-
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்
263 வது வெற்றிச்சித்திரம்
மண்ணுக்குள் வைரம் வெளியான நாள் இன்று
மண்ணுக்குள் வைரம் 12 டிசம்பர் 1986
http://media-images.mio.to/various_a...29/Art-350.jpg
https://upload.wikimedia.org/wikiped...kul_Vairam.jpg
-
-
-
-
-
-
-
-
-
Vasu Devan
நான் ரசித்த திலகத்தின் 'திருப்ப'க் காட்சி.
ராஜசேகரும், ராதாவும் காதலர்கள். ஆனால் விதி ராதாவின் மாமா ரூபத்தில் கொடுமையாக சதி செய்ய, ராதா தன்னை மோசம் செய்து விட்டாள் என்று தவறாக நம்பி ('குலமகள் ராதை' போல) ராஜசேகருக்கு ராதாவின் மேல் இருந்த காதல் கோபமாக மாறி, மனதில் கொழுந்து விட்டு எரிய ஆரம்பிக்கிறது .
15 வருட காலங்கள் உருண்டோட, ராஜசேகர் இப்போது ஒரு உயர் போலீஸ் அதிகாரி. போலீஸ் சிங்கம்.
ராஜசேகர் என்றாலே அது நம் தலைவருக்கே மட்டுமே பொருந்தக் கூடிய, நம் அனைவரையும் கவர்ந்த, நமக்கே சொந்தமான ரம்மியப் பெயர் அல்லவா!
நடிகர் திலகம் ராஜசேகராக. அவர் காதலி ராதாவாக சுஜாதா.
சுஜாதாவை அவர் மாமன் கே. கண்ணன் குடிகார சுதர்சனுக்குக் கட்டிக் கொடுத்து விட, ராதா வாழ்வைத் தொலைத்து, மேடைகளில் பாடி, கண்டவர்களுடன் கை கோர்த்து ஆடி, விதியே என்று வாழ்க்கையை ஓட்டுகிறாள். அவள் இப்போது நடுத்தர வயது மங்கை. மானத்தோடு வாழ்ந்தால் கூட, சமுதாய வீதியில் அவள் கேவலமான ஒரு பெண். சிவப்பு விளக்கு.
நடிகர் திலகத்தை தனது 25-ஆவது திருமண நாள் விழாவிற்கு அழைக்க வருகிறார் அவரின் கல்லூரி கால நண்பர் வில்லன் ஜெய்சங்கர்.
நடிகர் திலகமும் சம்மதித்து பார்ட்டிக்குப் போக, அங்கே அவர் எதிர்பாராவிதமாக அதிர்ச்சியடையும் அளவிற்கு பழைய காதலி சுஜாதா மேடையில் பாடுகிறார் கையில் மைக்குடன். சுஜாதாவும் நடிகர் திலகத்தைப் பார்த்து அதிர்ச்சியடைய, இருவர் நெஞ்சிலும் ஆயிரம் எண்ண ஓட்டங்கள். பழைய நினைவுகள் இருவர் நெஞ்சங்களையும் கிளற, பாடலின் அர்த்த பரிமாற்றத்தில் உள்ளுக்குள்ளே இருவரும் சொல்லொணா வேதனை அடைகிறார்கள்.
இன்னும் நடிகர் திலகத்தின் மேல் தான் கொண்ட காதலையும், தான் தன் மாமனால் வஞ்சிக்கப்பட்டதையும், பிணமாய் தான் வாழ்ந்து கொண்டிருப்பதையும் தான் பாடும் பாடலில் ஜாடையாய் உணர்த்துகிறார் சுஜாதா.
'ராகங்கள் என் ஜீவிதங்கள்
என் கண்ணிலே காவியங்கள்
தேனாற்றிலே ஓடங்கள் கூடின
ஜோடியாய்ச் சேர்ந்தன
காதலில் நீந்தின
ஏன் பிரிந்தன?
வெள்ளங்கள் மீறின
ஓடங்கள் ஆடின
பாதைகள் மாறின
இன்றுதான் சேர்ந்தன
உண்மை எவ்விதம் நான் சொல்ல?
கதை அல்ல'
(சரியான வரிகள். சுசீலா அம்மாவின் குரலில் அருமையான பாடல்.)
சுஜாதா பாடப் பாட, நடிகர் திலகம் அதிர்ச்சியில் உறைந்திருப்பார்.
