http://i60.tinypic.com/2my2rty.jpg
Printable View
கருவின் கரு - 172
பாகம் 2 - தந்தை
தந்தை - மகன் பந்தம்
மாணவ /வாலிப / திருமண பருவம்
உண்மை சம்பவம் 27
நான் ISB இல் professor ஆக இருக்கிறேன் - பல மாணவர்கள் , என்னிடம் படித்தவர்கள் இன்று வெளிநாட்டில் பெரிய அந்தஸ்த்தில் இருக்கிறார்கள் - என்னுடன் இன்னும் தொடர்பில் உள்ளனர் - இருந்தாலும் இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு தமிழ் மாணவன் என் மனதில் ஆழமாக பதிந்து போல வேறு எந்த மாணவனும் பதிய வில்லை - ஒரு நிமிஷம் - நான் professor ஆ அல்லது அவனா என்று என்னை ஸ்தம்பிக்க வைத்து விட்டான் . பார்க்க மிக சாதரணமாகத்தான் இருப்பான் - அவன் பூர்வீகம் கும்பகோணம் - அப்பா ஒரு கோயிலில் குருக்களாக இருக்கிறார் . அம்மா வீட்டில் முடங்கி இருப்பவள் .
அவன் கண்ணில் இருந்த ஒரு ஒளி என்னை அவன்பால் இழுத்தது , வலிய பேச வைத்தது .. என் பல கேள்விகளுக்கு பிறகு அவன் தந்தையப்பற்றி பேச்சு வந்தது . உன் தந்தை எப்படி ? மிக மிக சாதரணமான , casual ஆன கேள்வி - அவன் சொன்ன பதில் என்னை ஒன்றுமில்லை என்று ஆக்கி விட்டது
" சார் , அப்பாவை நான் கற்றுக்கொண்டிருக்கிறேன் " என்று சொன்னான் - அவன் தமிழை திருத்தினேன் - "அப்பாவிடம் இருந்து கற்றுக்கொண்டிருக்கிறேன்" என்று சொல்லவேண்டும் என்றேன் .
" இல்லை சார் , நான் சொன்னது சரிதான் என்றான் !" - நான் class இல் மற்ற மாணவர்களை குழப்புவதற்கும் மேலாக என்னை குழப்பிவிட்டான் . " எப்படி சரி ?" என்றேன் - பதிலில் ஒரு மிகப்பெரிய உண்மையை அவன் எனக்கு உணர்த்தினான் .
" சார் மகனின் ஒவ்வொரு பருவத்திலும் "அப்பா " என்ற வார்த்தைக்கு அர்த்தம் மாறிக்கொண்டே இருக்கும் - அப்பா ஒரு கடவுளுக்கு சமம் - அப்படித்தான் அவர் தெரிவார் நமக்கு முதலில் , பிறகு ஒரு கடமை வீரன் ; பிறகு உணர்ச்சிகளின் உச்சம் ; பிறகு அமைதியின் இருப்பிடம் - மீண்டும் அவர் கடவுளுக்கு சமம் ....
" இன்னும் சரியாக எனக்கு விளங்கவில்லை .. என் முகத்தில் இருந்த அறியாமை அவனை மேலும் விவரிக்கத்தூண்டியது .
" சார் - திருக்குறள் ஒரு தந்தை மாதிரி - ஒவ்வொரு தடவை ஒரு குறளை படிக்கும் போதும் அந்த குறள் வேறு வேறு அர்த்தத்தை தரக்கூடியது . " - குழப்புகிறானே !!! என் கவலை தொடர்ந்தது
" சார் இந்த குறல் உங்களுக்கு தெரிந்திருக்கும் - " நிலையாமை " என்ற அதிகாரத்தில் வருகிறது .
குறள் 336
" நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ்வுலகு "
அதாவது இந்த உலகமானது நேற்று உயிருடன் இருந்தவரை இன்று இல்லாமல் செய்து விட்டோம் என்ற அகந்தையைக் பெருமையாகக் கொண்டதாகும் . வாழ்க்கையில் , மரணத்தின் எதார்த்தங்களை எடுத்துச் சொல்லும் குறள் . திருவள்ளுவர் இப்படி மறைமுகமாக புகழ்வதுபோல் இகழ கூடியவரா ? இதில் இந்த உலகிற்கு என்ன பெருமை இருக்க முடியும் ?? பல கேள்விகள் என் மனதில் ----
இப்படித்தான் சிறு வயதில் படித்திருக்கிறேன் - இன்று அதே குறளை மீண்டும் படிக்கும் பொழுது வேறு வித்தியாசமான அர்த்தம் வருகிறது .
" என் ஆர்வம் அதிகரித்தது -- என்ன அர்த்தம் அது ?"
" இதன் வேறு அர்த்தத்தை சொல்லும் முன் ஒரு சிறிய சம்பவத்தை உங்களிடம் சொல்கிறேன் --- ஒருவர் புத்தரிடம் ஒருவனை அறிமுகம் செய்யும் போது " he is a sinner " என்று சொன்னார் - உடனே புத்தர் " oh ! இவர் ஒரு potential saint " என்று பதில் கொடுத்தார் . அந்த கெட்டவனுக்கு ஒரு ஞானியின் அந்தஸ்த்துக்கு உயர ஒரு வாயிப்பு இருக்கிறது இன்னும் வரப்போகும் காலத்தில் ... இதுதான் புத்தர் சொல்ல வந்தது ...
ஒருவன் எப்பவாவது தவறு செய்திருந்தால் அதே கண்ணோட்டத்தில் தான் இந்த உலகம் அவனை பார்க்கிறது -- அவன் இன்று மாறி இருக்கலாம் என்றே உணர்ந்து கொள்வதில்லை - ஒருவன் திருடன் , கோபக்காரன் என்று ஒரு சமயம் பெயர் எடுத்திருந்தால் அவன் சாகும் வரை அவன் மன்னிக்கப்படுவதே இல்லை . நேற்று கெட்டவனாக இருந்தவன் இன்று திருந்தி ஒரு புது வாழ்வு வாழ ஒரு வாய்ப்பு இருக்கிறது - அதைத்தான் இந்த குறள் சொல்லுகிறது - இப்பொழுது இந்த கண்ணோட்டத்தில் படியுங்கள் - நான் சொல்வது உண்மை என்று புரியும் .
நெருநல் உளனொருவன் இன்றில்லை - நேற்று தீய எண்ணகளுடனும் , பழக்க வழக்கங்களுடனும் இருந்தவன் இன்றில்லை - அவன் மாறிவிட்டான் நல்லவனாக ! இப்படிப்பட்ட ஒரு நல்லவனை அடைந்த பெருமை உடையது இவ்வுலகு --- இப்பொழுதுதான் இந்த உலகிற்கு பெருமை வருகிறது ..
என்னைப்பொருத்த வரையில் இந்த குறளை தவறுதலாக " நிலையாமை அதிகாரத்தின் " கீழ் சேர்த்துள்ளார்கள் .. அப்பாவும் இந்த குறளை போலத்தான் - அவரை சரியாக புரிந்துக்கொள்ளவே முடியாது - ஒவ்வொரு தடவையும் அவரின் பந்தம் புதிய புதிய அர்த்தத்தை , தெய்வீகத்தன்மையை நமக்கு எடுத்துச்சொல்லிகோண்டே இருக்கும்.அதனால் தான் அவரை நான் கற்றுக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னேன் - அவரைப்பற்றி சொல்கிறேன் என்று சொல்வதிலும் , அவரை கற்றுக்கொண்டிருக்கிறேன் என்று சொல்வதிலும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன . கற்று கொள்கிறேன் என்று சொன்னால் பல புதிய அர்த்தங்களை தேடிக்கொண்டிருக்கிறேன் என்று அர்த்தம்
அவன் இப்படி சொன்ன பிறகு எல்லோரிடமும் நானும் என் அப்பாவை கற்றுக் கொண்டிருக்கிறேன் என்றுதான் சொல்லி வருகிறேன் - professor என்பவர் பிறருக்கு பாடங்கள் சொல்லித்தருபவர் மட்டும் அல்ல பிறரிடம் பாடங்களை தெரிந்து கொள்பவரும் கூட ......
https://youtu.be/Ex8glPuXw80
கருவின் கரு - 173
பாகம் 2 - தந்தை
தந்தை - மகன் பந்தம்
மாணவ /வாலிப / திருமண பருவம்
" புரியாதது தந்தையின் அன்பு ; அதை புரிந்துக்கொள்ளாதது பிள்ளையின் பண்பு ;
தெளிவான வேளையில் இன்று , அழகாக சிரித்தது அவன் தந்தைக்காட்டிய அன்பு "
இதுவரை குழந்தைப்பருவத்தைப்பற்றி பார்த்தோம் . காலம் ஓடுகின்றது - பிஞ்சு பாதங்கள் வளர்கின்றது - இதுவரை ஒரு ஹீரோ வாகத் தெரிந்த தந்தை கண்டிப்பானவன் என்பதை மகன் உணர்கிறான் -- அந்த கண்டிப்பில் தன் சுதந்திரம் விலை போகிறது என்ற ஒரு தவறான எண்ணம் அவன் மனதில் உதயமாகுகின்றது - இருவருக்கும் உள்ள அந்த பந்தத்தில் சிறிது இடைவெளி தோன்ற ஆரம்பிக்கின்றது .. ஒரு விவரிக்க முடியாத உறவு இந்த பருவம் . மகன் தந்தையை வெறுக்க வில்லை , ஆனால் விலகி இருக்க அவனுக்கு சூழ்நிலைகள் உதவியாக இருக்கின்றன - மகன் தவறான வழியில் செல்லக்கூடாதே என்ற கவலை தந்தைக்கு - தான் செல்லும் வழியில் தந்தை வந்துவிடக்கூடதே என்ற கவலை மகனுக்கு ----
https://www.youtube.com/watch?v=GD9IuPqN5ZI
7000 -முத்தான பதிவுகளை அளித்த அருமை ராகவேந்திரன் சாருக்கு என்னுடைய சிறப்புப் பதிவுப் பரிசு.
http://i61.tinypic.com/4zx7yb.jpg
'நடிப்பின் கல்தூண்' வேல் கதை சொல்லி 'கல்தூண்' படத்தில் பாடும் பாடல்.
வேல் பூஜை.
வேல் நட்ட கதையை வேங்கை வெளிப்படுத்தும் பாடல்.
ஊரே வணங்கும் பரமேஸ்வர கவுண்டரின் மூத்த மகன் திக்குவாய் கணபதி, கல்லூரிப் படிப்பு படித்துக் கொண்ருக்கும் திமிர் பிடித்த இளைய மகன் பழனிச்சாமி, கவுண்டரின் மனைவி, அந்த ஊரின் எக்ஸ்.எம்.எல்.ஏ இன்னும் பிறரும் வேல் பூஜைக்காக தங்கள் கிராமத்தின் கோவிலுக்கு வருகின்றனர்.
பரிவட்டம் கட்டி பூஜை செய்ய பூசாரி தயாராகிறார். முறைப்படி மூத்த மகனுக்கு பரிவட்டம் கட்டி பூஜை ஆரம்பிப்பது மரபு. வில்லன் எம்.எல்.ஏ இளைய மகனை தூண்டி விட்டு பரிவட்ட ஆசையை அவனிடம் வளர்க்கிறான். பூசாரியிடம் தனக்கே பரிவட்டம் கட்ட வேண்டும் என்கிறான் இளையவன். 'அது முறையல்ல... குல வழக்கப்படி மூத்த பிள்ளைக்குத்தான் பரிவட்டம் கட்ட வேண்டும்' என்று பூசாரி எடுத்துச் சொல்லியும் இளையவன் கேட்காமல் யாரும் தொடக் கூடாத, பெரிய சரித்திரத்தை பின்னால் தன்னகத்தே கொண்டிருக்கும், கோவிலின் முன்னால் கம்பீரமாக நிற்கும் அந்த வேலைத் தொடப் போகிறான் தொடரப் போகும் விளைவுகளைப் பற்றி ஒன்றும் தெரியாமல்.
