மக்கள் திலகத்தின் அருமையான பதிவுகள் வழங்கிய இனிய நண்பர்கள் திரு லோகநாதன் , திரு சுந்தர பாண்டியன் இருவருக்கும் நன்றி
Printable View
மக்கள் திலகத்தின் அருமையான பதிவுகள் வழங்கிய இனிய நண்பர்கள் திரு லோகநாதன் , திரு சுந்தர பாண்டியன் இருவருக்கும் நன்றி
எம்ஜிஆர் - வசூல்மன்னன்
http://i68.tinypic.com/15q6sl1.jpg
சமாதியில் பயங்கரக் கூட்டம். எம்ஜிஆர், 70 வயசு வரை இருந்துருக்கார். இடதுபக்கம் அவர் வாழ்க்கை வரலாறு.சுருக்கமாச் செதுக்கிவச்ச பளிங்கு. (கடைசி வரியில் அண்ணாவின் இதயக்கனின்னு இருந்துச்சு. எவ்வளோ பொருத்தம் பாருங்க.....அண்ணாவும் இவரும் ஒன்னாவே இருக்காங்க இல்லே!)
நல்ல விஸ்தாரமான இடம்தான். சலவைக்கல் இழைச்ச அழகிய மண்டபங்கள், நடைபாதைகள், நடுவில் புல்வெளின்னு இருக்கு.
முன்பக்கம் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அருகே இருந்து படம் எடுத்துக்கொள்ளும் ரசிகர்கள், அவர் வாழ்ந்தக் காலக்கட்டத்தில் இருந்த மக்களின் அடுத்த தலைமுறைகள், அவர்களின் பிஞ்சுகள்னு அவருக்கான ரசிகர்கள் கூட்டம் கொஞ்சம்கூடக் குறையலை. அதான் தினமும் எதாவது ஒரு தொலைக்காட்சியில் ஒரு எம்ஜிஆர் படமாவது வந்துக்கிட்டுத்தானே இருக்கு. இப்பவும் ஊர்ப்பக்கங்களில் பழைய எம்ஜிஆர் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கே உண்மையான 'வசூல்மன்னன்' எம்ஜிஆர்
பாதி மலர்ந்தத் தாமரை மொட்டு வடிவத்தில் சமாதியைச் சுற்றி அமைப்பு. தூங்கா விளக்கு. கறுப்புச் சலவைக்கல்லால் இருக்கும் சமாதியில் தலையைச் சாய்ச்சுக் காதை வச்சுக் கேட்கும் சனம்.( இதுக்கெல்லாம் ஒரு ஆள் ஆரம்பிச்சாப் போதும். வாரசனம் முழுக்க என்னமோ இருக்குன்னு செஞ்சு பார்க்குறாங்க! ) என்ன கேக்குதுன்னு கேட்டேன். கடிகார சத்தம் 'டிக் டிக்'ன்னு கேக்குதாம். ஐயோ...இதயத் துடிப்பா? இல்லையாம்...... அவருடையக் கைக்கடிகாரத்தோடு புதைச்சுருக்காங்களாம். ஆட்டோமேடிக் கடிகாரமாம். அதன் இயக்கம் மட்டும் நிக்கவேயில்லை(யாம்) அட! ஆச்சே... வருசம். இன்னுமா?
தினத்தந்தி -17/08/2016
http://i67.tinypic.com/33ys8k0.jpg
தமிழ் இந்து -16/08/2016
http://i66.tinypic.com/1zdm2w1.jpg
http://i67.tinypic.com/xc9edz.jpg
தற்போது மெகா டிவியில் மதியம் 12 மணி முதல் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த
"வேட்டைக்காரன் " ஒளிபரப்பாகி வருகிறது .
http://i66.tinypic.com/wrf1pf.jpg
வண்ணத்திரை -19/08/2016
படப்பிடிப்பில் ஆகட்டும், பட விழாக்களில் ஆகட்டும் . தமிழ் சினிமாவே எழுந்து நின்று வணங்கிய ஒரே ஆளுமை மக்கள் திலகம் எம்.ஜி .ஆர். அவர்களுக்கு
மட்டுமே.
http://i66.tinypic.com/29wsmjc.jpg
நக்கீரன் வார இதழ் -16/08/2016
http://i63.tinypic.com/153qs6v.jpg
http://i64.tinypic.com/16lbwo8.jpg
இன்று (17/08/2016) நண்பகல் 12 மணி முதல் ஜெயா மூவிஸில் நடிக மன்னன் எம்.ஜி.ஆர். நடித்த "குலேபகாவலி " திரைப்படம் ஒளிபரப்பாகியது .
