந்தராஜனின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் மாநாடு துவங்கியது.
மாநாட்டை துவக்கி வைத்து பேசிய தமிழக கவர்னர் சாதிக் அலி தமிழ் புலவரின் "யாதும் ஊரே, யாவரும் கேளீர்' என்ற கூற்றின் அடிப்படையில் மாநாடு நடைபெறுவதாக குறிப்பிட்டார்.துவக்க விழாவில் தலைமை வகித்து பேசிய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்., மதுரையில் உலக தமிழ்ச்சங்கம் நிறுவப்படும் என அறிவித்தார். கோர்ட்டில் தமிழை வழக்கு மொழியாக கொண்டு வர தமிழக அரசு பாடுபடும் என குறிப்பிட்டார். மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய மத்திய விவசாய அமைச்சர் ஆர்.வி.சாமிநாதன் தான் தமிழன் என்ற முறையில் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதில் பெருமை அடைவதாக கூறினார். முன்னாள் முதல்வர் பக்தவச்சலம் தனது பேச்சின் போது உலகதத் தமிழ் மாநாடு நடைபெற காரணமாக இருந்த தனிநாயகம் அடிகளாருக்கு நன்றி தெரிவித்தார்.மதுரை பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இதில் கேரள முதல்வர் நாயனார் கலந்து கொண்டார். பொதுமக்கள், அறிஞர்கள், கலைஞர்கள் பங்கெடுத்துக்கொள்ளும் வகையில், பட்டிமன்றம், கவியரங்கம் போன்ற நிகழ்ச்சிகள் நாள்தோறும் மாநாட்டு திடலில் நடந்தது. இதற்கென பந்தயத்திடலில் முப்பதாயிரம் பேர் அமரக்கூடிய பெரிய பந்தல் அமைக்கப்பட்டது. தமிழக அரசு சார்பில் கவிதை போட்டிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.தமுக்கம் மைதானத்தில் நடந்த கண்காட்சியில், பண்டை தமிழர்களுடைய கலை, நாகரிகம், பண்பாடு, இலக்கியம் ஆகியவற்றை மக்களுக்கு எடுத்துக்காட்டும் வகையில் பல்வகை காட்சிகள் அமைக்கப்பட்டன. தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆராய்ச்சியாளர்கள் ஆகியோரின் கட்டுரைகள் அடங்கிய சிறப்பு மலரும் வெளியிடப்பட்டது. மாநாட்டின் போது தமிழ் புலவர்கள் 49 பேருக்கு தங்கப்பதக்கங்களை முதல்வர் எம்.ஜி.ஆர்., வழங்கினார்.
இறுதி நாளான ஜனவரி 10ம் தேதி பிரதமர் இந்திரா மாநாட்டில் உரையாற்றினார். "உலக தமிழ் மாநாடு, வணக்கம்' என தமிழில் பேச்சை துவங்கிய பிரதமர் இந்தி மொழி திணிக்கப்படாது என வாக்குறுதி அளித்தார். பிரமாண்ட அலங்கார வண்டிகளின் ஊர்வலத்தை பிரதமர் இந்திராவும், முதல்வர் எம்.ஜி.ஆரும் ஒரே மேடையில் அமர்ந்து பார்த்தனர். இந்த ஊர்வலத்தை காண வழிநெடுகிலும் 25 லட்சம் பேர் கூடியிருந்தனர். இந்த ஊர்வலத்தில் 5 யானைகளில் இசைக்கலைஞர்கள், பெண்கள், போலீஸ் வாத்தியக்குழு, விவசாய காட்சி வாகனம், கொடி பிடித்த மாணவ, மாணவிகள், ஆசிரியைகள், மேளக்கலைஞர்கள், கரகாட்டக்காரர்கள், பொய்க்கால் குதிரை, தமிழ் வளர்த்த அயல்நாட்டு அறிஞர்கள், அவ்வையார், கண்ணகி, ஆண்டாள், கம்பர், தமிழன்னை வேடமிட்டவர்கள் கலந்து கொண்டனர்.விழா மேடைக்கு அருகே அமைக்கப்பட்ட தமிழன்னை சிலையை எம்.ஜி.ஆர்., திறந்து வைத்தார்..........vsm...
-
#தமிழ் #வாத்தியார்
மக்கள்திலகத்தின் தமிழறிவு அசாத்தியமானது.
மிகவும் நுணுக்கமானது.
மக்கள்திலகம் மன்னாதிமன்னனாக இருந்ததால் ஒரு அரசனைப் போன்று 64 கலைகளும் அவரிடம் பரவிக்கிடந்தது என்று சொன்னால் மிகையாகாது...
எல்லாக்கலைகளையும் சரிசமமாக வெளிப்படுத்தியதால், "இந்தக் கலையில் தான் சிறந்தவர்" என்று அவரை அவ்வளவு எளிதாக எடைபோட்டு விடமுடியாது...
தனது தமிழறிவை வைத்துக்கொண்டு தம்பட்டம் அடித்ததில்லை. தமிழ், தமிழர்கள் எனச் சொல்லிக்கொண்டு தமிழினத்திற்கு துரோகம் புரிந்ததில்லை... தலைக்கனம் கொண்டதில்லை. எப்போது தேவையோ அப்போது மட்டும் வெளிப்படுத்துவார்...
உதாரணங்களுக்கு நிறைய தமிழ் சார்ந்த விழாக்களில் தனது நுண்ணிய தமிழ்ப்புலமையை வெளிப்படுத்தி இருக்கிறார்...என்பதற்கு பல சான்றுகள் உள்ளன.
தமிழ்மொழிக்கு உயிராம், உயிர் எழுத்துக்களுக்கு "வாத்தியார்" மக்கள்திலகத்தின் இந்த எளிமையான விளக்கம் ஒன்றே போதும் அவரின் தமிழறிவைப் பறைசாற்ற...
"உயிரெழுத்துக்கள் தமிழுக்கு ம!ட்டும் உயிரல்ல. மனிதன் உயிராக இருக்கவேண்டிய தன்மைகளை உணர்த்துவதற்காக முதல் எழுத்தாகவே அமைஞ்சிருக்கு..."
அன்பு, ஆற்றல், இரக்கம், ஈகை, உழைப்பு, ஊக்கம், எழில், ஏற்றம், ஐக்கியம், ஒழுக்கம், ஓர்மை, ஔடதம்...
இவையனைத்தும் ஒருவரிடம் இருந்தால் இறைவன் நம்மிடம் நெருங்கி வருவான். இறப்பு தூரம் போய்விடும்....! Bsm.........
-
அட! அப்படியா?
--------------------------
எப்பொருள் கேட்பினும் அதன் மெய்ப் பொருள் பார்ப்பதே நம் பாணி!
கருப்பான குணம் உடையோரிடத்திலும்-
சிறப்பான குணம் ஏதாவது ஒன்றாவது இருந்தே தீரும்!
அந்தந்த நிகழ்வுகளுக்கு ஏற்ப அவர்களைப் பாராட்டி விட்டுப் போக வேண்டுமே அல்லாது--அவர்களை--
லென்ஸ் வைத்து ஆராய்வது சென்ஸ் அல்ல!
நடிகவேள் எம்.ஆர்.ராதா!
குணச் சித்திர--காமெடி--வில்லன் என எந்தப் பாத்திரத்தில் தோன்றினாலும் அதில் அட்சயப் பாத்திரமாக தன் நடிப்பைக் கொட்டுவார்!
ஒரு முறை இவர் இவர் நாடகம் ஒன்றுக்குப் பெரிய அளவில் கூட்டம்!
உதவியாளர் வந்து ராதாவிடம் சொல்கிறார்--
அண்ணே,,பெரியாரும்,,அண்ணாவும் நாடகத்துக்கு டிக்கட் எடுத்துட்டாங்க. ஆனால் அவங்களுக்கு ஸீட் இல்லை?
இஷ்டமிருந்தால் தரையில் உட்கார்ந்து பார்க்கட்டும்.இல்லையென்றால் போயிண்டே இருக்கட்டும்??
முன்னால் வந்தவருக்கு முன்னுரிமை என்ற இவரது நேர்மை!!
அன்று எம்.ஆர்.ராதா,,கண்ணதாசனைப் பார்க்க வருகிறார்!
கண்ணதாசனோ மும்முரமாக ஒரு பாட்டை எழுதிக் கொண்டிருக்கிறார்!
கே.வி.மகாதேவன் இசையில் அந்தப் பாட்டு!
இந்த இடத்தில் கே.வி.எம்மைப் பற்றிக் குறிப்பிட்டே ஆக வேண்டும்!
கவிஞர்களிடத்தில் பாட்டை வாங்கி அதற்கேற்ப மெட்டுப் போடுவது அவர் பாணி! அதாவது--
பாட்டுக்கு அற்ற மெட்டு!--அதுவும்-
ஸ்பாட்டுக்கு ஏற்ற மெட்டு!!
எம்.ஆர்.ராதா,,கவிஞரிடம் கேட்கிறார்--
என்ன கவிஞரே? எந்த ஹீரோவுக்கு பாட்டு எழுதிட்டிருக்கீங்க?
பாட்டை,,ராதாவிடம் காட்டியபடியே குறும்பாகப் புதிர் போடுகிறார் கவிஞர்--
இந்தப் பாட்ட நான் யாருக்கு எழுதறேன்னு நீங்க சரியா சொல்லிட்டா,,இந்தப் பாட்ட உங்களுக்கே அர்ப்பணிக்கிறேன்??
ராதா,,அந்தப் பாடலைப் பார்த்துவிட்டு,,கணமும் தாமதிக்காமல் சொல்கிறார்--
இந்தப் பாட்டு,,எனக்கோ இல்ல மத்த ஹீரோவுக்கோ எழுதினால் நாங்க இந்தத் தொழிலில் இருக்கற வரைக்கும் இதுக்கு உயிர் இருக்கும்! ஆனால் ஒருத்தருக்கு மட்டும் எழுதினால்,,அவர் மறைஞ்சு போனாலும் அந்தப் பாட்டுக்கு ஜீவன் இருக்கும்!
அது ராமச்சந்திரன் ஒருத்தனுக்குத் தான்!!
என்ன தீர்க்க தரிசனமான கருத்து??
அந்தப் பாடல்??
உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்--தலை
வணங்காமல் நீ வாழலாம்!!!...vtr...
-
தொடர் பதிவு உ...த்தமன். 10
--------------------------------------------------
இதுவரை நாம் தூத்துக்குடியின் மூன்று திரையரங்குகளின் தில்லுமுல்லுகளை பார்த்தோம். இனி நான்காவதாக நாம் பார்க்கப்போகும் திரையரங்கம்தான் பாலகிருஷ்ணா. தூத்துக்குடியில் உள்ள திரையரங்கில் ஓரளவு நேர்மையை கடைப்பிடிக்கும் தியேட்டர் இதுதான். இதுவும் சார்லஸில் மூன்றில் ஒரு பங்குதான் இருக்கும்.
ஓரளவு நல்ல படங்களை திரையிட்டாலும் தியேட்டரில் தூண்கள் அதிகமாக பார்வையாளர்களின் முழு காட்சியையும் காண விடாமல் தடை செய்யும்.
1956 ல் வெளியான "மதுரை வீரன்தா"ன் அதிக பட்சமாக 84 நாட்கள் ஓடியதாக சொல்கிறார்கள்.
1961ல் வெளியான "திருடாதே" 50 நாட்கள் ஓடியது. அதன்பின் நெடுங்காலமாக தலைவரின் பெரிய வெற்றிப் படங்கள் எதுவும் வரவில்லை. 1965 ல் வெளியான "ஆயிரத்தில் ஒருவன்தா"ன் மறு சாதனைக்கு வித்திட்டது எனலாம்.
முதல் 10 நாட்கள் தொடர்ந்து 4 காட்சிகள் நடைபெற்ற ஒரே திரைப்படம் இதுதான்.
மீனவர்கள் பெருவாரியாக வாழும் இப்பகுதியில் படம் பெரு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
நெல்லையை காட்டிலும் அதிகமாக மொத்தம் 63 நாட்கள் ஓடி புதிய சாதனை செய்தது. அதன்பின் எம்ஜிஆர் படத்தை எடுத்து வெற்றியை ருசித்த பின் தொடர்ந்து எம்ஜிஆர் படங்களை போட ஆரம்பித்தார்கள்.1966 ல் வெளியான "அன்பே வா" தொடர்ந்து 50 நாட்கள் ஓடி நல்ல வெற்றியை பெற்றது.
அதே ஆண்டு "தனிப்பிறவி" "பெற்றால் தான் பிள்ளையா" "பறக்கும் பாவை"
போன்ற படங்களை திரையிட்டனர்.