தொடப் போனவனுக்கு தொடை நடுங்கும்படி ஓர் அடி விழுகிறது. சுருண்டு விழுந்தவன் எழுந்து பார்த்தால் நிற்பவன் தந்தை பரமேஸ்வர கவுண்டர்.
ஒருமுறை நட்ட வேல் மறுமுறை மண்ணிலிருந்து எடுக்கப்பட்டால் ரத்தம் குடிக்காமல் மீண்டும் மண்ணில் பதியாது... புதையாது. அப்படிப்பட்ட பாரம்பரிய சக்தி மிகுந்த வேல். சாமானியர் எவரும் கை வைக்க முடியாத வேல்.
வேலின் பின்னணிக் கதையை தந்தையிடம் கேட்கிறான் மகன்.
"சொல்றேண்டா! நீ மாத்திரமில்ல....இங்க இருக்கிற எல்லாரும் தெரிஞ்சுக்கணும்...இந்த வேலைப் பத்தின கதையை சொல்றேன் கேளுடா''
என்று கையில் ஆவேசமாக உடுக்கை எடுக்கிறான் தந்தை. எடுத்து அதை அடிக்க ஆரம்பிக்கிறான். வேலின் கதையை அனைவரும் உணரும்படி பாட்டாகப் பாடுகிறான். கதையின் பின்னணி உணர்ச்சியால் துடிக்கிறான். வேலின் பெருமையை வேதனையோடு கூறுகிறான். அந்தத் தந்தை சொல்லும் கதை தான் என்ன?
ஏழுதலைமுறைக்கு முன்பு இருந்த, கவுண்டரின் வம்சத்தில் வந்த வீர மகன் ஒருவன் நட்ட வேல் அது. குற்றவாளிகளை கொன்று தீர்க்கும் ஒரு வேலையைத் தவிர வேறு வேலை ஒன்றும் அறியாத புனித வேல்.
பகைவரையும் அஞ்ச வைத்து அவர்கள் குருதியையும் பொங்க வைக்கும் பொன்னான வேல். பாவம் செய்தவர்களுக்கு பாடம் புகட்டும் பக்தி தேவதையின் சக்தி வேல். பந்த பாசங்களுக்கு இடம் கொடாமல் பூமி விட்டு வெளி வந்தால் உயிர் வாங்கித்தான் மீண்டும் மண்ணில் பதியும் அந்த வேல்.
நாச்சிமுத்து கவுண்டன் என்ற நயவஞ்சகனுக்கு நல்ல பெண்டாட்டியாய் ஒருத்தி. குலமகளாய் குணமகளாய் குணவதி அவள் தாரமாய் வாய்த்தும் நாச்சிமுத்துக் கவுண்டன் நாடியது தராதரம் கெட்ட நங்கைகளை. வைப்பாட்டி என்னும் வழி தவறிய பெண்களை.
அவன் பத்தினித் தெய்வமோ அழகான ஒரு ஆண் பிள்ளை பெற்று இருந்தாள். இன்னொருத்தியுடன் கொஞ்சிக் குலாவிய கணவனை தடுக்கும் மனைவியை தன் மகன் சிறுவன் கண்முன்னே போட்டு உதைத்தான் நாச்சியப்பன். பையன் மனதில் வஞ்சம் முளைத்தது. தகப்பன் மேல் தாளமுடியாக் கோபம் பொங்கியது. நித்தம் அடி வாங்கும் தாயின் நிலை கண்டு சிறுவனுக்கு வாய் பேச்சு நின்று போனது. வாய் இழந்தாலும் வஞ்சம் வளர்ந்தது அந்த பிஞ்சு நெஞ்சில். தாயின் மேல் தொடரும் தந்தையின் தொடர் தாக்குதல்களில் வாய்விட்டு கதற முடியாமல் பதிலுக்குக் கண்ணீர் விட்டுக் கதறி, காவிரியின் வெள்ளத்தைத் தோற்கடித்தான் கற்புக்கரசி பெற்ற மைந்தன்.
ஊர் பெயரைக் கெடுத்த ஊதாரிச் சிறுக்கி ஒருத்தியின் கைப்பாவை ஆனான் காமுகக் கணவன். அந்த ஊர் கெடுப்பவளோ 'மனைவியைக் கொன்று போடு' என்று மண்டியிட்டுக் கிடப்பவனிடம் கண்டிப்புடன் கட்டளை பிறப்பிக்கிறாள். "பட்டத்து ராணியை நீ பல்லாக்கில் அனுப்பி வைத்தால்தான் படுக்கைத் துணைக்கு என்னை பாங்காகப் பயன்படுத்த முடியும்" எனவும் நிபந்தனை விதிக்கிறாள்.
வேசியின் பேரழகில் சொக்கிக் கிடந்தவன் வேதமாக அவள் சொல்லை மதித்தான். மனைவியை மகன் கண்முன்னே கழுத்தை நெரித்து மரண வாசலில் தள்ளினான் அந்த மதி கெட்டவன்.
அப்பாவின் அக்கிரமத்தைப் பார்த்தான் மகன்.
அம்மா கொலையுண்டதைக் கண்டான் மகன்
அதிர்ச்சியில் அன்று நின்று போன வாய் இன்று
அதே அதிர்ச்சியில் 'அம்மா' என்று அலறியது....கதறியது...ஓலமிட்டது.
அம்மாவைச் சாய்த்த அப்பனைச் சாய்க்க ஆங்காரத்துடன் புறப்பட்டான் ஆண்மகன்.
ஆனால்
கண்மூடுமுன் கற்புக்கரசி கனலாய் நிற்கும் மகனைப் பார்த்து பாசத்தால் அவனைக் கட்டி, பாதகக் கணவனை பாடை போகும் போதும் கூட மகனிடமிருந்து பாதுகாத்துவிட்டுத்தான் பயணம் மேற்கொள்ளுகிறாள்.
நீறு பூத்த நெருப்பாய் மகன் மனதில் பழி கனன்று கொண்டிருந்தது. அப்பனின் அக்கிரமமோ அதிகமாகிப் போய்க் கொண்டே இருந்தது. சிறுவன் வாலிபனாய் வளர்ந்து போனான். உடன் சினமும் சிதறாமல் உள்ளே வளர்ந்து கொண்டிருந்தது.
உச்சமாய் அப்பன் கொடுந்தவறு ஒன்றை செய்ய தலைப்பட்டான். ஊர் பித்தமாக ஊரை எதிர்த்து கள்ளுக்கடை திறக்க சித்தமானான். அதுவரை பொறுத்த மகன் பொங்கினான். தாய் கடைசியில் வாங்கிய வாக்கு நினைவில் இருந்தது.
தாய் தவித்து இறக்கும் போது தனயனிடம் உறுதி வாங்கிக் கொண்டது.
"என்னைக்கு உங்க அப்பனின் அக்கிரமம் எல்லை மீறி ஊர் அழிக்குமோ அன்றைக்கு நீ அவனை அழித்து விடு... அதுவரை பொறுத்து விடு"
வம்ச மகன் நட்ட வேல் வஞ்சம் தீர்க்க இந்த மகனால் இப்போது மண்ணிலிருந்து பிடுங்கப்பட்டது. பிதாவின் உயிர் பிள்ளையினால் பரிதாபமாய் பறி போனது.
ஆமாம்! ஆறுபடை வேலனாக புதைந்த வேலெடுத்து, தந்தை பிள்ளை பாசம் அறுத்து, சூரபத்மன் மேனிதனில் வேல் பாய்ச்சி, ரத்தம் தந்த ரத்த உறவின் ரத்தம் பதிந்த வேலை மீண்டும் மண்ணில் புதைத்தான் மகன்.
வேலின் மானம் காத்தான் வேங்கை.
மகனிடம் இந்தக் கதை சொல்லி, வேலின் பெருமை சொல்லி, அங்கிருப்பவர்களுக்கு அதன் மகத்துவத்தைப் புரிய வைத்தார் பரமேஸ்வர கவுண்டர்.
http://i60.tinypic.com/v82z3o.jpg
வேங்கை பாய்ந்து பார்த்திருப்பீர்கள். சிங்கம் சீறி பார்த்திருப்பீர்கள். இதையெல்லாம் தாண்டிய சீற்றத்தைப் பார்த்திருக்கிறீர்களா? இதோ பாருங்கள்..இங்கு பாருங்கள்... இப்போது பாருங்கள்.
பரமேஸ்வரக் கவுண்டராய் பரம்பரை வேலின் கதையை உடுக்கை அடித்து உறுமியபடி, ஊரார் முன் பாடலாய் உரைத்தபடி உலவும் நடிப்புச் சிங்கத்தின் சீற்றம் பாருங்கள். அங்கங்கள் துடிக்க அலைபாய்ந்த நடையுடன் அத்தனை பேர் மத்தியில் கம்பீரக் களிநடம் புரியும் நடிப்புக் கடவுளின் நடிப்பைக் காணுங்கள்.
பரமேஸ்வரக் கவுண்டராய் பரமேஸ்வர வேடம் பூண்டவர். நடிப்பில் நம்மை ஆண்டவர்...நடிப்பின் ஆண்டவர்... நடிகர் திலகம் உடுக்கை அடித்து இந்தப் பாடலைப் பாடும் போது நம் சகல அங்கங்களும் ஒடுங்கிப் போகின்றன. சப்த நாடிகளும் அடங்கிப் போகின்றன.
உடுக்கை வாங்கி, அம்மனை வணங்கி, அடிக்க அராம்பிப்பாரே! நடிப்பை வடிக்க ஆரம்பிப்பாரே!
கைவைத்த பனியனும் வேட்டியும் அணிந்து, இடுப்பில் கட்டிய பட்டுத் துண்டுடன், உச்சந்தலையில் உன்னதம் காட்டும் கம்பீரக் குடுமியுடன், கையில் கட்டிய காப்புடன், கழுத்தில் செயினுடன் ருத்திராட்சக் கொட்டை மாலையுடன், நெற்றியில் நீறு குங்குமம் இட்டு காதில் கடுக்கணுடன், முறுக்கிய அடர் மீசையுடன் எனது கடவுள், நடிப்பைக் காத்த கடவுள் கையில் உடுக்கையுடன் உறுமியபடி களம் இறங்குமே!
அந்த அழகுக் கம்பீரத்தை உங்களுக்கு நான் எப்படிச் சொல்ல?!
'ஏழு தலைமுறையில் முன்பிருந்ததொரு
எங்கள் வம்சமகன் நட்ட வேல்'
என்று உடுக்கை அடியில் அதிசயங்கள் தொடங்க ஆரம்பித்து இதே வரிகள் உடுக்கை ஒலி இல்லாமல் ஒலிக்க, வரி முடிந்ததும் குளோஸ் -அப்பில் தலையை சற்றே சாய்த்து, படுகம்பீரத்துடன் பாடலைத் துவங்குவார் பார் புகழும் நடிக மன்னர். (கே.ஆர்.விஜயா நடிகர் திலகத்தை மெய்மறந்து பார்ப்பார்)
'எங்கள் வம்சமகன்' என்னும் போது புருவங்களுடன் நெற்றி ஏறி இறங்கி குலத்தின் பெருமையை அருமையாக பேசும். 'முன்பிருந்ததொரு' எனும் போது கண்களை கம்பீரமாக மூடித் திறப்பார்.
உடன் உடுக்கை அடிக்கும் அழகைப் பாருங்கள். காதருகே உடுக்கை வைத்து அந்த சப்தத்தைக் கேட்டவாறே தலையாட்டும் தன்னிகரில்லா அழகு.
எந்த நாளினிலும் குற்றவாளிகளைக்
கொன்று தீர்த்துவிடக் கற்ற வேல்
வலதுகால் முன்வைத்து, வீராவேசமாக நடந்து வந்து, அதே நேரம் வலது கையை முன் நீட்டி, ரௌத்திரம் காட்டி,
பகைவர் அஞ்சவரும் குருதி பொங்க வரும்
பழியை வாங்க வரும் வீர வேல்
பாவம் செய்தவர்க்கு பாடமாக வரும்
பக்தி தேவதையின் சக்தி வேல்
என்று அம்மன் கடவுள் பக்கம் ஆக்ரோஷமாகத் திரும்பும் திகைப்பூட்டும் திரைக் கடவுள்.
