poem: Hamir(Hindustani) is not Hamir Kalyani(Carnatic). Kedar(Hindustani) is considered to be the equivalent of Hamir KalyaNi ! :)
Printable View
poem: Hamir(Hindustani) is not Hamir Kalyani(Carnatic). Kedar(Hindustani) is considered to be the equivalent of Hamir KalyaNi ! :)
மிகவும் நன்றி Mr. Raj. கீழே ஒரு பாட்டு போடுறேன் , ஹமீர் கல்யாணியா அல்லது பெஹாகானு சொல்லுங்க ப்ளீஸ்.:)
"திரை இசையில் கர்நாடக இசை ராகங்கள் " என்ற திரியின் அட்மின் Dr. ஸ்ரீநிவாசன் கண்ணன். ராஜாவின் தீவிர ரசிகர் மற்றும் கர்னாடக இசை என்பதயும் தாண்டி அவரும் நானும் ஒரே profession. ( he graduated from Tanjore medical collage) என்னை விட பல வருடங்கள் சீனியர். நான் அந்த திரியில் சேரும் பொழுது 6 அல்லது 7 வது நபர் என்று நினைக்கிறன். இப்போ ஆயிர கணக்கில் இருக்கும். I know it is one of the fastest growing group over there. ஒரு முறை இந்த பாடல் அங்கு போஸ்ட் பண்ணி " ஹமீர் கல்யாணி ராகம்" என்று போட்டேன். அவர் வந்து இதை பேகாஹ் என்றும் அதன் காரணமும் சொன்னார். இன்னும் இதை ஹமீர் கல்யாணி என்றே நினைக்றேன்.
https://www.youtube.com/watch?v=7iNapBZToUc
இந்த ராகம் நளின காந்தியாமே.. ஆரம்பகால சிம்ரனின் நளினமும், அப்புறம் தெரிகின்ற காந்தி- ஒளியும் (முகத்திலும் கூட) ம்ம் நல்ல பாட்டாக்கும்..
http://www.youtube.com/watch?v=CI9roL2cLQc
இன்னும் இரண்டு பாடல்கள் " நளின காந்தி ராகத்தில்" முதலில் ராஜா........எப்பவும் ராஜா !!:)
""எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா "
https://www.youtube.com/watch?v=SUy_dOdG-F4
சொன்னாலும் கேட்பதில்லை ........
https://www.youtube.com/watch?v=GTXYRluKRKI
Nagoor Haneefa song. Simple but touching song.
http://youtu.be/fi7s4J40Fqg
A fantastic score by Raja in Ragaam " Hameer Kalyaani"
https://www.youtube.com/watch?v=3VwUDaqsjfw
நளின காந்த ராகப் பாடல் கள் தந்தமைக்கு நன்றி..
**
விஷ்ணு ஸ்ரீ திவ்யா பங்குபெற்ற படம் ஜீவா.. நல்ல படம்..
இது புதுப்பாட்டு தான்..ஆனா வெகு அழகு..கொஞ்சம் மனசுக்குப் பக்கத்துல வந்தது..
ஒவ்வொன்றாய்த் திருடுகிறாய் திருடுகிறாய்
முதலில் என் கண்களை
இரண்டாவது இதயத்தை..
மூன்றாவது..
என்ன ராகம்?
http://www.youtube.com/watch?feature...&v=Q3j_b2r9wnQ
அச்சோ.. பக்தியா இருந்தவங்களை மாத்திட்டேனே.. ராகதேவ்ன் தாங்க்ஸ் திருப்பாற்கடலில் பாட்டுக்கு…
பர்த்தியா ஒரு ஹிந்தி சாங்க்க் போடட்டுமா..hey meri kasam lee..
http://www.youtube.com/watch?v=IXzlJ...yer_detailpage
இன்னுமொரு அழகிய பாடல்..சின்னவயசில் ஆடியோவில் கேட்டது..இப்போ தான் பார்க்கிறேன் அதே படம் தேரே மேரேஸப்னே
ஜீவன் கி பகியா…
http://www.youtube.com/watch?feature...&v=0GnLeoKO5Os
From uyirmel aasai(67)
thumbikkainaathan thuNai by K.B.SundarambaL
http://www.youtube.com/watch?v=PEfHrNsJsaU
First carnatic vocal concert I attended was by K.B. SundarambaL in 1953/54! :)
இதுபோன்ற பாடல்களைப் போட்ட யுவன் என்ற நபரை சமீபமாகக் காணவில்லை, கண்ணில் பட்டால் பொடனியிலே போட்டு அனுப்பி வைக்கவும்.....
