http://i1302.photobucket.com/albums/...2-12-10_28.png
Printable View
http://i1065.photobucket.com/albums/...psovngj6ct.jpg
Pasamalar vetrivizha
சமமான எதிரி என்றால், இருவரும் ஜெயிக்க சம வாய்ப்புள்ளது என்று அர்த்தம். எனக்கு தெரிந்து சிலரின் படங்களில் அது நிகழ்ந்ததேயில்லை. இருபது முப்பது சம பலமுள்ள எதிரிகளை ஒரே நேரத்தில் சமாளிப்பது..... புலிகேசியின் காமெடி.
நாங்கள் சம பலமுள்ள எதிரியை தேடி எங்கு போக? எங்களுக்கு இணையே இல்லையே? ஏதோ ஜாலிக்காக , படு சுமாரான எதிரியுடன் மோதியே காலம் தள்ளுகின்றோம்.
என்னைத்தை சொல்ல?
கலை வேந்தன்,
மதுர கானம் திரியில் ,பெரியாரின் கருத்தை ஒத்த ,"இப்படித்தான் இருக்க வேணும் பொம்பளை" போன்ற கருத்துள்ள கானங்களை ஆராயலாமே?
11-03-1972 - ஞான ஒளி
1972 - தமிழ் திரையுலகில் அனைவரையும் நடிகர் திலகம் மீண்டும் ஒரு முறை திரும்பி பார்க்க வைத்த வருடம். நடிகர் திலகத்திற்கு மட்டும் மீண்டும் மீண்டும் அமையும் சாதனை வருடங்கள் தமக்கு அமைந்தால் இதுபோல ஒருமுறையாவது அமையாதா என்று நடிகர்களை ஏங்க வைத்த வருடம்.
நடிகர் திலகத்தின் ஸ்டைல் காவியம் "ராஜா" ஜனவரியில் ஏற்படுத்திய வசூல் பிரளயம் சற்று அடங்குவதற்குள் மீண்டும் 11-03-1972 நடிகர் திலகத்தின் மற்றொரு முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரம் "அண்டொனி" யாக வாழ்ந்த "ஞான ஒளி".
ஞானஒளி சாதனை சாதனைகளின் மற்றொரு பிம்பமாக வளர்ந்தது. மசாலா காட்சிகளான அடிதடி, கவர்ச்சியான நாயகியர் இப்படி எதுவுமே இல்லாமல் வெளிவந்த ஒரு மாபெரும் வசூல் காவியம் ஞானஒளி.
http://i501.photobucket.com/albums/e...pszd57fwbu.jpg
1. சென்னையில் 7 திரை அரங்கில் வெளியீடு என விளம்பரம் செய்து பிறகு , எத்துனை திரையரங்குகளில் வெளியிடவேண்டும் என்று ரசிகர்களிடம் தபால் ஓட்டெடுப்பு நடத்தி அதன் மூலம் 4 அரங்கில் வெளிவந்த முதல் திரைப்படம் ஞானஒளி.
http://i501.photobucket.com/albums/e...psh6q2fsge.jpg
2. முன்பதிவு தொடங்கிய ஒரு மணிநேரத்தில் பிளாச, பிராட்வே, சயானி மற்றும் கமலா திரை அரங்கில் ஒரு வாரத்திற்கான அனைத்து டிக்கெட்டுகள் விற்று, அதனால் பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஐந்தாவதாக தமிழ்நாடு திரை அரங்கிலும் அதாவது முதன்முதலாக ஐந்து திரை அரங்குகளில் வெளிவந்த கருப்பு வெள்ளை திரைப்படம் "ஞானஒளி"
http://i501.photobucket.com/albums/e...pshtqlnc82.jpg
3. வசூல் பிரளயம் கண்ட ஸ்டைல் காவியம் ராஜா வெளிவந்து வெறும் 43 நாட்கள் மட்டுமே இடைவெளி என்ற நிலையில் வெளிவந்த காவியம் வெளிவந்ததோடு இல்லாமல் 1000 வெற்றிகாட்சிகள் கண்ட சாதனை நாயகரின் ஞானஒளி.