பந்த பாசங்களை எந்த நாளினிலும்
பார்ப்பதில்லை இந்த வெற்றி வேல்
என்று பாடி திரும்ப சற்றே வசன நடையில் மீண்டும் உச்சரிக்கும் உறுமல்.
இந்த பூமி விட்டு வந்த போதும்
உயிர் வாங்கித்தான் பதியும் இந்த வேல்
என்று பலி வாங்கும் வேலின் பழிதீர்த்தலை பட்டவர்த்தனமாக பார்ப்போருக்கு உரைக்கும் தீர்க்கம்.
இது முடிந்தவுடன் மிக மிக அருமையான உடுக்கை சப்தத்துடன் மிகவும் ஒன்றி லயித்து அங்கிருப்பவர்களை வட்டமிடுவார்.
இளைய மகனிடம் வந்து நின்று உடுக்கை தட்டியபடி, அதற்குத் தக்கவாறு தலையை ஆட்டியபடி,
மாரியாத்தா சந்நிதியில் வேலெடுத்து நட்டு வச்ச
காரணத்தை சொல்றேன் கேளடா
அட மானமுள்ள நாச்சியப்பன் ஆனபழி தீர்த்துவிட்டு
தானெடுத்து நட்ட வேலடா
அடடடா! இந்த வரிகளை முடித்தவுடன் வெறும் உடுக்கை சப்தம் மட்டுமே. உடுக்கை அடிப்பார் பாருங்கள் எம் மன்னவர்! காணக் கோடிக் கண்கள் பத்தாதய்யா பத்தாது. பார்க்கும் நமக்கு உடல் சில்லிட்டுப் போகும். உதடுகளை ஒன்று குவித்து தலையை வலதும் இடதுமாய் ஆட்டி, தன்னையறியாமல் மனம் லயித்து, இவர் உடுக்கை அடிக்கும் அதிசய அற்புதம் எழுத்துக்களால் வர்ணிக்க முடியாதது. இந்த ஒரு இடத்தை மட்டும் எத்தனை முறை பார்த்து ரசிக்கலாம் தெரியுமா!
இந்தக் காட்சியை பார்க்கும் போது என் கண்களில் என்னையுமறியாமல் ஏதோ இனம் புரியாத சோகக் கண்ணீர். மனம் பாரப்பட்டது. இந்த தெய்வம் பிறந்த மண்ணில்தானே நானும் பிறந்தேன் என்ற மார் தட்டும் பெருமையும் என்னை குடி கொண்டது.
நாச்சிமுத்து கவுண்டரு கட்டி வந்த பெண்டாட்டி
நல்லவள் ஒருத்தி இருந்தா
அவ உள்ளபடி தானிருக்க ஒன்பது பேர் வைப்பாட்டி
ஊருக்குள்ளே கூட இருந்தா
உத்தமமாம் பத்தினியாய் சத்தியம் தவறாமல்
ஒத்த பிள்ள பெத்து இருந்தா
அந்த பச்ச புள்ள முன்னிலையில்
பத்தினியை நாச்சிமுத்து நித்தமுமே போட்டு உதைச்சான்
நித்தமுமே போட்டு உதைச்சான்
மேற் சொன்ன வரிகளில் பிளாஷ்பேக் காட்சிகள் மிக அருமையாக தொகுக்கப்பட்டு காண்பிக்கப்படும். வரிகளில் கதை அற்புதமாய் புரியும். பதிவில் நான் கொடுத்திருக்கும் கதையைப் படித்தால் ஆழமாகப் புரிந்து கொள்ளளலாம்.
இது முடிந்ததும் நடிகர் திலகம் அந்த பிளாஷ் பேக் காட்சிகளை அப்படியே உள்வாங்கி, தாய் படும் கஷ்டத்தை காணச் சகியாத அந்த பிள்ளையின் மனநிலையை அப்படியே உடுக்கை அடித்தவாறு நமக்குக் காட்டி, அந்த சோகத்தைக் கூட கம்பீரமாக மாற்றி, நம் மனதில்தான் எத்துணை ஆழமாக நடந்த சம்பவங்களைப் பதிய வைக்கிறார்!
குளோஸ்-அப் காட்சியில் இவரின் முகபாவம் எப்படியெல்லாம் விந்தை புரிகிறது! அந்த பாவங்களில் நம் சிந்தையும் குளிர்கிறது.
திரும்பவும் பிளாஷ் பேக் காட்சிகள்.
தாய் வடித்த கண்ணீரை தான் பார்த்த பிள்ளைக்கு
வாய்ப்பேச்சு நின்னதேயடா
பிள்ளை வாயிழந்து போனாலும் பால் குடித்த நெஞ்சுக்குள்ளே
வஞ்சம் ஒன்னு வந்ததேயடா
சைடு ஆங்கிளில் உடுக்கை அமர்க்களம்.
வெள்ளாட்டி முன்னிலையில் வெள்ளாடு போல
அவள் வேதனையும் கொஞ்சமல்லடா
அந்த வேதனையைப் பார்த்த பிள்ள தானழுத்த கண்ணீரு
காவிரியை மிஞ்சுமேயடா
'காவிரி' எனும் போது காவிய மகன் மீண்டும் காட்டப்படுவார். உலகில் உள்ள அத்தனை நடிப்பு நுட்பங்களும் இந்த மனிதருக்குள் புகுந்து புயலாய் வெளிப்படும் இந்த நேரத்தில்.
'காவிரியை மிஞ்சுமேயடா' என்று தோள் பட்டைகளையும் உடலையும் வெளிப்பக்கம் வாங்கியவாறு, வாயைப் பிளந்து அழுதபடி, அனுபவித்த வேதனையை எண்ணி உருகும் இடம் ஒன்று போதும் இவர் நடிகரல்ல நடிக தெய்வம்...நடிகர்களுக்கெல்லாம் தெய்வம் என்று காட்ட.
இருநூறுக்குப் பிறகு ஒன்றுமில்லை என்று சொல்வோர் இந்தப் பாடலில் இந்த மந்திரஜால நடிப்பு மன்னனின் அசைவுகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்? பதில் சொல்ல இயலுமா உங்களால்?
வண்ணமுள்ள பெண்ணொருத்தி வஞ்சகனுக்கு
வாய்த்து விட்டாள்
பின்னும் அவள் போன கதை பெருசாச்சு
அந்த பேரழகி சொன்னதுதான் செயலாச்சு
பட்டத்து ராணியை நீ பல்லாக்கில் அனுப்பி விட்டால்
பக்கத்தில் நானிருப்பேன் என்றாளே
அந்த பாதகன் மனைவி தன்னைக் கொன்றானே
பாதகன் மனைவி தன்னைக் கொன்றானே
ப்ளாஷ்-பேக் காட்சி முடியும். மீண்டும் காமெரா நடிகர் திலகத்திடம் வரும்.
அப்பாவின் செயல் பார்த்தான்
அம்மாவின் கொலை பார்த்தான்
அப்போது சீறி வந்தான் ஊமையடா
அம்மா அம்மா அம்மா
பேசி அம்மா அம்மா வென்றே துடித்தான் பிள்ளையடா...
மீண்டும் குளோஸ்-அப். 'அம்மா அம்மா' வென்று கூறும்போது சாதனை நிகழ்த்தும் வாயசைப்புக்கள். உள்ளே நடித்துக் கொண்டிருக்கும் நாக்கு. உணர்ச்சிகளின் பிழம்பாய் அந்த முகம். தாயை இழந்த பிள்ளையின் முகத்தை இங்கே காணலாம். அந்த சோகத்தை இங்கே உணரலாம்.
திரும்பவும் காட்சி கதைக்குத் திரும்பும்.
கண்ணிலே நெருப்பெடுத்த வண்ணமகன் தான் பார்த்து
பெண்ணரசிதான் அழைத்தாள் அன்பினிலே
தன் பேச்சினால் அடக்கி விட்டாள் முடிவினிலே
பேச்சினால் அடக்கி விட்டாள் முடிவினிலே
இப்போது மீண்டும் சிங்கத்தின் ஆக்ரோஷமான ஆக்டிங்.
பாடலுடன் நடிப்பும் வேகம் எடுக்கும்.
கட்டுப்பட்ட அந்த மகன் காத்திருந்தாண்டா
அந்தக் காலம் வரும் வேளை வரை காத்திருந்தாண்டா
தட்டுக்கெட்ட அந்த எமன் பங்காளியானான்
மகன் தாயுரைத்த வாக்கின்படி பகையாளியானான்
ஆறுபடை வேலனென ஆடி வருகின்றான்
சூரபதன் மேனிதனில் பாய வருகின்றான்
தந்தையென பிள்ளையென பாசம் இனி இல்லை
சந்ததியில் இந்த வடி வேல் உரைக்கும் எல்லை
பாடல் முடிந்ததும் மீண்டும் உத்தமரின் உடுக்கை முழக்கம்.
பின் வசன மழை.
'அந்த நாச்சியப்பன் நட்ட வேல்தாண்டா இது.
இந்த வேல் என் பரம்பரையின் வரலாறு...
கட்டின பொண்டாட்டிக்கு துரோகம் செய்தவனுக்கு இது ஒரு சிம்ம சொப்பனம்...
ஊரைப் பகைச்சுக்குற அயோக்கியனுக்கு இது ஒரு பாடம்....
என் பரம்பரையில பொறக்குற தலைச்சன் புள்ளதான் இந்த வேலைத் தொட்டு பூஜை பண்ணனும்...'
என்று ஆணித்தரமாகத் தொடருவார்.
அப்பாடி! என்ன ஒரு காட்சி! எப்படிப்பட்ட பாடல்! கதைக்குப் பொருத்தமான வரிகளை கண்ணதாசன் மிக அற்புதமாக வடித்துத் தந்திருப்பார். பாடலுக்கேற்ற அருமையான கதை சொல்லும் மேஜரின் இயக்கம். பொருத்தமான நடிகர்கள் தேர்வு. உடுக்கையின் இடி மழை, 'மெல்லிசை மன்னரி'ன் வல்லிசை, அச்சு வார்த்து எடுத்த மாதிரி நடிகர் திலகத்திற்காக உணர்ச்சி ததும்பப் பாடும் 'பாடகர் திலகம்',
இவை எல்லாவற்றையும் தூக்கி 'டபக்'கென்று வாயில் போட்டு விழுங்கி ஏப்பம் விட்டுக் கொள்ளும் நடிகர் திலகத்தின் ஈடுஇணையில்லா நடிப்பு. நடிப்பின் அரிச்சுவடி அறியாதவன் கூட இந்தப் பாடலில் நடிகர் திலகத்தின் நடிப்பைப் பார்த்தால் நடிப்பை உணர்வதில் பண்டிதனாவான்.
வி.கே.ஆர், மனோரமா, கே.ஆர்.விஜயா, கல்தூண் திலக்ஜி, சதீஷ், நாகேஷ், கோகுல்நாத், வாணி இன்னும் பலர் சுற்றியிருக்க அத்தனை பேர் மத்தியில் ஒற்றை ஆளாய் ஒப்பற்ற நடிப்பை வாரி வழங்கி, 'என்றுமே நான் நடிப்பில் எவரும் முந்த முடியாத தனிக் காட்டு 'ராஜா' என்று நடிகர் திலகம் நிரூபிப்பதோடு 'என்னுடைய பின்னாளைய படங்களையும் பாருங்கள்...அதில் கொஞ்சமும் என் நடிப்பு சளைத்ததல்ல...குறைந்ததல்ல' என்று சவால் விடுவது போல் தோன்றுகிறது.