இந்த கமெண்டை பார்த்து சிரித்து விட்டு இந்த லிங்கை திறந்தால் இந்த பாடல். இதுவரை கேட்காத படம் /பாடல். ஆனால் அருமையான ஒன்னு. பொதுவாகவே எனக்கு எல்லா அண்ணன் தங்கை பாடல்களும் பிடிக்கும். அண்ணன் -தங்கை பாசம் என்ற ஒன்று எல்லா உறவுகளிலும் மேன்பட்ட ஒன்று. இந்த பாடலில் வரும் தங்கை போன்று நான் ஒரு நாளும் என் அண்ணன் பக்கத்தில் நின்று சாமி கும்பிட்டது இல்லை. ( இது எல்லாம் சினிமாவில் மட்டுமே நடக்க கூடியது ) ஏன், என் அண்ணனிடம் அதிகமாக பேசியது கூட கிடையாது. அரண்டு புரண்டு ஓடும் நதியின் ஆழத்தில் அசையாமல் கிடக்கும் தெளிவான கூளங் கற்கள் போன்ற அன்பு அது. தெரியாத வயதில் புரியாமல் " இருவர் ஒன்றானால் ஒருவர் என்றானால் இளமை முடிவதில்லை " என்று நான் பாடிய பொழுது என் அண்ணன் திரும்பி பார்த்து முறைத்தது இன்னும் என் நினைவில். அப்பா - அம்மாவை விட அண்ணனுக்கே அதிகம் பயந்த கால கட்டம் ஒன்று வாழ்கையில் உண்டு என்பதை அண்ணனடுடன் பிறந்த தங்கைகள் அனைவரும் அறிவர். :):) எல்லா அண்ணன்களுக்கும் இந்த பாடல்.
https://www.youtube.com/watch?v=rjPKSkWM9yE
//First carnatic vocal concert I attended was by K.B. SundarambaL in 1953/54! :) //
I didn't know that she gave a concerts !!
Everybody in fulll form!!!! Every single song is amazing. thankyou. and special thanks to s.vasudevan for "IRAIVANINDAM KAIYENDHUNGAL"..............very soothing song.........touches our very soul
Hello Shakthi, Are you alright? I hope you are doing fine. I am temporary, so no worry :):) பதிலுக்கு 2 பாட்டுதானேமா போட்டேன். அதற்காக வேரில் வெந்நீர் ஊற்ற வேண்டாம். Please.
Just close your eyes and listen to this devotional song sung by Sirkazhi.
http://youtu.be/wp9lK1YtH_k
One more song Dr Sirkazhi - Parthasarathy Avan Padame Gadhi
http://youtu.be/KNUMjRHZgFE
பல வருடங்களுக்கு முன் எனக்கு வில்லியம், ஜக்குலின் என்ற இரு நண்பர்கள் இருந்தார்கள். இருவரும் வெனிசுவேலா நாட்டை சேர்ந்தவர்கள். ( then they were boy friend and girl friend, now they married and have kids) நாங்கள் மூவரும் சேர்ந்து licensing exam க்கு படிப்போம். இப்போ அட்லாண்டாவில் cardiologist இருக்கான். நாங்கள் படிக்கும் பொழுது அவன் அடிக்கடி என்னிடம் சொல்லும் வார்த்தை. " I hate Indians" முதல் முறை அவன் சொன்ன பொழுது பதறி ஏன்டா என்றேன். அதற்கு அவன் சொன்ன பதில் " they always want to be inside of other's life, why should they care about what is going on in my personal life" .அவன் சொன்னதின் அர்த்தம் மெல்ல புரிபட ஆரம்பித்து அது எவ்வளவு தூரம் உண்மை எனபதும் புலப்பட ஆரம்பித்தது. இந்தியர்களை பற்றி பல மேல் நாட்டவர்களின் கருத்துவும் இதுதான். 10 வருடங்களுக்கு மேல் வெளி நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் நான் சொல்வதை ஆமோதிப்பார்கள்.
