-
#மக்கள் திலகம் எழுதிய உன்ன*த* உயில்..
1986 ஏப்ரல் 28ல் புர*ட்சித்த*லைவ*ர் ஓர் உயில் எழுதியிருந்தார். பிற*கு அதை ர*த்து செய்து சில திருத்த*ங்க*ளுட*ன் 11 மாதங்களுக்கு பிற*கு 1987 ஜனவரி 18ம் தேதி புதிய உயிலை எழுதி வெளியிட்டார். அந்த உயில் பற்றிய விவரங்களை எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாள் முன்னிலையில் அ.தி.மு.க தலைமை கழகத்தில் வைத்து வழக்கறிஞர் ராகவாச்சாரி வெளியிட்டார். அ.தி.மு.க நிர்வாகிகளான வள்ளிமுத்து, ராகவானந்தம், மாதவன் ஆகியோர் உடனிருந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மணப்பாக்கத்தில் உள்ள ராமாவரத்தில் எம்.ஜி.ஆர் தோட்டத்தில் குடியிருக்கும் எம்.கோபாலன் குமாரனாகவும், தமிழக முதல் அமைச்சராகவும் பணியாற்றி வரும் எம்.ஜி.ராமச்சந்திரன் எனும் நான் சுயநினைவோடும், மனப்பூர்வத்தோடும், பிறர் தூண்டுதல் இல்லாமல் இந்த புதிய உயிலை எழுதி வைத்து இருக்கிறேன். எனக்கு குழந்தைகள் கிடையாது. எனக்கு ஒரே வழிமுறை (வாரிசு) என் மனைவி ஜானகி அம்மாள்தான். அவளை தவிர வேறு யாரும் எனக்கு வாரிசு இல்லை. என் காலத்திற்கு பிறகு என் சொத்துக்கள் சம்பந்தமாக எவ்வித வழக்குகள், தகராறுகள் வராமல் இருக்கவும், எனது உறவினர்கள் எவரும் பாத்தியதை கொண்டாடாமல் இருக்கவும் சுய சம்பாத்தியத்தின் மூலம் நான் வாங்கிய சொத்துக்கள் விஷயமாக இந்த உயில் ஏற்பாட்டினை செய்து இருக்கிறேன்.
இந்த உயிலை நிறைவேற்றுபவர்களாக மூத்த வழக்கறிஞர் என்.சி.ராகவாச்சாரி மற்றும் எனது மருமகன் ராஜேந்திரனையும் நியமிக்கிறேன். அவர்கள் காலத்திற்கு பின் சட்டப்படி சென்னை உயர்நீதிமன்ற ஆணைப்படி நிறைவேற்றுபவர்களை நியமிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். என குறிப்பிட்டிருந்த எம்.ஜி.ஆர் தனக்கு சொந்தமான 7 வகையான அசையும் மற்றும் அசையா சொத்துக்களை வரிசைப்படி பட்டியலிட்டு உயிலில் குறிப்பிட்டிருந்தார்.
அதன்படி எம்.ஜி.ஆர் குடியிருந்து வந்த ராமாவரம் தோட்டத்தில் அவரது பெயரில் இருந்த ‘எம்.ஜி.ஆர். கார்டன்’ எனும் பங்களாவும் தோட்டமும் (6 ஏக்கர் 34 சென்டு), சென்னை தி.நகர் ஆற்காடு சாலையில் 27ம் எண்ணில் இருந்த கட்டிடமும், அடி மனையும், சென்னை சாலிகிராமத்தில் இருக்கும் சத்யா தோட்டம் (8.5 ஏக்கர்), சென்னை ஆலந்தூர் மார்க்கெட் சந்தில் எண் 43 முதல் 47 வரை உள்ள கட்டிடங்களும், அடிமனையும். ராமாவரம் தோட்டத்தில் உள்ள அசையும் சொத்துக்களான தனக்கு சினிமா துறையில் கிடைத்த விலை உயர்ந்த பரிசுகளும், மற்றபடி கிடைத்த விலை உயர்ந்த பரிசுகளும். தன் சொந்த மர இரும்பு சாமான்கள், வெள்ளிப் பாத்திரங்கள், மோட்டார் வாகனங்கள், பசு உள்ளிட்ட கால்நடைகள். சத்யா ஸ்டியோ நிறுவனத்தில் தனது பெயரில் உள்ள பங்குகள் (எம்.ஜி.ஆர் பெயரில் 95% பங்குகளும், ஜானகி அம்மாள் பெயரில் 5% பங்குகளும் இருந்தன). என இவை எல்லாம் தனது சுய சம்பாத்தியத்தில் வாங்கப்பட்டவை எனவும், தனக்கு சர்வ சுதந்திரமாக பயன்படுத்தப்பட்டவை எனவும் அதில் குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறு குறிப்பிடப்பட்ட சொத்துகளில் ராமாவரம் தோட்டத்தில் உள்ள பங்களா, கார்செட், கோவில் பழத்தோட்டம் ஆகியவற்றை தனது மனைவி வி.என்.ஜானகிக்கு அவரது ஆயுள் பரியாந்தம் ஆண்டு அனுபவித்து கொள்ள குறிப்பிட்ட அதே வேளையில் அவற்றை விற்கவோ, அடமானம் வைக்கவோ, தானமாக கொடுக்கவோ உரிமை கிடையாது எனவும் எழுதியிருந்தார். ஜானகியின் காலத்திற்கு பின் அவரது சொந்தகார பெண் கீதா, நிர்மலா, ராதா, ஜனம், சுதா ஆகிய நால்வரும் ராமாவரம் தோட்டத்தில் ஏற்கனவே குறிப்பிட்ட ஏ, பி, சி, டி. என்று வரைபடத்தில் குறிப்பிடப்பட்ட கட்டிடங்களை அவரவர் ஆண்டு அனுபவித்து கொள்ளவும் அதே வேளையில் அவற்றை விற்கவோ, குத்தகைக்கு விடவோ உரிமையில்லை எனவும் அவர்களது காலத்திற்கு பின் இந்த சொத்துக்களை அவரவர் வாரிசுகள் பெற வேண்டும் என தனித்தனியே உயில் எழுதியுள்ளார்.
இவை தவிர ராமாவரம் தோட்டத்தில் உள்ள காலி இடங்களை எல்லாம் சேர்த்து இந்த உயிலை நிறைவேற்றுபவர் அதில் ‘‘எம்.ஜி.ஆர். ஊமைகள் இல்லம்’’ என்ற பெயரில் ஊமைகள், காது கேளாதவர்கள் இல்லமாக அதை ஏற்படுத்த வேண்டும். அந்த ஏழைகள் இலவசமாக தங்கியிருப்பதற்கும், உணவுக்கும், காதுகேளாதவர்கள் இலவசமாக கருவிகள் பெறுவதற்கும், உடுத்த உடை, மருந்துகள் வசதி, கல்வி, தொழில் முதலியவற்றுக்காக அந்த காலில் இடங்களில் செட்டுகள் மற்றும் கட்டடங்களும் அமைத்து கொள்ள வேண்டும். அத்துடன் ஊமைகள் பேசுவதற்கு சிகிச்சையும், பேச்சுப் பயிற்சியும் ஏற்பாடு செய்தாக வேண்டும். இதே போல் காது கேளாதவர்களுக்கு தங்கும் வசதி, காது கேட்பதற்கான கருவிகள் வாங்கி கொடுத்தல் ஆகியவற்றையும் செய்ய வேண்டும். எம்.ஜி.ஆர் ஊமைகள் இல்லத்திற்கான செட்டுகள், கட்டிடங்கள் அமைக்கவும் இதர செலவுகளுக்கும் சாலிகிராமத்தில் உள்ள சத்யா தோட்டத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தில் இருந்து செலவு செய்ய வேண்டும்.
தனது வீட்டில் இருக்கும் பரிசுப் பொருட்கள், ஆற்காடு சாலை வீட்டில் இருக்கும் பரிசுப் பொருட்கள், புத்தகங்கள், நூல்கள் ஆகியவற்றை கொண்டு ஆற்காடு சாலையில் உள்ள கட்டிடத்தில் தனது காலத்திற்கு பிறகு ‘எம்.ஜி.ஆர். நினைவு இல்லம்’ என பெயரிட்டு பாதுகாக்க வேண்டும். அந்த இடத்தை பொதுமக்கள் பார்வையிடும் வகையில் வசதி செய்து தரப்பட வேண்டும் எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தை யாரும் விற்கவோ, அடமானம் வைக்கவோ, குத்தகைக்கு விடவோ உரிமை இல்லை. இந்த இல்லத்தின் பராமரிப்பு செலவிற்கும், காவல் காப்பதற்கும் ஏற்படும் செலவிற்கு ஆலந்தூர் மார்க்கெட் கட்டடங்களில் இருந்து வரும் வருமானத்தை பயன் படுத்தி கொள்ள வேண்டும். இதற்கென அந்த மார்க்கெட் கட்டடங்களை எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்துக்கு எழுதி வைத்தும் உள்ளார்.
பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் நினைவு இல்லங்கள் அரசின் செலவிலேயே ஏற்படுத்தப்பட்டன. அரசுக்கு ஏற்படும் இந்த செலவினை தவிர்த்திட என்னுடைய வீட்டையே இந்த நினைவு இல்லமாக ஏற்பாடு செய்து இருக்கிறேன் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
சத்யா ஸ்டுடியோ கம்பெனியில் (95 கிரவுண்டு பரப்பு) தனக்கு உள்ள பங்குகள் அனைத்தும் தன்னால் ஆரம்பிக்கப்பட்ட அ.தி.மு.க கட்சிக்கு கீழே சொல்லப்பட்ட நிபந்தனைக்கு உட்பட்டு சேர வேண்டும், அந்த பங்குகளை அ.தி.மு.க கட்சி பெற்று கொண்டு நிர்வாகம் செய்து அதன் மூலம் வரும் வருமானத்தை கட்சியின் பயனுக்காக எடுத்து கொள்ளவும், ஒருவேளை கட்சி பிளவு பட்டாலோ அல்லது கலைக்கப்பட்டாலோ சத்யா ஸ்டுடியோ பங்குகளை எல்லாம் இந்த உயிலை நிறைவேற்றுபவர் கைபற்றி எம்.ஜி.ஆர் ஊமைகள் இல்ல செலவுகளுக்கு பயன்படுத்த வேண்டும். அத்துடன் சத்யா ஸ்டுடியோ கட்டிடத்திற்கு தனது தாயின் பெயரான ‘‘சத்யபாமா எம்.ஜி.ஆர் மாளிகை’’ என பெயர் வைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
எம்.ஜி.ஆரின் உயில்படி அமைய உள்ள எம்.ஜி.ஆர் ஊமைகள் இல்லத்துக்காக 2.5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த இல்லம் எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பின் துவக்கப்பட்டு இன்றளவும் இயங்கி வருகிறது. இளமை காலத்தில் ஏழ்மையின் பிடியில் தவித்த எம்.ஜி.ஆர் தன்னால் ஈட்டப்பட்ட வருவாயில் ஒவ்வொரு ரூபாயினையும் எப்படி எதற்கு செலவழிக்க வேண்டும் என்பதை தனது உயிலின் மூலம் வெளிகாட்டி இருந்தார்.
"இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்" என நிழல் உலகில் தான் பாடிய பாடலை உண்மையாக்கி சென்று விட்டார் மக்கள் திலகம்.
இனிய வ*ணக்கத்துட*ன்...
-
எம்.ஜி.ஆருடன் சினிமாவிலும் அரசியல் வாழ்விலும் கூடவே பயணித்த ராமகிருஷ்ணனை சந்தித்தோம். எம்.ஜி.ஆர் இரட்டை வேடமிட்ட படங்களில் டூப் எம்.ஜி.ஆராக நடித்த ராமகிருஷ்ணன், அவர் முதல்வரான பிறகும் பாதுகாவலராக அருகில் இருந்தவர்.
‘‘1945ல இருந்து எம்.ஜி.ஆரை எனக்குத் தெரியும். அப்போ நான் சௌகார்பேட்டையில பால் கடையில் வேலை செய்துகிட்டிருந்தேன். சைனா பஜார்ல எம்.ஜி.ஆர் குடும்பத்தோட தங்கி, சின்னச் சின்ன வேஷத்துல நடிச்சிட்டிருந்தார். பால்கடைக்கு வரும்போது பழக்கமானார். ஒரு பொங்கல் அன்னிக்கு அவர் வீட்டுக்குப் போயிருக்கேன். அவங்க அம்மாவைப் பார்த்து பிரமிச்சுப் போயிட்டேன். எம்.ஜி.ஆரை விட நல்ல சிவப்பு சத்யா அம்மா. எனக்கு பொங்கல் கொடுத்து உபசரிச்சு, கையில நாலணா கொடுத்து அனுப்பி வச்சாங்க.
1949ல் பி.யூ.சின்னப்பா நடித்த ‘மங்கையர்க்கரசி’ படத்துல பயில்வானா நடிக்கப் போயிருந்தேன். சின்னப்பாவை பார்க்க எம்.ஜி.ஆர் வந்திருந்தார். சின்னப்பா என் பக்கம் திரும்பி, ‘இவரை நல்லா பழக்கம் புடிச்சி வச்சுக்கோ... பின்னால பெரிய ஹீரோவா வருவாரு’ன்னு எம்.ஜி.ஆரைக் காட்டி சொன்னார். அவர் சொன்ன மாதிரியே எம்.ஜி.ஆர் பெரிய ஹீரோவான பிறகு, அவர் படங்கள்ல ஸ்டன்ட் நடிகரா எனக்கு வாய்ப்பு கொடுத்தார். ‘சிரித்து வாழவேண்டும்’, ‘ஆசை முகம்’, ‘நினைத்ததை முடிப்பவன்’, ‘நீரும் நெருப்பும்’னு சில இரட்டை வேடப் படங்கள்ல முகம் காட்டாத எம்.ஜி.ஆராவும் என்னை நடிக்க வச்சார். அவரோட கடைசி படமான ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ வரை அவருக்காக டூப் போட்டு நடிச்சிருக்கேன். ‘நினைத்ததை முடிப்பவன்’ படம் க்ளைமாக்ஸ்ல ரெண்டு எம்.ஜி.ஆரும் கத்தி சண்டை போடுற சீன்ல இன்னொரு எம்.ஜி.ஆரா அவர்கூட கத்திச் சண்டை போட்டேன். கத்திச் சண்டையில உடம்பை ரோலிங் செய்யிறது ரொம்ப சிரமம். எம்.ஜி.ஆர் அதில் கில்லாடி. நானும் அப்படிச் செய்ததைப் பார்த்துட்டு ஸ்பாட்லயே ஆயிரம் ரூபாய் கொடுத்துப் பாராட்டினார்’’ என்ற ராமகிருஷ்ணன், எம்.ஜி.ஆரின் உணவுப் பழக்கங்களை பட்டியலிட்டார்.
‘‘தலைவர் தங்க பஸ்பம் சாப்பிடுவார்னு சொல்றதெல்லாம் சுத்த பொய். தங்கம் மாதிரி ஜொலிக்கிறவருக்கு தங்க பஸ்பம் எதுக்கு? கேரளாவிலிருந்து நங்கி கருவாடை வரவழைச்சு, அதை வறுத்துப் பொடியாக்கி சோத்துல பிசைஞ்சு சாப்பிடுவார். அதுல அவருக்கு அலாதி பிரியம். அப்புறம், மத்தி மீன் சாப்பிடுவார். காலையிலேயே இட்லிக்கு கோழி குருமா வச்சு சாப்பிடுவார். மதியத்துக்கும் கறிக் குழம்புதான். முருங்கை கீரையை ப்ரியமா சாப்பிடுவார். அடிக்கடி கோதுமை பாயசம் செய்து தரச் சொல்லி குடிப்பார்.
வாய்க்கு ருசியா தான் மட்டும் சாப்பிடுற ஆளு இல்லை அவர். அரசியலுக்கு வந்த பிறகு, ராமாவரம் தோட்டத்துல மனு கொடுக்க வர்றவங்களைக் கூட வெறும் வயித்தோட அனுப்ப மாட்டார். அடுத்தவங்களை சந்தோஷப்படுத்தி சந்தோஷப்படுறதுல தலைவர் ஒரு தனிப்பிறவி.
என்.டி.ஆர் கட்சி ஆரம்பிக்கும்போது முதல்ல ‘தெலுங்கு ராஜ்ஜியம்’னு கட்சிக்குக் பெயர் வச்சார். தலைவர்தான் ‘தெலுங்கு தேசம்’னு மாத்தச் சொன்னார். அவர் சொன்னபடியே செய்த என்.டி.ஆர், ஆட்சியைப் பிடிச்சு முதல்ல தலைவரைத்தான் பார்த்துட்டுப் போனார். அப்போ கர்நாடக முதல்வரா இருந்த குண்டுராவுக்கும் தலைவர் மேல ரொம்பப் பாசம். அவரோட பிறந்தநாளுக்கு ஒரு தடவை தலைவரைக் கூப்பிட்டு விருந்து வச்சார். பெங்களூர்ல இருந்து திரும்பி வந்துக்கிட்டிருந்தப்போ, வெயில்ல செருப்பில்லாம் நடந்து போன ஒரு பாட்டிக்கு ஜானகி அம்மாளோட செருப்பைக் கழட்டிக் கொடுத்த வள்ளல்தான் எம்.ஜி.ஆர்.
1979ல ஒரு தடவை காமராஜர் பிறந்த நாள் விழாவுல கலந்துக்கறதுக்காக தலைவர் போய்க்கிட்டிருந்தார். ராணி சீதை ஹால் கிட்ட கார் போகும்போது ரோட்டுல ஒருத்தர் காக்கா வலிப்பால துடிக்கிறதைப் பார்த்துட்டு காரை நிறுத்தச் சொன்னவர், அந்த ஆளை போலீஸ் வண்டியிலயே ஏத்தி ஹாஸ்பிடல் கொண்டு போகச் சொன்னார். சினிமால எப்படி ஹீரோவா ஓடிப் போய் உதவி செய்வாரோ, அதே மாதிரி நிஜ வாழ்க்கையிலும் கடைசிவரை ஹீரோவா இருந்தவர் தலைவர்.
தலைவர் கூட இருந்தவங்க எல்லாம் இப்ப எங்கயோ இருக்காங்க. ‘எம்.ஜி.ஆர் கூட இருந்துட்டு நீங்க மட்டும் ஏன் கஷ்டப்படுறீங்க’ன்னு என்னைப் பார்க்க வர்றவங்கல்லாம் கேப்பாங்க. அவர் கூட இருந்ததையே பெரிய சொத்தா நினைச்சதால அப்போ எனக்கு எதையும் கேட்க தோணல. ஆனா, கேட்டிருக்கலாமோன்னு இப்போ தோணுது’’ என்று ஐந்துக்கு எட்டு அடி அறையில் அமர்ந்தபடி கலங்கினார் ராமகிருஷ்ணன் ....
-
தனியார் தொலைக்காட்சிகளில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரைப்படங்கள்*ஒளிபரப்பான*பட்டியல் (06/01/21 முதல் 10/01/21 வரை )
--------------------------------------------------------------------------------------------------------------------------
06/01/21* * *சன்* லைஃப் - காலை 11 மணி -* அன்பே வா*
* * * * * * * * * வேந்தர் டிவி - காலை 10 மணி - விவசாயி*
* * * * * * * *ராஜ் டிவி - பிற்பகல் 1.30 மணி - தேடி வந்த மாப்பிள்ளை*
* * * * * * * பெப்பர்ஸ் - பிற்பகல் 2.30 மணி - நீதிக்கு பின் பாசம்*
* * * * * * *புதுயுகம் டிவி - இரவு 7 மணி - கன்னித்தாய்*
07/01/21- ஜெயா மூவிஸ் -அதிகாலை 1 மணி - ஆயிரத்தில் ஒருவன்*
* * * * * * *ராஜ் டிவி - பிற்பகல் 1.30 மணி - நாடோடி*
* * * * * * *வசந்த் - பிற்பகல் 1.30* மணி - பெற்றால்தான் பிள்ளையா*
* * * * * * *சன் லைஃப் - மாலை 4 மணி -நீதிக்கு தலைவணங்கு*
08/01/21- சன் லைஃப் - காலை 11 மணி - உரிமைக்குரல்*
* * * * * * * *ராஜ் டிவி - பிற்பகல் 1.30 மணி - பறக்கும் பாவை*
* * * * * * * பெப்பர்ஸ் டிவி - பிற்பகல்* 2.30 மணி -குடும்ப தலைவன்*
* * * * * * * புதுயுகம் டிவி - இரவு 7 மணி - நவரத்தினம்*
09/01/21- முரசு -மதியம் 12 மணி - இரவு 7 மணி - நல்ல நேரம்*
* * * * * * * ஜெயா மூவிஸ் - இரவு 10 மணி -சிரித்து வாழ வேண்டும்*
10/01/21- மெகா 24 -பிற்பகல் 2.30 மணி -சக்கரவர்த்தி திருமகள்**
-
தினகரன் -10/01/21
----------------------------------
தேசிய திரைப்பட*ஆவண*காலண்டரில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடிகைகள் அர்ச்சனா*, லட்சுமி*
------------------------------------------------------------------------------------------------------------------------
மகாராஷ்டிரா மாநிலம் புனே*வில் உள்ள தேசிய*திரைப்பட*ஆவண*காப்பகம் ,
மத்திய அரசின்*தகவல் ஒளிபரப்பு* துறையின்*கீழ் செயல்பட்டு வருகிறது*.
இந்தியாவில் ரிலீசான*ஆயிரக்கணக்கான பழைய படங்கள்* *இங்கு பாதுகாக்க
படுகிறது .* இந்த காப்பகம் சார்பில்*ஆண்டுதோறும்* காலண்டர் வெளியிட*
படுகிறது .* இதில்*சினிமா*துறைக்கு*சிறந்த*பங்களிப்பு செய்தவர்களின் புகை*
படங்கள்* இடம் பெறும்*.* இந்த ஆண்டு* காலண்டரில் , தமிழகத்தில் இருந்து*
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ( ரிக்*ஷாக்*காரன்*),அர்ச்சனா*( தாசி - தெலுங்கு )
லட்சுமி ( சில*நேரங்களில் சில மனிதர்கள் ) ஆகியோரின் புகைப்படங்கள்*
இடம் பெற்றுள்ளன .
-
தொலைக்காட்சி டிவி சேனல்களில் விவாத மேடை, பேச்சரங்கங்களில் கட்சியின் சார்பில் கலந்துக் கொள்ளும் சில பேச்சாளர்கள் தலைவரின் சாதனைகள் பற்றி நெறியாளர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல தடுமாறுகிறார்கள். அவர்களின் பார்வைக்காக தலைவர் எம்ஜிஆரின் ஆட்சி க்கால சாதனைகள்-100 இங்கு பதிவிடுகிறேன்.
டி.வி.சேனல்களின் விவாத அரங்கங்களில் அஇஅதிமுக சார்பாக கலந்துக் கொள்ளும் சில பேச்சாளர்கள் தலைவரின் சாதனைகள் பற்றி கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல தடுமாறுகிறார்கள். அவர்களுக்காக இப்பதிவுகள்---
தலைவர் எம்ஜிஆர் ஆட்சி சாதனைகள்-100
எம்.ஜி.ஆர். ஆட்சி சாதனைகள் 100
1.சத்துணவு திட்டம்(01-07-82 முதல் அமுல்படுத்தப்பட்டது.
2.பெரியார் சீர்திருத்த எழுத்துக்கள அமுலாக்கம்
3.கிராம நிர்வாக அலுவலர்கள் பதவிகள் உருவாக்கம்
4கிராம தன்னிறைவு திட்டம் தொடக்கம்
5.பெரிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு தலைவர்கள் பெயர்கள் சூட்டப்பட்டன.
6.புதிய போக்குவரத்து கழகங்கள் உருவாக்கப்பட்டு 4316 புதிய பேருந்து வழித்தடங்கள் ஏற்படுத்தப்பட்டன.
7.குடிசைகளுக்கு இலவச மின் வசதி அளிக்கப்பட்டது.
8.காவல்துறைகள் பிரிக்கப்பட்டு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
9.பயிர் பாதுகாப்பு இன்சூரன்ஸ் அமுல்படுத்தப்பட்டது.
10.பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை மற்றும் காலணிகள் வழங்கபட்டன.
எம்ஜி.ஆர்.ஆட்சி சாதனைகள் 100
எம்.ஜி.ஆரின் ஆட்சி சாதனைகள் 100 தொடர்ச்சி-
11.கரூர் அருகே புகளூரில் நாட்டிலேயே முதல் முதலாக கரும்பு சக்கையிலிருந்து காகிதம் தயாரிக்கும் தொழிற்சாலை நிறுவப்பட்டது.
12.சிறு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அளித்தார்.
13.அரிசியின் விலையை தன் ஆட்சி முழுவதும் கட்டுபாட்டில் வைத்திருந்தார்.
14.அனைத்து பொருள்களின் விலைவாசியும் கட்டுபாட்டில் இருந்தன.
15.பண்டிகை காலங்களில் கூடுதல் அரிசி நியாயவிலைக்கடைகளில வழங்கபட்டன.
16.பாரதி பாரதிதாசன் அண்ணா பெரியார் காமராஜர் பெயர்களில் பல்ககலைகழகங்கள் உருவாக்கப்பட்டன.
17.நாட்டிலேயே முதல் முறையாக அண்ணா தொழில்நுட்ப பல்கலைகழகம் சென்னையில் ஏற்படுத்தப்பட்டது.
18.முக்கியமாக தன் பெயரில் எவ்வித திட்டத்தையும் ஆரம்பிக்கவில்லை.எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைகழகம் தொடங்கப்படுவதற்கு முன்னரே மறைந்து விட்டார்.
19.தமிழ் மொழிக்கு தனியாக தஞ்சை மாநகரில் தனி பலகலைகழகம் கண்டார்.
20.மகளிருக்கென அன்னை தெரசா பெயரில் கொடைக்கானலில் தனி பல்ககைழகம் கண்டார்.
பகுதி 3 தொடர்ச்சி
21.பொறியியல் கல்வியில் பெரும் புரட்சியாக தமிழ்நாட்டில் சுயநிதி கல்லூரிகள் திறக்க அனுமதி வழங்கி அதன் மூலம் எண்ணற்ற மாணவர்கள் பொறியியல் பட்டப் படிப்பினை மேற்கொள்ள செய்தார்.இதன் மூலம்ஆசிரியர்கள் பலரும் வேலை வாய்ப்பினை பெற்றனர்.