நீங்களே பார்த்துவிட்டு சொல்லுங்கள்.
https://youtu.be/Oz_lxmyaQSo
வாசு - இந்த திரிக்கு ஒரு கல்தூணாக இருக்கும் நீங்கள் , கல்தூண் படத்தைப்பற்றி ஏன் இதுவரை அலசவேயில்லை என்ற ஒரு கேள்வி என் மனதில் நீண்ட நாட்களாக இருந்து வந்தது . எப்படியோ என் மனதைப்படித்து விட்டீர்கள் - இன்று திரிக்கு வந்தால் ஒரே ஆச்சிரியம் - " "பாலாவிற்கு " சற்றே ஒய்வு கொடுத்து கல்தூணில் எங்களை கரைய வைத்துவிட்டீர்கள் - நீங்கள் எழுதி இருப்பது மிகையே அல்ல - அத்தனையும் உண்மை. "பாபனாசத்தில் "கமல் சொன்னதைப்போல - நடிகர் திலகத்தை , அவர் நடிப்பை பாராட்ட தெரியாதவர்கள் ஒரு நல்ல ரசிகனாக இருக்க முடியாது - இந்த படமும் மேஜரை காப்பற்றவேண்டி நடித்துக்கொடுத்த படம். ஓஹோ என்று ஓடி வசூலில் சாதனை பண்ணியப்படம் - தலைவரும் , கே .ஆர் விஜயாவும் மாட்டு வண்டியில் செல்லும் போது , பின் இசையில் , தலைவரின் பராசக்தி யில் வரும் " கா கா " பாடல் மலரும் நினைவுகளை உண்டாக்கும் .
திரு ராகவேந்திரா அவர்களுக்கு இதற்கும் மேலும் ஒருவர் சிறப்பான பரிசைக்கொடுத்திருக்க முடியாது - அவருக்கு பரிசு என்று நீங்கள் அறிவித்து இருந்தாலும் எங்கள் எல்லோருக்குமே சமமாக வழங்கியுள்ளீர்கள் - உங்கள் பரந்த மனம் எங்களை புல்லரிக்க வைக்கின்றது - ஏன் ஒரு இலவச இணைப்பும் இல்லை இந்த தடவை - ஏன் ஏன் ஏன் ???
ராகவேந்திரா சார் - 7000 பதிவுகள் !! - நடிகர் திலகத்தின் நடிப்புக் கூட என்னை இவ்வளவு அசர வைத்ததில்லை - இதன்பின் எத்தனை உழைப்பு , ஈடுபாடு , தன்னடக்கம் , தளராமை , தன்னம்பிக்கை - உங்களிடம் கற்று கொள்ளவேண்டும் இவை எல்லாவற்றையும் - நல்ல தேக ஆரோக்கியத்துடன் இன்னும் பல்லாயிரம் பதிவுகள் நீங்கள் இட வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை மட்டும் அல்ல , பிராத்தனையும் தான்
தாம்பத்யம்....இது..தாம்பத்யம்...
"உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி என் கண்ணில் பாவையன்றோ கண்ணம்மா என் உயிர் நின்னதன்றோ..."பாரதியின் இந்த இரண்டு வரிகளை இரவல் வாங்கிக் கொண்டு மீதி சந்தங்களை இதன் பொருளுக்கு முழு நீதி வழங்கி இருக்கிறார் கவியரசர் .இசையமைத்திருப்பவர் திரை இசைத் திலகம்..பாடலுக்கு உடல் நடிகர் திலகம்,பத்மினி அம்மா...உயிர் டி .எம்.எஸ்.......ஏற்ற இறக்கங்களுடன் பாடலை ஒரு இறவாப் பாடலாக்கி இருப்பார்.நடிகர் திலகமும்,பப்பிம்மாவும் வாழ்ந்திருப்பார்கள்.ஒரு ஆங்கிலேயக் கம்பெனியில் தலைமை அதிகாரியாக இருந்து பிரஸ்டிஜ் பத்மநாபன் என்று வலம் வரும் கம்பீரம்....ரிட்டைர்மேன்ட்டுக்குப் பிறகு சுருங்கி தன் நிலை தடுமாறி மனைவியிடம் குமுறும் குழந்தையாய்...குழந்தையை தேற்றி வாரி அணைக்கும் தாயாய் மனைவி ......காட்சி மனசை அரிக்கும் என்றால் பாடல் நெஞ்சைப் பிளக்கும்...பிள்ளைகள் மதிப்பதில்லை,மருமகள் சரியில்லை,மகளுக்குத் திருமணம் செய்யவில்லை...பாரம் நெஞ்சை அழுத்த ஒரு ஈசிச்சேரில் நடிகர் திலகம்..காலடியில் சாதாரண தேவேந்திரா மடிசார் புடவையிலும்,எளிமையில் அழகு மயிலென பப்பிம்மா...காட்சியை ரவி வர்மா பார்த்திருந்தால் சித்திரமாய்த் தீட்டி இருப்பார்...பப்பிம்மா கண்களில் குளமென கண்ணீர்...பாடல் பிறக்கிறது...""உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி...என் கண்ணில் பாவையன்றோ கண்ணம்மா என் உயிர் நின்னதன்றோ?"'உன்னைக் கரம் பிடித்தேன் வாழ்வு ஒளிமயமானதடி ..பொன்னை மணந்ததால் சபையில் புகழும் வளர்ந்ததடி 'அவர்களுக்குள் ஒரு ப்ளாஷ் பேக் ......அவர்கள் திருமணம்....அம்மாஞ்சி அய்யராத்து பைய்யன் நடிகர் திலகத்தின் பஞ்சகச்சமும் நெத்தியில் வீபூதியும்....அழகு....மடிசார் புடவை,நெத்தியில் பட்டம்,சுட்டி,ஜடை சிங்காரம்,குஞ்சலம்,கொள்ளைப் பூ,கை கொள்ளாம வளையல்கள்........அந்த எடுப்பான மூக்கில் முத்துந்தளுக்கு,பேசரி........இந்த அழகைச் சொல்ல இதற்கு மேல் வார்த்தை ஏதும் இல்லை.....அவளைக் கரம் பிடித்த நாள் முதல் அவருக்கு ஏறு முகம்...பொன்னை மணந்ததால்....இங்கே சொல்ல வந்திருப்பது அவளுடைய தங்கமான குணம் பற்றி....அவளால் அவனுக்கு சமுதாயத்தில் ஒரு தனி அந்தஸ்து...காலம் நகர்கிறது...பிள்ளைகள் ..பல சுமைகள்.."கால சுமைதாங்கி போல வாழ்வில் எனைத் தாங்கி வீழும் கண்ணீர் துடைப்பாய் அதில் என் இன்னல் தணியுதடி..."'ஆலம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் வந்துமென்ன ?வேர் என நீ இருந்தால் அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்."....காலச்சுமையில் நான் ஓய்ந்து சாயும் பொழுதெல்லாம் என்னைத் தாங்கி என் கண்ணீரைத் துடைக்கும் பொழுது என் இன்னல்கள் துயரங்கள் தவிடு பொடியாகிறது....ஊஞ்சலில் சாய்ந்து கொண்டு நடிகர் திலகம்,அவர் முகம் பார்த்து விம்மும் பப்பிம்மா....சில்வுட் என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்...அதுவே இது..பிள்ளைகள் ஆதரவு இல்லை..."முள்ளில் படுக்கையிட்டு இமையை மூட விடாதிருக்கும் ..பிள்ளைக் குலமடியோ என்னைப் பேதைமை செய்ததடி பேருக்குப் பிள்ளை உண்டு பேசும் பேச்சுக்கு சொந்தமுண்டு என் தேவையை யாரறிவார் உன்னைப் போல் தெய்வம் ஒன்றே அறியும்"...படுக்கை என்றதும் திருமண முதலிரவு நெஞ்சில் நிழலாடுகிறது...அதை வீழ்த்துகிறது நிகழ்காலம்...முள்ளில் படுக்கை..இமைகள் மூட மறுக்கின்றது....பேருக்குப் பிள்ளைகள் ....சொந்தம் என்று சொல்லிக் கொள்ள...ஆனால் அவர்களால் ஒரு பயனும் இல்லை...என் தேவைகளை உன்னையன்றி வேறு யார் உணர்வார்கள்...அந்த தெய்வம் தவிர?.....அவளை அவரின் காவல் தெய்வம் என்றே சொல்கிறார்....தாம்பத்யம்...இது....ஆஹா....வாழ்ந்திர ுக்கும் இந்த ஜோடியை காலம் உள்ளவரை தாம்பத்யம் உள்ளவரை யார் மறக்க முடியும்.....நெஞ்சில் என்றும் ஒரு ராகமாய்.....https://www.youtube.com/watch?v=3H8cGM7n0V0
courtesy fb
From Alibabavum 40 thirudargaLum (1956)
maasilaa uNmai kaadhale maarumo selvam vandhapodhile......
http://www.youtube.com/watch?v=O86AY8mShjY
From the original, Alibaba aur 40 chor(1954)
Ae saba unse keh sara.......
http://www.youtube.com/watch?v=89HhxS8DHj8
vasu: I don't have exclusive rights to post jugalbandi songs. You may post jugalbandi songs you like,preferably songs from movies after 1965, the year I left for the US. I did not watch any Indian movies after 1965 until VCRs became available as consumer electronics and Indian movies were available on tape ! :) Have fun !
-
குமார் சார்,
கிடைத்தற்கரிய அற்புத பழைய சினிமா விளம்பரங்களை பதித்து திரிக்கு பெருமை சேர்த்துள்ளீர்கள். இதையெல்லாம் காணும் போது மனம் அந்த காலத்திற்கே பறக்கிறது. அற்புதமான ஆவணங்களுக்கு நன்றிகள்.
ரவி சார்,
தங்கள் பாராட்டிற்கு மிகவும் நன்றி! கல்தூணின் உடுக்கை பாடல் என் உணர்வுகளோடு சங்கமம் ஆனது.
தங்களின் தந்தைக் கரு அமர்க்கமாகத் தொடர்வது மகிழ்ச்சியைத் தருகிறது. அருமையான நிறைய விஷயங்கள் பாடலோடு.
'அப்பா வந்தார்' குறும்படம் அருமை. நன்றி ரவி சார்.
குழந்தைப் பருவத்திற்கு கல்தூண் படப் பாடலான 'சிங்கார சிட்டுத்தான்' பாடல் நல்ல தேர்வு.
" நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ்வுலகு "
குரலுக்கு விளக்கம் அருமை.
ஆமாம்! நண்பர்கள் எல்லாம் எங்கே போனார்கள்? கல்ஸ் காணோம். ஆதிராம் சார் எங்கே? ராஜேஷ்ஜியும் அவ்வளவாகக் காணோம்? சி.க இன்னும் டூர் முடிக்கவில்லை.
vanakkam
vanakkm rajesh - I was about to file a FIR - thanks for returning to home safely .
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்
http://2.bp.blogspot.com/-HRNJSnA1-8...Y/s320/spb.jpg
(நெடுந்தொடர்)
16
'மங்கையரில் மகராணி'
பாலாவின் மாணிக்க மகுடப் பாடல் இந்தத் தொடரில்.
http://i.ytimg.com/vi/5huvLv-R-Lg/maxresdefault.jpg
ஒன்று சொல்வார்கள்.
'நீ இறப்பதற்கு முன் இந்த 100 தமிழ்த் திரைப்பாடல்களைக் கேட்டுவிட்டு கண்மூடு. (100 tamil films songs to hear before you die) அப்போதுதான் உன் பிறப்பின் பயன் முழுமையாகச் சேரும்'
உண்மைதான். இசைக்கு அவ்வளவு மகத்துவம் உண்டு. அதுவும் தமிழிசைக்குத் தனி மகத்துவம். பொற்காலப் பாடல்கள் சொல்லொணா விசேஷங்கள் உடையது.
அப்படி தமிழ்த் திரைப்பாடல்களில் நம் வாழ்நாள் முழுதும் கேட்டுக் கொண்டே மகிழ சில பாடல்களை இசைச் சக்கரவர்த்திகளும், பாடகர்களும் நமக்கு அளித்திருக்கிறார்கள். அவை நம் வாழ்வோடு கலந்தவை
http://mrpopat.in/admin/upload/video...1780205176.jpg
அந்த மாதிரிப் பாடல்களில் கட்டாயம் இடம் பெற்ற பாடல்தான் இது. இந்தப் பாடல் இல்லாமல் தமிழ்த் திரைப்படப் பாடல்களே இல்லை. தமிழ்த் திரைப் பாடல்களின் சரித்திரம் பின்னால் எழுதப்படும்போது இந்தப் பாடல் முன்னிலை வரிசையில் நிற்கும் என்பது அனைவரும் ஒத்துக் கொண்ட ஒன்றுதான்.