1968 ல் மிகப் பெரும் சாதனையாக தலைவரின் நான்கு படங்கள் வெளியாகி அவற்றில் மூன்று கலர் படங்களும் 50 நாட்களை தாண்டிய சாதனை இன்று வரை எவரும் நினைத்து கூட பார்க்க முடியாதது.
என் நினைவு சரியாக இருக்குமாயின் எனக்கு தெரிந்தவரை 1968 ஜன 1 முதல் பாலகிருஷ்ணா வில் வெளியான படங்களை பதிவு செய்திருக்கிறேன்.
தேதி. படத்தின் பெயர். ஓடிய நாள்.
ஜன 1 தெய்வச்செயல். 10
" 11 ரகசிய போ.115. ............53
மார்ச்4 மாய மோதிரம். ............10
" 14. Closed for
New sound system. 1
" 15. குடியிருந்த கோயில். 70
மே 24. பணமா பாசமா. ......... 71
ஆக. 3. கண்ணன் என் காதலன்22
" 24. மதுரை வீரன். மேலும்
ஒரு சில பழைய படங்கள். 27
செப்.20. ஒளி விளக்கு. 50
நவ. 9. தில்லானா மோகனாம்.53
1969. ஜன. 1. அன்பளிப்பு(13 நாட்கள்)
மொத்தமே 10 படங்கள்தான் வெளியாகின. இதில் தலைவரின் "ரகசிய போலீஸ் 115" "குடியிருந்த கோயில்" மற்றும் "ஒளிவிளக்கு" மூன்று கலர் படங்களும் 50 நாட்கள் தாண்டி ஓடியது இதுவரை யாரும் வெல்ல முடியாத சாதனையாக திகழ்கிறது.
அதன்பின் 1969 மே 1ல் தலைவரின் மாபெரும் வெற்றிப் படமான "அடிமைப்பெண்" வெளியாகி பல அற்புதங்களை செய்தது. 100 நாட்கள் ஓடி தூத்துக்குடியில் ஒரு புதிய சாதனையை பதிவு செய்தது. 100 நாட்களில் ரூ105816.13 வசூல் செய்து முதன்முதலில் லட்சம் வசூல் பெற்ற படமாக அமைந்தது. அதே ஆண்டு நவ 9ல் வெளியான "சிவந்தமண்" 101 நாட்கள் ஓட்டப்பட்டு சினிமா உலகத்திற்கே பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியது. ஊழல் தில்லுமுல்லுகள் பொய் பித்தலாட்டத்தை அரங்கேற்றி வெற்றி பெற்றதை போல் மாயையை உருவாக்கிய படுதோல்விப் படம்தான் அய்யனின் "சிவந்தமண்".
4 வாரம் கூட ஓட தகுதியற்ற படத்தை கைஸ்கள் 101 நாட்கள் ஓட்டி வெறியை தணித்துக் கொண்டனர்.
1970 ல் "எங்கள் தங்கம்" வெளியாகி 40 நாட்கள் நடைபெற்றது. 1971 ல் வெளியான "ரிக்ஷாக்காரன்" 55 நாட்கள் ஓடி வசூலில் புதியதொரு பரிணாமத்தை காட்டியது. "ரிக்ஷாக்காரன்" படமும் முதல் நாள் காலை காட்சிக்கு பெட்டி வராமல் தாமதமானதால் லேட்டாகத் திரையிட்டு இன்டர்வெல் இல்லாமல் ஓடியது. அதன்பின் "நீரும் நெருப்பும்" "ஒரு தாய் மக்கள்" அதே வருடத்தில் வெளியானது.
1972 ல் "இதய வீணை" வெளியாகி 40 நாட்கள் ஓடியது.
1973 ல் "பட்டிக்காட்டு பொன்னையா"
வெளியானது. 1974 ல் "உரிமைக்குரல்" நவ 7ல் வெளியாகி 68 நாட்கள் ஓடி ரூ 168000. வசூலை மிகக்குறைந்த காலத்தில் அதிக வசூல் பெற்ற படமாக அமைந்தது. 1976 ல் "உழைக்கும் கரங்கள்" வெளியாகி 40 நாட்கள் ஓடியது. 1977 ல் "நவரத்தினம்" அதைத் தொடர்ந்து "மீனவ நண்பன்" வெளியாகி 50 நாட்களை கடந்தது.
பாலகிருஷ்ணா சாதனை நிறைவுற்றது.
மீண்டும் அடுத்த பதிவில்..........KSR.........
-
பொன்மனச்செம்மல் எங்கள் தங்கம் புரட்சித் தலைவர் அவர்கள் நடித்த திரைப்படங்கள்..... அந்த படங்கள் தியேட்டரில் ஓடிய கால அளவு .......வசூல் சாதனைகள்..... புள்ளி விவரமாக இந்த அளவிற்கு இந்த காலத்தில் யாருக்குமே நினைவில் இருக்காது....... துல்லியமான அளவீடுகளை முகநூலில் வெளியிடும் தங்களுக்கு எனது இதயபூர்வமான மனப்பூர்வமான பாராட்டுக்கள் ........தங்களின் இனிய சேவை என்றென்றும் தொடர வேண்டும்....... புரட்சித்தலைவர் அவர்களைப் பற்றிய மலரும் நினைவுகளை தயவு செய்து முகநூலில் பதிவிடுங்கள்........ தங்கள் அளவிற்கு என்னால் பதிவு செய்ய தெரியவில்லை...... விஷய ஞானங்கள் போதாது......... புரட்சித்தலைவர் நடித்த எந்த ஒரு திரைப்படமாக இருந்தாலும் அது சமூக சிந்தனையை மையமாக கொண்டது...... பொன்மனச்செம்மல் அவர்கள் நடித்த அனைத்து திரைப்படங்களும் மனித சமுதாயத்திற்கு நல்வழி காட்டும் மிகப்பெரிய உபதேசங்கள் ஆகும் ......காலம் தாழ்த்தாது நமது கழக அரசு உடனடியாக இதில் தலையிட்டு தலைவர் அவர்கள் நடித்த அனைத்து திரைப்படங்களையும் பாதுகாக்கப்பட்ட தேசிய பொக்கிஷங்களாக அறிவிக்க வேண்டும் ........இதில் காலதாமதம் கூடவே கூடாது....... பொன்மனச்செம்மல் அவர்களுக்கு தமிழக மக்களை மிகவும் பிடிக்கும் .....இந்த செயல் மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய நன்றி கடன் ஆகும்...... இந்த காலத்து சினிமா தயாரிப்பாளர்களுக்கு நான் கூறிக் கொள்வது என்னவென்றால் புதிய புதிய திரைப்படங்களில் பணத்தை முதலீடு செய்வதை விட பொன்மனச்செம்மல் நடித்த ஒரு திரைப்படத்தை புதுப்பித்து காப்பிரைட் செய்து வெளியிட்டால் நல்ல லாபம் கிடைக்கும்....... மக்களும் சந்தோஷம் அடைவார்கள்..... வாழ்க வளமுடன்..........Sri.Kan..
-
இந்த சுப்பு சிவாசி வி.சி.கணேசன் என்ற பெயரில் ட்விட்டர்ல் இருக்காரு. எல்.ஏ.சினிமாவில் (அது திருச்சிதான) வி.வீடு படத்துக்கு 2 பேர் வந்ததால் காட்சிய ரத்து பண்னிட்டதாவும் வேற படத்துக்கு டிக்கட் இருக்குன்னு தியேட்டரில் சொன்னதா ஒரு அம்மா சுப்புக்கிட்ட ட்விட்டர்ல சொல்லுது. அதுக்கு அந்த தியேட்டர் மேனேஜர்தான் காரணம் அவர் இன்னொரு நடிகர் ( எம்ஜிஆர்) ரசிகர் என்று சுப்பு சொல்றாரு. ரிப்போர்ட் பண்னுவோம்னுதான் ஸ்கிரீன் சாட்டில் உள்ளது. டிவிட்டர்ல போனால் சுப்பு சொன்னதை பார்க்கலாம். சரிதான்.. தியேட்டர் மேனேஜர் எம்ஜிஆர் ரசிகர்னே வெச்சுக்குவோம். வி.வீடு படத்துக்கு 2 பேர் தான் வந்துள்ளார்கள். அதனால் காட்சி ரத்து. கணேசனின் ரசிகர்கள் படை எடுத்து தியேட்டருக்கு போவதை தடுத்து 2 பேர் மட்டும் படத்துக்கு வாங்கன்னு அந்த மேனேஜரா சொன்னாரு. எப்படித்தான் இதெல்லாம் ஒரு காரணம் என்று சிரிக்காம சுப்பு சொல்றாரோ.. உன் படத்த பார்க்க 2 பேர் வந்துருக்காங்க. இதுதான் உங்க நடிகன் பவுசு......rrn...
-
நம் இதயதெய்வம் அவர்கள் நடிப்பில் வந்த "விக்கிரமாதித்தன்" படத்தின் இறுதி கட்ட சண்டை காட்சிகள் வாஹிணி அரங்கில் 3 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது..
எல்லாம் முடிந்து படத்தின் தயாரிப்பாளர் இல்லம் சென்னை டி.எம்.எஸ். அலுவலகத்தின் அருகில் இருந்த அவர் வீட்டுக்கு சண்டை நடிகர்கள் சம்பளம் கேட்டு போகிறார்கள்.
அடுத்த மாதம் வந்து பாருங்க...இப்போ பணம் இல்லை என்று கையை விரிக்க குழுவினர் ஸ்டண்ட் சோமு அவர்களிடம் போய் சொல்ல அவரோ எனக்கும் அட்வான்ஸ் மட்டுமே இன்னும் மீதி பணம் வரவில்லை என்று சொல்ல...
அனைவரும் படத்தின் இயக்குனர் என்.எஸ். ராமதாஸ் வீட்டுக்கு சென்று முறையிட அவர் நான் இதில் தலையிட முடியாது என்று மறுக்க.
யாரும் தலைவர் வசம் இந்த நிகழ்வை எடுத்து செல்லவில்லை..காரணம் அப்போது தான் அவர் மனைவி சதானந்தவதி அவர்கள் மறைந்த நேரம்...
விஷயம் கசிந்து தலைவர் உடனே அனைவரையும் வரவழைத்து தகவல் அறிந்து தயாரிப்பாளர் அவரை உடனே தொடர்பு கொண்டு பட பிடிப்பு முடிந்து விட்டது ஏன் இன்னும் சம்பளம் பாக்கி அவர்களுக்கு என்று கேட்க..
அவர் நான் கொடுக்க மாட்டேன் என்று சொல்லவில்லையே பின்னர் கொடுக்கிறேன் என்று தானே சொன்னேன் என்று விளக்கம் கொடுக்க..
தலைவர் உடனே அவர்கள் கஷ்டப்பட்டு உழைத்து தொழில் செய்பவர்கள்...உடனே ஊதியம் கிடைக்கா விட்டால் அவர்கள் நிலை என்ன நான் இப்போதே எனது உதவியாளர் அவர்களை அனுப்புகிறேன்..மொத்த பணத்தையும் கொடுத்து விடுங்கள் என்று சொல்ல..
கோபத்துடன் தொலை பேசியை தலைவர் வைக்க...அடுத்த அரைமணி நேரத்தில் ஸ்டண்ட் நடிகர்கள் முழு சம்பள பாக்கியும் மொத்தமாக வந்து சேர்ந்தது.
அப்போது அவர்களுக்கு இப்போது போல யூனியன் அமைப்பு கிடையாது...தலைவர் படங்களில் நடிப்பவர்களுக்கு என்றும் தலைவரே பாதுகாப்பு...
தன் மனைவி பிரிந்த நிலையில் கூட அடுத்தவர் துன்பம் நீக்க சுட்டு விரல் நீட்டி கண்களை துடைக்கும் புனித உள்ளம் நம் புரட்சிதலைவருக்கே என்றும் சொந்தம்.
வாழ்க தலைவர் புகழ்.
உங்களில் ஒருவன்.
நெல்லை மணி..நன்றி.............
-
எம்.ஜி.ஆர் சிரித்தார்!!!.........
-------------------------------------
எம்.ஜி.ஆர்!!!
அட்டைக் கத்தி வீரன் என்று ஏளனம் செய்தாலும்,, அதைத் துளியும்--
சட்டை செய்யாது தன் சண்டைக் காட்சிகளில்
பட்டைக் கத்தியுடன் சுழன்று,, ஏசியவர்களின்
குட்டை உடைத்தவர்!!--எதிரிகள்
திணறும் வண்ணம் தன் வாள் வீச்சினால் கலக்கி
உணரும் வண்ணம் உளறுவாயர்களை ஒடுக்கியவர்!!
