Bhavani
(Kalaignar TV, Monday-Thursday, 7.30 p.m.)
A new mega serial titled ‘Bhavani’ will be telecast from June 15. The cast includes Vadivukkarasi.
Printable View
Bhavani
(Kalaignar TV, Monday-Thursday, 7.30 p.m.)
A new mega serial titled ‘Bhavani’ will be telecast from June 15. The cast includes Vadivukkarasi.
நன்றி: தினதந்திQuote:
வருகிறார், விஜயகுமார்
நடிகை ரம்யா கிருஷ்ணன் தயாரிக்கும் புதிய தொடர் தங்கம். இது சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக விருக்கிறது. இந்த தொடர் மூலமாக முதன்முதலாக சின்னத்திரைக்கு வருகிறார் நடிகர் விஜயகுமார். இவர்நடித்தால் மட்டுமே அந்த கேரக்டர் சிறப்பு பெறும் என்பதை விளக்கி நடிக்க சம்மதம் பெற்றிருக்கிறார்கள்.
நன்றி: தினதந்திQuote:
பவானி
கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் புதிய தொடர், `பவானி'.
விஜயசாரதி, சுபலேகா சுதாகர், பாவனா, வடிவுக்கரசி ஆகியோர் முக்கிய வேடமேற்று நடிக்க, சின்னத்திரை இயக்குநர் ரசூல் இயக்குகிறார் ஸ்ட்ரீட் சினிமா நிறுவனம் இந்த தொடரை தயாரித்து வழங்குகிறது.
தனது தந்தையை வெட்டிக்கொன்ற தாதா வீரபாண்டியனின் குடும்பத்திற்குள் மருமகளாக நுழைந்து அனைவரையும் தன் அன்புக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, பின்னர் தந்தையைக்கொன்ற வீரபாண்டியனை சிறைக்கு அனுப்பி பழிவாங்கும் ஒரு புதுமைப் பெண்ணின் கதை இது.
நன்றி: தினதந்திQuote:
நடிக்கப் போவது யாரு?
தமிழன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி, `நடிக்கப் போவது யாரு?' தமிழ் சின்னத்திரையில் இதுவரை வெளிவராத புதிய நிகழ்ச்சி.
நடிப்புத் திறமையுள்ள, கலைஞர்களை வெளி உலகத்துக்கு அறிமுகப்படுத்தும் புதிய முயற்சி. மூன்று சுற்றுகள் அடங்கிய இந்நிகழ்ச்சியில் நகைச்சுவை, சோகம், கோபம் என பல்வேறு பரிமாணங்களில் தங்கள் நடிப்பை கலைஞர்கள் வெளிப்படுத்துகின்றனர்.
நடுவர்களாக நித்யா ரவிந்தரும், விஜயகிருஷ்ணராஜ×ம் பங்கேற்கின்றனர். வெற்றி பெறும் கலைஞர்களுக்கு பரிசுகளை வழங்குகிறது தமிழன் தொலைக்காட்சி. தயாரிப்பு: தமிழன் தொலைக்காட்சி. இயக்கம்: ஏ.கே.உசேன்.
நன்றி: தினதந்திQuote:
மறுபக்கம்
உண்மை என்று சொல்லப்படுவதெல்லாம் உண்மையில்லை. அந்த உண்மைக்கு பின்னால் சில நேரங்களில் உண்மையான உண்மை ஒளிந்திருக்கும். அதைக் கண்டறிந்து வெளிச்சம் போடுவது தான் ``மறுபக்கம்''.
இது நாட்டில் நடந்த அதிர்வுகளின் தொகுப்பு. சமூக விரோதிகளை கதிகலங்க வைக்கும் அதிரடி புலனாய்வு அலசல்.
ஒவ்வொரு பிரச்சினைகளையும் அலசி... இதன் பின்னணியில் இருப்பவர் யார் யார்... என்ற உண்மைகளை வெளிச்சம் போடும் நிகழ்ச்சியே இந்த ``மறுபக்கம்''.
சமூக ஆர்வலராகவும், தியாகிகளாகவும் இரட்டை வாழ்க்கை வாழ்பவர்களின் நிஜ முகங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் முயற்சிம் கூட.