பிடிக்கும்... பிடிக்காது என்ற இருவேறு கருத்துக்களுக்கு கொஞ்சமும் இடம் அளிக்காத பாடல் இது. நூற்றுக்கு நூறு அனைவரையும் கட்டிப் போட்ட பாடல்.
இப்பாடலை யார் எங்கு கேட்டாலும் அதே இடத்தில் மெய் மறந்து அந்த சில நிமிடங்கள் உறைந்து விடுவார்கள். அப்படி வசியம் செய்யும் சக்தி மிகுந்த பாடல் இது.
புது மணம் புரிந்த இளம் தம்பதியினர் ஒருவரை ஒருவர் புகழ்ந்து, வாழ்த்தி அன்புப் பரிமாற்றம் செய்து கொள்ளும் பாடல். கணவன் மனைவி உறவுக்கே இலக்கணமாய் அமைந்த பாடல். இலக்கியத் தரம் வாய்ந்த பாடல்.
தன் எண்ணம் போல் தனக்கு வாய்த்த மனைவியை கணவன் எப்படி பெருமைப் படுத்துகிறான்!
'மங்கையரில் அவள் மகராணியாம்'
இந்த ஒற்றை வரியிலேயே அவள் பெருமை முழுதும் அனைவருக்கும் புரிய வைத்து விட்டான் கணவன்.
மேல்கொண்டு என்ன சொல்கிறான் என்பதைக் கீழ்க்காணும் பாடல் வரிகளில் தெரிந்து கொள்ளுங்கள்.
'மகராணி' விடுவாளா?
'ஆடவரின் தலைவன் நீ' என்று அம்சமாக எசப்பாட்டு பாடி விட்டாளே! இதைவிடவும் அந்தக் கணவனுக்கு என்ன பெருமை இருக்க முடியும்?
இதிலிருந்தே இவர்கள் ஒருவரையொருவர் புரிந்து கொண்ட ஆதர்ஷ தம்பதிகள் என்று புரியவில்லையா?
'அவளுக்கென்று ஓர் மனம்' என்ற ஸ்ரீதரின் அற்புதமான படத்தின் அள்ளிக் கொள்ள வேண்டிய பாடல். படமாக்கலிலும், பாடல் காட்சிகளிலும், காமெராக் கோணங்களிலும் ஸ்ரீதர் மன்னர். அவருக்குப் பிடித்த ஜெமினியும், அவரின் ஆஸ்தான நாயகியான காஞ்சனாவும் ஜோடியாகச் சேர்ந்து விட்டால்?!
மனிதர் பின்னி எடுத்து விட்டார் 'மெல்லிசை மன்ன'ரையும், 'கவிஞ'ரையும் துணை சேர்த்துக் கொண்டு.
கவிஞரின் எண்ணங்களை 'மன்னன்' மனதை வருடும் மெல்லிசையாய் வடிவமைத்துக் கொடுக்க, அதை வண்ணக் குழைவு செய்து ஸ்ரீதர் நம் எல்லோருடைய நெஞ்சங்களிலும் ஆழப் புதைத்து விட்டார்.
நாம் மண்ணில் புதைந்து அழிந்தாலும் நம் மனதில் புதைந்த இப்பாடல் அழியாது.
http://www.kyazoonga.com/Merchandise...e/VTAF0603.jpg
மிக அழகான அன்றைய சாத்தனூர் டேம். பொங்கி வழியும் நீரூற்றுகள், வண்ணப் பூக்களைத் தாங்கிய பூங்கொடிகள், செடிகள், காகிதப்பூ மரங்கள், 'ஜூஸ்பர்ரி' பிஸ்கட் என்று சொல்வார்கள் (பிறைச்சந்திரன் போன்ற வடிவு) அதைப் போல வடிவமைக்கப்பட்ட பெரிய பிறை நிலா, அழகான பூங்காக்கள், சின்ன சின்னதாய் செதுக்கிய சிற்ப சிலைகள், தண்ணீர் வழிந்தோடும் அணைக்கட்டு, விசிறி வாழைகள், பாக்கு மரங்கள், சிறிய அழகான் நடைப் பாலங்கள், கைகளில் எதையோ பிடித்து நிற்கும் அந்த கட்டழகு பெண் சிலை, வண்ணக்குடை கோபுரங்கள், அசோகா மரங்கள், புல் பாதைகள், நீர் வழிந்தோடும் படிக்கட்டுகள், பிரவுன் நிற குரோட்டன்ஸ் செடிகள், பஞ்சு மிட்டாய் கவிழ்த்து வைத்தது போன்ற புஷ்க்கள் என்று சாத்தனூரை இவ்வளவு அழகாக காட்டியது இளமை இயக்குனர் ஒருவராகத்தான் இருக்க முடியும்.
அணையின் மீது கற்களால் படுக்கைவாக்கில் பொறிக்கப்பட்டிருக்கும் 'சாத்தனூர் டேம்' என்னும் ஆங்கில எழுத்துக்கள் பிரம்மாண்டமாகத் தெரிவதை பாடலில் தெளிவாகப் பார்க்கலாம்.
மிக சிம்பிளான ஒயிட் பேன்ட், ஷர்ட்டில் (ஆரஞ் அண்ட் எல்லோ கலர் மிக்ஸிங் ஸ்மால் செக்டு) 'மாப்பிளை' ஜெமினி, கல்யாணமான மங்களகரமான மனைவி கோலத்தில் மூக்குத்தியும், காதருகே செருகிய பூவும், வாணிஸ்ரீ கொண்டை 'விக்'கும், கைநிறைய வளையல்கள், கழுத்தில் வெண்முத்து மாலையுமாக 'கலையழகி' காஞ்சனா. 'காதல் மன்ன'னுக்கு செம ஜோடிப் பொருத்தம். ராசியான ராசி. 'இயற்கையென்னும் இளைய கன்னி' முடித்து 'மங்கையரில் மகராணி'யில் மீண்டும் இணைந்து மனதில் பிணைந்தது.
http://i.ytimg.com/vi/xdOm3lQCA2Q/hqdefault.jpg
சாத்தனூர் அணைக்கட்டையே இருவரும் ஒரு ரவுண்டு வந்து விடுவார்கள். ஜெமினி பின்னாட்களில் விடாமல் எல்லா பாடல்களிலும் ஒரு ஸ்டைலைக் கடைப்பிடிக்க ஆரம்பித்தார். இடுப்பில் கை வைத்துக் கொண்டு ஒரு காலைத் தூக்கி, சற்றே உடம்பை ஆட்டியபடி நிற்பார். இல்லையென்றால் கால் முட்டியில் கைகளைக் குவித்து வைத்துக் கொள்வார்.:)
காதல் காட்சிகளில் ஜெமினி மிக நெருக்கம் காட்டுவார் காஞ்சனாவிடம். 'எல்லையில்லாக் கலைவாணி'யிடம் சில சமயம் எல்லை மீற முயல்கிறாரோ 'காதல் மன்னன்' என்று கூட நினைக்கத் தோன்றும்.('கையோடு இங்கே கதை சொல்ல வேண்டும்' உதடுகள் பட்டே விடும்.):)
'வெள்ளிச் சங்குகள் துள்ளி எழுந்தன
நெஞ்சில் விளையாட'
வரிகளில் ஜெமினி பின்னி எடுத்து விடுவார். இயற்கையான ஸ்டைல் செய்து ஜமாய்த்து விடுவார் மனிதர், கைகளை உயர்த்தி காஞ்சனாவை நோக்கி ஸ்டைலாக, மெதுவாக நடந்து வருவது ஜோர். கைகளை ஒன்றாக இணைத்து காஞ்சனாவின் கழுத்தில் மாலையாய்க் கோர்ப்பதும் அழகு.
காஞ்சனாவும் நல்ல ஈடு கொடுத்திருப்பார்.
தோழிக்காக தன் வாழ்வை முத்துராமனிடம் முழுமையாக, அடிமையாக அர்ப்பணிக்கும் பாரதி 'ஆ...ஆ' என்று பாடலின் நடுவே சுசீலா குரலில் விசும்புவார். இவரும் முத்துராமனும் விட்டேர்த்தியாக 'தேமே' என்று சுரத்தில்லாமல் நிற்பார்கள். ஆனால் கதையின் சூழ்நிலை, பாடலின் இடை சூழ்நிலை அப்படித்தான். அதனால் பொருத்தமாகவே இருக்கும்.
சுசீலா ஆனந்த அராஜகம் பண்ணுவார். மகிழ்ச்சி, இடையே சோகம் என்று காஞ்சனாவிற்கும், பாரதிக்கும் இரட்டை நாயன வாசிப்பு. பிரமாதப்படுத்துவார்.
தொடரின் நாயகர் தொட்டிலிட்டு அமர்ந்து கொள்வார் நம் மனங்களில். குரல் வித்தைகள் விதவிதமாய் இன்பத் தாக்குதல்கள் கொடுக்கும்.
'மையோடு கொஞ்சம் பொய் பேசும் கண்கள்
கையோடு இங்கே கதை சொல்ல வேண்டும்'
இந்த வார்த்தைகளில் 'மையோடு கொஞ்சம்' என்று கொஞ்சுவாரே! அது ஒன்றே போதும். குரல் இன்னும் மேம்பட்டு மெருகேறி சர்க்கரை, தேன், பாகு இவையெல்லாம் மீறிய சுகத்தைக் கொடுக்கும். பாலாவுக்கு புகழை வண்டிவண்டியாக அள்ளித் தந்த பாடல். மேடைகளில் ஒலிக்காமல் இதுவரை இருந்ததில்லை.
கண்ணதாசனுக்கு கரும்பு சாப்பிடுவது போல இது போன்ற பாடல் வரிகள்.
'மெல்லிசை மன்னர்' தான் இப்பாடலின் நிஜ ஹீரோ. அப்புறம்தான் மற்றவர்கள் பாலா உட்பட. என்ன ஒரு இசை ஆளுமை! இசைக் கருவிகள் ஒவ்வொன்றின் ஆதிக்கமும் சொல்லி மாளாதவை. வயலின், ஆர்கன், வீணை, கிடார், தபலா, பாங்கோ என்று அள்ளித் தெளித்து ஆட்சி செய்வார்.
