http://i60.tinypic.com/sngifq.jpg
http://i61.tinypic.com/2lbl380.jpg
WORLD BOOK DAY
Printable View
திரு கலைவேந்தன் - உங்கள் இந்த பதிவு எல்லா பதிவுகளையும் போல இனிமையாகவும் , அழுத்தமாகவும் இருந்தது . இந்த பதிவை படிக்கும் போது , ஒரு வேட்டைக்காரனை ஆதிசங்கரர்க்குள் நுழைத்து அதன் மூலம் , அத்வைதியத்தை வெளிக்கொண்டுவந்து அதை பரமாத்மாவுடன் இணைத்து , இரண்டும் வேறு அல்ல என்பதை எவ்வளவு ஆழமாக , சுருக்கமாக எடுத்து சொன்னீர்கள் - hats off - உங்கள் இந்த பதிவு ஒரு அலசலுடன் முடிந்து விடக்கூடாது . இன்னும் தொடர வேண்டும் என்பதனால் என்னுடைய கருத்துக்களையும் உங்கள் பதிவுடன் இணைக்க விரும்புகிறேன் - உங்கள் அனுமதியுடன் ..
"நீ உன்னை அறிந்தால் " மிகவும் நெஞ்சை தொடும் பாடல் - இப்படி பட்ட பாடல்களை நாம் சுவைக்கும் போது , அந்த அந்த நடிகர்களை நினைவு கூர்ந்து , பிறகு மறந்து விடுகிறோம் - நமக்காக அவர்கள் பாடிய பாடல்கள் - 1000 புத்தகங்கள் சொல்ல முடியாத தத்துவங்களை கண்ணதாசனும் , வாலியும் சில வரிகளில் சுலபமாக சொல்லிவிட்டு சென்று விட்டனர் - ஒரு சின்ன உதாரணம் : " ஒருவரது துடிப்பினில் வருவது கவிதை ; இருவரது துடிப்பினில் வருவது மழலை " இதை விட ஒரு தாம்பத்தியத்தை அழகாக விளக்க முடியுமா அருவருப்பு இல்லாமல் ???
ஆதிசங்கரரை நினைவு கூறும் இந்த நாளில் உங்களுக்கு இன்னுமொரு சம்பவத்தை சொல்ல ( உங்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும் ) விரும்புகிறேன் .
ஒருமுறை அவர் , தன்னுடைய சீடர்களுடன் அடுத்த ஊருக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார் - இடையே ஒரு காட்டுவாசி , கிழிந்த உடைகளுடன் , சுத்தம் என்றால் என்ன விலை என்று கேட்பவனாக , தனது நான்கு நாய்களுடன் அவர் நடுக்கும் பாதையில் எதிராக வந்து கொண்டிருந்தான் - இவரின் சீடர்கள் அவனை ஓரம் போக சொன்னார்கள் - ஆதி சங்கரரும் தன் நிலையை மறந்து அவனை சற்று தள்ளி செல்லும்படி சொன்னார் - அந்த காட்டுவாசி வினவினான் " யாரை தள்ளி போக சொல்கிண்டீர்கள் , நானாகிய ஜீவாத்மாவையா அல்லது என்னுள் இரண்டற கலந்துள்ள பரமாத்மாவையா ? " பொறி தட்டியது ஆதிசங்கரருக்கு , ஒன்றும் சொல்லாமல் அவன் காலில் சாஷ்ட்டாங்கமாக விழுந்தார் - என்னை மன்னித்து விடு , அறியாமை இன்றுடன் என்னை விட்டு அகன்றது " என்றார் - அந்த காட்டுவாசி சிரித்துவிட்டு மறைந்து விட்டான் - " நீ உன்னை அறிந்தால் " இதில் இந்த கதையும் அடக்கம் !!