22.ஏழை மாணவ மாணவியர் பயன் பெறும் வகையில்பொறியியல் மற்றும் மருத்துவக்கல்லூரிகளில் நுழைவுத் தேர்வினை அறிமுகப்படுத்தினார்.
23.திரையரங்குகளில் compound Tax முறையை அமல்படுத்தி திரை உலகினருக்கு உதவினார்.
24.அரசு அலுவலகங்களில் கோப்புகளில் குறிப்புகளை தமிழில் எழுதப்பணித்தார்.
25.அரசு நிர்வாகத்தில் அரசியல் குறுக்கீடுகள் இல்லாமல் பார்த்துக்கொண்டார்.
26.தமிழ் நாட்டிலேயே முதல் முறையாக மாநிலக்கட்சியினைச் சார்ந்த பாராளுமன்ற உறுபபினர்கள்(சத்தியவாணி முத்து,பாலாபழனூர்) மத்திய அமைச்சரவையில் இடம் பெறச்செய்தார்.
27.தமிழகத்தின் பல தொகுதிகளில் புதியவர்களையும் சாதரணமானவர்களையும்,அடிமட்ட தொண்டர்களையும் வேட்பாளர்களாக நிறுத்தி வெற்றிபெறச்செய்து M.L.A. M.P.ஆக்கி அழகு பார்த்தார்.
28.தமிழ் ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலையை கண்டித்து தீர்வுகள் காண முயற்சிகள் எடுத்தார்.
29.தமிழகத்துக்கு கூடுதல் அரிசி மத்திய தொகுப்பிலிருந்து வழங்க வேண்டி உண்ணாவிரதம் இருந்தார்.
30.தெலுங்கு கங்கை திட்டம் கொண்டுவந்து சென்னை நகரின் தண்ணீர் பஞ்சம் போக்கினார்.
எம்.ஜி.ஆர். ஆட்சி சாதனைகள் 100
பகுதி4
31.அண்டை மாநிலங்களான கேரளா,கர்நாடகா,ஆந்திரா முதல்வர்கள்(தேவராஜ் அர்ஸ்,குண்டுராவ்,ராமகிருஷ்ண ஹெக்டே)அனைவருடனும நல்லுறவு பூண்டு மாநிலத்திற்கு தேவையான காரியங்களை சாதித்துக்கொண்டார்.
32.தமிழக மக்களின் நல்வாழ்விற்காக மத்தியில் ஆட்சி புரிந்த மாற்று கட்சியினருடனும் சுமுக உறவு கொண்டு மக்கள் நலதிட்டங்கள் பல கொண்டுவந்தார்.
33.நாட்டிலேயே மகளிருக்காக காவல்நிலையங்களை தமிழகத்தில் முதன்முதலாக ஏற்படுத்தினார்.
34.சந்தேக கேஸ் எனும் பிரிவை குற்றவியலிலிருந்து நீக்கினார்.
35.சைக்கிளில் இருவர் செல்வதற்கு அனுமதி முதன்முதலாக வழங்கப்பட்டது.
36.விபச்சார வழக்கில் ஆணுக்கும் தண்டனை எனும் சட்டம் கொண்டு வந்து குற்றம் இருபாலருக்கும் பொதுவானது என உணர்த்தினார்.
37.தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்ற புதிய சட்ட வடிவம் கொண்டு வந்தார்.
38.ஹரிஜன் என்ற சொலலை விடுத்து ஆதி திராவிடர் என மாற்றிட சட்டம் கொண்டு வந்தார்.
39.குக்கிராமங்களில் வாழும் மக்களுக்காக மண் சாலைகளை தார் சாலைகளாக மாற்றியமைத்து எளிதான போக்குவரத்துக்கு வழி வகுத்தார்.
40.சித்த வைத்தியத்தை ஊக்குவிக்கும் பொருட்டு அதற்கென தனி வாரியம் அமைத்தார்.
எம்.ஜி.ஆர். ஆட்சி சாதனைகள் 100
பகுதி5
41.நலிந்த பிரிவு மக்களுக்காக 30 லட்சம் வீடுகள் கட்டி கொடுக்கும் திட்டத்தை அமுல்படுத்தினார்.
42.பத்தாம் வகுப்பு மற்றும் புதுமுக வகுப்பு (பி.யூ.சி) படித்தவர்களுக்காக மாதாந்திர நிவாரணம் அளிக்கும் திட்டத்தை அமுல்படுத்தினார்.
43.வணிகர்களுக்கு"ஒரு முறை வரி விதிப்பு " திட்டத்தை அமுல்படுத்தினார்.
44.கிராம கைவினைக் கலைஞர்களுக்கு இலவச தொழில் கருவிகள் வழங்கும் திட்டத்தை துவக்கினார்.
45.விபத்து மற்றும் இடர் உதவித்திட்டத்தையும் அமுல்படுத்தினார்.(இப்போதைய 108 ஆம்புலன்ஸ் திட்டத்தின் முன்னோடியே இதுதான்.இந்த தகவல் பல மாதங்களுக்குமுன் ஜூனியர் விகடன் இதழில் வெளியிடப்பட்ட செய்தியாகும்.)
46.நெசவாளர்,தீப்பெட்டி தொழிலாளர்,பனை ஏறும் தொழிலாளர் இவர்களுக்கான விபத்து நிவாரணத்திட்டத்தை அமுல்படுத்தி பின்னர அதனை விரிவு படுத்தினார்.
47.மீனவர்களுக்கும் நெசவாளர்களுக்கும் சிறப்பு வீட்டு வசதி திட்டம் ஏற்படுத்தினார்.
48.கட்டிட தொழிலாளர் கிராமக் கைவினைஞர் கை வண்டி இழுப்போர் சுமை ஏற்றி இறக்கும் தொழிலாளர் போன்றவர்களுக்கு ஆயுள் காப்புறுதியும் பணி ஓய்வு பலன்கள் கிட்டவும் திட்டம் துவக்கினார்.
49.காவலர்களுக்கு தனி வீட்டு கழகம் அமைத்து அவர்களுக்கு மலிவு விலையில் பொருள்கள் வழங்கும் திட்டத்தையும் துவக்கினார்.
50.உலக வங்கி உதவியுடன்விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கும் பயிற்சி வழங்கும் திட்டத்தை துவக்கினா
ர்.
எம்.ஜி.ஆர். ஆட்சி சாதனைகள்100
பகுதி6
51.ஆதரவற்ற பெண்களுக்கு திருமண உதவித்திட்டத்தின்கீழ் ரூபாய் 10000வழங்க உத்தரவிட்டார்
52.விதவை மறுமணத்திட்டத்தின் கீழ் தம்பதியர்களுக்கு ரூ.5300 வழங்க உத்தரவிட்டார்.
53.கலப்பு திருமணத்தை ஊக்குவிக்கும் பொருட்டு தாழ்த்தப்பட்டோரை மற்ற இனத்தவர்கள் மணம் புரிந்து கொண்டால் தலா ரூ.4300 வழங்க உத்தரவிடப்பட்டது.
54.10000 ஏழை தாய்மார்களுக்கு தையல் இயந்திரங்கள் இலவசமாக வழங்க உத்தரவிடப்பட்டது.
55.மதுரை மாநகரில்ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு நடத்தி தமிழறிஞர்களை கவுரவப்படுத்தினார்.
56.நக்சலைட்டுகளை அறவே ஒழித்து தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழச்செய்தார்.
57.Encounters இல்லாமல்தமிழகத்தில் ரவுடியிசம் முற்றிலும் ஒழிக்கப்பட்டு சட்டம் ஒழுங்கை நிலைநாட்டினார்.
58.புதிய தொழிற்கொள்கையை ஏற்படுத்தி அன்னிய முதலீடுகளுக்கு அடிகோலினார்.
59.தமிழறிஞர்கள் திரைப்பட கலைஞர்கள் மற்றும் நாடக கலைஞர்களுக்கு கலைமாமணி விருது தொடர்ந்து வழங்கிடச்செய்தார்.
60.ஆஸ்தான அரசவைக் கவிஞர் பதவி நாமக்கல் கவிஞருக்குப்பிறகு நீண்ட காலம் கொடுக்கப்படாமல் இருந்து வந்தது.கருத்து வேறுபாடுகள் இருந்த போதிலும் தகுதியான ஒருவருக்கு அப்பதவி வழங்கப்படவேண்டும் என கருதி கவிஞர் கண்ணதாசனுக்கு அரசவைக் கவிஞர் பதவி வழங்கி ஒரு அமைச்சருக்குரிய சலுகைகளையும் அளித்து அழகு பார்த்தார்.
எம்.ஜி.ஆர். ஆட்சி சாதனைகள் 100
பகுதி7
61.சென்னை பெருநகர வளர்ச்சி திட்டத்தின் கீழ் wholesale steel market ஐ மிகப்பெரிய அளவில்திருவொற்றியூரை அடுத்துள்ள சாத்தங்காடு என்ற இடத்தில் நிறுவினார்.
62.ஆசியாவிலேயே பெரிய அங்காடி கோயம்பேட்டில நிறுவிட திட்டம் தீட்டி செயல்படுத்த முனைந்தார்.
63.சென்னையில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனை நவீன கருவிகளுடன் புதிய கட்டிடம் கட்டிட ஏற்பாடு செய்தார்.
64.தமிழகமெங்கும் கிராம மக்களின் வசதிக்காக அதிக எண்ணிக்கையில் சுகாதார மையங்கள் அமைத்தார்.
65.சென்னை கோட்டுர்புரத்தில் வெள்ளம் சூழ்ந்தபோது முழங்கால் அளவு நீரில் அதிகாரிகளுடன் பார்வையிட்டு மக்களின் குறைகளை கேட்டறிந்து அவற்றை சரி செய்ய உத்தரவிட்டார்.பொதுமக்களை நேரடியாக சந்தித்த முதல்வர் என இபபோதும் போற்றப்படுகிறார்.
66.சென்னை திருவல்லிக்கேணியில் அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயிலின் குளத்தை பக்தர்களின் கோரிக்கையை ஏற்று சுத்தம் செய்து நீண்ட நாட்களாக நடைபெறாமல் இருந் தேரோட்டத்தை நடைபெறச்செய்தார்.
67.முறையான நிர்வாகமில்லாமல் நன்கு பராமரிக்கப்படாமல் பாழடைந்த புராதன கோயில்களை இந்து அறநிலையத்துறையின்கீழ் கொண்டுவந்து அவைகளை சீரமைத்தார்.
68.நாட்டின் முன்னேற்றத்திற்காக அன்றைய பிரதமர் இந்திரா காந்தி நடைமுறைபடுத்திய இருபது அம்ச திட்டத்தின் கீழ் ஒரு அம்சமான கொத்தடிமை ஒழிப்புத் திட்டத்தை முழுயைாக செயல்படுத்தினார்.
69.அறிஞர் அண்ணாவன் பவள விழா மூதறிஞர் இராஜாஜி எழுச்சி கவிஞர் பாரதியார் மற்றும் புரட்சி கவிஞர் பாரதிதாசன் பகுத்தறிவுப்பகவலன் பெரியார் ஆகியோரின் நூற்றாண்டுவிழாவினை தமிழக அரசு சார்பில் கொண்டாடி சிறப்பு செய்தார்.
70.அரசு விழாக்களில் ஆடம்பரத்தை தவீர்த்து சிக்கனத்தைக் கடைபிடித்தார்.
எம்.ஜி.ஆர் சாதனைகள்100
பகுதி8
71.தமிழக அரசின் சார்பில் அளித்த முதல்வருக்குரிய வாகன வசதியை தவிர்த்து சொந்த காரிலேயே பயணித்து அனைவருக்கும் முன்னோடியாய் விளங்கினார்.
72.1977 முதல் 1983 வரைபெரிய மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் 449 தமிழகத்தில் அமைக்கப்பட்டன.இவற்றின் மொத்த மூலதனம் ரூ850 கோடி ஆகும்.
73.தொழிலாளர நலவாரியம் மூலம் தொழிறசாலைகளில் தொழில் அமைதி நிலவ தனி அக்கறை எடுத்து கிளர்ச்சி வேலைநிறுத்தங்கள் இன்றி உற்பத்தி திறன் பாதிக்கப்படாவண்ணம் செயலாற்றினார்.
74.சென்னை புறநகரில் TAMIN என்றழைக்கப்படும் தமிழ்நாடு மினரல்ஸ் தொழிற்சாலையை நிறுவினார்.1979ல் தமிழகத்தின தொழில் வளர்ச்சி 5.2சதவீதத்திலிருந்து 1982ல் 12.1சதவீதமாய் உயர்ந்தது.
75.இது தவிர மத்திய அரசின் நிதி உதவி நிறுவனங்களிடமிருந்து கடன் உதவி பெறுவதில் தமிழகம் இந்தியாவிலேயே 3ஆவது இடத்தைப பிடித்தது.
76.1977-78ல் தமிழகத்தில் 2124 மெகாவாட்டாக இருந்த மின்உற்பத்தி 1983-84 ஆம் வருடத்தில்3344 மெகாவாட்டாக உயர்ந்தது.
77.20000 இளைஞர்களுக்கு சுயதொழில் தொடங்க நிதி உதவி அளிக்க உத்தரவிட்டார்.
78.கடுமையான வெள்ளத்தின்போது ரேஷன் கடைகளில் அரிசி விலையை ரூ1.75ஆக குறைக்க உத்தரவிட்டார்.
79.அரசு அலுவலகங்களில் வருகைப்பதிவேட்டில் தமிழில் கையொப்பமிட ஆணை பிறப்பித்தார்.
80.பெயர் பலகை விளம்பர பலகைகளில் முதலில் தமிழில் எழுதப்படவேண்டும் என உத்தரவிட்டார்.
எம்.ஜி.ஆர். ஆட்சி சாதனைகள் 100
பகுதி 9
81.தமிழ் சான்றோரகளின் பிறந்த நாள் மற்றும் நூற்றாண்டு விழாக்கள் சிறப்பாக கொண்டாட வழிவகுத்தார்.
82.வறுமையில் வாடும் தமிழறிஞர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கிட ஏற்பாடு செய்தார்.
83.திருக்குறள் நெறி பரப்பிடும் வகையில் குறள் நெறி பரப்பு மையத்தை உருவாக்கினார்.அதற்கு திருக்குறள் முனுசாமி என்ற அறிஞரை தலைவராக நியமித்தார்.திருவள்ளுவர்
திருநாளன்று சிறந்த அறிஞர்களுக்கு திருக்குறள் விருது வழங்க ஏற்பாடு செய்தார்.
84.தமிழகத்தின் பழங்கலைகளைப் பாதுகாக்க பழங்கலை இயக்ககம் ஒன்றை உருவாக்கினார்.
85.சிறந்த எழுத்தாளருக்கு பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில் திரு.வி.க..விருது வழங்க ஏற்பாடு செய்தார்.
86.மதுரையில் சங்கப் புலவர்களை கௌரவிக்க நினைவுத்தூண் ஒன்று நிறுவினார்.
87.மேலும் அதே மதுரை மா நகரில் தமிழன்னை சிலையையும் நிறுவினார்.
88.காவலர்கள் சீருடையில மாற்றங்கள் கொண்டு வந்தார்.
89.சென்னை வெப்பேரியில் கால்நடை மருத்துவ பல்கலை கழகம் நிறுவ அடித்தளமிட்டார்.
90.பல்வேறு புதிய அரசுக் கட்டிடங்களை தானே திறக்காமல் தன் தலைமையில் நடைபெற்ற விழாக்களில் எளிய மேஸ்திரிகளைக் கொண்டு திறக்கச் செய்து எளியவர்களையும் கௌரவித்தார்.
எம்.ஜி.ஆரின ஆட்சி சாதனைகள்100
நிறைவுப்பகுதி 10
91.திருச்சிக்கும் தஞ்சைக்கும் இடையே புதிய தலைநகரை உருவாக்க தீர்மானித்து அதற்கான வேலைகளை தொடங்குமுன்னர் எப்போதும் முட்டுகட்டை போடும் சில தலைவர்களின் போராட்டம் காரணமாக அவருடைய மனதுக்குகந்த முடிவை தள்ளி போடவேண்டியதாயிற்று.பின்னர் அவரின் உடல்நலக்குறைவால் திட்டம் நடைபெறவில்லை.இன்றும் பல கருத்தாய்வளர்களால் அத்திட்டம் மட்டு்ம் நிறைவேவறியிருந்தால் தமிழ்நாட்டின் பொருளாதாரம் மேம்பட்டிருக்கும் என கருதப்படுகிறது.
92.மற்றொரு அவரது முடிவாக பொருளாதார ரீதியாக இட ஒதுக்கிடு அமுல்படுத்தப்பட்டது.இதுவும் அவரது எதிர்ப்பாளர்களால் முடக்கப்பட்டது.அதன் காரணமாக இட ஒதுக்கீடு பெறும் சமூகங்களில் பொருளாதாரத்தில் மிக பின்தங்கிய மக்களுக்கு கடைக்க வேண்டிய சலுகைகள் பெற முடியாமற போயிற்று.
93.சத்துணவுத்திட்டம் இந்தியாவுக்கும் முன்னோடீத்திட்டமாக இன்று உள்ளது.ஐ.நா.வின் நிறுவனங்கள் சத்துணவால் குழந்தைகளுக்கு பல பிணிகள் நீங்கியுள்ளதை ஆவணப்படுத்தி உள்ளன.
94.பூரண மது விலக்கு 1977 முதல் 1980 வரைஅமுல்படுத்தினார்.அதன் பிறகு அமுல் படுத்த முடியாமைக்கு பல அரசியல் காரணங்கள் உள்ளன.
95.பெண்களுக்கென பேரூந்துகள் அவரது ஆட்சியில்தான் முதன்முதலாக இயக்கப்பட்டன.
96.சுற்றுலாத்துறை மேம்பட பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
97.குடிசைகளுக்கு வீட்டுக்கொரு மின்விளக்கு திட்டத்தினை அமுல்படுத்தினார்.
98.மின்சாரத்தேவையை மனதில் கொண்டு குந்தா போன்ற நீர் மின்நிலையங்களை அமைத்தார்.காற்றாலைகள் அமைத்திட அரசு உதவி அளித்தார்.
99.தமிழக மக்களின் நலனை மனதிற்கொண்டு மத்தியில் அமையும் மாற்று கட்சிஅரசுடனும் சுமுக உறவு கொண்டு தமிழகத்திற்கு தேவையான நலத்திட்டங்களை கொண்டுவர ஏற்பாடு செய்தார்.
100.பள்ளி குழந்தைகளுக்கு இலவச சீருடை வழங்கிட அன்றைய பிரதமர் ராஜிவிடம் உதவி வேண்டினார்.முதலில் மறுத்த ராஜிவ் பின்னர் எம்.ஜி.ஆரின் மீதுள்ள அன்பின் காரணமாக சம்மதித்தார்.இத்திட்டங்களையெல்லாம் தேர்தல் வாக்குறுதிகளில் சொல்லவில்லை.எம்.ஜி.ஆர் சொன்னதை செய்தார்.சொல்லாததையும் செய்தார்.முக்கியமாக செய்ததை சொல்ல மாட்டார்
வாழ்க எம்.ஜி.ஆர் புகழ்.
அவரது மனித நேயத்தைப் போற்றுவோம்.
அடுத்து எம்.ஜி.ஆரின் திரைப்பட சாதனைகள் 100 -தொடரும்.
நன்றி:அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நலச்சங்கம் ,தமிழ்நாடு மற்றும் தி இந்து(தமிழ்).........
-
1963 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர்., நடிப்பில வெளியாகி 100 நாட்கள் ஓடிய வெற்றிப்படம் பரிசு. இப்படத்தின சில காட்சிகள் தேக்கடியில் படமாக்கிக் கொண்டிருந்த நேரத்தில் 30 வயது மதிக்கதக்க ஒரு பெண் திடீரென ஓடிவந்து எம்.ஜி.ஆரின் காலில் விழுந்தார் அவரது இரண்டு பெண் குழந்தைகளும் அருகில் நின்றன. அவரை எழுந்திருக்க சொன்ன எம்.ஜி.ஆர்., என்ன விஷயம் என்று விசாரித்தார். அந்தப் பெண், ‛‛தன் கணவருக்கு குடிப்பழக்கம் இருப்பதாகவும் வனத்துறையில் வேலை பார்த்து வந்த தன் கணவர் சரிவர வேலைக்கு போகாமல் ஒரு நாள் குடித்துவிட்டு வரும்போது காட்டு யானை தாக்கி என் கணவர் இறந்துவிட்டார். அரசு நிர்வாகம் நஷ்ட ஈடோ கருணை தொகையோ தரவில்லை எங்களை காப்பாற்ற வேண்டும்'' என்று எம்.ஜி.ஆரிடம் முறையிட்டார்.
இளகிய மனம் படைத்த எம்.ஜி.ஆர், ‛‛அழாதே உன் கணவர் பணியாற்றிய வனத்துறையில் உனக்கு தெரிந்த அதிகாரி யாராவது இருந்தால் நான் கூப்பிடுவதாக சொல்லி நாளை அழைத்து வா, மேலும் உன் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் இருந்து டீச்சர் ஒருவரையும் அழைத்து வா என்று சொல்லி அனுப்பினார். அதேபோல வனத்துறை அதிகாரி ஒருவரையும் தன் பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் இருந்து டீச்சர் ஒருவரையும் மறுநாள் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு அழைக்து வந்தார் அந்தப் பெண். அந்தப் பெண் அதிர்ஷ்டமோ என்னவோ அந்த வனத்துறை அதிகாரி எம்.ஜி.ஆரின் ரசிகர். எம்.ஜி.ஆரை நேரில் பார்த்த மகிழ்ச்சியில் இருநத அவரை எம்.ஜி.ஆர் விசாரித்து விபரம் அறிந்த பின் இப்போது இவர்கள் நிலைமை ரொம்ப பரிதாபமாக உள்ளது உங்கள் அலுவலக விதிமுறைகளின்படி இவர்களுக்கு அதிகபட்சமாக என்ன உதவி செய்ய முடியுமோ அதை செய்ய நடவடிக்கை எடுங்கள்.
இது சம்பந்தமாக உயர் அதிகாரி யாரிடமாவது பேசவேண்டுமென்றால் நானே பேசுகின்றேன் என்றார். மேலும் இப்போது குடிசையில் தங்கும் இவர்கள் கவுரவமாக தங்கும்; வகையில் வாடகைக்கு ஒரு சிறிய வீட்டையும் அந்தப்பெண்ணிற்கு ஒரு வேலையையும் வாங்கித்தர அந்த அதிகாரியிடம் கேடடார். எம்.ஜி.ஆரே கேட்கும் போது அவரது ரசிகரான அந்த அதிகாரி மறுப்பாரா என்ன? இரண்டுக்கும் ஒப்புக்கொண்ட அந்த அதிகாரி தனக்கு தெரிந்த வீட்டில் அந்த பெண்ணிற்கு வீட்டு வேலை செய்ய சேர்து விடுவதாகவும் கூறினார்.
பின்னர் அந்தப்பெண்ணின் பிள்ளைகள் படிக்கும் பள்ளியின் டீச்சரை அழைத்து எஸ்எஸ்எல்சி வரை இந்த பிள்ளைகள் படிப்பதற்கான செலவுகளை கேட்டறிந்தார். படத்தின் தயாரிப்பாளரான கொட்டாரக்கராவிடம் பேசி கணிசமான ஒரு தொகையை வாங்கி அதை தனது சம்பளத்தில் கழித்துக் கொள்ளும்படி கூறிவிட்டு அந்த தொகையை அப்படியே அந்த பெண்ணிடம் கொடுத்தார் எம் ஜி ஆர். ஒரு வாரம் கழித்து மீண்டும் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு வந்தார் அந்த வனத்துறை அதிகாரி. உயர் அதிகாரிகளிடம் பேசிவிட்டதாகவும் அரசு மூலம் அந்த பெண்ணிற்கு நஷ்ட ஈடாக ரூ.27 ஆயிரம் கிடைக்கும் என்றும் இன்னும் ஒரு மாதத்தில் அந்தப்பணம் கிடைத்துவிடும் என்றும் கூறினார். இதை கேட்ட எம்ஜிஆருக்கு மிகுந்த மகிழ்ச்சி. 1963 ஆம் ஆண்டில் ரூ.27 ஆயிரம் என்பது மிகப்பெரிய தொகை..
- ஆரூர்தாஸ் , தினத்தந்தியில்...
-
1968 ஜன 11 என்றதும் நமக்கு ஞாபகத்துக்கு வருவது "ரகசிய போலீஸ் 115" தான். மிகுந்த எதிர்பார்ப்போடு பத்மினி பிக்சர்ஸின் தயாரிப்பில் வெளிவந்த தலைவர் நடித்த மூன்றாவது மாபெரும் வெற்றிப் படம்தான் "ரகசிய போலீஸ் 115". "காவல்காரன்" "விவசாயி" ஆகிய படங்களின் மாபெரும் வெற்றிக்குப்பின் வந்த படம்.
படத்தின் வால்போஸ்டரை பார்க்கவே தியேட்டரின் வாசலில் மாபெரும் கூட்டம் தினசரி வந்து போனது. தலைவரின் ரசிகர்கள் சினிமாவில் தீவிரமாக இருந்த போது வந்து வசூலை வாரி குவித்த படம். தூத்துக்குடியில் ப்ளாக்டிக்கெட் கொடி கட்டி பறந்தது இந்தப்படத்திலிருந்துதான். தியேட்டர் நிர்வாகமே ப்ளாக்கில் டிக்கெட் விற்க தொடங்கிய நேரம்.
ஒரு காட்சிக்கு சுமார் 1000 டிக்கெட்கள் கொடுப்பார்கள். அதில் 300 டிக்கெட்டை தவிர மீதி அனைத்தையும் ப்ளாக் டிக்கெட் விற்பனையாளர் மந்திரம் என்பவருக்கு கமிஷன் அடிப்படையில் கொடுத்து விடுவார்கள். ஒரு டிக்கெட்டுக்கு 50 பைசா கமிஷன் கொடுப்பார்கள்.
