நீண்ட நாட்களுக்கு பிறகு திரிக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியுடன் வரவு.
1974 ஜூன் 1 முதல் எப்போது வருகை புரிந்தாலும் மதுரை மாநகரை, அதன் மக்களை தன் ஆளுகையின் கீழ் கொண்டு வந்து விடும் S.P சௌத்ரி இந்த முறையும் மதுரை மக்களை தன வசப்படுதியிருக்கிறார். வெள்ளியன்று சென்ட்ரலில் திரையிடப்பட்ட இந்தப் பதக்கம் முதல் இரண்டு நாட்களில் பெற்ற வரவேற்பு அமோகம்! கடந்த பல மாதங்களாக எந்த படமும் பெறாத வசூலை முதல் இரண்டு நாட்களிலேயே பெற்றிருக்கிறது. வெள்ளி மற்றும் சனி இரவுக் காட்சிக்கு கூட அண்மையில் எந்தப் படத்திற்கும் வராத கூட்டம் வந்திருக்கிறது. இன்று வரவேற்பு உச்சக்கட்டத்தை எட்டிவிட்டது. மதியக் காட்சிக்கே கணிசமான பேர் திரண்டு வந்திருந்தனராம்! மதியக் காட்சிக்கு பால்கனியில் பாதிக்கு மேல் தாய்க்குலங்கள் என்பதை தியேட்டர் ஊழியர்களே ஆச்சரியமாக சொன்னார்களாம்!
மாலைக் காட்சிக்கு 5 மணி முதலே அலப்பரை ஆரம்பித்து விட்டதாம். மிகப் பெரிய பானர்கள் இரண்டு வைக்கப்பட்டிருந்தன என்றும் மாலைகளின் அணிவகுப்பு குவிந்து விட்டதாகவும் செய்தி. 1000 மற்றும் 5000 வாலாக்கள் காதை கிழிக்க [அலைபேசியில் சத்தம் கேட்ட எனக்கே நேரில் கேட்பது போல்] டவுன் ஹால் ரோடே ஸ்தம்பித்ததாம். மீனாட்சி அம்மன் கோவிலுக்கு [கோவிலின் மேல கோபுர வாசலுக்கு அந்த ரோடு வழியாகதான் செல்ல வேண்டும்] சுற்றுலா வந்திருந்த பல வெளிநாட்டினர் இதை கண்டு வியந்து என்னவென்று விசாரித்து விஷயம் புரிந்தவுடன் பிரமித்து புகைப்படம் எடுத்தனராம்.
நமது நண்பரிடம் பேசிய இரு வெளிநாட்டினர் படம் 39 வருடங்களுக்கு முன்பு வெளியான பழைய படம் என்பதையும் படத்தின் நாயகன் இறந்து 12 வருடங்கள் ஆகிறது என்பதையும் கேட்டு அசந்து விட்டனராம் இந்திய, தமிழக அரசியலை பற்றி சிறிது அறிந்து வைத்திருந்த அவர்கள் " Do you get any political support for this ?" என கேட்டனராம். இல்லை என்றதும் ஆச்சரியப்பட்டனராம்.
வெகு நாட்களுக்கு பின் சென்ட்ரல் திரையரங்கில் இன்றைய மாலைக்காட்சிக்கு நீண்ட வரிசையில் நின்று மக்கள் டிக்கெட் வாங்கி சென்றதாக கூறினார். தியேட்டரில் க்யூ வரிசையைப் பார்த்தே நாளாயிற்று என சொன்னார்களாம்!
எல்லாவற்றையும் விட முக்கியமான செய்தி இன்று மதியக் காட்சி வரை வந்த வசூலிலேயே தியேட்டரின் ஒரு வார வாடகை [30,000 ரூபாய்] கவர் ஆகி அதற்கும் மேலாக சென்று விட்டதாம். இன்று இரவுக் காட்சியோடு வசூல் ரூபாய் 45,000/- ஐ தொடும் என தெரிகிறது. அண்மைக் காலங்களில் பல படங்கள் ஒரு வாரத்தில் பெற்ற மொத்த வசூலை விட இது அதிகம்!.
இந்த நாளிலும் இந்த சாதனை எளிதாக வரவில்லை. சுற்றுலாவை ஊக்கப்படுத்தவும் மதுரையும் சிறப்புகளை வெளிநாட்டினரும் மற்றவர்களும் அறிந்து கொள்ளும் வண்ணம் கடந்த மூன்று நாட்களாக [வெள்ளி சனி மற்றும் இன்று ஞாயிறு] மதுரையின் தொன்மையான சங்க காலம் தொட்டு விளங்கி வரும் பாரம்பரிய சிறப்புகளை, பைந்தமிழரின் பல்வேறு வாழ்கை முறைகளை, பாரம்பரிய கலை வடிவங்களை கண்காட்சியாகவும், நகரின் மையப் பகுதியில் ஊர்வலங்கள், தெருமுனை நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு வடிவங்கள் மூலமாக வெளிப்படுத்தும் "மாமதுரை போற்றுவோம்" என்ற பெயரில் அரசு நிர்வாகம் ஒரு நிகழ்ச்சியை நடத்தி வருகிறது இதன் காரணமாக கடந்த மூன்று நாட்களாக பேருந்துகள் போலும் நகரின் மையப் பகுதிக்கு வர முடியாமல் சுற்றி செல்கின்றனவாம். போக்குவரத்து வழிகள் மாற்றப்பட்டு நினைத்த இடத்திற்கு செல்லும் பயணம் கடினமாகியிருக்கிறது. இதன் காரணமாக பலர் கார் மற்றும் வாகனங்களை வெளியில் எடுக்கவில்லையாம். இருப்பினும் சென்ட்ரல் திரையரங்கிற்கு மட்டும் கூட்டம் குறையவில்லை.
அது போன்றே படத்தின் பிரிண்ட்-ம் சுமார் ரகம்தானாம். பிரிண்ட் மட்டும் நன்றாக இருந்திருந்தால் படம் இன்னும் உயரம் தொட்டிருக்கும் என சொல்கிறார்கள்.
எத்தனை இடர் வந்தால் என்ன! எத்தனை சோதனைகள் வந்தால் என்ன! அனைத்தையும் வெல்லும் திறன் பெற்றவரல்லவா சௌத்ரி! அவர் பெயரே சொல்லுமே அதை!
S.P.சௌத்ரி என்றாலே Supreme Performer சௌத்ரி என்றுதானே அர்த்தம்!
அன்புடன்