Greetings
To
Mr Ragavendara sir
5
0
0
0
Posts
Printable View
Greetings
To
Mr Ragavendara sir
5
0
0
0
Posts
Greetings for 5000 posts Mr Ragavendran Sir
Congratulations to one of the pioneer of this thread Ragavendran Sir on your 5000th post
continue to lead to show us light and enlighten us
Hearty congratulations Mr. Raghavender for achieving 5000 glorious posts.
Awaiting more such feats!
Regards,
R. Parthasarathy
Congratulations to Mr VR Sir, do continue to post
as usual. With Wishes & Love
S Vasudevan
Congratulations to Raghavendra Sir for completing glorious 5000 posts!!!
Dear ragavendran sir
my hearty congratulations for completing 5000 posts in this thread
c.ramachandran
Congratulations raghavendra sir for completing 5000 valuable and meaningful posts.please participate regularly and lead us from the front with your experience
Dear murali sir,
if we do not give fitting replies then they may also say that karnan's 150 day collection was surpassed in one week by this film.
Dear sathish sir,
thankyou very much for the telugu movie posters of nt
dear murali sir/raghavendra sir,
please upload thyagam/vairanenjam theatre photos.
டியர் ராகவேந்திரன் சார் - நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்து வரும் தென்றல் போல இந்த திரிக்கு மீண்டும் வருகை தருவதற்கு மனமார்ந்த நன்றி - உங்கள் பதிவுகளை படிக்க ஆவலுடன் இருக்கின்றோம் - நெய் மனம் கவரும் ஊருக்கு சொந்த காரரையும் எங்களுக்காக இங்கு வருகை புரிய வைத்தால் எங்கள் சந்தோஷம் இரட்டிப்பு ஆகுமே - நீங்கள் செய்வீர்கள் என்பது எங்கள் அசைக்க முடியாத நம்பிக்கை - உங்கள் 5000 பதிவுகள் 50000000000000000000000000000000000000000000000000 0000000000000 ஆக எங்கள் ப்ராத்தனை என்றும் உங்கள் பக்கம் உண்டு ..
அன்புடன் ரவி
:):smokesmile:
அன்புள்ள ராகுல்ராம் - "பழனியை"பற்றி நினைத்தவுடன் , என்னை உடனே "அறிவாளியாக" ஆக்கிவிட்டீர்கள் - உங்கள் அலசலில் வராத சில விஷயங்களை சொல்ல விரும்பிகிறேன் - thereafter the floor is yours ( deal ? or no deal ?? ) for threadbare Analysis of " Arivaali
அன்புடன் ரவி
:???::smokesmile:
Reserved
அன்பு நண்பர்கள்
வினோத், சந்திரசேகர், கோபால், செந்தில்வேல் சிவராஜ், ராகுல்ராம், பார்த்த சாரதி, சென்னை வாசுதேவன், கல்நாயக், சி.ராமச்சந்திரன்
இன்னும் பல காத தூரம் போக வேண்டிய நிலையில் சுமையை இறக்கி வைக்க உதவும் ஒரு சுமைதாங்கி போன்றவை இந்த எண்ணிக்கை சாதனைகள். இன்னும் ஏராளமாய் நாம் நடிகர் திலகத்தைப் பற்றி விவாதிக்கவேண்டியுள்ளது.
தங்கள் அனைவருக்கும் உளமார்ந்த நன்றி.
டியர் கோபு,
தங்களுடைய முதல் பதிவே என்னை வாழ்த்தி எழுதியமைக்கு என் உளம் கனிந்த நன்றி. தங்களை அறிமுகம் செய்யவும். தொடர்ந்து தங்கள் பங்களிப்பைத் தரவும்.
ராமஜெயம் சார்
தங்களுடைய ஆசி கலந்த வாழ்த்துக்கள் என்றென்றும் உற்சாகம் தரும் டானிக் போன்றவை.
தங்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
http://i818.photobucket.com/albums/z...ps28611a42.jpg
ஒரு அறிவாளியின் அலசல் - மன்னிக்கவும் - அறிவாளி படத்தை பற்றிய அலசல்
கௌரவ வேடம் : ரவி ( முன்னுரை , பாடல்கள் மட்டும் )
கதை / தயாரிப்பு ]
வசனம் , ஒளிபதிவு ]
சண்டை காட்சிகள் ] ராகுல் ராம்
Public சப்போர்ட் ]
congrats MR. RAGAVENDRA SIR,FOR UR 5000th post.
