சரி! 'இன்றைய ஸ்பெஷலை' இன்னும் பதிவு செய்யவில்லை. ரெடி பண்ண நேரம் எடுத்து விட்டது. போட்டு விட்டு ஆபீசுக்கு கிளம்புகிறேன்.
Printable View
சரி! 'இன்றைய ஸ்பெஷலை' இன்னும் பதிவு செய்யவில்லை. ரெடி பண்ண நேரம் எடுத்து விட்டது. போட்டு விட்டு ஆபீசுக்கு கிளம்புகிறேன்.
இன்றைய ஸ்பெஷல்(6)
இன்றைய ஸ்பெஷலாக வருவது ஒரு மிக மிக மிக அபூர்வ பாடல்.
http://4.bp.blogspot.com/-U7SacxKlPP...am%2B1981.jpeg
1981-இல் வெளிவந்த 'மகரந்தம்' திரைப்படத்தின் மறக்கமுடியாத நம் ஊடகங்களால் மறக்கடிக்கப்பட்ட பாடல். (சிலோனைத் தவிர)
https://i.ytimg.com/vi/vqKNR8kF6qo/mqdefault.jpg
'இயக்குனர் திலகம்' பார்மிலிருந்து முற்றிலுமாக நழுவிய நேரத்தில் இயக்கிய படம் இது.
ராதிகா, அருணா ,மோகன்ராம் ஆகியோர் நடித்திருந்த இப்படத்திற்கு இசை இரட்டையர்கள் சங்கர் கணேஷ்.
சங்கர் கணேஷ் இரட்டையர்களை லேசில் எடை போட்டு விட முடியாது. சமயத்தில் மெல்லிசை மன்னரையே அவர்கள் சமயத்தில் விஞ்ச முயன்று அதில் வெற்றியும் சில சமயம் அவர்கள் கொள்வதுண்டு.
இளையராஜா மண் மணமுள்ள கிராமத்துப் பாடல்களில் அப்போது தூள் கிளப்பிக் கொண்டிருந்தபோது 'கன்னிப்பருவத்திலே' படத்தில் சங்கர் கணேஷ் விஸ்வரூபம் எடுத்தார்கள் மெல்லிசை மன்னர் 'நினைத்தாலே இனிக்கும்' திரைப்படத்தில் எடுத்தது போல.
இரட்டையர்களின் இசையமைப்பில் அவள், வெள்ளிகிழமை விரதம், இதயவீணை, நட்சத்திரம், ஒரு பாடலாக இருந்தாலும் இளையராஜாவிற்கு கொஞ்சமும் குறையாத பாடலை ('நானொரு பொன்னோவியம் கண்டேன்') இவர்கள் கொடுத்த 'கண்ணில் தெரியும் கதைகள்' ('நான் ஒன்ன நெனச்சேன்'...வாலிபக் கவிஞரின் வைர வரிகளுக்கு ) என்று எத்தனையோ படங்களைச் சொல்லலாம். (இதில் இன்னொரு வேதனை. இணையத்தில் இப்பாடலை இளையராஜா இசை அமைத்ததாக சிலர் தவறான தகவல்களைத் தந்து கொண்டிருக்கிறார்கள்)
அதில் குறிப்பிடத்தகுந்தவற்றில் ஒன்று 'மகரந்தம்'.
http://comborice.com/wp-content/uplo...12/03/play.jpg
நம் பாலாவை வெகு அற்புதமாக இப்படத்தில் இவர்கள் பாட வைத்திருப்பார்கள். இரட்டையர்களுக்கு இன்னொரு விசேஷம் என்னவென்றால் சுசீலாவையும், பாலாவையும் இணைந்து இவர்கள் பாட வைத்தார்கள் என்றால் உற்சாகத் துள்ளல் அற்புதமாக களைகட்டும்.
அப்படி ஒரு பாடல்தான் இது.
