-
ஆயிரத்தில் ஒருவன் !
_________________________
ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கையில்லை
நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை !
கவிஞர் வாலி !
உலகிலுள்ள நடிகர்கள் அனைவரும் நடிப்பென்ற இலக்கணத்திற்கு உட்பட்டு நடித்தார்கள் மக்கள் திலகம் மட்டும் தனக்கென்ற இலக்கணத்தை தானே அமைத்து கொண்டார் !
உதாரணமாக சண்டைகாட்சிகளில் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும் ஆனால் மக்கள் திலகம் சிரித்துக் கொண்டோ அல்லது நகைச்சுவையாக பேசிக்கொண்டோ சண்டையிடுவார் !
இந்தப் பாடல் காட்சியை பாருங்கள் !
உரிமைகளை பெறுவதெல்லாம்
உணர்ச்சிகள் உள்ளதானாலே !
நூறு பக்கங்கள் வசனம் பேசியும் காட்டமுடியாத உணர்வை இரண்டே வரிகளில் காட்டிவிடுவார் இந்த காட்சியை காணும் ஒவ்வொரு முறையும் உணர்வுகளால் உடல் சிலிர்ப்பதை உணராலாம் இதனால் தான் நமக்கு இவர் வாத்தியார் !........... Thanks.........
-
லண்டனில் புரட்சித் தலைவர் .........
30-07-1973அன்று மகாத்மா காந்தி அரங்கில் [ இந்திய ஒய்.எம்.சி.எ வாழகத்தில் நடந்தது. கூட்டம் அலைய மோதியது. லண்டன் தமிழர்களின் வரலாற்றில் எப்படிப்பட்ட கோட்டம் கூடியதில்லை என்ற அளவுக்கு கூட்டம். தலைவர், திருமதி லதா சபா, ப.நீலகண்டன், சித்ரா கிருஷ்ணசாமி.....ஆகியோர் வந்திருந்தனர். [ விவரம் பதிவும் நீளத்தை அதிகரிக்கும்]
தலைவாரி பேச அழைக்கப்பட்டார். கையொலி வானை பிளந்தது. சுருக்கமாக தனது பேச்சை முடித்து கொண்டார் தலைவர். ரசிகர்கள் விடவில்லை கேள்விகள் கேட்டார்கள். கேள்விகளால் தலைவரை மடக்க முயன்றவர்கள் அடங்கி போனார்கள்!!!!! இரவு 10 மணிக்கு கூட்டம் முடிந்தது. பொறுமையுடன் அனைவருடனும் புகைப்படம் எடுத்துக்கொண்டார் . "லண்டன் ஸ்டேஜ் கிரேஷன்ஸ்" அளித்த நவீன பாடல் கச்சேரி இடம் பெற்றது ............இவளா முடிய இரவு 11மணி. கூட்டத்தில் பொதுவாக மக்கள் மத்தியில் தோன்றிய என்ன ..... ஓவர் நடிகனாகவோ, அரசியல்வாதியாகவோ நினைக்காமல் தங்கள் குடும்பத்து ஒருவராக நினைத்தார்கள். மக்கள் திலகம் புரட்சித் தலைவர் உண்மையிலேயே எங்க வீட்டுப் பிள்ளை தான்.
(Auditorium/Hall present look and capacity may be different)......... Thanks...
-
மாண்புமிகு தமிழக முதல்வருக்கு டாக்டர் பட்டம் - வாழ்த்துக்கள்.
இந்த நேரத்தில் நமது புரட்சித் தலைவர் அவர்களுக்கு சென்னை பல்கலைக்கழகம் [ எல்லோருக்கும் தெரிந்ததே] மற்றும் அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழகம் "டாக்டர்" பட்டம் வழங்கியதை நினைவுகூர்வோம்.
அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழகம் நமது புரட்சித் தலைவருக்கு "பொது நிர்வாகத்துறையில் திறமைக்கு" கௌரவ கலாச்சார டாக்டர் பட்டம் வழங்கியது. கவிஞர்களால் அரசு ஒன்று நிறுவப்படவேண்டும் என்று தத்துவஞானி பிலேட்டோ அவர்களின் சுமார் ஆண்டுகளுக்கு முன் கண்டா கனவை நனவாக்கி, தான் சேவைபுரியும் தமிழ் மக்களின் மேல் புரட்சித் தலைவர் கொண்டுள்ள அன்பாயும், அக்கறையும் பாராட்டி இந்த கலாநிதிப் பட்டத்தை வழங்கியது. ......... Thanks Mr.SB.,
-
-
-
கவியரசு கண்ணதாசன் அவர்கள்... "உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம்" என்ற பாடல் எமுதிக்கொண்டிருந்த நேரம். ..கண்ணதாசன் காண அவரது வீட்டுக்கு நடிகவேள் M R ராதா அவர்கள் வந்தார். .கண்ணதாசன் எமுதிய பாடலை வாங்கி படித்து பார்த்தார். .பாடல் வரிகள் M R ராதாவை வெகுவாக கவர்ந்தது. கண்ணதாசனை அப்படியே கட்டி தழுவி பாராட்டினார். .என்னய்யா கவிஞன் நீ உன்னை போல் கவிஞனை நான் பார்த்ததில்லை பிரமாதமான பாடல் கண்டிப்பாக இந்த பாடல் காலத்தால் அழிக்க முடியாது. உலகளவில் பேசப்படும் என்று பாராட்டு தெரிவித்தார்..ஆமாம் இந்த பாடல் யாருக்காக எழுதப்பட்டது என்று கேட்டார். ..? அதற்கு கண்ணதாசன் நீங்களே சொல்லுங்கள் யாருக்கு இந்த பாடல் பொருந்தும். , ? நீங்கள் சரியான பதில் தந்தால் அந்த பாடல் அவருக்கே போய் சேரும். தவறான பதிலாக இருந்தால் இந்த பாடல் உங்களுக்கு கொடுத்து விடுகிறேன். உங்கள் சொந்த படத்துக்கு பயன் படுத்திக்கொள்ளுங்கள் என்றார் கவிஞர்.. அதற்கு M R ராதா பதில் அட என்ன இப்படி கேட்டிட்டுங்க உங்கள் பாடலுக்கு உயிர் கொடுக்க எம் ஜி ஆர் ஒருவர் தான் இருக்கிறார் அவரைத்தவிர வேறு எவருக்கும் பொருந்தாது. எனக்கு கொடுத்தால் என் தலைமுறை வரைக்கும் தான் பேசப்படும். ஆனால் எம் ஜி ஆர் க்கு பல தலைமுறை தாண்டி நிலைக்கும் என்றார்..உடனே கவியரசு கண்ணதாசன் ராதாவை கட்டித்தழுவி நான் நினைத்தேன் நீங்கள் சொல்லி விட்டீர்கள். இது கண்ணதாசன் பாடல் என்பதை தாண்டி எம் ஜி ஆர் பாடல் என்றுதான் பேசப்படும். என்றார். .
சில நாட்கள் கழித்து படப்பிடிப்பில் புரட்சித்தலைவரை சந்தித்த M R ராதா அவர்கள் .எல்லா நடிகர்களும் கவிஞர்களின் வரிகளுக்கு வாய் அசைவு கொடுப்பது சுலபம் ஆனால் வாழ்ந்து காட்டுவது கடினம். நீங்கள் வாழவும் வைக்கிறீர்கள் வாழ்ந்தும் காட்டுகிறீர்கள் என வாழ்த்துக்கள் கூறி கண்ணதாசன் எமுதிய பாடலையும் குறிப்பிட்டு பாராட்டினார்.
M R ராதா அவர்களால் பாராட்டுப்பெற்ற பாடலுக்கு புரட்சித்தலைவர் கண்ணதாசனுக்கு இரண்டு மடங்கு சம்பளம் தந்து மகிழ்ச்சி கடலில் நீந்த வைத்தார் எல்லா பாடல் வரிகளையும் கவனிக்கும் புரட்சித்தலைவர் இந்த பாடலை மட்டும் கவனிக்கவும் இல்லை திருத்தவும் இல்லை. .பாடல் சூப்பர் சூப்பர் ஹிட் ஆனது. உலகளவில் பேசப்பட்டது.
லண்டன் மியூசிக் அகாடமியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே இந்திய பாடல் இதுதான்
முதல் முறையாக கல்லூரி செல்பவர்களுக்கு பல கல்லூரிகளில் முதல் பாடமாக இப்பாடல் கருத்துக்கள் தான் பாடமாக நடத்தப்பட்டது. .
மதுரை பல்கலைக்கழகத்தில் பாடமாக இடம் பெற்றுள்ள ஒரே பாடல் இதுதான்
கூகுளில் ரிங் டோன் தொடங்கி முதல் முதலாக இடம் பெற்றது இப்பாடல் தான்
மு க ஸ்டாலின் மு க அழகிரி சீமான் திருமாவளவன் ராமதாஸ் மற்றும் பல தலைவர்களின் ரிஙடோனில் இடம் பெற்றுள்ள முதல் பாடல் இதுதான். .
பத்திரிக்கையாளர்கள் தொலைக்காட்சி நிர்வாகிகள் நடிகர்கள் வி ஐ பி க்கள் மற்றும் அனைத்து பிரபலமானவர்கள் பிரபலமான பாடல் இதுதான். ஏன் எந்த ஒரு குற்றமும் குறையும் கூற முடியாத ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கைக்கும் வழிக்காட்டியாக விளங்குகிறது இப்பாடல் தான். . இதை எல்லாவற்றுக்கும் மேல் வாத்தியார் புகழுக்கு புகழ் சேர்த்தது. ...தொடரும் தொடரும் தொடரும்........... Thanks.........
-
-
-
நடிக பேரரசர் கலை மன்னர் நடித்து மாபெரும் சரித்திர காவியம் மன்னாதி மன்னன். புரட்சி நடிகர் எம் ஜி ஆர், அகில உலக நாட்டியப் பேரொளி பத்மினி, அழகு மயில் அஞ்சலி தேவி, ராகினி, பி எஸ் வீரப்பா, எம் ஜி சக்ரபானி, வி ஆர் ராஜகோபால், நாராயண பிள்ளை, சேதுபதி, திருப்பதிசாமி, லட்சுமி பிரபா மற்றும் பலர் நடித்த மாபெரும் வெற்றி காவியம் மன்னாதி மன்னன். வெளியாகி இன்றுடன் 59 (19-10-1960) வருடங்களை கடந்து இன்றும் திரையரங்குகளில் வெற்றி நடை போட்டுக் கொண்டு வருகிறது. சேர மாமன்னர் மணிவண்ணனை எம்ஜிஆர் உருவத்தில் அப்படியே காண்கின்றோம். அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட், தேன் மதுரமாக இனிமையாக இனிக்கிறது. பத்மினி உடன் காதல் ரசம் புரியும் எம்ஜிஆர், அஞ்சலிதேவி உடன் உரையாடும் காட்சி, தாயின் மானத்தை பழித்துப் பேசிய கரிகால சோழனை பழி வாங்கி தன் சபதம் ஆன கற்பகவல்லி ஐ சிறை எடுக்கும் காட்சி, பி எஸ் வீரப்பா உடன் மோதும் சண்டை காட்சி, பத்மினி உடன் நாட்டியமாடும் எம்ஜிஆர், அத்தனையும் மறக்கமுடியாத இயற்கையான பசுமையான நினைவுகள். "பசும் தங்கம் உமது எழில் அங்கம் அதன் அசைவில் பொங்கும் நயம் காணவே ஈடு ஏதும் இல்லாத கலை சேவையில் தனி இடம் கொண்ட உமை கண்டு இப்பூமியில் ஆடாத மனமும் உண்டோ"!. மாபெரும் வீரர் (மணிவண்ணன்) மானம் காப்போர் (சித்ரா) சரித்திரம் தனிலே நிற்கின்றார். இயற்கையான நடிப்புக்கு மணி மகுடம் சூட்டிய இயற்கை பேரரசு மன்னாதி மன்னன் எம் ஜி ஆர் புகழ் வாழ்க!........... Thanks............