அது நீரும் நெருப்பும் படப்பிடிப்பு!!
கரிகால எம்.ஜி.ஆர்,,,அசோகன்,,மற்றும்,,அவரது ஆட்களுடன் சண்டையிடுவதாக அன்றைய காட்சி!!
விருகம்பாக்கத்தில் ஒரு தோப்புக்கு அருகில் ஒரு பாழடைந்த மண்டபத்தில் ஷூட்டிங்!!
சண்டை மாஸ்டர் ஷ்யாம் சுந்தருக்கோ கடுமையான வயிற்று வலி??
இயக்குனர்,,ப. நீலகண்டன்,,அவரை ஓய்வெடுத்துக் கொள்ளச் சொல்லிவிட்டு,,தாமே,,அதற்கான மூவ் மெண்டுகளை,,அசோகன்,,மற்றும் அவரது ஆட்களுக்கு சொல்கிறார்!!
நீ,இப்படி வாளை ஓங்கிக் கொண்டு வா!! நீ அப்படி தடு--இப்படி,,காலையிலிருந்து அவர்களுக்கு டைரக்ட் செய்த வண்ணம் இருக்கிறார்!!
மதியம் இரண்டு மணி அளவில் எம்.ஜி.ஆர் வந்து இறங்குகிறார்??---விபரம் அறிகிறார்!!
பா நீ--- மூவ்மெண்ட் சொல்லிக் கொடுக்கும்
பாணி?? யை கவனிக்கிறார்!!---அதாவது அவரது
ஒத்திகையை--
ஒத்திக்--கை கட்டி கவனித்த எம்.ஜி.ஆர்??
இரண்டு நிமிடங்கள் அதை கவனித்தவர்,,குறும்புப் புன்னகையுடன் இயக்குனரைப் பார்த்து--
நீங்கள் சற்று அமருங்கள் என்று கூறி விட்டு--
காலையிலிருந்து அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்ட விதங்களை அடியோடு மாற்றுகிறார்??
குழப்பத்துடன் பார்க்கும் நீலகண்டனிடம்--
அரை மணி நேர பயிற்சிக்குப் பின் --காட்சியைப் படமாக்குமாறு சொல்கிறார் எம்.ஜி.ஆர்??
நமக்கேன் வம்பு?? என்று காட்சியை எடுத்த நீலகண்டன் திகைக்கிறார்???
காட்சியோ,,படு நேர்த்தியாக படச் சுருளில்???
நீங்கள் சொல்லிக் கொடுத்தபடி எடுத்திருந்தால்--கேமராவில்-ஒருவர் முகம் தெரிந்திருக்கும்!! ஒருவர் வாள் தெரிந்திருக்கும்!! ஆனால்---
ஒழுங்கான சண்டைக் காட்சி தெரிந்திருக்காது???
எம்.ஜி.ஆர்,,ஆங்கிள் வைத்து விளக்க--
வாயடைத்துப் போனாராம் நீலகண்டன்??
ஏன்?? பிரமிப்பில் நாமும் தானே?????.........vtr...
-
#காவல்துறையைப் #போற்றியவர்...
புரட்சித்தலைவர், காவல்துறையின் மீதுள்ள மதிப்பினால், தான் காவல்துறை அதிகாரியாகப் பல படங்களில் நடித்து மேலும் பெருமை சேர்த்தார்.
தனது முதல் படமான சதிலீலாவதியில் கூட போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக என் கடமை, காவல்காரன், பல்லாண்டு வாழ்க மேலும் பல படங்களில் காவல்துறை அதிகாரியாக நடித்து அவர்களின் மீதான தனது மரியாதையை வெளிப்படுத்தியிருப்பார்.
இவற்றில், பல்லாண்டு வாழ்க திரைக்காவியத்தில், இதுவரை திரையுலகில் யாருமே செய்யாத அருஞ்செயலை செய்து காவல்துறையை உச்சத்தில் வைத்திருப்பார். இப்படத்தில்,
காவல்துறையை பொறுமையின் சிகரமாகவும், கொடூரமான கொலையாளி கைதிகளைத் திருத்தி அவர்களுக்கு நல்வாழ்வினை அளித்திடும் ஒரு #மகானாகவே காண்பித்திருப்பார்.
காவல் அதிகாரி வேடத்தை ஏற்றுப் பல நடிகர்கள் கம்பீரமாக நடித்திருக்கலாம். பாராட்டுக்களைப் பெற்றிருக்கலாம்.
ஆனால் புரட்சித்தலைவர் இப்படி நடித்ததோடு நிற்கவில்லை.
ராணுவத்தினர் போன்று ஒரு மாநிலத்தின் பாதுகாப்பை உறுதிசெய்வது காவல்துறைதான் என்பதை அறிந்தவர் புரட்சித்தலைவர்.
தான் காவல்துறையின் மீது வைத்திருந்த மரியாதையையும், அன்பையும் வெளிப்படுத்தியதற்கு இச்சம்பவம் ஒரு சிறு உதாரணம்...
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்தபோது இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்தது. தர்மபுரி அருகே போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த திரு. பழனிசாமி, நக்சலைட் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
உடற்கூறு ஆய்வு முடிந்ததிலிருந்து அவரின் இறுதி ஊர்வலம்வரை முதல்வர் எம்ஜிஆர். பங்கேற்று, இறுதி ஊர்வலத்தில் நடந்தே சென்றார். இதுபோன்ற வீர மரணங்களுக்கு, அரசு சார்பில் '#இரங்கல்' என்ற வார்த்தையும் அப்போதுதான், முதல்முறையாகப் பயன்படுத்தப்பட்டது.
மேலும் அக்குடும்பத்திற்கு நஷ்ட ஈடாக அரசு சார்பில் ஒரு பெரிய தொகையையும், ஒரு கணிசமான தொகையை தனது சொந்தப் பணத்திலிருந்தும் அளித்ததும் குறிப்பிடத்தக்கது...........bsm...
-
விமர்சிக்கும் பொறாமையாளர்கள்
விமர்சனம் கடவுளைக்கே உண்டு
இப்போது எல்லா கட்சியும்
எல்லா தலைவர்களும் பாராட்டும் வணங்கும் ஒரே தலைவன் எம் ஜி ஆர்
எந்த கட்சி ஆட்சி அமைத்தாலும் அது எம் ஜி ஆரை சார்ந்தே அமையும்
இதை கண்டு பொறாமை கொண்டு ஈன பிறவிகள் சிலர் யூடுபிலும் வலைதளத்திலும் மீடியாகளிலும் பொன்மனசெம்மல் எம் ஜி ஆரை பொய் உரைகளால் விமர்சிக்கிறார்கள் அவர்கள் உணருவதில்லை எவ்வளவு விமர்சிக்கிறார்களோ அதை விட பலமடங்கு பெரிதாகும் எம் ஜி ஆர் புகழ்
இப்போது தன்னை விழம்பரபடுத்த ஒருவன் ஒன்று எம் ஜி ஆரை புகழுவது அல்லது விமர்சிப்பது இதன் மூலம் பிரபலமாக நினைக்கிறான்
தன்னை நம்பியவனையும் வாழவைக்கிறார் எம் ஜி ஆர்
தன்னை விமர்சிப்பவனையும் வாழவைக்கிறார் எம் ஜி ஆர் கடவுள் போல்
விமர்சிக்கும் கேவலபடுத்த நினைக்கும் கேவலமானவர்களே நீங்கள் உங்கள் செய்கை சூரியனை பார்த்து குரைக்கும் நாய்க்கு சமம் என்பதை உணருங்கள்
எம் ஜி ஆர் புகழ் அழிவில்லா இயற்கையோடு கலந்தது
வாழ்க எம் ஜி ஆர் புகழ்.........Arm...
-
சுப்பு மாதிரி ஆளுங்களுக்கு நாம நன்றி சொல்லணும். அவங்க நடிகரோட உண்மையான செல்வாக்கு என்ன, படத்துக்கு மக்கள் வரவேற்பு என்ன என்பதை காட்டுறாங்க. பிரிஸ்டீஜ் பதுமனாபன் பேரைக் கேட்டாலே அவனவன் இனிமே பிரிஸ்டீஜ் பிரஷர் குக்கர் வாங்க கூட யோசிப்பான்......rrn...
-
நானும் நிறய பேர பாத்திருக்கேன். எம்ஜிஆரை வாழ்த்து இல்ல பேசாமல் போ. அது அவரவர் விருப்பம். ஆனால் தேவையில்லாம எம்ஜிஆரை விமர்சித்தவர்கள்,அவர் மேல சேறு வீசலாம்னு நினைச்சவர்கள் நல்லா இருந்ததா சரித்திரமே இல்லை. அந்த அளவுக்கு எம்ஜிஆர் தெய்வ அம்சம் கொண்டவர். அடுத்தாப்போல் இந்த ஆலங்குடி வெள்ளச்சாமின்னு ஒருத்தன் வாய்க்கு வந்ததை எல்லாம் ஆதாரம் இல்லாம பேசறான். அவனுக்கும் இருக்கு. புரட்சித் தலைவர் பாத்துக்குவார்....rrn
-
இன்று (8/1/21) முதல்
மக்கள் தலைவர் எம் ஜி ஆர் திரை காவியங்கள்
வெளியான விவரம்
*_________
மதுரை மிட்லண்ட் அரங்கில் நினைத்ததை
முடிப் பவன்
தினசரி 4 காட்சிகள்
தகவல் உதவி:திரு.எஸ். குமார், மதுரை
கோவை சண்முகா
மதுரை வீரன்
தினசரி 3 காட்சிகள்
தகவல் உதவி திரு. ஜெயகுமார், கோவை.
தூத்துக்குடி சத்யா
எங்க வீட்டு பிள்ளை
தினசரி 3 காட்சிகள்
தகவல் உதவி திரு. ஜெயமணி தூத்துக்குடி
பழனி வள்ளுவர்
நாடோடி மன்னன்
தினசரி 3 காட்சிகள்
ராஜபாளையம் ஜெய் ஆனந்த் அரங்கில்
அடிமை பெண்
தினசரி 3 காட்சிகள்
தகவல் உதவி திரு. வி. ராஜா, நெல்லை
அருப்பு கோட்டை
இளைய ராணி
மற்றும்
திருச்சி ஶ்ரீரங்கம்
ரங்கரா ஜாவில்
ஆயிரத்தில் ஒருவன்
தினசரி 3 காட்சிகள்
தகவல் உதவி
திரு.சொக்கலிங்கம்,
திவ்யா பிலிம்ஸ்
சென்னை பாலாஜி யி ல் இன்று முதல் (8/1/21)
குலே பகா வலி
தினசரி 3 காட்சிகள்
நடைபெறுகிறது.
தகவல் உதவி திரு. ராமு, மின்ட்.
குறிப்பு*: மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின்*மறு வெளியீடு பல்லாண்டு காலம்* திரை அரங்குகளில் வெளியாகி வெற்றிநடை*போட்டு வருவது*அனைவரும் அறிந்ததே. அந்த அரிய சாதனை*2021ம் ஆண்டிலும் தொடர்கிறது .வேறு எந்த நடிகரின்*பழைய படங்களும் இத்தகைய அரிய*சாதனையை*எந்த ஆண்டிலும் புரியவில்லை*என்பது*குறிப்பிடத்தக்கது .
-
நம் இதயதெய்வம் அவர்கள் நடிப்பில் வந்த "விக்கிரமாதித்தன்" படத்தின் இறுதி கட்ட சண்டை காட்சிகள் வாஹிணி அரங்கில் 3 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது..
எல்லாம் முடிந்து படத்தின் தயாரிப்பாளர் இல்லம் சென்னை டி.எம்.எஸ். அலுவலகத்தின் அருகில் இருந்த அவர் வீட்டுக்கு சண்டை நடிகர்கள் சம்பளம் கேட்டு போகிறார்கள்.
அடுத்த மாதம் வந்து பாருங்க...இப்போ பணம் இல்லை என்று கையை விரிக்க குழுவினர் ஸ்டண்ட் சோமு அவர்களிடம் போய் சொல்ல அவரோ எனக்கும் அட்வான்ஸ் மட்டுமே இன்னும் மீதி பணம் வரவில்லை என்று சொல்ல...
அனைவரும் படத்தின் இயக்குனர் என்.எஸ். ராமதாஸ் வீட்டுக்கு சென்று முறையிட அவர் நான் இதில் தலையிட முடியாது என்று மறுக்க.