மந்திரத்திடம் ஒரு 10 பேர் வேலை
பார்ப்பார்கள். தியேட்டர் நிர்வாகத்திடம் பெற்ற டிக்கெட்டை இவர்கள் ப்ளாக்கில் விற்று கமிஷனை எடுத்துக்கொண்டு மீதத்தை தியேட்டர் நிர்வாகத்திடம் ஒப்படைத்து விட வேண்டும்.
ஒரு டிக்கெட் 5ரூ என்று விற்பனை நடக்கும். டிக்கெட் ஸ்டாக் குறைய குறைய ரேட் கூடிக்கொண்டே போகும். "ரகசிய போலீஸு"க்கு ஒரு டிக்கெட் அதிகபட்சமாக ரூ 20 வரை விற்கப்பட்டது. ஒரு டிக்கெட் 5ரூ என்றால் 700 டிக்கெட் சுமார் 3500 ரூ வரை கிடைக்கும். ஹவுஸ்புல் ஆனால் கூட ரூ 800 க்கு மேல் கிடைக்காது.
இதில் கமிஷன் மற்ற செலவுகள் போக ஒரு காட்சிக்கு குறைந்த பட்சம் ரூ3000 வரை பார்ப்பார்கள்.
படம் திரையிடப்பட்ட முதல் 6 நாட்கள் குறைந்த பட்சம் 4 காட்சிகளும் அதற்கு மேலும் நடைபெற்றது. ஒரு நாள் ப்ளாக் டிக்கெட் வருமானம் 12000ரூ. அப்படியானால் 6 நாட்களுக்கு ப்ளாக் டிக்கெட் வருமானம் ரூ72000. இந்த வருமானத்தின் பெரும்பகுதி தியேட்டர் ஓனருக்கும் அதில் சிறு பகுதி விநியோகஸ்தர் ரெப்புக்கும்
கிடைக்கும். இது முதல் 6 நாட்கள் மட்டும் மீண்டும் தொடர்ச்சியாக டிக்கெட் ப்ளாக்கில் கூட்டத்தின் அடிப்படையில் ரேட் நிர்ணயம் பண்ணி விற்பார்கள்.
இந்த லாபமானது திருநெல்வேலியில் படம் 100 நாட்கள் ஓடினால் கூட தியேட்டர் ஷேர் இவ்வளவு கிடைக்காது. மதுரை தங்கத்தில் கூட முதல்வார வசூல் அதிக பட்சமாக சுமார் 50000ரூ தாண்டும். இந்தப்பணத்தை தியேட்டர் நிர்வாகம் பங்குத்தொகையாக பெற சுமார் 5 வாரங்கள் முதல் 50 நாட்கள் வரை ஆகும். ஆனால் தூத்துக்குடியில் இவ்வளவு லாபம் அடைந்தாலும் தியேட்டரின் எந்தவித அடிப்படை வசதி, கழிவறை உட்பட, படுமோசமாக இருக்கும்.
இந்த லாபத்தில் கணிசமான பகுதி கமர்ஷியல் டாக்ஸ் அதிகாரிகளுக்கு போய் விடும். தியேட்டரில் எந்த செக்கிங்கும் இருக்காது. யார் என்ன புகார் கொடுத்தாலும் வரி அதிகாரிகள் கண்டு கொள்ள மாட்டார்கள். வெளியூரிலிருந்து அதிகாரிகள் ரெய்டு வரும் போது உள்ளூர் கைக்கூலி அதிகாரிகள் முன்னமே சொல்லி விடுவார்கள்.
அன்றைய தினம் ஒரு காட்சி மட்டும் டிக்கெட் முறையாக கொடுப்பார்கள்.
இப்படி கறுப்பு பணத்தில் திளைத்த தூத்துக்குடி தியேட்டர்காரர்கள் இன்று ஏதோ ஒரு டப்பிங் படத்தின் வால்போஸ்டரை ஒட்டிக் கொண்டு ஒரு 10 பேராவது வர மாட்டார்களா என்று ஏக்கத்தோடு பார்ப்பதும் அப்படி வரவில்லையென்றால் காட்சியை ரத்து செய்து விட்டு ஓய்வும் எடுத்துக் கொள்வதை பார்த்தால் தெய்வம் தண்டனையை மிகுந்த கால தாமதாக்கி கொடுப்பதை பார்க்கிறோம்.
"ரகசிய போலீஸி"ன் முதல் 11 நாள் வசூல் அதுவரை வந்த எந்த படமும் பெறவில்லை என்பதை விநியோகஸ்தர்கள் அடித்து கூறினார்கள். தூத்துக்குடியில் முதன்முதலாக 30 நாட்களை தாண்டி 33 நாட்கள் வரை பகல் காட்சி நடைபெற்ற படம். 53 நாட்கள் ஓடி வசூல் 50000 ரூ தாண்டி பெற்ற படம். அதுவரை எந்த படமும் இந்த சாதனையை செய்யவில்லை. மதுரையில் 92 நாட்களில் பெற்ற வசூல் அதுவரை எந்த நடிகரின் படங்களும் பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் மொத்தம் 26 திரையரங்குகளில் 50 நாட்களை தாண்டி அசுரவெற்றியை பெற்ற படம். பிப் 23ல் வந்த 'தேர்த்திருவிழா" மற்றும் மார்ச் 15ல் வெளியான "குடியிருந்த கோயில்" "ரகசிய போலீஸி"ன் வேகத்தை குறைத்தாலும் இன்று வரை விநியோகஸ்தர்களின் பொக்கிஷமாக கொண்டாடப் படுகிறது..........ksr.........
-
நம் இனிய மையம் இணையம் வழக்கம் போல் எளிதாக இயங்குகிறது என்ற தகவல்கள் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது... மையம் Proprietors/ Administrators எல்லோருக்கும் மனம் கனிந்த நன்றிகள்/நல்வாழ்த்துக்கள்...
-
கலைஞர் காசை வாங்கி கொன்டு சீட் கொடுப்பார் ..ஆனால் தலைவர் உண்மை தொண்டர்களுக்கு சீட் வழங்கி விட்டு ..தேர்தல் செலவுக்கு ஒரு பெருந்தொகையும் கொடுப்பாராம் ..ஏன் பணம் கொடுக்கிறிர்கள் என ஒரு கழக முன்னோடி கேட்ட போது ..நாம் அவரை தேர்தலுக்கு செலவு செய்ய விட்டால் ..அவர் வெற்றி பெற்ற பின் தான் விட்டதை பிடிக்க தனக்கு வாக்களித்த மக்களிடமே வசூல் செய்வார் ..அது மக்களை தான் பாதிக்கும் ..அதனால் நானே கொடுத்து விடுகிறேன் என கூறினாராம் ..எந்நிலையிலும் மக்கள் கஷ்டபடக்கூடாது என நினைத்த ஒரே தலைவர் நம் புரட்சித்தலைவர் தான்...gdr...
-
நடிகர் எல்லாரும் எம்ஜிஆர் ஆகமுடியாது.கட்சி ஆரம்பிச்சவர்கள் எல்லாம் எம்ஜிஆர் மாதிரி தமிழக முதல்வர் ஆக முடியாது. .........................நன்றி.. ஒன் இண்டியா தளம் ------------------சென்னை: நடிகர் ரஜினிகாந்தை அரசியலுக்கு வரக்கோரியும் கட்சி தொடங்குமாறும் வலியுறுத்தியும் அவரது ரசிகர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.
அவர் தனது உடல்நிலை குறித்து எந்தளவுக்கு விளக்கி கூற முடியுமோ அந்தளவுக்கு எடுத்துக்கூறியும் தங்கள் தலைவர் மீது பாவம் காட்டுவதாக தெரியவில்லை ரஜினி ரசிகர்கள்.
இன்று ரஜினிகாந்தை எப்படி அவரது ரசிகர்கள் கட்சி தொடங்குமாறு கூறி வருகிறார்களோ அதேபோல் தான் அன்று சிவாஜி கணேசனையும் அவரது ரசிகர்கள் வலியுறுத்தி கட்சி தொடங்க வைத்தனர்.
சிவாஜி
நடிகர் திலகம் சிவாஜிகணேசனை பொறுத்தவரை எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியவர். திமுக அனுதாபியாக தொடக்கத்தில் செயல்படத் தொடங்கிய அவர், உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை எனக் கருதி தன்னை காங்கிரசில் இணைத்துக் கொண்டார். காங்கிரஸ் கட்சியில் சிவாஜிக்கும் மூப்பனாருக்கும் இடையேயான உறவு சொல்லிகொள்ளும் வகையில் இல்லை.கோஷ்டிப்பூசல்
காங்கிரஸ் கட்சியில் இன்று உள்ள கோஷ்டிப்பூசல் அன்றும் இருந்தது. அது சிவாஜியையும் விட்டுவைக்கவில்லை. இருப்பினும் வேட்பாளர் தேர்வு தொடங்கி பிரச்சாரம் வரை பல விவகாரங்களிலும் சிவாஜியின் பங்களிப்பு இருந்து வந்தது. இதனிடையே சினிமாவை கடந்து எம்.ஜி.ஆருடன் நட்புறவு பேணி வந்த சிவாஜி அதை அரசியலிலும் தொடர்ந்தார்.இந்திரா காங்கிரஸ்
தனது நண்பர் எம்.ஜி.ஆர். மரணமடைந்த தருணத்தில் ஜானகி எம்.ஜி.ஆருக்கு இந்திரா காங்கிரஸ் உறுதுணையாக இருக்க வேண்டும் என நினைத்தார் சிவாஜி. இது தொடர்பாக ராஜீவ்காந்தியை சிவாஜி சந்தித்து பேச முயன்றும் அது முடியாமல் போனது. இதனிடையே ஜானகி தலைமையிலான அரசுக்கு இந்திரா காங்கிரஸ் ஆதரவு கொடுத்தே தீர வேண்டும் என்பதில் உறுதியாக நின்றார் சிவாஜி.
ராஜீவ்காந்தி
முரண்பட்ட முடிவு
ஆனால் ஜானகி தலைமையிலான அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார் ராஜீவ்காந்தி. தன் குரலுக்கு மதிப்பில்லாத இடத்தில் இனியும் இருந்து என்ன பயன் எனக் கருதி காங்கிரஸில் இருந்து விலகிவிட்டதாக அறிக்கை வெளியிட்டார் சிவாஜி. ஜானகி எம்.ஜி.ஆர். விவகாரத்தில் ராஜீவ்காந்தி எடுத்து முரண்பட்ட முடிவை கடுமையாக சாடினார் சிவாஜி. இனி நான் காங்கிரஸ்காரன் அல்ல இந்தியன், அதிலும் தமிழன் எனக் குறிப்பிட்டிருந்தார்.
போதுமடா சாமி
அரசியலே வேண்டாம்
போதுமடா சாமி அரசியலே வேண்டாம் என நினைத்திருந்த சிவாஜியை விடுவார்களா அவரது ரசிகர்கள். தனிக் கட்சி தொடங்க வேண்டும் என உரக்க குரல் எழுப்பத் தொடங்கினர். 'பிள்ளைகளா' அது சரிபட்டு வராது என்று எத்தனையோ முறை எடுத்துக் கூறினார். (சிவாஜி தனது ரசிகர்களை 'பிள்ளைகள்' என பாசத்துடன் அழைப்பார்.) இப்போது எப்படி ரஜினி ரசிகர்கள் ரஜினியை அரசியலுக்கு வருமாறு வற்புறுத்துகிறார்களோ அதேபோல் சிவாஜியையும் தனிக்கட்சி தொடங்குமாறு அவரது 'பிள்ளைகள்' (ரசிகர்கள்)வற்புறுத்தி அழைத்தனர்.
தமிழக முன்னேற்ற முன்னணி
வெள்ளை -சிவப்பு
பிறகு ஒருவழியாக 1988-ம் ஆண்டு தமிழக முன்னேற்ற முன்னணி என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கிய சிவாஜிகணேசன் கட்சிக் கொடியையும் வெளியிட்டார். வெள்ளை -சிவப்பு என்ற இருவண்ணக் கொடியை அறிமுகப்படுத்தி வெள்ளை நிறம் தூய்மையையும், சமாதானத்தையும் வெளிப்படுத்துவதாகவும் சிவப்பு நிறம் தியாகத்தையும், உழைப்பையும் வெளிப்படுத்துவதாகவும் கூறினார். (கிட்டதட்ட இப்போது மக்கள் நீதி மய்யம் கட்சிக் கொடி இருக்கிறதே அதே போல்)
ரஜினி ரசிகர்கள்
சிவாஜி ரசிகர்கள்
இப்போது ரஜினி ரசிகர்கள் எப்படி போஸ்டர் ஒட்டுகிறார்களோ அதற்கெல்லாம் ஒரு படி மேலாக, அதுவும் முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக 'எட்டப்பனை அடக்க வந்த கட்டபொம்மன்' உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் தாங்கிய சுவரொட்டிகளை தமிழகம் முழுவதும் ஒட்டினர் சிவாஜி ரசிகர்கள். சிவாஜி கட்சியில் மேஜர் சுந்தர்ராஜன் தொடங்கி இன்னும் பல அந்தக் கால நடிகர்கள் இணைந்தனர்.
1989 சட்டமன்றத் தேர்தல்
ரஜினியும் கமலும்
1989 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஜானகி அனியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது சிவாஜிகணேசனின் தமிழக முன்னேற்ற முன்னணி. அந்த தேர்தலில் 49 இடங்களில் சிவாஜி கணேசன் கட்சி போட்டியிட்டது. தஞ்சை மாவட்டம் திருவையாறு தொகுதியில் சிவாஜி களம் கண்டார். அவருக்கு ஆதரவாக ரஜினியும் கமலும் பிரச்சாரம் செய்யவிருந்து அந்த திட்டத்தை திடீரென கைவிட்டனர். இதனிடையே சிவாஜிகணேசன் உட்பட போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் அவரது கட்சி வேட்பாளர்கள் அனைவரும் தோல்வி அடைந்தனர்.
பதம் பார்த்தது
நினைவூட்டுகிறது
அதுவரை சிவாஜிகணேசன் மீதிருந்த இமேஜை அந்த தேர்தல் பதம் பார்த்தது. தேரை இழுத்து தெருவில் விட்ட கதையாக காங்கிரஸில் இருந்து விலகிய பிறகு அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்க நினைத்த சிவாஜி தனது ரசிகர்களின் வற்புறுத்தல் காரணமாக கட்சி தொடங்கி கரையேற முடியாமல் தவித்தார். இது போன்ற வரலாற்று நிகழ்வுகளை எண்ணிப்பார்த்தும், உடல்நிலையை கருத்தில் கொண்டும் அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்க விரும்பும் ரஜினிகாந்தை அவரது ரசிகர்கள் கட்சி தொடங்க வலியுறுத்துவது சிவாஜி கால அரசியலையே நினைவூட்டுகிறது. https://tamil.oneindia.com/news/chen...ml.........RRN...
-
எம்.ஜி.ஆர் என்பதற்கு என்ன பொருள்?
நாடோடி மன்னன் பட வெற்றிவிழாத் துளிகள்!
1958 ஆம் ஆண்டு.
அக்டோபர் 26 ஆம் தேதி.
மதுரையில் எம்.ஜி.ஆர் இயக்கி நடித்த 'நாடோடி மன்னன்' படத்திற்கு தங்கவாள் பரிசளிப்பு விழா. விழாவுக்கான ஏற்பாட்டைச் செய்தவர் அன்றைய தி.மு.க. மாவட்டச் செயலாளராக இருந்தவரான மதுரை எஸ்.முத்து.
மதுரை ரயில் நிலையத்திலிருந்து நான்கு குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் பெரும் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார் எம்.ஜி.ஆர்.
மூன்றடி நீளமுள்ள தங்கவாளை எம்.ஜி.ஆருக்கு மேடையில் அளித்துப் பாராட்டியவர் நாவலர் நெடுஞ்செழியன்.
விழாவில் பேசிய இலட்சிய நடிகரான எஸ்.எஸ்.ராஜேந்திரன், “இந்தத் தங்க வாள் அண்ணனுக்கு மட்டும் அளித்த பரிசாகாது. திரையுலக நடிகர்கள் அத்துணை பேருக்கும் அளித்த பரிசாகும்.
திரைப்பட நடிகர் ஒருவருக்கு தங்கவாள் அளிப்பது வரலாற்றிலேயே இது தான் முதல் தடவை.
நாட்டைப் பற்றியும், மொழியைப் பற்றியுமே கவலைப்பட்டு, நாட்டிற்காகத் தன்னுடைய வாழ்நாளின் பெரும் பகுதியைச் செலவிட்ட நடிகருக்குத் தங்கவாள் பரிசளிப்பு மட்டும் போதாது என்று கருதுகிறேன்” என்றார்.
தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகரான டி.எஸ்.துரைராஜ் விழாவில் பேசுகிறபோது சொன்னார்.
‘நாடோடி மன்னன்’ போல் முன்னாளைய அரசர்கள் ஆட்சி செய்திருந்தால் அவர்கள் தங்கள் இராஜ்யங்களை இழந்திருக்க மாட்டார்கள். முன்பு கலைவாணர் என்.எஸ்.கே அவர்கள் “நாட்டுக்குச் சேவை செய்ய நாகரிகக் கோமாளி வந்தானய்யா” எனப் பாடி வந்தார்.
இப்போது எம்.ஜி.ஆர் அவர்கள் “நாட்டுக்குச் சேவை செய்ய நாடோடி மன்னன் வந்தாரய்யா” என வந்திருக்கிறார்.
‘எம்’ என்பது ‘மேன்’ (Man) என்ற ஆங்கிலச் சொல்லின் முதல் எழுத்து;
தங்கத்திற்கு (Gold) ஆங்கிலத்தில் முதல் எழுத்து ‘ஜி’.
‘தங்கமான மனிதர் ராமச்சந்திரன்’ - என்பது தான் ‘எம்.ஜி.ஆர்’ என்பதற்குப் பொருள்.
அவர் நீடுவாழ்ந்து, நாடு செழிக்க, நாம் செழிக்க உதவுவார் என வாழ்த்துகிறேன்”.........VRH
-
மீண்டும் எம்.ஜி.ஆர்!!
-----------------------------
எம்.ஜி.ஆர்!!
இந்தத் தலைப்பில் எம்.ஜி.ஆர் இருட்டடிப்பு செய்யப்படுவதை நேற்று வேதனையுடன் விவரித்திருந்தோம்!
மீண்டும் எம்.ஜி.ஆர்,,கட்சிக்குத் தலைமை தாங்க வருகிறார் என்ற தலையாய மகிழ்ச்சியைக் கொண்டாடுவதே இந்தப் பதிவின் சாரம்!
நொந்ததை சொல்லித் துயர் பட்ட நாம்,, நமக்கு ஜேசிடி தந்ததை--அவர் வென்று வந்ததை இங்கே விவரிக்கப் போகிறோம்!
அண்ணன் ஜேசிடி ஒன்றும் சாதாரண நிர்வாகி கிடையாது!
தேர்தல் வழிக்காட்டு குழு உறுப்பினர்--
கட்சிப் பணி மற்றும் தேர்தல் மண்டல பொறுப்பாளர்--
கழக அமைப்புச் செயலாளர்!--இப்படி--
முக்கியப் பொறுப்புகளை வகித்துக் கொண்டு
எம்.ஜி.ஆர் புகழ் என்னும் முத்துக் குளிப்பவர்
கட்சியின் தலைமைக் கழகத்துக்கு--அம்மா மாளிகை என்று பெயர் சூட்டலாமா என்று அன்று துர் மார்க்கக் கட்சிப் பொறுப்பாளர்கள் அனைவரும் கறுப்பாக சிந்தித்த போது பொங்கி எழுந்தவர் ஜே.சி.டி ஒருவரே!
முக்கியமாக,,ஆர்/பி/உதயகுமாரை நோக்கி அவர் அன்று எய்த கணைகளும்--அக்னியாய் பெய்த மழையும் கொஞ்சமன்று!
அம்மா,,அம்மா அம்மா--
எதற்கெடுத்தாலும் அம்மா என்றால் எப்படி?
அம்மாவுக்கு அவர் இல்லத்தை நினைவில்லம் ஆக்குகிறோம்! மெரீனாவில் அவர் நினைவிடத்தைப் பெரிதாகக் கட்டப் போகிறோம்!
இன்னம் பல அம்மாவுக்காகவே செய்யப் போகிறோம்!
கட்சி அலுவலகத்தை நமக்கு தம் சொந்த சொத்தை தானமாகக் கொடுத்த ஜானகி அம்மையாருக்கு இதுவரை என்ன செய்திருக்கிறோம்?
அன்றையக் கால கட்டத்தில் அம்மாவைக் குஷிப்படுத்த வேண்டுமென்று தவறான வழியில் சென்ற நாம்,,நம்மைத் திருத்திக் கொள்ள வேண்டாமா?
இப்போது அம்மா அன்பு மாளிகை என்றுப் பெயர் மாற்றம் செய்யும் வீண் வேலை எதற்கு?
இப்படி ஜே.சி.டி,,அந்த செயற்குழுவில் பொங்கி எழுந்ததைப் பார்த்த அனைவருமே அரண்டு தான் போனார்கள்!
அன்று அவர் ஒருவராக அந்தப் பெயர் மாற்றத்தை தடுத்து நிறுத்தினார்!
அங்கேப் பேசியதை விட அண்மையில் அவர் ஆற்றிய உரையைக் கேட்போமா?
அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்றத்து செயற்குழுவில் அவர் தெளித்த அக்கினி திராவகத் துளிகள்--
கடந்த காலக் கட்சி வரலாறை எடுத்துக் கொண்டால்--எம்.ஜி.ஆரை எப்போதெல்லாம் நாம் புறக்கணித்தோமோ--அப்போதெல்லாம் கழகம் மோசமான தோல்வியைத் தான் சந்தித்திருக்கிறது!
தீய சக்தியின் திசைப் பக்கம் ஒட்டு மொத்த மக்களையும் திரும்ப விடாமல் செய்த எம்.ஜி.ஆரின் மேஜிக்கை அதற்குப் பின்னர் கழகத்தால் செய்யவே முடியவில்லை!
அம்மாவை மட்டுமே இனி நாம் உச்சரிப்பதில் பயன் இல்லை. எம்.ஜி.ஆரை மீண்டும் கொண்டு வராமல் நமக்கு8 வெற்றியும் இல்லை!
தேர்தல் சமயத்தில் மட்டுமல்லாது,,இனி கழகத்தின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தலைவரே முன்னிலை வகிப்பார்!
மீண்டும் ஒரு 1977ஐக் கொண்டு வரக் கழகத்தில் நான் பாடுபடுவது மட்டுமன்றி செயலாக்கம் காணவும் பாடுபடுவேன்
நான் மட்டுமன்றிக் கழக முன்னணியினர் பலரும் எம்.ஜி.ஆர் என்ற் முக்கியத்துவத்தை உணர தலைப்பட்டு விட்டனர்!!!
அன்றைய அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற நிர்வாகிகள் அனைவருக்கும் ஜே.சி.டியின் துணிச்சலான--நியாயமான உரை ,,புதியதொரு எழுச்சியைத் தந்தது என்பதோடு--
அளவற்ற சந்தோஷ மிகுதியால் அவர்கள் அனைவரின் வாய்களும் குழறிற்று என்பதே உண்மை!
ஏன் நமக்கும் தானே
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத எம்.ஜி.ஆர் என
சங்கே முழங்கு!!!!...vtr...
-
கடல் கடந்து ஒன்றும் இல்லாமல் வந்த எம் ஜி ஆர் இந்தியாவில் எவரும் பெறாத பட்டங்கள் சாதனைகளை அடைந்தார்
தன் தொழிலில் முதல் தேசிய விருது மலைகள்ளனுக்கு பெற்றார் எம் ஜி ஆர்
தானே தயாரித்து இயக்கிய நாடோடி மன்னனுக்கு அரசு விருது பெற்றார் எம் ஜி ஆர்
தன் சொந்த தயாரிப்பு அடிமை பெண்ணிர்க்காக பிலிம்பெர் பரிசு பெற்றார் எம் ஜி ஆர்
பலபடங்களுக்கு அரசு விருது பெற்றார் எம் ஜி ஆர்
ரிக்ஷாகாரனுக்கு பாரத் விருதை பெற்றார் எம் ஜி ஆர்
லண்டனில் வெளியிட்ட நூற்றாண்டு சினிமா நூலில் இந்தியாவை சேர்ந்த மூவர் இடம் பெற அதில் ஒருவர் எம் ஜி ஆர்
இந்திய அரசு வழங்கும்
பாரத்
பத்மஸ்ரீ
பாரத்ரத்னா
என்ற மூன்று பட்டங்களையும் ஒருங்கே பெற்றவர் எம் ஜி ஆர்
எந்த முதலவருக்கும் கொடுக்காத மரியாதையாக எம் ஜி ஆருக்காக செங்கோட்டை கொடியை அரைகம்பத்தில் பறக்க விட்டு இந்தியா முழுவதும் விடுமுறை விட்டு மரியாதை செலுத்தியது எம் ஜி ஆருக்கு
மரபுகளை மீறி தலைநகரை விட்டு பிரசிடன்டு பிரதமர் முப்படை தளபதிகள் ஒருங்கே சென்னை வந்து எம் ஜி ஆருக்கு மரியாதை செய்தார்கள்
இந்திய அரசு இரு முறை எம் ஜி ஆருக்கு தபால் தலை வெளியிட்டது
நூறு ரூபா ஐந்து ரூபா எம் ஜி ஆர் நாணயம் வெளியிட்டது இந்திய அரசு
இந்திய பாராளுமன்றத்தில் எம் ஜி ஆர் சிலை நிறுவப்பட்டது
எம் ஜி ஆர் ரயில் நிலையம் இந்தியாவில் சூட்டபட்டது
இந்திய அரசின் சாரணர் படையின் வெள்ளி யானை பரிசு எம் ஜி ஆருக்கு வழங்கபட்டது
இந்திய பிரதமர் நேருஜீ இந்தியா சைனா யுத்த நிதிக்கு இந்தியாவிலே அதிக தொகையை முதல் நிதி வழங்கிய இந்தியன் எம்ஜி ஆர் என்று தன் கைபட நன்றி கடிதம் எழுதி அனுப்பினார்
இந்தியாவிலே மூன்று பிரதமர் ஒரே குடும்பத்தில் உள்ள நேருஜீ இந்திராகாந்தி ராஜீவ்காந்தி இவர்களின் நன்மதிப்பு பெற்றவர் எம் ஜி ஆர்
எந்த பதவியும் அடையாத போதே மோரீஸ் நாடு தன் சுதந்திர தின விழாவுக்கு அழைத்து அன் நாட்டு பிரதமரின் அடுத்த இருக்கை நல்கி மரியாதை செய்து சிறப்பித்தது எம் ஜி ஆரை
அமேரிரிக்கா கனடா பாரளுமன்றங்கள் எம் ஜி ஆருககு மரியாதை செய்ததது
பிரான்ஸில் சுவாமி விவேகானந்தர் பொன்மனசெம்மல் எம் ஜி ஆர் இருவர் சிலை மட்டுமே உள்ளது உலகின் பெரிய விருது ஆன நோபல் விருதிற்க்கு எம் ஜி ஆர் பெயர் சிபாரிசு செய்யபட்டது சிறப்பு
ஒரு இந்திய மனிதனும் எம் ஜி ஆர் அடைந்த மக்கள் அன்பு
அத்தனை பட்டங்களும்
பலசாதனைகளையும் தன் சொந்த முயற்சியால் மனிதநேயம் திறமை துணிச்சல்வீரம் வள்ளல் குணத்தின் துணையோடு அடைந்ததில்லைவாழ்க எம். ஜி. ஆர்., புகழ்.........arm...(பத்மஸ்ரீ தலைவர் மறுத்து விட்டார்)
-
#எம்ஜிஆர் #என்னும் #கங்கை...