-
திரைப்படங்களை அரசியல் ஆயுதமாக்கிய மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்!
படத்தின் தலைப்புக்குப் பக்கத்தில் TIME TO LEAD எனப் போடப் போய், ஆளுங்கட்சியின் அதிகாரத்திற்குப் பயந்து, உடனடியாக அதை நீக்கி, கால்வழியே சிறுநீர் கழித்த தலைவாக்களைப் பார்க்கிறோம். ஆனால், தனது படத்தின் தொடக்கக்காட்சியில் வரும் பேனரிலேயே எதிர்க்கட்சிக் கொடியை தைரியமாக பட்டொளி வீசிப்பறக்கவிட்டவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அதனால்தான் அவர் இன்றும் தலைவராக இருக்கிறார். பொதுமக்களின ஊடகமான திரைப்படத்தை எப்படிப் பயன்படுத்தினால் எவ்வளவு உயரத்தை அடையமுடியும் என்பதை வெற்றிகரமாக நிரூபித்தவர், எம்.ஜி.ஆர்.
இலங்கையில் உள்ள கண்டியில் பிறந்தவர் மருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரன். இதன் சுருக்கம்தான் எம்.ஜி.ஆர். சிறுவயதிலேயே தந்தையை இழந்தார். தாயார் சத்யாவுடன் தமிழகம் வந்தார். கும்பகோணத்தில் ஆரம்பக்கல்வி பயின்றார். குடும்பச் சூழல் காரணமாக படிப்பு தடைபட்டது. எம்.ஜி.ஆரும் அவரது அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியும் நாடகங்களில் நடித்து வந்தனர். திரைப்படத்துறை வளர்ச்சி பெற்றுவந்த காலம் அது. அண்ணனும் தம்பியும் அந்தத் துறையிலும் கவனம் செலுத்தினர். வாய்ப்புகள் மிக அரிதாகவே கிடைத்துவந்தன.
சதி லீலாவதி (1936) படத்தின் மூலம் எம்.ஜி.ஆர் திரையுலகில் அறிமுகமானார். போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடம். எல்லீஸ் ஆர்.டங்கன் இயக்கிய இப்படத்தில் எம்.கே.ராதா கதாநாயகன். கலைவாணர் என்.எஸ்.கே, பாலைய்யா உள்ளிட்ட பலருக்கும் இதுதான் முதல் படம்.
பிரபல நடிகர்களாக இருந்த எம்.கே.தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா போன்றவர்கள் நாயகர்களாக நடித்த அசோக்குமார், ரத்னகுமார் உள்ளிட்ட படங்களில் சிறுபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்புகளே எம்.ஜி.ஆருக்குக் கிடைத்து வந்தன. அவர் சோர்ந்துவிடவில்லை. முயற்சிகளைத் தொடர்ந்துகொண்டே இருந்தார். டி.ஆர்.ரகுநாத் இயக்கிய தமிழறியும் பெருமாள், கிருஷ்ணன்-பஞ்சு இயக்கிய பைத்தியக்காரன் உள்ளிட்ட படங்களிலும் எம்.ஜி.ஆருக்கு வாய்ப்புக் கிடைத்தது.
அவரது விடாமுயற்சி வீண்போகவில்லை. கோவையில் எம்.ஜி.ஆரும் கலைஞரும் ஒன்றாகத் தங்கி திரையுலக வாய்ப்புகளைப் பெற்று வந்தனர். ஏ.எஸ்.ஏ.சாமி இயக்கத்தில் வெளியான அபிமன்யு (கலைஞர் வசனம்- ஆனால் அவரது பெயர் இடம் பெறவில்லை) படத்தில் அபிமன்யுவின் அப்பா அர்ஜூனன் கதாபாத்திரத்தில் எம்.ஜி.ஆர். நடித்தார். மகனை இழந்த சோகத்துடன், நியாயம் கேட்கும் வசனங்கள் இடம்பெற்ற காட்சிகளில் எம்.ஜி.ஆரின் நடிப்பு கவனம் பெற்றது. எம்.ஜி.ஆரின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு அது துணை நின்றது.
ராஜகுமாரி (1947) படத்தில் முதன்முதலாக நாயகன் ஆனார் எம்.ஜி.ஆர். ஏறத்தாழ 10 ஆண்டுகால போராட்டத்திற்குப் பிறகு அவருக்குக் கிடைத்த வாய்ப்பு. இந்தப் படத்திற்கும் கலைஞர்தான் வசனம். படம் வெற்றிபெறவே, வாய்ப்புகள் தொடர்ந்தன. எல்லீஸ் ஆர் டங்கன் இயக்கத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் கலைஞரின் திரைக்கதை-வசனத்தில் உருவான மந்திரிகுமாரி (1950) படத்தில், கொள்ளையர்களைப் பிடித்து நீதிமுன் நிறுத்தும் தளபதி வேடத்தில் எம்.ஜி.ஆர் நடித்தார்.
இந்த கதாபாத்திரத்தில் எம்.ஜி.ஆர்தான் நடிக்கவேண்டும் என இயக்குநரிடமும் தயாரிப்பாளரிடமும் போராடியவர் கலைஞர். படம் பெருவெற்றி பெறவே எம்.ஜி.ஆரின் திரையுலகப் பயணம் சிறப்பாகத் தொடர்ந்தது. கலைஞரின் வசனத்தில் மருதநாட்டு இளவரசி படத்தில் எம்.ஜி.ஆருடன் ஜோடியாக நடித்த வி.என்.ஜானகி, பின்னாளில் அவரது வாழ்க்கைத்துணையானார். மருதநாட்டு இளவரசிக்கு கலைஞர்தான் வசனம் எழுதவேண்டும் என படத்தயாரிப்பாளர்களிடம் வலியுறுத்தியவர் எம்.ஜி.ஆர். மிருகஜாதியிலே புலி, மானை வேட்டையாடுகிறது. மனித ஜாதியிலே மான், புலியை வேட்டையாடுகிறது என்கிற புகழ்பெற்ற வசனம் இடம்பெற்றது இப்படத்தில்தான்.
எம்.ஜி.ஆர் தொடர்ந்து நடித்தவை, சரித்திர சாயல்கொண்ட படங்களே என்றாலும் அவற்றில் அவருடைய கதாபாத்திரங்கள் பெரும்பாலும், மக்களின் ஜனநாயகக் குரலை ஆட்சியாளர்களிடம் முன்வைப்பதாகவே அமைந்திருந்தன. எம்.ஜி.ஆர். தனக்கான ஃபார்முலாவை மெல்ல மெல்ல உருவாக்கத் தொடங்கினார். மகாதேவி,, புதுமைப்பித்தன், குலேபகாவலி, சக்கரவர்த்தி திருமகள், தமிழின் முதல் ஏ சர்டிபிகேட் (திகில் காட்சிகளுக்காக) படமான மர்மயோகி உள்ளிட்டவை அத்தகைய படங்களே. தமிழ் சினிமாவின் முதல் வண்ணப்படமான (கேவா கலர்) அலிபாபாவும் நாற்பது திருடர்கள் படத்திலும் எம்.ஜி.ஆருக்கேற்றபடி திரைக்கதையும் காட்சிகளும் அமைக்கப்பட்டன.
படம் பார்க்கவரும் எளிய மக்களின் மனதில் தேங்கிக் கிடக்கும் குமுறல்களை திரையில் எதிரொலிக்கும் நாயகனாக எம்.ஜி.ஆர். இருந்தார். அவர்களுக்காக ஆட்சியாளர்களுடன் போராடுபவராகவும், எதிரிகளை வீழ்த்தி நீதி கிடைக்கச் செய்பவராகவும் எம்.ஜி.ஆரின் படங்கள் அமைந்தன. தாங்கள் கனவில் காணும் ஒரு நாயகன் இதோ நிஜத்தில் வந்துவிட்டார் என ரசிகர்கள் எம்.ஜி.ஆரைக் கொண்டாடினர். பணக்காரர்களிடம் பறித்து ஏழைகளுக்கு வழங்கும் ராபின் ஹூட் டைப் படமான மலைக்கள்ளன், எம்.ஜி.ஆருக்குப் புகழ் பெற்றுத் தந்தது. (நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் கதைக்கு வசனம் எழுதியவர் கலைஞர்)தமிழக நாட்டுப்புறக் கதை மரபிலான மதுரை வீரன் படம் எம்.ஜி.ஆரின் திரையுலக வரலாற்றில் ஒரு மைல்கல். செருப்புத் தைக்கும் சமுதாயத்தினரால் வளர்க்கப்படும் மதுரைவீரன் பாத்திரத்தில் அவர் நடித்தார். (வசனம்- கவிஞர் கண்ணதாசன்) திரையிடப்பட்ட அரங்குகள் பலவற்றிலும் 100 நாட்களைக் கடந்து ஓடியது. மக்களின் நாயகனாக எம்.ஜி.ஆர் முழுப் பரிமாணம் பெற்றது மதுரைவீரன் படத்தில்தான்.
தொடர்ந்து ஏற்றமும் இறக்கமுமாக அவருடைய திரைப்பயணம் அமைந்த நேரத்தில், தனது வெற்றிசூத்திரத்தின்படி சொந்தமாக ஒரு படம் தயாரித்து-இயக்கவும் முடிவு செய்தார் எம்.ஜி.ஆர். அந்தப் படம்தான் நாடோடி மன்னன். திரையுலகில் போராடி சம்பாதித்ததையெல்லாம் முதலீடு செய்து, இருவேடங்களில் அவரே நடித்தார். படத்தின் ஒரு பகுதி மட்டும் கலரில் எடுக்கப்பட்டது. இப்படம் வெற்றிபெற்றால் நான் மன்னன். இல்லையென்றால் நாடோடி என்று எம்.ஜி.ஆர் சொன்னார். திரையுலகின் முடிசூடா மன்னனாக அவரை மாற்றியது நாடோடி மன்னன் (1958) படத்தின் பெரும் வெற்றி. (வசனம்-கவிஞர் கண்ணதாசன்). இப்படத்தின் மூலம் புரட்சி நடிகர் என்ற பாராட்டும் அடைமொழியும் எம்.ஜி.ஆருக்குக் கிடைத்தது. (இந்தப் பட்டத்தை வழங்கியவர், கலைஞர்). எம்.ஜி.ஆர், தான் வெறும் நடிகனல்ல, தனக்கேற்றபடி திரைப்படத்தை உருவாக்கும் படைப்பாளி என்பதை நாடோடி மன்னன் வெற்றியின் மூலம் நிரூபித்தார்.