Blast from the past
Arivaali 1963
Sivaji Ganesan, P. Bhanumathi, K. A. Thangavelu and T. P. Muthulakshmi
Fine performances Arivaali
William Shakespeare has been a great source of inspiration for Indian cinema. Many of his plays have been successfully adapted to the screen, without, of course, giving credit to the immortal dramatist. His `The Taming of the Shrew' was filmed in Tamil more than once.
Arivaali was a successful attempt by the totally forgotten playwright, screenwriter, producer and director, A. T. Krishnaswami, popularly known during those days as ATK. He was associated even while at college with Suguna Vilas Sabha promoted by one of the two founding fathers of Tamil Theatre, Pammal Sambandam Mudaliar. ATK had also acted in the sabha plays and later joined AV. Meiyappan as an assistant director during the mid 1930s and worked on an early production Ratnavali.
"The Taming of the Shrew" was later made by P. Madhavan in Tamil as Pattikaadaa Pattanama with Sivaji Ganesan and Jayalalitha in the lead. Sivaji rose to brilliant heights as the `tamer' of the shrew, Jayalalitha. The film was a major success. It was also made in Kannada as Nanjundi Kalyaana with Raghavendra Rajkumar (Rajkumar's son) and proved to be a box office bonanza.
ATK's play adapting the Shakespearean work was titled "Oh! What a Girl!" Popular in Tamil, it featured Vidya and Sandhya (Jayalalitha's mother) in major roles.
ATK promoted his own concern ATK Productions and launched Arivaali in 1953. Not many are aware that M. G. Ramachandran was cast as hero at first with P. Bhanumathi as the `shrew'. After some reels were shot, MGR opted out, and entered, Sivaji Ganesan, whom ATK had known intimately during the actor's struggling days in theatre.
(This writer had the pleasure of knowing ATK intimately, having worked with him in some of his plays during his early days. ATK, a person blessed with a delightful sense of humour, had then narrated not only his filmmaking experiences but also showed him a copy of the agreement with MGR in Tamil, which was almost hundred per cent foolproof, advantage MGR. It had words like `vaarthaigalaiyo. kaatchigalaiyo maatravo, kezhattavo, neekkavo, kokkavo MGRukku sagala urimaigalum undu...' No other Indian cinema personality had such a cast iron strong agreement in his favour.)
Again for many reasons, mostly financial, the production dragged on for nine long years and was released only in 1963. In spite of the delay, the movie was a success and the comedy track involving Thangavelu and Muthulakshmi proved a major highlight. Thangavelu as a social activist-journalist was remarkable with his wisecracks and characteristic style of delivering ATK's witty dialogue and his exchanges with his na‹ve, ruralbred wife Muthulakshmi were a sheer delight.
A comedy sequence featuring Thangavelu and Muthulakshmi was released later as an audiocassette, and then as a video. Both are popular even today, after forty-plus years.
Bhanumathi's performance was superb - she virtually lived the role. She was ably supported by Sivaji Ganesan.
The music (S. V. Venkataraman) was pleasing and one song `Kannukku virundhaagum Thirukuraley.' (T. M. Soundararajan) was popular.
Arivaali was a success at the box office but sadly the benefits did not reach poor ATK. Later, he directed Arutperunjyothi and Manam Oru Kurangu (Cho's play).
Remembered for: The comedy of K. A. Thangavelu-T. P. Muthulakshmi and the fine performances of Bhanumathi and Sivaji Ganesan.
RANDOR GUY
என் இனிய நடிகர் திலக ரசிக நண்பர்களுக்கு
வலைகடலில் அழகாக நடிகர் திலகத்தின் புகழ் முத்துக்கள் கோர்த்திருப்பதை மன உவகையுடன் படித்து மகிழ்ந்து இருக்கும் இத்தணுண்டு ரசிகனான சின்னக் கண்ணனின் வணக்கங்கள் :)
எனவே.. மெளனம்...கலைகிறது...;)
முரளி சாருக்கும் ராகவேந்திரர் சாருக்கும் எனது வாழ்த்துக்கள்..