http://i501.photobucket.com/albums/e...pspzknrjuq.jpg
4. சென்னை பிளாசா திரை அரங்கு திறந்ததுமுதல் ஞானஒளி வெளிவந்ததுவரை அதாவது 25 வருட சரித்திரத்தில் அதற்க்கு முன்பு வெளிவந்த நடிகர் திலகம் படங்கள் உட்பட அனைத்து நடிகர்களின் படங்களின் அரங்கு நிறைந்த காட்சிகளை விட அதிக காட்சிகள் அரங்கு நிறைவு கண்ட படம் ஞானஒளி.
http://i501.photobucket.com/albums/e...psb0elcxbn.jpg
5. சென்னையையும் அதனை சுற்றியுள்ள இடங்களிலும் நடிகர் திலகம் அவர்களின் சுமார் 20 படங்கள் மேல் (ராஜா உட்பட) அதாவது 80% திரை அரங்குகளில் நடிகர் திலகம் படங்கள் ஓடிகொண்டிருந்த நிலையிலும் ஞான ஒளி, நடைபெற்ற 140 காட்சிகளில் 136 காட்சிகள் தொடர்ந்து அரங்குநிறைவு (HOUSEFULL ) கண்ட படம் நடிகர் திலகத்தின் ஞானஒளி.
http://i501.photobucket.com/albums/e...pseowlcgim.jpg
செலுலாய்ட் சோழன்
(From Mr.Sudhangan's Facebook)
`பார்த்தால் பசி தீரும்’ இது சிவாஜி ` பா’ வரிசையில் மிக முக்கியமான படம்!
இந்த படத்தை தயாரித்தது ஏவி.எம்.!
இந்த படத்திற்கு கதை ஒரு பிரபல இயக்குனர்!
இயக்கியது இன்னொரு பிரபல இயக்குனர்!
கதை எழுதியவர் பிரபல இயக்குனர் ஏ.சி.திருலோக்சந்தர்!
இயக்கியவர் ஏ. பீம்சிங்!
இது எப்படி நிகழ்ந்தது!
விஜயபுரி வீரன் படம் தான் ஏ.சி. திருலோக்சந்தர் இயக்கிய முதல் படம்! அதை தயாரித்தவர் ஜெய்சங்கர் அறிமுகமான ` இரவும் பகலும்’ படத்தை தயாரித்த ஜோஸப் தளியத்! விஜயபுரி வீரன் படத்தின் கதாநாயகன் ஆனந்தன் (டிஸ்கோ சாந்தியின் அப்பா ) இந்தப் படம் வெற்றியடைந்தது!
இந்தப் படத்தை தொடர்ந்து ஏ.சி.திருலோக்சந்தரை அவரது நெருங்கிய நண்பர் நடிகர் அசோகன்! அசோகன், திருலோக்சந்தரை ஒரு நாள் ஏவி.எம் சரவணனிடம் அழைத்துச் சென்றார்! ஒரு நிபந்தனையோடுதான் அசோகன் அழைத்துச் சென்றார். அதாவது, ` விஜயபுரி வீரன்’ மாதிரி ஒரு சரித்திரக் கதையைச் சொல்ல வேண்டும்’ என்றுதான் அழைத்துச் சென்றார். ஆனால் அங்கே போன திருலோக்சந்தர்! முதலில் சொன்னது ஒரு சமூகக் கதை!
அந்த கதை ஏவிஎம் சரவணனுக்கு பிடித்துப் போனது! அடுத்து ஒரு சரித்திரக் கதையை சொன்னார் திருலோக்சந்தர்!
இரண்டு கதைகளுமே ஏவிஎம் சரவணனுக்கு மிகவும் பிடித்திருந்தது! இரண்டு கதைகளையுமே படமாக்க முடிவெடுத்தது ஏவிஎம் நிறுவனம்! முதலில் அவர் சொன்ன சமூக கதைக்கு திருலோக்சந்தர் கொடுத்த தலைப்பு, ` அவள் தந்த வாழ்வு’. அந்த கதைதான் ` பார்த்தால் பசி தீரும்’ படமானது! இயக்கியவர் ஏ. பீம்சிங்!