யாரும் தலைவர் வசம் இந்த நிகழ்வை எடுத்து செல்லவில்லை..காரணம் அப்போது தான் அவர் மனைவி சதானந்தவதி அவர்கள் மறைந்த நேரம்...
விஷயம் கசிந்து தலைவர் உடனே அனைவரையும் வரவழைத்து தகவல் அறிந்து தயாரிப்பாளர் அவரை உடனே தொடர்பு கொண்டு பட பிடிப்பு முடிந்து விட்டது ஏன் இன்னும் சம்பளம் பாக்கி அவர்களுக்கு என்று கேட்க..
அவர் நான் கொடுக்க மாட்டேன் என்று சொல்லவில்லையே பின்னர் கொடுக்கிறேன் என்று தானே சொன்னேன் என்று விளக்கம் கொடுக்க..
தலைவர் உடனே அவர்கள் கஷ்டப்பட்டு உழைத்து தொழில் செய்பவர்கள்...உடனே ஊதியம் கிடைக்கா விட்டால் அவர்கள் நிலை என்ன நான் இப்போதே எனது உதவியாளர் அவர்களை அனுப்புகிறேன்..மொத்த பணத்தையும் கொடுத்து விடுங்கள் என்று சொல்ல..
கோபத்துடன் தொலை பேசியை தலைவர் வைக்க...அடுத்த அரைமணி நேரத்தில் ஸ்டண்ட் நடிகர்கள் முழு சம்பள பாக்கியும் மொத்தமாக வந்து சேர்ந்தது.
அப்போது அவர்களுக்கு இப்போது போல யூனியன் அமைப்பு கிடையாது...தலைவர் படங்களில் நடிப்பவர்களுக்கு என்றும் தலைவரே பாதுகாப்பு...
தன் மனைவி பிரிந்த நிலையில் கூட அடுத்தவர் துன்பம் நீக்க சுட்டு விரல் நீட்டி கண்களை துடைக்கும் புனித உள்ளம் நம் புரட்சிதலைவருக்கே என்றும் சொந்தம்.
வாழ்க தலைவர் புகழ்.
உங்களில் ஒருவன்.
நெல்லை மணி..நன்றி.......
-
அனைவருக்கும் வாத்தியார் கூறும் கருத்துக்கள் அறிவுரை புதிய ஆண்டு தொடக்கமாக எழுதுகிறேன். .பார்த்தால்நீளமாக இருக்கும் படித்தால் சுலபமாக இருக்கும்
சந்திரோதயம் படத்தில் வாத்தியார் கூறும் கருத்துக்கள் அறிவுரைகள்
1. தற்கொலை கேவலமானது. பலவீனமானது. .கோழைதனமாது..
2, குடை பிடித்தால் சூரியன் மறையாது மற்றவங்க பார்வையில் நாம் தான் மறைவோம்
3. அநீதியின் போர்வையில் கொஞ்சநாள் மறைந்திருக்கலாம் நீதியின் பார்வையில் எப்பவும் தப்பிக்க முடியாது..
4, ,வசதியுள்ளவங்க வாழ்க்கையில் நொறுங்கி போனவங்களுக்கு சுமை தாங்கி இருந்தா இங்கு மட்டும் அல்ல உலகத்தில் எங்கும் ஏழை பணக்காரன் என்ற பேதம் இல்லாமல் இருக்கும். .
5. ஏழைகளும் நம்மைப்போல பத்து மாதம் தான் ஆனால் உடல் கறுப்பு உள்ளம் வெண்மை உதிரம் சிவப்பு. .
6. வீட்டுக் கூரையிலே ஒட்டடை படியனும் என்று யாரும் விரும்புவதில்லை. அது தானாகத்தாத்தான் படியும். அதுப்போல்தான் நமது வாழ்க்கையில் வரும் துன்பமும். .அதை மன உறுதியால் தான் போக்கனும். .
7. வாழ்க்கையில் முன்னுக்கு வரனும் என்று முயற்சி பன்றது தப்பில்லை. அதற்காக குறுக்கு வழியில் கோபுரம் ஏறக்கூடாது. .
8. பெண்களை தெய்வமாக மதிக்கிற நாடு இது. கல்விக்கு சரஸ்வதியும். .செல்வத்துக்கு லஷ்மியும். .பொறுமைக்கு பூமாதேவியும் குறிப்பிடுக்கிறோம். .அப்படிப்பட்ட நாட்டில் தான் பெண்ணை இழிவு படுத்துகிறார்கள்.
9. தனிப்பட்ட விரோதத்திற்க்காகவும். .நமக்கு வேண்டப்பட்டவர்கள் என்பதற்காகவும் பத்திரிகையைப் பயன்படுத்துவது. நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் செய்யற மிகப்பெரிய துரோகம். ஆகும். .
10. நாட்டிலே பெண்களுக்கு பஞ்சம் இல்லை பெண்களின் உரிமைக்குத்தான் பஞ்சம். அதை ஒப்புக் கொள்ள மனம் இல்லாத ஆண்களின் அறிவுக்குதான் பஞ்சம்
11. கேவலம் பணத்துக்காக பண்பை பகுத்தறிவை மனிதாபிமானத்தை முறிக்க கூடாது.
12. அசிங்கமான ஏழைகளின் பணத்தால்தான் பத்திரிகை வளர்கிறது பணக்காரர்களின் வாழ்வு மலருகிறது
13. கூண்டுக்குள் போர்வையில் இருக்கிற புலிகள் எவ்வளவோ மேலானது. .வெளியே மனித உருவில் ஆயிரக்கணக்கான புலிகள் இருக்கின்றன அவங்க இதயத்தைப் போர்வையாக்கி இருக்கிறாங்க. .
14. என்னதான் கருப்பாக இருந்தாலும் காகம் குயிலாக மாறாது. காரணம் நல்லா இருந்தா பொய்யைக்கூட அனுமதிக்கலாம். என்று வள்ளுவரே கூறியிருக்கிறார். .
15. பெண்கள் முட்டைக்குள் இருக்கிற மஞ்சள் கரு மாதிரி. . என்ன நடந்தாலும் நான்கு சுவற்றுக்குள்தான் இருக்கனும். நான்கு சுவர் என்பது. அச்சம். .மடம். .நாணம். .பயிர்ப்பு. .பண்புகள் தான். .
16. பெண்கள் கடவுள் சிலை மாதிரி கோயிலை விட்டு வெளியே போனால் வெறும் கல்தான் இறைவன் கழுத்தில் உள்ள மாலை போல் இருக்கிற வரைக்கும் மரியாதை செய்வார்கள் கும்பிடுவார்கள். அதே மாலை வெளியே வந்து விழுந்தா யார் வேண்டுமானாலும் மிதிப்பார்கள்.
17. மனிதனின் முகம் இருக்கிற அதே இடத்தில் இதயம் இருந்தால் உலகத்திலேயே குற்றவாளிகள் இருக்க மாட்டார்கள். . என்ன செய்யறது கண்ணுக்குத்தெரியாத இடத்தில் இருக்கிறதனால்தான் உலகத்தில் இத்தனை அக்கிரமம் நடக்கிறது. .
18. மழைத்துளியில் எந்த வித்தியாசமும் இல்லை அதுவே நத்தையின் வாயிலே விழும் போது முத்தாக இருக்கிறது குப்பையில் விழும் போது சேறு ஆகிறது. .
19. குப்பையில் விழுந்தாலும் அது மாணிக்கமாக இருந்தா குனிந்து எடுக்கிறோம் இல்லையா? ? .
20. பத்திரிகையில் பொய்யான செய்தி வெளியிடுவதால் நாட்டினிலே எத்தனையோ குடும்பங்கள் திசை மாறி போய். ரத்தக்கண்ணீர் வடிக்கிறது. .
21. இந்த நாட்டிலேயே இருக்கிற ஒவ்வொரு பெண்ணும் யாராவது ஒருவருக்கு தாயாகவும் மனைவியாகவும் மகளாகவும் இருக்கிறார்கள் என்கிற கருத்து நமக்குள் இருக்க வேண்டும். .
22. ஆண்டவன் நிரபராதிகளை கைவிடுவதில்லை. குறைந்த அறிவுள்ள கோழிக்கூட தன் குஞ்சுகளை அடைக்காத்து வளர்க்கிறது. .
என்ன நண்பர்களே இந்த ஆண்டு வாத்தியார் கூறிய கருத்துக்களை மற்றவர்களுக்கு கூறுங்கள் அதுவே இந்த ஆண்டு முதல் தொடக்கமாக இருக்கட்டும்.
வாழ்க தமிழ் வளர்க புரட்சித்தலைவர் புகழ் தொடரட்டும் உங்கள் தொண்டு...Sivaa...
-
கண்ணதாசன் அகமும் புறமும்
எம்.ஜி.ஆர். தி.மு.க.வில், அசைக்க முடியாத மாபெரும் சக்தியாக திகழ்ந்து, கழகத்துக்கு சோதனை வரும் போதெல்லாம், தன் சொந்தப் பணத்தை வாரி வழங்கியும், பிரச்சாரம் மூலம், பாமர மக்களைக் கவர்ந்து ஒரு பெரிய ஓட்டு வங்கியை தி,மு,க விற்கு சேமித்து வைத்த காலகட்டம் அது.
செய்வதறியாது, திகைத்த அன்றைய காங்கிரஸார், தங்கள் துருப்புச் சீட்டாக. கவிஞர் கண்ணதாசனை முதலில் பலிகடா ஆக்கினர். (பின்னர் எம்.ஆர்.ராதா)
கவிஞரை அறிந்தோர்க்குத்தெரியும், எதையுமே அவர் சொல்லச் சொல்ல உதவியாளர் எழுதுவதுதான் வழக்கம். இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
கவிஞர் மேல் எனக்கு, 55 ஆண்டுகளாக, மிகுந்த மதிப்பும் மரியாதையும் உண்டு.
முதலில், அவர் தீட்டிய ஒரு கவிதையை உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன்.
“ மலையளவு தூக்கிப் பின் வலிக்கும் வரை தாக்குவதில், மனிதருள் நான் ஒரு மிருகம்.”
கவிஞர் எழுதிய ‘வனவாசம்’ படித்தவர்களுக்குத் தெரியும், அவரிடம், மிக அணுக்கமாக இருந்த நண்பர் யார் என்று ! கவிஞரை, ” இவரெல்லாம் ஒரு கவிஞரா ?” என்று அவர் கூறியதாக யாரோ போட்டுக் கொடுத்துள்ளார்கள்.
அதற்கு அவர் எழுதிய பாடல்,
“
அஞ்சாதா சிங்கமென்றும்
அன்றெடுத்த தங்கமென்றும்
பிஞ்சான நெஞ்சினர் முன்
பேதையர்முன் ஏழையர் முன்
நெஞ்சாரப் பொய்யுரைத்து
தன்சாதி
தன்குடும்பம்
தான்வாழ* தனியிடத்து
பஞ்சாங்கம் பார்த்திருக்கும்
பண்புடையான் கவிஞ*னெனில்
நானோ கவிஞ*னில்லை
என்பாட்டும் கவிதையல்ல*.
பகுத்தறிவை ஊர்க்குரைத்து
பணத்தறிவை தனக்குவைத்து
தொகுத்துரைத்த* பொய்களுக்கும்
சோடனைகள் செய்து வைத்து
நகத்து நுனி உண்மையின்றி
நாள்முழுதும் வேடமிட்டு
மடத்தில் உள்ள சாமிபோல்
மாமாய* கதையுரைத்து
வகுத்துண*ரும் வழியறியா
மானிடத்து தலைவரென்று
பிழைத்திருக்கும் ஆண்மையில்லா
பேதையனே கவிஞ*னெனில்
நானோ கவிஞ*னில்லை
என்பாட்டும் கவிதையல்ல’
கண்ணதாசனின், வீடு எத்தனையோ முறை ஏலத்திற்கு, வந்திருக்கின்றன. கவிஞர்,எதிர்பாராத நேரத்தில், இருமுறை வீட்டை மீட்டு, தந்துள்ளார், எம்.ஜி.ஆர்.--- --இது அண்ணாதுரை கண்ணதாசன்,மெகா தொலைக் காட்சி பேட்டி. இன்னும், எம்.ஜி.ஆர். கவிஞர் குடும்பத்துக்கு, செய்த பல்வேறு உதவிகளைப் பட்டியலிடுகிறார்.
