-
மக்கள் திலகத்தின் ''ஒளி விளக்கு '' ஒரு சிறப்பு பதிவு .
20.9.1968
1936 ல் ஜெமினியின் தயாரிப்பில் சதிலீலாவதி - தமிழ் படத்தின் மூலம் சிறு வேடங்களில் நடிக்க துவங்கி 10 ஆண்டுகளில் பல போராட்டங்களுக்கு பிறகு1947ல் தமிழ் சினிமாவில் -ராஜகுமாரி படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி 1968ல் 100 வது படமான ஜெமினியின் தயாரிப்பில் வந்த
படம் ''ஒளிவிளக்கு ''
பிரம்மாண்ட வண்ணப்படம்
மக்கள் திலகத்தின் அசத்தலான அலங்கார உடைகள் -ஒப்பனைகள் - ஸ்டைல் காட்சிகள் .
குடியின் தீமைகளை பாடல் காட்சிகளில் மூலம் சித்தரித்த மக்கள் திலகத்தின் அருமையான நடிப்பு .
திருடுவதால் ஏற்பாடும் தீமைகள் - சமூகத்தில் கிடைக்கும் கேட்ட பெயர் - யாருமே திருடனாக
மாறக்கூடாது என்ற சமூக சீர்திருத்த கதையில் நடித்த புரட்சி நடிகர் .
1968ல் அன்றைய அண்ணாவின் அரசின் சாதனைகளை ''நாங்க புதுசா '' என்ற பாடல் மூலம்
கொள்கைகளை பரப்பியவர் எம்ஜிஆர் .
மெல்லிசை மன்னரின் அட்டகாசமான டைட்டில் இசை - மக்கள் திலகத்தின் போஸ் சூப்பர் .
ஆரம்ப காட்சியில் மனோகருடன் மோதும் சண்டை காட்சி -புதுமையான முறையில் இருந்தது .
சொர்ணம் அவர்களின் வசனங்கள் - பல இடங்களில் நெஞ்சை தொடுவதாக இருந்தது .
நான் கண்ட கனவில் நீ ..... பாடலில் ஜெயாவின் அறிமுகம்
மாங்குடி கிராமத்திற்கு மக்கள் திலகம் செல்லும் காட்சி
சோ வின் சந்திப்பு
ஜமீன்தார் வீட்டில் சௌகார் ஜானகி அறிமுகம்
அவருக்கு செய்யும் மக்கள் திலகத்தின் சேவை
கள்ள பார்ட் நடராஜனை புரட்டி எடுத்த காட்சி
சௌகாரை மீட்டு தன் வீட்டுக்கு அழைத்து வருதல்
வலுக்கட்டாயமாக மக்கள் திலகத்தை குடிக்க வைக்கும் காட்சியும்- ஜெயாவின் நடனமும்
மெல்லிசை மன்னரின் பிரமாதமான இசையும் அதை தொடர்ந்து ''தைரியமாக சொல் ''
பாடலும் காண்போர் உள்ளங்களை கொள்ளை கொள்ளும் அளவிற்கு படம் விறுவிறுப்பாக செல்லும் .
சௌகாரை கேவலமாக பேசிய ஜஸ்டினை மக்கள் திலகம் படிக்கட்டுகளில் ஏறி தூங்கி கொண்டிருந்த அவர எழுப்பி வீதிக்கு அழைத்து வந்து புரட்டி எடுக்கும் இடம் - சூப்பர் .
கவர்ச்சி வில்லனிடம் ''வீரன் கோழையான வரலாறு ''என்று அசோகன் கூறும் பிளாஷ் பேக் காட்சி
மொட்டை நடராஜனிடம் மக்கள் திலகம் மோதும் ஆவேசமான சண்டை
''ருக்குமணியே '' என்ற வித்தியாசமான பாடலில் அந்தரத்தில் தொங்கி கொண்டே மக்கள் திலகம்
பாடல் காட்சி - புதுமை
திருடன் என்று பெயர் வாங்கியதால் எங்குமேவேலை கிடைக்காமல் சோர்வுடன் திரும்பும் எம்ஜிஆரின் நடிப்பு - முக பாவம் அசத்தல் .
தீயில் சிக்கிய குழந்தையை காப்பாற்றும் காட்சி - மரணப்படுக்கையில் இருந்த மக்கள் திலகத்தின் உயிரை காப்பாற்ற ஆண்டவனிடம் சர்வ மதத்தினரும் பிராத்தனை - சௌகாரின் பாடல் -உருக்கமான காட்சிகள் -
மாம்பழ தோட்டம் -பாடல் சீர்காழி - ஈஸ்வரி குரலில் இனிமையான பாடல் .