இப்படிப்பட்ட பொன்னான வரிகள் நடிகர் திலகம் பாட்டுக்களிலும் உண்டு - " தூங்கும் கண்களில் ஒளி இல்லை ; துள்ளி நடந்தால் வலி இல்லை " ; " உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை மதிக்கும் !. இந்த வரிகளுக்கான ஒரு குட்டி கதை இராமாயணத்தில் இருந்து ( இதுவும் உங்களுக்கு தெரிந்திருக்கும் )
ஒரு முறை மகாவிஷ்ணு வைகுண்டத்தில் தனது பள்ளியறையில் கால்களில் அணித்துள்ள காலணிகளை கழட்டாமல் உறங்க சென்று விட்டார் - இத பார்த்து கொண்டிருந்த சங்கும் , சக்கரமும் , அந்த காலணிகளை பார்த்து கேலி செய்ததாம் " என்ன திமிரு உனக்கு - நீ இருக்க வேண்டிய இடம் அறைக்கு வெளியே - அவர் மறந்து உன்னை கழட்டாமல் வந்து விட்டார் - உனக்கு எங்கே போனது புத்தி - எப்படி எங்களுக்கு சமமாக படுக்கை அறைக்குள் வருவாய் ? " இப்படி மனதை நோக வைக்கும் வார்த்தைகளால் அந்த காலனிகளை வசை மாறி திட்டினவாம் .. காலணிகள் அழுவதை தவிர ஒன்றும் தெரியாமல் முழித்தன . இறைவன் எல்லாம் அறிந்தும் அறியாதவனைப்போல எழுந்தவுடன் , சங்கையும், சக்கரத்தையும் பார்த்து சொன்னான் " நான் இன்னும் சில நாட்களில் இராம அவதாரம் எடுக்க போகிறேன் - நீங்கள் இருவரும் எனக்கு தம்பிகளாக வருவீர்கள் , ஆதிசேஷனும் எனக்கு ஒரு தம்பியாக வருவான் "
இதைக்கேட்டு விட்டு சங்கிர்க்கும் சக்கரத்திற்கும் தலை கால் புரியவில்லை , காலணிகளை இன்னும் எப்படி நோக வைக்கலாம் என்று திட்டம் போட்டன . காலணிகள் இறைவன் பாதத்தை இன்னும் அழுத்தமாக பற்றி கொண்டு அழுதன .. இறைவன் சிரித்தான் --
சங்கு பரதனாகவும் , சக்கரம் சத்ருகரனாகவும் வளர்ந்தன - இராமன் 14 ஆண்டுகள் வன வாசம் சென்றான் - பரதன் அங்கு சென்று அவனை மீண்டும் அயோத்திக்கு வரும்படி கெஞ்சினான் - கடைசியில் அண்ணன் தந்த பாதுகைகளை தன் தலையில் சுமந்துகொண்டு அயோத்திக்கு எடுத்து வந்து அவைகளை இராமன் அமரும் சிம்மாசனத்தில் வைத்து 14 வருடங்கள் பூஜித்து வந்தான் . ஒருமுறை காலணிகளை கேவலமாக பேசினதிர்க்காக 14 வருடங்கள் அவைகளை பூஜிக்கும் நிலைக்கு இரண்டு சகோதர்களும் ஆளானார்கள் - இந்த பெரிய தத்துவத்தை ஒரே வரியில் கண்ணதாசன் நடிகர் திலகம் மூலம் சொல்வார் - உயரும் போது பணிவும் வர வேண்டும் என்பதை - இல்லையென்றால் இந்த உலகம் உன்னை திரும்பி கூட பார்க்காது .
இராவணனை பார்க்கும் போது நமக்கு நினைவுக்கு வருவதெல்லாம் , மாற்றான் மனைவி மீது மோகம் கொண்டவன் என்பதே - அதனால் அவன் முடிவை அவனே தேடிக்கொண்டான் என்று சொல்பவர்கள் பலர் -அவன் செய்தது மாபெரும் தவறு தான் - இருந்தாலும் அவனிடம் இருந்த ஒழுக்கங்கள் , பண்புகள் , உண்மையான பக்தி , பிறருக்கும் உதவும் குணம் இவைகள் அவன் உயிரை வேலி போட்டு காத்து நின்றன - கடவுளே , நேரில் மனிதனாக வந்த பின் தான் அவனை கொல்ல முடிந்தது - தூங்கும் அவன் கண்களிலிருந்து ஒளியை எடுத்தவனும் இறைவனே - அந்த ஒளியை முதலில் அவனுக்கு தந்தவனும் அந்த இறைவனே .