'நீ பார்த்தது பெண்மையின் பாதியை
நேரிலே சொல்கிறேன் உண்மையின் நீதியை
காதலன் கண்களில் இன்று
என்னையே நான் கண்டேன்
சுகம் கொண்டேன்'
என்று சுஜாதா பாடியதும் சுரத்தே இல்லாமல் வெறுப்பின் உச்ச நிலையில் 'தம்' அடித்துக் கொண்டிருக்கும் நடிகர் திலகம் 'காதலன் கண்களில் இன்று என்னையே நான் கண்டேன்' வரிகளில் தன்னைத்தான் அவள் குறிப்பிடுகிறாள் என்று ஒரு வினாடி சுயநினைவுக்கு வந்து, 'டக்'கென்று தம்மை வாயிலிருந்து எடுத்து, தலை சாய்த்து, கண்கள் கலங்க தவிப்பது அவருக்கே உரித்தானது. மேலே உள்ள திலகத்தின் இமேஜ்கள் அதை உணர்த்தும்.
அடுத்த நாள் ஒரு போன் வரும். அட்டெண்ட் பண்ணினால் எதிர் முனையில் சுஜாதா.
'நேத்து பங்க்ஷனுக்கு வந்தீங்களே...நானும் பார்த்தேனே!'
என்று சுஜாதா போனில் கூற, அதற்கு இவர் படுநக்கலாய்...
'நானும் உன்னைப் பார்த்தேனே' என்று சாடுவது இன்னும் அட்டகாசம். ('உன் அலங்கோலத்தைப் பார்த்தேனே' என்று அர்த்தம்)
சுஜாதா சொல்வதையெல்லாம் 'ம்...ம்'.. என்று கேட்டுக் கொண்டிருப்பார்.
'கேக்கிறீங்களா?' என்று சுஜாதா கேட்டவுடன்,
'இது என்ன வாக்குமூலமா'? என்று வெறுப்பை உமிழ்வார். காதலி ஏமாற்றியதாய் நினைத்திருக்கும் கோபம் மாறாமல் இருக்கும். சுஜாதா பேசப் பேச ஒன்றும் பேசாமல் தலையைத் தடவியபடி கேட்டுக் கொண்டிருப்பார். காதலி எதிர்முனையில் அழும்போது மனசும் கேட்காது. கண்கள் தானாகக் கலங்கி, கைகள் தானாக அதைத் துடைக்கும். சுஜாதா இவரை வீட்டுக்கு வரச் சொல்லி கேட்பார்.
நடிகர் திலகம் போலீஸ் அதிகாரி உடுப்பிலேயே சுஜாதா வீட்டுக்குச் செல்வார். இருவர் மட்டும் தனியே நேருக்கு நேர் சந்திப்பார்கள். இரவு நேரப் பின்னணி. பின்னால் 'எனை மறந்து பாடுவேன்' பாடலின் பின்னணி இசை ஒலித்துக் கொண்டிருக்கும். சுஜாதாவின் பார்வையில் பழைய காதலும், பாசமும், அன்பும், சந்தோஷமும் தெரிய, நடிகர் திலகம் கோபப் பார்வையிலேயே இருப்பார். சுஜாதா உள்ளே அழைப்பார். பூட்ஸ் போட்டிருப்பதாக நடிகர் திலகம் சொல்ல, சுஜாதா 'வாங்க..இப்போ இது கோவில் இல்ல' எனும் போது டச்சிங்காகவே இருக்கும்.
பிரமாதமாக கம்பீரத்துடன் நடந்து வந்து, பாக்கெட்டில் கை நுழைத்து, வீட்டை ஒரு தடவை நன்றாக சுற்றி நோட்டமிடுவார். அங்கு பல ஆண்களுடன் சுஜாதா இருப்பது போன்ற புகைப்படங்கள் இருக்கும். வெறுப்பாக அதைப் பார்ப்பவர்,
"என்ன இதெல்லாம்? உன்னுடைய தொழிலுக்குக் கிடைத்த சர்டிபிகேட்ஸா?'
என்று குத்திக் காட்டுவார்.
'கோபமா இருக்கீங்களா?' என்று சுஜாதா கேட்டவுடன்,
அப்படியே எரிமலையாய் மாற ஆரம்பிப்பார். வார்த்தைகள் நெருப்பாய் வந்து விழும்.
'கோபமா? உன் மேலயா? எனக்கா? ஓ... ஓ..டேமிட்' என்று இடுப்பில் கைவைத்து சிங்கம் போல கர்ஜனை செய்வார். (தலைவர்னா தலைவர்தான். எந்தக் காலத்திலேயும் கொஞ்சம் கூட நம்மை ஏமாற்றவே மாட்டார். மாறாக இன்னும் வாரி வழங்குவார்.)
'15 வருஷத்துக்கு முன்னால உனக்கும் எனக்கும் ஏதோ உறவு ஒட்டிகிட்டு இருக்கும்னு நெனச்சனே... அப்ப வந்திருக்கணும் கோபம்'...
'எல்லோரையும் போல நானும் கல்யாணம் பண்ணிக்கிட்டு மனைவியோட, குழந்தை குட்டியோட, ஏகபோகமா, சொர்க்க வாழ்வு வாழணும்னு நெனச்சுகிட்டு இருந்தேனே... ஓ... அப்ப வந்திருக்கணும் கோபம்'...