அதன்பிறகு அவர் நடித்து வெளியான சரித்திரக் கதை படங்களாக இருந்தாலும் சமூகப் படங்களாக இருந்தாலும் எல்லாமும் அவருக்கேயுரிய ஃபார்முலாவுடன்தான் அமைந்தன. (பாசம், அன்பேவா போன்ற ஒரு சிலபடங்கள் தவிர) வசனங்களை எழுதிய கலைஞர் மு.கருணாநிதி, கவிஞர் கண்ணதாசன், ஆர்.கே.சண்முகம், சொர்ணம் உள்ளிட்ட யாராக இருந்தாலும், பாடல்களை எழுதிய கவிஞர்கள் கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன், முத்துலிங்கம், நா.காமராசன் போன்றவர்களாக இருந்தாலும், இசையமைப்பாளர்களான எஸ்.எம்.சுப்பையா(நாயுடு), விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கே.வி.மகாதேவன் ஆகியோரும், படங்களை தயாரித்தவர்களும் இயக்கியவர்களுமான சின்னப்பாதேவர், டி.ஆர்.ராமண்ணா, ப.நீலகண்டன், கே.சங்கர் உள்ளிட்டவர்களும் எம்.ஜி.ஆரை மனதில் வைத்தே தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தினர். எம்.ஜி.ஆருக்கேற்றபடி சிந்திப்பவர்கள்தான் அவருடைய படங்களில் தொடரும் சூழ்நிலை அமைந்தது.
தி.மு.கவில் எம்.ஜி.ஆர் இருந்ததால் கட்சியால் தனக்கும், தன்னால் கட்சிக்கும் பலன் இருக்கும்வகையில் திரைப்படங்களில் கவனம் செலுத்தினார். அவருடைய எம்ஜியார் பிக்சர்ஸின் பேனரே ஓர் ஆணும் பெண்ணும் தி.மு.க கொடியை உயர்த்திப் பிடித்திருப்பதுதான். (தனிக்கட்சி தொடங்கியபிறகு, அது அ.தி.மு.க கொடியாக உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் மாறியது). பகுத்தறிவுக் கொள்கையை அன்றைய தி.மு.க உறுதியாகக் கடைப்பிடித்ததால் எம்.ஜி.ஆர் தனது படங்களில் மூடநம்பிக்கை சார்ந்த காட்சிகளை அனுமதிக்கமாட்டார். கதையோட்டத்திற்கு அது தேவையென்றாலும் அவர் அதில் இடம்பெறமாட்டார். திருமணக் காட்சிகள் பெரும்பாலும் சுயமரியாதை திருமணங்களாகவே இருக்கும். புரோகிதர் இருக்கமாட்டார்.
கட்சிக்கொடியின் இருவண்ணமான கறுப்பும் சிவப்பும் கதாபாத்திரங்களின் உடை, மேஜை விரிப்பு, திரைச்சீலை, சுவரின் நிறம் எனப் பலவற்றிலும் வெளிப்படும். எம்ஜியார் பிக்சர்ஸின் தயாரிப்பான அடிமைப் பெண் (இயக்குநர் கே.சங்கர்) படத்தில், உலகம் அறியாமல் வளர்ந்த எம்.ஜி.ஆருக்கு சூரியனைக் காட்டுவார் ஜெயலலிதா. அது என்ன என்பதுபோல எம்.ஜி.ஆர் சைகையால் கேட்க, அதுதான் உதயசூரியன் என்பார் ஜெயலலிதா. இப்படி, தி.மு.கவின் சின்னமான உதயசூரியனும் அவரது பல படங்களில் அடையாளம் காட்டப்பட்டது. பத்திரிகை படிக்கும் காட்சி என்றால் நம்நாடு, முரசொலி போன்ற தி.மு.க பத்திரிகைகளைத்தான் எம்.ஜி.ஆர் படிப்பார். (தனிக்கட்சி தொடங்கிய பிறகு, தென்னகம் பத்திரிகை படிப்பதுபோன்ற காட்சிகள் இடம்பெற்றன). தி.மு.கவை நிறுவியவரான அறிஞர் அண்ணாவின் படத்தைக் காட்டி அவரைப் புகழும் வசனமோ, பாடல்களோ தன் படத்தில் இடம்பெறுவதை எம்.ஜி.ஆர் வழக்கமாகக் கொண்டிருந்தார்.
தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்த சூழலில் எம்.ஜி.ஆரின் இந்த பங்களிப்பு பாமர மக்களிடம் கட்சிக்கான செல்வாக்கை அதிகரிக்கச் செய்தது. அவருக்கும் எம்.எல்.சி பதவி கிடைக்க வழி வகுத்தது. பின்னர் 1967ல் அவர் தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் பரங்கிமலை தொகுதியில் வென்று எம்.எல்.ஏவானார். 1971லும் வென்றார். சிறுசேமிப்புத்துறை தலைவர் என்ற பொறுப்பையும் பெற்றார். சினிமாவில் தனக்கென்று தனி பாணியைப் பின்பற்றுவதில் அவர் உறுதியாக இருந்தார். மது, புகைப்பழக்க காட்சிகளில் நடிக்க மாட்டார். பெண்களுக்கு ஆபத்து என்றால் எங்கிருந்தாலும் தாவி வந்து உதவுவார். ஏழைகளுக்குத் தோழனாக இருப்பார். எதிரிகளைப் பந்தாடுவார்.
எம்.ஜி.ஆரின் நடிப்பு, அலட்டிக்கொள்ளாத வகையைச் சேர்ந்தது. அவருடைய ரசிகர்களுக்கு அதுதான் பிடிக்கும். கவர்ந்திழுக்கும் புன்னகை, நெருக்கமான காதல் காட்சிகள், அசத்தும் சண்டைக்காட்சிகள், நெஞ்சில் மையம் கொள்ளும் பாடல்கள், சமுதாயத்திற்கானக் கருத்துகளைக் கொண்ட வசனங்கள் இவற்றின் அடிப்படையிலானதுதான் அவரது படம். இந்த ரெடிமேட் ஃபார்முலாவுக்குள் உடன்பட முடியாத புகழ்பெற்ற இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் ஒருநேரத்தில் எம்.ஜி.ஆர் பக்கம் கவனத்தைத் திருப்பவில்லை என்றாலும் பிறகு அவர்களும் அவரை வைத்து படம் இயக்கினார்கள்.
ஏ.வி.எம் நிறுவனத்தின் முதல் வண்ணப்படமான அன்பே வா (இயக்கம்-ஏ.சி.திருலோகச்சந்தர்), ஜெமினி நிறுவனத்தின் முதல் வண்ணப்படமான ஒளிவிளக்கு ஆகியவை எம்.ஜி.ஆர் நடித்தவையாகும். (ஒளிவிளக்கு, எம்.ஜி.ஆரின் 100வது படம்). பத்மினி பிக்சர்ஸ் அதிபர் பி.ஆர்.பந்தலு தயாரித்து இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் தமிழ்த் திரையின் முக்கியமான படங்களில் ஒன்று. நீண்டகாலம் எம்.ஜி.ஆர் பக்கம் திரும்பாமல் இருந்த இயக்குநர் ஸ்ரீதர் பின்னர் உரிமைக்குரல், மீனவநண்பன் ஆகிய படங்களை எம்.ஜி.ஆரை வைத்து இயக்கினார். (அண்ணா நீ என் தெய்வம் என்ற படத்தையும் அவர் இயக்கினார். எம்.ஜி.ஆர் முதல்வரானதால் படம் பாதியில் நின்றுபோய், பின்னர் எம்.ஜி.ஆரின் மறைவுக்குப்பிறகு பாக்யராஜ் இயக்கத்தில் அவசர போலீஸ் 100 என்ற தலைப்பில் எம்.ஜி.ஆர் நடித்த காட்சிகளுடன் வெளியானது). புராணப்படங்களை வெற்றிகரமாகத் தந்த இயக்குநர் ஏ.பி.நாகராஜன் எம்.ஜி.ஆரை வைத்து நவரத்தினம் என்ற படத்தை இயக்கினார். இவர்களும் எம்.ஜி.ஆர் ஃபார்முலாவுக்குட்பட்டே இப்படங்களை இயக்கினர்.
துப்பாக்கியால் சுடப்பட்டு உயிர் மீண்ட எம்.ஜி.ஆரின் குரல் பாதிக்கப்பட்டபோதும், படங்களில் அவரே சொந்தக் குரலில் பேசினார். அவரது ரசிகர்கள் அதனை ஏற்றுக்கொண்டனர். அதுபோல சண்டைக் காட்சிகளில் வாள் சுழற்றுதல், சிலம்பம், மான்கொம்பு, சுருள்கத்தி சுழற்றுதல், பூட்டுப்போட்டு தாக்குதல் எனப் பலவகைகளைக் கையாண்டு ரசிகர்களைக் கவர்ந்தார். ரிக்*ஷாக்காரன் படத்திற்காக அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது(பாரத்) கிடைத்தது. தமிழ் நடிகர்களில் முதலில் தேசிய விருது வாங்கியவர் எம்.ஜி.ஆரே. அவர் நடித்த மொத்த படங்கள் 136. கடைசியாக வெளியான படம் எம்.ஜி.ஆரின் இயக்கத்தில் உருவான மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்(1978). படவேலைகள் நிறைவடைந்து எம்.ஜி.ஆர் முதல்வரானபிறகு வெளியானது. அவரது மறைவுக்குப்பிறகு வெளியான அவசர போலீஸ் 100, நல்லதை நாடு கேட்கும் ஆகியவற்றில் அவர் நடித்து வெளிவராத படங்களின் காட்சிகள் இடம்பெற்றன.
தனது படங்கள் மூலம் தன்னுடைய திரையுலக-அரசியல் செல்வாக்கை நிலைநிறுத்துவதில் எம்.ஜி.ஆர் தீவிரமாகவும் திட்டமிட்டும் கவனம் செலுத்தினார். அன்று தென்னிந்திய (தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்) நடிகர்களிலேயே அதிக சம்பளம் பெற்றவர் எம்.ஜி.ஆர்தான் (6 முதல் 8 லட்ச ரூபாய் வரை). மதுரை வீரனில் தொடங்கி நாடோடி மன்னன் வழியாகப் பல படங்களிலும் ஏழைகளுக்காகவும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினருக்காகவும் அவர் பேசிய வசனங்களும், வாயசைத்த பாடல்களும் அவருடைய அரசியல் செல்வாக்கிற்கு அடிப்படையாக அமைந்தன.