28.03.1978 அன்று, அரசவைக் கவிஞர் என்ற உயரிய, மகுடத்தை, கவிஞருக்கு சூட்டினார். தமிழ்ச்சங்க கூட்டத்துக்கு, சென்றபோது அமெரிக்காவில், சிகாகோவில் மறைந்த போது, அரசு செலவில், கவிஞரின் பொன்னுடல் கொண்டு வரப்பட்டு, அரசு மரியாதைகளுடன் இறுதிப் பயணத்தை மேற்கொண்டார். (17.10.1981)
’மாடி வீட்டு ஏழை’ படம் எடுப்பதாக சொல்லி, நட்புடன் படப்பிடிப்புக்கு வந்த எம்.ஜி.ஆர். முன் மூச்சு முட்டக்குடித்து விட்டு, நடிகைகள் தோளில், கைத்தாங்கலாக வந்து ஹலோ மிஸ்டர் எம்.ஜி.ஆர். என்று அழைத்த சந்திரபாபுவை சகித்துக் கொண்டு, அவர் படத்துக்கு, நடித்துக் கொடுத்திருக்க வேண்டுமா? ஏன் சிவாஜியைப் போட்டு படம் எடுக்க வேண்டியதுதானே ? அந்த மனிதரையும், மன்னித்து, தன் சொந்தப்படமான ’அடிமைப் பெண்’ படத்தில் வாய்ப்பு தந்தவர், எம்.ஜி.ஆர். பறக்கும் பாவை பட வாய்ப்பும் அவரால்தான் கிடைத்தது. குலதெய்வம் ராஜகோபால் இறுதி காலத்தை ஓட்டியதே, எம்.ஜி.ஆரின், சீடர் பாக்கியராஜ் புண்ணியத்தில்தான்
என்பதும், இவர்கள் எல்லாம் ஒட்டிக் கிடந்த காங்கிரஸ் கட்சியும், சிவாஜியும், இவர்கள் யாருக்குமே, உதவிக்கரம் நீட்டியதில்லை.
” என்னை நம்பிக் கெட்டவர்கள் யாருமில்லை! நம்பாமல் கெட்டவர்கள் பலருண்டு” –எம்.ஜி.ஆர். நீதி மன்றத்தில், அவதூறு வழக்கு தொடர்ந்து, பின் தடை விதிக்கப் பட்ட புத்தகம் மூலம், தலைவர், புகழ் பேச வாய்ப்பு தந்தமைக்கு நன்றி!
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை... Rathnam Raju...
-
கண்ணதாசன் கவிஞர் என்கிற வகையில் ஒரு ஒப்பற்ற கவிஞர். அரசியல் வாதி என்று எடுத்துக் கொண்டால் மிகவும் பரிதாபமான ஒரு தலைவர்(?). அவர் எம்.ஜி.யாரை மட்டும் அல்ல, அவர் அவ்வப்போது இருந்த கட்சி நேரத்தில் அண்ணா, காமராஜர், கருணாநிதி, சிவாஜி கணேசன், ஈ.வே.ரா. ஈ.வே.கி. சம்பத் போன்ற எல்லோரையும் தாக்கி பேசியும் எழுதினார். கடைசி நாட்களில் எம்.ஜி.யார். ஆட்சியில் அரசு அவை கவிஞராகவும் இருந்து சம்பளம், சலுகைகள் பெற்றார். ஏதாவது கிறுக்குத்தனம் அல்லது சிறிதாவது நார்மல் இல்லாதவர்கள் ஜீனியஸ் படைப்பாளியாக ஆக முடியாது. நம்மைப் போன்ற நார்மலாக இருப்பவர்கள் சிறந்த படைப்புகள் படைத்த சரித்திரம் இல்லை. கண்ணதாசன் அவர்களையும் இந்த வரிசையில் தான் நாம் சில விஷயங்களில் நாம் நாம் நம்ப வேண்டும்..... Duraisamy Buvanendran...
-
#மணியக்காரர் என்ற ஒரு கிராம நிர்வாக அதிகாரி பதவி தமிழகத்தில் பிரிட்டிஷ் காலம் தொடங்கி #திமுக ஆட்சி வரைக்கும் இருந்தது.!
மணியக்காரர் பதவி தலைமுறை தலைமுறையாக ஒரே குடும்பத்திற்கே வரும் வாரிசுரிமை பதவி.!
100% உயர் சாதியினர்/ ஆண்ட சாதியினர் என சொல்லப்பட்டவர்கள் மட்டுமே வகித்துவந்த பதவி அது. அதற்கு அரசும் சம்பளம் கொடுத்துக்கொண்டிருந்தது!.
பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பட்டியலின, பழங்குடி மக்களில் யாரும் மணியக்காரர் பதவியை நினைத்துக்கூட பார்க்க முடியாது.!
அந்த ஒரு சூழலில் அனைத்து சமூகத்தினரும் மணியக்காரராக ஆக வேண்டும். குறிப்பிட்ட சமூகம், குறிப்பிட்ட சில குடும்பங்களுக்கே மட்டுமேயான பதவியாக இது இருக்கக்கூடாது என நினைத்தார் முதலமைச்சர் #எம்ஜிஆர்!.
பரம்பரை மணியக்காரர் முறையை அவசர சட்டம் மூலம் ரத்து செய்துவிட்டு அனைத்து சாதியினரும் கிராம நிர்வாக அலுவலராகலாம் (#VAO) என சட்டம் கொண்டு வந்தார்.!
பல நூறு ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டு வந்த தாழ்த்தப்பட்ட, பழங்குடியின சமூகத்தினரும் VAO ஆனார்கள்.!
இதெல்லாம் எம்.ஜி.ஆர் போட்ட பிச்சை என யாரும் பேசிக் கேட்டதில்லை. ஒரு முதலமைச்சராக இதெல்லாம் எம்.ஜி.ஆர் செய்திருக்க வேண்டிய கடமை இது. அதைத்தான் செய்தார்!.
தற்போது தமிழகத்தில் 69% இட ஒதுக்கீட்டின் மூலம் மொத்தம் 12,606 கிராம நிர்வாக அலுவலர்கள் பணியாற்றுகிறார்கள்!.
கீழ் மட்ட சமூக கட்டமைப்பில் எழுந்த முக்கியமான புரட்சிகளில் இதுவும் ஒன்று.!
இந்த புரட்சி நடக்காவிட்டால் இன்னும் பல கிராமங்களில் குறிப்பிட்ட சில சான்றிதழ்கள் வாங்க ஆண்ட சாதியினர் வீட்டு வாசலில்தான் நாம் காத்திருக்க வேண்டும்.!
#MGR இன்னொன்றையும் செய்தார். அது தனியாரிடம் இருந்த ரேஷன் கடைகளை ரத்து செய்தது..
திமுக ஆட்சி முடியும்வரை ரேஷன் கடைகள் தனியாரிடம்தான் இருந்தன. ஊர் முக்கியஸ்தர்களாக இருக்கும் ஆண்டைகள்தான் அந்த தனியார் . அவர்களை அவ்வூரில் எதிர்த்து கேள்வி கேட்க ஆளில்லாததால் ரேஷன் விநியோகத்தில் கொள்ளை நடந்தது!.
அந்த அவலத்தை மாற்றி அரசு மூலம் 22 ஆயிரம் ரேஷன் கடைகளை திறந்தார். அப்போதே அனைத்து சாதிகளையும் சேர்ந்த 22,000 பேருக்கு ரேஷன் கடையில் அரசு வேலை கிடைத்தது. ஆதிக்க சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து புரட்சி செய்தார்!
அப்போதுமுதல் #ரேஷன்_கடைகள் அனைவருக்கும் பொதுவானதாக மாறியது.!
அதனால்தான் அவர் மக்களால்
#புரட்சித்தலைவர் என அழைக்கப்பட்டார்.!
- Rahman Sharief...
-
மக்கள் திலகத்தின் படங்கள் என்றும் ரசிக்கும் படியாக இருப்பதற்கு காரணங்கள்.........
1.படத்தில் தலைப்பிலே நல்ல ஒரு கருத்து .
2.படத்தின் கதாநாயகன் அமைந்துள்ள பாத்திரம் எல்லோருக்கும் நல்லவராகவும் , சமுகத்தின் மீது அக்கறை உள்ளவரா கவும் அமைந்துஇருக்கும்
3.படத்தின் பாடல்களில் தத்துவ பாடல் ஒன்று கண்டிப்பாக இடம் பெற்றிஇருக்கும் .
4.கதைக்கு ஏற்றார் போல் சண்டை காட்சிகள் இடம் பெற்றிஇருக்கும் .
5.தலைவரின் மிகைஇல்லா நடிப்பு ரசிகர்களை கவரும் வண்ணம் அமைந்து இருக்கும்
6.தலைவரின் ஸ்டைல் மற்றும் ஆடை அமைப்புகள் இன்றைய மற்றும் நாளைய தலைமுறையையும் கவர்ந்து இழுக்கும்
7.தலைவரின் இளமை தோற்றம் மிக பெரிய பிளஸ் பாயிண்ட் ஆக அமைந்து இருக்கும்
8.தலைவரின் சண்டை காட்சிகள் மிகவும் ரசிக்கும் படியாக அமைந்து இருக்கும் . படத்திற்கு படம் வித்தியா சாமாக இடம் பெற்றிஇருக்கும் .
9. பெண்களை மதிக்கும் பாத்திரமாக அமைந்து இருக்கும்
10. ஒரு வெற்றி படத்திற்கு தேவையான் பிற அம்சங்கள் இடம் பெற்றிஇருக்கும் .
சிரித்து வாழ வேண்டும்
பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே
உழைத்து வாழ வேண்டும்
பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே...
-
தொடர் பதிவு. உ...த்தமன் 11
------------------------------------------------
இனி பாலகிருஷ்ணா திரையரங்கில் அய்யனின் ஆட்டத்தை பார்க்கலாம்.
1966 வரை சிறப்பாக சொல்ல ஒன்றுமில்லை. 1967 ல் வெளிவந்த
"நெஞ்சிருக்கும் வரை" "திருவருட்செல்வர்" போன்ற தோல்விப் படங்கள் வெளியாகி இழுவை முயற்சியில் தோற்றன.இரண்டும் முறையே 4வாரம் 5 வாரம் நடைபெற்றது.
நகரில் மையப்பகுதியில் அமைந்த தியேட்டர் ஆனபடியால் ஒரளவு பெண்கள் அதிகம் பார்க்கும் திரையரங்கமாக திகழ்ந்தது எனலாம்.
பாலகிருஷ்ணா தியேட்டர் பிரபலமானதே தலைவரின் படங்களால்தான். ஆரம்பத்தில் லீசுக்கு நாடககொட்டகையாக இருந்த பாலகிருஷ்ணாவை தியேட்டராக மாற்றி பல படங்கள் திரையிட்டாலும் தியேட்டருக்கு பெயரை கொடுத்தது தலைவரின் "மதுரை வீரன்"தான். 100 நாட்கள் ஓட வேண்டிய படத்தை 84 நாட்களில் நிறுத்தினார்கள்.தூத்துக்குடியை விட மிகச் சிறிய ஊர்களில் எல்லாம் 100 நாட்கள் ஓடிய "மதுரை வீரன்" இங்கு 100 நாட்கள் நிறைவு செய்வதற்குள் எடுத்து விட்டார்கள்.
அடுத்தாற்போல் அதிக நாட்கள் ஓடியது "ஆயிரத்தில் ஒருவன்". மீண்டும் "அன்பே வா" 55 நாட்கள் நிறைவு செய்தபின் 1968 ல் வெளியான "குடியிருந்த கோயில்" 70 நாட்களை நிறைவு செய்தது.
"பணமா பாசமா" விநியோகஸ்தர் கொடுத்த நெருக்கடியால் படத்தை 70 நாட்களில் எடுக்க வேண்டியதாயிற்று. அதுவரையில் எந்தப்படமும் 50000 தொடாத நிலையில் ரூ 67000 தாண்டி வசூல் சாதனை செய்தது. வேறு எந்த நடிகரின் படங்களும் ரூ35000 தாண்டாத நிலையில் இந்த சாதனையை "குடியிருந்த கோயில்" செய்தது ஒரு அதிசயம்தான். அதற்கப்புறம் "அடிமைப்பெண்" 100 நாட்களை நிறைவு செய்தது. பின்னர் "உரிமைக்குரல்" 68 நாட்களுடன் வசூலில் அசுர சாதனை செய்தது. ஆனால் இதில் எதையுமே செய்யாத அய்யனின் கைஸ்கள் "சிவத்தமண்ணை" மட்டும் சீரழித்து 101 நாட்கள் ஓட்டி அசிங்கத்தை அரங்கேற்றினார்கள்.