தன் மேல் பாவக்கறைகள் படர்ந்தாலும் கங்கை நதியின் புனிதத்தன்மை கெட்டுப்போவதில்லை. மேலும் தன்னை அண்டும் மக்களுக்குப் புண்ணியத்தை வழங்கும் தன்மையுடையது கங்கை...
அதைப்போல ... தன்மீது மாசுகளைத் தூற்றினாலும் கறைபடாத கரங்களுக்கு சொந்தக்காரர் தான் நம் பொன்மனச்செம்மல்...
1977-80 களில் தீவிர மதுவிலக்கை எம்ஜிஆர் அமல்படுத்தி இருந்தார். தலைவரின் ஆட்சிக்கிருந்த நற்பெயரைக் கெடுக்க எதிர்க்கட்சியினரால் ஆரம்பிக்கப்பட்ட கள்ளச்சாராய வியாபார கலாச்சாரம் பெருகியது. இதை ஒழிக்கவும், அரசியல் சூழல்களாலும் தனது மனசாட்சிக்கு விரோதமாக மக்கள்திலகம் மதுவிலக்கை ரத்து செய்தார்...
இனி விஷயத்துக்கு வருகிறேன்...
சாராயக்கடைகள் திறக்கப்பட்ட வேளை... சாராயக் கம்பெனி நடத்த ஒரு குறிப்பிட்ட தொழிலதிபருக்கு முதலில் அனுமதி வழங்கப்பட்டது.
அவர் தன் ஒரு நாள் கலெக்ஷனை எடுத்துக்கொண்டு எம்ஜிஆரை சந்தித்தார். அதை கட்சி நிதியாகவோ, தனிப்பட்ட நிதியாகவோ ஏற்க வேண்டும் என்று வேண்டி நின்றார்... "அந்தப் பணத்தை கையால் கூட தொடமாட்டேன்..." என்று சொல்லிவிட்டார் எம்ஜிஆர். அந்த தொழிலதிபரும் பிடிவாதமாக இருக்க... வேறு வழியில்லாமல்,
"இந்த நிதியை சத்துணவுத் திட்டத்துக்கு அளித்து விடுங்கள்" என்று கூறிவிட்டார்...
அது முடிந்தபிறகும் பிரச்சினை ஓய்ந்ததா...? என்றால் அதுதான் இல்லை...
சோதனையாக... மறுபடியும் சில நாட்களில் பெரும் தொகையை பெட்டியில் அடுக்கிக்கொண்டு வந்தார் அந்தத் தொழிலதிபர்...
"இதையாவது நீங்கள் ஏற்றுத்தான் ஆக வேண்டும்"' என்றார். எம்ஜிஆர் மறுக்கிறார்...
இருந்தாலும் பிடிவாதமாக கட்டாயப்படுத்தி தொழிலதிபர் அங்கேயே அதை வைத்துவிட்டுச் செல்கிறார்.
எம்ஜிஆர் பார்க்கிறார்... அன்று இரவு முழுக்க அவர் தூங்கவேயில்லை. தனது அறையில் பரணில் அங்கங்கே இருந்த பழைய டைரிகள், பழைய நோட்டுகளை எடுத்து, எடுத்து அதிலிருந்து எதையோ குறிப்பெடுக்கிறார்.
விடியற்காலை 4 மணிக்கு தன் கதவைத் திறந்து உதவியாளரை அழைக்கிறார். தன் கையில் உள்ள தாள்களை நீட்டி, 'இதில் உள்ள முகவரிகளுக்கெல்லாம் போன் செய்; தந்தி அடி. அவர்களை எல்லாம் இங்கே மாலைக்குள் அவசரமாக வரச்சொல்!' என உத்தரவிடுகிறார்.
அதே போல் உதவியாளரும் செய்ய, அதில் அழைக்கப்பட்டவர்கள் எம்ஜிஆர் இல்லம் பதறியடித்து ஓடி வருகிறார்கள். அவர்களை எல்லாம் வரவேற்று உபசரிக்கிறார். தனித்தனியே அழைத்துப் பேசுகிறார்.
''நீங்க இன்ன நேரத்தில் இப்படி கஷ்டத்தில் இருந்தேன். நீங்க இன்ன உதவி செஞ்சீங்க. அதை மறக்க மாட்டேன். அதற்காக இல்லாவிட்டாலும் எனக்காக இதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இன்னும் என்ன உதவி வேணும்னாலும் எப்ப வேணும்னாலும் கேளுங்க. என்னால் முடிஞ்சதை செய்யறேன்!'' என்று சொல்லி கட்டி வைக்கப்பட்டிருந்த பொட்டலங்களை அளிக்கிறார்.
அந்தப் பொட்டலங்களில் தொழிலதிபர் வைத்து சென்ற பணமே லட்சலட்சமாக பிரித்து கொடுக்கப்பட்டிருந்தது. அதில் ஒரு பைசாவை கூட அவர் தொடவில்லை. கடைசி வரை எம்ஜிஆர் இப்படியேதான் வாழ்ந்தார்...
எனவேதான் எதிர்க்கட்சியினர் ஊழல் குற்றச்சாட்டுகள் வீசப்பட்ட போதெல்லாம், ''நான் தப்பு செய்தேனா? நான் ஊழல் செய்தேனா?
அப்படிச் செய்திருந்தால் ஆட்சியை விட்டே செல்கிறேன்!'' என்று மக்களிடம் நேருக்கு நேர் கேட்கும் "தில்"
புரட்சித்தலைவரிடம் இருந்தது.
புரட்சித்தலைவரைப் போல இப்படி மார்தட்டிச் சொல்ல வேறு யாரால் முடிந்தது ? இன்றளவும்...
இப்படித் தூய்மையாக இருந்ததால் எம்ஜிஆர், "இதயதெய்வம்" என்று பக்தர்களால் இன்று புகழப்படுகிறார்...என்றென்றும் புகழப்படுவார்.
"இதயதெய்வம் என்றால் அது புரட்சித்தலைவர் மட்டுமே..."...bsm ...
-
புரட்சித்தலைவர் வாழ்ந்த காலத்தில் மக்களுக்கும் அவரை நம்பியவர்களுக்கும் பல நன்மைகளை செய்தார். அவரால் பயனடைந்து வாழ்ந்தவர்கள் எத்தனையோ பேர். அவர் காலஞ்சென்ற பின்பும் அவரால் பலர் பயனடைந்து கொண்டேதான் இருக்கிறார்கள்.
இன்றும் அவருடைய படங்களால் பல தியேட்டர் அதிபர்கள் லாபம் சம்பாதித்து வாழ்ந்து வருகிறார்கள். சின்னத்திரையிலும் அவர் திரைப்படங்கள் திரையிட்டு லட்சோபலட்சம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்று வரையில் எந்த ஒரு மனிதருக்கும் இல்லாத மவுசு மக்கள் திலகம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு மட்டும்தான் இருந்துகொண்டு வருகிறது.
நூற்றுக் கணக்கான புத்தகங்கள் அவரைப் பற்றி எழுதப்பட்டு இன்றும் வெளியே விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. புரட்சித் தலைவரை பற்றி செய்தித்தாள்களில் தலைப்புச் செய்தியாக போட்டு விட்டாலே போதும் அன்றைய தினம் எந்த ஒரு இதழும் கிடைக்காது. எம்.ஜி.ஆரைப் பற்றி ஏதோ செய்தி வந்திருக்கிறது அது என்னவாக இருக்கும் என்ற ஆர்வத்தால் எல்லா இதழ்களும் விற்றுத் தீர்ந்து விடுகின்றன. தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவிலும் மட்டுமல்ல உலக வரலாற்றிலேயே எந்த ஒரு அரசியல் தலைவருக்கும் சரி, சினிமா நடிகர்களுக்கும் சரி, ஆற்றல் மிக்க அறிஞர்களுக்கும் சரி இன்றளவும் நிகழ்ந்தது இல்லை இனி நிகழப் போவதும் இல்லை. புரட்சித் தலைவருடைய புகழை யாராலும் எவராலும் நெருங்க முடியவில்லை இனி நெருங்கவும் முடியாது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் என்றால் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் தான். உலகிலேயே மக்களின் உள்ளங்களில் உயர்ந்து மனித தெய்வமாக நேசிக்கப்பட்டவர். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் தான்.
கொடைவள்ளல் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க......... Saravanan Subramanian
-
சுட்டாங்க.., ஆனா மறுபிறவி எடுத்துவந்து அரசியல் சினிமா. இரண்டிலும் இன்னும் வேகமாக கலக்கனாரு..
பொங்கலுக்கு தமிழ்நாடே உற்சாகமாக தயாராகி வந்த நேரம். போகிக்கு எம்ஜிஆரின் தாய்க்கு தலைமகன் ரிலீஸ். அதற்கு முன்நாள் மாலை ஐந்து மணி.. எம்ஜிஆர் சுடப்பட்டார் என்று ஒற்றை வரி தகவல்..
நம்பலாமா வேண்டமா என்ற குழப்பம் மேலோங்கினாலும் சென்னை அப்படியே பதற்றம் மோடுக்கு முழுசாக மாறிவிட்டது.
ராமாவரம் தோட்டத்திலிருந்து எம்ஜிஆரும் எம்ஆர் ராதாவும் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவ மனை யில் அனுமதி.. சுட்டது எம்ஆர் ராதா என்பது தெரிந்ததும், அவர் வீடுமீது இரவு எட்டு மணிக்கு தாக்குல். வன்முறை யை கட்டுப்படுத்த.9 மணிக்கு போலீஸ் தடையுத்தரவு.
எம்ஜிஆர், ராதா என இருவருக்குமே அறுவை சிகிச்சை செய்ய ஜிஎச்சுக்கு மாற்றவேண்டும்.ராயப்பேட்டையில் போலீசார் கடும் சிரமப்பட்டு பெரும் போராட்டத்திற்கு பிறகே கூட்டத்தை கலைத்து சாலையை பழைய நிலைக்கு கொண்டுவரமுடிந்தது. அதன்பிறகே இரவு 10 மணிக்கு இருவரும் ஜிஎச்சுக்கு மாற்றப்பட்டார்கள்..
உடனே அறுவை சிகிச்சை. ராதாவுக்கு குண்டுகள் அகற்றபட்டன. எம்ஜிஆருக்கு ஒரு குண்டை மட்டும் வேலைகாட்டியது. எடுத்தால் உயிருக்கு ஆபத்தாக போய்விடும் என்ற பயத்தில் அப்படியே விட்டுவிட்டார்கள். காலை 11 மணிக்குத்தான் இருவருக்குமே நினைவு திரும்பியது..
கட்டுப்போடப்பட்ட எம்ஜிஆரின் போட்டோ சட்டமன்ற தேர்தலில் எல்லா இடங்களிலும் உலாவந்தது..ஜனவரி இறுதியில் எம்.ஆர்,ராதா ஜெயிலுக்கு கொண்டுசெல்ல ப்பட்டது....
பிப்ரவரி 23,, வாக்கு எண்ணிக்கையில் எம்ஜிஆர் பிரச்சா ரத்திற்கு போகாமலேயே அமோகமாக வெற்றிபெற்றது.... திமுக முதன் முறையாக ஆட்சியை பிடித்து அண்ணா முதலமைச்சரானது....
எம்ஜிஆர் திமுகவில் செல்வாக்கு பெற்றவர் என்பதால் வழக்கை வெளிமாநிலத்திற்கு மாற்றவேண்டும் என்று உச்சநீதிமன்றம்வரை எம்ஆர் ராதா சென்றது... ஏழு ஆண்டுகள் தண்டனை பெற்று, உச்சநீதிமன்றம் அதனை ஐந்து ஆண்டுகளாக குறைத்தது... நான்கரை ஆண்டுகள் சிறையில் கழித்து எம்ஆர்ராதா 1971 ஏப்ரல் 29ந்தேதி வெளியே வந்தது... என வரலாற்று தேதிகள் சொல்லும்..
இன்னொரு பக்கம் சுடப்பட்டு கம்பீரமான குரல் போனதால் எம்ஜிஆரின் சினிமா அவ்ளோதான் என்றார்கள்.. டப்பிங் பேசி சமாளித்துக்கொள்ளலாம் என்று கூட அறிவுரை சொன்னார்கள்..
என்னை நேசிக்கும் தமிழக மக்கள், என் குரலை காரணம் வைத்து கைவிடமாட்டார்கள், நானே தத்தி தத்தி பேசுகிறேன்.. ஏற்றுக்கொள்வதும், ஏற்றுக்கொள்ளாததும் அவர்கள் விருப்பம், அவர்கள் முடிவு..என்று எம்ஜிஆர் திடமாக இருந்துவிட்டார்.
மக்கள் திலகத்தை எந்த அளவுக்கு மக்கள் நேசித்தா ர்கள் தெரியுமா? சுடப்பட்ட பின்தான் எம்ஜிஆர் நடித்த பெரும்பாலான படங்கள் முன்பைக்காட்டிலும் தெறி இட்..
காவல்காரனில் தொடங்கி ஒளிவிளக்கு, குடியிருந்த கோவில், நம்நாடு, அடிமைப்பெண் எங்கள் தங்கம், மாட்டுக்கார வேலன், ரிக்சாக்காரன், உலகம் சுற்றும் வாலிபன், உரிமைக்குரல், இதயக்கனி என அது ஒரு பெரிய பிளாக் பஸ்டர் பட்டியல்
எம்ஜிஆர் சுடப்பட்டு தமிழக வரலாற்றில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய மறக்கமுடியாத ஜனவரி12. 1967... Ahilan Raju
-
# உலகெங்கும் வாழும் கிறிஸ்தவ பெருமக்களின் புனித நூலான பைபிளில் குறிப்பிடப் பட்டிருக்கும் ஒரு சம்பவத்தை இங்கே
மறுபடியும் நினைவூட்ட விரும்புகிறேன்,
" ஜெருசலேம் நகரில் விபச்சாரம் செய்து அதனால் கையும், களவுமாக பிடிபட்ட ஒரு பெண்ணை ஒரு கும்பல் பிடித்துக்கொண்டு வந்து இயேசுவின் முன்னால் நிறுத்துகிறது,
அப்போது அவர்கள் இயேசுவிடம் சொல்கிறார்கள் " இவள் கொடிய பாவமாக கருதப்படுகிற விபச்சாரத்தை செய்து அதன் காரணமாக பிடிக்கப்பட்டு இங்கே கொண்டு வரப்பட்டிருக்கிறாள்,
இவளுக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என்பதை இப்போது நீங்கள் சொல்ல வேண்டும்,
அந்த பெண்ணை கொண்டு வந்தவர்களின் நோக்கம் எப்படியாவது இயேசுவை இந்த விவகாரத்தில் குற்றவாளியாக காண்பித்து விட வேண்டுமே என்பதையன்றி வேறு எதுவும் இல்லை,
இயேசு அந்த பெண்ணை குற்றவாளி என்று சொன்னால் " ஊருக்கே அன்பை போதிக்கும் ஒருவர் பெண் என்ற மனிதாபிமானம் கொஞ்சம் கூட இன்றி அவளை தண்டிக்கச் சொல்கிறார் என்றால் இவரெல்லாம் ஒரு நல்ல மனிதரா என்ற கேள்வியை கேட்கலாம்,
மாறாக அவளை விட்டு விடுங்கள் என்று சொன்னால் " ஆஹா இவர் ரோமைய சட்டத்தை மீறி கொடிய பாவம் செய்த இவளுக்கு ஆதரவு கொடுப்பதன் மூலம் அரசாங்கத்தையே அவமதித்து விட்டார் என்று அவதூறு பறப்பலாம்,
ஆனால் இயேசு இவர்களின் கேள்விக்கு எந்த பதிலும் சொல்லாமல் குனிந்து தரையில் எழுதத் தொடங்கி விடுகிறார்,
வந்த கும்பலும் விடாமல் அவரை மறுபடி மறுபடி வற்புறுத்தி பதில் சொல்ல வேண்டும் என்று கூக்குரல் இடத் தொடங்குகிறது,
சிறிது நேரத்துக்குப் பிறகு இயேசு மெதுவாக நிமிர்ந்து அனைவரையும் பார்க்கிறார்,
பிறகு சொல்கிறார் " உங்களில் பாவம் செய்யாதவன் யாரவது இந்தக் கூட்டத்தில் இருந்தால் அவன் முதல் கல்லை இவள் மேல் எறியட்டும் " என்று சொல்லிவிட்டு மீண்டும் தரையில் குனிந்து எழுதத் தொடங்கி விடுகிறார்,
சிறிது நேரம் கழித்து அவர் நிமிர்ந்து பார்க்கும் போது அந்த பெண்ணைத் தவிர ஒருவர் கூட அந்த இடத்தில் இருக்கவில்லை,
இயேசு அந்த பெண்ணிடம் கேட்கிறார்
" பெண்ணே உன்னை யாரும் தீர்ப்பிட வில்லையா?
அந்த பெண்ணும் இல்லை என்று பதில் சொல்ல இயேசு சொல்கிறார் "நானும் உன்னை தீர்ப்பிட வில்லை, இனியாவது பாவம் செய்யாமல் வாழ்க்கை நடத்து " என்று சொல்லி அந்தப் பெண்ணை அனுப்பி விடுகிறார்,
நான் எதற்காக இந்த சம்பவத்தை இங்கே குறிப்பிடுகிறேன் என்றால் இப்போது கொஞ்ச நாட்களாக முகவரியே இல்லாமல் இருக்கும் ஒரு நாலாந்தர நடிகனின் ரசிகன் என்று சொல்லிக் கொள்ளும் சில தெருப்பொறுக்கி நாய்களும், மலம் தின்னும் சில பன்றிகளை விட மட்டமான கேவலமான பிறவிகள் சிலதும் தலைவரின் காலடி நிழலைக் கூட சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி தொட முடியாத எரிச்சலில், மனக்குமுறலில் அந்தக் காலத்தில் கவிஞர் என்று பெயரை வைத்துக்கொண்டு குடியும், கூத்தியாளுமாக தமிழ் பண்பாட்டையே சிதறடித்து கேவலமான சாக்கடை பன்றியை விடக் கேவலமாக வாழ்ந்து கடைசியில் தலைவரின் கருணை உள்ளத்தால் " அரசு மரியாதையுடன் " அரசவைக் கவிஞராக மறைந்து போன " கண்ணதாசன் எழுதிய " எம்ஜிஆர் அகமும் புறமும் " என்ற எச்சை வாந்தியை எங்கேயோ தேடிப் பிடித்து அந்த கேவலமான நடிகனின் பெயரில் இருக்கும் குழுக்களில் எல்லாம் பதிவிட்டு அற்ப சந்தோஷம் அடைந்திருக்கிறார்கள்,
அந்த எச்சை நக்கும் நாய்களிடம் நான் கேட்கிறேன் இதனால் நீங்கள் என்னத்தை சாதித்து விடப் போகிறீர்கள்?
ஒரு மயிரையும் புடுங்கப் போறதில்லை,மாறாக பதிவிட்ட நீங்கள்தான் அசிங்கப்பட்டு அவமானத்தில் நாக்கை பிடுங்கிக் கொண்டு அழியப் போகிறீர்களடா தெருப் பொறுக்கி நாய்களா
நான் கேட்கிறேன், அந்த புத்தகத்தை பதிவிட்ட மலம் தின்னும் பன்றிகளும் சரி, வேறு எவனும் சரி, நான் யோக்கியன் என்று நெஞ்சைத் தொட்டு சொல்ல முடியுமா?
எல்லா மனிதனும் பலவீனம் உள்ளவன்தான், அது மட்டுமல்ல தவறே செய்யாமல் எவனும் வாழ்ந்து விட முடியாது
மண்ணாசை, பொன்னாசை,பெண்ணாசை இல்லாத ஒரு மனிதனை இந்த உலகத்தில் காட்டுங்கள் பார்ப்போம்,
ஒவ்வொரு மனிதனுக்கும் பலம் பலவீனம் இரண்டுமே உண்டு, அது பிரபலமானவனாக இருந்தாலும் சரி, சாதாரண மனிதனாக இருந்தாலும் சரி, இந்த ஒரு மாயைகளில் இருந்து தப்பவே முடியாது, என்ன சிலரது வாழ்க்கை வெளியே தெரியும் பலரது வாழ்க்கை வெளியே தெரியாது அவ்வளவுதான் வித்தியாசம்,
சில சமயங்களில் பிரபலமானவர்களின் கூடவே இருந்து அவர்களின் உப்பை கடைசி வரையில் தின்பவன் சில பேர் அந்த பிரபலங்களின் அந்தரங்கத்தை அவர்கள் மறைந்தபின் கற்பனை பெருமளவு கலந்து விற்று காசாக்கும் அவலங்களும் நடக்கும்,
"மனிதரில் மாணிக்கம் " என்று புகழப்பட்ட பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் மறைந்த பிறகு அவரின் உதவியாளராய் இருந்த ஓ. பி மத்தாய் நேருவுக்கு முன்னாள் இலங்கை அதிபர் சந்திரிகாவின் தாயார் திருமதி. பண்டார நாயகா மற்றும் இந்தியாவின் கடைசி வைஸ்ராய் மவுண்ட்பேட்டன் பிரபுவின் மனைவி எலீனாவுடன் தொடர்பு இருந்ததாகக் கூறி மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி அந்த பரபரப்பை விற்று காசக்கிக் கொண்டார்,
பின்னர் காங்கிரஸ் கட்சியின் கடும் எதிர்ப்பினால் அந்த புத்தகம் தடை செய்யப் பட்டது,
காந்தியடிகள் கூட தான் வாழ்ந்த காலத்திலேயே தன் பலவீனங்களை பட்டியலிட்டு " சத்திய சோதனை " புத்தகமே எழுதினார்,
ஒரு மனிதன் மறைந்த பின் இட்டுக் கட்டி எழுதப் படும் பொய்களுக்கு என்றைக்குமே விலை அதிகம்,
அதே பொய்யைத்தான் முன்னாள் டி. ஜி பி மோகன்தாஸ் தலைவரைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும்"Man and myth " என்ற பெயரில் புத்தகமாக எழுதி காசு பார்த்தார்,
இன்னொரு டி. ஜி பியாக இருந்த வைகுந்த் என்பவர் தலைவர் மறைந்தபிறகு
துக்ளக் இதழில் தலைவரைப் பற்றி என்னவெல்லாமோ எழுதினார்,
அந்தக் காலத்தில் தலைவரைப் பற்றி " நாத்திகம் " பத்திரிக்கை எழுதாததா?,
அலை ஓசை எழுதாததா?
தினத்தந்தி, குமுதம், ராணி, மதி ஒளி இவைகளெல்லாம் எழுதாததா?
இல்லை கண்ணதாசன் " ராணி " வார இதழில் 1974 இல் " அரங்கமும் அந்தரங்கமும் " என்ற பெயரில் தலைவரை மிகக் கடுமையாக விமர்சனம் செய்து எழுதாததா?
1972 இல் நடிகர் சந்திரபாபு " பிலிமாலயா " இதழில் எழுதாததா?
இவர்களெல்லாம் எழுதி என்னத்த சாதித்து விட்டார்கள்?
இதையெல்லாம் மீறிதான் திண்டுக்கல், புதுவை வெற்றிகளை குவித்து இறுதியில் தமிழ் நாட்டின் முதல்வராக தான் சாகும் வரையிலும் முதல்வராக இருந்து சரித்திரம் படைத்தார் தலைவர்,
கண்ணதாசன் யாரை விட்டு வைத்தார்?
தான் எந்த சேற்றில் புரண்டேனோ அதே சேற்றில் அடுத்தவரையும் புரண்டதாக அழகுத் தமிழில் சித்தரிப்பது கண்ணதாசனுக்கு கைவந்த கலை,
அண்ணாவை மிகவும் மரியாதையாக இந்த புத்தகத்தில் குறிப்பிடும் கண்ணதாசன் " வனவாசத்தில் " அண்ணாவை ஒரு பெண் பித்தராக சித்தரித்ததை யாரும் மறந்து விட முடியாது,
இதற்கு முன் காங்கிரசார் அண்ணாவையும் நடிகை பானுமதியையும் இணைத்து அசிங்கமாக அவர் வீட்டு முன்பே எழுதிப் போட்ட போது
எல்லோரும் இரவிலும் படிக்கட்டும் என்று விளக்கு வசதி செய்து கொடுத்தவர் அண்ணா,
இந்த புத்தகத்தில் கருணாநிதி புனிதர் ஆகி கண்ணதாசன் கையால் ஞானஸ்நானம் பெற்றது மிகப்பெரிய காமெடி,
"மனவாசம், வனவாசம் இரண்டிலும் கையில் எடுக்க உதவாத மனிதனாக, ஸ்திரீ லோலனாக சித்தரிக்கப் பட்டதெல்லாம் " எம்ஜிஆர் எதிர்ப்பு " என்ற ஒற்றை புள்ளியில் காணாமல் போய் விட்டது அதிசயத்திலும் அதிசயம்தான்,
அதே மாதிரி "கவலை இல்லாத மனிதன் " படத்தை சந்திர பாபுவை வைத்து எடுத்து கடனில் மூழ்கி காணாமல் போனதை கண்ணீர் விட்டு எழுதியதெல்லாம் காணாமலே போய்விட்டது, அது மட்டும் அல்ல 1963 இல் எடுத்த ஒன்றிரண்டு காட்சிகளுடன் நின்று போன "மாடி வீட்டு ஏழை " படத்தினால் 1972 வரை கிட்டத்தட்ட 9 வருடம் தொடர்ந்து ரத்த வாந்தி எடுத்து சந்திரபாபு செத்திருக்கிறார், என்ன கொடுமை பாருங்களேன் இடையில் " அடிமைப் பெண்ணில் நடிக்க வைத்து தான் எதிர் பாராத மிகப்பெரிய தொகையை தலைவர் கொடுத்ததாக சந்திரபாபுவே சொன்னது, பறக்கும் பாவை, கண்ணன் என் காதலன் படத்திலெல்லாம் நடிக்க வைத்து ஒரு பெரிய தொகை கொடுக்கப்பட்டதும் இந்த ரத்த வாந்திக்கு இடையில் எப்படி நடந்ததோ தெரியவில்லை?
