இதில் இருந்து வெளியே வர கஜினி மாத்ருபூதத்தின் பிள்ளைகள் கிட்ட உண்மையை சொல்லி விடுகிறார் , அவர்கள் மாற்றுபூததை திருத்த அவர் சாட்சியளிக்க ஷங்கர் விடுதலை அகுகிறார்
http://www.youtube.com/watch?v=gz7M7nJBAaU
http://www.youtube.com/watch?v=fyOR9uypcfI
Printable View
இதில் இருந்து வெளியே வர கஜினி மாத்ருபூதத்தின் பிள்ளைகள் கிட்ட உண்மையை சொல்லி விடுகிறார் , அவர்கள் மாற்றுபூததை திருத்த அவர் சாட்சியளிக்க ஷங்கர் விடுதலை அகுகிறார்
http://www.youtube.com/watch?v=gz7M7nJBAaU
http://www.youtube.com/watch?v=fyOR9uypcfI
வெளியே வந்த உடன் தன் மகனிடம் அவர் பாவமணிப்பு கேப்பது போலே பேசும் காட்சி நெஞ்சை கரைய வைக்கிறது
http://www.youtube.com/watch?v=nb9qIfiPVVs
சம்பத் பம்பையில் இருந்து வந்து , என் ஷங்கரை இந்த வம்பில் மாட்டி விட்டிர்கள் என்று கடித்து கொளுகிறார் . அருண் தான் மாட்டி கொள்ளாமல் இருபதற்கு இது தான் வழி , மற்றும் அஞ்சனவை திருமணம் செய்ய இது தான் வழி என்று சொன்ன உடன் சம்பத் மனம் மாறுகிறார் , அந்த நேரத்தில் மாத்ரபூதம் , ஷங்கர் ,கஜினி , அஞ்சனா அங்க வர சம்பத் வில்லனாக மாறுகிறார் , ஷங்கர் காலேஜ் ல் நடித்த நாடகத்தை நினைவு படுத்துகிறார் (அந்த காட்சியை ஒரு முழு நீள படமாக எடுத்து இருக்காலம் , என்ன கம்பீரம் )
http://www.youtube.com/watch?v=rUAgVlfwpbk
http://www.youtube.com/watch?v=-zyxs-tVB_Q
கடைசியில் சம்பத மனம் மாற , அஞ்சனா சம்பத யை திருமணம் செய்ய
சுபம்
டியர் ராகுல் ராம் - அருமையான பதிவுகள் - இந்த திரியில் திடீரென்று ஏற்பட்ட புயலில் , அழகாக திசை திருப்பி சொர்கத்தை பதித்து உள்ளீர்கள் - மிகவும் விறு விறுப்பான படம் - தலைவர் மிகவும் அழகாக இருப்பார் - ஒரு குழப்பம் இல்லாமல் செல்லும் கதை . பாடல்கள் ஒவ்வன்றும் தேனிலும் மேலாக இனிப்பவை - இந்த படத்தை பற்றி பழைய பதிவுகள் இருந்தால் அதையும் இணைத்து போட்டால் இன்னும் நன்றாக இருக்கும் - மனம் குளிர்த வாழ்த்துக்கள்
Ravi
:):smokesmile:
நீங்கள் சொல்வது ஒரு வகையில் உண்மை என்றாலும் - என்னை பொறுத்த வரை எண்ணங்கள் சற்றே வேறுபட்டவை - இந்த திரியில் பதிவிடம் ஒவ்வருவரும் NT யின் மீது பக்தியையும் , அன்பையும் கொண்டவர்கள் - இதில் பலர் அவரை தெய்வமாக வணங்குபவர்கள் - ஹிட்லர் உமா நாத் பதிவை படித்திருப்பீர்கள் - எவ்வளவு உழைப்பு அதில் - எவ்வளவு Research செய்திருந்தால் அவளவு அழகாக எழுதிருக்கமுடியும் ? இப்படிப்பட்ட உழைப்பை , இப்படி உழைத்தவர்கள் ஏன் பாராட்டை எதிர்பார்க்க கூடாது ? அவர்கள் அப்படி எதிர்பார்க்காவிட்டாலும் , நாம் எல்லோரும் ஏன் முன் வந்து பாராட்ட கூடாது ? ஒவ்வருவரை பாராட்டிகொள்வது நம் பண்பட்ட பண்டைய வழக்கம் தானே - மட்டற்ற திரிகளை நீங்கள் பார்த்தால் 1:1 என்ற விகிதத்தில் பாராட்டிக்கொள்வார்கள் - இந்த திரியில் அப்படி இல்லையே ! இதை எப்படி நாம் குழந்தை தனம் என்று சொல்லமுடியும் ? ஒன்றை ஒப்புகொள்ளத்தான் வேண்டும் - அவரின் மீது இருக்கும் தீவிரமான பக்தியில் வார்த்தைகள் சற்றே தடம் புரண்டு ஓடும் படி அமைந்து விடுகிறது - எல்லாம் சரியாகிவிடும் சார் - நம்பிக்கையுடன் செயல் படுவோம்
அன்புடன் ரவி
:):smokesmile:
டியர் கிருபா சார் - உங்கள் பதில் பதிவை படித்து விட்டு மிகவும் சங்கடப்பட்டேன் - எந்த கோணத்திலும் அந்த பதிவு வேதனை தருவதாகவே உள்ளது - ck அப்படி யார் மனதையும் புண் படுத்துபவர் அல்ல - நான் எடுத்துக்காட்டிய சின்ன சின்ன தவுறுகளுக்கு கூட உடனே மன்னிப்பு கேட்கும் மனம் உடையவர் - என்னாலும் புரிந்து கொள்ள முடியவில்லை , ஏன் மற்றவர் மனதை வேதனை படும் படி எழுதினார் என்று - நீங்கள் வந்த பிறகு உண்மையில் திரியில் ஒரு இனம் புரியாத உற்சாகம் பிறந்தது - தவறுகள் இருந்தால் அதை தனிபட்ட முறையில் தெரிவிக்கலாம் - இந்த திரியில் பலர் படிக்க , ஒருவர் மனம் வேதனை பட எழுதகூடாது என்று தனிப்பட்ட முறையில் கருதுகிறேன் - ஏதோ போறாத நேரம் - விட்டுவிடுங்கள் - நாம் நம் மன திர்ப்திக்காக எழுதுகிறோம் - அவ்வளவே !