நீயின்றி நானோ
நானின்றி நீயோ
நிலவின்றி வானோ
இதை நினைவில் கொள்ளாயோ
ஏனிந்தக் கோபம்
இதிலென்ன லாபம்
ஏனிந்தக் கோபம்
இதிலென்ன லாபம்
என் காதல் கீதம் எந்நாளும் நீயன்றோ
வானவில் ஏழு வண்ணக் காட்சியன்றோ
காதலோ கோடி மலராமன்றோ
காட்சியின் சாட்சி மனம்தான் அன்றோ
வானவில் ஏழு வண்ணக் காட்சியன்றோ
வாடாத மேனி (பாலாவின் கொள்ளை சிரிப்பு)
சூடான ராணி
பாடாத தேனீ
பெண் பாவை நீயன்றோ
பாடாத ராகம்
போடாத தாளம்
பாடாத ராகம்
போடாத தாளம்
ஆடாத தீபம்
என் தெய்வம் நீயன்றோ
வானவில் ஏழு வண்ணக் காட்சியன்றோ
காதலோ கோடி மலராமன்றோ
காட்சியின் சாட்சி மனம்தான் அன்றோ
வானவில் ஏழு வண்ணக் காட்சியன்றோ
விரும்பாத எண்ணம்
திரும்பாத வண்ணம்
விரும்பாத எண்ணம்
திரும்பாத வண்ணம்
அரும்பான முல்லை
குறுநகையும் சிந்தாதோ
அரும்பாக மின்னும்
குறும்பான எண்ணம்
அரும்பாக மின்னும்
குறும்பான எண்ணம்
கரும்பாகும் வண்ணம்
கண் பார்வை சொல்லாதோ
வானவில் ஏழு வண்ணக் காட்சியன்றோ
காதலோ கோடி மலராமன்றோ
காட்சியின் சாட்சி மனம்தான் அன்றோ
வானவில் ஏழு வண்ணக் காட்சியன்றோ
வானவில் ஏழு வண்ணக் காட்சியன்றோ
இந்தப் பாடலை பாலாவும் சுசீலாம்மாவும் உச்சரிக்கும் அழகு இருக்கிறதே! நம் சொத்துக்கள் அத்தனையையும் எழுதிக் கொடுத்து விடலாம். என்ன ஒரு தெளிவு! என்ன ஒரு உச்சரிப்பு!
'பாடாத ராகம்.... போடாத தாளம்'... வரிகளை என்று இரண்டாம் முறை உச்சரிக்கையில் பாலா 'போடாத தா..ஆஆஆ ...ளம்' என்று உச்சரிப்பதை எத்தனை முறை கேட்டேனோ தெரியாது. கண்ணியப் பாடகியும் அப்படியே.
அதே போல இரட்டையர்கள் அற்புதமான பின்னிசை அளித்திருப்பார்கள். பாடலின் வரிகள் தெள்ளத் தெளிவாக காதில் தேனருவியாய் வந்து கொட்டும்.
ஒரு சில பாடல்கள் இப்படி மிக மிக அபூர்வமாய் பாடகர்களுக்கும் இசையமைப்பாளர்களுக்கும் அமைந்து விடும்.
நம் வாழ்நாள் முழுதும் இத்தகைய பாடல்களுக்கு நம்மை அடிமை ஆக்கிவிடும்
எத்தனையோ அற்புத பாடல்கள் நினைவுக்கு வந்தும், வராமலும் இருக்கின்றன.
ஆனால் இந்தப் பாடல் தமிழ்ப்பட பாடல்களின் என்னுடைய டாப் 10 பட்டியலில் எப்போதோ இடம் பிடித்து விட்டது.
ஆனால் யாருடனும் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. (இப்படத்தில் பாலாவின் இன்னொரு அருமையான பாடல் உள்ளது. அதற்கு அப்புறம் வருகிறேன்)
அன்பு ராகவேந்திரன் சாருடன் நேற்று செல்லில் பேசிய போது நாளை இந்தப் பாடலை 'இன்றைய ஸ்பெஷலா' கப் போடலாமா சார்?' என்றதற்கு (இத்தனைக்கும் படத்தின் பெயரை மாத்திரமே அவரிடம் சொன்னேன். பாடலை சஸ்பென்சாக வைத்தேன்) ஆனால் அவரோ எமகாதகர். (செல்லமாக) அரை நொடியில் பாடலின் வரிகளை கொஞ்சமும் யோசிக்காமல் சொல்லி என்னை மிரள வைத்தார்.
அப்போதுதான் புரிந்தது இப்பாடலை நம்மைப் போலவே ரசிக்க நிறையப் பேர் இருக்கிறார்கள் என்று.
இப்பாடல் வெளிச்சத்திற்கு வந்து அனைவர் உதடுகளும் இப்பாடலை உச்சரிக்க வேண்டும் என்று தணியாத தாகம் எனக்கு.
இந்தப் பாடலைக் கேட்டுவிட்டு நிச்சயம் இந்தப் பாடலின் சிறப்பை நண்பர்கள் அனைவரும் பதிய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
மிகுந்த மன சந்தோஷத்தோடு நான் உணர்வுபூர்வமாய் அளிக்கும், எக்காலத்திலும் அழியாப் புகழ் பெறப் போகும், என் உள்ளமெல்லாம் கொள்ளை கொண்ட 'நீயின்றி நானோ பாடல் இதோ'!
http://www.youtube.com/watch?feature...&v=9eUCXCevRNo
Nice vasu sir..இன்றைய ஸ்பெஷல்..ஆனால் நான்கேட்டதில்லை..வீடுசென்றுகேட்டுச் சொல்லுகிறேன்..:)
அந்த புகைப்படக் காரி யார்.. சுகுமாரியின் சாயல் தெரிகிறது..