படகோட்டி படம் மூலம் மீனவ சமுதாயத்திடம் அவர் ஏற்படுத்திய தாக்கம் இன்றுவரை அவருடைய கட்சிக்கான வாக்கு வங்கியாக நிலைபெற்றிருக்கிறது. தொழிலாளி, விவசாயி, எங்க வீட்டுப் பிள்ளை உள்ளிட்ட பல படங்களும் அவருடைய அரசியல் செல்வாக்கிற்குத் துணை நின்றன. தி.மு.கவிலிருந்து அவர் நீக்கப்பட்டு, தனிக்கட்சியான அ.தி.மு.கவைத் தொடங்கிய சூழ்நிலையில் வெளியான ரிக்*ஷாக்காரன் படத்திற்கு நெருக்கடி வந்தபோது, பல ஊர்களிலும் ரிக்*ஷா தொழிலாளர்கள் அந்தப் படத்திற்கு பாதுகாப்பாக இருந்து, திரையிடச் செய்தனர். எம்.ஜி.ஆரின் தயாரிப்பு- இயக்கத்தில் அன்றைய சூழலில் பெரும்பொருட்செலவில் வெளிநாடுகளில் உருவாக்கப்பட்ட உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் வெளியீட்டின்போது, தி.மு.க ஆட்சி கொடுத்த நெருக்கடியால் சென்னையில் சுவரொட்டி ஒட்டமுடியாத நிலை ஏற்பட்டது. அதற்குப் பதிலாக ஸ்டிக்கர்கள் மூலம் விளம்பரம் செய்யப்பட்டது. அதனை வாகனங்களிலும் கடைகளிலும் ஒட்டும் பணியில் அவருடைய ரசிகர் மன்றத்தினர் முழுமையாக ஈடுபட்டனர்.
தனது ரசிகர்களை மன்றங்கள் என்ற அமைப்பின் கீழ் ஒன்றிணைத்து அதனை அரசியல் தளத்திற்கு நகர்த்தி வெற்றி கண்டவர் எம்.ஜி.ஆர். 1972ல் அ.தி.மு.க என்ற தனிக்கட்சியைத் தொடங்கியபிறகு, திரைப்படத்தின் சில காட்சிகளையும், பாடல்களையும் நேரடி அரசியல் பிரச்சாரமாக்கி, 5ஆண்டுகளில் ஆட்சியையும் பிடித்தவர் அவர். முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். மும்முறை தொடர்ச்சியாக அவரது கட்சி தேர்தலில் வென்றது. 11ஆண்டுகாலம்(1977ஜூன்-1987டிசம்பர்) தமிழகத்தின் முதலமைச்சராக செயல்பட்டார்.
திரைப்படங்களை தன்னுடைய பிரச்சார ஊடகமாக, அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தி வெற்றி கண்டவர் எம்.ஜி.ஆர். அவரது இந்த அணுகுமுறையைக் கடுமையாக விமர்சிப்பவர்களும் உண்டு. எனினும், திரைப்படங்களை நுட்பமாகப் பயன்படுத்தி அவர் வெற்றி பெற்றார் என்பது மறுக்கமுடியாதது. எம்.ஜி.ஆருடைய படங்கள் சில, வெளியான காலத்தில் வணிகரீதியில் தோல்வியடைந்துள்ளன. ஆனால், பின்னர் அவை திரும்பத் திரும்ப வெளியிடப்பட்டு வசூலைக் குவித்தன. அவரது படப்பாடல்கள்தான் இன்றளவும் மக்களிடம் செல்வாக்கு பெற்றிருப்பதுடன் கட்சிக்கு வாக்கு சேகரிக்கும் பிரச்சாரப் பாடல்களாகவும் நிலைத்திருக்கின்றன. தொலைக்காட்சி, இணையதளம் என நவீனத் தொழில்நுட்பங்கள் வளர்ந்த நிலையிலும் எம்.ஜி.ஆரின் புகழ் ஒளிவீசுகிறது.
எம்
ஜி
.ஆர்
என்ற ஆங்கில எழுத்துகள், இங்கே தமிழுக்குரிய எழுத்துகளைப்போல ஆகிவிட்டன.................. Thanks .............
-
பாரத் எம்ஜிஆர் நடித்த இதயவீணை வெளியான நாள் 20-10-1972.
மக்கள் திலகத்தின் ''இதய வீணை '' இன்று20.10.1972
மக்கள் திலகத்தின் ''இதய வீணை '' இன்று 42வது ஆண்டு துவக்க தினம் .மக்கள் திலகம் தனி
இயக்கம் கண்ட பின் வந்த படம் . ஆனந்த விகடன் திரு மணியன் அவர்களின் தயாரிப்பில்
வந்த முதல் படம் .
1972ல் மக்கள் திலகத்திற்கு இரண்டு மிகப்பெரிய விருதுகள் கிடைத்தன .
இந்திய அரசாங்கத்தால் ''பாரத் '' பட்டமும் மக்கள் அரங்கத்தில் ''புரட்சித் தலைவர் '' பட்டமும்இதய வீணை படம் பல நெருக்கடிகளுக்கு பின்னர் 20.10.1972 அன்று திரையிடப்பட்டது .
எல்லா எதிர்ப்புகளையும் மீறி மக்கள் ஆதரவோடு ரசிகர்களின் உறுதுணையோடு மாபெரும்
வெற்றி கண்ட படம் .
முற்றிலும் மாறுபட்ட பாத்திரத்தில் மக்கள் திலகம் சிறப்பாக நடித்த படம் .
எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் .
இதயவீணை படம் மக்கள் இதயங்களில் குடி புகுந்த படம் ............ Thanks...........
-
இதய வீணை படம் பல நெருக்கடிகளுக்கு பின்னர் 20.10.1972 அன்று திரையிடப்பட்டது .
எல்லா எதிர்ப்புகளையும் மீறி மக்கள் ஆதரவோடு ரசிகர்களின் உறுதுணையோடு மாபெரும்
வெற்றி கண்ட படம் .
முற்றிலும் மாறுபட்ட பாத்திரத்தில் மக்கள் திலகம் சிறப்பாக நடித்த படம் .
எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் .
இதயவீணை படம் மக்கள் இதயங்களில் குடி புகுந்த படம் ......... Thanks...
-
ஆனந்த விகடன் மணியன் அவர்கள் எழதிய இதய வீணை நாவல் .
''பாரத் எம்ஜிஆர் '' -'' புரட்சித்தலைவர் எம்ஜிஆர் '' என்ற பெருமையுடன் வந்த படம் .
மக்கள் திலகம் அதிமுகவை ஆரம்பித்த பின் வந்த முதல் காவியம் - வெற்றி காவியம் .
மக்கள் திலகத்தின் சிறப்பான நடிப்பில் படம் மாபெரும் வெற்றி .......... Thanks...
-
காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர்..., பொன்னந்தி மாலைப் பொழுது பாடல் காட்சிகளில் காஷ்மீரின் அழகு கண்ணுக்கு குளிர்ச்சி என்றால், அதையும் தாண்டிய அழகு, குளிர்ச்சியுடன் தலைவர்.
பொன்னந்தி மாலைப் பொழுது பாடலில் தலைவரின் 3 டிரஸ்களும் மனதை கொள்ளை கொள்ளும். ஆடை மூடும் ஜாதிப்பூவில்... பாராவில் சுசிலா பாடும் ‘கண்ணோடு கண்... பண்பாடுமோ’ வரிகளின் போது சிவப்பு நிற டிரஸ்சில் தலைவர் லேசாக கொடுக்கும் ட்விஸ்ட் மூவ்மெண்ட் கிளாஸ். மஞ்சள் நிற டிரஸ்சில் இளமஞ்சள் நிற கூலிங் கிளாசுடன் வந்து அட்டகாசமாக ஸ்டெப்ஸ் போடும் தலைவருக்கு வயது 25க்கு மேல் இருக்கும் என்று யாராவது கூறினால்
25க்கு மேல் இருக்கும் என்று யாராவது கூறினால் அவர்களுக்கு பார்வையில் கோளாறு என்று அர்த்தம். இந்த பாடல் மட்டும் புலமைப்பித்தன். மற்றவை வாலி.
ஒரு வாலும் இல்லே.. நாலும் காலும் இல்லே.. சில மிருகம் இருக்குது ஊருக்குள்ளே... (நெஜந்தான் தலைவரே) கருத்தாழம் மிக்க பாடல். ‘ஆனந்தம் இன்று ஆரம்பம்...’ இளமை பொங்கும்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோதுதான் திமுகவில் இருந்து தலைவர் நீக்கப்பட்டார். தகவல் அறிந்ததும் பால் பாயசம் கொண்டு வரச் செய்து அனைவருக்கும் கொடுக்கச் சொல்லி (அவர்தான் எப்போதும் தனியாக சாப்பிட்டதில்லையே) தானும் சாப்பிட்டதோடு, கொஞ்சம் கூட பதற்றமே இல்லாமல் லாரி ஆக்சிடென்ட் காட்சியை கொலைப்பழி சுமந்து, காட்டில் பதுங்கியிருக்கும் தலைவருக்காக மஞ்சுளா கொண்டு வந்த சர்க்கரைப் பொங்கல் கொட்டிப் போக.... ‘கொண்டு வந்த பொங்கல் கொட்டிப் போச்சு..’ என்று கூறி சத்தமாக தலைவர் சிரிக்கும் அட்டகாச சிரிப்பும், காட்சியையொட்டி, ‘இந்த நேரத்தில் கூட எப்படி உங்களால் சிரிக்க முடிகிறது?’ என்று மஞ்சுளா கேட்கும்போது தலைவர் அளிக்கும் பதில், அவரது மனத்தின்மைக்கு சான்று மட்டுமல்ல, நம் எல்லோருக்கும் பாடம்........ Thanks...
-
சொட்ட அடிக்கும்போது திரையரங்கில் நமது தோழர்கள் உணர்ச்சிப் பிழம்பாக மாறினர். ஸ்கிரீன் அருகே உள்ள வகுப்பில் அமர்ந்திருந்த தோழர்கள் சிலர் தன்னிலை மறந்து திரு.சிவக்குமாரை அடிக்க திரையை நோக்கிப் பாய, நண்பர்கள் அவர்களை கட்டிப் பிடித்து இழுத்து சுய நினைவுக்கு கொண்டு வந்து ஆசுவாசப்படுத்தியபோது.. உணர்ச்சிப் பிரவாகத்தினூடே எழுந்த சிரிப்பலையும், அடுத்த இரு நிமிடங்களில் நிலைமை மாறி தங்கை லட்சுமியை அடித்த சிவகுமாரை அதே கைத்தடியால் தலைவர் புரட்டி எடுக்கும்போது அடிக்கப் பாய்ந்த தோழர்கள் ஆனந்தக் கூத்தாடிய காட்சியும்.... ஆஹா..அந்த நாளும் வந்திடாதோ?
கொஞ்சம் கூட பதற்றமே இல்லாமல் லாரி ஆக்சிடென்ட் காட்சியை எடுத்திருக்கிறார். இதை மணியன் கூறியுள்ளார்.
‘ஏசுநாதர்’ என்ற படத்தில் தலைவர் நடிப்பதாக இருந்து பின்னர் கைவிடப்பட்டது. படம் வந்திருந்தால் சரித்திரமாகி இருந்திருக்கும். வேடப் பொருத்தமும் ஏசுநாதர் போலவே இருக்கும். அந்த ஸ்டில் மிகவும் பிரபலம். ஏறக்குறைய அதேபோன்ற தோற்றம் கொண்ட தலைவரை ‘திருநிறைச் செல்வி...’ பாடலில் பார்க்கலாம்.
படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் தங்கையின் வாழ்வுக்கு நியாயம் கேட்கும்போது, ‘எவ்வளவு அடித்தாலும் இடத்தை விட்டு நகரமாட்டேன்’ என்று நிராயுதபாணியாக நிற்கும் தலைவரை திரு.சிவக்குமார் கைத்தடியால் ரத்தம் சொட்ட, .... Thanks.........
-
இதய வீணையை மீட்டுவோம்’
உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்காக வெளிநாடுகளில் படப்பிடிப்புகள் நடத்த தனக்கு இருந்த தொடர்புகளை பயன்படுத்தி உதவிய, பத்திரிகையாளராக இருந்த திரு.மணியன் அவர்களை திரைப்பட தயாரிப்பாளராக தலைவர் உயர்த்திவிட்ட படம்.
திமுகவில் இருந்து நீக்கப்பட்ட புரட்சித் தலைவர், அதிமுகவை தொடங்கிய 3வது நாளில் வெளியான படம்.
கருணாநிதி தலைமையிலான அன்றைய திமுக ஆட்சியின் இடையூறுகளையும் தகர்த்து சென்னை,மதுரை, திருச்சி ஆகிய ஊர்களில் 100 நாட்கள் ஓடியதோடு பல சென்டர்களில் 50 நாட்களுக்கும் மேல் ஓடி அமோக வெற்றி பெற்ற படம்......... Thanks...
-
அந்த பதில்: ‘‘எந்த நேரத்திலும் என்னால் சிரிக்க முடியும். என் கவலையை மறக்க ஆண்டவன் எனக்குத் தந்த ஒரே வரப்பிரசாதம் அதுதான்’
தலைவர் கூறியது முற்றிலும் சத்தியம். காஷ்மீர்... பாடல் காட்சியிலும் ‘நீங்க எதுவரைக்கும் படிச்சிருக்கீங்க?’ என்ற கேள்விக்கு ‘சத்தியம்தான் நான் படித்த புத்தகம் அம்மா’’ என்பார் சமத்துவ தத்துவத்தை அறிந்த நம் தலைவர்.
அவர் சிரித்தால் தானும் சேர்ந்து சிரித்த தமிழ்நாடு, அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டால் அழுதது. காரணம்... சொல்லுக்கும் செயலுக்கும் வேறுபாடில்லாமல் சத்திய வடிவமாய் வாழ்ந்த.. மன்னிக்கவும், வாழும் அந்த மனிதர்.... ஒரு புனிதர்......... Thanks...
-
-
"பாரத் " எம்ஜிஆர் நடித்த "இதய வீணை" வெளியான நாள் 20-10-1972.
சென்னை குளோப் 105 நாள் ஸ்ரீகிருஷ்ணா 86 நாள் மகாலட்சுமி 70 நாள் ராஜகுமாரி 70 நாள் ஓடியது.
சேலம் அலங்கார் 86 நாள் ஓடியது.
கோவை இருதயா 70 நாள் நெல்லை லட்சுமி 63 நாள் ஓடியது.
மதுரை ஸ்ரீதேவி 105 நாள் திருச்சி பேலஸ் 112 நாள் இலங்கை கொழம்பு நவா 100 நாள் ஓடியது...... Thanks.........
-
மற்ற சிறப்பு தகவல்கள்... திரையுலக வசூல் சக்கரவர்த்தி... புரட்சி நடிகர் வழங்கிய " இதய வீணை" கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிரம்ப இக்கட்டான சூழ்நிலையிலும்... மிகவும் சிறப்பான நிலையில் வெற்றி கொண்டாட்டமிட்டு... 1972 ம் ஆண்டில் வெளிவந்த மாற்று முகாம் நடிகர் நடித்த 2 படங்களையும்( அதிக நாள், பெரிய வசூல்) என சொல்லப்பட்ட படங்களை விட அதிக திரையரங்குகளில் 50 நாட்களை கடந்து... மக்கள் திலகம்... மக்கள் திலகமே தான் என்று நிரூபித்து காட்டினார்... அதற்கு முழு முதன்மையான காரணம் பொது மக்கள் பேராதரவே... Thanks...
-
சுகாராம் சார் வணக்கம்
இனிய காலை வணக்கம்
எனக்கு இங்கு இரவு நேரம், தூங்கப் போவதற்கு சற்று முன்புதான் மய்யத்தில்
நீங்கள் பதிவிட்டிருந்த
கண்ணதாசன் , எம்.ஆர் ராதா சம்பந்தப்பட்ட "வேட்டைக்காரன்" படத்தில் இடம் பெற்று
எந்தக் காலத்திலும்
அழியாமல் சாகா வரம் பெற்ற " உன்னை அறிந்தால்" பாடல் செய்தி படித்து மிகவும்
சந்தோஷமும், ஆச்சரியமும் அடைந்தேன் காரணம்
இந்த செய்தி இது வரை
நான் அறியாத ஒரு செய்தி, இப்படி ஒரு பாடலை யாருக்கு எழுத
வேண்டும் என்று தீர்மானித்த கவியரசர்
அவர்களும், இந்த பாடல் எனக்கு கிடைத்தால் என் தலைமுறை மட்டும்தான்
பேசும் ஆனால் எம். ஜி. ஆருக்கு கிடைத்தால் எத்தனை தலை முறை ஆனாலும் அழியாது என்று பின்னாளில் நடக்கப் போவதை எவ்வளவு துல்லியமாக
கணக்கிட்ட எம். ஆர் ராதா போன்ற அதி அற்புதமான நடிகரும்
தமிழ் திரைக்கு கிடைத்த பொக்கிஷங்கள்
எனக்கு எம். ஆர் ராதா அவர்கள் தலைவரை
சுட்டதால் அவர் மேல் வெறுப்பு வரவில்லை
காரணம் அந்த நிகழ்வு
நடக்க வேண்டும் என்பது கடவுளின் கட்டளை அது ராதா அவர்கள் ரூபத்தில் நிறைவேறியது அவ்வளவுதான் ஏன் என்றால் அந்த சம்பவத்திற்குப் பிறகுதான் தலைவரின்
புகழ் உலகமெங்கும்
குன்றிலிட்ட விளக்காக
ஒளி வீசியது என்றால்
மிகையில்லை
தலைவரின் மிகப் பெரிய பிளாக் பஸ்டர் வசூல் சாதனைப் படங்கள் வந்தது எல்லாமே 1967 க்குப் பிறகுதான் பெரிய வசூல் சக்கரவர்த்தியாக இருந்த தலைவர் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத மாபெரும் இந்திய வசூல் சாம்ராட்டாக மாறியது
1967 க்குப் பிறகுதான்
எப்படி "இன்பக் கனவு" நாடகத்தின் போது கால்
முறிவுக்கு உள்ளாகி திரும்பி வந்த போது முன்பு இருந்ததை விட
பலமடங்கு விஸ்வரூபம்
எடுத்தாரோ அதை விட
பல மடங்கு வானத்துக்கும் பூமிக்கும் வாமன அவதாரம் எடுத்தது இந்த நிகழ்வுக்குப் பிறகுதான் எனவே இப்படி ஒரு சரித்திரத்தை உருவாக்க உதவிய ராதா அவர்களை பாராட்டத்தான் வேண்டும்
இப்படி ஒரு அற்புதமான
செய்தியை பதிவிட்ட
சுகாராம் சாருக்கு என்
நன்றியும், வணக்கமும்!.......... Thanks mr. James watt.........
-
திரு ஜேம்ஸ் வாட் அவர்களுக்கு நன்றி... நம் சகோதர பக்தர்கள் பரிமாற்றம் செய்யும் பதிவுகளை தான் இங்கே பகிர்ந்து வருகிறோம் நண்பரே... நீங்களும் உங்களிடம் இருக்கும் அருமையான மக்கள் திலகம் பற்றிய தகவல்கள், மற்றும் மாற்று இடத்தின் செய்திகள் ஆகியன பகிர்ந்தால் மிக்க மகிழ்ச்சி.........
-
-
-
-
-
மக்கள் கடவுளாய் எம் ஜி ஆரை தவிர எவரையும் ஏற்பதில்லை ............
விமர்சனங்கள் ஆயிரம் ஏதும் ஆதாரமற்றவை
செய்த நன்மைகள் பல மடங்கு எல்லாம் ஆதாரம் உண்டு
நல்லவை என்றாலே தீயவைக்கு பிடிக்காது அதை போல் தீயவரான சிலருக்கு பிடிக்காமல் வதந்திகள் விமர்சனங்கள் மூலம் வீழ்த்த நினைத்தவர்கள் வீழ்ந்தவர் எண்ணிக்கை கணக்கில் அடங்கா
எவராலும் கணிக்க முடியாத
எவராலும் வெல்ல முடியாத
தெய்வீக பிறவி எம் ஜி ஆர்
வாழ்க எம் .ஜி .ஆர்.,... புகழ்......... Thanks.........
-
முகநூலில் சென்றவாரம்
எம்ஜிஆர் விசுவாசிகளிடம் பிரபலமானது இப்படம்
ஆனால் மக்கள் திலகத்துடன் அமர்ந்திருக்கும் குழந்தைகள் யார் யாரென்று பலருக்கு தெரியாது...
1.கலாநிதி மாறன்
2.தயாநிதி மாறன்
3.மு.க.தமிழரசு
4.மு.க.கனிமொழி............ Thanks.........
-
குமார் சார் வணக்கம்
நீங்கள் அனுப்பிய அனைத்து செய்திகளுக்கும் தங்கத் தலைவரின் " நான் ஏன் பிறந்தேன்" படச் செய்திகளும் புகைப் படங்களும் அமோகம் பாராட்ட வார்த்தைகளே இல்லை இதில் விட்டுப் போன இன்னொரு முக்கிய சமாச்சாரம் ஒன்று உண்டு " கலங்கரை விளக்கம்" படத் தயாரிப்பின் போதும் " சங்கே முழங்கு என்னும் அற்புதமான புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் பாடலை படத்தில் சேர்க்கச் செய்து தாய் தமிழுக்கு மிகப் பெரிய சிறப்பு சேர்த்ததும் தலைவர்தான் அதேபோல் இந்த " நான் ஏன் பிறந்தேன்" படத்தை அதே ஜி. என் வேலுமணி அவர்களும் திருமதி . கே . ஆர் விஜயா அவர்களும் சேர்ந்து தயாரித்த போது புரட்சிக் கவிஞரின் " சித்திரச் சோலைகளே" பாடலை படத்தில் சேர்க்க தலைவர் விரும்பிய போது அந்த பாடல் காட்சிக்கான செலவை ஏற்பதில் தயாரிப்பாளர்களுக்கு தயக்கம் ஏற்பட்ட போது
அந்த செலவை தலைவரே ஏற்றுக் கொண்டு பாடலை படத்தில் புகுத்தி உழைக்கும் தொழிலாளர்களின் சிறப்பை உலகறியச் செய்ததும் தலைவர்தான் இந்த தகவலை " சினிமா எக்ஸ்பிரஸ்" ராம மூர்த்தி அவர்கள் ஒரு இதழில் எழுதி இருந்தார்கள் அதே போல் இன்னொரு சிறப்பு தலைவருடன் சிறு வயதில் தேவிகா வின் தம்பியாகத் தோன்றிய கமல் வளர்ந்து வாலிபனாக ஆனபோது தங்கப்பன் மாஸ்டரிடம் உதவி டான்ஸ் மாஸ்டராக வேலை பார்த்தார் அப்போது இதே " நான் ஏன் பிறந்தேன்" படத்தில் நடித்த தலைவருக்கு நடன அசைவுகள் சொல்லிக் கொடுத்த பெருமை கமலுக்கு உண்டு இந்த படத்தின் போதுதான் தலைவர் கமலைக் கூப்பிட்டு ஆள் நல்ல நிறமாக அழகாக இருக்கிறாய் இன்னும் கொஞ்சம் உடற்ப் பயிற்சி செய்து உடலையும் தேற்றி விட்டால் கதாநாயகன் ஆகும் தகுதி உனக்கு வந்து விடும் என்று கமலை ஊக்குவித்து விட்டதும் தலைவர்தான் இந்த தகவல் கமலே சொன்னது பிற்பாடு இந்த கமல் நான் சிவாஜி ரசிகன் என்று கூறி தலைவரின் முதுகில் குத்தியது தனிக்கதை!......... Thanks...