http://i66.tinypic.com/2mmyco.jpg
கடந்த ஞாயிறு (14/08/2016) அன்று பிற்பகல் 2.30 மணியளவில் , சென்னை ராஜா
அண்ணாமலை மன்றத்தில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா கொண்டாட்டம் வெகு சிறப்பாக அனுசரிக்கப்பட்டது
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களை நேரில் , கண்டிராத, திரைப்படங்களில்
மட்டுமே பார்த்து ரசித்த , இளைய தலைமுறையின் பக்தர் திரு. சத்யா அவர்கள்
ஏற்பாடு செய்திருந்த அற்புத நிகழ்ச்சி.
நிகழ்ச்சிக்கு முன்பு, எம்.ஜி.ஆர். சதுக்கத்தில் உள்ள மார்பு அளவு சிலைக்கு , பன்னீர் தெளித்து , மாலை அணிவித்து, வணங்கிய பின் ,மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.சமாதியில் பூஜைகள், ஆராதனைகள், மற்றும் ஆரத்தி எடுத்த பின்பு , அங்குள்ள பக்தர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் இனிப்பு வழங்கினார் .அவருடன் மதுரை பக்தர் திரு. எஸ். குமார் அவர்களும் உடன் இருந்து கலந்து கொண்டார்.
பிற்பகல் , ராஜா அண்ணாமலை மன்றத்தில் கவிஞர் திரு. முத்துலிங்கம்
அவர்கள் தலைமையில் குத்து விளக்கேற்றி, நிகழ்ச்சி துவங்கப்பட்டது .
முன்னாள் சுகாதார அமைச்சர் திரு எச் வி. ஹண்டே அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
ஆரம்பத்தில், பரத நாட்டியம் , மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
புஷ்பவனம் குப்புசாமி அவர்களின் பாடலுக்கும், மாணவிகள் நடனமாடி
கைதட்டல்கள் பெற்றனர் , மாணவிகளுக்கும், ஆசிரியருக்கும், முன்னாள் அமைச்சர் திரு. ஹண்டே நினைவு பரிசுகள் வழங்கினார் .
பின்பு, மேடைக்கு சிறப்பு விருந்தினர்களாக திருவாளர்கள் கவிஞர் முத்துலிங்கம், முன்னாள் அமைச்சர் ஹண்டே, இசை அமைப்பாளர்
லக்ஷ்மன் சுருதி, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் மெய்க்காப்பாளர் திரு.
கே.பி.ராமகிருஷ்ணன் மகன் திரு. கோவிந்தராஜன், ஈ. பாஸ்கரன், திண்டுக்கல் மலரவன், திருப்பூர் ரவிச்சந்திரன், மதுரை எஸ். குமார், தமிழ் நேசன், மர்மயோகி மனோகர், கோவை துரைசாமி, திருவண்ணாமலை கலீல் பாட்சா, நெல்லை ஆறுமுகம், பெங்களூரு கா. நா. பழனி ஆகியோர் அழைக்கப்பட்டனர் .
அனைத்து எம்.ஜி.ஆர். மன்ற தோழர்கள் பெருந்திரளாக வந்திருந்து கலந்து
கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர் .
விழாவில் சிறப்பு அம்சமாக, மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். புகைப்படங்கள் அடங்கிய வண்ண மலர் திரு. ஹண்டே அவர்கள் வெளியிட, திரு. கோவிந்தராஜன் பெற்றுக் கொண்டார் .
முன்னதாக , வண்ண மலரில் அடங்கிய புகைப்படங்கள் பற்றிய வீடியோ தொகுப்பு மற்றும், திரு. சத்யா அவர்கள் எம்.ஜி.ஆர். சமாதியில் அஞ்சலி, ஆராதனை ,பூஜைகள், சிலைக்கு மாலையிடுதல் , இனிப்பு வழங்குதல் ,
திரு. சத்யா அவர்களின் பேட்டி , ஆகியன அனைவருக்கும் காண்பதற்கு
ஒளிபரப்பு செய்யப்பட்டது .
நிகழ்ச்சியில் முக்கிய விருந்தினர்களாக திரு. ஹண்டே, திரு. முத்துலிங்கம் , திரு லக்ஷ்மன் ஸ்ருதி ஆகியோர் பேசினார்கள்
விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்ததாகவும், புரட்சி தலைவர் மீது பற்று வைத்து
வண்ண மலர் வெளியிட்டதற்காகவும் , திரு. சத்யாவுக்கு, திரு. லக்ஷ்மன் ஸ்ருதி
ஆளுயர மாலை அணிவித்து கௌரவித்தார்.
