http://i49.tinypic.com/22jd2.jpg
Printable View
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் 22வது திரைப்படமாகிய "மந்திரி குமாரி" யில் இடம் பெற்ற பாடல்கள் : (ஒரிரண்டு வரிகள் மட்டும்)
1. தர்பார் நடனப் பாடல் : ஆதவன் உதித்தான் - தாமரை மலர்ந்தது
காதலில் கலந்தது இரண்டும்
2. பெண் குரலில் தனித்த பாடல் ஆஹா ஹா ஹா வாழ்விலே ஓர் ஆனந்தம் - இனி
பெறுவோம் நாமே நாளுமே ஓ - மாரனே
3. பெண் - நடனப் பாடல் இசைக் கலையே - இனி தாமே மேலான
கானத்திலே ஆனந்தம் பெறார் யாரோ ?
4. பெண் குரலில் தனித்த பாடல் : பெண்களினால் உயர்வாகிடுமே - புவி வாழ்வதுலே தானே
வீரர் தம்மை நாட்டினுக்கீந்த விளங்கும் மேன்மையாலே
5. காதல் ஜோடிப் பாடல் உலவும் தென்றல் காற்றினிலே ஓடமிதே
நாம் மகிழ ஊஞ்சலாடுதே - அலைகள் வந்து மோதியே
6. பெண் - நடனப் பாடல் கண்ணடிச்சு யாரை நீயும் கண்ணி வைக்கப் பாக்குறே
கண்ணி வைக்கப் பாக்குறே - என்னையா ஏய்க்கிறே ?
7. குழுப்பாடல் (கோரஸ்) அந்தி சாயுற நேரம் - மந்தாரைச் செடி யோரம்
ஒரு அம்மாவைப் பார்த்து ஐயா - அடிச்சாராம் கண்ணு
அவ சிரிச்சாளாம் பொண்ணு
8. இரு பெண் (தோழியர்) பாடல் : பெறக்கப் போகுது ! - பாரு பொறக்கப் போகுது
என்ன ? எங்கே ? யாருக்கு பொறக்கப் போகுது
9. பெண் குரலில் தனித்த பாடல் : எண்ணும் பொழுதில் இன்பம் - பெருகி என் உள்ளம்
மகிழலானேன் - மாவீரர் பணியும் ஜெயதீரா
10. குழு - நடனப் பாடல் : ஓ ராஜா .............. ஒ ராணி ...........மிக ஏழை எளிய
எங்க மனசு குளிர இந்த குடிசை வழியே வாங்க
11. மாட்டுக்கார பையன் பாடல் : ஊருக்கு உழைப்பவனடி - ஒரு குற்றம் அறியானடி (தொகையறா)
நல்லதுக்கு காலமில்லே - நடப்பதெல்லாம் வெளிப்பகட்டு (பாட்டு)
எருமைக் கண்ணுக்குட்டி -என் எருமை கண்ணுக்குட்டி
12. இரு பெண் (தோழியர்) பாடல் : மனம்போல் - வாழ்வு பெறுவோமே ! இணைந்தே கேசமுடன் எந்நாளும்
நாம் - மகிழ்வோம் மெய்யன்பாலே - என்னுயிர் காதலன் குணமே - மாறி
13. காதல் ஜோடிப் பாடல் : வாராய் நீ வாராய் - போகுமிடம் வெகு தூரமில்லை - நீ வாராய்
ஆஹா ! மாருதம் வீசுவதாலே - ஆனந்தம் பொங்குதே மனதிலே!
14. உழவன் பாடும் பாடல் : உபகாரம் செய்தவர்க்கே அபகாரம் செய்ய எண்ணும் (தொகையறா)
அன்னம் இட்ட வீட்டிலே கன்னக்கோல் சாத்தவே
15. பெண் குரலில் தனித்த பாடல் : காதல் பலியாகி நீயும் தியாகத்தின் சின்னமாய் - நாட்டினர்
நெஞ்சிலே ஓவியமே ஆகினாய் !
