வாசு சார்,
நடிகர் திலகம் மலையாள நடிகர்களுடன் இணைந்து நடித்த விவரங்களை பற்றி நான் எழுதியதை படித்தவுடன் அவர்களோடு நடிகர் திலகம் இணைந்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு அதிலும் குறிப்பாக [ஏற்கனவே பார்த்த புகைப்படம் என்றாலும் கூட] கலையுலக பீஷ்மர் தன மாணாக்கர்களோடு காட்சியளிக்கும் அந்த அரிய புகைப் படத்திற்கு நன்றி. உங்களுக்காக ஞான ஒளி பற்றிய ஒரு சிறு வரலாற்றுக் குறிப்பு.
தேவனே என்னைப் பாருங்கள் பாடலைப் பற்றி பேசினோம். அந்த பாடல் எப்போது படமாக்கப்பட்டது தெரியுமா?
1972-ம் ஆண்டு ஜனவரி மாதம் 19-ந் தேதி புதன்கிழமை வசந்த மாளிகை படத்திற்கு பூஜை போடப்பட்டு அன்றே படப்பிடிப்பும் துவங்கியது. முன்பொரு முறை குறிப்பிட்டது போல முதல் நாள் வாணிஸ்ரீயின் திருமண நாள் அன்று நடிகர் திலகம் முதலில் வாசல் வழியாக வருவதும் பின்னர் பின்புற வாசல் வழியாக வந்து ஆசி கூறி செல்வதுமான காட்சிதான் முதன் முதலாக படமாக்கப்பட்டது. அன்று முதல் தொடர்ந்து ஒரு வார காலத்திற்கு முதல் ஷெட்யூல் நடைபெற்றது.
அடுத்த புதன்கிழமை ஜனவரி 26. நம் யாராலும் மறக்க முடியாத ராஜா ரிலீஸ் ஆன நாள். விமானப் படை அதிகாரிகளின் குடும்ப நல நிதிக்காக [ராகவேந்தர் சார், கரெக்ட்தானே?] சென்னை தேவி பாரடைஸ் அரங்கில் காலையில் நடைபெற்ற சிறப்பு காட்சியில் நடிகர் திலகமும் ஏனைய கலைஞர்களும் கலந்து கொண்டனர். தொடர்ந்து இரண்டு நாள் மீண்டும் மாளிகை ஷூட்டிங். 28-ந் தேதி வெள்ளி இரவு நடிகர் திலகம் கொடைக்கானல் புறப்பட்டார்.
29-ந் தேதி சனிக்கிழமை முதல் பிப்ரவரி 1 வரை நான்கு நாட்கள் கொடைக்கானலில் ஞான ஒளி படப்பிடிப்பு. தேவனே என்னைப் பாருங்கள் பாடலும் மற்றும் சில வெளிப்புற காட்சிகளும் அப்போதுதான் படமாக்கப்பட்டன.
பிப்ரவரி 2 அன்று காலையில் மீண்டும் சென்னை திரும்பிய நடிகர் திலகம் அன்று கலந்துக் கொண்ட நிகழ்ச்சி என்ன தெரியுமா? அன்றுதான் சாரதா ஸ்டுடியோவில் ராஜ ராஜ சோழன் பூஜை நடைப்பெற்றது. அங்கே சென்று அந்த தொடக்கவிழா பூஜையில் கலந்து கொண்டுவிட்டு முதல்நாள் சம்பிரதாயமான படப்பிடிப்பிலும் நடித்தார்.
ஒரே பதிவில்
கார்த்திக்கிற்கு பிடித்த வரலாற்று சுவடுகள்!
கோபாலை குஷிப்படுத்த வசந்த மாளிகை!
ராகவேந்தர் சாரின் மனம் கவர்ந்த ராஜா!
வாசுவின் உள்ளதோடு கலந்து விட்ட ஞான ஒளி!
சுப்புவிற்கு ராஜ ராஜ சோழன்!
அன்புடன்
வாசு சார்,
ஆடை அலங்கார அணிவகுப்பை சீரும் சிறப்புமாக துவக்குங்கள்!