http://www.youtube.com/watch?v=sa4ngfyLmg8
Printable View
எல்லோருக்கும் என் இனிய வணக்கங்கள் - ஒரு புதிய முயற்சியாக , "என் கண்ணோட்டத்தில் MGR " என்ற ஒரு பாகத்தை ஆரம்பித்து அதில் அவர் செய்துள்ள மகத்தான சேவைகளை தொடுத்து ஒரு புஷ்பாஞ்சலியை அவருக்கு சமர்ப்பிக்கலாம் என்று நினைக்கிறேன் - புதிய முயற்சி - தவறுகள் ஏதாவது இருந்தால் ( எழுத்து பிழைகளையும் சேர்த்து ) தயவு செய்து மன்னிக்கவும் . இங்கு வரும் சுறாவளி பதிவுகளில் என் பதிவுகள் அடித்து செல்ல படலாம் - இருந்தாலும் அது என் முயற்ச்சியை பாதிக்காது . சில பாடல்களையும் , அவருடைய மிகவும் எனக்கு பிடித்த படங்கள் சிலவற்றையும் , இதன் மூலம் அவர் சமுதாயத்திற்கு கொடுத்த நல்ல புத்திமதிகளையும் வேறு ஒரு கோணத்தில் அலசினால் அவைகள் அனைத்துமே இன்னும் அதிகமாகவே தித்திக்கின்றன --- - பார்த்த படங்கள் , கேட்ட பாடல்கள் - ஆனால் இன்னும் மனதை விட்டு ஏன் நீங்குவதில்லை ?? - சொல்ல முடியாத ஒரு சக்தி நம்மையெல்லாம் கட்டி போட்டு விடுகின்றது - ஒரு பாணபத்திரருக்கு பாண்டிய நாடு அடிமையானது போல , இந்த படங்களுக்கும் பாடல்களுக்கும் நாமும் , நம் சந்ததிகளுக்கும் என்றுமே அடிமை தானே ? ஏன் என்று அலசினால் வரும் ஒரே பதில் MGR - அவர் எடுத்துக்கொண்ட முயற்ச்சிகளும் , நல்ல விஷயங்கள் மக்களை அடைய வேண்டும் என்று அவர் அதற்காக உழைத்த உழைப்பும், சொல்லவேண்டுமென்றால் இந்த ஒரு பிறவி போதாது
ஒரு பிரிவினரை , அவர் படும் கஷ்ட்டங்களை பாடல் மூலம் தெரிவித்து அதன் மூலம் அந்த பிரிவினருக்கும் ஒரு முக்கியத்துவத்தை வாங்கி கொடுத்தவர் .. இந்த பாடலை கேட்ட மீன்களும் , சுறாக்களும் அந்த பிரிவினருக்கு மிகவும் சந்தோஷமாக தங்களை அற்பணித்ததாம் - அவைகளுக்கு அவைகளின் பிறவி பயனை கொடுத்த ஒரே பாடல் இதுதான் - மீனவர்களை மையமாக கொண்டு வெளி வந்த படங்களில் குறவஞ்சியும் , படகோட்டியும் முதல் இடங்களில் நிற்கின்றன - அதுவரை அந்த பிரிவினரை கண்ணெடுத்தும் பார்க்காத இந்த சமுதாயம் - இந்த பாடல் மூலம் தன தவறை திருத்திகொண்டது
இராமயணத்தில் , அந்த ராமன் , வாலியை மறைந்து இருந்து கொன்றான் - ஆனால் இந்த கலியுகத்தில் இந்த ராமன் வாலியை கொல்லவில்லை , மாறாக இருந்தும் , இறந்தும் வாழவைத்தான் - அந்த வாலி அமைத்த கவிதைகளின் பாலத்தில் என்றுமே நம்முடன் வாழ்ந்துகொண்டிருக்கிறான் இந்த ராமன் - வரிகளில் எங்காவது ஈரபசை இருக்குமா ? இதோ இந்த வரிகளை கவனியுங்கள் எவ்வளவு ஈரமாக உள்ளது - ஆம் அந்த ஈரம் வெறும் தண்ணீர் இல்லை , நாம் சிந்தும் கண்ணீர்
உலகத்தின் தூக்கம் கலையாதோ -----------
உள்ளத்தின் ஏக்கம் தொலையாதோ ------
உழைப்பவர் வாழ்க்கை மலராதோ -----
ஒரு நாள் பொழுதும் புலராதோ -----
----------------------------------
வெள்ளி நிலாவே விளக்காய் எரியும் கடல் தான் எங்கள் வீடு --
முடிந்தால் முடியும் , தொடர்ந்தால் தொடரும் - இதுதான் எங்கள் வாழ்க்கை -------
கடல் நீர் மேல் பயணம் போனால் , குடிநீர் தருபவர் யாரோ ??
தனியாய் வந்தோர் துணிவை தவிர துணையாய் வருபவர் யாரோ ??
ஒரு நாள் போவார் , ஒரு நாள் வருவார் - ஒவ்வொரு நாளும் துயரம்
ஒரு சான் வயிறை வளர்ப்பவர் உயிரை ஊரார் நினைப்பது சுலபம் ----
இந்த பாடல் , பாடலின் வரிகள் , பாடலின் இசை , TMS குரல் வளம் - இவைகள் எல்லாவற்றையும் மீறி நம்மை கட்டி போட்ட அந்த காந்த கண்கள் - அந்த கண்களில் ஊறிக்கிடக்கும் மீனவர்களின் நிலைமை - எதை விடுவது , எதை சொல்வது ----
இந்த , பாடலும் படமும் என்னை மிகவும் கட்டி போட்டதன் காரணம் -
1. சிறிய வயதில் அன்னையுடன் சென்று பார்த்த படம் - அன்னையை பார்க்க விடாமல் அங்கு கிடைக்கும் தின் பண்டங்களுக்காக அழுது நின்ற படம்
2. விவரம் தெரிந்தவுடன் அன்னையை அழைத்து சென்ற படம் - என் அன்னை என்னை பார்க்க விடவில்லை - சில மன சச்சரிவினால்
3. ஒரு பிரிவினரை மேல் தூக்கி நிற்க வைத்த படம்
4. சமுதாயத்தை தட்டி கேட்ட படம்
5. மீனவர்கள் நன்றி சொல்லும் படம்
பாடல்கள் சிரஞ்சீவியாக என்றும் நம் மனத்தில் இருக்கும் - MGR யாரை போல
அன்புடன்
ரவி
http://youtu.be/Z6DKos7t_V4