ம்ம் அறிவாளி - எனக்கு மிகவும் பிடித்த ந.தியின் படங்களில் ஒன்று.. இளமை கொப்பளிக்கும் நடிகர் திலகம், டபக்கென்று வாணலியில் பொரித்த பொன்னிற வ்டையை வென்னீரில் போட்டு எடுக்காமல் நேராகத் தயிரில் போட்டு ஊறிய தயிர்வடையைப் போன்று சற்றுப் பூசினாற்போன்ற உடலமைப்புடன் பானுமதி..ந.தியுடன் போட்டி போட்டு முடியாமல் நடிப்பிலும் படத்திலும் அழகாக அடங்கி நடித்திருப்பார்..பின் தங்கவேல் முத்துலட்சுமியின் அதான் தெரியுமே..ம்ம்பாலையா வேறு உண்டு என நினைக்கிறேன். நடிகர்தில்கம் வெகு அழகாக ஜம்மென்று நடித்திருப்பார்.
ரவியின் முன்னுரை ராண்டார்கையின் கட்டுரையினால் எனக்குத் தெரியாத விஷயங்கள் தெரிந்தன.
எனில் எம்.எஸ்வி- ராமமூர்த்தி போல நமது ரவி-ராகுல் ராம் இடுகைகளைப் படிப்பதற்கு சாய்ந்து உட்கார்ந்து கொள்கிறேன்..
அன்புடன்..
சி.க
வாசக தோஷ சந்தவ்யஹ.
ஜோ,
சிங்கையில் இந்த மாதம் நடிகர் திலகத்தின் சிலை திறப்பு விழா புகைப்பட திறப்பு விழா போன்ற ஏதேனும் நிகழ்வு நடை பெற இருக்கிறதா? இயக்குனர்கள் R. சுந்தரராஜன் மற்றும் பாரதிராஜா ஆகியோர் கலந்து கொள்வதாக செய்தி வந்திருக்கிறது. R.சுந்தரராஜன் அவர்களே இதை பற்றிய confirmation கொடுத்திருகிறார். இருப்பினும் அதைப் பற்றிய மேலதிக தகவல்கள் இருக்கிறதா? விசாரித்து பகிர்ந்து கொள்ளவும்.
அன்புடன்
ஞான ஒளி- 42 ஆண்டு நிறைவு (11-03.2014)நாளை ஒட்டி பழைய பதிவு.(இன்னொரு முக்கிய மனிதரை இழுக்க ஒரு உபாயம்)
நான் சற்றே நேரம் எடுத்து சிலவற்றை விஸ்தாரமாய் விளக்கி விட்டு நடிகர்திலகத்தின் நடிப்பு வெள்ளத்தில் நீந்துவேன். தயவு செய்து உங்கள் புரிதல் பற்றிய உடன் வினை-எதிர்வினை இன்றியமையாதது.
பிறப்பில் தொடங்கி இறப்பில் முடியும் மனித வாழ்க்கை ,முடிந்து விடாத நிலையில் தொடர்வதை இருத்தல் என்று குறிப்போம். இருத்தல் என்பதன் சிறப்பம்சம் மானுட வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை படைப்பதுவே ஆகும்.அவ்வப்போது அந்த அர்த்தத்தை புதுப்பித்து ,அதற்குண்டான பொறுப்பை ஏற்க வேண்டியுள்ளது.வாழ்க்கையின் மதிப்பு இடை விடாத முயற்சியில்தான் உள்ளது.நம் வாழ்க்கைக்கு ஒரு ஞாயம் தானாக கிடைப்பதில்லை என்றாலும்,தொடர்ந்த தங்களது செயல்கள்தான் அதை அளிக்க இயலும்.சுதந்திரமாக இருக்கும் மனிதனால்தான் தன் இருத்தலுக்குண்டான பொறுப்பை ஏற்க இயலும்.இந்த அடிப்படையில் இயங்கும் செயல்பாடுகள் ,ஒட்டுமொத்தமான அவன் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை அளிக்கும்.மற்றவர் எண்ணங்களுக்கும் ,அவர்களுக்கும் தவிர்க்க முடியாத போராட்டம் இருந்து கொண்டே உள்ளது.ஒருவர் சுதந்திரம் ,மற்றவர் சுதந்திரத்தை அழுத்தி, அழித்து விட எத்தனிக்கிறது.
ஒரு அனாதையான மனிதன் வரம்புகளற்ற சுதந்திரம் பெற்றிருக்கிறான்.அவனுடைய பொறுப்புகளும் அதிகம்.அவனுடைய அவசிய தேவைகளுக்கு கூட அவனாகவே செயல் பட வேண்டி உள்ளது.(ஒரு சராசரி மனிதனுக்கு அவசிய தேவைகளுக்கு குடும்பம் பொறுப்பேற்கிறது,ஒழுக்க நெறிகள் வரையறுக்க பட்டு சுதந்திரம் எல்லைக்குள் கட்டமைக்க படுகிறது.) அநாதைகளோ தங்கள் morality என்பதை கூட தாங்களே வகுக்க வேண்டும். அவர்கள் தங்கள் நோக்கத்திற்கு உகந்த master morality என்பதை வகுத்து slave morality என்பதை தவிர்க்கும் கட்டாயத்துக்கு ஆட்படுகிறார்கள்.போலி மனசாட்சியை தவிர்க்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆட்படுகிறார்கள்.