மேலும் அசோகன் பற்றியெல்லாம் குறிப்பிட்டு உள்ளார்
இரவோடு இரவாக அனைத்து நடிகர்களுக்கும் பணம் பட்டுவாடா செய்யப் பட்டதும், அசோகன் வீடு தேடி வந்து அது வரை செலவான பணத்தை விட ஒரு மடங்கு மேலான பணத்தை தலைவர் வந்து கொடுத்து விட்டுப் போனதையும் அசோகன் மகன் திரு. வின்சென்ட் அசோகன் ஒரு விழாவில் பேசியதையும் அதையே
You tube mathima சேனலில் இன்று வரை இருப்பதும் ஏனோ நினைவுக்கு வருகிறது,
பகைவனுக்கும் அருள்வாய் நெஞ்சே என்று அருளிய தலைவனுக்கு இந்த நன்றி கெட்ட நாய் தரும் நற்சான்றிதழ் எப்படி இருக்கிறது பார்த்தீர்களா?
" பாக்தாத் திருடன் " படம் முடிவதற்கு முன்பே "கோல்டன் ஸ்டூடியோ " நாயுடு இறந்து போனால் அந்த படம் வெளி வந்தது எப்படி?
அந்த ஆண்டின் மாபெரும் வசூல் சாதனைப் படமாக முரசு கொட்டியது எப்படி?
விடை காண முடியாத கேள்வி.
தலைவரின் படங்கள் ஒரு வருடத்தில் நான்கு மட்டும் வருமாம் அதில் வரும் வருமானம் இந்த குப்பையின் ஒரு நாள் செலவுக்கே காணாதாம்,
சரிதான் இதே கை எம்ஜிஆர் படங்களில் பாட்டெழுதி நான் வாங்கும் தொகை மற்ற நடிகர்கள் நடிக்கும் 25 படங்களுக்கு பாட்டெழுதினால் கூட கிடைக்காது என்று எழுதியது எப்படி என்று தெரியவில்லை
குடிக்கும், கூத்திக்கும் ஒரு நாளைக்கு எவ்வளவு தான் செலவழிப்பாரோ இந்த செல்வப்பெருந்தகை,
ஏ. எல். சீனிவாசனிடம் பணம் கேட்டு அவர் கொடுக்க மறுத்ததால் "பழனி " படத்தில் அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே என்று பாட்டு எழுதியதெல்லாம் ஏனோ நினைவுக்கு வந்து தொலைக்கிறது,
ஏ. எல். சீனிவாசன் யார் என்று கேட்டு விடாதீர்கள்,
இந்த புத்தகத்தில் கண்ணதாசன் காழ்ப்புணர்ச்சி அப்படியே தெரிகிறது,
தன்னைத் தேடி பெண்கள் வருவார்கள் அதில் குடும்பப் பெண்களும் அடக்கம் என்று பெருமையோடு எழுதிய போது தமிழ் பண்பாடு அழியவில்லை,
மாறாக எம்ஜிஆர் படத்தை பெண்கள் பார்ப்பதோ, ரசிப்பதோ மட்டும் மிகப்பெரிய பண்பாட்டு அழிவாம்,
என்னய்யா உன்னோட பாலிசி?
இப்படி இல்லாததையும், பொல்லாததையும் எழுதி விட்டு கடைசியில்
நான் இதையெல்லாம் எழுதுவதால் எனக்கும், எம்ஜிஆருக்கும் தனிப்பட்ட விரோதம் என்று யாரவது நினைத்தால் அது மடமையாம்,
சரி வேறு என்ன விரோதம்?
நான்தான் தனிக்காட்டு ராஜா என்று எண்ணிக் கொண்டு திமிர் பிடித்து அலைந்த உனக்கு தலைவர் வாலி மூலம் மிகப்பெரிய ஆப்பு அடித்தது உன்னை எப்படியெல்லாம் பாதித்திருக்கிறது என்பது உன் எழுத்து மூலமே தெரிகிறது ( உன் மகன் அண்ணாதுரை கண்ணதாசனும் சாட்சி )
ஏலம் போன வீட்டை இரண்டு முறை மீட்டுத் தந்ததையும், மிகப்பெரிய பண உதவிகளையெல்லாம் தலைவர் செய்ததையும் இவர் மகன் அண்ணாதுரை கண்ணதாசன் பட்டியல் இடும் காட்சியெல்லாம் கண் முன்னே வந்து போகிறது,
இந்த புத்தகத்தை உருவேற்றி இருக்கும் நாலாந்தர நடிகனின் காம லீலைகள் எல்லாம் யாருக்கும் தெரியாது என்று இவர்கள் நினைத்தால் அதை அழகாக வெளிக்கொண்டு வரவும் தலைவரின் ரசிகர்களுக்கு நன்றாகத் தெரியும்,
ஒரே நடிகையை ஒரு தயாரிப்பாளரும், இந்த மயிராண்டியும் கூட்டணி போட்டு தள்ளிக்கொண்டு போனதை சொல்லலாமா?
சிண்டிகேட் கூட்டத்துக்கு கூட்டிப் போவதாக சொல்லி ஒரு நடிகையை வாய்ப்பு தருவதாக சொல்லி ஏமாற்றி ஹோட்டலுக்கு தள்ளிப் போன கதையை சொல்லலாமா?
50 வயது தாண்டியும் ஒரு நடிகைக்காக அப்பனும் மகனும் அடித்துக் கொண்ட கதையை சொல்லலாமா?
ஒரு படத்தில் கூட நடித்த சின்ன வயது நடிகையை பரிசலில் வைத்து சுரண்டிப் பார்த்த கதையை அந்த நடிகை அனைவரிடமும் சொல்லி சிரித்த கதையை சொல்லலாமா?
எழுத எழுத நீண்டு கொண்டே போகும் கதைகளை எல்லாம் வைத்துக்கொண்டு தலைவருக்கு பாடம் சொல்வது அவ்வளவு நன்றாகவா இருக்கிறது? (ஊருக்கு தெரியாமல் கடைசி வரை வாழ்ந்து செத்த பாடகி கதையையும், திருமலை நாயக்கர் மகால் தூண் போன்ற உயரம் உள்ள கவர்ச்சி நடிகை கதையெல்லாம் சொல்லவே இல்லை )
இறுதியாக ஒன்று
ரஷ்யாவை ஜார் மன்னனின் பிடியிலிருந்து மீட்டு அந்த நாட்டை வளமாக்கிய லெனின் அவர்களின் பாடம் செய்யப்பட்ட உடலை வீதியில் தூக்கி எறிந்த உலகம்தானே இது!
வல்லாதிக்க அரசுகளின் பிடியில் இருந்து அடித்தட்டு மக்களை மீட்க தன் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை போராடி
பொலிவிய காடுகளில் ராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட " சேகுவேரா " அவர்களையும் கூட விமர்சிக்கும் பூமிதானே இது!
தனி ஒரு மனிதனாக அமெரிக்க வல்லாதிக்கத்தை எதிர்த்து வெறும் கரும்புத் தோட்டங்களை மட்டுமே வைத்து கியூப தேசத்தை உயர்த்திக் காட்டிய பிடல் காஸ்ட்ரோ அவர்களைக் கூட விமர்சிக்கும் பூமிதானே இது!
இப்படி உலகத்துக்கு நன்மை செய்து மடிந்து போன மகா மனிதர்கள் வரிசையில் தன் வாழ்நாள் முடிந்த பிறகும் தான் சேர்த்த சொத்துக்கள் மன வளர்ச்சி குன்றியவர்கள், ஊமைகள், காது கேளாதோருக்கு எழுதி வைத்து விட்டு மறைந்து போன என் தலைவனை விமர்சிக்கும் இவர்களெல்லாம்????????
தலைவரின் பக்தன்...
ஜே. ஜேம்ஸ் வாட். (J.JamesWatt).........
-
சுட்டுவிட சுட்டுவிட தொடரும்!!
---------------------------------------------
தொட்டால் பூ மலரும் பாடலில்--
சுட்டால் பொன் சிவக்கும்!--எந்த வேளையில் வாலி எழுதினாரோ--
சுட்டதால் தானே பொன் மனத்தார் மேலும் சிவந்தார்?
அண்ணாவின் ஆட்சிக்குப் பலரின்--
தொண்டு அல்லாமல் எம்.ஜி.ஆரை முத்தமிட்ட
குண்டு தானே பிள்ளையார் சுழி??
முதல்வர் எம்.ஜி.ஆர்,,நடிகர் சத்யராஜின் திருமணத்துக்காக கோயமுத்தூர் சென்று கொண்டிருக்க--அதே விமானத்தில் ராதாவின் வித்து,,ராதா ரவியும் பயணிக்கிறார்--
தமது விமானத்திலேயே எம்.ஜி.ஆர் என்னும்--
மனித உருவிலான மலர்க் குவியலும் பயணிக்கிறதா?
சிலையாகிறார் ராதாரவி--
கோவையை ஒத்த சென்னிற மேனியுடன்-
கோவைக்குப் பயணம் செய்யும்
கோ வைக் கண்ட மாத்திரத்தில் பிரமிக்கிறார்--அவர் மேலேயே தம் கவனத்தை
ஒருமிக்கிறார் ரவி!
என்ன ஆனாலும் பரவாயில்லை என்று பாய்ந்து குதித்து அவர் அருகில் சென்று தம்மை அறிமுகப்படுத்திக் கொள்ள--
தாயுள்ளத்துடன் அவரைப் பற்றிக் கேட்டறிகிறார் எம்.ஜி.ஆர்!
ராதாரவிக்கு மரபை மீறி அப்படி முதலமைச்சர் அருகில் செல்லக் கூடாது என்பது தெரியவில்லை. அதைப் பற்றியக் கவலையும் அந்த நொடி அவருக்கில்லை--
கோவை விமான நிலையத்தில் தமக்கு முன்னால் தமது பரிவாரம் புடை சூழ சென்று கொண்டிருந்த முதல்வர்,,பின்னால் திரும்பி யாரையோ தேடுவதைக் கண்டு குழம்புகிறார் ரவி?
அவரும் கிளம்ப யத்தனிக்கையில் அந்தப் போலீஸ் அதிகாரியால் தடுத்து நிறுத்தப் படுகிறார் ரவி??
இருபது நிமிடம் கழிந்து என் காரில் உங்களை திருமண மண்டபத்துக்கு அழைத்து வரச் சொல்லி சி.எம்மின் உத்தரவு!!
இது மேலும் ரவியைக் குழப்புகிறது!
எம்.ஜி.ஆரும்,,அவர் பரிவாரங்களும் சென்ற பிறகு அந்தப் போலீஸ் அதிகாரி ரவியைத் தம் காரில் ஏறிக் கொள்ளச் செய்து கொண்ட பிறகு தான் ராதா ரவிக்கு ரகசியம் புரிகிறது??
எம்.ஜி.ஆரை வரவேற்க விமான நிலையித்தில் வெள்ளமெனக் கூடியிருந்த மக்களிடம் தாம் சிக்கியிருந்தால்??
மண ஊர்வலத்தைக் காண வேண்டியவர்--
மரண ஊர்வலத்தில் அல்லவாப் படுத்திருப்பார்??
தன்னைக் கொல்ல முயன்றவரின் பிள்ளை எனினும்-பிய்ச்சு மேய்ந்திருக்க வேண்டிய தம்மையா
உச்சி முகர்ந்திருக்கிறார் இந்த உத்தமன்??
போலீஸ் அதிகாரி சொன்ன இன்னொரு செய்தியைக் கேட்டு மயக்கம் வராத குறை ராதா ரவிக்கு?
போகும்போது திரும்பி உங்களைப் பார்த்து,,போயிட்டு வரேன்னு அவர் சைகை செஞ்சாராம்,,,நீங்க கவனிக்கவே இல்லையாம்???
அந்த வார ஜெமினி சினிமா பத்திரிகையில் ராதா ரவியின் பேட்டி இப்படி அமைந்திருக்கிறது--
பார்த்த நொடியே அவர் மேல் பற்றுகிறது நம் உள்ளம் என்றால் அது வெறும் புகழ்ச்சி வார்த்தை இல்லை. இன்னும் இரண்டு நிமிடங்கள் நான் அவரிடம் கழித்திருந்தாலும்--
அவர் காலடியில் வீழ்ந்திருப்பேன்??
இன்னா செய்தாரை ஒறுத்தல்--அவருக்கு
நன்னா செய்!!
வள்ளுவனின் குறள்!--இதற்கு
வள்ளல் தானே பொருள்???
நிகழ்வின் நெகிழ்ச்சியோடு உங்கள் கமெண்ட்டுக்களை சிந்தலாம்!...vtr...
-
#கச்சேரியும் #கரகோஷமும்
மியூசிக் அக்காடமி !
அன்று , பிரபல பாடகர் ஒருவரின் கச்சேரியை கேட்டு ரசிப்பதற்காக , அங்கே ஏராளமானோர் வருகை தந்திருந்தார்கள் !
அந்த பாடகர் , தன்னை மறந்து பாடிக்கொண்டிருந்த அக்கணம் .....
ஒரு கம்பீரமான மனிதர் , அனைவரையும் அமைதியாக இருக்கும்படி .....தன் விரல் அசைவால் சமிக்ஞை செய்தவாறே ..எவ்வித ஆரவாரமும் இன்றி ..அமைதியாக தனது இருக்கையில் வந்து அமர்ந்து கொண்டார் .!.
( தனது வருகையால் கச்சேரிக்கு எவ்வித பங்கமும் ஏற்பட்டுவிடக்கூடாது என்று அவர் கருதியதே , அவர் அப்படி நடந்து கொண்டதற்கான காரணம் )....
தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதே அறியா வண்ணம் ....கண்களை மூடியவாறு மெய் மறந்து பாடிக்கொண்டிருந்த பாடகர் ....ஒரு கட்டத்தில் , ...
'' இராம நாமம் நல்ல நாமம்
நன்மையின் ரூபமாய் நானிலம் காக்கும்
இராம நாமம் நல்ல நாமம்
தாமரைக்கண்ணனை தன்னிசையால் தினம்
தவத்திரு நாதயோகி தியாகராஜர் கண்ட
இராம நாமம் நல்ல நாமம் ''
.........எனும் பாடலை பாட ஆரம்பித்தது தான் தாமதம் .....
அடுத்தகணம் , விண்ணை பிளக்கும்படியான கரகோஷம் அந்த அரங்கத்தில் !......
ரசிகர்களின் அந்த உற்சாகத்தினால் , பரவசமடைந்த அந்த பாடகர் , மேலும் உற்சாகமும் , மகிழ்ச்சியுமாய் அவர் பாடலை பாடிக்கொண்டிருக்க ... .....
ஒரு வழியாய் பாடல் முடிந்ததும் ...
மீண்டும் பலத்த கரகோஷம் !.
இப்போது , கண்களை மெல்ல திறந்தவாறு கூட்டத்தினரை சுற்றும் முற்றும் பார்த்த அந்த பாடகர் ....பார்வையாளர்கள் மத்தியில் ..புன்னகை பூத்த வதனத்துடன் ....அமர்ந்திருந்த அந்த நபரை கண்டதும் வியப்பின் உச்சக்கட்டத்துக்கே சென்று விட்டார் !!
இன்ப அதிர்ச்சியில் அப்படியே செய்வதறியாது அமர்ந்திருந்தார் !
காரணம் , அவர் பார்வை குத்திட்டு நின்ற இடத்தில் புன்னகையுடன் அமர்ந்திருந்த மாமனிதர் , #விவிஐபி #மக்கள்திலகம் #எம்ஜிஆர் அல்லவோ ?.....
அவர் எதேச்சையாக , ....'' இராமாயண காவிய நாயகன் '' தசரத ராமனைப் பற்றிப் பாட.....
கூட்டத்தினரோ , '' இராமாவரம் ராமச்சந்திரனை '' பற்றி அவர் சமயோசிதமாக பாடியதாக எண்ணியதாலேயே , மற்ற பாடல்களுக்குக் கிடைத்த வரவேற்பை விட , அந்தப் பாடலுக்கு மிகுந்த வரவேற்புக்கான காரணம் என்று அந்த பாடகருக்கு புரிந்தது இப்போது !
அவரின் வியப்பு இப்போது இரட்டிப்பு மடங்காகியது !
என்ன ஒரு கோ இன்சிடன்ஸ் !...
' .... அவர் ஆணையிட்டால் என்ன நடக்கும் என்பது உலகறிந்த விஷயம் .... அப்பேர்ப்பட்ட அந்த மாமனிதர் எத்தனை அடக்கத்துடன் ...வந்த சுவடு தெரியாமல் அமர்ந்திருக்க ...... அவர் வந்ததை கூட அறியாமல் பாடிக் கொண்டிருந்திருக்கிறேனே '
பாடகர் உள்ளுக்குள் சிலிர்த்து போனார் !
தன் வாழ்வில் ... பொன்மனச்செம்மலுடன் ... இப்படி
மெய்சிலிர்க்கும்படியான ....
இனிமையான ...சுகமான அனுபவம் ...கிடைக்கப்பெற்ற அந்த
''பாக்கியசாலி பாடகர் '' வேறு யாருமில்லை ....
பிரபல பாடகர் #கே #ஜே #ஜேசுதாஸ் தான் அவர் !
#நன்றி #தகவல் : #திருமதி #Vijayakalyani #அவர்கள்.........BSM...
-
*இன்று ஜனவரி 12*
**எம்.ஆர்.ராதா**
**எம்ஜிஆரை சுட்ட நாள்!**
திரையுலகினரை மட்டுமின்றி
திரளான மக்களையும்
*திடுக்கிட வைத்தச் சம்பவம்*
*(கரிகாலன்)*
மலேசியாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதற்கு, நடிகவேள் எம்.ஆர்.ராதா தயாராகிக் கொண்டிருந்தார். *"அந்த நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் உங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யப் போகிறார்கள்"* என, அந்நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அவரிடம் சொல்ல, அதை சற்றும் பொருட்படுத்தாமல், அந்நிகழ்ச்சிக்கு துணிவுடன் வந்து, எவ்வித பரபரப்புமின்றி கூட்டத்தில் ராதா பேசினார்.
*"எம்.ஜி.ஆரை சுட்டுட்டேன்னு ஆளாளுக்கு கோஷம் போடறாங்க. உங்களுக்கு ஒன்னு சொல்லிக்கிறேன். நானும் எம்.ஜி.ஆரும் ஐம்பது வருஷமா நண்பர்களா இருக்கோம். எங்களுக்குள்ள சின்ன கோபம். செல்லமா சண்டை போட்டுகிட்டோம். அந்த சமயத்துல கம்பு இருந்திருந்தா கம்புச் சண்டை போட்டிருப்போம். துப்பாக்கி தான் இருந்துச்சு. சுட்டுக் கிட்டோம்"* என்றார். இந்தியாவையே உலுக்கிய ஒரு வழக்கைக் கூட
மிகச் சாதாரணமாகச் சொல்லி மக்களை சமாளித்தவர் எம்.ஆர்.ராதா.
எம்.ஜி.ஆர் துப்பாக்கியால் சுடப்பட்டு *53* ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனால்,
இன்றளவும் எம்.ஆர்.ராதா நடத்திய துப்பாக்கிச் சூட்டின் பரபரப்பு
எளிதில் அடங்கி விட்டதாகத் தெரியவில்லை. என்ன நோக்கத்திற்காக ராதா துப்பாக்கியைக்
கையாண்டார்? என்ற கேள்விக்குப் பதிலைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் மக்கள்
மத்தியில் மேலோங்கியே இருக்கிறது.
*1967-ம் ஆண்டு, ஜனவரி 12ம் தேதி மாலை 5* மணிக்கு எம்.ஜி.ஆர் வீட்டில் இந்த
துப்பாக்கி சூடு சம்பவம் நிகழ்ந்தது. தாம் கொண்டு சென்ற துப்பாக்கியில் மூன்று தோட்டாக்களை மட்டுமே ராதா நிரப்பியிருந்தார். எம்.ஜி.ஆரை நோக்கி
துப்பாக்கியின் விசை அழுத்தப்பட, எம்.ஜி.ஆரின் இடது காதை ஒட்டி துப்பாக்கி
ரவை துளைத்துக் கொண்டு போனது. பிறகு அதே துப்பாக்கியால் தனது நெற்றிப்
பொட்டிலும், தோளிலும் இரண்டு குண்டுகள் பாய, ரத்த வெள்ளத்தில் மிதந்தார்
எம்.ஆர்.ராதா. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவருமே தெய்வாதீனமாக உயிர்ப் பிழைத்தனர்.
*"என் முகத்துக்கு நேராக குண்டு பாய்ந்து வந்தது. நான் எப்படிப் பிழைத்தேன்?"*
என தடயவியல் நிபுணர் சந்திரசேகரனிடம் ஆச்சரியத்தோடு எம்.ஜி.ஆர் கேட்டார்.
ராதா பயன்படுத்திய ரவைகளை தீவிரமாக ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வந்தார்
சந்திரசேகரன்.
*"அந்தத் துப்பாக்கி* *ரவைகள் பதினைந்து வருடங்களுக்கு முன்பு வாங்கப்பட்டவை. அவற்றை ஒரு டப்பாவில் போட்டு அடிக்கடி பயன்படுத்தும் மேஜை டிராயரில் ராதா வைத்திருக்கிறார்.*
*"டிராயரில் இருந்த துப்பாக்கி ரவைகள் ஒன்றுக்கொன்று உருண்டு தேய்ந்ததால், ரவையின் மேல் பிணைக்கப்பட்டிருந்த கேட்ரிஜ் கேசின் பிடிமானம் தளர்ந்து போய் விட்டது. அதனால்தான் சுடப்பட்ட இரண்டு பேரின் உயிருக்கும் ஆபத்து ஏற்படவில்லை"* என
விளக்கம் அளித்தார். துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு என்னவெல்லாம் காரணம் என அரசுத் தரப்பு சார்பில் நீதிமன்றத்தில் தெளிவாகவே எடுத்துரைக்கப்பட்டது. எம்.ஆர்.ராதாவின்
வக்கீலாக என்.டி.வானமாமலை ஆஜரானார். ராதாவுக்கும் எம்.ஜி.ஆருக்கும்
இடையே நீண்ட நாட்களாக இருந்து வரும் கருத்து வேறுபாடுகள் அனைத்தும்
நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டன.
தேவர் பிலிம்ஸ் தயாரிப்பான, *'தொழிலாளி'* திரைப்படப் படப் பிடிப்பின்போது, எம்.ஜி.ஆர், எம்.ஆர். ராதா
சம்பந்தப்பட்ட ஒரு காட்சியில், எம்.ஜி.ஆர் பேச வேண்டிய வசனம்,
*"இந்த பஸ் இனி தொழிலாளர்களின் நம்பிக்கை நட்சத்திரம்"* என்று அமைந்திருந்த வேளையில், எம்.ஜி.ஆர் அதனை, *"இந்த பஸ்தான் இனி தொழிலாளர்களின் உதயசூரியன்"* என (திமுக மீதான பற்று காரணமாக) மாற்றிப் பேசினாராம்.
இதனால் சினமடைந்த எம்.ஆர்.ராதா, *"சினிமாவுக்குள்ள உன் கட்சி சின்னத்தைக் கொண்டு வராதே... வெளிய போய் மேடை போட்டு பேசு"* என வாக்குவாதம்
புரிந்திருக்கிறார்.
இதனால் வெறுப்படைந்த எம்.ஜி.ஆர் படப்பிடிப்பை நிறுத்த, தயாரிப்பாளர்
சின்னப்பா தேவர் வந்து சமாதானப்படுத்தியிருக்கிறார். இறுதியில் குறிப்பிட்ட அந்தக் காட்சியில், *‘நம்பிக்கை நட்சத்திரம்’* என்றே தேவர் எம்ஜிஆரை பேச வைத்து விட்டார். இது தவிர, காமராஜரைக் கொல்ல சதி நடப்பதாகவும் ராதா எழுதிய ஒரு கட்டுரை, எம்.ஜி.ஆரை மிகுந்த வேதனைக்குள்ளாக்கியிருந்தது. வழக்கு விசாரணையில்,
எம்.ஆர்.ராதாவை வளர விடாமல் அவருக்கான சினிமா வாய்ப்புகளை எம்.ஜி.ஆர் கெடுத்தார்
என்றெல்லாம் காரணம் சொல்லப்பட்டது.
துப்பாக்கிச் சூடு சம்பவத்தன்று, *"எம்.ஜி.ஆரும் அவருடைய துப்பாக்கியால் என்னை நோக்கிச் சுட்டார்"* என
ராதா தரப்பில் கூறப்பட்ட குற்றச்சாட்டை, தடயவியல் துறை முற்றாக முறியடித்தது. கே.சி.பி.
கோபாலகிருஷ்ணன், பி.சந்திரசேகரன் மற்றும் துப்பாக்கி நிபுணர் ஏ.வி.
சுப்பிரமணியம் ஆகியோர் அடங்கிய குழு, வெடிக்கப்பட்ட *3* குண்டுகளும்
ராதாவின் துப்பாக்கியில் இருந்து மட்டுமே வெளியேறியவை என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபித்தனர்.