. ================================================== ==================================================
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்
http://i45.tinypic.com/zyfxpf.jpg
மக்கள் திலகம் மற்றும் வில்லன் எஸ்.ஏ.நடராஜன் மந்திரிகுமாரி படத்தில்
மந்திரி குமாரி படத்தில் மட்டுமல்ல கூண்டுக்கிளி, மகாதேவி உள்ளிட்ட வேறு சில படங்களிலும் வில்லன் கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கும். (காட்சிகளின் எண்ணிக்கை அடிப்படையில்) , பின்னாளில் ரசிகர்களின் எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்ட எம்.ஜி.ஆரும், அவரது தயாரிப்பாளர்களும் எல்லா காட்சிகளிலும் மக்கள் திலகம் வருமாறு பார்த்துக் கொண்டார்கள்.மந்திரி குமாரி படத்தின் வசனங்களிலும் அதே நிலைதான். வசனங்கள் பல இடங்களில் செயற்கையாக இருக்கும். இக்குறைகளை பின்னாளில் கண்ணதாசனைக் கொண்டு ஈடு செய்தார் மக்கள் திலகம்.
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் 23வது திரைப்படம் " மர்மயோகி " படத்தொகுப்பு
--------------------------------------------------------------------------------------------------------------------
1. இத்திரைப்படம் வெளியான தேதி : 02-02-1951
2. தயாரிப்பு : ஜுபிடர் சோமசுந்தரம்
3. இயக்குனர் : கே ராம்நாத்
4. மக்கள் திலகத்தின் கதாபாத்திரம் : கரிகாலன்
5. பாடல்கள் : கண்ணதாசன், கே. டி. சந்தானம்
6. கதை, வசனம் : ஏ. எஸ் ஏ. சாமி
8. இசை : சி ஆர் சுப்பராமன் - எஸ். எம் சுப்பையா நாயுடு
9. கதாநாயகன் மற்றும் நாயகி : மக்கள் திலகம் எம். ஜி. ஆர் - மாதுரி தேவி
10.. இதர நடிக நடிகையர் : எம். என் நம்பியார், எஸ்.ஏ. நடராஜன், எஸ். வி சகஸ்ரநாமம், செருகளத்தூர் சாமா
மாதுரி தேவி, அஞ்சலி தேவி, எம். பண்டரிபாய், எம். எஸ் எஸ். பாக்கியம்
இப்படத்தின் கதைச்சுருக்கம் மற்றும் பாடல்கள் தொடர்கிறது. -------------------------------------------------------------------------------------------
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் 23வது திரைப்படம் " மர்மயோகி " யிலிருந்து நமது மக்கள் திலகத்தின் கம்பீரமான தோற்றம் :
http://i47.tinypic.com/5fkpeg.jpg
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் 23வது திரைப்படம் " மர்மயோகி " கதை சுருக்கம் :
நாட்டின் மன்னருக்கு நல முத்துக்கள் போல் இரு ஆண் குழந்தைகள். அரசிலங்குமாரரின் அறிவரியாப் பருவத்திலேயே, அவர்களை ஈன்ற தாய் இறந்து விடுகிறாள். இதை அறிந்த அயல் நாட்டு அரசியல் சூதாடி ஒருவன் .... அவன் பெயர் பைசாச்சி .... நாடோடி நடன மாது ஒருத்திக்கு பேராசை போதை ஏற்றி, ஒரு சதிக்கு அவளை உடந்தை யாக்குகிறான். அரசரை மயக்கி, அவர் உள்ளத்திலே புகுந்து, மனைவி ஸ்தானத்தை கைப்பற்றி, முடிவில் அரீயாசனத்தையே, அபகரிப்பதென்பது அவர்கள் சதி திட்டம்.
அவர்கள் வைத்த குறி தவறவில்லை, வகுத்த வழி பிசக வில்லை. ஊர்வசி என்று அரண்மனை அளித்த பட்டத்துடன் அந்த நாடோடி, மன்னனை மயக்கினாள் .