ஒரு முரட்டு தகப்பனின் மகனான அந்தோணி, விவரம் தெரிந்த வயதில் அனாதையாக பட்டு ஒரு கிறிஸ்துவ பாதிரியால் ஆதரிக்க பட்டு ஓரளவு religious institution பாதிப்பில் ,அதுவும் பாதிரியாரின் மேல் உள்ள பக்தி என்ற ஒற்றை இலக்கில் பயணித்தாலும் ஆதார குணங்களை இழக்காதவன் அந்தோணி.
Typical Behaviours of an orphan-
1)Poor Self Regulation
2)Emotional Volatility.
3)Act on Impulse.
4)Immediate Urge for self-gratification.
5)Mixed Maturity levels.
6)Self parenting syndromes-Taking justice in their hands.
7)Learned Helplessness
8)Extreme Attention seeking.
9)Indiscriminate friendliness.
9)Absessive compulsive Tendencies.
10)Idiosynchrasies.
மேற்கூறிய எந்த விஷயங்களும் என் மூளையில் உதித்தவை அல்ல. இவையெல்லாம் பிரபல மெடிக்கல் journals இல் இருந்து post -orphanage behaviour பற்றி திரட்ட பட்ட சில points .
அந்தோணி ஒரு ஒழுங்கற்ற கோபகார தகப்பனுக்கு பிறந்து ஏழ்மையில் வாழ்ந்த போது இல்லாத பிரச்சினைகள், தகப்பன் தன்னை அடித்தவனை வெட்டி விட்டு தண்டனை பெற்று ,தாயையும் இழக்கும் போது ,அவன் trauma மற்றும் அநாதை நிலை ,பாதிரியாரால் படிப்பறிவின்றி , மத நம்பிக்கைகள் மட்டும் சொல்லி வளர்க்க பட்டு ஆதரிக்க பட்டாலும், அவன் அடிப்படை குணங்கள் மாறாமலே வாழும் ஒருவன். பாதிரியாரால் கூட அவன் அடிப்படை குணங்களை மாற்ற முடியாமல் ,பெயில் கொடுத்து போலீஸ் ஸ்டேஷன் போய் அடிக்கடி அழைத்து வந்து damage control தான் செய்ய முடிந்திருக்கிறது.
தனக்கென்று இலட்சியங்கள் இல்லாத அந்தோணி,பாதிரியாரின் லட்சியங்களை சுவீகரிக்கிறான்.. அது சார்ந்த கோட்பாடுகள் மட்டுமே ,அவன் master - morality என்பதை தீர்மானிக்கிறது.தொடர்ந்து தனக்கென்று அமைத்து கொண்ட உறவுகளை இழந்தோ,உறவுகள் சிதைந்தோ அவனின் மற்ற எல்லா ஆசைகளையும் தகர்க்கிறது.
poor self regulation and emotional volatility என்பது முதல் காட்சியில் இருந்தே வெளிபடுத்த படும். மற்ற கதாபாத்திரங்களின் வசனங்களும் அதையே நமக்கு சொல்லும். சிவாஜி அதை இளமையில் ஒரு விதமாகவும், நடு வயதில் ஒரு விதமாகவும், பணக்கார வயதான அருணில் வேறு விதமாகவும் வெளிப்படுத்தும் விதம் பிறகு விவரமாக அலச படும்.