இந்தச் சம்பவம் நடந்தபோது, கண்ணால் பார்த்த ஒரே சாட்சி, சம்பவத்தன்று ராதாவோடு வந்திருந்த, படத் தயாரிப்பாளர்
*வாசு* மட்டும்தான்.
அவர் தன்னுடைய சாட்சியத்தில், *"எம்.ஜி.ஆரை சுட்டு விட்டு அதே துப்பாக்கியால் இரண்டு முறை தன்னைத் தானே ராதா சுட்டுக் கொண்டார்"* என
வாக்குமூலம் கொடுத்தார். *"எம்.ஜி.ஆர் செல்வாக்குமிக்கவர் என்பதால் வாசுவை மிரட்டி பொய் சொல்ல வைக்கின்றனர்"* என ராதா தரப்பில் வாதிடப்பட்ட போதிலும், முடிவில் ராதாவே சிறைத் தண்டனைக்கு ஆளானார். நீதிமன்றத்தில் வாதம் நடந்த போது, பல சுவாரஸ்ய சம்பவங்களும் நடந்தன. எம்.ஆர்.ராதா லைசென்ஸ்
இல்லாத துப்பாக்கியால் சுட்டார் என அரசுத் தரப்பு வக்கீல் குற்றம் சாட்டிக்
கொண்டே போக, ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ராதா, *"யுவர் ஹானர், வழக்கில் குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும்"*
*"லைசென்ஸ் இல்லாத துப்பாக்கியால் ராதா சுட்டார் என அரசுத் தரப்பு வக்கீல் சொல்வதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். துப்பாக்கியால் சுட்டதில் நானும் சாகவில்லை. ராமச்சந்திரனும் சாகவில்லை. யாரையும் கொல்லாத ஒரு துப்பாக்கிக்கு லைசென்ஸ் தேவையா?"* எனக் கேட்க, நீதிமன்றமே அதிர்ந்தது.
துப்பாக்கிச் சூடு வழக்கு மிக விரைவாக நடந்தது. அதே ஆண்டு *நவம்பர் மாதம் 4* ஆம் தேதியன்று, நீதிபதி லட்சுமணன் தீர்ப்பை வாசித்தார்.
*"அரசியல் முன் விரோதம் காரணமாகவே ராதா தன் துப்பாக்கியால் எம்.ஜி.ஆரை சுட்டிருக்கிறார். பிறகு தன்னைத் தானே இரண்டு முறை சுட்டுக் கொண்டிருக்கிறார். இதை அரசுத் தரப்பு ஆதாரப்பூர்வமாக நிரூபித்துள்ளது"* எனக் கூறி, ராதாவுக்கு
*ஏழாண்டு* கடுங்காவல் தண்டனை வழங்குவதாக அறிவித்தார். தீர்ப்பை எதிர்த்து ராதா
உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தார். மேல் முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது. ஆயினும் ராதா, மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அங்கே தண்டனை காலம்
ஐந்தாண்டுகளாகக் குறைக்கப்பட்டது. சிறையில் அவருடைய நன்னடத்தை
காரணமாக, நான்கு ஆண்டுகள் நான்கு மாதங்களில் அவர் விடுதலையானார்.
தண்டனைக் காலத்தில் அவரது சிறைக் கொட்டடியில் வெளிநாட்டு கைதி ஒருவரும் தங்கியிருந்தார். அந்தக் கைதிக்கு ராதா சமைத்துப் போட்ட கேசரியும்,
சாம்பாரும் ரொம்பவே பிடித்துப் போய் விட்டது. ஒருநாள் பேச்சுவாக்கில்
ஒன்றைக் கேட்டார் ராதா.
*"ஏன்யா வெள்ளைக்காரா...*
*உங்கள் ஊரில்*
*எப்படி... 30 வருஷம்* *வக்கீலாக இருக்கறவர் தான் ஜட்ஜா வருவாரா?"* எனக் கேட்க, அந்த வெளிநாட்டுக் கைதியும், *"ஆமாம், எங்கள் ஊரிலும் அதே வழக்கம்தான்"* எனச் சொல்ல, பலமாகச் சிரித்த ராதா, *"அதெப்படிய்யா...முப்பது வருஷம் பொய்யை மட்டுமே வாழ்க்கையாக வச்சுட்டு வாதாடி சம்பாதிக்கற ஒருத்தர், ஜட்ஜா வந்து உட்கார்ந்ததும், மை லார்டுன்னு சொல்றோமே, இந்த அநியாயம் வேறெங்காவது நடக்குமா?"* எனக் கேட்க, வெளிநாட்டுக் கைதி
யோசனையில் ஆழ்ந்தாராம். அதுதான் *எம்.ஆர்.ராதா.*
துப்பாக்கிச் சூடு வழக்கில் இருந்து வெளியே வந்து விட்டாலும், 1975 இல்
இந்திரா காந்தி அரசின் நெருக்கடி நிலை அறிவிப்பின் போது, மிசா சட்டத்தின் கீழ் ராதா கைது செய்யப்பட்டார். *'திராவிடர் கழகத்துடன் தொடர்பில்லை'* என எழுதித் தந்தால் விடுதலை செய்வதாகக் கூறியும்,
நிபந்தனையை ஏற்க மறுத்து பதினொரு மாதங்கள் சிறையில் இருந்தார்
எம்.ஆர்.ராதா. கடைசிவரை, எந்தப் பேச்சு வார்த்தையும் வைத்துக்
கொள்ளாமல், இருந்த எம்.ஜி.ஆரும் ராதாவும் சந்தித்துக் கொண்டது
பெரியாரின் இறப்பின் போதுதான்.
அப்போது கூட, *"உங்களுக்கு பக்கத்தில் இருப்பவர்களை நம்ப வேண்டாம்"* என ராதா கூறியதாகவும் ஒரு செய்தி உண்டு. அதன்பின் சிங்கப்பூரிலும்
மலேசியாவிலும் வெற்றிகரமாக நாடகம் நடத்தி விட்டு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டதையடுத்து, திருச்சி திரும்பினார்.
*1979 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 17* ஆம் தேதி ராதா இறந்தார். அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர், இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முன்வந்த போதிலும், ராதா குடும்பத்தினர் அவரை அனுமதிக்க மறுத்து விட்டனர். அரசு மரியாதையையும் அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
**நிறைவு!**.........gdr...
-
நண்பர்கள் அனைவருக்கும் நமது தங்க தலைவரின் ஆசியுடன் இனிய " காலை வணக்கம் "
ஜனவரி 12
நமது தங்க தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் வாழ்வில் மறக்க முடியாத நாள்.
நமது தங்க தலைவர் எம் ஜி ஆர் அவர்களை திரு. எம் ஆர் ராதா அவர்கள் துப்பாக்கியால் சுட்ட நாள் மீண்டும் ஒரு முறை நமது வாழ்வில். அந்த வேதனை தந்த நாளை ( 12-01-67 ) குறிக்கும் பத்து ரூபாய் நோட்டு உங்கள் பார்வைக்கு...........
கடந்த 1967-ஆம் ஆண்டு ஜனவரி 12-ம் தேதியன்று மாலை 5 மணி வாக்கில் எம்.ஆர். ராதாவும், திரைப்படத் தயாரிப்பாளர் வாசுவும் எம்.ஜி.ஆரின் நந்தம்பாக்கம் வீட்டிற்குச் போய் அவரைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். இந்த சந்திப்பின் போது என்ன நடந்ததென்று இன்று வரை தெரியவில்லை.
எம்.ஜி.ஆர். துப்பாக்கியால் தனது இடது காதருகே சுடப்பட்டார். ராதாவின் உடலில் நெற்றிப் பொட்டிலும் தோளிலுமாக இரு குண்டுகள் பாய்ந்தன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் உயிர்பிழைத்தனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டையடுத்து, ராதா, எம்.ஜி.ஆரை சுட்டுக் கொல்ல முயன்றார் என்றும், அதன்பின் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்ய முயன்றார் என்றும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
முதலில் சைதாப்பேட்டை முதன்மை நீதிமன்ற நீதிபதி எஸ்.குப்புசாமி முன்னிலையில் நடைபெற்ற வழக்கின் இறுதியில், ராதா குற்றவாளி என்றே தோன்றுவதாகத் தீர்ப்பளித்தார். அதன்பிறகு, செங்கல்பட்டு அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி லட்சுமணன் முன்னிலையில் வழக்கு நடைபெற்றது. அரசு தரப்பில் வழக்கறிஞர் பி.ஆர். கோகுலகிருஷ்ணனும், ராதா தரப்பில் வழக்கறிஞர் என்.டி. வானமாமலையும் வாதாடினார்கள்.
ஒன்பது மாத கால வழக்கு விவாதத்திற்குப் பின்னர், இதே நவம்பர் 4-ம் தேதி நீதிபதி தனது 262 பக்கத் தீர்ப்பை வழங்கினார். அதில், வாசுவின் சான்றின் அடிப்படையிலும், ராதாவிற்கு எம்.ஜி.ஆர். மீது தொழில்முறை எதிர்ப்புநிலை இருந்ததன் அடிப்படையிலும் ராதா குற்றவாளியென முடிவு செய்ததாக கூறப்பட்டது.
இக்குற்றத்திற்கென இந்திய தண்டனைச் சட்டம் 307, 309-ம் பிரிவுகளின் கீழும், 1959-ம் ஆண்டு ஆயுதச் சட்டம் 25(1), 27 பிரிவுகளின் கீழும் அவருக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. ராதாவின் வயது (அப்போது 57) கருதியே மேலும் கடுமையான தீர்ப்பு வழங்கவில்லை என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.
ராதா மேல்முறையீடு செய்ததன் பேரில் வெறுமனே உயர்நீதிமன்ற விசாரணை சரியா என்று மட்டும் பார்க்காமல் சாட்சிகளை மீண்டும் விசாரித்த உச்ச நீதிமன்றம், அவரது தண்டனைக் காலத்தை ஏழிலிருந்து மூன்றரை ஆண்டுகளாகக் குறைத்து தீர்ப்பளித்தது..........
-
MGR Temple | எம்.ஜி.ஆருக்கு கோவில் கட்டிய அவருடைய ரசிகர்
சென்னை: இறைவன் எம்ஜிஆர் என்னும் பூவின் மூலம் நான் புகழடைந்துள்ளேன் என்று எம்ஜிஆருக்கு கோவில் கட்டியுள்ள அவரது ரசிகர்க கூறியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் நத்தமேடு என்ற இடத்தில் எம்.ஜி.ஆர். கோவில் கட்டப்பட்டுள்ளது. கலைவாணன் என்பவர் இந்த கோவிலை கட்டி உள்ளார்.
எம்.ஜி.ஆரின் ரசிகராகவும், அவரது பக்தராகவும் இருக்கும் கலைவாணனின் மனைவி சாந்தியின் கனவில் எம்.ஜி.ஆர் மிகவும் கவலையுடன் அவர்களது இல்லத்துக்கு நடந்து வந்ததாகவும் அவர் கொடுத்த ஐடியாபடியே இந்த கோவிலைக் கட்டியுள்ளார்.
கோவிலுக்குள் எம்.ஜி. ஆரின் மூன்று சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன. ஆறு அடி உயரத்திலான ஒரு சிலை மூலவர் சிலையாக வைக்கப்பட்டு உள்ளது. அச்சிலையின் வலப்புறமும், இடப்புறமும் இரண்டு அடி உயரத்தில் இரு சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன.
கோவில் கோபுரத்தில் ஒருசிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த கோவிலை எம்.ஜி. ஆரின் தீவிர ரசிகரான எல்.கலைவாணன் கட்டியுள்ளார். கோவிலின் நிர்வாக பொறுப்பை ஏற்றுள்ள அவர் கூறும்போது, 10க்கு 10 அறையில்தான் கட்ட வேண்டும் என்று நினைத்தோம் ஆனால் 1600 சதுரஅடி பரப்பளவில் அருள்மிகு எம்.ஜி.ஆர். கோவில் கட்டப்பட்டு உள்ளது. இதை கட்ட ரூ.21.5 லட்சம் செலவிடப்பட்டு உள்ளது. எல்லாம் இறைவன் எம்ஜிஆர் அருள்தான் என்று கூறியுள்ளார்.
1977ஆம் ஆண்டு எம்ஜிஆரை முதன் முதலாக பார்த்ததாக கூறும் கலைவாணன் அவருக்காக கோவில் கட்டியிருக்கிறார். தர்மத்தின் வழியில் நடந்த அவர்தான் தனது இறைவன் என்கிறார். இறைவன் எம்ஜிஆர் என்கிற பூவின் மூலம் இந்த கலைவாணன் மணக்கிறான். சாதாரண பேப்பர் போடும் நபரான தனக்கு எம்ஜிஆர் மூலம்தான் பணம் கிடைக்கவில்லை. எம்ஜிஆர் கோவில் கட்டுவதற்காக இந்த இடத்தை வாங்கியிருக்கிறார்.
மவுண்ட்ரோட்டில் பேப்பர் போடும் தொழில் செய்து வந்த தனக்கு எல்லாமே எம்ஜிஆர்தான் என்று கூறுகிறார். அவருக்கு உதவி செய்பவர் அவரது மகள் சங்கீதா.
ஒவ்வொரு எம்.ஜி.ஆர். படமும் தனது வாழ்க்கையில் ஒரு பாடமாக அமைந்ததாகவும் இப்போது எனது ஒரே கடவுள் இறைவன் எம்.ஜி.ஆர்.தான் என்று மூச்சுக்கு மூச்சு சொல்லி நெகிழ்கிறார் கலைவாணன். இந்த கோவிலுக்கு மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் அவரது தீவிர பக்தர்கள் வந்து செல்கிறார்கள். ஆண்டு தோறும் ஆகஸ்டு 15ம்தேதி அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் எம்.ஜி.ஆரின் சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும்.
வாழ்ந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்' என்ற வரிகளுக்கு ஏற்ப நடிகராக இருந்து தலைவராக உயர்ந்த எம்.ஜி.ஆர். இன்றைக்கு கடவுளாக கொண்டாடப்படுகிறார். அவர் உயிருடன் இருக்கும் போதே எத்தனையோ கர்ப்பிணிப் பெண்கள் எம்.ஜி.ஆரை காண தவம் இருப்பார்களாம். காரணம், எம்.ஜி.ஆரைப் போல குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காகத்தானாம். இன்றைக்கும் குழந்தை வரம் வேண்டி எம்.ஜி.ஆர் கோவிலுக்கு இருமுடி கட்டி படையெடுக்கின்றனர். குழந்தை பாக்கியம் வேண்டி தம்பதிகள் சிலர் வருவதாகவும், சிலருக்கு அற்புதங்கள் நிகழ்ந்து இருப்பதாகவும் கூறுகிறார்கள்..........Baabaa
-
தொடர் பதிவு. உ..த்தமன் 12
-----------------------------------------------
தலைப்பு செய்திக்கு முன் ஒரு முக்கியமான தகவலை குறிப்பிட வேண்டி இருக்கிறது. 1968 ல் வெளியான "கலாட்டா கல்யாணம்" ஜோஸப்பில் வெளியாவதற்கு முந்தைய நாள் இரவில் தூத்துக்குடி பெரிய உப்பு கம்பெனி அதிபரின் வீட்டில் பிரத்யேக காட்சியாக திரையிடப்பட்டது. அவரது வாரிசுகளிலும் தீவிரமான கைஸ்கள் உண்டு. அவர்களில் ஒரு சிலர் நட்பின் அடிப்படையில் எனக்கு பழக்கமுண்டு.
அந்த பழைய நாட்களில் அய்யன், முத்துராமன், மனோரமா அவர்களில் யார் தூத்துக்குடி வந்தாலும் உப்பு அதிபர் வீட்டு விருந்தில் கலந்து கொள்வர்.
இதில் "கலாட்டா கல்யாணம்" ரிலீஸிக்கு முந்தைய நாள் திரையிட்டு பார்க்கும் போது நிறைய கைஸ்கள் வெளியே நின்று படத்தின் ரிசல்ட் கேட்பதற்கு நடு இரவில் காத்து நின்றனர். படத்தை பற்றி புகழ்ந்து பேசிய கைஸ்கள் மறுநாள் ஜோஸப் தியேட்டரில் வரவேற்பு ஆர்ச்சில் எம்ஜிஆரை கேவலப்படுத்தும் வாசகங்களை ஒட்டி மகிழ்ந்தனர்.
அதன்பின் எம்ஜிஆர் ரசிகர்கள் கூட்டமாக வந்து அனைத்தையும் புடுங்கி எறிந்து விட்டு அய்யன் கைஸ்களை அடித்து விரட்டினர். இது போன்ற சமாசாரங்கள் இங்கு அவ்வப்போது நடைபெறும். இதனால் கோபமடைந்த எம்ஜிஆர் ரசிகர்கள் அய்யனின் போஸ்டர்களை கிழித்தும், அபிஷேக (சாணி) மழை பொழியவும் செய்தனர். அன்றிலிருந்து அய்யன் போஸ்டர்களை பார்த்தவுடன் அபிஷேகம் தெளிவாக நடந்தது. இந்த விஷயத்தில் அய்யனின் கைஸ்களுக்கு தெளிவான திறமையும் ஆட்களும் இல்லாததால் தோல்வி அடைந்தனர் என்றே சொல்ல வேண்டும்.
அவர்கள் வீட்டு கைஸ்கள் பல புதிய தகவல்களை சொல்வார்கள். பிற்காலத்தில் அவர்களே தியேட்டர் கட்டி அதில் கமலஹாசனோடு அய்யன் நடித்த படத்தை திரையிட்டு அதை 100 நாட்கள் ஓட்டி மகிழ்ந்தனர். அவர்கள் திரையரங்கில் இன்றும் அய்யனின் படத்தை பிரதானமாக வைத்து விட்டு மற்ற நடிகர்களின் படத்தை சுற்றி வரைந்து வைத்து மகிழ்ந்து கொள்கிறார்கள்.
இப்படி ஊரில் உள்ள பணக்கார கைஸ்கள் சேர்ந்து ஓட்டிய படம்தான் "சிவந்தமண்". அய்யனுக்கு முதல் 100 நாள் படத்தை காணிக்கையாக செலுத்தினர். அடுத்தாற்போல் "உலகம் சுற்றும் வாலிபன்" "உரிமைக்குரல்" "இதயக்கனி" போன்ற தலைவரின் படங்களின் சாதனையை அடுத்து வேதனை கொண்ட கைஸ்களின் நெஞ்சத்தில் பால் வார்க்கும் என்று நினைத்த "உத்தமன்" 1976ல் காரனேஷனில் வெளியானது. மீண்டும் சிவந்த மண்ணைப்போல் அய்யனுக்கு இன்னொரு சாதனையை உருவாக்க நினைத்த கைஸ்களுக்கு மிஞ்சியது வேதனைதான்.
அந்த ஆண்டு அய்யனின் 4 படங்கள் காரனேஷனில் வெளியானது. "கிரகப்பிரவேசம்" "சத்யம்" "சித்ராபவுர்ணமி" மற்றும் "உ....த்தமன்"
ஆகிய படங்கள் அனைத்தும் குப்பையாக இருந்ததால் "உ...த்தமனை" தேர்ந்தெடுத்து அதை
105 நாட்கள் படமாகவும் 100 காட்சிகள் தொடர்hf ஆகவும் அவர்கள் போட்ட திட்டத்தை கைஸ்கள் பெருமையாக சொல்லி கொண்டனர். "கிரகப்பிரவேசம்" 18 நாட்களும் "சத்யம்" 21 நாட்களும் "சித்ராபவுர்ணமி" அந்த ஆண்டின் சாதனை படமாக அமைந்து 13 நாட்களும் ஓடியது. உ....த்தமன்" 1976 ஜீன் 25 ல் படம் வெளியானது.
மீண்டும் அடுத்த பதிவில்.........ksr...
-
அனைவருக்கும் இனிய "பொங்கல்" திருநாள் நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக...
-
புரட்சித்தலைவர் வாழ்ந்த காலத்தில் மக்களுக்கும் அவரை நம்பியவர்களுக்கும் பல நன்மைகளை செய்தார். அவரால் பயனடைந்து வாழ்ந்தவர்கள் எத்தனையோ பேர். அவர் காலஞ்சென்ற பின்பும் அவரால் பலர் பயனடைந்து கொண்டேதான் இருக்கிறார்கள்.
இன்றும் அவருடைய படங்களால் பல தியேட்டர் அதிபர்கள் லாபம் சம்பாதித்து வாழ்ந்து வருகிறார்கள். சின்னத்திரையிலும் அவர் திரைப்படங்கள் திரையிட்டு லட்சோபலட்சம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்று வரையில் எந்த ஒரு மனிதருக்கும் இல்லாத மவுசு மக்கள் திலகம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு மட்டும்தான் இருந்துகொண்டு வருகிறது.
நூற்றுக் கணக்கான புத்தகங்கள் அவரைப் பற்றி எழுதப்பட்டு இன்றும் வெளியே விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. புரட்சித் தலைவரை பற்றி செய்தித்தாள்களில் தலைப்புச் செய்தியாக போட்டு விட்டாலே போதும் அன்றைய தினம் எந்த ஒரு இதழும் கிடைக்காது. எம்.ஜி.ஆரைப் பற்றி ஏதோ செய்தி வந்திருக்கிறது அது என்னவாக இருக்கும் என்ற ஆர்வத்தால் எல்லா இதழ்களும் விற்றுத் தீர்ந்து விடுகின்றன. தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவிலும் மட்டுமல்ல உலக வரலாற்றிலேயே எந்த ஒரு அரசியல் தலைவருக்கும் சரி, சினிமா நடிகர்களுக்கும் சரி, ஆற்றல் மிக்க அறிஞர்களுக்கும் சரி இன்றளவும் நிகழ்ந்தது இல்லை இனி நிகழப் போவதும் இல்லை. புரட்சித் தலைவருடைய புகழை யாராலும் எவராலும் நெருங்க முடியவில்லை இனி நெருங்கவும் முடியாது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் என்றால் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் தான். உலகிலேயே மக்களின் உள்ளங்களில் உயர்ந்து மனித தெய்வமாக நேசிக்கப்பட்டவர். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் தான்.
கொடைவள்ளல் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க.........
-
#மக்கள்திலகம் சுடப்பட்டு.. ஆயிற்று 54 ஆண்டுகள். அது 1967 ஜனவரி 12..
எம்.ஜி.ஆர் துப்பாக்கியால் சுடப்பட்டு 54 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், இன்றளவும் எம்.ஆர்.ராதா நடத்திய துப்பாக்கிச்சூட்டின் பரபரப்பு அவ்வளவு எளிதில் அடங்கிவிடவில்லை.
என்ன நோக்கத்திற்காக ராதா துப்பாக்கியைத் தூக்கினார்? என்ற கேள்விக்குப் பதிலைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் சாதாரண மக்களிடம் மேலோங்கியே இருக்கிறது.
1967-ம் ஆண்டு, ஜனவரி 12ம் தேதி மாலை 5 மணிக்கு எம்.ஜி.ஆர் வீட்டில் துப்பாக்கி சூடு நடந்தது. தான் கொண்டு போயிருந்த துப்பாக்கியில் மூன்று தோட்டாக்களை மட்டுமே நிரப்பியிருந்தார் ராதா.
எம்.ஜி.ஆரை நோக்கி துப்பாக்கியின் விசை அழுத்தப்பட, எம்.ஜி.ஆரின் இடதுகாதை ஒட்டி துப்பாக்கி ரவை துளைத்துக் கொண்டு போனது. பிறகு அதே துப்பாக்கியால் தனது நெற்றிப் பொட்டிலும், தோளிலும் இரண்டு குண்டுகள் பாய, ரத்த வெள்ளத்தில் மிதந்தார் எம்.ஆர்.ராதா. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் உயிர் பிழைத்தனர்.
"என் முகத்துக்கு நேராக குண்டு பாய்ந்துவந்தது. நான் எப்படிப் பிழைத்தேன்?" என தடயவியல் நிபுணர் சந்திரசேகரனிடம் (இராஜிவ் கொலை வழக்கு) ஆச்சர்யத்தோடு கேட்டார் எம்.ஜி.ஆர்.
ராதா பயன்படுத்திய ரவைகளை தீவிரமாக ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வந்தார் சந்திரசேகரன்.
'அந்தத் துப்பாக்கி ரவைகள் பதினைந்து வருடங்களுக்கு முன்பு வாங்கப்பட்டவை. அவற்றை ஒரு டப்பாவில் போட்டு அடிக்கடி பயன்படுத்தும் மேஜை டிராயரில் வைத்திருந்தார். டிராயரில் இருந்த துப்பாக்கி ரவைகள் ஒன்றுக்கொன்று உருண்டு தேய்ந்ததால், ரவையின் மேல் பிணைக்கப்பட்டுள்ள கேட்ரிஜ் கேசின் பிடிமானம் தளர்ந்து போய்விட்டது. அதனால்தான் இரண்டு பேரின் உயிருக்கும் ஆபத்து ஏற்படவில்லை' எம்ஜியாரிடம் விளக்கினார்.
துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு என்னவெல்லாம் காரணம் என அரசுத் தரப்பு, நீதிமன்றத்தில் தெளிவாகவே எடுத்து வைத்தது.
எம்.ஆர்.ராதாவின் வக்கீலாக என்.டி.வானமாமலை ஆஜரானார். ராதாவுக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே நீண்டநாட்களாக இருந்து வரும் கருத்து வேறுபாடுகள் அனைத்தும் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது.
#தொழிலாளி திரைப்பட சூட்டிங்கின் போது எம்.ஜி.ஆர், எம்.ஆர். ராதா சம்பந்தப்பட்ட ஒரு காட்சியில், எம்.ஜி.ஆர்,
‘இந்த பஸ் இனி தொழிலாளர்களின் நம்பிக்கை நட்சத்திரம்' எனப் பேச வேண்டும்.
ஆனால் ‘இந்த பஸ்தான் இனி தொழிலாளர்களின் உதயசூரியன்' என மாற்றிச் சொன்னார் எம்.ஜி.ஆர்.
இதனால் கடுப்பான எம்.ஆர்.ராதா,
‘சினிமாவுக்குள்ள உன் கட்சி சின்னத்தைக் கொண்டு வராதே... வெளிய போய் மேடை போட்டு பேசு' என சண்டை போட்டிருக்கிறார்.