'ஒரு உறவு... ஒரு உரிமை... ஒரு குடும்பம்... ஒரு பெருமை... இதெல்லாம் உண்டாகும்னு மனசுக்குள்ளேயே கோட்டை கட்டி, கோட்டை கட்டி சிம்மாசன மகராஜா மாதிரி ஒரு டம்மி ராஜாவா உட்கார்ந்துகிட்டு இருந்தேனே... ஓ... அப்ப வந்திருக்கணும் இந்தக் கோபம்'...
('டம்மி ராஜா' சொல்லும் போது வலது கையை மார்புக்குக் குறுக்கே விசிறி வீசிக் காட்டுவார் பாருங்கள். பார்க்க கண்கள் ஆயிரம் வேண்டும்.)
'என்னவோ கங்கை... பாவத்தை தீர்த்துக்கப் போறேன்னு சொன்னியே... அந்த அழுகைகாகத்தான் இங்க வந்திருக்கேன்'
என்று ரொம்ப ஆத்திரப்பட்டு விடுவார்.
சுஜாதா எதுவும் பேசாமல் தலை கவிழ்ந்து நிற்க, 'கொஞ்சம் அதிகமாகத்தான் பேசி விட்டோமோ' என்று அப்படியே ஆத்திரத்தைக் கொஞ்சம் தணித்து, சுஜாதாவை சுட்டிக் காட்டி,
'ஏய்! லுக் ஹியர்! எனக்கு நிறைய வேலை இருக்கு. இன்னும் பதினஞ்சே நிமிஷத்திலே உன்னுடைய பாவ மன்னிப்பு சடங்கை முடிச்சிடு' (இந்த மாதிரி கோப கேலி, கிண்டல்கள் நம்ம தலைவருக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி)
என்று சொல்லும் போது அமர்க்களப்படுத்தி விடுவார். கோபம் குறைந்தபாடில்லாமல், பரிதாபப்படாமலும் இருக்க முடியாமல் தடுமாற்றத்தை கம்பீரத்துடன் நிலை நிறுத்துவார். ஆத்திரம் தொண்டை அடைக்கும். கண்களும் கலங்கிய நிலையில் இருக்கும் காதலியின் பரிதாப நிலை பார்த்து.
"15 வருஷ கதையை 15 நிமிஷத்துல எப்படிங்க முடிக்கிறது?' என்று சுஜாதா அழ,
கேட்பார் ஒரு கேள்வி நறுக்காக.
'எப்படியா?... 15 வருஷ சிநேகிதத்தை பத்தே நிமிஷத்துல முறிக்கல?!... அதே மாதிரி'...
பழி தீர்ப்பார். இத்தனை வருடம் தனிமரமாய் கஷ்டப்பட்டதற்கு காரணமானவள் எதிரேதானே இருக்கிறாள் என்று வாங்கு வாங்கு என்று வாங்குவார்.
பின் சுஜாதா இவர் தன்னைப் பெண் கேட்க வந்த போது மாமா தன்னைக் கட்டிப் போட்டு விட்டு சந்திக்க முடியாமல் போன கதையைச் சொல்லி, தான் நிரபராதி என்று நிரூபித்து, தான் வலுக்கட்டாயமாக சுதர்சனுக்குக் கட்டி வைக்கப்பட்ட கதையைச் சொல்லி, தினம் அவனிடம் அடி, உதை படுவதாக சொல்லி அழுது, ஒரு குழந்தைக்குத் தாயாக இருக்கும் நிலையையும் சொல்லி கலங்க,
அத்தனையும் பொறுமையாய்க் கேட்டு,
'இட்ஸ் ஆல் ரைட்! ஃபர்கெட் இட்' என்று மன்னித்து மனம் நொந்தவராய் நிற்பது பரிதாபம்.
இப்போது வரும் வினை. குடித்துவிட்டு சுஜாதாவின் கணவர் சுதர்சன் என்ட்டர். காலிங்பெல் அடித்தவுடன் சுஜாதா பதறி,
'அவர் ஒரு மாதிரி! குடித்து விட்டு வந்திருக்கார்... ஏதாவது தப்பாக நினைப்பார்... நீங்க பின் பக்கம் போயிடுங்க' என்று நடிகர் திலகத்திடம் சொல்ல,
பேண்டின் இரு பாக்கெட்டுகளிலும் கம்பீரமாக கைகளை நுழைத்தபடி நிற்கும் நடிகர் திலகம்,
'நான்சென்ஸ்! அவன் குடிகாரனா இருக்கலாம்... ஆனா நான் திருடன் இல்ல பின் வழியா போறதுக்கு' என்பார்.
'நான் என்ன தப்பு செய்தேன்?' என்ற கள்ளமற்ற நேர்மை முகத்தில் தெரியும்.
'லெட் ஹிம் கம்... கதவைத் திறந்துவிடு' என்று அங்கேயே நின்றபடி ஆணையிட்டு கர்ஜிப்பார்.