ஒவ்வொரு தத்துவ பாடல்களையும் உங்களை போல ஆராய முயன்றால் எவ்வளவு புதைந்து கிடக்கும் உண்மைகள் , பிறருக்கு உதவியாக இருக்கும் தத்துவங்கள் வெளியே கொண்டு வர முடியும் ! - இந்த இரு திலகங்களின் பாடல்கள் மூலமே 100க்கும் மேலாக திரிகளை நாம் வெற்றிகரமாக உருவாக்கலாம் - சாரி சார் - என் பகுதி என்னையும் அறியாமல் சற்றே நீண்டு விட்டது . பொறுமையுடன் படித்த எல்லோருக்கும் மீண்டும் என் மனமார்ந்த நன்றிகள் .
" Where there is righteousness in the heart , there is beauty in character "
அன்புடன்
ரவி
மிக்க நன்றி திரு யோகேஷ் - நீங்கள் அங்கு வந்து பதிவுகளை போடுவது மனதிற்கு மிகவும் ஆனந்தத்தை தருகின்றது - கூடவே ஒரு இனம் தெரியாத பயமும் வருகின்றது - இந்த நட்பு எந்த சுறாவளிக்கும் பழுது ஆகாமல் , கண் படாமல் இருக்க வேண்டும் - மனம் ஆரோக்கியமாக இருந்தால் , அதிலிருந்த வெளி வரும் வார்த்தைகளும் ஆரோக்கியமாகவே இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து . உங்கள் குழந்தைக்கு ஆரோக்கியா பாலைத்தான் தருவீர்கள் என்பது என் எண்ணம் - சரி தானே ?
அன்புடன்
ரவி
மிகவும் நன்றி சார் - சின்ன சாதனைகளைகூட பெரிய மனது பண்ணி பாராட்டும் இந்த திரியில் பங்கு கொள்வதற்கு , என் கருத்துக்களை தெரிவிக்க ஒரு வாய்ப்பு அளிப்பதற்கு என் மனமார்ந்த நன்றிகள் . இன்னும் நான் , உங்கள் எல்லோரையும் பார்க்கும் போது முதல் படிக்கட்டில் தான் நின்று கொண்டுருக்கிறேன் . அண்ணாந்து பார்க்கும் ( கழுத்து வலிக்கின்றது சார்) உயரத்தில் நிற்கும் உங்கள் எல்லோரையும் வந்து அடைய - திரு கலைவேந்தனுக்கும் , எனக்கும் , மற்றும் எல்லோருக்கும் பிடிக்கின்ற - கண்கள் இரண்டும் --- பாடலில் வரும் யுகம் யுகமாக , பல யுகங்கள் நான் கடக்க வேண்டியிருக்கும் .
அன்புடன்
ரவி
DR. RAJKUMR'S BIRTH DAY 24.4.2015
http://i60.tinypic.com/fng5eo.jpg
கன்னட எம்.ஜி.ஆர். என்றழைக்கப்படும் மறைதிரு. ராஜ்குமார் அவர்களின் பிறந்த தினமாகிய இன்று அவரை கவுரவப்படுத்தும் விதமாக - நம் மக்கள் திலகத்துடன் தோன்றும் சில நிழற்படங்கள் :
http://i60.tinypic.com/2z8xgdy.png
http://i62.tinypic.com/1625hxt.jpg
http://i57.tinypic.com/10dy6c6.jpg
https://www.youtube.com/watch?v=3ecwV_9NpjE
The above song used to broadcast by AIR during 1970's between 3:30 to 4:30 very frequently in the afternoon [ two songs from each language].
May appear to have see this song. Yes NT's Thirisoolam [Malar koduthen]:
https://www.youtube.com/watch?v=ahrse8PphQw
Birthday remembrance of MGR of Kannada film industry DrRajkumar
Dear Sailesh sir.
Though DrRajkumar is hailed as the MGR of Kannada screen, he was also the NT's performer in many movies as there was virtually no NT for Kannada movie world even as good actors like Vishnuvardhan were emerging. Rajkumar had given outstanding performances in movies like Sanathi(Shenoy)Appanna in line with Thillaanaa Mohanaambal, the movie acclaimed by Makkal Thilagam endorsing the acting histrionics of NT many times...
https://www.youtube.com/watch?v=1euHDlC5m20