தன் மகளிடம் கூட அவர் ஆசை brolier கோழி போல அவள் வளருவதே தான் தன் பாதிரி சார்ந்த விருப்பங்களை நிறைவேற்றவே ,அவளுக்கு மற்ற ஆசைகள் தவிர்க்க பட வேண்டும் என்று மகளின் விருப்பங்களை சாராத முரட்டு தனமான ஆதிக்க அன்புதான். ஊரில் அநியாயங்களை தட்டி கேட்பதில் சட்டத்தை கையில் எடுக்கும் புத்தி ,மகளுக்காக செய்யும் செயல்களிலும் வெளிப்பட்டு ,நினைத்ததை நினைத்த படி அப்பொழுதே செய்ய துடிக்கும் விளைவுகள் பாராத உணர்வெழுச்சி நிலை.மகள் தவறி விட்டாளே என்பதை விட கனவுகளை தகர்த்த கொடுமைதான் வாழைகளுக்கு யமனாகிறது.சில சமயம் அதீத புத்தியை காட்டி அதிசயிக்க வைத்தாலும், அப்பாவித்தனம் தொனிக்கும், சமயா சந்தர்ப்பம் தெரியாமல் எட்டி பார்க்கும் விளையாட்டு தனம், சவாலை ஜெயிக்க விரும்பும் (அல்லது ஜெயித்து விட்ட) அசட்டு தனம் கலந்த சவடால்கள், சிறு சிறு தற்காலிக வெற்றிகளில் இன்பம் காணும் mixed maturity,learned helplessness ,Idiosynchrasies எட்டி பார்க்கும் இடங்கள் ஏராளம்.
obsessive compulsive நிறைந்த தோள் தடவும் mannerism ,யாராவது ஒன்றை அழுத்தி சொல்லும் போது அதற்கு கூடுதல் அழுத்தம் கொடுப்பது (வரேன்டாடாடா )என இடது கை aggressive முரடனுக்கு இந்த படத்தில் நடிப்பிலும் , திரைக்கதை அமைப்பிலும் கொடுக்க பட்டிருக்கும் அற்புதமான psychology கொண்ட ஒத்திசைவு ,சிவாஜி இந்த பாத்திரத்தில் கூடு விட்டு கூடு பாய்ந்து ஒவ்வொரு அசைவிலும் நெளிவிலும் வெளிபடுத்தும் அதிசயத்தை எப்படி வியப்பது?
துளி கூட தன் நண்பனின் லட்சியங்களுக்கு,நம்பிக்கைக்கு,எதிர்காலத்துக்க ு உலை வைப்பதில் குற்ற உணர்ச்சி கொள்ளாமல், அவனை ஜெயித்து விட்ட தொனியில் சவால் விட்டு உலவும் அந்தோணியை எப்படி விவரிப்பது?
இந்த படம் வெளிவரும் போது நடிகர்திலகம் மாநகரம்,நகரம்,பேரூர்,சிற்றூர்,கிராமம்,குக்கிர ாமம் அனைத்திலும் முடிசூடா மன்னன். வசூல் சக்கர வர்த்தி. சூப்பர் ஸ்டார். அதனால் இரும்பு திரை, தெய்வ பிறவி காலம் போல doing justice to the role என்று சென்று விட முடியாது. ஒரு பாத்திரத்தை உள்வாங்கி,அதன் செயல்பாடுகள் தன்மைகளை நிர்ணயித்து ,வெளியீட்டு முறையில் பாத்திரத்தின் தன்மையும் வேறு படாமல் scene stealing ,scene capturing gestures ,ஸ்டைல்,எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் சில antics எல்லாவற்றையும் கலந்து கொடுத்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் வசீகரித்து ஈர்த்தே ஆக வேண்டும்.படம் classic வகை என்றால் அந்த class maintain பண்ண பட்டே ஆக வேண்டும். இந்த ரசவாதம் ஞான ஒளியில் நிகழ்ந்தது.
இடைவேளைக்கு பிறகு திரைக்கதை cat -mouse cold war ,ரசிகர்களை கட்டி வைத்து,அந்த பாத்திர தன்மைகள் நீர்க்காமலும் பார்த்து கொண்ட அதிசயமும் நிகழ்ந்தது.
நடிகர்திலகம் அழகு, ஈர்ப்பு,ஆண்மை,கம்பீரம்,காந்த பார்வையுடன் கச்சிதமான உடலமைப்பு கொண்டு ரசிகர்களை கட்டி போட்ட காலகட்டம். இந்த படத்தில் இளைஞனாக half pant ,ஒரு கண்ணிழந்த நடுத்தர வயது, முதிய வயது கனவான் அனைத்து தோற்றங்களிலும் அவ்வளவு வசீகரம் இந்த திராவிட மன்மதனிடம். இப்போது கூட ராகவேந்தர் போட்ட படங்களை கிட்டத்தட்ட அரை மணி வைத்த கண் வாங்காமல் ரசித்தேன்.உலகிலேயே மிக சிறந்த ஆண்மகனாக ஒரு தமிழன் இருந்ததில் எனக்கு பெருமையே.
