Saanthu Pottu - Veera Thaalaattu
Let me post a folk song's lyric :)
http://music.cooltoad.com/music/song.php?id=101221
ஹோய் சாந்துப்பொட்டும் சந்தனப்பொட்டும் தளதளக்குற சரிகைகட்டும்
எம்மனசுல கொக்கிபோடுது நாகரத்தினமே
அடி சாந்துப்பொட்டும் சந்தனப்பொட்டும் தளதளக்குற சரிகைகட்டும்
எம்மனசுல கொக்கிபோடுது நாகரத்தினமே
நடுசாமதுல ஒறக்கம்கெட்டுது நாகரத்தினமே
அந்த காரணத்த தெரிஞ்சி சொல்லடி நாகரத்தினமே (2)
வெளைஞ்ச நெத்து வெடிச்சிருக்கு...வெளைஞ்ச நெத்து வெடிச்சிருக்கு
வெடலைப்புள்ள சமைஞ்சிருக்கு கடலைப்பூவும் மலர்ந்து நிக்குது ஆச ராசாவே (2)
அட கனிஞ்சபழத்த குருவி கொத்துது ஆச ராசாவே
அந்த காரணத்த தெரிஞ்சி சொல்லனும் ஆச ராசாவே
பாதி ராத்திரி பதறி எழுந்து பாய விரிச்சி முழிச்சிருந்தேன்
அட பாதி ராத்திரி பதறி எழுந்து பாய விரிச்சி முழிச்சிருந்தேன்
முழிச்சிருந்தும் கனவு வந்தது நாகரத்தினமே
பாதி ராத்திரி பதறி எழுந்து பாய விரிச்சி முழிச்சிருந்தேன்
முழிச்சிருந்தும் கனவு வந்தது நாகரத்தினமே
ஒரு மாதிரியா மனசு கெட்டுது நாகரத்தினமே
அந்த காரணத்த தெரிஞ்சி சொல்லடி நாகரத்தினமே
சோறு தண்ணி எறங்கலையே வேலை செய்ய தோணலையே
என் நினைப்பும் எங்கிட்ட இல்லையே ஆச ராசாவே (2)
ஒரு மாதிரியா மயக்கம் வருது ஆச ராசாவே
அந்த காரணத்த தெரிஞ்சி சொல்லனும் ஆச ராசாவே
ஏறுபுடிச்சி உழுகையிலே ஏத்தம்கட்டி எரைக்கையிலே
அடி ஏறுபுடிச்சி உழுகையிலே ஏத்தம்கட்டி எரைக்கையிலே
தாறுமாறா புத்தி போகுது நாகரத்தினமே
ஏறுபுடிச்சி உழுகையிலே ஏத்தம்கட்டி எரைக்கையிலே
தாறுமாறா புத்தி போகுது நாகரத்தினமே
தினம் ராத்திரி பகலு தெரியலையே நாகரத்தினமே
அந்த காரணத்த தெரிஞ்சி சொல்லடி நாகரத்தினமே
கூடி செனங்க இருக்கையிலே சோடி பொண்ணுங்க சிரிக்கையிலே
ஆடி அடங்கி நான் கிடக்கேன் ஆச ராசாவே (2)
அத ஊரு முழுக்க சாட பேசுது ஆச ராசாவே
அந்த காரணத்த தெரிஞ்சி சொல்லனும் ஆச ராசாவே