இதை இங்கே இப்போ சொல்ல காரணம் உண்டு. இன்று ஒருவர் அடுத்தவரை பற்றி கண்ணியம் இன்றி அடித்த comment னால் அவர் அக்கௌன்ட் முடக்கபட்டுள்ளது என்பதே. இணையம் வந்த பின் அனைவரும் எழுத்தாளர் ஆகி உண்மையான எழுத்தாளர்கள் கோமாளி ஆகிவிட்டார்கள். எழுத முடியும் /தெரியும் என்ற ஒரே காரணத்தினாலும் யாரும் எதிர்க்க மாட்டார்கள் என்ற நினைப்பிலும் அடிப்படை நாகரிகம், கண்ணியம் ஏதும் இன்றி அடுத்தவர்களை அவமானபடுத்தும் போக்கு அதிகமாகி வருது. எல்லோருடனும் ஒத்து போவது என்பது நடவாத காரியம். அந்த நேரங்களில் பரஸ்பர மரியாதை யுடன் விலகி செல்வதே சாலச் சிறந்தது.
" எல்லாம் படிச்சீங்க , படிச்சு என்ன கிழிச்சீங்க " என்ற சமூகத்தின் மீதான கோபத்தை பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் மட்டும் அல்ல,சமூதாயத்தின் மீது அக்கறை கொண்ட பாரதி, பாரதிதாசன், போன்றவ ர்களும் வெளிப்படுத்தி இருக்காங்க.!!
" வீழ்வேன் என்று நினைத்தாயோ என்றான் பாரதி. அது தான் நல்ல மனம் மட்டும் அல்ல உறுதியான மனம் கொண்டவர்களுக்கும்.
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் மிகவும் நெருங்கிய உறவினர் ஒருவர் இங்கு உண்டு. இதை படித்தால் மிகவும் சந்தோஷ படுவார். :):)
"பூமி என்னும் கிண்ணம் இசையில் நிரம்பி வழியுதம்மா "
https://www.youtube.com/watch?v=a8LaB6RhsRA
பல வருடங்களுக்கு முன்னால் எனக்கு வில்லியம், ஜாக்குலின் என்ற இரு நண்பர்கள் இருந்தார்கள். இருவரும் வெனிசுவேலா நாட்டை சேர்ந்தவர்கள். (then, they were boy friend and girl friend , now they got married and have kids) மூவரும் Licensing exam க்கு சேர்ந்து படிப்போம். இப்போ அட்லாண்டாவில் cardiologist ஆக இருக்கான். அவன் அடிக்கடி என்னிடம் சொல்லும் வார்த்தை "I hate Indians". அவன் முதன் முறையாக அதை சொன்ன பொழுது பதறி போய் ஏன்டா என்றேன் !. அதற்கு அவன் " They always want to be inside of other's life" "Why should they care about, what is going on in my personal life ??". அவன், சொன்னதின் அர்த்தம் புரிந்த பின் அதில் இருந்த உண்மையும் புலப்பட்டது. இது பல மேலை நாட்டவர்களின் கருத்துதான். 10 ஆண்டுகளுக்கு மேல் வெளி நாட்டில் வாழும் நம்மவர்கள் இதை வெகுவாகவே ஒத்துகொள்வார்கள்.
இதை இப்போ இங்கே போட காரணம் உண்டு. இன்று கண்ணியம் இல்லாமல் போஸ்ட் போட்டதற்காக ஒருவரின் அக்கௌன்ட் முடக்கப்பட்டு உள்ளது. பொது வெளியில் எழுதும் பொழுது அடிப்படை நாகரிகமும் கண்ணியமும் மிக முக்கியம்.ஆனால் இந்த விஷயத்தில் மட்டும் படித்தவர்கள் , படிக்காதவர்கள், அமெரிக்காவில் இருப்பவர்கள் , ஆட்டையாம் பட்டியில் இருப்பவர்கள் எல்லோரும் ஒரே மாத்ரி இருக்கிறார்கள்.