விழா முடிவில் , சிறப்பு விருந்தினர்களுக்கும்,அழைப்பாளர்களுக்கும் ,பொன்னாடைகள் போர்த்தப்பட்டு, நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.
ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்..ஜி ஆர் பக்தர்கள் குழு வைத்த பேனர்
http://i66.tinypic.com/6sa06x.jpg
முன்னாள் சுகாதார அமைச்சர் திரு.ஹண்டே அவர்களை , கலைவேந்தன் பக்தர்கள் குழு தலைவர் திரு. பாஸ்கரன் வரவேற்கும் காட்சி.
http://i67.tinypic.com/jg2liw.jpg
விழா மேடையில் அமைக்கப்பட்ட பேனர்
http://i67.tinypic.com/ivg5rn.jpg
பரத நாட்டிய நடன காட்சிகள்
http://i63.tinypic.com/21njcs9.jpg
திரு.ரவிச்சந்திரன் (திருப்பூர் ), திரு.ஹண்டே , திரு. முத்துலிங்கம் .
http://i66.tinypic.com/1siedz.jpg
திருமதி கோவை பெரியநாயகி, திரு.கோவை துரைசாமி மற்றும் சிலர்
http://i64.tinypic.com/29p81gi.jpg
திரு.துரைசாமி, திரு. உலகப்பன் (கோவை வினியோகஸ்தர்),திரு. முத்துலிங்கம், திரு.ஹண்டே.
http://i68.tinypic.com/wrgw79.jpg
அரங்கத்தில் திரண்டிருந்த பார்வையாளர்கள்
http://i66.tinypic.com/14vn1g3.jpg
திரு.கலீல் பாட்சா (திருவண்ணாமலை ) திரு.கா.நா.பழனி (பெங்களூரு ),
திரு.தமிழ் நேசன் (மதுரை )
http://i68.tinypic.com/119bd35.jpg
திரு.லோகநாதன், திரு.ஹண்டே , திரு.முத்துலிங்கம்
http://i66.tinypic.com/2rgl7pg.jpg
திரு.மலரவன் (திண்டுக்கல் ), திரு.ஹண்டே , திரு.முத்துலிங்கம்
http://i66.tinypic.com/9a4j1d.jpg
திருவாளர்கள்:பாஸ்கரன், மலரவன், லக்ஷ்மன் ஸ்ருதி , முத்துலிங்கம், ஹண்டே ,
கோவிந்தராஜன் , ரவிச்சந்திரன், துரைசாமி
பின்புறம் : திருவாளர்கள் : மதுரை எஸ். குமார் , தமிழ் நேசன் ,கலீல் பாட்சா ,
கா.நா. பழனி , ஜெயக்குமார், நெல்லை ஆறுமுகம் ஆகியோர்.
http://i65.tinypic.com/2hx3y8i.jpg
வண்ண மலர் வெளியீடு செய்பவர் திரு. ஹண்டே . பெறுபவர் திரு.கோவிந்தராஜன் .அருகில் திருவாளர்கள் : கலீல் பாட்சா , பாஸ்கர் , சத்யா, ரவிச்சந்திரன், துரைசாமி
http://i67.tinypic.com/2qwf0b7.jpg
திருவாளர்கள் : பாஸ்கரன் , முத்துலிங்கம் , ஹண்டே, கோவிந்தராஜன், சத்யா
http://i68.tinypic.com/eqyole.jpg
திருவாளர்கள் : , முத்துலிங்கம் , ஹண்டே, கோவிந்தராஜன், சத்யா
http://i67.tinypic.com/v4bcbp.jpg
திரு. ஹண்டே அவர்களுக்கு பொன்னாடை
அணிவிக்கப்பட்டு ,நினைவு பரிசு வழங்குதல் .அருகில்
திருவாளர்கள்: முத்துலிங்கம், பாஸ்கர் , கோவிந்தராஜன், சத்யா.
http://i67.tinypic.com/2cx72ab.jpg
திரு. முத்துலிங்கம் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்குதல் .அருகில் திருவாளர்கள்: மலரவன் சத்யா.
http://i68.tinypic.com/24nohuc.jpg
திரு.லக்ஷ்மன் ஸ்ருதி அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு
வழங்குதல் .அருகில் திருவாளர்கள்: மலரவன், துரைசாமி, சத்யா.
http://i65.tinypic.com/9lahkw.jpg