Blame it on the recent hub debates, I read the title as Nadigar Thilagam vs Sivaji Ganesan :oops:
Printable View
Blame it on the recent hub debates, I read the title as Nadigar Thilagam vs Sivaji Ganesan :oops:
:lol: :lol:Quote:
Originally Posted by jaaze
Okay, here's my argument: Nadigar Thilagam is better than Sivaji Ganesan. :D
Okay, okay, we don't "play play" in NT's thread. Appuram, seniors long ruler-a vachu kaiyila adippaangga.
சித்தூர் ராணி பத்மினி - Part I
தயாரிப்பு: உமா பிக்சர்ஸ்
இயக்கம்: Ch.நாராயண மூர்த்தி
வெளியான நாள்: 09.02.1963
சரித்திர பின்னணியில் அமைந்த கதை. தமிழக வரலாற்று பின்னணியைக் கொள்ளாமல் ராஜஸ்தானின் ரஜபுத்திர சாம்ராஜ்ஜியத்தில் நிகழும் கதையை தமிழில் எடுத்திருக்கிறார்கள்.
ரஜபுத்திர நாடான உதயபூர் (உதய்பூர்) தலைநகரில் இளவரசி பத்மினியின் பிறந்த நாள் கொண்டாட்டங்களோடு கதை தொடங்குகிறது. அன்றைய டெல்லி பாதுஷா அலாவுதின் கில்ஜியின் தூதுவனான மாலிக்காபூர் விருந்தினராக வந்திருக்கிறான். இளவரசியின் பிறந்த நாளை முன்னிட்டு நடத்தும் போட்டியில் மாலிக்காபூரை வெல்கிறான் சித்தூர் சிப்பாய் என்ற மாறு வேடத்தில் வரும் சித்தூர் மன்னன் பீம்சிங். இளவரசியின் கையிலிருந்து பரிசு பெறும் அவன், அவள் அழகில் கவரப்படுகிறான். தொடர்ந்து இரண்டு மூன்று முறை அவளை சந்திக்கும் பீம்சிங் தன் விருப்பத்தை வெளிப்படுத்துகிறான்.அவளுக்கும் அது சம்மதமே.
மன்னன் என்பதை காட்டிக் கொள்ளாமல் சிப்பாய் போன்றே நடிக்கிறான். ஒரு சமயம் அவன் பாட பத்மினி நடனம் ஆடுகிறாள். ஒரு போட்டி அங்கே அரேங்கேறுகிறது. யாருக்கு வெற்றி என்று தெரியும் முன்னரே மன்னரே போட்டியை நிறுத்தி விடுகிறார். பீம்சிங்கிடம் என்ன பரிசு வேண்டும் என்று கேட்க அவன் அவரது மகளையே பரிசாக கேட்க, அவன் அரசன் என்று தெரியாமலே அவனை கைது செய்து தண்டிக்க முற்படுகிறார்கள். அவர்களிடமிருந்து பீம்சிங் தப்பித்து செல்கிறான்.
இதனிடையே டெல்லி சென்றடையும் மாலிக்காபூர், அலாவுதினிடம் பத்மினியின் அழகை வர்ணிக்க, டெல்லி பாதுஷாவிற்கு அவளை அடைய வேண்டும் என்ற ஆசை வருகிறது. பத்மினியை மணந்து கொள்ள மன்னரிடம் மாலிக்காபூரையே தூது அனுப்புகிறான். செய்தி கேட்டவுடன் மன்னன் பெண் தர மறுத்து விடுகிறான். அந்நேரம் பீம்சிங் சித்தூர் நாட்டின் தூதனாக (மறுபடியும் மாறு வேடம்) வந்து தங்கள் மன்னனுக்கு பத்மினியை பெண் கேட்க, மாலிக்காபூர் முன்னிலையிலே மன்னன் சம்மதித்து விடுகிறான் . மிகுந்த கோவத்துடன் மன்னனை எச்சரிக்கும் மாலிக்காபூரை திருப்பி அனுப்பி விடுகிறார்கள்.