உள்ளே சுதர்சன் நுழைந்து சுஜாதாவை 'அடி அடி'யென்று அடித்து தன்னையும், சுஜாதாவையும் இணைத்துப் பேச, புழுவாய்த் துடிப்பார் நடிகர் திலகம். 'அவள் கணவன் அவளை அடிக்கிறான்... நாம் என்ன செய்ய முடியும்?' என்று அதிகாரம் இருந்தும் ஒன்றும் செய்ய இயலாதவராய் தவிப்பார். ஒரு கட்டத்தில் ஆத்திரம் அதிகமாகிப் போய்விட, சுதர்சனைத் தட்டிக் கேட்பார். அது கைகலப்பில் முடிந்து எதிர்பாராவிதமாக மாடியில் இருந்து விழுந்து இறந்து விடுவார் சுதர்சன்.
அதைப் பார்த்து 'ஒ..மை காட்!' என்று அதிர்ச்சியடைந்து, 'ஹீ இஸ் டெட்...நோ...நோ...நோ.. என்று கைகளை மூடி நெற்றியில் வைத்துக் கொள்வார்.
15 வருடங்களுக்குப் பின் பிரிந்த காதலியை சந்தித்து அவள் மீதுள்ள கோபம் தணியாமல், காதலும் குறையாமல், பின் அவள் கதை கேட்டு, அவள் மீது பரிதாபப்பட்டு, பின் கண்கூடாகவும் அவள் கணவனிடம் படும் சித்ரவதைகளையும் பார்த்து நொந்து போய், அவள் கணவனைக் கொலை செய்ய வேண்டிய கட்டாயத்துக்கும் ஆளாகி, உயர் போலீஸ் அதிகாரி என்ற கம்பீரத்தையும் குறைத்துக் கொள்ளாமல், அனைத்தையும் அற்புதமாகக் காட்டி தனது உன்னத நடிப்பால் இந்த 'திருப்பம்' படத்திற்கே இந்தக் காட்சியின் மூலம் 'திருப்பம்' தருகிறார் நம் நடிகர் திலகம்.
நான் மிக மிக ரசித்த காட்சி இது. 'திருப்பம்' படத்தின் ஆர்ப்பாட்டமான காட்சிகளுக்கு நடுவே கவிதையாய் ஒரு காட்சி இது.
'வெள்ளை ரோஜா' வெற்றியின் தொடர்ச்சி இந்தப் படம். 100 நாட்கள் வெற்றி கண்ட படம். 14.01.1984 பொங்கலுக்கு படம் ரிலீஸ். ஆனால் நாங்கள் கடலூரில் முந்தின நாள் 13-ம் தேதி இரவே 10 மணிக்கெல்லாம் படம் பார்த்து விட்ட பெருமையைப் பெற்று விட்டோம். கடலூர் கமலம் தியேட்டரில் ரிலீஸ். மிக நன்றாக ஓடியது. அந்த இரவுக் காட்சி மறக்க முடியாத ஒன்று. 'வெள்ளை ரோஜா'வின் வெற்றி வாசனையை அனுபவித்த நம் ரசிகர்கள் 74 நாட்கள் கேப்பில் மீண்டும் 'திருப்ப'த்தின் மூலம் திரும்ப வெற்றிக் கனியைச் சுவைத்தார்கள். நன் குறிப்பிட்ட அந்த ரசிகர் காட்சியில் ஆட்டோ ஆட்டோவாக லாட்டரி சீட்டு கவுண்ட்டர் பைல்கள், பூக்கூடைகள் வந்து இறங்கி தலைவர் சவப் பெட்டி இழுத்து அறிமுகமாகும் அந்த முரட்டுக் காட்சியில் அத்தனை கவுண்ட்டர் பைல்கள், உதிரிப் பூக்கள் என்று தலைவர் முகமே தெரியாத அளவிற்கு வாரி இறைக்கப்பட்டன. அவ்வளவு அமர்க்களம். பிரபு ரசிகர்கள் வேறு. கேக்கணுமா? எத்தனை பூக்கூடைகள்! எவ்வளவு சரவெடிகள்!
1980-ல் வெளிவந்த 'பே-ரஹம்' என்ற இந்திப் படத்தைத் தழுவி எடுக்கப்பட்ட படம். இந்தியில் சஞ்சீவ்குமார் செய்த ரோலை தலைவரும், சத்ருகன் சின்ஹா செய்த ரோலை பிரபுவும், சுஜாதா பாத்திரத்தை மாலா சின்ஹாவும், அம்பிகா பாத்திரத்தை ரீனாராயும் செய்திருந்தனர். நடிகர் திலகத்துக்கு போலீஸ் அதிகாரி பாத்திரம் அவர் செய்த மற்ற கதாபாத்திரங்களில் இருந்து வேறுபட்டது. செம வித்தியாசம் காட்டியிருப்பார். இதற்கே முந்தின படத்தில் கூட ஃபாதர் ஜேம்ஸின் அண்ணன் போலீஸ் அதிகாரி ஜே.ஜே.அருள் என்னும் ஜான் ஜேகப் அருள்தான். அது வேறு, இது வேறு என்று வித்தியாசம் காட்ட இந்த தெய்வத்தை விட்டால் வேறு யார்?