அடுத்து தயாரான சரித்திர பின்னனியான படம் தான் ஏவி.எம். தயாரித்து, திருலோக்சந்தர் இயக்கிய வெற்றிப் படம் ` வீரத் திருமகன்’ `பாசமலர்’ படத்திற்குப் பிறகு சிவாஜியையும் சாவித்திரியையும் யாருமே ஜோடியாக பார்க்க ஒப்புக்கொள்ளவில்லை! அதே பாணியில் அமைந்த கதைதான் ` பார்த்தால் பசி தீரும்’ படத்தின் கதை!
இந்தப் படத்தில் ஒரு பெரிய நட்சத்திர பட்டாளம்!
சிவாஜி- சரோஜா தேவி ஜோடி! ஜெமினிக்கு சாவித்திரி,, செளகார் ஜானகி! ஆனால் படத்தின் வெற்றிக்கு இன்னொரு குழந்தை ஹீரோவும் காரணம்! அந்த குழந்தை கமலஹாசன்! குழந்தை கமலஹாசனுக்கு இரட்டை வேடம்!
அந்த படத்தில் வந்த `பிள்ளைக்கு தந்தை ஒருவன் – நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்’ என்கிற சிவாஜி பாடும் பாடல் காட்சியில் அவர் கையில் இருக்கும் குழந்தை கமலஹாசன்! இந்தப் படத்திலும் பாடல்கள் தான் கதாநாயகன், ஒரு பாடல் கூட சோடை கிடையாது! விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை!
`அன்று ஊமைப் பெண்ணல்லோ!’ `பார்த்தால் பசி தீரும்’ `யாருக்கு மாப்பிள்ளை யாரோ’ `உள்ளம் என்பது ஆமை’ `பிள்ளைக்கு தந்தை ஒருவன்’ என்று எல்லா பாடல்களுமே படு ஹிட்!
இதில் சிவாஜிக்கு ஒரு கால் ஊனம்! படத்தை இப்போது பார்த்தாலும், ஒரு இடத்தில் கூட அந்த கால் அந்த ஊனத்தை மறந்து நடக்காது!
நல்ல கதை,, பெரிய நட்சத்திரங்கள், மிகப்பெரிய நிறுவனம், இவையெல்லாம் சேர்ந்தால் அந்த படம் எத்தனை பெரிய வெற்றி பெறும் என்பதற்கு இந்தப் படம் ஒரு மிகப்பெரிய உதாரணம்!
அந்த நாட்களில் ஏவிஎம் நிறுவனம் என்பது திரைப்படத் துறையில் நுழைய விரும்பும் அனைவருக்கும் ஒரு புண்ணிய ஸ்தலம்!
அப்போது ஏவி.எம் எப்படி இருந்தது தெரியுமா ?
அந்த நாளில் அந்த ஸ்டுடியோவிற்குள் நுழைந்தாலே முதல் கண்ணில் படுவது அந்த நிறுவனத்தின் வாகனங்கள்!
எல்லாமே அயநாட்டுக்கார்கள்! அது தவிர தயாரிப்புக்காக பயன்படும் அம்பாசிடர் கார்கள் வரிசையாக நிற்கும்! பக்கத்தில் அந்த கார்களை பராமரிக்க பழது பார்க்கும் மெக்கானிக் கடை! பக்கத்தில் ஒரு பெட்ரோல் பங்க்! அவர்கள் வாகனத்திற்கு மட்டுமே அங்கே பெட்ரோல் நிரப்பப்படும்! நான் பலர் எழுதியதையும், சிவாஜி என்னிடம் சொன்னது நினைவிருக்கிறது.! சிவாஜி ஏவிஎம் நிறுவனத்தை நன்றாகவே வர்ணிப்பார்!