மன்னன் பீம்சிங்கும் தன் காதலன் சிப்பாயும் ஒன்றே என்றறியாத பத்மினி திருமணத்திற்கு மறுக்கிறாள். அவளை சந்திக்கும் சிப்பாய் கல்யாணத்தன்று தான் வந்து அவளை அழைத்து செல்வதாக கூறி சம்மதிக்க வைக்கிறான். கல்யாணத்திற்கு முதல் நாள் பரிவாரங்களோடு வரும் பீம்சிங் இரவு நேரத்தில் அந்தபுரத்தில் பத்மினியை சந்திக்கும் போது மன்னர் வந்து விடுகிறார். அவனை சிறைக்கு கொண்டு செல்ல முயற்சிக்கும் போது, சித்தூர் நகர பிரதானிகள் வந்து உண்மையை விளக்க அனைவரும் மகிழ்ந்து திருமணத்தை நடத்தி வைக்கின்றனர்.
பத்மினி தனக்கு கிடைக்கவில்லை என்றதும் மிகுந்த கோவம் அடையும் அலாவுதின் சித்தூர் நாட்டின் மீது படை எடுக்கிறான். கோட்டையை முற்றுகையிட்டும் அவர்களால் சித்தூரை பிடிக்க முடியவில்லை. படை பலம், ஆயுத பலம் பலன் தராது என்பதை உணரும் அலாவுதீன் மாலிக்காபூரை சமாதான பேச்சுக்கு அனுப்புகிறான். அதை ஏற்றுக் கொள்ளும் பீம்சிங் அலாவுதினை விருந்தினராக வரவேற்கிறான்.
பத்மினியின் நடனத்தை காண வேண்டும் என்று ஆவலை வெளிப்படுத்தும் அலாவுதினிடம் ரஜபுத்திர வம்சத்து பெண்கள் திருமணத்திற்கு பிறகு அந்நிய ஆடவர்கள் முன்னிலையில் ஆட மாட்டார்கள் என பீம்சிங் மறுத்து விடுகிறான். மீண்டும் மீண்டும் அலாவுதீன் வற்புறுத்தவே, வேறொரு அறையில் பத்மினியை நடனமாட செய்து அதை கண்ணாடி மூலம் அலாவுதின் காண ஏற்பாடு செய்கிறான். தன்னை அவமானப்படுத்தி விட்டதாக குமுறும் அலாவுதீன் அதை வெளி காட்டிக் கொள்ளாமல் திரும்பி செல்கிறான்.
தனக்கு நேர்ந்த அவமானத்திற்கு பழி வாங்க நினைக்கும் அலாவுதீன் தன் பிறந்த நாளுக்கு மனைவியுடன் வருமாறு பீம்சிங்கிற்கு ஓலை அனுப்புகிறான். போக வேண்டம் என்று பீம்சிங்கின் தாய் தடுக்க, தன்னை கோழை என்று நினைத்து விடுவான் என்று பீம்சிங் வாதிடுகிறான். அப்படியென்றால் பீம்சிங்கை மட்டும் போய் விட்டு வரும்படி தாய் சொல்ல, அவன் செல்கிறான்.
அங்கே நடக்கும் ஒரு நடன நிகழ்ச்சியிலே அவனை கொல்ல நடக்கும் சாதுர்யமான முயற்சியிலிருந்து தப்பிக்கும் பீம்சிங்கை அவன் இரவு உறங்கும் போது கட்டிலோடு சேர்ந்து கட்டி போட்டு சிறை பிடிக்கிறார்கள். அவன் மனைவியை வரச்சொல்லி ஓலை அனுப்புகிறார்கள். அவள் தங்கள் அரச சபையில் ஆடினால் அவளது கணவனை விடுதலை செய்வதாக சொல்கிறார்கள். நூறு சேடி பெண்களுடன் வருவதாக அவள் தகவல் கொடுத்து விட்டு வருகிறாள். பீம்சிங்கிற்கு இது அவமானமாக இருக்கிறது. சபைக்கு வரும் பத்மினி தன்னுடன் அழைத்து வந்தது எல்லாம் ஆண்கள். அரசவையில் அவர்கள் தீடீர் தாக்குதல் நடத்த, பீம்சிங்கும் பத்மினியும் தப்பித்து செல்கிறார்கள்.
பின் தொடர்ந்து வரும் அலாவுதீன் இம்முறை தாக்குதலை தீவிரப்படுத்துகிறான். தன்னை சிறைப் பிடித்ததனால் மனம் தளர்ந்த பீம்சிங் ஆரம்பத்தில் போருக்கு செல்லாமல் இருக்க, அவனது படைகள் பெரும் பின்னடைவை சந்திக்கின்றன. இறுதியில் களத்திற்கு செல்லும் பீம்சிங், எதிரி ஒருவன் எறியும் ஈட்டி கொண்டு மரணமடைகிறான். போரில் தன் கணவனுக்கு உதவியாக பங்கு பெறும் பத்மினியும் அதைக் கண்டு மரணத்தை தழுவ, படம் நிறைவு பெறுகிறது.