1967 தீபாவளிக்கு வெளிவந்த "ஊட்டி வரை உறவை" 52 நாட்கள் ஓட்டி முடித்தார்கள். இரவு 6 மணி காட்சி மட்டும் உயர்வகுப்பு டிக்கெட்டில் ஓரளவு கூட்டம் இருந்தது.1968 ல் ரிலீஸ் நாளன்று வெளியாகாமல் நவ 9 ம் தேதி வெளியான "தில்லானா மோகனாம்பாள்" 53 நாட்கள் நடைபெற்றது. ஆனால் பகல் காட்சி மொத்தம் 16 நாட்கள் தான் நடைபெற்றது. மற்ற நாட்களில் தினசரி 2 ஞாயிறு 3 காட்சிகள்தான் நடைபெற்றது. அய்யனின் படங்களுக்கு மாட்னி காட்சிக்கு யாரும் வரமாட்டார்கள் என்பதால் எந்தப்படமும் அதிகபட்சம் 18 தினங்களுக்கு மேல் மாட்னி காட்சி நடைபெற்றதில்லை.
1969 ல் வெளியான முதல் படமே "அன்பளிப்பு" தான்.
மல்டி ஸ்டார் படமாக இருந்தும் ஜன 1 ல் வெளியான இந்தப்படம் 13 நாட்களே நடைபெற்றது. படம் அத்தனை போர். மிகை நடிப்பில் எல்லோரையும் விரட்டி விட்டார் அய்யன். ஜெய்சங்கருக்காக எல்லா படங்களும் 10 நாட்களாவது ஓடும். அப்படியானால் அய்யனுக்கு? அடுத்து வெளியான "தெய்வமகன்" உலக மகா மிகை நடிப்புடா? அது என்று சொல்லுமளவுக்கு மக்களை வதைத்த படம். செல்ல மகனுக்கு அலியின் பழக்கம் எப்படி வந்தது என்பதை சொல்லவேயில்லை.
இருப்பினும் கைஸ்கள் முயற்சியில் 35 நாட்கள் ஓட்டி 50 நாட்கள் கனவை வடக்கயிறு பயன்படுத்தியும் முடியாமல்போனதால் கைஸ்களின் வடக்கயிறு வெறி வானளாவ வளர்ந்து அடுத்த படமான "சிவந்தமண்ணி"ல் நிலை பெற்றது. இதை விட்டால் நமக்கு தூக்கு கயிறுதான் என்று முடிவு செய்து "சிவந்தமண்ணை" இழுத்த கதை நாம் அறிவோம். 18 நாளில் தூக்க வேண்டிய மாட்னியை 73 நாட்கள் வரை இழுத்தார்கள். மேலும் எல்லா பண்டிகை தினங்களிலும் 4 காட்சிகள் போட்டு "அடிமைப்பெண்ணை" காட்டிலும் 50 காட்சிகள் அதிகம் ஓட்டியும் 99 நாட்கள் வரை "அடிமைப்பெண்ணை" முறியடிக்க முடியவில்லை.
1970 பொங்கலுக்கு ஜோஸப்பில் வெளியான "மாட்டுக்கார வேலன்" கூட வெளிவந்த "எங்க மாமாவை" திரையிடாமல் சிவந்தமண்ணை கைஸ்கள் ஓட்டினர். சிவந்தமண்ணை தூக்கியபின் "எங்க மாமா" திரைக்கு வந்து குறுகிய காலத்தில் தியேட்டரை காலி செய்தார். "மாட்டுக்கார வேலனி"ன் புயலில் சிக்கிக் கொண்ட ஏனைய திரையரங்குகள் வெறிச்சோடி கிடந்தன. அதிலிருந்தே "சிவந்த மண்ணி"ன் நிலை என்னவாக இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். ஆனாலும் அந்தப் புயலில் ஒரு சோக விஷயம் நடந்தது மறக்க முடியாதது.
பாலகிருஷ்ணா தியேட்டர் வாசலில் காண்டா பொருத்தி தேங்காய், இஞ்சி முரப்பா விற்கும் ஒருவர் என் நினைவு தெரிந்த நாள் முதல் அந்த இடத்தை மாற்றாதவர் "சிவந்தமண்" 6 வது வாரத்திலிருந்து தியேட்டர் வாசலுக்கே வரவில்லை. அவரை எங்கு தேடியும் காணாமல் ஒரு நாள் சிவன் கோயில் வாசலில் பார்க்க நேர்ந்தது. அப்போது அவரை பார்த்து என்ன ஆளையே காணோம் என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில் அய்யா கொஞ்சமாவது வியாபாரம் இருந்தா நான் ஏன் இங்கே வரப்போறேன்.
தியேட்டருக்கு ஆள் வராமல் வெறுமனே டிக்கெட் கிழித்தால் என் வியாபாரம் எப்படி நடக்கும். 10, 15 பேரை வைத்து தியேட்டர் நடத்தினால் எங்க பொழப்பு என்னாகிறது. அடுத்த படம் போட்டவுடன் அந்த இடத்துக்கே வந்து விடுவேன் என்றதும் பாவம் அய்யனின் கைஸ்கள் ஏழைகள் வயிற்றிலும் அடிக்கிறார்களே என்ற வருத்தம்தான் ஏற்பட்டது.
1970 ல் "எங்க மாமா" "வியட்நாம் வீடு" "எதிரொலி" "ராமன் எத்தனை ராமனடி" "பாதுகாப்பு" போன்ற படங்கள் வெளியாகி "வியட்நாம்வீட்டை" 50 நாட்கள் ஓட்டி போணி அடித்தனர். இதில் "பாதுகாப்பு" மிகக் குறைந்த நாட்கள் ஓடி அந்த வருட சாதனையை தன்னகத்தே வைத்துக் கொண்டது.
1971ல் "தங்கைக்காக" வெளியாகி 3 வாரங்கள் நடைபெற்றது. 1971ல் "மூன்று தெய்வங்கள்" மூன்று வாரங்களில் இறைவனடி சேர்ந்தது.
1972ல் "ராஜா" "ஞானஒளி" "பட்டிக்காடா பட்டணமா" "தர்மம் எங்கே" போன்ற படங்கள் வெளியாகி "ராஜா" 21 நாட்களும் "ஞானஒளி" 18 நாட்களும் ஓடியது. "பட்டிக்காடா பட்டணமா" 50 நாட்கள் படத்துக்கு தேர்வு ஆனது. "தர்மம் எங்கே" 15 நாட்கள் ஓட்டி அந்த ஆண்டு சாதனை படமாக அமைந்தது. 1973 ல் வெளியான "பொன்னூஞ்சல்"(13) மீண்டும் ஒரு சாதனை செய்தது.
74 ல் "சிவகாமியின் செல்வன்" "தாய்" ஆகிய படங்கள் வெளியாகி தங்கள் சாதனையை மீண்டும் புதுப்பித்து கொண்டன. 75ல் "அவன்தான் மனிதனை" 50 நாட்கள் இலக்கு வைத்து தேரோட்டினர். அதன்பின் "வைர நெஞ்சமு"ம் "பாட்டும் பரதமு"ம் மீண்டும் அந்த ஆண்டு சாதனையை தக்க வைத்துக் கொண்டது. அதன்பின் நிர்வாகத்தினர் அய்யனின் மார்க்கெட்டை தெளிவாக புரிந்து கொண்டு புத்திசாலித்தனமாக
அய்யன் படம் திரையிடுவதிலிருந்து விலகி விட்டனர்.
மீண்டும் அடுத்த பதிவில்.........ksr.........
-
#எம்ஜியார் Vs #சென்சார்_ஃபோர்டு
#எம்ஜிஆர் படங்களில் பாடல்களும் சரி, பாடல் காட்சிகள் படமாக்கப்பட்ட விதமும் சரி. ரசிகர்களுக்கு விருந்துதான்.
ஆனால், ஒரு காலத்தில் எம்.ஜி.ஆர். படங்களின் பாடல் வரிகள் சென்சாரின் பிடியில் இருந்து தப்பி வருவதற்குள் போதும், போதும் என்றாகிவிடும். சென்சார் அதிகாரிகளின் கட்டுப்பாடுகள் காரணமாக பல பாடல்களில் வரிகள் மாற்றப்பட்டன.
‘பெற்றால்தான் பிள்ளையா?’ படத்தில் ‘நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி…’ பாடலில் கடைசி யில் ‘மேடையில் முழங்கு அறிஞர் அண்ணா போல்’ என்றுதான் காட்சி படமாக்கப்பட்டது.
#அண்ணா பெயர் இடம் பெறுவதற்கு சென்சார் அதிகாரிகள் ஆட்சேபம் தெரிவித்தனர். இதனால், அந்த வரி ‘மேடையில் முழங்கு திரு.வி.க.போல்’ என்று மாற்றப்பட்டு ஒலி மட்டும் படத்தில் சேர்க்கப்பட்டது.
ஆனால், எம்.ஜி.ஆரின் வாயசைப்பு ‘அறிஞர் அண்ணா போல்’ என்றுதான் படத்தில் இருக்கும். இசைத்தட்டிலும் அப்படியேதான் இருக்கும்.
‘அண்ணா போல்’ என்ற வார்த்தை மாறி ஒலித்தா லும் படம் வெளியானபோது திரையரங்கு களில் கைதட்டலும் விசிலும் காதைப் பிளந்தது. ‘திரு.வி.க. போல்’ என்ற வார்த்தைகள் ‘திமுக போல்’ என்று ஒலித்ததுதான் காரணம்.
‘அன்பே வா’ படத்தில் எம்.ஜி.ஆர். பாடி நடிக்கும் ‘புதிய வானம் புதிய பூமி…’ பாடலின் ஒரு வரியில் முதலில் ‘உதய சூரியனின் பார்வையிலே’ என்று தான் வாலி எழுதியிருந்தார். படத் தயாரிப்பாளரான ஏவி.எம். செட்டியார் அதை சென்சார் அதிகாரிகள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றும் வார்த் தையை மாற்றும்படியும் வாலியிடம் கூறினார்.
வாலி அதைக் கேட்கவில்லை. கடைசியில் செட்டியார் சொன்னது போலவே நடந்தது. பின்னர், ‘உதய சூரியனின்‘ என்பதற்கு பதிலாக ‘புதிய சூரியனின்’ என்று ஓரளவு ஒலி ஒற்றுமை யோடு மாற்றி எழுதினார் வாலி. இன் னும்கூட பாடலைக் கேட்பவர்கள் பலர் அதை ‘உதய சூரியனின் பார்வையிலே’ என்றுதான் நினைப்பார்கள்.
இந்தப் பாடலைப் பற்றி சொல்லும் போது ஒரு சம்பவம். பாடல் காட்சி சிம்லாவில் படமாக்கப்பட்டது. பத்திரிகையாளர் சாவி அப்போது சிம்லாவில் இருந்தார். ‘எந்த நாடு என்ற கேள்வி இல்லை…’ என்று வரும் வரிகளின்போது எம்.ஜி.ஆர். அருகே நிற்பவர்களோடு சாவியும் சில விநாடிகள் நின்றுவிட்டுச் செல்வார்.
படம் வெளியாகி வெற்றிகரமாக 100 நாட்களைக் கடந்து ஓடியது. பின்னர், எம்.ஜி.ஆரை சந்தித்த சாவி, ‘‘நான் நடித்ததால்தான் ‘அன்பே வா’ படம் 100 நாள் ஓடியது’’ என்று சொல்லி எம்.ஜி.ஆரை வெடிச் சிரிப்பு சிரிக்கச் செய்திருக்கிறார். அநேகமாக, சாவி நடித்த ஒரே படம் இதுவாகத்தான் இருக்கும்.
‘தெய்வத்தாய்’ படத்தில் ‘வண்ணக்கிளி சொன்ன மொழி…’ பாடலில் ஒரு இடத்தில் ‘அத்திப்பழ கன்னத்திலே முத்தமிடவா?’ என்று இருந்தது. சென்சார் கெடுபிடி காரணமாக ‘முத்தமிடவா?’ என்ற வார்த்தை ‘கிள்ளிவிடவா?’ என்று மாற்றப்பட்டது.
‘நாடோடி மன்னன்’ படம் தயாரிக் கப்படும்போதே சென்சாருக்கு ஏராளமான புகார்கள். அப்போதிருந்த தணிக்கைக் குழு அதிகாரி ஜி.டி.சாஸ்திரி கண்டிப்பானவர். படத்தை அவருக்கு போட் டுக் காட்டி அவரும் ‘நோ கட்ஸ்’ என்று கூறிவிட்டார்.
அதன் பிறகு அவர் கேட்ட கேள்வி, ‘‘ஆமாம். எங்கே அந்த ‘காளை மாட்டை பால் கறக்க பாக்கறாங்க’ பாடல் காட்சியைக் காணோம்?’’