இதனால் கோபமான எம்.ஜி.ஆர் படப்பிடிப்பை நிறுத்த, தயாரிப்பாளர் சின்னப்பா தேவர் வந்து முருகா, ந*ம*து ப*ட*ப்பிடிப்பில் சண்டையும், அர*சிய*லும் வேண்டாம் என்று சமாதானப்படுத்தினார்.
இறுதியில் குறிப்பிட்ட அந்தக் காட்சியில் ‘நம்பிக்கை நட்சத்திரம்’ என்று பேசவைத்தார் சின்னப்பா.
இதுதவிர, 'காமராஜரைக் கொல்ல சதி செய்யப்படுவதாகவும்' ராதா எழுதிய ஒரு கட்டுரை, எம்.ஜி.ஆரை மிகுந்த வேதனைக்குள்ளாக்கியிருந்தது.
வழக்கு விசாரணையில், 'எம்.ஆர். ராதாவை வளரவிடாமல் சினிமா வாய்ப்புகளை எம்.ஜி.ஆர் கெடுத்தார்' என்றெல்லாம் காரணம் சொல்லப்பட்டது.
'எம்.ஜி.ஆரும் அவருடைய துப்பாக்கியால் என்னை நோக்கிச் சுட்டார்'
-என ராதா தரப்பில் சொல்லப்பட, அதை முறியடித்தது தடயவியல் துறை. கே.சி.பி. கோபாலகிருஷ்ணன், பி.சந்திரசேகரன் மற்றும் துப்பாக்கி நிபுணர் ஏ.வி.சுப்பிரமணியம் ஆகியோர் அடங்கிய குழு, வெடிக்கப்பட்ட 3 குண்டுகளும் ராதாவின் துப்பாக்கியில் இருந்து மட்டுமே வெளியேறியது என நிரூபித்தனர்.
இந்த சம்பவம் நடந்தபோது, கண்ணால் பார்த்த ஒரே சாட்சி. தயாரிப்பாளர் வாசு மட்டும்தான். அவர் தன்னுடைய சாட்சியத்தில்,
'எம்.ஜி.ஆரை சுட்டுவிட்டு அதே துப்பாக்கியால் இரண்டு முறை தன்னை சுட்டுக் கொண்டார் ராதா' என வாக்குமூலம் கொடுத்தார்.
'எம்.ஜி.ஆர் செல்வாக்குமிக்கவர் என்பதால் வாசுவை மிரட்டி பொய் சொல்ல வைக்கின்றனர்' என ராதா தரப்பில் வாதம் செய்தாலும், முடிவில் சிறைத்தண்டனைக்கு ஆளானார் ராதா.
நீதிமன்றத்தில் வாதம் நடந்தபோது பல சுவாரஸ்ய சம்பவங்களும் நடந்தன.
'எம்.ஆர்.ராதா லைசென்ஸ்
இல்லாத துப்பாக்கியால் சுட்டார்' என அரசுத் தரப்பு வக்கீல் குற்றம் சாட்டிக் கொண்டே போக, ஒருகட்டத்தில் கடுப்பான ராதா,
"யுவர் ஆனர். வழக்கில் குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும். 'லைசென்ஸ் இல்லாத துப்பாக்கியால் ராதா சுட்டார்' என அரசுத் தரப்பு வக்கீல் சொல்வதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். துப்பாக்கியால் சுட்டதில் நானும் சாகவில்லை. ராமச்சந்திரனும் சாகவில்லை. யாரையும் கொல்லாத ஒரு துப்பாக்கிக்கு லைசென்ஸ் தேவையா?" எனக் கேட்க, அதிர்ந்தது நீதிமன்றம்.
துப்பாக்கிச் சூடு வழக்கு மிக விரைவாக நடந்தது. அதே ஆண்டு நவம்பர் 4-ம் தேதியன்று நீதிபதி லட்சுமணன் தீர்ப்பை வாசித்தார்.
'அரசியல் முன்விரோதம் காரணமாக ராதா தன் துப்பாக்கியால் எம்.ஜி.ஆரை சுட்டார். பிறகு தன்னைத்தானே இரண்டு முறை சுட்டுக்கொண்டார். இதை அரசுத்தரப்பு ஆதாரபூர்வமாக நிரூபித்துள்ளது' எனக் கூறி,
ராதாவுக்கு ஏழாண்டு கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது. தீர்ப்பை எதிர்த்து ராதா உயர்நீதி மன்றத்தில் அப்பீல் செய்தார். மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது.
மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். அங்கே தண்டனை காலம் ஐந்தாண்டுகளாகக் குறைக்கப்பட்டது. சிறையில் அவருடைய நன்னடத்தை காரணமாக நான்கு ஆண்டுகள் நான்கு மாதங்களில் அவர் விடுதலையானார்.
கடைசிவரை, எந்தப் பேச்சுவார்த்தையும் வைத்துக் கொள்ளாமல் இருந்த எம்.ஜி.ஆரும் ராதாவும் சந்தித்துக் கொண்டது பெரியாரின் இறப்பின்போதுதான்.
அப்போதுகூட, 'உங்களுக்கு பக்கத்தில் இருப்பவர்களை நம்ப வேண்டாம்' என ராதா கூறியதாகவும் ஒரு செய்தி உண்டு.
மலேசிய நிகழ்ச்சி ஒன்றை முடித்துவிட்டு தாயகம் திரும்பிய அவருக்கு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டதையடுத்து திருச்சி திரும்பினார்.
1979-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி இறந்தார். அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள முன்வந்தாலும், ராதா குடும்பத்தினர் மறுத்துவிட்டனர். அரசு மரியாதையையும் ஏற்றுக் கொள்ளவில்லை.
1967ல் எம்.ஆர்.ராதாவால் சுட*ப்ப*ட்ட* எம்ஜிஆர் 4 மாத*ங்க*ளில் பூர*ண* குண*ம் பெற்றார். குர*லில் சற்று பாதிப்பு ஏற்ப*ட்டாலும் அதை பொருட்ப*டுத்த*வில்லை. முன்பை விட* வேக*மாக*வும், செல்வாக்குட*னும் இருந்து மேலும் 10 ஆண்டுக*ள் திரைவானிலும், 20 ஆண்டுக*ள் அர*சிய*ல் உலகிலும் முடிசூடா ம*ன்ன*ராக விள*ங்கினார். ம*றைந்து 33 ஆண்டுக*ள் ஆகியும் ம*ங்காப்புக*ழுட*ன் இருக்கிறார் மக்கள் திலகம்..
ஆனால், குற்ற*வாளியான* எம்.ஆர்.ராதாவோ நான்க*ரை ஆண்டுக*ளில் விடுத*லையானாலும் திரையுல*க வாழ்க்கை சோபிக்க*வில்லை..க*ருணாநிதியுட*ன் சேர்ந்துகொண்டு அவ*ர*து த*யாரிப்பான* ச*மைய*ல்கார*ன், வ*ண்டிக்கார*ன் ம*க*ன் உள்ளிட்ட* பாடாவ*தி ப*ட*ங்க*ளில் ந*டித்து பாதாள*த்திற்கு போனார்...
"த*ர்ம*மும் நீதியுமே எப்போதும் வெல்லும்"..
வாழ்க* பொன்ம*ன*ச் செம்ம*ல் புக*ழ்...
-
#பொங்கல் #ஸ்பெஷல் 1
#பொங்கல் 2021 #நல்வாழ்த்துக்கள்... "குடியிருந்த கோயில்"...
இந்தப் படத்தோட டைட்டில் சீனே சும்மா தூள் பறக்கும்...
ஓபனிங் சீன் கேட்கவே வேண்டாம் ...
அனல் பறக்கும் ...
தியேட்டர்ல விசில் பறக்கும்...
இந்த இரண்டுமே வாத்தியார் படத்துல அம்சமாக இருக்கும்.
வாத்தியார் படங்களின் இமாலயவெற்றிகளுக்கு இதுவும் முக்கிய காரணங்கள்.
இதைப் பார்த்துத்தான் இன்றைய நடிகர்கள் காப்பி அடிக்கிறார்கள்... இது
"புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்ட" கதை தான்.
இதோ அந்த டைட்டில் காட்சியும், வாத்தியாரின் ஸ்டைலான ஓபனிங் சண்டைக்காட்சியும்...
#தமிழர் #திருநாளை முன்னிட்டு தனது பக்தகோடிகளான ரத்தத்தின் ரத்தங்களுக்கு தரிசனம் தரவருகிறார்
"#வாத்தியார்"
இதோ...!!!.........bsm...
-
MGR Temple | எம்.ஜி.ஆருக்கு கோவில் கட்டிய அவருடைய ரசிகர்
சென்னை: இறைவன் எம்ஜிஆர் என்னும் பூவின் மூலம் நான் புகழடைந்துள்ளேன் என்று எம்ஜிஆருக்கு கோவில் கட்டியுள்ள அவரது ரசிகர்க கூறியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் நத்தமேடு என்ற இடத்தில் எம்.ஜி.ஆர். கோவில் கட்டப்பட்டுள்ளது. கலைவாணன் என்பவர் இந்த கோவிலை கட்டி உள்ளார்.
எம்.ஜி.ஆரின் ரசிகராகவும், அவரது பக்தராகவும் இருக்கும் கலைவாணனின் மனைவி சாந்தியின் கனவில் எம்.ஜி.ஆர் மிகவும் கவலையுடன் அவர்களது இல்லத்துக்கு நடந்து வந்ததாகவும் அவர் கொடுத்த ஐடியாபடியே இந்த கோவிலைக் கட்டியுள்ளார்.
கோவிலுக்குள் எம்.ஜி. ஆரின் மூன்று சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன. ஆறு அடி உயரத்திலான ஒரு சிலை மூலவர் சிலையாக வைக்கப்பட்டு உள்ளது. அச்சிலையின் வலப்புறமும், இடப்புறமும் இரண்டு அடி உயரத்தில் இரு சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன.
கோவில் கோபுரத்தில் ஒருசிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த கோவிலை எம்.ஜி. ஆரின் தீவிர ரசிகரான எல்.கலைவாணன் கட்டியுள்ளார். கோவிலின் நிர்வாக பொறுப்பை ஏற்றுள்ள அவர் கூறும்போது, 10க்கு 10 அறையில்தான் கட்ட வேண்டும் என்று நினைத்தோம் ஆனால் 1600 சதுரஅடி பரப்பளவில் அருள்மிகு எம்.ஜி.ஆர். கோவில் கட்டப்பட்டு உள்ளது. இதை கட்ட ரூ.21.5 லட்சம் செலவிடப்பட்டு உள்ளது. எல்லாம் இறைவன் எம்ஜிஆர் அருள்தான் என்று கூறியுள்ளார்.
1977ஆம் ஆண்டு எம்ஜிஆரை முதன் முதலாக பார்த்ததாக கூறும் கலைவாணன் அவருக்காக கோவில் கட்டியிருக்கிறார். தர்மத்தின் வழியில் நடந்த அவர்தான் தனது இறைவன் என்கிறார். இறைவன் எம்ஜிஆர் என்கிற பூவின் மூலம் இந்த கலைவாணன் மணக்கிறான். சாதாரண பேப்பர் போடும் நபரான தனக்கு எம்ஜிஆர் மூலம்தான் பணம் கிடைக்கவில்லை. எம்ஜிஆர் கோவில் கட்டுவதற்காக இந்த இடத்தை வாங்கியிருக்கிறார்.
மவுண்ட்ரோட்டில் பேப்பர் போடும் தொழில் செய்து வந்த தனக்கு எல்லாமே எம்ஜிஆர்தான் என்று கூறுகிறார். அவருக்கு உதவி செய்பவர் அவரது மகள் சங்கீதா.
ஒவ்வொரு எம்.ஜி.ஆர். படமும் தனது வாழ்க்கையில் ஒரு பாடமாக அமைந்ததாகவும் இப்போது எனது ஒரே கடவுள் இறைவன் எம்.ஜி.ஆர்.தான் என்று மூச்சுக்கு மூச்சு சொல்லி நெகிழ்கிறார் கலைவாணன். இந்த கோவிலுக்கு மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் அவரது தீவிர பக்தர்கள் வந்து செல்கிறார்கள். ஆண்டு தோறும் ஆகஸ்டு 15ம்தேதி அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் எம்.ஜி.ஆரின் சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும்.
வாழ்ந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்' என்ற வரிகளுக்கு ஏற்ப நடிகராக இருந்து தலைவராக உயர்ந்த எம்.ஜி.ஆர். இன்றைக்கு கடவுளாக கொண்டாடப்படுகிறார். அவர் உயிருடன் இருக்கும் போதே எத்தனையோ கர்ப்பிணிப் பெண்கள் எம்.ஜி.ஆரை காண தவம் இருப்பார்களாம். காரணம், எம்.ஜி.ஆரைப் போல குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காகத்தானாம். இன்றைக்கும் குழந்தை வரம் வேண்டி எம்.ஜி.ஆர் கோவிலுக்கு இருமுடி கட்டி படையெடுக்கின்றனர். குழந்தை பாக்கியம் வேண்டி தம்பதிகள் சிலர் வருவதாகவும், சிலருக்கு அற்புதங்கள் நிகழ்ந்து இருப்பதாகவும் கூறுகிறார்கள்..........Baabaa...
-
ராமாவரம் தோட்டத்துக்குப் போனா கண்டிப்பா நம்ம வீட்ல உலை பொங்கும்!
https://www.thaaii.com/?p=59758
ஒசாமஅசா தொடர்; 16 எழுத்தும், தொகுப்பும்; மணா
பம்பாய்க்கு நாடகம் நடத்த ஒருமுறை நான் போயிருந்தபோது தெருவில் எங்கள் குழுவினரோடு போய்க்கொண்டிருந்தேன்.
அப்போது வழியில் சந்தித்த ஒரு வயதான கிழவி சொன்னார்.
“தம்பி.. உன்னை எம்.சி.ஆர். நடிச்ச படங்கள்லே பாத்திருக்கேன்.. நல்லா நடிக்கிறே.. எனக்கு நீ ஒரு உதவி செய்யணுமே..
“என்னம்மா… சொல்லுங்க”.. - என்றேன்.
“எம்.சி.ஆர். கிட்டே நான் விசாரிச்சேன்னு சொல்றீயா?”
அவருடைய பெயர், முகவரி எதையும் அவர் சொல்லவில்லை. அப்படியே போய்விட்டார். இந்த மாதிரியான ஈர்ப்பு சக்தி ஒரு நடிகருக்கு இருப்பதை உணர்ந்தபோது வியப்பாக இருந்தது.
அவரிடம் இயல்பாக இருந்த வள்ளல் தன்மை அதற்கு ஒரு முக்கியமான காரணம். விளம்பரத்திற்காக அவர் அப்படிப் பண்ணுகிறார் என்று அவரைச் சிலர் விமர்சிப்பதைப் பார்த்திருக்கிறேன். விளம்பரத்திற்காக அவர் சில விஷயங்களைச் செய்திருக்கலாம். ஆனால் விளம்பரம் செய்துகொள்ளாமல், விளம்பர நோக்கம் இல்லாமல் அவர் பிறருக்குச் செய்த உதவிகள் ஏராளம்.
யாராவது அவருக்கு முன்னாடி கஷ்டப்படுவதைப் பார்த்தால், உடனே உதவி பண்ணியிருக்கிறார். சினிமாவுலகில் அவருக்கு எதிராக இயங்கியவர்களுக்குக் கூட அவர் உதவியிருக்கிறார்.
சட்டாம்பிள்ளை வெங்கட்ராமன் என்கிற நடிகருடைய தாயார் மறைந்தபோது அவர் போய் நின்ற இடம் எம்.ஜி.ஆரின் ராமாவரம் வீடு. அவரை அடையாளம் கண்டு விசாரித்த எம்.ஜி.ஆர். உடனே வீட்டில் இருந்தவர்களை அழைத்தார்.
“இவருக்கு ஒரு வேலைக் கொடுத்திருங்க. தேவைப்படுகிற பணத்தைக் கொடுத்திருங்க” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.
அந்த முதிர்ந்த நடிகரான வெங்கட்ராமன் பிறகு சொன்னார். “வீட்டிலே அடுப்பில் உலையை வைச்சுட்டு ராமாவரம் தோட்டத்துக்குப் போனா கண்டிப்பா உலை பொங்கும்”.
இதெல்லாம் நான்கு பேருக்குத் தெரியவேண்டும் என்பதற்காகச் செய்கிற காரியங்கள் இல்லை. எனக்குத் தெரிந்து அவரிடம் உதவி பெற்றவர்கள் பலர். அதெல்லாம் வெளியே தெரிய வந்ததில்லை.
“ஒருமுறை அவுட்டோர் ஷூட்டிங்கிற்காக காரில் எம்.ஜி.ஆருடன் போய்க் கொண்டிருந்தோம். நல்ல வெயில் நேரம். யாரோ ஒரு அம்மாள் காலில் செருப்பில்லாமல் போவதைப் பார்த்துவிட்டு, என்ன நினைத்தாரோ, அந்தக் கால்களின் சூட்டைத் தான் உணர்ந்த மாதிரி, சட்டென்று தன்னுடைய காலில் போட்டிருந்த செருப்புகளைக் கழட்டி அந்த அம்மாவிடம் கொடுத்துவிட்டார்.
எம்.ஜி.ஆர். கூட இருந்த டிரைவருக்கும், எங்களுக்கும் தான் இது தெரியும். அவரிடம் வந்து யாரும் கேட்கவில்லை. இருந்தபோதும் தானாகச் செய்தார்” என்று எம்.ஜி.ஆருக்கு நெருக்கமான ஒருவர் என்னிடம் சொல்லியிருக்கிறார்..
அவரிடமிருந்த ஏதோ ஒரு குணம் அவரை அப்படிச் செயல்பட வைத்திருக்கிறது. இது மிகையில்லை. அவருடைய இயல்பு.
எம்.ஜி.ஆருக்கு இருந்த இளகிய சுபாவத்துக்கு உதாரணமாக நான் பார்த்தவரையில் எத்தனையோ நிகழ்ச்சிகளைச் சொல்லலாம்.
வெளியூர்களில் ‘ஷூட்டிங்’ நடக்கும்போது டெக்னீஷியன்கள் உட்படப் பலருக்கு போடப்படும் சாப்பாட்டை அந்த இடத்துக்குப் போய் சாப்பிட்டுப் பார்ப்பார். அவர் சம்பந்தப்பட்ட ஷூட்டிங்கில் எப்போது வேண்டுமானாலும் இப்படி அவர் சோதிப்பது நடக்கும் என்பதால் படக்குழுவினர் அனைவருக்கும் வழங்கப்படும் சாப்பாடும் தரமாகவும், சுவையாகவும் இருக்கும்.
அவருடன் பல படங்களில் நடித்திருக்கிறேன். அப்போது என்மீது விசேஷமான பரிவைக் காட்டியிருக்கிறார். நான் அப்போது மாலை நேரங்களில் நாடகங்கள் நடத்திக் கொண்டிருந்ததால் நான் சம்பந்தப்பட்ட காட்சிகளை சீக்கிரமே எடுத்து அனுப்புவார்.
‘அடிமைப்பெண்’ படத்திற்காக ஜெய்ப்பூரில் பதினைந்து நாட்களுக்கு மேல் ‘ஷூட்டிங்’. நான் புறப்படுவதற்கு முன்பே அவரிடம் நான் லீகல் அட்வைஸராக இருந்த டி.டி.கே. கம்பெனியில் ஒரு வழக்கு விஷயமாக குறிப்பிட்ட நாளில் சென்னை திரும்பியாக வேண்டும்.
அந்த வழக்கில் வாய்தா கேட்காமல் நான் ஆஜராக வேண்டும் என்பதையும் சொல்லியிருந்தேன். அவரும் எப்படியாவது அதற்குள் என்னை அனுப்பி விடுவதாகச் சொல்லியிருந்தார்.
ஜெய்ப்பூருக்குக் கிளம்பிப் போய்விட்டோம். அதற்குப்பிறகு எம்.ஜி.ஆரிடம் நான் அதை நினைவுப்படுத்தவில்லை. ‘ஷுட்டிங்’ நடந்து கொண்டிருந்தபோது எனக்குத் தாங்க முடியாத அளவுக்கு வயிற்றுவலி. துடித்துப்போய் விட்டேன். எம்.ஜி.ஆர். என்னை வந்து பார்த்தார்.
“உங்களுக்கு உடம்பு சரியாகிற வரைக்கும் நடிக்க வேண்டாம். ரெஸ்ட் எடுங்க. சென்னைக்குப் போக ‘டிலே’ ஆகிடும்னு நினைக்காதீங்க. உங்களைச் சொன்னபடி சரியா அனுப்பி வைச்சுடுவேன்” என்று சொல்லிவிட்டு அவருக்காக அவருடன் வந்திருந்த டாக்டரை என்னுடன் தங்க வைத்துக் கவனித்தார்.
என்னுடன் வந்திருந்த நண்பர்களை அழைத்து “அவர் கூடவே இருந்து கவனிச்சுக்குங்க. அவர் எதையும் கேட்கத் தயங்குவார். நீங்க எது வேண்டுமானாலும் புரொடக்ஷன் மேனஜரை உடனே காண்டாக்ட் பண்ணுங்க” என்று பரிவோடு என்னைப் பார்த்துக் கொண்டார்.
அன்றைக்கு நான் சென்னைக்குக் கிளம்ப வேண்டிய தினம். அதை நான் வலியுறுத்தாவிட்டாலும் நான் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தையும் அன்று மாலைக்குள் எடுத்து முடித்துவிட்டு, “நான் சொன்னபடி செஞ்சுட்டேன். பார்த்தீங்களா?” என்று கேட்டார்.
நாங்கள் ஜெய்ப்பூரில் இருந்தபோது அவருடைய நூறாவது படமான ‘ஒளிவிளக்கு’ தமிழகத்தில் ரிலீஸாகி நல்ல வரவேற்பு.
நாங்களோ பாலைவனத்தில் ஷூட்டிங்கில் இருந்தோம்.
“ஏமாற்றாதே... ஏமாற்றாதே...” பாட்டுக்கான ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. ‘ஒளிவிளக்கு’ ரிலீஸ் ஆனதற்காக எம்.ஜி.ஆரைப் பாராட்டி ஏதாவது செய்ய வேண்டும் என்று அங்கிருந்த நண்பர்களுடன் கூடி முடிவு செய்தேன்.
ஒரு பெரிய விளக்கை வாங்கினோம். அதில் நூறு துவாரங்கள் இருந்தன. அதில் வரிசையாக எம்.ஜி.ஆர். நடித்த படங்களை எழுதி ஒட்டி அன்றைக்கு இரவு படப்பிடிப்பு முடிந்ததும் எம்.ஜி.ஆரிடம் கொடுத்தோம்.
அன்றைக்கு மிகவும் நெகிழ்ந்து “நான் இதை ரொம்பப் பத்திரமா வைச்சிருப்பேன்” என்றார் எம்.ஜி.ஆர்.
அவருடைய ஞாபக சக்தி அசாத்தியமானது. எப்படி இதையெல்லாம் அவர் துல்லியமாக நினைவில் வைத்திருக்கிறார் என்று ஆச்சர்யமாக இருக்கும். ஜெய்ப்பூரில் ‘அடிமைப்பெண்’ ஷூட்டிங். என்னுடன் சில நண்பர்களும் வந்திருந்தார்கள்.
நான் அங்கு போனதும் ‘மேக்கப்’ போடப் போய்விட்டேன். நண்பர்கள் ‘ஷூட்டிங் ஸ்பாட்’டை வேடிக்கை பார்க்கப் போய்விட்டார்கள். அப்படி முதலில் அங்கு போன என் நண்பர்களைப் பார்த்துவிட்டார் எம்.ஜி.ஆர். அவர்களுடைய பெயர்களை முதற்கொண்டு சரியாக நினைவில் வைத்து “நீங்க தானே ரெங்காச்சாரி?” என்று அவரவர் பெயர்களைச் சொல்லி அவர் கூப்பிட்டு விசாரித்ததும் அவர்கள் அசந்துபோய் அவரைப் புகழ ஆரம்பித்து விட்டார்கள்.
அதே மாதிரி இன்னொரு நிகழ்ச்சி, எங்கள் நாடகக்குழுவில் நடிக்கும் நண்பனான நீலு ஒரு முறை ஷூட்டிங்கிற்கு வந்திருந்தான். கல்கத்தாவில் வேலை பார்த்ததால் அங்கு ஒரு வருஷம் இருந்துவிட்டு அப்போதுதான் சென்னைக்கு வந்திருந்தான்.
அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் எங்களுடைய நாடகம் ஒன்றிற்கு தலைமை தாங்கியிருந்தார் எம்.ஜி.ஆர். அந்த நாடகத்தில் நீலு நடிக்கவில்லை. ‘எம்.ஜி.ஆரிடம் அவனை அழைத்துக் கொண்டுபோய், “இவன் தான் நீலு. எங்க டிராமாக்களில் நடிக்கிறான்” – அறிமுகப்படுத்தினேன்.
“எனக்குத்தான் இவரைத் தெரியுமே. உங்க நாடகத்தில் பார்த்தேனே!” – என்றார் எம்.ஜி.ஆர்.
“சார்.. இரண்டு நாட்களுக்கு முன்னாடி நீங்க பார்த்த டிராமாவில் இவன் நடிக்கவே இல்லை. இன்னைக்குத்தான் சென்னைக்கு வந்திருக்கான். இவனைத் தெரியும்னு சொல்றீங்களே” என்று நான் குறுக்கிட்டேன்.
“நான் ரெண்டு நாட்களுக்கு முன்னாடி பார்த்த நாடகத்தில் இவர் நடிச்சதா நான் சொன்னேனா? உங்க நாடகத்தில்னுதானே சொன்னேன்.
போன வருஷம் நான் பார்த்த உங்க நாடகத்தில் வக்கீல் வேஷம் போட்டவர்… இவர்தானே. அதைத்தான் நான் சொன்னேன்” கேட்டுக் கொண்டிருந்த நானும், நண்பர்களும் திகைக்கிற அளவுக்கு இருந்தது. அவருடைய அபாரமான நினைவாற்றல்.............
-
பொங்கல் திருநாளை முன்னிட்டு*மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரைக்காவியங்கள்*மறுவெளியீடு* பட்டியல் விவரம் தொடர்ச்சி .........