மக்கள் தொலைக்காட்சியில் இன்று இரவு 8.30 மணிக்கு இந்த நிகழ்ச்சியை காணலாம்.
நன்றி: தினதந்திQuote:
புத்தகம்படி பரிசைப்பிடி
புத்தகம் வாசிக்கிற பழக்கத்தை எல்லோரிடமும் ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு தமிழரின் இல்லங்களிலும் நூல்நிலையம் அமைய வேண்டும் என்ற நோக்கத்தில் மக்கள் தொலைக்காட்சியில் தொடங்கப்பட்டது ``புத்தகம்படி, பரிசைப்பிடி'' நிகழ்ச்சி.
இதில் பொது அறிவு கேள்வி கேட்கப்படும். அதற்கு நான்கு பதில்கள் தரப்படும். அதில் உரிய பதிலை தேர்ந்தெடுத்துச் சொன்னால் புத்தகம் பரிசு. ஒருவர் எத்தனை புத்தகங்களை வேண்டுமானாலும் பரிசாகப் பெறலாம். தவறாக பதில் சொன்னால் இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும். அந்த வாய்ப்பையும் தவறவிட்டால் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற வேண்டும்.
ஞாயிறு தோறும் மாலை 6.03 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி இது. தொகுத்து வழங்குபவர் மாலா.
நன்றி: தினதந்திQuote:
தினம் தினம் தீபாவளி
மெகா டிவியில் 300-வது எபிசோடை எட்டியிருக்கிறது. ``தினம் தினம் தீபாவளி'' தொடர். திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது இத் தொடர்.
செய்யாத கொலையை செய்ததாக நினைத்து போலீசிடம் இருந்து தப்பிக்க பல வேடங்களைப் போட்டு மீனாட்சி (நளினி) அடிக்கும் லூட்டிகள் பார்ப்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது.
இறந்ததாக கருதப்படும் நிரஞ்சன் (லட்சுமிராஜ்) தனது மனைவி நிலாம்பரி (சவுந்தர்யா) புருஷோத்தமன் (பயில்வான் ரங்கநாதன்) புஷ்பவனம் (சுமங்கலி) ஆகியோருடன் சேர்ந்து வீட்டில் உள்ளதை சுருட்டிக் கொள்வதற்காக செய்யும் கலாட்டாக்களும். இவர்களிடம் மாட்டிக் கொண்டு சொத்தையும் தன்னையும் காப்பாற்றிக் கொள்ள காமாட்சி (சாதனா) படும் அவஸ்தைகளும் பார்ப்பவர்களை வயிறு குலுங்க வைக்கின்றது.
தொடரில் நளினி, சாதனா, `ஊர்வம்பு' லட்சுமி, சவுந்தர்யா, பயில்வான் ரங்கநாதன், விஸ்வேஸ்வர ராவ், கே.எஸ்.ஜெயலட்சுமி, லட்சுமி ராஜ் சுமங்கலி, கோகுல், வந்தனா, மாஸ்டர் சுஜீத், குள்ளமணி நடிக்கின்றனர்.
கதை, இயக்கம்: கணேஷ் ராஜேந்திரன். வசனம்: எம்.பி.கார்த்திகேயன். ஒளிப்பதிவு: சூர்ய பிரகாஷ். இசை: தேவா. திரைக்கதை மேற்பார்வை: ஜெயந்தி தங்கபாலு. தயாரிப்பு: சில்வர் ஸ்டார்.
Quote:
Anbe Vaa, a new love story starts as a serial in Vijay TV from Tomorrow at 8.00 PM Monday to Thursday. Anbae Vaa is a story which has three friends - Jeeva, Jana and Adi who are on the verge of taking the plunge into the real world and is also experiencing their first love. The title song is already a super hit.
Quote:
Airtel Super Singer Juniors also start tomorrow at 9.00 Monday to Thursday. Rs 25 Lakhs are in stake. During the year of 2008 the show had been in presence, were four juniors Vignesh, Saicharan, Krishnamurthy and Aparna have competed with each other.Finally Krishnamurthy was selected as the super singer junior 2008. The show was sponsored by Airtel.
Quote:
.Sun TV
Actor Vijaykumar is coming to the box. He will feature in a serial called Thangam coming shortly in Sun TV. The serial is produced by actress ramya krishnan.