இணையம் வந்த பின் எல்லோரும் எழுத்தாளராகி, எழுத்தாளர்கள் எல்லாம் கோமாளிகள் ஆகி விட்டார்கள்.
"எல்லாம் படிச்சீங்க ........படிச்சு என்ன கிழிசீங்க" என்ற பட்டுகோட்டை கல்யாண சுந்தரத்தின் பாட்டு சமூகத்தின் மேல் இருக்கும் அவரின் கோபத்தை எவ்வளவு உக்கிரமாக வெளிபடுத்துது ? பாரதி, பாரதி தாசன் போன்றவர்களும் இதை பற்றி நிறையவே பாடி இருக்காங்க !!
" வீழ்வேன் என்று நினைத்தாயோ " என்ற பாரதியின் வார்த்தைகள் உறுதியான மனம் கொண்டவர்களுக்கு மட்டும் அல்ல . நல்ல மனம் கொண்டவர்களுக்கும்.......
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் மிகவும் நெருங்கிய உறவினர் ஒருவர் இங்கு இருக்கிறார். இதை படித்தால் மிகவும் சந்தோஷப் படுவார். :))
""பூமி என்னும் கிண்ணம் இசையில் நிரம்பி வழியுதம்மா ""
https://www.youtube.com/watch?v=a8LaB6RhsRA
One more touching song by Mr Nagoor Haneefa
http://youtu.be/rVHxLnz03yQ
eppadi paadinaro.....
http://www.youtube.com/watch?v=-s4YQK0ycho
Raga is Karnataka Devagandari considered to be equivalent to Abheri and Bhimpalas. Some will dispute it citing a difference in one note ! :lol:
This is not a movie song. I posted it because DKP is the only musician I met at her home in Kotturpuram/Adyar. A very nice and unassuming person. In one of our visits she recalled her younger days when she began singing. She also let us videotape the conversation. I attended her concert in IIT, Madras more than 15 years back. She was accopanied by her grand daughter Nithyasri.
ஒருவர் பக்கத்துக்கு திரியில் போட்ட post க்கு அதிகமான likes பார்த்தேன். அவர் நண்பர் என்பதற்காக போடப்பட்ட likes ஆ அல்லது அந்த போஸ்டின் உண்மையான concept புரிந்து போடப்பட்ட likes ஆ என்று தெரியவில்லை.:)
மனிதர்கள் எல்லோருமே சிறிது மனபிறழ்வு கொண்டவர்களே. Personality disorder லில். A, B, C என்று மூன்று வகை உண்டு. எல்லோருமே ஏதோ ஒருவகையில் இருப்பாங்க. மனிதர்களை மிகவும் ஆராய்ந்து எடுக்கப்பட்ட முடிவு அது (DSM - V ) . மற்றவர்களுக்கு மட்டுமே மன நோய் உண்டு என்று நினப்பதுவும் ஒரு வகை மன நோயே !!:)
பின்குறிப்பு. இது பொதுவாக எழுதப்பட்டது. யாரும் தன்னை குறிப்பதாக நினைத்து தற்கொலைக்கு முயல வேண்டாம். :):)
நண்பனுக்கு கடன் கொடுத்தேன், பணத்துடன் நட்பும் போய் விட்டது என்று ஒருவரின் கமெண்ட் இதை எழுத தூண்டியது. இதை போலவே வேறு ஒருவர் சில மாதங்களுக்கு முன்.