நடிகர்திலகத்தின் பிரத்யேக திறமைகளை கொண்டு வரும் படி அமைந்த படங்களுள் ஒன்று ஞான ஒளி. உதாரணம் மனைவி இறந்த செய்தி தெரியாமல் அவர் சவ பெட்டி செய்வதில் மும்முரமாக , பாதிரி படிப்படியாக ஏழு கேள்விகளில் முழு விஷயம் விளங்கும் படி செய்வார்.முதல் நிலை சந்தோசம் (குழந்தை பிறந்ததில்),இரண்டாவது குறை(தான் அருகில் இல்லாதது),மூன்றாவது மனைவியின் உடல் நிலை பற்றி சிறிய சந்தேகம், நான்காவது ஏதோ நடந்து விட்டதோ என்ற குழப்பம், ஐந்தாவதில் பாதிரி ஏதோ மறைக்கிறார் என்ற ஐயம் கலந்த வருத்தம், ஆறாவது நிலை நடந்ததை ஜீரணித்து உள்வாங்கும் பிரமையான நிலை, ஏழாவது துக்கத்தை உணர்ந்து கலங்கும் துடிக்கும் நிலை .இவையில் மற்ற நடிகர்களால் முதல், இறுதி ஆகியவற்றுக்குத்தான் முகபாவம் காட்டியிருக்க முடியுமே தவிர படி படியாக குறுகிய தொடர்ச்சியான கால நிலையில் ஏழு வித துரித மாற்ற பாவங்கள்!!!! குறித்து கொள்ளுங்கள்- கடவுள் தானே பூமிக்கு வந்து முயன்றாலும் முடியாது.
அந்தோணியின் rawness அந்த காதல் காட்சிகளிலேயே பளிச்சிடும். முதலிரவில் explicit ஆக திரும்பி நிற்க சொல்லி ரசிப்பது அந்த பாத்திரத்தின் ஆதார குணங்களுடன் இணைந்த காம வெளியீடு.சிறு சிறு வெளியீடுகளில் பின்னுவார். ராணியை திட்டி கொண்டே தொடர்ந்து வரும் போது,சர்ச்சுக்கு வருபவர் ஒருவருக்கு மிகையான சால்ஜாப்பு சலாம் போடுவதை சொல்லலாம்.
நான் பார்த்த உக்கிர ஆக்ரோஷ காட்சிகளில் காவல் தெய்வத்திற்கு அடுத்து இந்த படம்தான். கட்டு படுத்த படும் போது எட்றா என்று பாய யத்தனிப்புடன், கடைசியில் எதையும் ஏற்க முடியாத இயலாமையில் வாழைகளை வெட்டி சாய்க்கும் உக்கிரத்திற்கு இணையானதை இந்திய திரை கண்டதில்லை.
பாதிரி இறந்து கிடக்கும் வேளையிலும் , தப்பி போக முயலும் தன்னிடம் நண்பன் துப்பாக்கி நீட்டும் போது, நான்தான் குண்டை எடுத்துட்டேனே என்று குதூகல மனநிலையில் பேசும் கட்டம் இந்த பாத்திரத்தின் idiosynchrasy மனநிலையும் காட்டி ரசிகர்களையும் வசீகரிக்க முடியும் என்பதற்கு உதாரணம். தன்னிடம் இவ்வளவு உரிமையும் அக்கறையும் மிகுந்த நண்பனுக்கு ,தான் தப்பி சென்று இழைத்த துரோகத்தை பற்றிய சிறு மனசாட்சி தொந்தரவு கூட இன்றி, தன்னை திரும்ப பிடிக்க அலைவதில்,இறந்து விட்டதை நினைத்த மகளை உயிரோடு கண்டும் பேச முடியாத நிலைக்கு தன்னிரக்கம் கொண்டு, முடிந்தால் பிடித்து பார் என்ற சவாலை விட்டு சிறு சிறு தற்காலிக வெற்றிகளையும் explicit ஆகவே மகிழ்ந்து ரசிப்பார்.