மொத்தத்தில் என்றென்றும் இளமை மாறாத காயகல்பப் பாடல்.
http://i.ytimg.com/vi/sV1RWJQYD6U/maxresdefault.jpg
மங்கையரில் மகராணி
மாங்கனி போல் பொன்மேனி
எல்லையில்லாக் கலைவாணி
என்னுயிரே யுவராணி
மங்கையரில் மகராணி
மாங்கனி போல் பொன்மேனி
எல்லையில்லாக் கலைவாணி
என்னுயிரே யுவராணி
கோடையிலே மழை போல் நீ
கோவிலிலே சிலை போல் நீ
ஆடவரில் தலைவன் நீ
அடிமை நான் உன் ராணி
கோடையிலே மழை போல் நீ
கோவிலிலே சிலை போல் நீ
ஆடவரில் தலைவன் நீ
அடிமை நான் உன் ராணி
மங்கையரில் மகராணி
ஆ..............ஆ
மையோடு கொஞ்சம் பொய் பேசும் கண்கள்
கையோடு இங்கே கதை சொல்ல வேண்டும்
மையோடு கொஞ்சம் பொய் பேசும் கண்கள்
கையோடு இங்கே கதை சொல்ல வேண்டும்
தெய்வீகப் பாடல் தாய் சொல்லக் கேட்டு
தெய்வீகப் பாடல் தாய் சொல்லக் கேட்டு
நான் பாட வந்தேன் ஆனந்தப் பாட்டு
நான் பாட வந்தேன் ஆனந்தப் பாட்டு
வெள்ளிச் சங்குகள் துள்ளி எழுந்தன
நெஞ்சில் விளையாட
அங்கங்கள் எங்கெங்கோ
நானும் மெல்ல தடை போட
மங்கையரில் மகராணி
மாங்கனி போல் பொன்மேனி
எல்லையில்லாக் கலைவாணி
என்னுயிரே யுவராணி
மங்கையரில் மகராணி
ஆ..............ஆ
மாணிக்கத் தேரின் காணிக்கையாக
முத்தங்கள் நூறு தித்திக்க வேண்டும்
தீராத ஆசை கோடானு கோடி
தேனாக ஓடும் தானாகத் தீரும்
தங்கத் தாமரை மொட்டு விரிந்தது
மஞ்சள் நீராட
சொல்லுங்கள் அங்கங்கே
நானும் கொஞ்சம் கவி பாட
மங்கையரில் மகராணி
மாங்கனி போல் பொன்மேனி
எல்லையில்லாக் கலைவாணி
என்னுயிரே யுவராணி
மங்கையரில் மகராணி
https://youtu.be/sV1RWJQYD6U
வாசு - ARA ( ஆல் டைம் அருமை ) என்று உங்களை சொன்னால் அது மிகை ஆகாது . என்ன உழைப்பு ?? எப்படி சார் உங்களால் முடிகிறது ? நெய்வேலியில் ஏதாவது பிளாட் எனக்கு கிடைக்குமா ? ஒரு சின்ன ( அந்த "சின்ன " அல்ல ) வீடு ஏற்படுத்திக்கொண்டு உங்களுடன் சேர்ந்து இருந்தால் , கொஞ்சமாவது உங்கள் திறமையில் இருந்து சில துளிகள் எனக்கு கிடைக்காதா என்ற ஏக்கம் தான் ---
மிகவும் மனதிற்கு பிடித்த பாடல் - அருமையான வரிகள் - ஜெமினி கொஞ்சம் ஓவராக நடித்திருப்பார் - காதலில் ஏன் இந்த வேகம் என்று புரியவில்லை .
அருமையான பதிவை படித்தவுடன் 5 ஸ்டார் ஹோட்டல் சென்று ஒரு cocktail dinner யை அனுபவித்த திருப்தி கிடைத்தது
Goodafter Noon
http://i818.photobucket.com/albums/z...psqnfao6ds.jpg
கருவின் கரு - 174
பாகம் 2 - தந்தை
தந்தை - மகன் பந்தம்
மாணவ /வாலிப / திருமண பருவம்
உண்மை சம்பவம் 27
அப்பாவின் எல்லா ரிசல்ட்ஸ்ம் வந்துவிட்டன . இந்த வயதில் வரும் வியாதிதான் - மருத்துவர்கள் என்னை சமாதானம் செய்தார்கள் . மனம் கேட்கவில்லை ...... பார்கின்சன் வியாதி
[Parkinson's disease (PD, also known as idiopathic or primary parkinsonism, hypokinetic rigid syndrome (HRS), or paralysis agitans) is a degenerative disorder of the central nervous system mainly affecting the motor system. The motor symptoms of Parkinson's disease result from the death of dopamine-generating cells in the substantia nigra, a region of the midbrain. The cause of this cell death is poorly understood. Early in the course of the disease, the most obvious symptoms are movement-related; these include shaking, rigidity, slowness of movement and difficulty with walking and gait. Later, thinking and behavioral problems may arise, with dementia commonly occurring in the advanced stages of the disease, whereas depression is the most commonpsychiatric symptom. Other symptoms include sensory, sleep and emotional problems. Parkinson's disease is more common in older people, with most cases occurring after the age of 50; when it is seen in young adults, it is called young onset PD (YOPD).]
நடுங்கிக்கொண்டிருந்தேன் குழந்தையாக - எவ்வளவு நாட்கள் அந்த நடுங்காத கைகளில் என் உடம்பை சுறுக்கி கொண்டிருந்துருப்பேன் .அந்த அழகிய கைகள் என்னை எவ்வளவு நாட்கள் தூக்கிகொண்டு இந்த உலகம் எங்கும் சுத்திருக்கும் . அந்த கைகள் காட்டிய பரிவுதானே என் கழுத்தில் விழுந்த மாலைகள் , மெடல்கள் ......படிக்கும் போது எனக்காக விழித்திருந்த கண்களில் இன்று ஒளி இல்லை . ஹார்லிக்ஸ் அவர் கொடுக்கும் உற்சாக வார்த்தைகள் . மெதுவாக அப்பாவை wheel chair இல் அழைத்துக்கொண்டு வந்தேன் .. இனி வாழ்க்கை சாதாரணமாக போகப்போகும் வாழ்க்கை இல்லை - அவருக்கு இது ஒரு போராட்டம் - அவருடன் எனக்கும் ஒரு போராட்டம் .
ஏதோ சொல்ல நினைத்தார் - வார்த்தைகளில் தெளிவு இல்லை - அப்பா பேசுவதை நாள் முழுவதும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் - 16 மொழிகளும் அவருக்கு அத்துப்படி - இன்று அவர் பேசுவது 17வது மொழி - அவருக்கு மட்டுமே புரிகின்ற மொழி - இனி நானும் கற்றுக்கொள்ளவேண்டும் . "இதுதான் வாழ்க்கை --- " எங்கிருந்தோ காற்றில் மிதந்து வந்தது கண்ணதாசனின் வரிகள் ....... அப்பாவின் வாழ்க்கை ஒரு wheel chair க்குள் முடங்கி விட்டது ... அப்பாவிற்கு நான் அழுதால் சுத்தமாக பிடிக்காது -- அவரின் முதுகு புறம் நின்றுகொண்டு கண்ணீருக்கு வழி வகுத்தேன் .
அப்பாவை நான் குளிப்பாட்டிக் கொண்டிருந்தேன் - என் கண்ணீரை என் மனைவி துடைத்துக்கொண்டிருந்தாள் -- அவள் சொன்ன வார்த்தைகளில் வேதம் சொல்லும் வார்த்தைகள் இருந்தன -- " ஏன் இதை உங்கள் அப்பாவிற்கு வந்த தண்டனை என்று எடுத்துக்கொள்கிறீர்கள் ? உங்களுக்கு இறைவன் கொடுத்த வரம் என்று எடுத்துக்கொள்ளுங்கள் ... " வரமா ? என்ன உளறுகிறாய் ?"
" ஆமாம் வரம் தான் - எவ்வளவோ அவர் உங்களுக்கு பணிவிடைகள் செய்திருக்கிறார் - அவருக்கு நீங்கள் திருப்பி நன்றி கடன் செய்யும் தருணம் இது - அவருடன் அதிகமாக நேரத்தை செலவழிக்க ஆண்டவன் உங்களுக்கு ஒரு அருமையான வாய்ப்பை கொடுத்திருக்கிறான் - ஓய்வில்லாமல் உலகத்தை சுற்றிய உங்களை இனி இந்த wheel chair யை சுற்றினால் போதும் அந்த உலகத்தையே சுற்றி வருவதைப்போல் என்பதை இறைவன் மறைமுகமாக சொல்லுகிறான் - அவர் சென்றபின்பு செய்யும் மரியாதைகளை விட அவர் இருக்கும் போது அன்புடன் ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்க கொடுங்கள் - கங்கையில் குளிக்க வேண்டாம் - ஜெருசேலம் செல்லவேண்டாம் , மெக்கா வை நினைக்கக் கூட வேண்டாம் - அவைகள் அனைத்தும் உங்களை நினைக்கும் , உங்களை பூஜிக்கும் . விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவது இல்லை.- இதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள் "
நான் எந்த கோயிலுக்கும் இப்பொழுதெல்லாம் போவதே இல்லை - இதோ இந்த wheel chair இல் அமர்ந்திருக்கும் தெய்வத்தை விடவா அங்கிருக்கும் இறைவன் சக்தி வாய்ந்தவன் ??
பூக்களாக இருக்காதே
உதிர்ந்து விடுவாய்
செடிகளாக இரு
அப்போதுதான்
பூத்து கொண்டே இருப்பாய்
என் அப்பா எனக்கு அடிக்கடி சொல்லும் கீதை இதுதான்
https://youtu.be/uHvABW2hPI0
கருவின் கரு - 175:smile2::)
பாகம் 2 - தந்தை
தந்தை - மகன் பந்தம்
மாணவ /வாலிப / திருமண பருவம்
முதியோர் இல்லத்தில் இருக்கும் தன் தந்தைக்கு புதியதாக செல் போன் ஒன்றை வாங்கிக்கொடுத்தான் NRI மகன் . தந்தைக்கு ஒரே சந்தோஷம் - எல்லோரிடமும் பெருமையாக அந்த புதிய செல் போனை " என் மகன் வாங்கிக்கொடுத்தது " என்று என்று காண்பித்துக்கொண்டிருந்தார் - அவன் மகன் " உடம்பை பார்த்துக்கோ அப்பா " என்று சொல்லிவிட்டு USA விற்கு தன் உடம்பை சுமந்து சென்றான் . மகனிடம் இருந்து எந்தவிதமான நியூஸ்ம் இல்லை . அந்த முதியவர் செல் போன் ரிப்பேர் செய்யும் கடைக்கு சென்று " இந்த செல் யை " கொஞ்சம் ரிப்பேர் செய்யமுடியுமா ? என்று கேட்டார் --- " முழுவதும் பார்த்துவிட்டு அந்த கடைக்காரன் சொன்னான் " இந்த செல்லில் எல்லாம் சரியாகவே இருக்கிறது - பழுது ஒன்றும் இல்லை "
அந்த பெரியவர் கேட்டார் " அப்படியா ? பிறகு ஏன் என் மகனிடம் இருந்து கால் வருவதில்லை ??? " - அந்த கடைக்காரன் சிலையாகி விட்டான் .....
வளர்த்த கடா முட்ட வந்தால் - வெச்ச செடி முள்ளானால் ?? - கல் தூண் தொடர்கிறது -----
https://youtu.be/BwfFNHimRC0
மதுரகான திரி நண்பர்களின் பார்வையிடலுக்காகவும் நடிகர்திலகம் திரியின் இணைப்பதிவு
NT Positive / NT Negative / NT Neutral : New series!
Quote:
ரத்தத்தில் எந்த குரூப்பாக இருந்தாலும் மீண்டும் அதையே பாசிடிவ் நெகடிவ் என்றுதான் பிரிக்கிறோம் அதுபோலவே நடிகர்திலகம் வாழ்ந்து காட்டிய எண்ணற்ற வகையான பாத்திரப் படைப்புக்களையும் பாசிடிவ் நெகடிவ் ஆகப் பிரிக்கும் அலசல் கண்ணோட்டத்தின் முன்னோட்டம்
Quote:
Part 1 :NT Positively Negative! PARAASAKTHI
பகுதி 1 : நடிகர்திலகம் நேர்மறையாகவே எதிர்மறை குணாதிசயம் கையாளுதல் : பராசக்தி
யாரும் தனக்குத் தீங்கிழைக்காதவரை தனி மனிதன் நல்லவனே தொடர் பாதிப்புக்கு உள்ளாகும் சாது மிரண்டால் காடு கொள்ளாது என்னும் வாழ்வியல் தத்துவத்தை முதல் படம் என்ற பிரக்ஞையே இல்லாது தேர்ந்த நடிப்பிமையமாக பராசக்தியிலேயே சாதித்துக் காட்டினர் நடிகர்திலகம் !
Positive NT surrounded by Negative elements!
https://www.youtube.com/watch?v=3w4MAmf7Pog
தங்கை கல்யாணியைப் பார்க்கும் பாசத் தூண்டுதலில் வெள்ளந்தியாக தாய் மண்ணை மிதித்தவுடனேயே பணம் பொருள் இழந்து உலகவியல் அனுபவத்தின் கசப்பான முதல் படியில் கால் வைக்கிறார் நடிப்பின் பரம்பொருள் குனியக் குனியக் குட்டு வாங்குபவர் நிமிர்ந்தால் ..உலகம் எப்படி சிதறி ஓடுகிறது!
