http://www.4tamilmedia.com/ww1/index...01-20-10-23-30
தமிழ்த்திரையுலக திடீர் வருமானவரி ரெய்டும், வெளிவராத சில தகவல்களும்.
தமிழ்த்திரையுலகப் பிரபலங்கள், கே. எஸ்.ரவிகுமார், சூர்யா, வடிவேலு ஆகியோரின் வீடுகளில் நேற்று காலை தொடங்கிய வருமான வரிச்சோதனை இன்றும் தொடர்வதாக அறியப்படுகிறது. நேற்று நடந்த சோதனை குறித்த வருமான வரி இலாகாவின் உத்தியோகபூர்வ அறிக்கைகள் வெளிவருவதற்கு முன்னதாகவே சில செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த நான்கு வருடங்களாக நடிகர் சூர்யா வரி ஏய்ப்பு செய்திருப்பதாக ஒரு செய்தி, வடிவேல் வீட்டில் சோதனையின் போது வடிவேலிடம் நடந்த நாலு மணி நேர விசாரணை, இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் வீட்டிலும் தொடரும் சோதனை என வெளிவந்த இந்தப் பரப்பான செய்திகளால் தமிழ்த்திரையுலகமே பரபரப்பாகியுள்ளது.
தமிழக முதல்வருக்கும் சினிமாத்துறைக்கும் இருக்கும் நெருக்கம் சகலரும் அறிந்தது. அதிலும் குறிப்பாக வடிவேல், சூர்யா, ரவிக்குமார், ஆகியோர் தனிப்படவும், முதல்வருடன் நெருக்கம் காட்டியவர்கள். என்ன நடந்திருக்கும் என்று யோசித்த போது, சூர்யா, வடிவேல், ரவிக்குமாரின் இணைவும், ஆதவன் படமும், ஒன்றாக இணைந்து பொறி தட்டின.
அந்த பக்கத்தில் எங்கள் செய்தியாளர்கள் , இந்த ரெய்டின் பின்னணியை ஆராய்ந்தபோது, இந்த ரெய்டின் உள்ளார்ந்த தகவல்கள் சில கிடைத்தன. இந்த திடீர் ரெய்டுக்கான முக்கிய காரணம் 'ஆதவன்' படத்தின் தணிக்கை கணக்குகள் ஏற்படுத்தி பாதிப்பே என தகவல் கிடைக்கிறது.
ஆதவன் பட தனிக்கை கணக்குகளில் சூர்யாவுக்கு கொடுக்கப்பட்டதைபோல ஒரு மடங்கு அதிக சம்பளம் கொடுக்கபட்டுள்ளது என்றும், அதாவது ரூபாய் 12 கோடி வடிவேலுவுக்கு மட்டும் என்றும் ( ஒரு நாள் கால்ஷீட்டுக்கு ரூபாய் 10 லட்சம் வாங்குகிறாராம் வடிவேலு) கல்கத்தா படப்பிடிப்பில் எடுத்து முடித்திருக்க வேண்டிய வடிவேலுவின் பகுதிகளில் பெருமபகுதியை சென்னை செட்டிநாடு அரண்மனையிலும் படம் பிடித்ததால் பட்ஜெட்டில் இவ்வளவு அதிகரித்தது என்றும், வடிவேலுவுடன் இணக்கமாக செயல்பட்டே இயக்குனர் அவரிடமிருந்து கமிஷன் பெற்றார் என்றும் படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு தெரிய வந்ததாம். இதுதான் இந்த முக் கூட்டு ரெய்டின் மூலம் என்று தெரியவருகிறது.
அப்படியானால் இயக்குனர் முருகதாஸ் இதற்குள் எவ்வாறு வருகின்றார் எனத் துருவியபோது, தற்போது ஏ.ஆர். முருகதாஸ் படத்தில் மீண்டும் வடிவேலு, சூரியா கூட்டணி ஏற்பட்டுள்ள நிலையில் சூர்யா இந்த படத்துக்கு திகைக்கவைக்கிற அளவுக்கு சம்பளம் கேட்டதாகவும், ஆதவன் படத்தின் கோபம், புதிய படத்தின் கோபம் , மேலும் கமலை வைத்து ரவிகுமார் இயக்க இருக்கும் உதநிதி ஸ்டாலின் பேனர்
படத்துக்கு மீண்டும் வடிவேலுவைக் கேட்டதோடு, தனக்கு ரூ5.5 கோடி ரவிகுமார் சம்பளம் கேட்டதாலும் ஏற்பட்ட கோபம் என பணம் சம்பந்தபட்ட கோபமே இந்த ஷாக் ரைடுக்கு காரணம் என்பதாகத் தகவல் கிடைக்கின்றன.
ஆனாலும் இந்த ரெய்டின் போது, அகரம் பவுண்டேஷனுக்கு சூர்யா கோடிக்கணக்கில் நன்கொடை வசூல் செய்தார் என்றும் அந்தநன்கொடைகளுக்கான கணக்கில் குளறுபடி செய்தார் என்றும் உலாவரும் செய்திகளில் உண்மையில்லை என்பதை சிபிஐ ரைடில் கண்டுபிடித்திருக்கிறார்களாம். ஆனாலும் இந்த செய்திஎழுதப்படும் இந்த நேரத்திலும், சூர்யா மற்றும் ரவிகுமார் வீட்டில் ரெய்டு நடந்து கொண்டிருப்பதாக தகவல் தருகிறார்கள்.