(தொடரும்)
சித்தூர் ராணி பத்மினி - Part II
இந்தப் படத்தை இப்போதுதான் நான் முதன் முறையாக பார்க்கிறேன். ஏனென்றால் அவ்வளவாக மறு வெளியீடு காணாத திரைப்படம். படத்தைப் பற்றி செய்திகளும் குறைவாகவே கேள்விப்பட்டிருந்தேன். தயாரிப்பில் ஏற்பட்ட தாமதம் காரணமாக வெற்றிக் கோட்டை தொட முடியாமல் போன படம் என்பதும் அதில் ஒன்று.
எந்த வித முன் எதிர்பார்ப்புகளும் இல்லாமல் படம் பார்த்தேன்.டைட்டில் போடும் போது இரண்டு ஆச்சர்யங்கள். கதை வசனம் ஸ்ரீதர்- இளங்கோவன் என்பது ஒன்று. பின்னணி பாடியவர்கள் பட்டியலில் டி.எம்.எஸ். பெயர் இல்லை என்பது இரண்டாவது.
தூய தமிழில் அடுக்கு மொழி வசனம் எழுதி தனக்கென்று ஒரு இடம் பிடித்தவர் இளங்கோவன் என்றால் இயல்பான வசனம் மூலம் மக்களை கவர்ந்தவர் ஸ்ரீதர். இந்த இருவரும் இணைந்து எழுதியிருக்கிறார்கள் என்பது ஒரு புதுமையாக இருந்தது. ஜி.ராமநாதன் இசையில் படத்தில் நடிகர் திலகம் பாடும் அனைத்துப் பாடல்களுக்கும் பின்னணி பாடியிருக்கிறார் சீர்காழி. இது வரை இதைப் பற்றி கேள்விப்படாததால் இதுவும் எதிர்பார்க்காத ஒன்றாக அமைந்தது.
இனி படத்திற்கு வருவோம். மாற்றான் ஒருவன் தன் மீது ஆசைக் கொண்டு கணவனை சிறை செய்து தன் மானத்தை விலை பேசிய போது, தந்திரமாக செயல்பட்டு தன் கணவனை காப்பாற்றிய ரஜபுத்திர ராணியின் கதை சரித்திரத்தில் இருக்கிறது. அதை படமாக எடுக்க வேண்டும் என்ற ஆசையில் எடுக்கப்பட்ட படம். கதாநாயகியின் பாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையமைப்பு. இதற்கு ஒரு நடிகர் திலகம் தேவையில்லை. எப்பவும் போல் யாருக்கோ உதவி செய்ய நடிகர் திலகம் ஒப்புக் கொண்டிருக்க வேண்டும். கதையும் பாத்திரமும் எப்படி இருந்தாலும் தன் முழு பங்களிப்பையும் தருபவர் நடிகர் திலகம். இதிலும் அப்படியே.
சித்தூர் சிப்பாய் வேடத்தில் வந்து மாலிக்காபூரை வெற்றிக் கொண்டு இளவரசியிடம் இளமைக் குறும்போடு பேசும் அந்த முதல் காட்சியிலிருந்து இறுதிக் காட்சி வரை அவரது presence படத்திற்கு உதவியிருக்கிறது. தான் யார் என்பதை வெளிக்காட்டாமல் வைஜயந்தியிடம் அவர் சரசமாடும் காட்சிகள் எல்லாம் சுவை. மாறு வேடங்களில் அவர் வைஜயந்தியை ஏமாற்றும் காட்சிகளும் அப்படியே. வைஜயந்தி நடனமாட சிவாஜி பாடும் அந்த பாடல் காட்சி ["பார்த்துக் கொண்டு இருந்தாலே போதும்"] பிரமாதம். இதற்கு முன் எந்தப் படத்திலும் இவ்வளவு ஸ்வர பிரஸ்தாரங்கள் / ஜதிகள் ஒரு பாடலில் பயன் படுத்தப்பட்டு நான் கேட்டதில்லை. அதற்கு அவர் வாயசைப்பு அற்புதம். மாலிக்காப்பூரை வாதத்தில் அடக்குவது, சிறையில் அவனை எடுத்தெறிந்து பேசி விட்டு சிரிப்பது, தன்னை சூழ்ச்சியின் மூலமாக கட்டிப் போட்ட அலாவுதினிடம் அவர் காட்டும் பாவம், அவர்களை துச்சமென மதித்து அவர் பேசுவது எல்லாம் அக்மார்க் சிவாஜி முத்திரை. என்னதான் மனைவி சாதுரியமாக செயல்பட்டு தன்னை மீட்டாலும், தன் வீரத்தின் மூலமாக விடுதலை பெறாமல் இப்படி தப்பித்து வரும் படியாகி விட்டதே என்று மனம் தளர்ந்து அவர் ஒரே இடத்தில சலனமற்று உட்கார்ந்திருக்கும் காட்சி குறிப்பிட தகுந்த ஒன்று. அதே போல் நடனம் ஆடிக் கொண்டே தன் உடை வாள் கத்தியை எடுத்து குத்த வரும் நடன மங்கையை அவர் அலட்சியமாக சமாளிக்கும் இடம். இப்படி நடிகர் திலகம் என்ற யானைக்கு சோளப் பொறியாக சில காட்சிகள் அமைத்திருக்கிறார்கள்.