சுசீலா பாடும் 'ராகங்கள்... என் ஜீவிதங்கள்' பாடல் கேட்க கேட்க அவ்வளவு இனிமை. பிரபு அம்பிகா ஆட்டம் போட்ட 'தங்க மகள்... துள்ளி வந்தாள்... புத்தாண்டு வாழ்த்துக்கள்' பாடல் சூப்பர் ஹிட். ஆடலும்தான். 'பாடகர் திலகம்' பாடும் 'எனை மறந்து பாடுவேன்' பாடலும் நல்ல பாடலே.
'எத்தனை ஸ்டார்கள் வந்தாலென்ன? என்றுமே நான் தான் தமிழ் சினிமாவின் திருப்பமே! அன்றிலிருந்து இன்றுவரை... அது நடிப்பிலும் சரி! வசூலிலும் சரி!' என்று வழக்கம் போல் தலைவர் மார் தட்டி நம்மை மார் நிமிர்ந்து நடக்க வைத்த இன்னொரு வசூல் படம். ஆரவாரப் படமும் கூட.
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...b3&oe=5ABA1222
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...8b&oe=5AD41CB8
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...bd&oe=5AD0680D
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...c3&oe=5AD16431
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...a9&oe=5ABD261B
-
-
Sundar Rajan.
அன்பிற்குரிய சிவாஜியவாதிகளே,
மதுரை சென்ட்ரலில்
மக்கள்தலைவரின்
சிவகாமியின் செல்வனின் ...
வெற்றியைத் தொடர்ந்து
2018 ஜனவரியில்,
நடிகர்திலகத்தின் மாபெரும் வெற்றிக்காவியம் பாவமன்னிப்பு வெளியாகிறது.
மதுரை சென்ட்ரல் தியேட்டரில்
ஞாயிறு மாலைக் காட்சி வசூலில் 18 வருடத்திற்கு பிறகு மாபெரும் வசூல் சாதனை புரிந்த மாபெரும் காவியம்.
மீண்டும் சாதனை படைக்க வருகிறார் நடிகர்திலகம்.
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...dc&oe=5AD24ABA
-
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்
199 வது வெற்றிச்சித்திரம்
ஜஸ்டிஸ் கோபிநாத் வெளியான நாள் இன்று
ஜஸ்டிஸ் கோபிநாத் 16 டிசம்பர் 1978
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...c3&oe=5AB9F5DA
-
Sivaji Ganesan Cultural Society, Malaysia
Nadigar Thilagam Sivaji Ganesan is an Avathar for Indian Cinema.Join us for his 89th Birthday Function. It will be Celebrated Graciously with a Musical Night,a Good number of songs from his Films, a Scene from Thiruvarutchelvar, a Video clip of him. Questions and Answers from his Films and Prizes will be given to Winners. Sivaji Ganesan Award to a Senior Artiste, and to a Young Promising Artiste of Malaysia together with Cash will be given to them. Entrance is FREE, Pls do come with Family and Friends & Enjoy the Evening on 28/12/2017, Thursday, at Tansri KR.Soma Auditorium.
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...b3&oe=5AD0D4F0
-
Rajan and 3 others commented on this.
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...51&oe=5AD365D5
Vetrivel Vetri
நடிகர் திலகம் திருவானைக்கா கோவிலுக்கு யாணை ஒன்று பரிசளித்தார் என்பது எல்லோருமா அறிந்த செய்தி. எல்லோரும் என்றால் சிவாஜி பக்தர்கள் மட்டும்.
அறியாத செய்தி
யாணை கொடுத்தால் போதுமா அதற்கு உணவளிக்க என்ன வருமானம்
அதற்காக இரண்டு ஏக்கர் நிலத்தை வாங்கி கொடுத்துள்ளார். புதுக்கோட்டை முக நூல் நண்பர்கள் சந்திப்பில் சிவாஜி சமுகநல பேரவை நண்பர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி சொன்ன தகவல் சரி அதோடு விட்டாரா யானையை பராமரிக்க பாகன் வேண்டுமே அவன் தங்குவதற்காக ஒரு வீடு கட்டி கொடுத்துள்ளார் இப்படி சகல விஷயங்களையும் யோசித்து தான தர்மங்கள் செய்த மாபெரும் தலைவனை கஞ்சன் என்று சில அயோக்கியர்களை நம்பிய தமிழக முட்டாள்களும் இருந்திருக்கின்றனரே
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...24&oe=5AC20E02
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...e3&oe=5AC37C9F
-
-
-
Aathavan Ravi
புதுக்கோட்டை சந்திப்பு நிகழ்வில் வெளியிடப்பட்ட
" தமிழின் அமுதம்" மலரில் இடம் பெற்ற நான்
எழுதிய அய்யன் அவதாரத் திருநாள் கவிதை.
