Quote:
ந்த விவரம் வெளிநாட்டில் இருந்த இளையராஜாவிடம் போன் மூலம் தெரிவிக்கப்பட்டது. உடனே திநகர் உதவி ஆணையர் தமிழ்செல்வனை தொடர்பு கொண்ட இளையராஜா, "இந்த இசை நிகழ்ச்சி நடத்துவதற்கான ஒப்பந்தம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பாகவே கையொப்பம் ஆகிவிட்டது. என் துணைவியாரின் மரணத்திற்கு பிறகு, எந்த நிகழ்ச்சிக்கும் நான் ஒப்புக் கொள்ளவில்லை. யாருடைய விளம்பரப் படத்திலும் தோன்றவோ இசையமைக்கவோ இல்லை.
இப்போது இந்த நிகழ்ச்சியை நடத்துவது சிக்கலாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியை நடத்தினால் தமிழர்களின், தமிழ் அமைப்புகளின் பலமான கண்டனத்துக்கு ஆளாவேன் என்பது எனக்கும் தெரியும். அவர்களின் உணர்வுகளை நான் புரிந்து கொள்கிறேன். மதிக்கிறேன்.
எனவே எப்படியாவது நான் நிகழ்ச்சியை தள்ளிப்போடுவதற்கோ, கலந்து கொள்ளாமல் தவிர்ப்பதற்கோ ஏற்பாடு செய்கிறேன் என்று போராட்டக்காரர்களிடம் எடுத்துச் சொல்லுங்கள்," என கூறினார்.
இளையராஜாவின் இந்த பதில் தமிழ் உணர்வாளர்களுக்கு திருப்தியளித்துள்ளது.
But this is one sided statement which is not complete. Jaya Tv has to say the final word i think...