பரிதாபத்துக்குரிய பைத்தியக்கார வேஷதாரியாக மாறி உன்மத்தரின் தோலுரிக்கும் வைத்தியத்தை முதல் காவியத்திலேயே அரங்கேற்றிவிட்டாரே நடிக மன்னர் !!
NT positively becomes Negative!!
உளவியல் ரீதியாக வேறு எந்த வேஷத்தையும் விட மன நலம் தறிகெட்ட பைத்தியக்காரன் வேஷமே தன்னை வஞ்சித்த சமுதாயத்தை பயப்படுத்தி சிதறி ஓட வைக்கும் என்னும் தத்துவம் எவ்வளவு அழகாக அருமையாக சீராக நெத்தியடியாக நடிகர்திலகம் வாயிலாக உணர்த்தப் பட்டிருக்கிறது ?!
https://www.youtube.com/watch?v=eCVQAzG8_14
NT negatively communicates positive!
நேர்மறையாளரால் தன்னை சுற்றி நடக்கும் அக்கிரமங்களை சகிக்க இயலாதே!
நெஞ்சு பொறுக்குதில்லையே......!
https://www.youtube.com/watch?v=JgUOyi2TWyo
NT Positive finally!!
எதிர்ம(ரை)றையாக போயிருக்க வேண்டியவரை நேர்மறையாளர் ஆக்கியது காதலே! காதல் சீருடையான பைஜாமா ஜிப்பா காஸ்ட்யூமை ஜெமினிக்கும் அறிமுகம் செய்தது நடிகர்திலகமே!?
https://www.youtube.com/watch?v=PGBryGdL0FQ
Objection your honour!Quote:
மிகவும் மனதிற்கு பிடித்த பாடல் - அருமையான வரிகள் - ஜெமினி கொஞ்சம் ஓவராக நடித்திருப்பார் - காதலில் ஏன் இந்த வேகம் என்று புரியவில்லை .
ரவி
ஜெமினி 'கொஞ்சும் லவராக' நடித்திருப்பார் என்றுதானே டைப்படித்தீர்கள் ?!
காதலில் விழுந்தாலே எல்லாம் வேகம்தான் ரவி சார் !
செந்தில் சார் - உங்கள் பதிவுகள் அனைத்தும் , நீங்கள் PhD பண்ணியவர் என்பதை சொல்லாமல் சொல்லிக்கொண்டிருக்கின்றன - வாசுவின் பதிவுகளில் ஆழமான ஆராய்வுகள் இருப்பது போல் , உங்கள் பதிவுகளில் ஆழமான எண்ண ஓட்டங்கள் இருக்கின்றன - உங்களுக்குள் ஒளிந்து இருக்கும் இந்த திறமையை கண்டு வியந்த வண்ணம் இருக்கிறேன்
மிகவும் நன்றி யோகேஷ் - தாம்பத்தியத்தின் அருமையை மிகவும் அழகாக அலசியுள்ள பதிவு இது - இதை நீங்கள் இங்கு பகிர்த்துகொண்டதில் எங்களுக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது - நல்ல விஷயங்களை தூண்டில் போட்டு கண்டுபிடித்து இங்கு எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளும் உங்கள் பண்பு சிலிர்க்க வைக்கின்றது
டியர் வாசு சார்,
கல்தூண் படத்தில் இடம்பெற்ற அருமையான, ஆனால் யாராலும் அதிகம் கண்டுகொள்ளப்படாத 'வேல் நட்ட கதை' பாடலின் சிறப்புப் பதிவு படித்து மகிழ்ந்தேன் அன்பதைவிட அதிர்ந்தேன் என்பது பொருத்தமாக இருக்கும்.
என்னவொரு எழுத்து, என்னவொரு வர்ணனை, என்னவொரு கூர்ந்த கவனிப்பு, அதை எழுத்தில் கொண்டுவரும் ஆற்றல். அப்பப்பா.., அசர வைத்துவிட்டீர்கள் ஐயா.
நான் கல்தூண் பார்த்தபோது இந்தப்பாடலை இவ்வளவு கூர்மையான கவனிப்புடன் பார்க்கவில்லை என்பதை வெட்கத்துடன் ஒப்புக்கொள்கிறேன்.
நடிகர்திலகம் தான் நடிக்கும் பாத்திரமாகவே ஒன்றி வாழ்ந்துவிடுவார் என்பது அறிந்ததே. அதை இப்படத்திலும் நிரூபித்துள்ளார். அமரகாவியம் வெளியாகி ஒரே வார இடைவெளியில் வந்த படமென்றாலும் இரண்டுக்கும் நடிப்பில் எவ்வளவு வித்தியாசம்.
நடிகர்திலகம் பிற்கால படங்களில் பரிமளிக்கவில்லை, சாதிக்கவில்லை என்பதெல்லாம் வெறும் பிதற்றல். அவர் 'பூப்பரிக்க வருகிறோம்' வரையில் சிறப்பான நடிப்பைத் தந்துவிட்டுத்தான் போயிருக்கிறார்.
நண்பர் ரவி அவர்கள் சொன்னதுபோல, இனி உங்கள் உழைப்பைப் பாராட்ட புதிய வார்த்தைகளைத்தான் கண்டுபிடிக்க வேண்டும்.
அதுவரை இதையே பாராட்டாக எடுத்துக்கொள்ளுங்கள். அசத்துங்கள், ஜமாயுங்கள், கொடிநாட்டுங்கள்.
(ஊடகங்கள் இருபத்தைந்து பாடல்களையே வைத்துக்கொண்டு அவற்றையே திருப்பி திருப்பி ஒளிபரப்புவதை விடுத்து இம்மாதிரி பாடல்களையும் கவனம் செலுத்தலாமே)
டியர் ரவி சார்,
உங்களின் கருவின் கரு தொடரில் தந்தை மகன் உறவை விளக்கும் சம்பவங்களும், அதற்கேற்ற பாடல்களும் வெகு பொருத்தம். ஒவ்வொரு சம்பவமும் மனதை உருக்குகிறது. சமீபத்தில் படித்ததில் 'சக்கர நாற்காலியில் முடங்கிவிட்ட' தந்தை மீது மகன் காட்டும் பரிவும் . அதை ஊக்கப்படுத்தும் மருமகளும்.. (காசியில் மாமியாரை விட்டுவரச் சொன்ன மருமகளுக்கும் இந்த மருமகளுக்கும் தான் எத்தனை வேறுபாடுகள்).
வாசு அவர்களைத் தொடர்ந்து நீங்களும் உங்கள் கருவுக்கு கல்தூண் பாடலையே எடுத்துக்கொண்ட விதம் நல்ல ஒற்றுமை.
பதிவுக்கு பதிவு மெருகேறி வருகிறது. பாராட்டுக்கள்.
டியர் யுகேஷ் பாபு சார்,
காலத்தால் 'அழியாத உன் கண்ணில் நீர் வழிந்தால்' பாடலைப்பற்றிய அசத்தலான பதிவை தந்து திரிக்கு சிறப்பு சேர்த்துள்ளீர்கள். மிக்க நன்றி. பாடல் மிக அருமையாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
நல்லவை எங்கு தென்பட்டாலும் தேடிக்கொணர்ந்து பதிவிடும் உங்களுக்கு பாராட்டுக்கள்.
டியர் வாசு சார்,
இதென்ன மாயம்?. கல்தூண் பிரமிப்பு நீங்குவதற்குள் அடுத்த இன்ப அதிர்ச்சியாக இளமை பாலாவின் 'மங்கையரில் மகராணி' பாடலின் சிறப்பான ஆய்வுப் பதிவைத் தந்து அசர வைத்துவிட்டீர்கள்.
நிஜமாகவே பாலா சுசீலா ஜோடி பாடிய அருமையான பாடல்களில் ஒன்று. இப்படத்துக்கு முன் வந்த ஸ்ரீதர் தயாரிப்பில், சக்கரவர்த்தி இயக்கத்தில் வந்த உத்தரவின்றி உள்ளே வா வில் இடம்பெற்ற 'மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி' பாடலும் அப்படித்தான். (இந்த தொடரில் அதுவும் வரும்தானே).
நீங்கள் சொன்னது மிகச்சரியே. சாத்தனூர் அணையின் எழிலை முற்றிலுமாக எடுத்துக்காட்டிய பாடல்களில் இதுவும் ஒன்று. பெரும்பாலும் சொந்த முடியிலே நடிக்கும் ஜெமினிக்கு இதிலும் அப்படியே. அவரது கட்டம்போட்ட சட்டை இன்னொரு பாடலை நினைவுபடுத்தும் (தன்னந்தனியாக நான் வந்தபோது).
பாடலில் ஜெமினியின் ஜோடியாக வரும் 'நம்ம வசந்தி என்கிற சித்திரலேகாவும்' கொள்ளை அழகு. இன்னொருபக்கம் பரிதாபமான பாரதி, அவருடன் வில்லனாக வரும் முத்துராமன் இந்தப்பாடல் இடைவெளியிலும் வில்லன் முறைப்பு காட்டுவார்.
அழகாக வரிவரியாக விவரித்திருக்கிறீர்கள். ஒவ்வொரு பாடலுக்கும் நீங்கள் எடுத்துக்கொள்ளும் சிரத்தை அதிசயிக்க வைக்கிறது. எவ்வளவு பொறுமை வேண்டும். சாத்தனூர் அணைபற்றிய பாராவில் அப்படியே அணையை கண்முன் கொண்டுவந்து விட்டீர்கள். (அந்த பிறையின் அருகில் நின்று நாங்களும் போட்டோ எடுத்திருக்கிறோம்).
பாடல்களை படமாக்கம் செய்வதில் ஸ்ரீதர் சூரர் என்பது இப்பாடலிலும் நிரூபணம் ஆகியிருக்கிறது. அதுபோல பாடல்களை அலசுவதில் நெய்வேலியார் சூரர் என்பது இந்தப் பதிவிலும் நிரூபணம் ஆகியுள்ளது.
அசத்தலுக்கு மேல் அசத்தல். அதற்கு எடுத்துக்கொள்ளும் அபார உழைப்பு. எப்படித்தான் பாராட்டுவது?.
-deleted-
வாசு சார்
மங்கையரில் மகராணி பாரதி என்றால்
எழுத்தில் மகராஜா வாசு ...
என்னவொரு ஆழமான அலசல், ஆய்வு... இவையெல்லாம் தமிழ்த் திரையிசை ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்படவேண்டும்.
என் மனதில் உள்ளவற்றையெல்லாம் ஆதிராம் சார் அப்படியே சொல்லி விட்டார் (சாத்தனூர் அணையில் ஃபோட்டோ எடுத்துக்கொண்டதைத் தவிர)
ஆதிராம் சார் தங்களுக்கும் என் நன்றி. நான் சொல்ல நினைத்தவையெல்லாம் தங்கள் பதிவில் இடம் பெற்று விட்டன.
'ஆபீஸில் வேலை வெட்டியில்லாமல் (?!?!?!) சும்மாதானே உட்கார்ந்திருக்கிறாய். சாத்தனூர் அணைக்கட்டில் படமாக்கப்பட்ட பாடல்களை உனக்குத்தெரிந்த வரையில் பட்டியலிட்டால் என்ன?' என்று மனம் கட்டளையிட்டதால் என் நினைவுக்கு வந்தவரை பட்டியலிட்டிருக்கிறேன். நிறைய விடுபட்டிருக்கும்.
'காலங்களில் அவள் வசந்தம்' (பாவ மன்னிப்பு)
'எந்தன் பருவத்தின் கேள்விக்கு (சுமைதாங்கி)
'கண்ணிரண்டும் மின்ன மின்ன' (ஆண்டவன் கட்டளை)
'மனம் என்னும் மேடை மேலே' (வல்லவனுக்கு வல்லவன்)
'நல்ல இடம் நீ வந்த இடம்' (கலாட்டா கல்யாணம்)
'காதல் மலர்க்கூட்டம் ஒன்று' (தெய்வமகன்)
'உங்களில் ஒருவன் நான்' (நூற்றுக்கு நூறு)
'மாணிக்கத்தேரில்' (தேடிவந்த மாப்பிள்ளை)
'மங்கையரில் மகராணி' (அவளுக்கென்று ஒரு மனம்)
'நாம் ஒருவரை ஒருவன் சந்திப்போமென' (குமரிக்கோட்டம்)
'கீதா ஒருநாள் பழகும் உறவல்ல' (அவள்)
இன்னும் நிறைய.
