Quote:
எண்ணங்களிலும் செயல்களிலும் ஊறிப்போயிருக்கும் இத்தொழில்நுட்பங்களின் ஆதிவடிவங்களை ஆக்கியவர் டென்னிஸ் ரிட்ச்சி – ஒன்று C மொழி; மற்றது யூனிக்ஸ் இயங்குதளம். இவைதவிர அவரது முக்கியமான ஆக்கம் என நான் கருதுவது அவரது புத்தகங்களை: The C Programming Language மற்றும் Unix Programmer’s Manual.
கொஞ்சம் நிதானமாக யோசித்துப் பார்த்தால் சமகாலத்தவர் எவரையும்விட தொழில்நுட்பத்தின்வழி நம் தினசரி வாழ்வின்மீது ஆகப்பெரிய பாதிப்பை எற்படுத்தியவர் என டென்னிஸ் ரிட்ச்சியையே சொல்லவேண்டியிருக்கிறது – ‘எவரையும்’ என்பது பில் கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ் இருவரையும் சேர்த்துத்தான்.
Quote:
இன்றைய தேதியில் நாம் பயன்படுத்தும் எந்த மின்னணுச் சரக்கிலும் நேரடியாகவோ மறைமுகமாகவோ தவிர்க்கவே முடியாத*படி டென்னிஸ் ரிட்ச்சியின் தொழில்நுட்பம் ஒளிந்திருக்கிறது.
ஆனால் அவரது இறப்புச் செய்தி அவர் இறந்து மூன்று நாட்கள் கழித்து அவரது முன்னாள் பணிச்சகாவான ராப் பைக் என்பவர் தன் கூகுள் ப்ளஸ் பக்கத்தில் நேற்று அதிகாலை 6:32-க்கு பகிர்ந்து கொண்டதன் வாயிலாகவே வெளி உலகத்துக்கு வந்ததிருக்கிறது. அதிலும் அவரது மரணத்தேதி சரியாகக் குறிப்பிடப்படவில்லை.
நேற்று காலை 9 மணிவரை எந்த ஆங்கில வலைதளத்திலுமே இந்தச் செய்தி வெளியாகவில்லை.
காலை 10 மணிவரை விக்கிப்பீடியாவில் தகவல் பதியப்படவில்லை.
நேற்று மதியம் 2 மணி வரை பிபிசி போன்ற பிரபல செய்தி நிறுவனங்கள் இச்செய்தியை வெளியிடவில்லை.
இப்போதும்கூட ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகவில்லை.
கணிமையின் வரலாற்றில் ஒரு முக்கியமான சகாப்தமான அவரைப் பற்றி அவர் இறந்தபின்னரே எழுத நேர்ந்தது குற்றவுணர்ச்சியை எழுப்புவதாகவே இருக்கிறது.
சி.சரவணகார்த்திகேயன் :clap: and thanks!