-
குமார் சார் வணக்கம்
நீங்கள் அனுப்பிய "சபாஷ் மாப்பிளே" ஸ்டில்கள் அனைத்தும் அருமை, எல்லாவற்றையும் எவ்வளவு அழகாக தொகுத்து வைத்திருக்கிறீர்கள், நேற்று தான் வெளி வந்ததைப் போல மிகத்
தெளிவாக அழகாக இருந்தது சார் இதில் தலைவர் கொள்ளை அழகாக இருப்பார் , எனக்கு மிகவும் பிடித்த
படம், அதிலும் தலைவரும் எம். ஆர் ராதாவும் அடிக்கும் காமெடி லூட்டி இருக்கிறதே சிரித்து சிரித்து வயிறு புண்ணாகி விடும் குறிப்பாக சமையல் கட்டின் புகைபோக்கி வழியாக தலைவர் வீட்டுக்குள் நுழையும் போது முகமெல்லாம் கரியாகி அந்த வேஷத்துடன் அடிக்கும் காமெடி இருக்கிறதே ever green ரகம், தலைவர் இந்த படத்தில்
அலட்டல் இல்லாமல் மிகப் பிரமாதமாக காமெடி பண்ணி இருப்பார் அதிலும் குறிப்பாக Dialogue delivery பின்னி பெடல்
எடுத்திருப்பார்," சபாஷ் மீனா" படத்தில் உண்மையை சொல்லப் போனால் கதாநாயகன் சிவாஜியா இல்லவே இல்லை சந்திர பாபு தான் கதா நாயகன் அவர்தான் படத்தை தன்
நகைச் சுவை மூலம் தூக்கி நிறுத்தி இருப்பார், இன்னொரு பலம் " குல தெய்வம்" ராஜ கோபால் சிவாஜியும் அவரும் கண்ணாடி ஜன்னல்களை உடைத்து விட்டு ரிப்பேர்
செய்ய வருவது மாதிரி வரும் காட்சிகளில் எல்லாம் ராஜ கோபால் அய்யாவின் கொடிதான் பறக்கும் ஆனால் நம் தலைவர் அப்படி இல்லை எம். ராதாவுடன்
சரிக்கு சமமாக காமெடியில் நின்னு விளையாடி இருப்பார்
இன்னும் சொல்லப் போனால் ஒருபடி மேலேயே கலக்கி இருப்பார் , இன்னுமொரு சிறப்பு அம்சம் மாலினி மேடம்
மிகவும் அடக்க ஒடுக்கமாக குடும்பப் பாங்கான அழகோடு
ஜொலித்திரு ப்பார் , "யாருக்கு யார் சொந்தம்
என்பது என்னை நேருக்கு நேர் கேட்டால் நான் என்ன சொல்வது"
பாடலில் இருவரின் ஜோடிப் பொருத்தமும் பிரமாதமாக இருக்கும்
சீர்காழி கோவிந்தராஜன் அய்யாவின் குரல் இன்னொரு சிறப்பு
படத்தில் தலைவர் கஷ்டப் பட்டு இரண்டு மூன்று சப்பாத்தியை வைத்து சாப்பிடலாம் என்று போகும்போது ஒரு வயதான தாய் மகனே நான் பட்டினி ஏதாவது கொடுப்பியா என்று பரிதாபமாக கேட்கும் போது தலைவர் கையில் இருப்பதை அப்படியே கொடுத்து விட்டு அந்த தாய் ஆவலுடன் சாப்பிடுவதை ஒரு மகனுக்கே உரிய பாசத்துடன் கண்களில்
நீர் திரையிட பார்ப்பார்
பாருங்கள் அந்த காட்சியில் சத்தியமாக தலைவர் நடிக்க வில்லை ஒரு மகனாக அந்த பாத்திரமாக வாழ்ந் திருப்பார் அந்த காட்சியைப் பார்த்து எத்தனையோ நாள் அழுதிருக்கிறேன் சார்
தலைவரின் இயற்கை நடிப்புக்கு இந்த ஒரு காட்சியே போதும் ஆயிரம் ஆஸ்கார் விருது கொடுக்கலாம் ஆனால் அந்த நேரத்தில் என்ன ஒரு துரதிர்ஷ்டம் உடம்பைக் குலுக்கி பெரிதாக சத்தம் போடுவதுதான் நடிப்பு என்று எல்லாரும்
நம்பியது,அதை சுலபமாக பத்திரிக்கைகளும் ஒன்று சேர்ந்து மக்களை நம்ப வைத்தது ஆனால் இப்போது பாருங்கள் நடிப்பு என்றால் இயற்கை எதார்த்தம் பழைய சிவாஜி நடிப்பை
எவனாவது நடித்தால்
...... அடிப்பார்கள் , இந்த கண்றாவி வேண்டாம் நான் சொல்லுவது மாதிரி நடித்தாலே போதும் என்று அன்று
சிவாஜியின் கர்வத்தை
" முதல் மரியாதை" யில் டைரக்டர் பாரதிராஜா
தூள் தூளாக்கி முகத்தில் கரி பூசி விட்டார்
சரி விஷயத்திற்கு வருகிறேன் " சபாஷ் மாப் பிளே" படத்தின் வெட்டுப் படாத நல்ல பிரிண்ட் கிடைக்குமா சார்? Modern cinema கம்பெனி டிவிடி பிரிண்ட் படு மோசம்
பாதி படம் இல்லை அதனால் தான் கேட்கிறேன் சார் உங்களுக்கு தெரிந்தால்
சொல்லுங்கள் சார்!........ Thanks...
-
இன்னும் ஒன்று சொல்ல மறந்து விட்டேன் இந்த படத்தில்
தலைவரின் காமெடி நடிப்பை பார்த்து ரசித்து
சிரித்து மகிழ்ந்த அறிஞர் அண்ணா அவர்கள் சபாஷ் எம்.ஜி.ஆர் என்று பாராட்டியதாக ஏதோ ஒரு பத்திரிக்கையில்
படித்திருக்கிறேன் அதை படக் குழுவினர் பட விளம்பரத்துக்கு பயன் படுத்தியதாகவும்
படித்திருக்கிறேன் சார்!........ Thanks...
-
குமார் சார் நீங்கள் சொன்னது சரிதான் இந்த படம் மட்டும் வெற்றி பெற்றிருந்தால்
நிச்சயம் தலைவரின் பல்வேறு நடிப்பு பரிமாணங்கள் வெளிப் பட்டிருக்கும் ஆனால் படம் வெற்றி பெறாததால் மற்ற டைரக்டர்களும் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை
ஆனால் இந்த படம் வெளி வந்து 5 ஆண்டுகளுக்குப் பிறகு
தலைவரின் இயற்கையான நடிப்பை
சரியான முறையில் வெளியே கொண்டு வந்தவர்கள் கிருஷ்ணன் பஞ்சு இரட்டையர்கள், "பெற்றால்தான் பிள்ளையா" படத்தில் உருண்டு அழுது புரளாமல் நீதி மன்றத்தில் நீதி அரசரிடம் கண்களில் கண்ணீரோடு பிள்ளையை கொடுத்து
விடுமாறு கெஞ்சும் போது நமக்கு நெஞ்சே வெடித்து விடும் அதிலும் குறிப்பாக தயவு செய்து என் பிள்ளையை பிச்சையாக வாவது கொடுங்கையா என்று
சொல்லும் போது இதுதாண்டா உண்மையான பிள்ளைப் பாசம் என்று
கத்த வேண்டும் போல் இருக்கும், இந்த திரைப் படம் ஒதுக்குப் புறமான
ஸ்டார் அரங்கில் வெளியானாலும் ஓடின
ஓட்டத்தைப் பார்த்து சிவாஜி தன்னிடம் எப்படி ரியாக்ட் செய்தார்
என்பதை ஆரூர் தாஸ் எழுதி அதை படித்திருப்பீர்கள் என்று
நம்புகிறேன் , பாசம் படத்தின் இறுதிக் காட்சியில் ரசிகர்கள் எழுந்து போவது நியாயம்தான் காரணம் நான் இப்போது அந்த படத்தை பார்த்தாலும்
தலைவர் இறக்கும் காட்சி வரும் முன் டி.வியை அணைத்து விடுவேன், ஒரு தடவை பார்த்தே எப்பா போதுண்டா சாமி இனி என் தலைவன் சாகுற மாதிரி வர்ற இந்த படத்தை இனி பார்க்கவே கூடாது என்று முடிவு செய்தேன்
மற்றபடி படத்தில் தலைவர் உலகம் பிறந்தது பாடல் காட்சியில் சும்மா பந்து
மாதிரி துள்ளிக் கொண்டே இருப்பார், இடையில் வரும் பால் வண்ணம் பாடலிலும் கொள்ளை அழகுடன் காணப் படுவார்
குமார் சார் படத்தின் ஸ்டில்ஸ் எல்லாம் மிகவும் அருமை
நன்றி சார்!....... Thanks...
-
குமார் சார் வணக்கம்
செழிப்பும் வனப்பும் நிறைந்து 100 சதவிகித
கல்வி அறிவும், தொன்மையான நல்ல தமிழ் பேசும் அன்பும் பண்பும் நிறைந்த மக்கள் வாழும் பழைய சேர நாடும் இப்போதைய வளம் நிறைந்த எங்கள் குமரி
மண்ணில் பிறந்த நகைச்சுவை மூலம் நல்ல கருத்துக்களை மக்கள் மனதில் பதிய வைத்த அய்யா கலைவாணர் அவர்களின் நினைவாக
நீங்கள் அனுப்பிய அனைத்து படங்களும்,
கட்டுரையும் அருமை
கடைசியில் தலைவர் 1978 இல் கலைவாணர்
நினைவு நாளின் போது
கூறிய வார்த்தைகள் கண்ணில் நீர் திரையிட
வைத்து விட்டது என்ன ஒரு அழகான வார்த்தைகள்
Kalaivanar is no more, For if he had been alive, Kalaivanar would have been the Chief minister and he would have served him.