இந்த மனநிலை நான் முன்னர் குறிப்பிட்ட mixed maturity கொண்ட idiosynchrasy வகை பட்டது.நடிகர்திலகம் நண்பனின் சந்திப்பு காட்சிகளில் ரசிகர்களை குதிக்க வைப்பார். சாத்துக்குடி பிழியும் காட்சியில் ,திடீரென்று எதிர்பாராமல் கண்ணாடியை உருவுவதில்,கணநேர கோபம் கலந்த ஆச்சர்யத்தை மீறி ,ஒரு விளையாட்டு தனத்துடன் தனது பார்வை திறனை வெளிபடுத்துவதாகட்டும்,ரேகைக்காக டம்ளர் மறைக்கும் நண்பனுடன் அதை குத்தி கையுறையை கழற்றும் காட்சிகள் பாத்திர தன்மை கெடாமல் சுவாரஸ்யம் கூட்டுவதற்கு உதாரணங்கள். லாரென்ஸ் தன்னை வெளியேற விடாமல் trap பண்ணி விட அவர் பேசும் monologue ஒரு வேதனை கூடிய விரக்தி,மிஞ்சி நிற்கும் சவடால் தன்மை, ஒரு uneasy sensation (நம்பிக்கை குலைவு), அத்தனையும் வெளிப்படும் உரத்து. ஆனால் அதனிடையிலும் அந்த பாத்திரம் அத்தனை தீவிரத்தின் நடுவிலும் சொல்லும் நல்ல வேளை பாதர் நீங்க இப்ப உயிரோட இல்லை .....
மகள் தேடி வந்த பரபரப்பில் மேரி என்று excite ஆகி தன்னிலை உணர்ந்து சாதாரணமாய் மேரி என்று மாற்றும் தன்மை,தன் மகளிடம் அடைந்த ஏமாற்றத்தை சொல்லி,அவளை குத்தி விட்டோமோ என்று ஆறுதல் படுத்தும் இடம், அவசர அவசரமாய் இருப்பதையெல்லாம் அள்ளி எடுத்து fridge கதவை உதைத்து சாத்தும் இன்ப அலைவு,தன்னுடைய பேத்திககாவது எல்லாம் சிறப்பாக செய்ய விழையும் தொண்டை அடைக்க கமரும் வசன வெளிப்பாடு,வேண்டாம்மா வயசாயிடுச்சு என்ற இனியும் ஓடி அலைய முடியாத விரக்தி வெளிப்பாடு என்று மகளை சந்திக்கும் கட்டத்தில் நடிகர்திலகம் விஸ்வரூபம் எடுப்பார்.
இந்த படத்தை பற்றி இன்னும் எவ்வளவோ எழுத கைகள் துடித்து கொண்டே உள்ளது. பிறகு ஒரு நாள் ஒவ்வொரு கணம்,காட்சியையும் விளக்கி எழுதுவேன் என்று உறுதி தந்து இப்போது விடை பெறுகிறேன்.
அன்புள்ள CK
ஈகரையில் கொடி கட்டி பறக்கும் நீங்கள் மீண்டும் இங்கு கொடி கட்ட வருவதற்கு மிகவும் நன்றி . சௌந்தர்ய லஹரியை வர்ணித்த அந்த அழகிய கைகள் , சௌந்தரிய மான நம் தலைவரை வாழ்த்தாமல் இருகின்றதே என்று கவலைப்பட்டேன் - இன்றுடன் அந்த கவலை மறைந்துவிட்டது - அறிவாளி ஒரு magical movie என்று கேள்வி பட்டுள்ளேன் - இன்று அது உண்மை என்று ஊர்ஜிதமாகி விட்டது - பாருங்களேன் - அலச ஆரம்பித்தவுடன் இரண்டு மாபெரும் அறிவாளிகளை இந்த திரிக்கு மீண்டும் அழைத்து வந்து விட்டது !!
ஒரே ஒருவர் தன்னை சுற்றி நெயினால் ஆனா வேலியை கட்டிக்கொண்டு இங்கு வர மறுகிண்டார் - அவரும் வந்த விட்டால் - பிருந்தாவனத்தில் கண்ணன் பிறந்த அந்த நாளும் வந்துவிடும் - வருவார் - நம்புவோம் - நம்பிக்கை தன வாழ்க்கை !!
அன்புடன் ரவி
:smile:::clap:
அன்புள்ள ராகுல்ராம்
இன்னும் ஒன்று , இரண்டு பதிவுகளில் என் முன்னுரை முடிந்துவிடும் - அதுவரை உங்கள் பதிவுகளை தாமத படுத்தினால் நன்றாக இருக்கும் - disconnect வராமல் இருக்கத்தான் இந்த சிறிய வேண்டுகோள்
அன்புடன் ரவி
அறிவாளியை பற்றி அலச ஆரம்பிக்கும் முன் - எவ்வளவு நல்ல சகுனங்கள் வருகின்றது என்று பார்த்தீர்களா ?
