http://i64.tinypic.com/33kzkat.jpg
http://i63.tinypic.com/29f7bl3.jpg
http://i67.tinypic.com/9v8q2p.jpg
Printable View
http://i63.tinypic.com/14uf446.jpg
அன்பு நண்பர் திரு. சுந்தர பாண்டியன் அவர்களே,
தங்களின் விமர்சனங்களுக்கும், கருத்துக்களுக்கும் , எனது பதிவுகளுக்கு அளித்த பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி. எல்லா புகழும் இறைவன் எம்.ஜி.ஆருக்கே .உலக தலைவர்கள் வரிசையில் ஒப்பிட்டு புரட்சி தலைவரை வரிசைப்படுத்தியதற்கு நன்றி. பரிசுகளுக்கு மயங்கி நான் பதிவுகள் இடவில்லை. பாராட்டுக்களை எதிர்பார்த்து பதிவிடுபவனும் நான் இல்லை .எனது பணி புரட்சி தலைவர் புகழுக்கு மேலும் புகழ் சேர்ப்பதே..இருப்பினும் தங்களின் மேலான அன்பிற்கு எனது பணிவான நன்றி.
மாற்று முகாமில் உள்ள நண்பர்கள் பதிவிடும் பொய்யான தகவலுக்கு தாங்கள் அளித்த / அளித்து வரும் இந்த புள்ளி விவரங்கள் போதுமா ? இன்னும் கொஞ்சம் வேண்டுமா ?
என்பது போல் உள்ளது . மக்கள் தலைவரின் 29 வது நினைவு நாள் அனுசரிப்பு, மற்றும் புரட்சி தலைவரின் 100 வது ஆண்டு பிறந்த நாள் கொண்டாட்டங்கள் பற்றிய புகைப்படங்கள்
பற்றி சேகரித்து உள்ளேன். விரைவில் பதிவிட உள்ளேன். மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். மறைந்து 30 ஆண்டுகள் ஆன பின்பும் அவரது செல்வாக்கு/புகழ் மங்காமல் நாளுக்கு நாள் ஒளிவிளக்கு போல் சுடர்விட்டு பிரகாசிக்கின்றது /கூடி கொண்டே போகின்றது . ஜல்லிக்கட்டு போராட்டத்தை நினைவூட்டும் வகையில் , தாய்க்கு பின் தாரம் புகைப்படத்தை வெளியிட்டு
மக்கள் திலகம் ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு விளையாடுவதை பதிவிட்டதற்கு நன்றி. நட்சத்திர நடிகராகி, வசூல் சக்கரவர்த்தியாகி , நிகரற்ற அரசியல் தலைவராகி, சிறந்த நிர்வாகியாகி
10 ஆண்டுகள் ஆட்சி புரிந்து மறைந்து 30 ஆண்டுகளாகியும்மக்கள் தலைவர் எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்டது போல் , இப்படிப்பட்ட போற்றுதல்கள், சாதனைகள், ஆராதனைகள், வழிபாடுகள் , புகழஞ்சலிகள் , எவருக்காவது உண்டா ?
ஜல்லிக்கட்டு போராட்டம் காரணமாக ஒரு நடிகரின் 100 வது பிறந்த நாள் கொண்டாட்டத்தை ஓரம் கட்டி விட்டார்கள் என்று சிலர் பதிவிட்டு அற்ப சந்தோஷம் அடைகிறார்கள்.
அதற்கும் தாங்களும், நண்பர் திரு. வினோத் அவர்களும் தக்க பதிலடி அளித்துள்ளீர்.
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு சரி சமமாக திரையுலகிலும், அரசியல் உலகிலும் வென்றவர் எவருமில்லை என்பதற்கு கட்டியம் கூறுவது போல் உள்ளது தங்கள்
பதிவுகள். மீண்டும் ஒரு முறை நன்றி.
ஆர். லோகநாதன்.
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு .
வெள்ளி (20/01/2017) முதல் சென்னை ஸ்ரீநிவாஸாவில் திரை எழில் வேந்தன் எம்.ஜி.ஆர். திரையுலகின் "காவல்காரன் " திரைப்படம் தினசரி 3 காட்சிகளில் வெற்றி நடை போடுகிறது .
இன்று (22/01/2017) ஞாயிறு மாலை காட்சியின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நண்பர்களின் பார்வைக்கு .
http://i66.tinypic.com/23iwg02.jpg