எளியவன் எனக்கும், என் தமிழுக்கும் மரியாதை...
செய்த பண்பாளர், பெரியவர் அய்யா திரு. வானமாமலை அவர்களுக்கு வணங்குதலுடன்
நன்றிகள்.
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...1a&oe=5AD0BE98
-
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்
167 வது வெற்றிச்சித்திரம்
ராஜபார்ட் ரங்கதுரை வெளியான நாள் இன்று
ராஜபார்ட் ரங்கதுரை 22 டிசம்பர் 1973
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...fb&oe=5AD0D894
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...f8&oe=5AC6C229
-
-
-
-
Sekar Parasuram
Holiday Special,
இன்று(23/12/17) தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பாக இருக்கும் நடிகர் திலகம் திரைப்படங்கள்,
காலை 10 மணிக்கு ஜெயா மூவியில்-- கிரஹப்பிரவேசம்,
... பிற்பகல் 12 மணிக்கு மெகா டிவியில் -- கை கொடுத்த தெய்வம்,
இரவு 7 மணிக்கு சன் லைப் சேனலில் -- இரு மேதைகள்,
இரவு 8 மணிக்கு ராஜ் டிஜிட்டல் ப்ளஸ் -- சிவகாமியின் செல்வன்,
இரவு 10 மணிக்கு ஜெயா மூவியில்-- - *ஆலயமணி,
இரவு 10:30 க்கு ராஜ் டிவியில்-- கிருஷ்ணன் வந்தான்,
-
Sivaji Ganesan Cultural Society, Malaysia
·
ALL ARE WELCOME, Nadigar Thilagam Sivaji Ganesan is an Avathar for Indian Cinema.Join us for his 89th Birthday Function. It will be Celebrated Graciously with a Musical Night, a Good number of songs from his Films, a Scene from Thiruvarutchelvar, a Video clip of him. Questions and Answers from his Films and Prizes will be given to Winners. This year's Sivaji Ganesan Award for Senior Artiste goes to D.Theresa, 89 years Old. The Evergreen Voice from Radio Malaya, 1954, Stage and TV Actress, Young Promising Artiste Award goes to Bala Ganapathy William, he is proving his Talents, as an Actor, Host, Producer and Director. Entrance is FREE, Pls do come with Family and Friends to witness and Enjoy the Evening on 28/12/2017, Thursday, at Tansri KR.Soma Auditorium.
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...27&oe=5ACA9D7E
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...4c&oe=5ACE7FFE
-
Samy Kumaran
"நடிகர் திலகம்" "செவாலியே" "பத்மஸ்ரீ" "பத்மபூஷன்" சிவாஜி கணேசன் -
THE ONLY WONDER OF WORLD CINEMA AND THE BOX OFFICE SAMRAAT SINCE 1952 !
உலக நடிகர்களிலேயே வல்லரசு எனப்படும் அமெரிக்காவின் அதிபராம் திரு JOHN F KENNEDY கலாசாரா தூதுவராக கௌரவித்த ஒரே இந்திய நடிகர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
நான்குகண்டங்களின் அரசாங்கத்தாலும் பட்டமும் பதவியும் கொடுத்து கௌரவிக்கப்பட்ட ஒரே உலக நடிகர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள்.
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...bf&oe=5ACC0BAE
-
Jahir Hussain
செவாலியே சிவாஜி... செய்தித் துளிகள் 2...
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தின் முதல் வசனக் காட்சியைப் படமாக்கிக் கொண்டு இருந்தார்கள்...
ஏ.கருணாநிதி, ‘வெள்ளைக்காரர்களிடம் எட்டப்பன் நம்மைக் காட்டிக்கொடுக்கிறான்’ என்று வசனம் பேச...
அதற்கு நடிகர் திலகம் ‘அமுதமும் விஷமும் ஒரே இடத்தில்தான் விளைகிறது". கட்டபொம்மனும் எட்டப்பனும் ஒரே மண்ணில்தான் பிறந்தார்கள்’ என்று வசனம் பேசிவிட்டு, போர்… போர்… என முழக்கமிடுவார்.
நடிகர் திலகத்தை ‘சபாஷ் மீனா’, ’தங்கமலை ரகசியம்’ போன்ற பல படங்களில் பார்த்துக் கூடவே இருந்து பழகியவன் நான். அதுவரையில் நான் பார்த்த சிவாஜி வேறு.