இறுதி காட்சிகளில் மக்கள் திலகம் - மனோகர் சண்டை
மக்கள் திலகம் - அசோகன் சண்டை.
''ஒளிவிளக்கு '' படம்
ரசிகர்கள் - பொதுமக்களுக்கு விருந்து படைத்த படம் .
மொத்தத்தில் எம்ஜிஆரின் ஒளிவிளக்கு -
உலகம் உள்ளவரை எம்ஜிஆரின் ''அணையா விளக்கு ''
-
என் வாழ்க்கையின்
முதல் வெளிச்சத்தை...
1969 இல்...
'ராஜா' தியேட்டர் இருட்டில் கண்டு பிடித்தேன்!'
'ஒளி விளக்கு'...
நான் பார்த்த முதல் எம்.ஜி.ஆர் படம் !
கிட்டத்தட்ட் 12 ஆண்டுகளுக்குப் பிறகு
'ஒளி விளக்கு'மீண்டும் 'ராஜா'வில்..
ஏற்றி வைக்கப்பட்ட போது
எனக்கும் என் நண்பனுக்கும் [ நெல்லியடி முரளிதரன் ]
இடையே..ஒரு நூதனமான போட்டி!
'தைரியமாகச் சொல் நீ மனிதன் தானா?'
பாடல் காட்சியில் வரும்
நான்கு எம்.ஜி.ஆரில்
எந்த எம்.ஜி.ஆர் அதிக அழகு?'
இந்தக் கேள்விக்கு விடை காண்பதற்காகவே....
ஒளி விளக்கை மீண்டும் மீண்டும் பார்த்தோம்.
சந்தோஷமாகத் தோற்றோம்!
courtesy - yazh sudhakar
-
-
1936-1968
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரை உலகில் தன்னுடைய 32 வருடங்களில் 100 படங்களில் நடித்துள்ளார் .
கதாநாயகனாக 1947 முதல் 1968 வரையில் நடித்த படங்களில் முக்கியமான வெற்றி படங்கள் .
ராஜகுமாரி
மருத நாட்டு இளவரசி
மந்திரிகுமாரி
சர்வதிகாரி
மரம்யோகி
என் தங்கை
மலைக்கள்ளன்
குலேபகாவலி
மதுரை வீரன்
அலிபாபாவும் 40 திருடர்களும்
தாய்க்கு பின் தாரம்
சக்கரவர்த்தி திருமகள்
புதுமை பித்தன்
மகாதேவி
நாடோடி மன்னன்
மன்னதி மன்னன்
பாக்தாத் திருடன்
திருடாதே
நல்லவன் வாழ்வான்
தாய் சொல்லை தட்டாதே
தாயை காத்த தனயன்
பெரியஇடத்து பெண்
பணத்தோட்டம்
பரிசு
வேட்டைக்காரன்
பணக்கார குடும்பம்
தெய்வத்தாய்
படகோட்டி
எங்க வீட்டு பிள்ளை
ஆயிரத்தில் ஒருவன்
அன்பே வா
பெற்றால்தான் பிள்ளையா
காவல்காரன்
ரகசிய போலீஸ் 115
குடியிருந்த கோயில்
ஒளிவிளக்கு
-
-
-
-
-
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் ஒளிவிளக்கு - என் வாழ்க்கையில் மறக்க முடியாத காவியம் .
என் பள்ளி நாட்களில் முதல் நாளில் காஞ்சீபுரம் கிருஷ்ணா அரங்கில் பார்த்த அனுபவம் இன்றும் பசுமையாக உள்ளது . மக்கள் திலகத்தின் புதுமையான காட்சிகள் , ஸ்டைல் , நடிப்பு சண்டை காட்சிகள் என்று பிரமாண்டமாக அவரை பார்த்ததில் ஏற்பட்ட ஈடு பாடு பிற்காலத்தில் என்னை தீவிர ரசிகனாக மாற்றியது .
-
Quote:
Originally Posted by
Sathya VP
தலைவா
இந்த அன்பு தான்
உம்மை இன்றும் வாழ வைத்துக் கொடிருக்கின்றது
எதையும் வேண்டாத அன்பு
இவர்களை
நீ தான்
நலமாக வாழ
அருள் செய்ய வேண்டும்