வாசு சார்
இந்த பாட்டும் சிலோன் ரேடியோவில் பிரபலமான பாடல் நீங்க சொன்ன மாதிரி
ஏன் இந்த கோபம் யாருக்கு லாபம்
சுசீலாவின் உச்சரிப்பை கவனியுங்கள்
கதாநாயகி அருணா தெரிகிறது
நாயகன் மோகன்ராம் இவர் என்ன ஆனார் பிறகு
rare gem of பாலா
நீங்க சொன்ன மற்றும் ஒரு பாலா பாடல்
"கடலில் அலைகள் பொங்கும் ஆனால் கரையை தாண்டுமோ " சரியா
மகரந்தம் பாலாவின் பாடல் கேட்கும் போது ஒரு நினவு
அர்த்தமுள்ள ஆசைகள் என்று ஒரு படம்
இதன் இசை சங்கர் கணேஷ் ஆ அல்லது கங்கை அமரன் ஆ என்று
ஒரு debate எப்போதும் உண்டு
"கடலோடு நதிக்கு என்ன கோபம்
காதல் கவி பாட விழிக்கென்ன நாணம்
இளம் காற்று தீண்டாத சோலை
மண்ணில் எங்கேயும் பார்த்தாயோ என் தோட்ட பூவே "
முதல் சரணம்
நீல வான மேகம் போல் காதல் வேனில் தவழுகிறேன்
நீரிலாடும் பூவை போல ஆசை நெஞ்சம் மயங்குகிறேன்
ஓடை மீனே ஜாடை பேசு
வனிதாமணி வனமோகினி புதுமாங்கனி சுவையே தனி
புதுவெள்ளம் போலே வாராய்
இந்த சரணத்தில் பாலாவின் குரலை கேட்டு பாருங்கள்
அந்த எழுத்து "நீ" அவர் வாயில் சிக்கி கொண்டு சிரித்து கொண்டு இருப்பதை
அதிலும் இறுதியில் வாராய் என்று முடிக்கும்போது
அதே போல் ஆரம்பத்தில் சோலை என்று ஒரு இழு இழு இழுப்பார்
அடுத்த சரணம் கேளுங்கள்
"மோக வீணை என்று உன்னை நானும் மீட்டி பாடிடவா
பாரிஜாத மாலை போல மார்பில் உன்னை சூடிடவா
தோகை நீயே மேடை நானே
மதன் வீசிடும் கணை பாயுது
மலர் மேனியும் கொதிப்பாகுது
குளிர் ஓடை நீயே வா வா "
கடலோடு நதிக்கு என்ன கோபம்
காதல் கவி பாட விழிக்கென்ன நாணம்
இளம் காற்று தீண்டாத சோலை
மண்ணில் எங்கேயும் பார்த்தாயோ என் தோட்ட பூவே
//வனிதாமணி வனமோகினி// எனக்கு விக்ரம் தான் நினைவில்.. வனிதாமணி வனமோகினி பண்பாடு..உன்கண்களோ திக்கிதிக்கிப் பேசுதடி என் நெஞ்சிலே தக்க திமி தாளமடி ..பாலாதானில்லை..
கடலோடு நதிக்கென்ன கோபமும் நல்ல பாட்டு..
டியர் வாசுதேவன் சார்,
மகரந்தம் படத்தில் இடம்பெற்ற 'நீயின்றி நானோ' பாடலை இப்போதுதான் பார்க்கிறேன். இதற்கு முன் கேட்டதில்லை / பார்த்ததில்லை அதற்கு நான் பொறுப்பல்ல. நமது டி.வி.சேனல்கள்தான் பொறுப்பு.
பிறகென்ன?. பொழுதன்னைக்கும் பழைய பாடல்களை ஒளிபரப்புகிறோம் என்று சொல்லிக்கொண்டு ஒரு இருபது, இருபத்தைந்து பாடல்களையே ஒளிபரப்பிக் கொண்டிருந்தால் இது போன்ற காணக்கிடைக்காத அபூர்வங்களை காண்பது / கேட்பது எப்படி?.
இன்றைய ஸ்பெஷல் என்ற தலைப்புக்கேற்ற அருமையான பாடல். காணச்செய்ததற்கு மிக்க நன்றி வாசு சார்....., ஜமாய்ங்க.
கார்த்திக் சார்
தரையில் வாழும் மீன்கள் பாடல் அனைத்துமே ஹிட்
சந்திர போஸ் ஆரம்ப கால பாடல்கள்
இசைஅமைப்பாளர் தேவா ஒரு பேட்டியில் "நானும் சந்திர போஸ்ம் இணைத்து தான் வேலை செய்து கொண்டு இருந்தோம். சந்திர போசெக்கு சான்ஸ் கிடைச்ச உடன் என்னை கழட்டி விட்டு விட்டார் " என்று கூறி இருந்தார்
1980-82 கால கட்டங்களில் முண்டக்கண்ணி அம்மன் கோயில் திருவிழா நாட்களில் தேவா சந்திரபோஸ் மேடை கச்சேரி கேட்ட நினைவு உண்டு
இந்த சந்திர போஸ் தானே விச்சுவின் இசையில் "ஏண்டி முத்தம்மா "
என்று ஆறு புஷ்பங்கள் படத்தில் பாடினார்