படத்தில் அப்படிப்பட்ட வரிகளோடு கண்ணதாசன் ஒரு பாடலை எழுதியிருந்தார். சென்சாரில் அது எப்படியும் தப்பாது என்று அந்தப் பாடலை படத்தில் பயன்படுத்தவே இல்லை.
‘காங்கிரஸைத் தாக்கி படத்தில் பாடல் காட்சி ஒன்று இருக்கிறது’ என்று முன்பே யாரோ புகார் செய்திருக்கின்றனர். அதனால்தான் சாஸ்திரி அதைக் கேட்டிருக்கிறார். அப்போது, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் சின்னம் காளை மாடு.
சென்சார் கெடுபிடிகளில் இருந்து தப்பிக்க படங்களில் புதிய உத்திகளை எம்.ஜி.ஆர். பயன்படுத்துவார். நெற்றியில் திமுகவின் சின்னமான உதய சூரியன் திலகம் வைத்துக் கொள்வார்.
‘சக்கரவர்த்தி திருமகள்’ படத்தில் காவிரிப் பூம்பட்டினத்தின் இளவரசராக வரும் எம்.ஜி.ஆரின் பெயர் ‘உதய சூரியன்’. ‘தாய்க்குப் பின் தாரம்’ படத்தில் எம்.ஜி.ஆர். காளை மாட்டை அடக்குவார். 1957-ம் ஆண்டு தேர்தலில் காளை மாட்டை எம்.ஜி.ஆர். அடக்குவது போன்ற சுவரொட்டிகள் தேர்தல் பிரசாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தின.
சென்சார் கெடுபிடி ஒருபுறம் இருக்கட்டும், எம்.ஜி.ஆரே தன் படங்களின் பாடல் வரிகளில் அக்கறை செலுத்துவார். தவறான அர்த்தம் வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பார்.
‘நினைத்ததை முடிப்பவன்’ படத்தில், ‘கண்ணை நம்பாதே…’ என்ற கருத்தாழம் மிக்க சூப்பர் ஹிட் பாடல் உண்டு. பாடலை எழுதியவர் கவிஞர் மருதகாசி. ஒரு இடத்தில் ‘பொன் பொருளைக் கண்டவுடன் வந்த வழி மறந்து விட்டுத் தன் வழியே போகிறவர் போகட்டுமே’ என்று மருதகாசி எழுதியிருந்தார்.
அவரை எம்.ஜி.ஆர். அழைத்து, ‘‘தன் வழியே என்று சொல்லியிருக்கிறீர்கள். அது ஏன் நல்ல வழியாக இருக்கக் கூடாது? நல்ல வழியாக இருந்தால் ஒருவர் ஏன் தன் வழியே போகக் கூடாது?’’ என்று கேட்டார்.
மருதகாசி அசந்துபோய் விட்டார். பின்னர், எம்.ஜி.ஆரின் விருப்பத்துக் கேற்ப, ‘தன் வழியே போகிறவர் போகட்டுமே’ என்பதற்கு பதிலாக ‘கண்மூடிப் போகிறவர் போகட்டுமே’ என்று மருதகாசி மாற்றி எழுதினார்.
அந்தப் பாடலில்,
‘நன்றி மறவாத நல்ல மனம் போதும்
என்றும் அதுவே என் மூலதனம் ஆகும்’
என்ற வரிகளை படத்தில் எம்.ஜி.ஆர். பாடுவார். எம்.ஜி.ஆரின் மூலதனத்துக்கு என்றுமே குறைவில்லை.
நன்றி:ஶ்ரீதர் சுவாமிநாதன்/தமிழ் இந்து.........
-
நம் தங்கதலைவரின் வரலாற்று காவியம் "அடிமைப்பெண்", படம் காட்சிகள் ஜெய்ப்பூர் பகுதியில் எடுக்கப்பட்டு கொண்டு இருந்த நேரம்..
தனது சொந்த படம் என்பதால் படத்தில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கண்ணின் இமை போல காத்து தொடர்கிறார் தலைவர் படம் எடுப்பதை.
படத்தின் முக்கிய வேடத்தில் நடித்து இருந்த சோ அவர்கள் படப்பிடிப்பின் நடுவில் கடும் வயிற்று வலியால் துடிக்க..
பதறி போகிறார் பொன்மனம்.... துக்ளக் இதழை இந்த படம் முடிந்த பின் துவக்குகிறார் சோ அவர்கள்...ஒரு முக்கிய வழக்கிலும் அவர் ஆஜர் ஆக வேண்டிய நிலையில் சென்னைக்கு மிகுந்த சிரமம் எடுத்து அவரை அனுப்பி வைக்கிறார் நம் இதயதெய்வம்.
மிகுந்த பொருள் செலவில் உருவாகி கொண்டு இருந்த படத்தின் படப்பிடிப்பு தடை படுகிறது..
சோ அவர்கள் சென்னை வந்து உடல் தேறி மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள தயார் ஆகி கிளம்பி கொண்டு இருக்கும் நேரம்.
தலைவரின் குடும்ப மருத்துவர் சோ அவர்களின் இல்ல கதவை தட்டி நான் எம்ஜிஆர் அவர்களின் மருத்துவர்....உங்கள் உடல் நிலை எப்படி உள்ளது என்று என்னை பரிசோதிக்க சொல்லி இருக்கிறார்.
எனக்கு உங்கள் முழு ஒத்துழைப்பு அவசியம் என்ற உடன் கண்ணீர் மல்க ஒப்பு கொள்கிறார் சோ ராமசாமி அவர்கள்..
உடல் நலம் தகுந்த முறையில் இருக்க சென்னையில் இருந்து மீண்டும் கிளம்பி அங்கே அடிமைப்பெண் குழுவினர் கூட இணைத்து கொள்கிறார் தன்னை சோ அவர்கள்..
தலைவர் எதுவும் தெரியாதது போல வாங்க எப்படி நலமா என்று கேட்க திகைத்து போகிறார் சோ அவர்கள்...
அடிமைப்பெண் படம் எடுக்க பட்டு கொண்டு இருந்த நேரத்தில் தலைவரின் 100 வது படம் ஒளிவிளக்கு இங்கே தமிழகத்தில் வெளியிட பட்டது.
அதற்கு என்று ஒரு ஆர்ப்பாட்டம் விழா எதுவும் கிடையாது என்பது முக்கிய செய்தி பதிவில்..
விஷயம் அறிந்த சோ அவர்கள் உங்கள் 100 வது படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று ஒரு வெள்ளை தாளில் எழுதி அதில் அடிமைப்பெண் பட குழுவினர் அனைவர் கையொப்பம் வாங்கி தலைவர் இடம் கொடுக்க.
காகிதத்தில் இரு புறமும் இருந்தவற்றை தனி தனியே நகல் எடுத்து தனது முக்கிய சேமிப்பாக வைத்து கொள்கிறார்.
காலம் ஒருபோதும் இனி ஒரு எம்ஜிஆர் போன்ற ஒருவரை நமக்கு காட்டாது.
வாழ்க தலைவர் புகழ்.
உங்களில் ஒருவன்.
உங்களின் எண்ணங்களை சொல்லும்..
நெல்லை மணி..நன்றி.
தொடரும்....
சில அபூர்வ படங்கள் உங்கள் பார்வைக்கு...
அடிமைப்பெண் படத்தில் சோ அவர்களை கட்டி வைத்து தீ வைக்க போகும் போது பேசும் வசனம் ..தலைவன் பெயரை சொன்ன உடன் என்ன பாசம் என்ன பக்தி...அவன் தலைவன் என்ற காட்சி நினைவுக்கு வந்தால் குழுவினர் பொறுப்பு அல்ல...நன்றி.உண்மை.............nmi...
-
: அமரர் புரட்சிதலைவர் நினைவிடத்த்தில் எப்போதும் போல மக்கள் !
மற்ற தலைவர்களுக்கு எல்லாம் இல்லாத சிறப்பு இவருக்கு என்ன?
இவரது நினைவு நாளில் மட்டும் எளியமக்களின் கூட்டம் நினைவஞ்சலி
செலுத்த ஓடிவருவது ஏன்?
அவரகள்அத்துனை பேர்களின் குறைகளை தீர்த்துவிட்டாரா?
இல்லை!
ஆனால் அவரை நினத்தால்,வணங்கினால் தங்களின் குறைகள் தீரும் என்ற நம்பிக்கை !
அந்த நம்பிக்கையே மண்ணுலகை விட்டு மறைந்தாலும் எளிய மக்களின் மனதைவிட்டு மறையாத மாமனிதரின் வெற்றி!
வாழ்க எம்.ஜி.ஆர் புகழ்-
சிரித்து வாழ வேண்டும்
பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே
உழைத்து வாழ வேண்டும்
பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே
தலைவரின் ரசிகர்களுக்கு
பக்தர்களுக்கு இந்த
இனிய காலை வணக்கம்
வாழ்த்துகள் வாழ்க
வளமுடன் நலமுடன்
என்று மே தலைவரின் ஆசியோடு ............gdr...
-
எம்.ஜி.ஆர்.,!!!
--------------------------
இன்றையப் பதிவு என் அலசல் மட்டுமே!
ஏற்பவர்கள் ஏற்கலாம் மனமில்லாதவர் புறந் தள்ளலாம்!
சமீப காலமாக சக்தி rdb என்னும் இளைஞர் ஒருவர் ஆர்வமாகவும்,,ஆழமாகவும் எம்.ஜி.ஆரைப் பற்றி தொடர்ந்து முக நூலில் பதித்து வருகிறார்.
கண்ணதாசனின் எம்.ஜி.ஆர்ப் பாடல்களை தொடராக மிக அருமையான நடையில் தொடர்ந்து பதித்து வருகிறார்!
அவரின் ஒரு ஆதங்கத்தைத் தொடர்ந்தே நமது இன்றையப் பதிவு அமைகிறது.
எம்.ஜி.ஆரை இன்றைய அ.தி.மு.க மேலிடம் சரியான முறையில் ஃபோகஸ் செய்யவில்லையே என்பது தான் அவரது ஆதங்கம்!
இதை அவர் மட்டுமே,,அதுவும் இப்போது மட்டுமே வெளிப்படுத்துகிறார் என்பது இல்லை.
ஜெ காலத்திலிருந்தே இத்தகைய விமர்சனங்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது!
நாம் என்னக் கருதுகிறோம் என்றால்--
இப்படி யாராவது ஒருவர் கருத்து தெரிவித்தாலே-உடனே--
எங்கள் அம்மாவைப் பற்றி உனக்கென்ன தெரியும் ?
அன்னிக்கு எம்.ஜி.ஆர். இன்னிக்கு ஜெ! இது நியாயம் தானே??
நீ எங்கள் அ.தி.மு.கவுக்கு எதிரி! நீ ஓட்டுப் போடாவிட்டால் நாங்கத் தோத்துடுவோமா???
இப்படியெல்லாம் அரை வேக்காட்டுத் தனமாக சிலர் பொங்கிக் கொண்டு வருவதில் சற்றும் நியாயம் இல்லை என்பதே நம் வாதம்!!
ஜெ காலத்தில் கொதித்த எம்.ஜி.ஆர் விசுவாசிகள் கூட அதற்காக தங்கள் வாக்குகளைத் தேர்தல் நேரத்தில் மாற்றிப் போட்டதில்லை என்பதையும் இங்கே ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்!
எம்.ஜி.ஆர்., விசுவாசிகளின் ஆதங்கத்தின் உட் கருத்து என்ன என்பதை நாம் உணர வேண்டும்--
ஜெ வை முன்னிலைப் படுத்தக் கூடாது என்பதல்ல அவர்களின் வாதம்--
ஜெ வுக்கு இணையாக எங்கள் எம்.ஜி.ஆரை.யும் வெளிச்சம் போட்டுக் காட்டுங்கள் என்பது தானே அவர்களின் ஆதங்கம்?
நீங்கள் சொல்வது உண்மை தான். உங்களின் ஆற்றாமையைப் புரிந்து கொள்ள முடிகிறது. எங்கள் கட்சியில் உள்ள நிர்வாகிகளிடம் உங்களது நியாயமான கோரிக்கையை விளக்குகிறோம்!--இப்படி ஜெ ஆதரவாளர்கள் சொல்லி விட்டால் அங்கேப் பிரச்சனையே இல்லையே? அது தானே நியாயமும் கூட??