எவன் சொல்லுவான் இந்த வார்த்தைகளை
என் தலைவனிடம் இருந்து மட்டுமே இந்த
வார்த்தைகள் வரும்.
மிகவும் நன்றி சார்!....... Thanks...
-
"தேடி வந்த மாப்பிள்ளை" ...
தலைவரின் ஒரு சில படங்களுடன் ஒப்பிடும் போது ஏ ன் 100 நாட்கள்
ஓடவில்லை என்று ஒவ்வொரு தடவையும் படத்தை பார்க்கும் போதெல்லாம் எனக்கு தோன்றும் காரணம் தலைவரின் சுறுசுறுப்பு, அழகு, அருமையான காமெடி, இனிமையான
பாடல்கள், அனல் பறக்கும் சண்டைக் காட்சிகள் இவையெல்லாம் இருந்தும் படம் 100 நாளை தாண்டாதது கொஞ்சம் ஏமாற்றம்தான் மற்றபடி
படம் பந்துலு அவர்களுக்கு மிகப் பெரிய லாபத்தை கொடுத்தது மட்டுமல்ல
அடுத்தடுத்த சுற்றுகளில் மிகப் பிரமாதமாக வசூல் குவித்த படம் குறிப்பாக
தலைவர் கட்சி ஆரம்பித்த பிறகு 1973 இல் கிராமத்தில் இருந்து நகரம் வரையில் வசூல் முரசு
கொட்டியது, இந்த செய்தி நிருபர் நமச் சிவாயம் அவர்கள் ஜூனியர் விகடன் பத்திரிக்கை யிலேயே எழுதி இருந்தார்,தலைவர் இந்த படத்தில் சார்லி சாப்ளின் வேடத்தில் என்ன ஒரு அழகாக நடித்து இருந்தார் நான் ரொம்ப ரசித்த வேடம்
ஸ்டில்ஸ் அனைத்தும்
பிரமாதம் சார்
நன்றி சார்!....... Thanks...
-
சகோதரர் அவர்களே..." தேடி வந்த மாப்பிள்ளை" காவியத்தை பற்றிய செய்திகள் கூறி இருக்கிறீர்... நமது காவியங்கள் 100 நாள்கள் கணக்கு... நம் காவியங்களின் வெற்றி வசூல் கணக்கீடுக்கு பொருந்தாது... மற்ற நடிகர்களின் பட ஓட்டம், வசூல் எவையும் புரட்சி நடிகரின் வசூலுடன் ஒப்பிடவோ, நியாய படுத்தோவோ முடியாது... மற்றபடி நமக்கு சென்னையிலோ, வேறு நகரங்களிலோ சொந்தமாகவோ, குத்தகைக்கோ திரையரங்குகள் கிடையாது. அவ்வாறு இருந்திருந்தால் ......... Thanks...
-
உங்களுக்கு மட்டுமல்ல
குமார் சார் எனக்கும் மிகவும் பிடித்த படம்
தலைவர் மிகவும் stylish
ஆக நடித்த படம் , இந்த படத்தில் தலைவரின் அழகை காண கண் கோடி வேண்டும் அவ்வளவு அழகாக இருப்பார் , குறிப்பாக பொன்னெழில் பூத்தது
பாடலில் பல்லவ சக்ர வர்த்தி யாக தோன்றும் போது அய்யோ அப்படியே பைத்தியம் பிடிக்கும் அவ்வளவு அழகு பல்லவ சக்ரவர்த்தி கூட இப்படி
இருந்திருப்பாரா என்பது சந்தேகம்தான்
அதிலும் அந்தப் பாடலின் கடைசி பகுதியில் பல்லவ கெட்டப்பில் இருந்து இருவரும் சுய நினைவுக்கு வரும்போது சரோஜா தேவி யின் வெட்க மும்
தலைவரின் அழகான சிரிப்பும் இதையே நான் குறைந்தது 500 முறையாவது பார்த்திருப்பேன் அடுத்து பல்லவன் பல்லவி பாடலில் நவரசங்களையும் குழைத்து பின்னி பெடல் எடுத்திருப்பார் ஒவ்வொரு வரிக்கும் வித்தியாசமான முக பாவங்களிலும் நடனத்திலும் பத்மா சுப்பிரமணியம் கெட்டார்
போங்கள் AVM நிறுவனத்தினர் இதே மாதிரிதான் அன்பே வா
படத்தையும் வெள்ளி விழா ஓடாமல் ஆக்கினார்கள் , சில பல
சதிகளால் ஒளி விளக்கு
படத்தையும் ஜெமினி நிறுவனம் சென்னையில் 100 நாள் ஓடாமல் முடக்கியது
பாவம் பரி தாபத்துக்கு
உரியவர்கள்!............ Thanks...
-
குமார் சார் வணக்கம்
தமிழ் சினிமா வரலாற்றையே மாற்றி
முதன் முதலாக நூறாவது நாள் என்பதற்கு பதிலாக " வெற்றி விழா" என்றுதான் தமிழ் சினிமாப் பட வரலாற்றில் முதன் முறையாக தலைவரின்
நாடோடி மன்னன் படத்திற்கு விளம்பரம் செய்யப் பட்டு விழா எடுக்கப் பட்டது மிகப் பெரிய வரலாறு அது மட்டுமல்ல கணேசனை வைத்து பல படங்களை
எடுத்த( எல்லாம் மொக்கை படங்கள், அதிலும் தவப் புதல்வனை 100 நாள் தேய்த்தது மிகப் பெரிய
கொடுமை) முக்தா சீனிவாசன் அவர்கள்
தலைவரின் ஒரு படம் மற்ற நடிகர்களின் 25 படங்களுக்கு சமம் என்று பாராட்டிப் பேசிய
75 ஆம் ஆண்டில் இந்தியப் பட உலகையே
வியப்பில் ஆழ்த்தி " டைம்ஸ் ஆப் இந்தியா" பத்திரிக்கையில் சிறப்புக் கட்டுரை எழுத
வைத்த தலைவரின் " இதயக்கனி" இந்த இரண்டு படங்களின் ஸ்டில்ஸ் மற்றும் காணொளிகள் அனைத்தும் அற்புதம்
மேலும் கண்ணதாசனின் வசனங்களை தலைவர்
வெளுத்து வாங்கியிருப்பது மற்றொரு சிறப்பு ஆக அனைத்தும் பிரமாதம்
மிகவும் நன்றி சார்!........ Thanks...
-
குமார் சார் நீங்கள் அனுப்பி யிருந்த திருமதி. ஷாலின் மரியா லாரன்ஸ் அவர்கள் எழுதியிருந்த இந்த கட்டுரையை முதன் முதலாக தற்செயலாக "குமுதம் லைஃப்" இதழில் நான் படிக்க நேர்ந்தது , அப்போது எனக்கு ஏற்பட்ட ஆச்சரியமும் அதிர்வும் கொஞ்ச நேரத் திற்கெல்லாம் மாறவே இல்லை, இவ்வளவு நேர்த்தியாக
தெளிவாக ஒரு ரசிக மனோ பாவத்தில் அல்லாது பொதுவான முறையில் தலைவரின்
இயற்கையான நடிப்பு மற்றும் அவரின் ரசிகனுக்கு ஏற்றபடி தன்னை மாற்றிக் கொண்ட விதம் இவைகளையெல்லாம் இதை விட சிறப்பாக பெரிய பெரிய கட்டுரை ஆசிரியர்களால் கூட எழுத முடியாது இது சத்தியம் இதைப் படிக்கும் அனைவருக்கும் கண்டிப்பாக ஒரு அதிர்வு ஏற்படுவது நிஜம், இந்த கட்டுரையை தலைவரின் நூற்றாண்டு விழா சிறப்பாக குமுதம் வெளியிட்டது மிக மிக சிறப்பான விஷயம் ஆகும் காரணம் குமுதம்
இதழை நிறுவிய அண்ணாமலை, பார்த்தசாரதி இருவரும் தலைவரைப் பற்றி தமிழில் என்ன என்ன அவமானகரமான வார்த்தைகள் உண்டோ
அத்தனையையும் பயன்படுத்தி தலைவரை வார்த்தைகளால் குத்திப் பிளந்தவர்கள்
அப்படிப்பட்டவர்களின் குழும இதழில் இப்படிப் பட்ட ஒரு கட்டுரை வந்ததுதான் தலைவருக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்
திருமதி. ஷாலி ன் அவர்கள் எவ்வளவு அழகாக குறிப்பிடுகிறார் பாருங்கள் பெண்களுக்கு எப்போதுமே acting காதலனை விட active ஆன காதலனையே அதிகம் பிடிக்கும் ஆனால் இதையெல்லாம் நாங்கள் வெளியே சொல்வதில்லை வாரே வாஹ் எவ்வளவு சத்தியமான வார்த்தைகள் இதை பகிரங்கமாக சொல்வதற்கு கூட ஒரு துணிச்சல் வேண்டும் அது இந்த சகோதரியிடம் நிறைய இருக்கிறது அது மட்டுமல்ல லத்தீன் அமெரிக்க நாடுகளின் நடன வகைகள் மற்றும்
ஹாலிவுட் பிரபலங்கள் கிரி கிரி பெக், பால் நியுமன்,கேரி கிராண்ட்
போன்றவர்களின் உடை அலங்காரங்களை தலைவரின் உடை அலங்காரங்களோடு ஒப்பிடுவது என்றால் அதற்கு உலக சினிமாவைப் பற்றிய அறிவும், ரசனையும் வேண்டும் அது திருமதி.