அடிக்கடி எதிர்ப்புத் தந்து வந்த மன்னரின் மைத்துனர் புருசோத்தமனை நாடு கடத்த ஏற்பாடு செய்தாள். அரசர் அவள் ஊதிய மகுடிக்கு மெய் மறந்த பாம்பாக ஆடிக் கொண்டிருந்த ஒரு நாள் இரவு பொற்தடாகம் அழைத்துப் போய் பண்பாடிக் கொண்டே பாசக் கயிறை வீசி விட்டாள். அரசர் அறிவு மயங்கியிருந்த சமயம் --- அவளும் பைசாச்சியுமாக அவரைத் தூக்கி நீரில் எறிந்து விட்டனர்.
கணவனை இழந்து கதறித் துடிப்பது போல் நாட்டு மக்களுக்கு நாடகமாடிக் காட்டினாள் . கண்ணிலே போலி நீர் நிறைந்து நின்ற அதே வேளையில், மனதிலே அடுத்த அழிவுத் திட்டம் தாண்டவமாடிக் கொண்டிருந்தது. அந்தத் திட்டத்தின் படி அன்றிரவு, அரசகுமாரரின் விடுதி தீயால் பொசுக்கப்பட்டது. "இனி மன்னர் குலத்துக்கு வழித் தோன்றல் இல்லை " என்று இறுமாப்புக் கொண்டார்கள். பைசாச்சியைப் பொறுத்த வரையில் அது அற்ப ஆனந்தமாகி விட்டது. ஏகபோக ஆட்சி வெறி தலைக்கேறியிருந்ததால் பைசாச்சியின் உயிரும் அவள் அரசியல் கொலைக்கு பலியாயிற்று.
"மன்னர் மடிந்தார் .... மனம் போல் வாழ்வு ..... மணிமுடி தரித்த மகாராணி " என்று ஊர்வசி அக மகிழ்ந்தாள்.
ஆனால்,
அவள் அறியாமல் அரசிலங்குமாரர்கள் உயிர் பிழைத்தனர். மர்மயோகி என்பாரிடம் அக்குழந்தைகள் சேர்ந்தன. மூத்த குமரனை கானகத்திலே வசித்து வந்த ஒரு கூட்டத்தினரிடம் ஒப்படைத்தார். கரிகாலன் என்ற பெர்யரிலே அங்கு அவன் வளர்ந்தான். இளையவன் வீராங்கனுக்கு படை பயிற்சிகள் போதித்து வந்தார்.
மன்னர் இறந்தபின் பெண் ஆட்சிக்கு சரியான ஆலோசகர் இல்லாத காரணத்தினால் மக்களின் கிளர்ச்சிகள் அவ்வப்போது ஏற்படவே, மர்மயோகியே அரசியின் அந்தரங்க ஆலோசகராக அரண்மனையிலே இடம் பெற்றுக் கொள்ளுகிறார். தன்னுடன் வீராங்கனையும் அழைத்து வந்து அரண்மனையிலே தளபதியாக நியமனம் செய்கிறார். மர்மயோகியுடன் மற்றொரு பெண் ...... அவருடைய புதல்வி காலவதியும் ... உடனிருக்கிறாள்.
எங்கிருந்தோ வந்தவளுக்கு ஏக போக ஆட்சி ! அதிகாரம் அவளுக்கு விளையாட்டுக் கருவி ஆகி விட்டது. கண்மண் தெரியாத ஆட்சியிலே மக்கள் அலறினார்கள்.... துடித்தார்கள்..... துவண்டார்கள்.
கரிகாலனின் கானக கூட்டம் அரசியின் எதிர்ப்புக் கட்சியாக மாறி ஊர்வசிக்கு இடைவிடா தொல்லையும், துயரமும் தர ஆரம்பித்தது. இதை அடக்க ராணி, வீராங்கனை ஏவினாள். ஒவ்வொரு முறையும் அரண்மனை சேனை அடைந்தது அவமானமும், தோல்வியும் தான். வீரன் வீராங்கனுக்கு இது ஆத்திரத்தை தூண்டியது. மனம் கொந்தளித்தது. "கரிகாலன் ஒழிப்பு" அவனுக்கு வாழ்க்கை விரதமாகிவிட்டது.