ஒரு வினோதம் என்னவென்றால்--
இன்றைய இளந் தலைமுறையினர்களை எடுத்துக் கொண்டால்---அவர்களுக்கு எம்.ஜி.ஆர். காலத்தைப் பற்றியும்,,அவருடைய மாண்பைப் பற்றியும் தெரியாத நிலைமையிலும்,,,எம்.ஜி.ஆரைத் தெரிந்து கொள்ள அதிகம் விரும்புகிறார்கள் என்பதே உண்மை!
அப்படியானால் எம்.ஜி.ஆரைப் புறக்கணித்து அம்மா புராணம் மட்டுமேப் பெரிய அளவில் யார் பாடுகிறார்கள் என்றால்---
எம்.ஜி.ஆர்., காலத்தில் அரசியலில் நுழைந்து,,அம்மா காலத்தில் தாங்கள் வசதிகளைப் பெறுவதற்காக அன்றைய ஜெ மனசைக் குளிர வைக்க வேண்டிப் பொய் வேடம் போட்ட அறுபது வயதில் இருக்கும் புண்ணியவான்கள் தான் என்று நாம் சொன்னால் அதை மறுக்க முடியுமா??
ப.வளர்மதி போன்றோர்களின் நடவடிக்கைகள் அன்று எப்படியிருந்தன என்பதைத் தகுந்த நிகழ்வுகளோடு நான் எனது பதிவில் நிச்சயம் அலசுவேன்.
இன்றைய இளந் தலை முறையினர் எம்.ஜி.ஆரை இவ்வளவு ஆழமாக ரசிக்கிறார்கள் என்பதே பெரிய விஷயம்!
அவர்கள் வயதுக்கு ஒரு ரஜினி--கமல்--விஜய் அஜீத் என்று அவர்கள் சிந்தித்தால் நாம் தவறு காண முடியுமா??
இந்த மட்டில் இன்றைய அ.தி.மு.கவின் சிறப்புக்காகத் தானே அவர்கள் சிந்திக்கிறார்கள்?
கட்சியை விமர்சிக்கவே கூடாது என்பது எந்த விதத்திலும் ஏற்புடையதில்லையே?
இதில் இன்னொரு அலட்டல் வேறு??
நாங்கக் கட்சியிலே எத்தனை பேரைப் பார்த்திருப்போம்? எப்படியெல்லாம் கட்சிப் பணி ஆற்றியிருப்போம் என்று இரண்டொருவர்கள் தேவையில்லாமல் தங்களுக்குத் தாங்களே கொடுத்துக் கொள்ளும் செல்ஃப்--பில்டப்??
அன்று எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கிய போது வெட்டுப் பட்டுக் குத்துப்பட்டு களப் பணி ஆற்றியவர்களை விடவா??
அப்படியென்ன பதவியோ,,அடிக்கும் ஊழல் பணத்தில் பங்கோ கேட்கிறார்களா எம்.ஜி.ஆர் ரசிகர்கள்??
எங்கள் தலைவனின் பெயரையும் புகைப் படத்தையும் உங்கள் மேடைகளில் உயர்த்திக் காட்டுங்கள் என்பது தானே அவர்களது அல்ப ஆசை??
ஒன்றை நன்றாகக் கவனிக்க வேண்டும்!
அன்று ஜெ வை விமர்சித்த எம்.ஜி.ஆர். அபிமானிகள் தேர்தல் என்று வந்து விட்டால் எவ்வளவு மும்முரமாக களப் பணி ஆற்றுவார்கள்--ஆற்றியிருக்கிறார்கள் என்பது சைதையார்,,ஜே.ஸி.டி,,கே.பி.முனுசாமி போன்ற கட்சி முன்னோடிகள் நன்றாக அறிவார்கள்!
ஜெ வின் ஆளுமை கலந்த பங்களிப்பை நீங்கள் சொல்லி மகிழுங்கள் அது நியாயமும் கூட!
எம்.ஜி.ஆரையும் அதற்கேற்ப உயர்த்துங்கள் என்ற குரலுக்கு ஆதரவு தரா விட்டாலும்,,அதை மலிவாக சித்தரிக்க முயலாதீர்கள்!!!
இனி உங்கள் அபிப்ராயங்கள்---...vtr...
-
நம் இதயதெய்வம் முதல்வர் ஆக இருந்த சமயத்தில் ஒரு திருமண நிகழ்வில் கலந்து கொள்கிறார்.
அங்கே அப்போது தமிழகத்தில் மிகவும் பிரபலம் ஆன தலைவருக்கு முன்பே அறிமுகம் ஆன ஒரு இன்னிசை குழுவினர் கச்சேரி நடந்து கொண்டு இருக்கிறது.
மாலை 6.30..மணி அளவில் அங்கே வந்த தலைவர் குழுவினர் இசை நிகழ்ச்சியை முதல் வரிசையில் அமர்ந்து ரசித்து கொண்டு இருக்கிறார்.
இரவு 8.30 மணி அளவில் முதல்வர் கண் அசைவில் ஒரு குறிப்பு நோட்டு வர அதில் ஒரு பேப்பரை எடுத்து ஏதோ எழுதி முடித்து....
அந்த பாடல் முடிந்தவுடன் மேடை ஏறி இசை நிகழ்ச்சி நடத்தி கொண்டு இருந்த அந்த பிரபலம் அவரை கட்டி பிடித்து அவரின் கோட் பாக்கெட்டில் தான் எழுதிய பேப்பர் குறிப்பை மடக்கி உள்ளே வைத்து கும்பிட்டு புறப்படுகிறார்.
இன்னிசை நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற அனைவரும் என்ன முதல்வர் எம்ஜிஆர் அவர்கள் உங்களுக்கு குறிப்பு தந்தார் என்று அவரை குடைந்து கேள்விகள் எழுப்ப.
நானே இன்னும் படிக்கவில்லை என்று பதில் அளிக்க வீட்டுக்கு வந்து அதை படிக்கும் போது அதில்.
தம்பி என்னை மன்னித்து கொள்ளுங்கள்..உங்கள் இசை மழையில் இருந்து பிரிந்து செல்லும் நேரம் வந்து விட்டது...
எனது இளமை கால நண்பர் கே.ஏ. தங்கவேலு நடிகர் அவர்கள் மகள் திருமண நிகழ்விலும் கலந்து கொள்ள வேண்டி இருப்பதால் விடை பெறுகிறேன் உங்கள் இடம் இருந்து.
உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது என்னை வந்து எப்பவும் சந்திக்கலாம் என்று எழுதி இருந்த குறிப்பை படித்து பெரும் மகிழ்ச்சி கொள்கிறார் அந்த நபர்...
4 முறைக்கு மேலாக அவரின் இன்னிசை நிகழ்வை முழுவதும் இருந்த ரசித்த தலைவர் அவரை தன் கட்சியில் சேர சொல்லி அழைத்தும் அந்த வாய்ப்பை தவற விட்ட அவர்..
தலைவர் அமெரிக்க சிகிச்சை முடிந்து தலைவர் வீட்டுக்கு சென்று தன் 8 வயது மகன்...மனைவி உடன் பார்க்க சென்ற போதும் தலைவர் அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்று என்னை நீங்கள் சரியாக பயன் படுத்தி கொள்ள வில்லை...
பரவாயில்லை...உங்கள் எதிர்காலம் சிறந்து விளங்க வாழ்த்துக்கள் என்று சொல்லி வழக்கம் போல தலைவர் பாணியில் வழி அனுப்பி வைக்கிறார்.
இசை தம்பதியர் இருவரும் அழ ஆரம்பிக்க எட்டு வயது மகன் ஏன்பா அழுகுறீர்கள் என்று அவனும் கண்ணீர் விட துவங்க....
என்ன ஒரு பெருந்தன்மை..நம் இதய தெய்வத்துக்கு என்று எண்ணிய படி கலங்கிய கண்கள் உடன் வீடு நோக்கி திரும்ப தன் காரை நோக்கி நடந்த அந்த.
அவர் பிரபல பாடகர் ஏ.வி ரமணன்...மற்றும் அவர் மனைவி உமா ரமணன் மற்றும் அவர் மகன் விக்னேஷ் ரமணன் ஆவர்.
எல்லோர் இடத்திலும் ஒரே மாதிரி பழக நம் தங்கதலைவர் அவர்களால் மட்டுமே முடியும் என்பதற்க்கு இது போல சான்றுகள் என்றும் தொடரும்.
உங்களில் ஒருவன்.
நன்றி..பதிவின் படத்தில் தலைவர் அருகில் அவர்கள் படம் உள்ளது...நன்றி...........nmi
-
எம்.ஜி.ஆர் இரசிகர்களே, தொண்டர்களே, விசுவாசிகளே, பக்தர்களே...
ஊழல் செய்யாத முதல்வர்; சிறைக்கு செல்லாத முதல்வர்; தன் சொத்துக்களை எல்லாம் மக்களுக்கு கொடுத்த ஒரே முதல்வர்; தொடர்ந்து மூன்று முறை நாடாண்ட ஒரே முதல்வர்; பாரத ரத்னா விருது வாங்கிய ஒரே திராவிடத் தலைவர்; அ.தி.மு.க.வின் நிறுவனர்; இரட்டை இலை நாயகர்...
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரைக் காணவில்லை... கடுமையாக கண்டிக்கின்றோம்...
பாரத ரத்னா விருது வாங்கியவரும் கழக நிறுவனருமான எம்.ஜி.ஆரை இவ்வளவு சிறிதாகப் போட இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது...?
மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்கள் இவர்களுக்கா உங்கள் ஓட்டு...?...
-
போற்றத் தகுந்த ஜானகி அம்மாள்!
திருமதி.வி.என்.ஜானகி சிறந்த கலைஞானம் உடையவர். அந்தக் காலத்தில் முக்கியக் கதாநாயகியாகப் பல படங்களில் நடித்துப் புகழ் பெற்றவர். திரு.எம்.ஜி.ஆர். அவர்களை மணந்ததும் நடிப்புத் துறையிலிருந்து விலகிக் கொண்டார்.
இது கடமைப் பண்புக்காக அவர் செய்த தியாகம் என்றால் அது மிகவும் பொருந்தும். கலைத்துறை வாழ்வில் ஈடுபட்டுள்ள நடிகையர்கள், மணமானதும் கலைத் துறையைக் கைவிடுவது என்பது சற்றுக் கடினமான காரியம் தான்.
ஆனால் வி.என்.ஜானகி தனது கணவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்காக எந்தத் தியாகமும் செய்யத் தயங்காதவர். மனைவி என்ற சொல்லுக்கு இலக்கணமாக இருந்தவர். இவர்களின் நன்னெறிக் குடும்பத்தை நேரில் கண்டு அறிந்து பழகும் வாய்ப்புப் பெற்றவனாதலால், நான் அறிந்த உண்மையைத்தான் கூறினேன்.
பொதுவாக கலைஞர்களுக்கு வாழ்க்கைப்படும் பெண்கள் சுயநலம் என்பதை நினைக்க முடியாது. அதிலும் எம்.ஜி.ஆர். அவர்கள் கலைஞர் மட்டுமல்ல, கலையுலகின் மன்னர்.
எந்நேரமும் சுறுசுறுப்பாக பணியாற்றி வரும் தொழிலாளர். அதிகாலையிலிருந்து நள்ளிரவு வரையிலும் சில தினங்களில் படப்பிடிப்பு வேலையில் ஈடுபட்டிருப்பார்.
நள்ளிரவில்தான் இல்லம் வந்து சேர்வார். ஆனால் அப்போதும் அவர் வருகைக்காக விழித்திருந்து வரவேற்பார் ஜானகி அவர்கள். இன்னும் சில சந்தர்ப்பங்களில் எம்.ஜி.ஆர் அவர்கள் சேர்ந்தாற்போல், இரவு பகல் எந்நேரமும் வீட்டுக்கு வர முடியாதவாறு படப்பிடிப்பில் இருப்பதுண்டு!
வெளியூர் காட்சிகளுக்குப் போவதுண்டு. இக்காலத்தில் எல்லாம் தனிமையும் தானுமாய் இருக்கப் பழக்கப்பட்டுவிட்டார் ஜானகி அவர்கள்.
இவ்வாறு லட்சியக் கணவன் மனைவி என்று கூறத்தக்க வகையில் இன்று உயர்ந்த கலைஞர்களின் குடும்ப வாழ்வுக்கு ஓர் இலக்கணமாக இருந்து வந்த இவரை எத்தனை முறை போற்றினாலும் தகும்.
-‘மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்’ என்ற தலைப்பில், எம்.ஜி.ஆருடன் நெருங்கிப் பழகியிருக்கிற வித்வான் வே.லட்சுமணன் எழுதிய நூலிலிருந்து....