பல வகை மீன்கள் நீந்திக்கொண்டிருக்கு ஒரு செயற்கைக்குளம்! பழுத்து தொங்கும் மரங்கள், பரந்த புல்வெளி, அதை பராமரிக்க பீச்சிடும் நீருக்கான ஊற்றுக்கள்! எல்லாமெ அங்கே இருக்கும்! பல பரந்த கொட்டகைகள்!தளங்கள்,அதற்குள் பலவகை அரங்கங்கள் அமைப்பார்கள். ஏவிஎம் நிறுவனத்தில் எல்லாமே திட்டமிட்டபடித்தான் நடக்கும்!
அந்த ஸ்டுடியோவில் காலையில் கரகரவென்று சப்தத்தோடு ரோட் என்ஜின் ரோலரைப் போல ஒரு வண்டி ஒடும், அது வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட வண்டி! கீழே சுழலும் தட்டில் ஒரு காந்தம் இருக்கும்! அது ஒடும் போது தரையில் கிடக்கும் ஆணிகளையெல்லாம் பொறுக்கி விடும்! அதை மீண்டும் தட்டி, சரி செய்து மீண்டும் சட்டங்கள் அடிக்க பயன்படுத்துவார்கள்! அத்தனை சிக்கனம் – ஆனாலும் பயனுள்ள சிக்கனம்!
காலை 10 அல்லது 11 மணிக்கு ஒருவர் நீண்ட ரெட்டைத் துப்பாக்கியோடு படப்பிடிப்பு தளத்திற்கு வெளியே சுற்றி வருவார்! தீடிரென்று மரங்களைப் பார்த்து சுடுவார்! அங்கிருக்கும் பறவைகளெல்லாம் பறந்து போய்விடும்!
ஆமாம்! அந்த நாட்களில் படப்பிடிப்பு தளங்களில் நேரடி ஒலிப்பதிவு!
சப்தம் போடும் காக்களை விரட்டவே இந்த யுத்தி! எல்லாமே அத்தனை திட்டமிட்டு நடக்கும்!
அதே போல் ஏவிஎம் செட்டியார் இருந்த காலத்தில் காலையில் ஸ்டுடியோவிற்கு வந்தவுடன் காலார ஸ்டுடியோவைச் சுற்றி வருவாராம்! கையில் இருக்கும் ஒரு ஒலி பதிவு கருவியில் அந்த ஸ்டுடியோவை பார்த்து தன் கவனத்தை அதில் பதிவு செய்வார்! உதாரணமாக, ` காலை ஏழு மணியாகிறது, ஆனால் இன்னும் ஸ்டுடியோ சாலைகளிலிருக்கும் விளக்குகள் எரிந்து கொண்டுதானிருக்கிறது! ` எடிட்டிங் அறைக்கு வெளியே கிடக்கும் வெட்டிய பிலிம் சுருள்கள் எட்டு மணி வரை பெருக்கப்படவேயில்லை! இந்த பதிவுகளை அவருடைய உதவியாளர் எடுத்து டைப் அடித்து அந்தந்த இலாக்கா மேலதிகாரிகளுக்கு அனுப்புவார்! அதே மாதிரி, அந்தத் தொழிலில் இருக்கும் அனைத்து சின்ன சின்ன விஷயங்களையும் கூர்ந்து கவனித்து செய்வாராம் ஏவிஎம் அவர்கள்! உதாரணமாக படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் நடிகைகள் உட்காரும்போது அவர்களுக்கு பக்கத்தில் இரண்டு பேன்கள் சுழலும்! காரணம் வேர்வையினால் பெண்களில் அக்குள் பகுதியில் வேர்வை ஒட்டிக்கொள்ளும்! அது படப்பிடிப்பில் பளிச்சென்று தெரியும்!
அதே மாதிரி ஒரே மாதிரி நான்கு பளவுஸ்கள் தைக்க சொல்லி வைப்பாராம் ஏவிஎம்.
அப்போது கதைக்கு மட்டுமே முக்கியத்துவம்!
அங்கிருந்து வந்த வெற்றி கண்டதுதான் `பார்த்தால் பசி தீரும்’ படம்!
http://i1234.photobucket.com/albums/...psogucjrkc.jpg
(தொடரும்)