வீராங்கன் ஆத்திரத்தை இன்னும் அதிகமாகக் கிளறி விட்டது மற்றொரு சம்பவம். தளபதியார் அடுத்தடுத்து தோல்விகள் அடைந்தததால் ... வாள் கொண்டு சாதிக்க முடியாததை வனிதை கொண்டு சாதிக்கத் திட்டம் தீட்டினாள் ஊர்வசி. அவள் செய்ததும் அதுதானே ?
கலாவதி ராஜபக்தி மிகுந்த மர்மயோகி, வீராங்கன் குலத்திலே உதித்தவள் என்ற காரணங்கொண்டு ஊர்வசி அவளை அனுப்புகிறாள். கரிகாலனை சாகச வலையில் சிக்க வைத்து பின் சர்க்காரின் கைதியாகிவிட. கலாவதியும் போகிறாள். தந்தையின் ஆசியுடன் .... மிகுந்த ஆர்வத்துடன்... ஆனால் நடந்தது வேறு. கலாவதி கரிகாலனின் ஆளாக மட்டும் மாறி விட வில்லை. ... அவனுடைய காதலியுமாகிவிட்டாள்.
இதுதான் வீராங்கனுக்கு அதிக ஆத்திரமும், ரோஷமும் உண்டாக்கியது. கரிகாலனை பிடிக்கும் அவனுடைய முயற்சிகளை இன்னும் ஊக்கத்துடன் செய்தான். முயற்சி பலன் தந்தது. எல்லோரும் கைதிகளானார்கள். ஆம். எல்லோரும் .... மகான் மர்மயோகி உட்பட. கரிகாலனை பிடிக்க கங்கணம் கட்டி வேலை செய்தபோது வீராங்கன் பெரிய ரகசியம் ஒன்றை கண்டறிந்தான்.. மர்மயோகி .... தன சொந்த தந்தை .... அரசாங்கத்துக்கு ஆலோசகரைப் போல நடித்து, உண்மையில் கரிகாலனுக்கு ஐந்தாம் படை வேலை செய்தாரென்று. கடமை வீரன், தந்தை என்றும் பார்க்கவில்லை, அவரையும் தண்டனைக்கு ஆளாக்கினான்.
ஊர்வசியின் ஆட்சியை எதிரத்த எல்லோரும் ஏக காலத்தில் மரண தண்டனை தாங்கி கொலைக்களம் நிற்கிறார்கள். அந்த வேளை, எவரும் எதிரபாராத விதமாக, எல்லோரையும் திடுக்கிடச் செய்யும் விதமாக, அங்கே மாண்டு போன மன்னரே தோன்றுகிறார். அதாவது கதை முடிந்தது என்று அர்த்தம்,.
================================================== =============================================
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்
எனக்கு பிடித்த தலைவரின் மிக சிறந்த படங்களில் இதுவும் ஒன்று. முதன் முதலாக தலைவருக்காக உருவான ஒரு வரி வசனங்கள் மர்ம யோகி படத்திலிருந்து தான் ஆரம்பித்தது. கரிகாலன் குறி வைத்தால் தவற மாட்டான் தவறுமாயின் குறி வைக்கமாட்டான்.
கரிகாலன் ராணியை அவருடைய தர்பாரில் சந்திக்கும் அந்த காட்சி பிற்காலத்தில் படையப்பா படத்தில் கதைக்கு ஏற்றார் போல் கொஞ்சம் மாற்றி எடுக்கப்பட்டது.
மறக்க முடியாத படங்களில் ஒன்று. தலைவர் ஒரு தலைசிறந்த சண்டை நடிகர் என்று நிருபித்த படம்.
http://i125.photobucket.com/albums/p...ps63c9cd6f.png