மரியா லாரன்ஸ் அவர்களிடம் நிரம்ப இருக்கிறது , வீர உணர்ச்சியில் ஏனோ
தலைவரை ஹாலிவுட்டின் " எரால் பிளைனுடன் ஒப்பிட மறந்து விட்டார் , இன்னொரு விஷயம் இந்த கட்டுரை குமுதத்தில் எழுதப் பட்டதால் நாகரீகம் கருதி சிவாஜியின் காதல் உணர்ச்சியை விமர்சிக்காமல் விட்டு விட்டார் என்று நினைக்கிறேன், சிவாஜியின் காதல் முகபாவம் ஒன்று வக்கிரமாக பார்த்து சைகை செய்வது இல்லை என்றால் இறுக
கட்டிப் பிடிப்பது இந்த இரண்டும்தான் இருக்கும் அதற்கு உதாரணமாக " சவாலே சமாளி, தெய்வமகன்,டாக்டர் சிவா, ரோஜாவின் ராஜா, இளைய தலைமுறை இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் ஆனால் தலைவரைப் போல நாயகிகளை மென்மையாக, நாகரீகமாக, ரசனையாக கையாண்டதை உலகத்திலே எவனும் இல்லை என்று அடித்துச்
சொல்லலாம் உதாரணத்துக்கு "நேற்று இன்று நாளை"
அங்கே வருவது யாரோ,
நீ என்னென்ன சொன்னாலும் கவிதை பாடல் காட்சிகளை பாருங்களேன் தலைவரின் அழகையும்
சுறு சுறுப்பையும் பார்க்கும் போது நமக்கும் உற்சாகம் தொற்றிக் கொள்ளும்
திருமதி. மரியா லாரன்ஸ் அவர்கள் விவரிக்கும் போது மீண்டும் ஒரு முறை தலைவரின் பாடல்களை பார்க்கத்
தூண்டுகிறது
அந்தக் காலத்தில் பாவைக் கூத்து, தெரு நாடகங்களின் நீட்சி தான் திரைப் படங்களாக விரிவு பெற்றது அந்த நேரத்தில் நாடகத்தில் எப்படி உச்ச ஸ்தாயில் கத்திப் பேசி பாடுவார்களோ அதைத்தான் சினிமாவிலும் கடை பிடித்தார்கள் அதற்கு நடிப்பு என்று பெயரும் வைத்தார்கள் , அப்போதிருந்த ஊடகங்களும் கத்தி கூச்சல் போடுவதையும்
உடம்பை தேவை இல்லாமல் அலட்டிக் கொண்டு வசனம் பேசுவதையும் அது மட்டும்தான் நடிப்பு என்று இறுக்கமான முத்திரையை குத்தி விட்டார்கள் அந்த கால கட்டத்தில் ஒரு மனிதனுக்கே உரித்தான ஆவேசமும்
கோபமும் இப்படித்தான் இருக்கும் என்று" மதுரை வீரனும், மன்னாதி மன்னன், மருத நாட்டு இளவரசி படங்களின் மூலம் தலைவர் சொன்னபோது எவனும்
ஒத்துக் கொள்ள வில்லை அதற்கு ஒரு முக்கிய காரணம் தலைவரின் மேல் ஏற்பட்ட பொறாமையும்,
காழ்ப்புணர்ச்சி யும் தானே தவிர வேறு ஒன்றுமில்லை
ஊர் விட்டு ஊர் பிழைக்க வந்த இவனுக்கு இத்தனை ஆதரவும், மக்கள் செல்
வாக்குமா என்று புகைந்தவர்களுக்கும் கிடைத்த ஆயுதம்தான்
தலைவருக்கு நடிக்கத் தெரியாது என்னும் முனை மழுங்கிய ஆயுதமே தவிர வேறு
ஒன்றுமில்லை
1971 ம் ஆண்டு தலைவருக்கு சிறந்த நடிகர் பட்டம் கிடைத்த போது இப்படித்தான் ஒரு அற்பத் தனமான
குற்றச் சாட்டை முன் வைத்தார்கள் அது சிவாஜிக்கு கிடைக்க வேண்டிய பட்டம் எம்.ஜி.ஆர் விலை கொடுத்து விலைக்கு வாங்கி விட்டார் என்று
அப்போது தலைவர் மிக
அழகாக சொன்னார் இந்த ஒரு வருடத்துக்கு
மட்டும்தான் நான் சிறந்த நடிகனே தவிர காலமெல்லாம் அல்ல என்று ஆனால் அந்த வருடதுக்குப் பிறகு சிவாஜி நடித்து எவ்வளவோ படங்கள் வந்தது ஆனால் சிறந்த நடிகர் பட்டம் மட்டும் கடைசி வரை கிடைக்கவே இல்லை
இவ்வளவுக்கும் சிவாஜி
காங்கிரசுக்கு ஆதரவு கொடுத்த 1961 கால கட்டத்தில் இருந்து எத்தனையோ ஆண்டுகள் காங்கிரஸ்தான் ஆட்சி பீடத்தில் இருந்தது ஆனால் சிவாஜிக்கு அந்த பட்டம் கொடுப்பதைப் பற்றி அவர்கள் யோசிக்கவே இல்லை காரணம் அவர்களுக்கே நன்றாகத் தெரியும் சிவாஜியின் நடிப்பு ஓவர் ஆக்டிங் என்று
எப்படியோ இந்த கட்டுரை எழுதிய திருமதி. ஷாலின் மரியா லாரன்ஸ் அவர்கள் நீடூழி வாழ்க!........... Thanks.....
-
ராஜு சார் இந்த மாதிரி
நாலாந்தர விமர்சனங்களுக்கு எல்லாம் டென்ஷன் ஆகி உடம்பை கெடுத்துக் கொள்ளாதீர்கள் , விமர்சனம் செய்யும் இவர்களைப் பற்றி நமக்குத் தெரியாதா?
கோஷ்டி சண்டைகளுக்கும் வேட்டி உருவல்களுக்கும் பெயர் போன இவர்களெல்லாம் பேசினால் என்ன ஆகி விடப் போகிறது, சமீபத்தில் கூட கராத்தே
தியாக ராஜனும் கே. எஸ் அழகிரியும் மாறி மாறி நாறிக் கொண்டது
ஊருக்கே தெரியும் அப்படியிருக்க இவர்களெல்லாம் பேச வந்து விட்டார்கள் , அந்தக் காலத்தில் இருந்தே திண்டிவனம் ராமமூர்த்தி கோஷ்டி, வாழப்பாடி கோஷ்டி, இளங்கோவன் கோஷ்டி,
சிதம்பரம் கோஷ்டி, தங்கபாலு கோஷ்டி என்றெல்லாம் கோஷ்டி
அரசியல் நடத்திக் கொண்டு அடுத்தவன் காலை எப்படா வாரலாம் என்று குழி பறிப்பதற்கு என்றே பிறந்த கூட்டம் தலைவரைப் பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது? விமர்சனம் என்பது பொதுவானது யார் மீது வேண்டுமானாலும் விமர்சனம் வைக்க முடியும், அது காந்தி ஆனாலும் சரி புத்தன் ஆனாலும் சரி ஆனால் அது வைக்கும் விதத்தைப் பொறுத்தது
நான் மட்டும் யோக்கியன் அடுத்தவன் எல்லாம் அயோக்கியன் என்ற வகையில் விமர்சனம் செய்வது மல்லாந்து படுத்துக் கொண்டு எச்சில் துப்புவதைப் போன்றது, சிவாஜிக்கு
அந்தக் காலத்தில் குழி
பறித்தது அவர்களின்
ஆட்கள் தானே தவிர வேறு யாரும் கிடையாது திண்டிவனம் ராமமூர்த்தி, பழ. நெடுமாறன், போன்றவர்கள் சிவாஜிக்கு எதிராக என்ன உள்ளடி வேலை எல்லாம் செய்தார்கள் என்பதை " நான் கண்ட
அரசியல்" புத்தகத்திலும் இன்னும் பல புத்தகங்களிலும்
கண்ணதாசன் விலா வரியாக சொல்லி இருப்பார் ஏன் ஒரு படி மேலே போய் காமராஜர்
எப்படிப் பட்ட புத்தி உள்ளவர் அடுத்தவன் மேலே வந்தால் அவனை அமுக்குவதற்கு என்ன செய்வார் எப்படி எல்லாம் பொறாமை அடைவார் என்பதையும் இதே கண்ணதாசன் தான் புத்தகத்தில் எழுதினார் இவ்வளவுக்கும் கண்ணதாசன் காமராஜரிடம் நெருக்கமாக இருந்தவர்
தலைவர் பொய் சொல்லி ஜெயித்தார் என்ற வார்த்தைக்கு வருவோம், அப்போ அரசியலில் ஜெயித்தவர்கள் எல்லாம் பொய் சொல்லி ஜெயித்த வர்கள் அப்படித்தானே சரி காமராஜர் பொய் புரட்டு சொல்லித்தான் முதல்வர் ஆனாரா?
மூதறிஞர் இராஜாஜி மற்றும் பண்டித நேரு போன்ற தலைவர்கள் எல்லாம் பொய் சொல்லித்தான் முதல்வரும் பிரதமரும் ஆனார்களா? தோற் பவன் தான் காரணம் தேடுவான் , இதைத்தான் முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் அவர்கள் பிரிட்டிஷ் பாராளு மன்றத்தில் உரையாற்றும் போது சொன்னார் " மக்கள் மன்றத்தில் தோற்றுப் போய் விட்டு அதற்கு ஒரு காரணத்தையும் கண்டுபிடித்து சொல்பவர்களின் வாக்கு என்பது முற்றிப் போன ஒரு பித்தனின் வார்த்தையைப் போன்றது காரணம் பித்தன் எதையாவது உளறிக் கொண்டேதான்
இருப்பான் அதைப் பார்த்து நாம் பரிதாபப் படத்தான் முடியுமே தவிர வேறு எதுவும் செய்ய முடியாது என்று
அதைப் போல்தான் இந்த நாறிகளின் வார்த்தையும் புலம்பலும் பற்கடிப்பும்
விட்டுத் தள்ளுங்கள் ராஜு சார்
அடுத்ததாக இலவசம் கொடுத்து ஏமாற்றிய கதைக்கு வருவோம்
ஆரம்பத்தில் இலவசத்தின் பிதாமகன் யார்? காமராஜர்தானே இலவச மதிய உணவுத் திட்டத்தை கொண்டு வந்தார் அப்போ அது மனிதாபத்தினால் அல்ல மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கும்
ஒரு தந்திரம் அப்படித்தானே, என்னய்யா இது நீங்கள் கொண்டு வந்தால் நலத்
திட்டம் மற்றவன் கொண்டு வந்தால் ஏமாற்று வித்தை அப்படித்தானே?
அடுத்தது சிவாஜி பெரிய வள்ளலாம் யாருக்கும் தெரியாமல் கொடுப்பாரா? அப்படி எத்தனைபேர் இவரால்
பயன் பெற்றனர் என்று
இதுவரை நான் எந்த பத்திரிகையிலும் படித்ததில்லை, தெரியாமலா மறைந்த
முன்னாள் அமைச்சர்
காளிமுத்து அவர்கள் சொன்னார்கள் சிவாஜியை ஜமுக்காளத்தில் வடி கட்டின கஞ்சன் என்று,
எனவே ராஜு சார் இந்த
மாதிரி விமர்சனங்களை வைக்கும் சூரியனைப் பார்த்து ஏதோ குரைக்குமாமே அந்த மாதிரி ஜென்மங்களாக
நினைத்துக் கொண்டு
விட்டுத் தள்ளுங்கள்
இது போன்ற விமர்சனங்களால் தலைவரின் புகழ் இன்னும் சுடர் விட்டுப்
பிரகாசிக்குமே தவிர
குறைய ப் போவதில்லை
Leave it Raju sir!......... Thanks...
-
தேவர் பிலிம்ஸ் புரட்சித்தலைவர் நடித்த 15 வது படம் "காதல் வாகனம்" வெளியான நாள் 21-10-1968 இன்று.
சென்னை குளோப் 35 நாள் ஸ்ரீகிருஷ்ணா 39 நாள் சரவணா 29 நாள் சீனிவாசா 25 நாள் மதுரை அலங்கார் 39 நாள் ஓடியது..... மற்ற இடங்களில் எல்லாம் 4 வாரங்கள் - 7 வாரங்கள் திருப்தியான வசூலை வழங்கியது... Thanks...