ஊட்டி பொட்டானிக்கல் கார்டன், கொடைக்கானல் காலப் மைதானத்துக்கு அடுத்து அதிகம் இடம்பெற்ற தமிழக அவுட்டோர் லொக்கேஷன் இதுவாக இருக்கலாம்.
ஆனால் இப்போது பார்க்க முடியவில்லை. இப்போதான் குப்பை பாடல்களுக்கெல்லாம் ஒருவரி ஐரோப்பாவிலும், அடுத்த வரி ஆப்பிரிக்க பாலையிலும், மூன்றாவது வரி கனடாவிலும் எடுக்கிறார்களே.
'என்னமோ போங்க'.
I was surprised to see Sudha Ragunathan singing for a movie. May be, she is following her guru MLV.
From Ivan(2002)
ennai enna seidhaai vEngkuzhale......
http://www.youtube.com/watch?v=Uul2u5eb2to
The song begins with Simhendramadhyamam and moves on to other ragas.
The most famous song in Simhendrammadhyamam is probably
Ellaam inba mayam by MLV in a movie
டியர் ஆதிராம் சார்,
பதிவுகளுக்கான பாராட்டிற்கு மிக்க நன்றி! இன்னும் நன்றாக எழுத வேண்டும் என்ற உற்சாகம் பிறக்கிறது.
மிக அருமையாக சாத்தனூர் அணைக்கட்டில் படமான பாடல்களை பட்டியலிட்டு அசத்தியுள்ளீர்கள். அது என்னவோ நம் இருவருக்கும் அந்த அணைக்கட்டு மேல் அபாரப் பிரியம் ஒன்று போல. நீங்கள் இந்தியா வரும்போது கண்டிப்பாக சொல்லுங்கள். ஒருமுறை இருவரும் சேர்ந்து போய் சாத்தனூர் அணைக்கட்டை முழுதும் ரசித்து விட்டே வந்து விடலாம்.
http://i58.tinypic.com/35n4ilz.jpg
உங்களுடைய 'நம்ம வசந்தி என்கிற சித்ரலேகாவும்' வரிகளை ரசித்து மகிழ்ந்தேன். வசந்தியைவிட 'இளவரசி' சித்ரலேகாவின் கம்பீரம் எனக்கு ரொம்பப் பிடித்தது. அதுவும் நடிகர் திலகமும், முத்துராமனும் புரட்சி வசனங்களை பெயிண்ட், பிரஷ் கொண்டு பேனர்களில் எழுதிக் கொண்டிருக்க,
சித்ரலேகா வசந்தியாக அங்கு வந்து நின்று இருவராலும் சற்று அலட்சியப்படுத்தப்பட,
('இது அரசியல்'---முத்துராமன்
'அது எங்களுக்கும் புரியும்'---வசந்தி பதிலடி
நிகழ்காலத்துக்கு இந்த வசனம் எத்துணை அப்பட்டமாகப் பொருந்திப் போயிற்று!)
"அதனால்தான் வாளும் துப்பாக்கியும் ஏந்த வேண்டிய வாலிபர்களின் கைகள் நிகழ்காலத்தில் வெறும் பிரஷ்ஷை பிடிச்சுகிட்டிருக்கு"
என்று அதைவிட சர்வ அலட்சியமாக பதிலடி கொடுத்துவிட்டு, அசால்ட்டாக நடந்து செல்வாரே! அந்த ஒரு வினாடியில் ஒரு பெண் சிவாஜியை நாம் கண்டோம் என்பதை மறுக்க முடியுமா? ('தர்த்தி'யில் வஹீதா ரஹ்மான் இந்தக் காட்சியில் காஞ்சனா அளவில் பாதி கூட செய்ய மாட்டார்.)
அந்த பதிலை சற்றும் எதிர்பாராமல் நடிகர் திலகம் கொஞ்சம் அதிர்ந்து சற்றே வாய்பிளந்து 'ஆங்' என்று ஆச்சர்யம் காட்டுவது தனிக்கதை. (அதையெல்லாம் எதிலும் வைத்துப் பார்க்க முடியாது.)
வசந்தி சென்றதும் முத்துராமன் நடிகர் திலகத்திடம்,
"பாரத், இவ நம்மைவிட தீவிரவாதி"
என்று சொல்லி வியப்பது வேறு ஒரு தனி அருமை.
ஆஹா! நெஞ்சில் நங்கூரமிட்டு பதிந்த காட்சி.
வேண்டாம் ஆதிராம் சார்! நீங்கள் அழகாகக் கிண்டி விட்டு விடுகிறீர்கள். அப்புறம் என்னால் சும்மாவே இருக்க முடிவதில்லை. ஆபீஸிலும் நிறைய வேலை.:)
அப்புறம் 'கல்தூண்' பாடலை ரசித்து வாசித்ததற்கும் நன்றிகள். எனக்காக மீண்டும் ஒருமுறை அந்தப் பாடலை நல்ல ப்ரின்ட்டில் பாருங்கள். ஏகப்பட்ட மெய்சிலிர்க்கும் சங்கதிகளை மேலும் உணர்வீர்கள்.
செந்தில் சார்
சூப்பர்.
நேர்ம(ரை)றையாக போய்க் கொண்டிருந்தவரை எதிர்மறையாளர் ஆக்கியதும் இந்த பாழாய்ப் போன முன்காதல் தானே?:)
https://youtu.be/qPP_XaBbJz8
ஆதிராம் சார்,
இதோ நீங்கள் ரசித்து மகிழ ஓர் அணைக்கட்டுப் பாட்டு. பக்கத்தில் விஜயா ஃபிகர் இருப்பதனால் பாலாஜி தனை மறந்து என்னமாய் ஆட்டம் போடுகிறார்!:)
ராட்சஸி, ராகவன் குரல்களில் பாடல் அருமையோ அருமை.
https://youtu.be/vtN1UaO1-uY
ரவி...
பாட்டி என்றாலே உடனே நினைவுக்கு வரும் பாடல்...
தமிழ் சினிமாவுக்கு புதிய குரல் அறிமுகம்...
https://www.youtube.com/watch?v=wDOUp9H_mTA
கருவின் கரு - 176
பாகம் 2 - தந்தை
தந்தை - மகன் பந்தம்
மாணவ /வாலிப / திருமண பருவம்
Sylvester Stallone is one of the most famous American Movie stars.. With characters like Rocky and Rambo he is a household name in the hearts of millions.
During birth, a wrong gynecological procedure caused Stallone to have one sided paralysis. At school, his middle class being and his facial paralysis became a thing for others to make fun of.
He started body-building because he wanted to frighten those who bullied him. Slowly he started thinking of a career in movies.
Around 1974, he had a pregnant wife, a dog that he loved a lot, a lot of bills to pay and no success in his movie career.
What he still had was a belief in his dream that he will make it big.
Soon a time came when he went broke. He was heavily under debt.
Restless, anxious, stressed and still loaded with hope that he WILL make it big.
Things got so bad that he had to sell his wife’s jewelry and ended up homeless. Sleeping at the New York Bus station for 3 days.
The cold American winter forced him to choose between electricity and his dog. He stood outside a local store and sold his dog for $25.
Two weeks later, on TV he watched a boxing match between Mohammed Ali and Chuck Wepner. That match was like a flash of divine inspiration… For the next 20 hours he sat and wrote the script of what today is a cult movie, ROCKY.
In the words of Stallone himself, “After nearly 1500 rejections”, he got a production house to offer $125,000 for the script.
Despite the poverty, pains, pregnant wife and lost dog… His dream was to STAR in the movie as the MAIN LEAD.
In an era when heroes were super handsome men and spoke fluently, a body builder with a facial paralysis that made him stammer while speaking, made Stallone the wrong choice for any role.
The studio bluntly rejected his offer… And Stallone went back home with another failure.
A few weeks later,the studio offered him $250,000 for the just the script, and not him.
He refused.
Soon they offered $350,000 for the script but not him.
At that time everyone was pushing him to accept.. It would be MAD not to do so.. He was making a fortune.
He still refused.
Someone in the studio really loved his script, and as fortune favors the brave.. They finally accepted to give $35,000 for the script and have him as the lead star.
The rest as they say is history!
The movie was made for $1 million and went to make around $200 million.
It won the Oscar for Best Picture, Best Direction and Best Film Editing.
Stallone was a “bankable” hero for the next 20yrs, till the late 90s… with his movies making billions of dollars.
And what did he do with the first $35,000?
He stood outside the liquor store, where he sold his dog, for 3 days. Identified the man who had bought it, and finally got him back for $15,000.
AND IN THE WORDS OF ROCKY BALBOA –
“Let me tell you something you already know. The world ain’t all sunshine and rainbows. It’s a very mean and nasty place and I don’t care how tough you are it will beat you to your knees and keep you there permanently if you let it. You, me, or nobody is gonna hit as hard as life. But it ain’t about how hard you hit. It’s about how hard you can get hit and keep moving forward. How much you can take and keep moving forward. That’s how winning is done! - My father was an inspirational personality throughout my being . But for his unconditional love and affection , I would not have reached this much height in my career. I owe him not only for this birth but for the births to come !!"
― Sylvester Stallone
சிங்கம் என்றால் எம் தந்தைதான்
செல்லம் என்றால் எம் தந்தைதான்
கண் தூங்கினால் துயில் நீங்கினால்-----
https://youtu.be/Yd1zXrmLQnw
கருவின் கரு - 177
பாகம் 2 - தந்தை
தந்தை - மகன் பந்தம்
மாணவ /வாலிப / திருமண பருவம்
எல்லோருக்கும் எல்லாமும் அமைந்துவிடுவதில்லை - சோதனைகள் மேல் சோதனைகள் வருவதும் உண்டு - ஒரு கடமையே உருவான போலீஸ் அதிகாரி , எதற்கும் சிங்கமென நிற்கும் நேர்மையாளர் - ஒரு நாக பாம்பை மகனாக அடைகிறார் - அவரின் வார்த்தைகளில் வெளிப்படும் உண்மைகளைப் பார்ப்போம் ....
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி
வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
சொந்தம் ஒரு கை விலங்கு நீ போட்டது
அதில் பந்தம் ஒரு கால் விலங்கு நான் போட்டது
சொந்தம் ஒரு கை விலங்கு நீ போட்டது
அதில் பந்தம் ஒரு கால் விலங்கு நான் போட்டது
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
ஆதாரம் இல்லையம்மா ஆறுதல் சொல்ல
நான் அவதாரம் இல்லையம்மா தத்துவம் சொல்ல
பரிகாரம் தேடி இனி எவ்விடம் செல்ல
எனக்கு அதிகாரம் இல்லையம்மா வானகம் செல்ல
ஒரு நாளும் நான் இது போல் அழுதவனல்ல
அந்த திருனாளை கடன் கொடுத்தவன் யாரிடம் சொல்ல
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி
வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
மாமா காஞ்சிப்போன பூமி எல்லாம் வத்தாத நதியை பாத்து ஆறுதல் அடையும்.
அந்த நதியே காஞ்சி போய்ட்டா??
துன்பப் படுறவங்க எல்லாம் அந்த கவலையை தெய்வத்துகிட்ட முறையிடுவாங்க.
ஆனா தெய்வமே கலங்கி நின்னா??
அந்த தெய்வத்துக்கு யாரால ஆறுதல் சொல்ல முடியும்?
நானாட வில்லையம்மா சதையாடுது
அது தந்தை என்றும் பிள்ளை என்றும் விளையாடுது
பூவாக வைத்திருந்தேன் மனமென்பது
அதில் பூநாகம் புகுந்து கொண்டு உறவென்றது
அடி தாங்கும் உள்ளம் இது இடி தாங்குமா
இடி போல பிள்ளை வந்தால் மடி தாங்குமா
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி
வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
https://youtu.be/3BZ4Fx-GRKY