உணர்ச்சிகரமாக வசனம் பேசி போர் முழக்கமிட்டபோது நான் ஆடிப்போய்விட்டேன். ஏ.கருணாநிதி, பிரளயம் வந்ததுபோல் உணர்ந்தார். செட்டில் பரிபூரண அமைதி. நிஜமாகவே போர் முரசு கொட்டி, கோல்டன் ஸ்டுடியோவுக்குள்ளேயே சண்டை துவங்கிவிட்டது போன்ற பிரமை. என்கிறார்... பந்துலு அவர்களின் உதவியாளர் சிங்க முத்து...
அப்படிக்கூட ஒரு மனிதரால் நடிக்கமுடியுமா…!’
பரணி ஸ்டுடியோவில் கட்டபொம்மனின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டன. சிவாஜி தூக்கிலிடப்படும் காட்சி. அப்போதும் கம்பீரமாக சிவாஜி நடந்துவந்ததைக் கண்டு, துணை நடிகர்கள் வாய் விட்டு அழுதார்கள்.
பி.ஆர்.பந்துலு எப்போதும் தன்னுடைய படத்தின் ரிலீஸ் தேதியை முன்னமே அறிவித்துவிடுவார். கட்டபொம்மனுக்கும் அப்படியே நடந்தது. ஆனால், இந்தியாவில் கலர் ஃபிலிம் ஸ்டாக் இல்லை என்றார்கள். பந்துலு உடனே தனது பங்குதாரரான சித்ரா கிருஷ்ணசாமியை லண்டனுக்கு அனுப்பி, கட்டபொம்மனுக்கு பிரிண்ட் போட்டு, சொன்ன தேதியில் படத்தை வெளியிட்டார்.
‘முழு நீள கேவா கலரில் தயாரித்து, டெக்னிக் கலராக ஆக்கப்பட்டிருக்கிறது’ என்ற வாசகத்தை, ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ பட ரிலீஸ் விளம்பரங்களில் காணலாம்.
மேக் அப் ரூமிலேயே முழு கேரக்டராக வெளிப்பட்டு, செட்டுக்கு போகும் உன்னதமான கலைஞன், சிவாஜி. சிவாஜியோடு இதிகாச, வரலாற்றுப் படங்களின் சகாப்தம் முற்றுப் பெற்றது என்றே சொல்லலாம்.
பி.ஆர்.பந்துலு, நேருக்கு நேர் நின்று பார்த்து மெய் சிலிர்த்த அனுபவம் இதோ –
கட்டபொம்மு குதிரை மீது ஏறி, வெள்ளையர்களை எதிர்த்து போர் புரியும் தன் வீரர்களுக்கு உற்சாகமளித்து, உடன் போரிடும் காட்சியைப் படமாக்கிக்கொண்டிருந்தோம்.
ஒரு வெள்ளைக் குதிரை மீது நடிகர் திலகம் உட்கார்ந்திருந்தார். காட்சி தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக, உண்மையிலேயே சில வெடிகளை வெடிக்கச் செய்ய இருந்தோம். எனவே, ‘சண்டை நடக்கும் மையமான இடத்துக்குப் போய்விடாதீர்கள். ரொம்ப ஆபத்து அது’ என்று அவரிடம் கூறினோம்.
என்ன காரணமோ தெரியவில்லை. சிவாஜி ஏறிவந்தஉ குதிரை, நிஜமாகவே நாலு கால் பாய்ச்சலில் ஓட ஆரம்பித்தது. அதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்தார் சிவாஜி. அந்தச் சமயத்தில், துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. அதைக் கேட்டதும்தான் தாமதம், குதிரை தலை கால் புரியாமல், நாங்கள் எங்கு போக வேண்டாம் என்று எச்சரித்திருந்தோமோ அங்கேயே சிவாஜியைக் கொண்டு நிறுத்திவிட்டது.
உயிருக்கு ஆபத்தான நிலையில் சிவாஜி சிக்கிக்கொண்டாரே என்று என் மனம் பட்ட வேதனையைச் சொல்லி முடியாது. எங்களால் அவரைப் பார்க்க முடியவில்லை. குதிரையிலிருந்து அவர் உருண்டு விழுந்துவிட்டார் என்றே நினைத்தோம். நானும் மற்றவர்களும் சிவாஜி இருந்த இடத்தை நோக்கி ஓடினோம்.
மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க, கை கால்கள் எல்லாம் ரத்தம் வழிய வழிய, ‘ஷாட் நன்றாக வந்ததா’ என்று கேட்டார் நடிகர் திலகம்.
‘இரண்டாயிரம் பேர்களுக்கு மேல் கலந்துகொள்ளும் காட்சி; என் ஒருவனால் ஷாட் வீணாகக்கூடாது; மறுபடியும் எடுப்பதென்றால் எவ்வளவு சிரமம்?’ என்றார்.’