:(:(:(:(:(:(
இவ்வாறு சாரதா கூறினார்.
இந்த நிலையில் "திருப்பதி" என்ற தெலுங்கு நாடகத்தில் நடிகை சாரதா நடித்து வந்தார். ஒரு நாள் அந்த நாடகத்திற்கு நடிகர் திலகம் சிவாஜிகணேசன் தலைமை தாங்கினார்.
நாடகத்தில் சாரதாவின் நடிப்பு அற்புதமாக இருந்ததை, சிவாஜி கவனித்தார். நாடகத்தில் மிகவும் சிறப்பாக நடித்த சாரதாவை, தமிழ்ப்படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று சிவாஜி முடிவு செய்தார்.
இதைத்தொடர்ந்து, 1963-ம் ஆண்டு சிவாஜிகணேசன் நடித்த "குங்குமம்" என்ற படத்தில் சாரதா இரண்டாவது கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தில் நடிகை விஜயகுமாரியும் நடித்தார்.
கிருஷ்ணன் - பஞ்சு டைரக்ட் செய்தனர். அதனைத்தொடர்ந்து, "துளசிமாடம்", "வாழ்க்கை வாழ்வதற்கே" போன்ற படங்களில் சாரதா நடித்தார். 1972-ம் ஆண்டில் மாதவன் இயக்கத்தில் "ஞானஒளி" படத்திலும், 1978-ம் ஆண்டு ராமண்ணா டைரக்ஷனில் "என்னைப்போல் ஒருவன்" படத்திலும், சிவாஜியுடன் சாரதா மிகவும் சிறப்பாக நடித்து புகழ் பெற்றார்.
சிவாஜியுடன் நடித்தது பற்றி சாரதா கூறியதாவது:-
"திருப்பதி நாடகத்தில் நான் நடித்துக்கொண்டிருந்தபோது, அந்த நாடகத்திற்கு சிவாஜி தலைமை தாங்க வந்தார். நாடகத்தில் எனது நடிப்பை பார்த்து "குங்குமம்" படத்திற்கு தயாரிப்பாளரிடம் கூறி, எனக்கு வாய்ப்பு கிடைக்கச் செய்தார்.
அப்போது எனக்கு "கேரக்டர்"நடிப்பை சொல்லிக் கொடுத்தார். எப்படி, எப்படி நடிக்க வேண்டும் என்பதை சிவாஜியிடம் கற்றேன். "குங்குமம்" படத்தில் அவருடன் முதன் முதலில் நடிக்க செல்வதற்கு முன்பு ரொம்பவும் பயந்தேன்.
அதற்கு சிவாஜி, "நான் என்ன புலியா, சிங்கமா? நானும் மனிதன்தானே! எதற்காக பயப்படுகிறாய்!" என்றார். அதன் பிறகுதான், எனக்கு பயம் போய் தைரியம் வந்தது. நடிப்பில் ஆர்வம், இருப்பவர்களுக்கு சிவாஜி நடிப்புச் சொல்லி தருவார்.
ஆர்வம் இல்லாதவர்களை தொந்தரவு செய்ய மாட்டார்! நடிப்பதற்கு முன்பு `இந்த கேமரா கோணத்தில் இப்படி நடித்தால் நன்றாக இருக்கும்' என்று சொல்லித் தருவார்."
இவ்வாறு நடிகை சாரதா கூறினார்.
Rahul Ram,
Your Sorgam postings are enjoyable. Keep it up.
நடிகர்திலகத்தின் பெருந்தன்மை,தொழில் நேர்த்தி.
உலகறிந்த ஒன்று.
அவ்வை ஷண்முகி படத்திற்காக அவரின் இரு நாடறிந்த ரசிகர்கள் கமல்,கே.எஸ்.ரவிகுமார் அவரை தொடர்ந்து வேண்டி கொண்டிருந்தனர்.உடல்நிலை காரணமாக யோசித்த சிவாஜி, கமலிடம்,என்னை ஏண்டா தொந்தரவு பண்றே?மாப்பிளையிடம் போ.அவன் நிஜமாகவே பின்னி விடுவான்.அவனுக்கு பொருத்தமாகவும் இருக்கும் என்று ஜெமினியிடம் அனுப்பித்தாராம்.
படத்தின் வெற்றிக்கு ஜெமினி ரோல் துணை புரிந்ததை சொல்லியா தெரிய வேண்டும்?