---------------------------------------------------------------------------------------------------------------------------------
மதுரை ராம் அரங்கில் -நினைத்ததை முடிப்பவன் -தினசரி 3 காட்சிகள்*
தகவல் உதவி : திரு.எஸ். குமார், மதுரை.*
திருச்சி -பேலஸ்* அடிமைப்பெண்* - தினசரி 4 காட்சிகள்*
திருச்சி -முருகன் - எங்க வீட்டு பிள்ளை - தினசரி 4 காட்சிகள்*
தகவல் உதவி : திரு.கிருஷ்ணன், திருச்சி.
சேலம் -அலங்கார - அடிமைப்பெண் - தினசரி 4 காட்சிகள்*
தகவல் உதவி :திரு.வி.ராஜா, நெல்லை.
கோவை - டிலைட் - சக்கரவர்த்தி திருமகள் - தினசரி* 2* காட்சிகள்*
தகவல் உதவி : திரு.ஜெயக்குமார், கோவை.**
-
1967-ம் ஆண்டுக்கு முன் வந்த படங் களில் எம்.ஜி.ஆரின் குரல் கணீ ரென வெண்கல மணி போல ஒலிக் கும். துப்பாக்கிச் சூடு சம்பவத் துக்கு பின் தொண்டையில் குண்டு பாய்ந்ததால் அவரது குரல்வளம் பாதிக்கப்பட்டது. படங்களில் வேறு யாரையா வது ‘டப்பிங்’ கொடுக்கச் செய்யலாம் என்ற யோசனை களை எம்.ஜி.ஆர். நிராகரித்து விட்டார். சொந்தக் குரலில் பேசி நடிக்கவே அவர் விரும்பினார். அவர் குரல் எப்படி இருந்தாலும் பரவாயில்லை என்று அதை ரசிகர்களும் மக்களும் ஏற்றுக் கொண்டனர்.
‘காவல்காரன்’ படத்தில் எம்.ஜி.ஆர். பேசும் வசனங்கள் இரண்டு, மூன்று முறை ஒலிப்பதிவு செய்யப்பட்டன. ஒரு காட்சி முடிந்ததும் அதற்கான வசனங் களை எம்.ஜி.ஆர். மீண்டும் பேசி ஒலிப்பதிவு செய்யப்பட்டது. இப்படி ஒலிப்பதிவு செய்யப்பட்ட வசனங்களை எடிட்டிங்கின்போது காட்சிகளோடு ஒருங்கிணைப்பது மிகவும் கடினம். எம்.ஜி.ஆர். தனக்கே உரிய தொழில் நுட்ப சாதுர்யத்தோடு பலமுறை பதிவு செய்யப்பட்ட வசனங்களில் எந் தெந்த வார்த்தைகள் சரியாக ஒலிக் கிறதோ அவற்றை அங்கிருந்து ஒரு வார்த்தை, இங்கிருந்து ஒரு வார்த்தை என்று எடுத்து ஒன்று சேர்த்து காட்சிகளோடு ஒருங் கிணைத்து தொழில்நுட்ப வசதிகள் இல்லாத அந்தக் காலத்திலேயே அற்புதமாக எடிட் செய்தார்.
பாதிக்கப்பட்ட பேச்சு திறனை மீண்டும் பெற எம்.ஜி.ஆர். விடாமுயற்சியுடன் செயல்பட்டார். ‘ஸ்பீச் தெரபிஸ்ட்’ எனப்படும் பேச்சு பயிற்சி அளிக்கும் நிபுணர்களை வரவழைத்து பயிற்சிகள் எடுத்துக் கொண்டார். நரம்பியல் நிபுணர் டாக்டர் பி.ராமமூர்த்தி, குடும்ப டாக்டர் பி.ஆர்.சுப்பிரமணியம் ஆகியோரின் ஆலோசனையின்படி, நள் ளிரவில் உதவியாளர்களுடன் கடற்கரை சென்று தண்ணீர் படும்படி அமர்ந்து உரக்கப் பேசி பயிற்சி மேற்கொண்டார்.
‘‘நானும் சாமி என்பவரும் எம்.ஜி.ஆரு டன் நள்ளிரவில் கடற்கரைக்குச் செல் வோம். அலை வந்து மோதும் இடத்தில் அவர் அமர்ந்துகொள்ள நாங்கள் அவரை பிடித்துக் கொள்வோம். அவர் உரக்க பேசி பயிற்சி மேற்கொள்வார்’’ என்று நெகிழ்கிறார் எம்.ஜி.ஆரின் மெய்க்காவலர் கே.பி.ராமகிருஷ்ணன். மாதக்கணக்கில் எடுத்துக் கொண்ட பயிற்சி களால் பெரும் அளவில் பேச்சுத் திறனை எம்.ஜி.ஆர். மீண்டும் பெற்றார். தொண்டையில் குண்டு பாய்ந்ததால் பழைய குரலில் பேச முடியாமல் கட்டைத் தொண்டையில் ஒலித்த எம்.ஜி.ஆரின் குரலும் கம்பீரமாகவே இருந்தது.
#அண்ணாவின் இதயக்கனிக்கு
பிறந்தநாள் ஜனவரி 17 . .........
-
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் திமுகவில் இருந்த போது தெரிவித்த பொங்கல் வாழ்த்து.
__________________
14-1-62
செழுமை மிகு நாட்டினில் செந்நெல் குவித்து, எழுந்து வரும் உதய சூரியனை இன்முகத்தோடு வரவேற்று,
இல்லந்தோறும் இன்ப கீதம் எழுப்பிடும் இன்னாளில்,
இன்பத் திருவிடத்து அன்பர் அனைவருக்கும் என் உளம் நிறைந்த வாழ்த்துக்களும் வணக்கங்களும் உரித்தாகுக.
உலகுக்கே உணவளிக்கும் உழவர் தம் திருநாளில்,
உழைப்பும் உண்மையும் ஒரு சேர வெற்றி முரசு கொட்டிடும் நன்னாளில்,
இன்பம் தழைத்திட,
இனம் செழித்திட,
நீதி நிலைத்திட
இன்னாள் இன்பத் திராவிடத்திற்கோர் நல்ல சகாப்தத்தின் முன்னோடியாயத் திகழட்டுமென விழைகிறேன்.
வாழ்க திராவிடம்!
வெல்க உதய சூரியன்!
அன்பன்
எம்.ஜி.ராமச்சந்திரன்..........vrh...
-
"தனிப்பிறவி" தங்கத் தலைவர் தேவருடன் இணைந்த 11 வது திரைப்படம்.1966 செப் 18 ல் வெளியாகி குறுகிய காலத்தில் மிகப்பெரிய வசூலை குவித்த படம். பாடல்கள் அத்தனையும் நவீன இசையமைப்பில் கவர்ச்சியான மெட்டுக்களில் வெளிவந்து ரசிகர்களை கவர்ந்த படம். தேவரின் குறுகிய கால தயாரிப்பில் வெளியான படம்.
தலைவரின் மறுபிறவிக்கு முன் வெளியான வெற்றிப்படம்தான் தனிப்பிறவி. அடுத்தடுத்து வெளியான தலைவரின் வெற்றிப்படங்களான "பறக்கும் பாவை" "பெற்றால் தான் பிள்ளையா" இரண்டு வெற்றிப் படங்களையும் தாண்டி முக்கிய நகரங்களில் 75 நாட்கள் வரை ஓடி வெற்றிக்கொடியை பறக்க விட்ட படம். உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த தலைவர் ரசிகர்கள் விரும்பி பார்த்த படம்.
பாமர மக்களிடையே 'கன்னத்தில் என்னடி காயம்?' பாடல் மிகவும் பிரசித்தி பெற்றது. "தனிப்பிறவி" படத்தின் பெயரில் விற்ற புடவை, வளையல் அந்தக்காலத்தில் மிகுந்த வரவேற்பை பெற்றது. சென்னையில் "பறக்கும் பாவை" வெளியாகும் வரை (அதாவது தீபாவளி வரை) 54 நாட்கள் ஓடியது. திருநெல்வேலி பார்வதியில் வெளியாகி 50 நாட்களை தாண்டி மாட்னி காட்சியுடன் ஓடி சிறப்பான வெற்றியை பதிவு செய்தது.
மாற்று நடிகரின் வெற்றிப்படம் என்று சொல்லும் "கலாட்டா கல்யாணம்" இங்கு ஓடியது வெறும் 13 நாட்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அது தெரிந்தால்தான் "தனிப்பிறவி"யின் வெற்றி தன்னிகரற்றது என்பது புரியும். நெல்லையில் அய்யனின் அநேக படங்கள் 4 வாரத்தை தாண்டியதில்லை. "தனிப்பிறவி" 50 நாட்கள் தாண்டியதை முன்னிட்டு ரசிகர்கள் நோட்டீஸ் அடித்து மகிழ்ந்தார்கள்.
தீபாவளி குறுக்கீட்டால் படம் 54 நாட்களில் எடுக்கப்பட்டது. தூத்துக்குடியில் செப் 18 ல் வெளியாகவில்லை. அக் 9 ல் வெளியாகி 33 நாட்கள் தீபாவளி வரை ஓடி தொடர்ந்து "பறக்கும்பாவை" வெளியாகி 28 நாட்கள் நடைபெற்றது. அதை தொடர்ந்து "பெற்றால் தான் பிள்ளையா" வெளியாகி 36 நாட்கள் பொங்கல் வரை தொடர்ந்தது. 1966 ல் தூத்துக்குடி பாலகிருஷ்ணாவில் தலைவர் படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு மகசூலை பெருக்கினார்கள் என்றே சொல்ல வேண்டும்..........ksr...
-
1964 ம் வருசம் பொங்கலுக்கு வெளியாகி பிரம்மாண்ட வண்ணப் படங்களை வசூல் வேட்டை ஆடினவர். மெட்ராஸ் மாநகராட்சி தேர்தலில் அண்ணா, கருணாநிதி பிரச்சாரத்தை பத்திகூட காமராஜ் சொல்லவில்லை. சினிமா பாக்காத காமராஜையே வேட்டக்காரன் வருவார்.. ஏமாறாதீங்க என்று பேச வெச்ச மக்களின் மனங்களை வேட்டையாடின வேட்டைக்காரனுக்கு வருசம் கணக்குப்படி பாத்தால் 56 வயது. ஆனால் என்னிக்குமே அவருக்கு வயசு 16தான். திரை உலக வசூல் வேட்டைக்காரன் ஓட்டு வேட்டைக்காரருக்கு வாழ்த்துக்கள்........rrn...
-
மக்கள் திலகம் நடித்து பொங்கலுக்கு வெளியான படங்கள். 1.அரிச்சந்திரா 14,1,44, 2,அலிபாபாவும் நாற்பது திருடர்களும் 14,1,56, 3, சக்ரவர்த்தி திருமகள் 18,1,57, 4 ராணி சம்யுக்தா 14,1,62, 5, பணத்தோட்டம் 11,1,63, 6,வேட்டைக்காரன் 14,1,64, 7 ,எங்க வீட்டுப் பிள்ளை 14,1,65, 8 ,அன்பே வா 14,1,66, 9,தாய்க்கு தலைமகன் 13,1,67, 10,ரகசிய போலிஸ்115 11,1,68, 11,மாட்டுக்கார வேலன் 14,1,70 12,மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் 14-01-1978,...
-
மக்கள் திலகத்துடன் நடிகர் அசோகன் தொடர்ந்து நடித்த 19 படங்கள் .
நடிகர் அசோகனுக்கு மட்டும் கிடைத்த பெருமை
1968-1972. கால கட்டத்தில் வெளியான மக்கள் திலகத்தின் படங்கள் .]
கண்ணன் என காதலன் - புதிய பூமி - கணவன் - ஒளிவிளக்கு - காதல் வாகனம் - அடிமைப்பெண் - நம்நாடு - மாட்டுக்காரவேலன் - என் அண்ணன் - தலைவன் - தேடிவந்த மாப்பிள்ளை - எங்கள் தங்கம் - குமரிகோட்டம் -ரிக்ஷாக்காரன் - நீரும் நெருப்பும் - ஒரு தாய் மக்கள் - சங்கே முழங்கு - நல்ல நேரம் - ராமன் தேடிய சீதை - மொத்தம் 19 படங்களில்
நடித்திருந்தார் . வில்லனாகவும் , குணசித்திர வேடத்திலும் சிறப்பாக நடித்திருந்தார் . நன்றி முகநூலில் vsm...
-
"எம்.ஜி.ஆர் ஒரு அஷ்டாவதானி!"
- ஜானகி எம்.ஜி.ஆர்
1984-ம் ஆண்டு எனது அன்பு நாயகர் உடல்நலங்குன்றி மருத்துவம் பார்ப்பதற்கு முன்பு நாகர்கோவிலில் நடைபெற்ற முப்பெரும் விழாவுக்குப் போனார்.
விழா, இலக்கிய நயம் வாய்ந்த விழா. பெரும்புலவர் ‘அதன்கோட்டு ஆசான்’ அவர்களுக்கு நினைவுச் சின்னமும், நமது காலத்தில் வாழ்ந்திட்ட சதாவதானி செய்குதம்பி பாவலர் அவர்களுக்கு நினைவகமும், பொதுவுடைமை மாமேதை ஜீவா அவர்களுக்கு சிலை திறப்பும் ஆகும்.
கற்றறிந்த மேதையர்கள் மேடையிலும் கீழுமாக குழுமியிருந்தார்கள். தொல்காப்பிய அறிவை பெரும்புலவர்கள் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.
நமது இதய தெய்வம் இறுதியாகப் பேச எழுந்தார். லட்சக்கணக்கான மக்களின் ஆர்வ அலை மோதிக் கொண்டிருந்தது. ஆனால் பெரும் புலவர்களிடையே இருந்த எண்ணமோ வேறுபட்டதாகத்தான் இருந்திருக்க வேண்டும். ‘இவர் என்ன அப்படிப் பேசிவிடப் போகிறார்’ என்கிற மாதிரிதான் தங்கள் இருக்கைகளில் அமர்ந்திருந்தார்கள்.
இவர் பேச ஆரம்பித்தார். “நான் நாடகத் துறையிலிருந்து சினிமாவுக்கு வந்தவன். நாடகத்தில் ‘நவரச நடிப்பு’ என்பார்கள் ரவுத்திரம், ஹாஸ்யம், சோகம், காமம், மோகனம் என்று வரிசைப்படுத்திவிட்டு தமிழில் இதனை ‘ஒன்பான் சுவை’ என்பார்கள்.
ஆனால் தமிழர்களின் மூல இலக்கண, இலக்கிய நூலாகிய தொல்காப்பியத்தில் ஒன்பது சுவைகள் கூறப்படவில்லை என்று நிறுத்தினார்.
பெரும் புலவர்கள் அத்தனை பேரும் ஆய்வு செய்யாத ஒரு விஷயத்தை அன்று சொன்னார். அறிஞர்கள் அத்தனை பேரும் நாற்காலியின் விளிம்பிற்கே வந்து விட்டார்கள்.
இதையெல்லாம் பொருட்படுத்தாமல் அவர் தொடர்ந்து பேசினார். “தொல்காப்பியத்தில் சினம், சிரிப்பு, வெகுளி, துன்பம் முதலான எட்டு சுவைகள் மட்டுமே கூறப்பட்டுள்ளன. ஒன்பதாவது சுவையான ‘மோனம்’ அதாவது ‘தவம்’ அதில் இல்லை. காரணம் ‘தவம்’ தமிழர்கள் நெறியல்ல. அது மாற்றார் நெறி!”
இப்படி தொடர்ந்து ஏறத்தாழ ஒரு மணி நேரம் ஒரு தொல்காப்பிய விரிவுரையே நிகழ்த்தினார்.
அவர் ஒரு நடிகர். அரசியலில் முதல்வர். இப்படி ஏதோ ஒன்றில்தான் சம்பந்தப்பட்டு இருப்பார் என்று பலரும் நினைத்துக் கொண்டிருப்பார்கள். தான் கற்றதை மட்டுமே துணையாகக் கொண்டு, அறிஞர்கள் அவையிலும் அவர்களை நிறைவு செய்ய முடியும் என்பதற்கு என் நெஞ்சில் நிற்கிற நிஜமான சான்று இவர்.
இளம் வயதில் தன் கையெழுத்திலும் தமிழின் உணர்வு தலை தூக்குவதற்கு ஒருவர் காரணமாக இருந்தார் என்று அவரே சொல்லக் கேட்டிருக்கிறேன்.
அநேகருக்குத் தெரியாத அந்த உண்மையை நான் இங்கே சொல்வது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன்.
நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி அவர்களும் எனது அன்பு நாயகரும் சிறுவயதில் ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் ஒன்றாக நடித்து வந்தவர்கள்.
அந்தக் காலத்தில் இவர், தன் பெயரை ‘எம்.ஜி.ராமச்சந்தர்’ என்று தான் எழுதி வருவாராம். இதைக்கண்ட நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ஆர் அவர்கள் “வடநாட்டுக்காரர்களைப் போல பெயர் எழுதுவது நன்றாக இல்லை அழகான தமிழில் எழுதலாமே” என்றார்.
அதன்படியே பிறகு கடைசிவரை கையெழுத்திட்டு வந்தார். இதை தோட்டத்துத் தூயவரே சொல்ல கேட்டு இருக்கிறேன்
28.08.1988......... Srinivasan...
-
[அாிசி சோறை
அறிமுகப்படுத்திய
தலைவா்
சென்னை இராஜாஜி மண்டபம் .
முற்பகல் நேரம் பத்து மணி ...
கோட் , சூட் சகிதமாய் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் , மாவட்ட ஆட்சியாளர்கள் மண்டபத்திற்குள் வந்து குழுமியிருக்கிறார்கள் .
அதிகாரிகள் இருக்கையில் அமர்ந்த பத்தாவது நிமிடம் , வரலாற்றுப் புகழ்மிக்க 4777 எண் உள்ள பச்சை நிற அம்பாசடர் கார் சர்ரென்று இராஜாஜி மண்டப வாசலில் வந்து நிற்கிறது .
காலத்தை வென்றக் காவிய நாயகன் முதலமைச்சராக முதன் முறையாக இராஜாஜி மண்டப படிக்கட்டில் பாதம் பதிக்கிறாா் .
செக்யூரிட்டிகள் பின் தொடர மண்டபப் படிக்கட்டுகளில் இராஜ நடை போட்டு அந்த ஆலோசனை கூட்டத்திற்குச் செல்கிறார் .
ஆலோசனைக் கூட்டத்தில் புரட்சித்தலைவா் எம்.ஜி.ஆர் அவர்கள் ,
"ஆட்சியை மக்கள் என்னிடம் நம்பி ஒப்படைத்து இருக்கிறார்கள் .
உடனடியாக அவர்களுக்குச் செய்ய
வேண்டிய நல்ல திட்டங்களைச்
சொல்லுங்கள் , ஆக வேண்டியதை
நான் பார்த்துக் கொள்கிறேன் "
என்று மாவட்ட கலெக்டர்களிடமும் ,
உயர் அதிகாரிகளிடமும் , ஆலோசனை கேட்கிறார் .
அப்பொழுது அந்த நேரத்தில் ,
அந்த மண்டபத்தில் பெயின்டிங் வேலை செய்து கொண்டிருந்த ஒரு இளைஞர் , எவரையும் அனுமதிக்காத அந்த கூட்ட வளாகத்துக்குள் தடையை மீறி நுழைந்து விடுகிறார் .
காவலர்களின் கட்டுப்பாட்டை மீறினாலும் அந்த மக்கள் தலைவர் ,
அந்த குடிமகனைக் கூப்பிட்டு மன்னித்து , வந்த நோக்கத்தைச் சொல் என்கிறார் .
"எனக்கென்று எதுவும் கேட்க வரவில்லை தலைவா ! கிராமங்களில் இன்னமும் பாமர மக்கள் மக்கிப் போன சோளக் கூழைத்தான் சாப்பிட்டு வருகிறார்கள்.
நெல்லுச் சோறு என்பது மாசத்துல ஒருநாள் அல்லது வாரத்துல ஒருநாள் , இல்லாட்டி நல்ல நாள் பெரிய நாளைக்குத்தான் நெல்லுச் சோற்றைப் பார்க்க முடியுது , இது நமக்கு ஆண்டவன் விதித்த விதி என்றே மக்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள் .
அந்த அளவுக்கு வறுமையை பழகிக் கொண்டு , சகித்து வாழ முன்பிருந்த ஆட்சியாளர்களால் பழக்கப்படுத்த விடப்பட்டிருக்கிறார்கள் .
அதை மட்டும் போக்கிக் காட்டுங்கள் , உங்கள் ஆட்சியை வரலாறு , பொற்கால ஆட்சி என்று போற்றும் ."
என்கிற கோரிக்கையை முன் வைக்கிறார் அந்த குடிமகன் .
கூறியவன் ஒரு சாதாரணக் குடிமகன் தானே என்று சாதாரணமாக நினைக்காமல் , அந்த குடிமகனின் கோரிக்கையைக் குறித்து கொள்ளுங்கள் என்று கலெக்டர்களிடம் ஆணையிடுகிறார் , மக்கள்திலகம் .
"கொடுமையிலும் கொடுமையான பசியைப் போக்க வேண்டும் . உங்களுக்கு தெரியுமோ , தெரியாதோ .... ஆனால் , எனக்கு தெரியும் , பசியின் கொடுமை.
என் ஆட்சியில் பாலாறு தேனாறு ஓடும் என்றெல்லாம் சொல்ல மாட்டேன் . ஆனால் மக்கள் பசிக் கொடுமையை அனுபவிக்க ஒருக்காலும் விட மாட்டேன் .
என் மக்கள்,தினமும் அரிசிச் சோறு சாப்பிடுவதற்கான திட்டத்தைச் சொல்லுங்கள் . அதற்கு ஆகும் செலவைச் சொல்லுங்கள் , நிதி ஒதுக்கித் தருகிறேன் .
என் மக்கள் பசி போக்க , அரிசி எங்கிருந்து கிடைத்தாலும் ,எப்பாடு பட்டாவது , வாங்கி வருகிறேன் . உங்களுக்கு அரை மணி நேரம் அவகாசம் தருகிறேன் . திட்டமிட்டு சொல்லுங்கள் "
என்று கூறி விட்டு மேஜையில் கிடந்த பேப்பரை எடுத்து படிக்க ஆரம்பிக்கிறார்
புரட்சித்தலைவர் .
அரைமணி நேரத்திற்குப் பிறகு , ஆகும் பட்ஜெட் செலவு என்று , ஒரு தொகையை சொல்கிறார்கள் அதிகாரிகள் .
உடனே புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் அதை இரண்டு மடங்காக்கித் தருகிறேன் என்று அந்த இடத்திலேயே உத்தரவிடுகிறார் .
ஒரு சாதாரண குடிமகன் வழிமொழிந்த கோரிக்கையை வேதமாக எடுத்து செயல்பட்டிருக்கிறார் மக்கள் திலகம்! புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் ..........vrh...
-
தாயின் பெருமைகளை தன் காவியங்களின் மூலம் தலைநிமிரச் செய்த புரட்சித்தலைவரின் சொற்களில் சில ...
தாய் தந்தையரே என் இஷ்ட தெய்வம் அவர்களை வணங்குகிறேன். #மதுரைவீரன்
தாயை தெய்வமாக மதித்து சேவை செய்தால் இந்த பதவி என்ன எவ்வளவு பெரிய பதவியானாலும் பெறலாம். #தெய்வத்தாய்
உன்கிட்ட பணம் இல்லை என்றாலும் தங்கமான குணம் உள்ளதே - அம்மா அது கூட உங்க கிட்ட இருந்துதானம்மா வந்தது ( மகன் ) #நல்லவன்வாழ்வான்.
தாயை மதிக்காதவன் சத்தியமா உருபட்டதே கிடையாது. #தாய்க்குத்தலைமகன்
பெற்ற மனம் கண்ணீர் விட்டால் பிள்ளை மனம் தாங்காது. #அன்னமிட்டகை
தாயிற்கு இணையாக வேறொரு தெய்வத்தை நான் பார்த்ததில்லை. #தாயின்மடியில்
கடைசி வரைக்கும் என் தாய் குலத்தில் தான் நான் இருப்பேன். #அடிமைப்பெண்
தாய் அன்பிற்கு ஏது ஜாதி மதம் எதுவுமே கிடையாது.
#நீதிக்குதலைவணங்கு.
தாயை பட்டினி போடுவதற்கு மனம் இல்லை. அதனால்தான் இந்தத் தொழிலை செய்கிறேன். #திருடாதே
தாயின் துன்பத்தை போகாத மகன் நானிலத்தில் இருந்தென்ன பயன். #குலேபகாவலி.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க....vrh...
-
என்றும் வெற்றித் தலைவர் புரட்சித்தலைவர் கலையுலகில் காலத்தால் அழியாத அற்புத காவியங்களை கொடுத்தவர் நம் புரட்சித்தலைவர். மக்களின் மனங்கவர்ந்த நாயகன் என்றும் புரட்சித்தலைவரே !
புரட்சித்தலைவரின் காலத்திற்குப் பிறகு இன்று வரை எத்தனையோ நடிகர்கள் வந்துவிட்டார்கள் ஆனால் எவரின் படங்களும் சொல்லிக் கொள்வது போல் இருப்பதில்லை ... 10 திரைப்படங்கள் வெளிவந்தால் அதில் ஒன்று இரண்டுதான் பார்ப்பது போல் இருக்கும். ஆனால் புரட்சித்தலைவரின் திரைப்படங்கள் அப்படி இருக்காது.
புரட்சித்தலைவரின் அனைத்து திரைப்படங்களுக்கு இன்று வரையில் நல்ல வரவேற்பு இருக்கின்றன. இன்றைய இளைய தலைமுறை புரட்சித்தலைவரின் ரசிகர்களாக இருக்கும் நாங்கள் விவரம் தெரிந்த நாள் முதல் இன்று வரையில் புரட்சித்தலைவரின் திரைப்படங்களை திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டே இருக்கின்றோம்.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரைப் போல சரித்திரம் போற்றும் நாயகனாக எவராலும் வரமுடியாது. அதேபோல் புரட்சித்தலைவரைப் போல அற்புதமான, அருமையான, அதிரடியான திரைப்படங்களுக்கு ஈடு இணை எந்த திரைப்படங்களும் கிடையாது.என்றும் என்றென்றும் அனைவராலும் போற்றப்படும் மாபெரும் சரித்திரநாயகர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க....