Twitter, FB பிரபலமாகாத காலத்தில், தமிழின் மீது தீராத தாகம் கொண்டவர்கள் Blog எழுதி தன் தாகத்தை தீர்த்து கொண்டும், என்னை போன்ற மிக மிக சாதரணமானவர்கள் அதை குடித்து குடித்து sorry படித்து படித்து ஓய்ந்தும் போய் இருத்த காலத்தில் :) ......சிலர் Blogger களிடம் பணம் collect பண்ணி பலரின் மருத்துவ சிச்கிசைக்கு கொடுத்து கொண்டு இருந்தாரகள். Bloggers பலரும் வெளி நாட்டில் இருந்ததாலும் கஷ்டமான பின்னணியில் இருந்து வந்ததாலும் தாராளமாகவே கொடுத்து உதவினார்கள். நான் உதவி தேவைபடுபவர்களின் போன் நம்பரை வாங்கி அவர்ளுடன் நேரடியாகவே பேசுவேன். பெரும்பாலனவர்கள் cancer patients. இரண்டு மூன்று கேள்விகளை மிக சாதரணமாக கேட்பேன். அதிலேயே தெரிந்துவிடும் அவர்கள் உண்மையா இல்லியா என்று. ஆனால் இதுவரை யாரும் பொய் சொல்லியதில்லை. மீள முடியாத கஷ்டத்தில் இருக்கும் பொழுது யாரும் பொய் சொல்வதில்லை. money gram ளில் பணத்தை அனுப்பி விடுவேன். சரியான கணக்கு வழக்கு இல்லை என்று அந்த group யை நிறுத்தி விட்டார்கள்.
என் பெரிய அக்கா காலேஜ் principal ஆக இருந்தாங்க. அவங்ககிட்ட வேலை பார்தவங்கதான் பானு அக்கா. வேறு வேறு department என்றாலும், அவங்களும் மதுரை என்பதாலும் அருகில் குடி இருந்ததாலும் இருவருக்கும் நல்ல புரிதலுடன் கூடிய நட்பு இருந்தது. அவங்க கணவர் வக்கீல். இரண்டு பெண் குழந்தைகள். 9 மற்றும் 7 வயது.
பெரிய பெண் சில நாட்களா விளையாடி முடித்தபின் கால் வலிக்குது என்று சொல்லி பின் ஒரு கட்டத்தில் வலி தாங்காமல் அழுதவுடன் டாக்டரிடம் காட்டினால் , அவளுக்கு Bone Cancer. சொந்த பணம், லோன், எல்லோரிடமும் கடன் வாங்கி செலவு பண்ணி அவளுக்கு treatment கொடுத்தார்கள். என் அக்கா ஏற்கனவே நிறைய கொடுத்து விட்டதால் . ஒரு முறை phone ல் பேசும் பொழுது என்னை பணம் கொடுக்க சொன்னார்கள். அடுத்த நாள் RS 25.000 செக் அனுப்பினேன். பணம் தான் தண்ணீராக கரைந்ததே தவிர அவளிடம் எந்த improvement ம் இல்லை. மிகவும் தீவீரமான cancer' outcome is going to be very grave என்றும் என் அக்காவிடம் மட்டுமே சொல்வேன். ஒரு மாதம் கழித்து பேச்சின் ஊடக என் அக்கா மீண்டும் பணம் அனுப்ப சொன்னாங்க. என் பெரிய அக்கா எனக்கு அம்மா போல். மிகுந்த அன்பும் மரியாதையும் எனக்கு உண்டு. அதனால் மறுப்பு ஏதும் சொல்லாமல் மீண்டும் Rs 25.000. அனுப்பினேன். இங்கே ஒரு விஷயத்தை கட்டாயம் சொல்லவேண்டும். அவங்களுக்கு உதவியது எல்லாமே தெரிந்தவர்களும் நண்பர்களும் தான். பானு அக்கா குழந்தையை மலையாள மாந்த்ரீகம் வரை கொண்டு காட்டியும் ஒரு வருடத்தில் இறந்து விட்டாள். அவளின் முடிவு ஏற்கனவே தெரியும் என்பதால் அனைவரும் மௌனமாக ஏற்று கொண்டார்கள்.
ஆனால் அவளின் இழப்பை தாங்க முடியாத அந்த அக்காவின் கணவர் 2 மாதங்கள் கழித்து தூக்க மாதிரரையை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் முடிவை தான் யாராலும் தாங்க முடியவில்லை. அவரை நான் பல முறை பார்த்து இருந்தாலும் பேசியது கிடையாது. அவரின் அமைதியான முகம் இன்றும் என் நினைவில் பசுமையாக !!
"எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும் "?