- பிதாமகர் திரும்பி விட்டார்
- ck வின் புல்லாங்குழலிருந்து அழகிய வேணு கானம் வருவதை உணர முடிகின்றது
- கோபால் அறிவாளி யினால் வெளி வரும் ஞான ஒளியை பரப்ப தயாராகி விட்டார்
நன்றி ராகுல் ராமிற்கு தான் சொல்ல வேண்டும்
அன்புடன் ரவி
Dear Ravi Sir,
I will wait till you complete, its better If you say like this so that it could avoid embarrassment of overlapping( will post by Fri or weekend is that fine
http://i818.photobucket.com/albums/z...pse6c1defa.jpg
கோபால் - உங்கள் பதிவு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கின்றது - இந்த படத்தை யார் சொன்னாலும் , எவ்வளவு முறை சொன்னாலும் திகட்டுவதில்லை - படத்தை முதல் தடவை பார்ப்பது போலத்தான் உள்ளது - சாகா வரம் பெற்ற NT யின் பல படங்களில் இதுவும் ஒன்று - கற்கண்டு , திராட்ச்சை இவைகளுடன் நல்ல நெய்யும் சேர்ந்தால் இந்த படத்தின் சுவையே தனிதான்
அன்புடன் ரவி
:razz::2thumbsup:
Dear Gopal sir,
one of the immortal classics of NT which is being repeatedly telecast on Kaliangar & Murasu channels specially on Chirstmas , still makes us to watch again & again
waiting
அறிவாளி - முன்னுரை - அலசல் தொடர்கின்றது
1. NT யின் 85வது வெற்றி படம்
2. அம்பிகாபதி ஜோடிகளின் மற்றும் ஒரு வெற்றி காவியம்
3. நடிப்புக்கும் , நகைச்சுவைக்கும் பஞ்சமில்லாத படம்
4. பாடல்கள் சக்கரை வியாதி இல்லாதவர்களுக்கு சக்கரை வியாதியையும் , இருப்பவர்களுக்கு அதிகமான தித்திப்பையும் தரக்கூடியது .
5. 9 ஆண்டுகள் தாமதமாக வந்தாலும் ரஜினியை போல latest ஆக வந்த படம்
6. MGR நடிக்க வேண்டிய படம் - சிவாஜியினால் தூக்கி நிறுத்திய படம்
7. இந்த படம் 1963 வந்த போது வெளியான NT படங்கள் இந்த படத்தையும் சேர்த்து மொத்தம் 10
- சித்தூர் ராணி பத்மினி
- இருவர் உள்ளம்
- நான் வணங்கும் தெய்வம்
- குலமகள் ராதை
- பார் மகளே பார்
- குங்குமம்
- ரத்த திலகம்
- கல்யாணியின் கணவன்
- அன்னை இல்லம்
எல்லாமே நடிப்பிலும் , வசூலிலும் புரட்சியை ஏற்படுத்தின - ஒவ்வொரு படத்தை பற்றியும் பேச தனி திரியே வேண்டிருக்கும் .
8. பானுமதி ஒரு பேட்டியில் இந்த படத்தை பற்றி மிகவும் பெருமையாக சொல்லி இருக்கின்றார் - சில துளிகள் :
- NT யை போல மூத்த கலைஞ்சர்களுக்கு மரியாதையை கொடுப்பவர் யாருமே இருக்க முடியாது .
- அவர் படங்களில் நடிக்கும்போது நமக்கு ஒரு வேகம் தானாகவே வந்து விடுகின்றது - கொஞ்சம் அசந்தாலும் , பெயரை அவர் தட்டிக்கொண்டு சென்று விடுவார் - அவரிடம் தானே தோற்தேன் என்று பிறகு மனதை சமாதனம் செய்து கொள்வேன்
- இந்த தலை முறைக்கு கிடைத்த பொக்கிஷம் இவர் - இவருடன் இணைந்து நடிக்க நான் மிகவும் கொடுத்துவைத்துள்ளேன் .
9. 63இல் வந்தாலும் எந்த காலத்திற்கும் ஒத்து போகும் படம்
அருமையான நகைச்சுவை பதிவுகளுடன் பாடல்களையும் பார்ப்போம்
http://youtu.be/8MPyxvM-2Fs
அதான் எனக்கு தெரியுமே...!
http://youtu.be/kycygVycys0
இப்பொழுது பாடல்களை ரசிப்போம்
http://youtu.be/IlTk4b8Lc4E
வாழும் வழிமுறைக்கு இலக்கணம் ஆனது.....மனம் மொழி மெய் இனிக்க வார்த்திட்ட தேனிது
http://youtu.be/8Q-pTkSjrR0