கோட்டைகளும் மிகப்பெரிய மாளிகைகளும் நிறைந்த ஜெய்ப்பூரில் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ ஷூட்டிங் நடந்தது. ஹோட்டலாக மாறிவிட்ட ஜெய்ப்பூர் சமஸ்தான ‘ராம்வாக்’ மாளிகையில், பொதுமக்களுக்குக் கட்டபொம்மன் பேட்டி அளிப்பதையும், ஜாக்ஸன் துரையைப் பார்க்கக் கிளம்புவதையும் படமாக்கினார்கள்.
கட்டபொம்மன் படத்துக்கு லண்டன் – பிரெஞ்சு இன்ஸ்டிடியூட்டில் விசேஷக் காட்சி நடைபெற்றது. அதில் அப்போதைய இந்தியத் தூதர் விஜயலட்சுமி பண்டிட் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...c8&oe=5AB6440C
-
Sundar Rajan
அன்பிற்குரிய சிவாஜியவாதிகளே,
2017ல்
நமது மக்கள்தலைவரின் புகழ் காக்க கூடிய பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சிலை திறப்பு விழா, மணிமண்டபம் திறப்பு விழா,
மேலும் நற்பணி நிகழ்ச்சிகள், அன்னதானம், பள்ளிக் குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம், சீருடை வழங்குதல்,
பட்டி மன்றம், சிவாஜி விருது வழங்கும் விழா என நுாற்றாண்டு விழா போல் அமர்க்களப்படுத்தி விட்டனர் அன்பு இதயங்கள்.
முத்தாய்ப்பாக முகநுால் நண்பர்கள் சந்திக்கும் நிகழ்ச்சி இந்த ஆண்டு அமைந்தது.
... 2018 ல் இதை விட சிறப்பாக அமைய
விண்ணுலக வேந்தன் சிவாஜி அவர்கள்
அருள் புரியட்டும்.
தமிழகம் மட்டும் அல்லாமல் பிற மாநிலங்கள் மற்றும் உலகெங்கும் நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்து மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் புகழ் பரப்பிய அனைவரையும் வாழ்த்துவதில் பெருமை கொள்கிறது உங்கள் சிவாஜிகணேசன்.இன்.
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...7c&oe=5AB1C829
-
-
sekar parasuram
கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!!
மெகா டிவியில் பிற்பகல் 12 மணிக்கு
* சிவந்த மண்*
·
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...4e&oe=5AC3EB51
-
-
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்
186 வது வெற்றிச்சித்திரம்
ரோஜாவின் ராஜா வெளியான நாள் இன்று
ரோஜாவின் ராஜா 25 டிசம்பர் 1976
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...d5&oe=5AB09868
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...c3&oe=5AFA7601
-
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்
43 வது வெற்றிச்சித்திரம்
பாக்கியவதி வெளியான நாள் இன்று
பாக்கியவதி 27 டிசம்பர் 1957
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...2a&oe=5ABDE29D
-
-
-
-
-
-
Nagarajan Velliangiri
ஐயனின் நினைவுகள் , தினமலர் சிறுவர் மலரையும் விட்டு வைக்கவில்லை.
அருமையான நிகழ்வைப் பகிர்ந்து கொண்ட அந்த ஓய்வு பெற்ற ஆசிரியை சகோதரிக்கு மனமார்ந்த நன்றி.
https://scontent.fyzd1-1.fna.fbcdn.n...72&oe=5ABEE1DA
-
Sundar Rajan
மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே,
நாளை முதல்
நடிகர்திலகம் இருவேடங்களில் நடித்து மறுவெளியீட்டில் 100 நாள் கண்ட
மாபெரும் வெற்றிக் காவியம் ...
சிவகாமியின் செல்வன்
துாத்துக்குடி சத்யா திரையரங்கிற்கு வருகிறார்.
சென்ற மாதம் மதுரை சென்ட்ரல் திரையரங்கில் வெளியிட்டு மாபெரும் வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது.
அனைத்து இதயங்களும் வருகை தந்து என்றும் துாத்துக்குடி சிவாஜியின் கோட்டை என்பதை நிரூபிப்போம்.
இதன் வெற்றியைத் தொடர்ந்து, அடுத்து நடிகர்திலகத்தின் பல காவியங்கள் திரையிடப்படும்.
சிங்கத்தமிழனின் சிங்கநிகர் படையே,
திரள்வோம் துாத்துக்குடி சத்யா திரையரங்கில்....
படத்தினை வெளியிட பெரிதும் உதவிய மக்கள்தலைவரின் அன்பு இதயம் துாத்துக்குடி வடிவேல் அவர்களுக்கு நன்றியைக் காணிக்கையாக்குகிறோம்.
https://scontent.fyzd1-1.fna.fbcdn.n...48&oe=5ABD64AE
-
Wish you all a Happy and Prosperous New Year.
Calendar 2018 (web version)
https://scontent.fmaa3-1.fna.fbcdn.n...0b&oe=5AFC1444