போன வருடம் summer க்கு இந்தியா போய் இருந்த பொழுது வழக்கம் போல என் அக்காவிற்கு போன் அவங்ககிட்ட இருந்து, நான் இருப்பது தெரியாது. அக்கா பேச்சின் ஊடே நான் வந்து இருப்பதை சொல்ல, நான் பேச . அவங்க குரலில் ஒரு தர்ம சங்கடம் பணம் இன்னும் திருப்பி தராதால். நான் பணத்தை பற்றி பேசவே இல்லை. நான் கொடுக்கும் பொழுதே திரும்ப வேண்டாம் என்ற முடிவுடன் தான் கொடுத்தேன். அந்தஅக்காவின் நலத்தை பற்றியும் அடுத்தவளை பற்றி மட்டுமே பேசி போனை என் அக்காவிடம் கொடுத்தேன்.
கடவுளின் பேரருளால் எனக்கு எல்லமே இருக்குது. மீதி இருக்கும் இந்த நாட்களில் யாரிடமும் எதற்காகவும் போய் நிற்காத வரத்தை எனக்கு கொடு " வேருக்கு நீர் ஊற்றி விளைக்கின்ற என் இறைவா" !!
கல்லான உருவமும்
கனிவான உள்ளமும்
வடிவான சதுர்வேதனே !!
https://www.youtube.com/watch?v=9cHZ2Pyfols
இரு வேறு நடிகர்கள் , இரு வேறு குரல்கள், ஒரே இசை.
கவிதைக்கு பொய் அழகு, இசைக்கு உண்மைதான் அழகு !!
https://www.youtube.com/watch?v=I1nMerhWmFQ
//இடம், பொருள், ஏவல்// It is very difficult to pick the best song in this fantastic album.
https://www.youtube.com/watch?v=ztuWqY0VBXA
ஜோதிகா, அழகிலும் நடிப்பிலும் கோவை சரளா போலவே இருக்கிறார். எப்படி இவ்வளவு பெரிய இடத்தை அடைந்தார் என்பது ஆச்சரியம்மாக உள்ளது என்ற வாய் விட்டு சிரிக்க வைக்கும் ஒருவரின் comment கு பின் ஜோதிகா நடித்த பாடல்களை தேடினால் கிடைத்தது இது. ஜோதிகா , விஜய் பாடல் என்பதை விட வித்யாசாகர் பாடல் என்பதுதான் சரி. மிகவும் இனிமையான இசை. பாடல் வரிகள் அறிவுமதி . கேட்பர்தற்கு மிகவும் இனிமை. அது சரி, இந்த விஜயைக்கு வயசே ஆகாதா ?? :):)
என்னை மறந்தாலும்
உன்னை மறவாத
நெஞ்சோடு நானிருப்பேன் !!
https://www.youtube.com/watch?v=EMAyaPId8LU
My respectful homage to Iyakkunar Sigaram thiru K. Balachander...
This song is from his first directorial venture:
திரைப்படம்: நீர்க்குமிழி (1965)
இசை: வி. குமார்
நடிகர்: நாகேஷ்
பாடகர்: சீர்காழி கோவிந்தராஜன்
https://www.youtube.com/watch?v=kCyaWBG-rHY
தியேட்டரிக்கல் ட்ரைலர்னா இப்படி இருக்கணும்.. தியேட்டர் போகாமயே படத்தை பாத்துட்ட மாதிரி இருக்குது !!
https://www.youtube.com/watch?v=qPQHbC0ncNY
கண்ணா ராஜா அய்யா சின்னையா !!
https://www.youtube.com/watch?v=0E-iKmDFInk
Nice melody song from Motor Sundaram Pillai
http://youtu.be/-uKUXueJYDc
ஸ்ரீ ரஞ்சனியும் வித்யா சாகரும் !! கண்ணதாசன் பாடல் வரி போல, என்றும் இனிமையும் இளமையும் !
Very Beautiful Nayanthara :)
https://www.youtube.com/watch?v=TuKb...=RDTuKbBSHzK04
From Rajabhakthi
karkka kasadara.........
http://www.youtube.com/watch?v=yHNJjb1xJEg
ஸ்ரீ ரஞ்சனியும் ராஜாவும் !
https://www.youtube.com/watch?v=b0x_A5HoHjM
ஸ்ரீ ரஞ்சனியும் எம் எஸ் வி யும் !!
https://www.youtube.com/watch?v=cU9_w77CM1k