நடனத்தில் தேர்ந்த ராணி என்றதும் பத்மினி அல்லது வைஜயந்தி தான் நினைவுக்கு வருவார்கள். இந்த படம் தயாரிக்க தொடங்கிய போது பத்மினி திருமணம் செய்துக் கொண்டு திரையுலகத்திலிருந்து விலகிய நேரம் என்பதால் வைஜயந்தி நாயகியாகி இருக்கிறார். அவரும் அந்த நேரம் இந்தி படவுலகில் பிசியாகி விட படம் தாமதமாகி இருக்கிறது.
அழகான வைஜயந்தி. நடனக் காட்சிகளில் தன் திறமையை வெளிப்படுத்தும் வைஜயந்தி மற்ற காட்சிகளிலும் சோடை போகவில்லை. ஆனால் அந்த பாடல் vs நடனம் போட்டி காட்சியில் பாடல் சிறப்புற்ற அளவுக்கு நடனம் அமையவில்லை. வஞ்சிக்கோட்டை வாலிபன் போட்டி நடனத்தை பார்த்த நமக்கு இது அந்த ரேஞ்சுக்கு வரவில்லை என்றே தோன்றுகிறது. காதல் காட்சிகளில் அவரிடம் நல்ல இளமை துள்ளல்.
மாலிக்காபூராக நம்பியார், அலாவுதினாக பாலையா. நம்பியார் எப்போதும் போல. பாலையா என்பதால் அலாவுதீன் பாத்திரம் அப்படி சித்தரிக்கப்பட்டிருக்கிறதா இல்லை சரித்திரத்திலேயே இப்படித்தானா என்று தெரியவில்லை. படம் முழுக்க மது மாது மயக்கத்திலே கேளிக்கை போகத்தில் திளைக்கும் அரசனாகவே அந்த பாத்திரம் அமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு சில இடங்களில் பாலையா பளிச்சிடுகிறார்.
மற்றவர்கள் யாருக்கும் பெரிதாக வேலை இல்லை. சித்தூர் நாட்டின் தளபதியாக கவர்ச்சி வில்லன் கண்ணனை அடையாளம் தெரிகிறது. ஒரே ஒரு பாடல் காட்சிக்கு ஹெலன் மற்றும் ராகினி வந்து போகிறார்கள்.
காதலனை சிப்பாய் என்றே குறும்போடு அழைக்கும் பாங்கு எல்லாம் ஸ்ரீதர் டச்.அரண்மனை ஆவேச வசனங்கள் எல்லாம் இளங்கோவனின் கைவண்ணம் என்று தோன்றுகிறது.
இசையமைப்பு ஜி.ராமநாதன் என்று சொல்லும் போதே கர்நாடக சங்கீத ராகங்களில் அமைக்கப்பட்ட மெட்டுகள் என்பது மட்டுமல்ல இனிமையான சுவையைக் கொண்டவையாய் இருக்கும் என்பது இதிலும் வெளிப்பட்டிருக்கிறது.
1.தேவி விஜய பவானி
வைஜயந்தியின் அறிமுக பாடல்
2. ஓஹோ நிலா ராணி
சிப்பாய் வேடத்தில்வரும் நடிகர் திலகம் நிலவை நாயகியோடு ஒப்பிட்டு பாடும் பாடல்.
3. பார்த்து கொண்டு இருந்தால் போதும்
போட்டி பாடல். சீர்காழி பிய்த்து உதறி விட்டார். Hats off to him.
4.ஹம் தேகே மேல பாருங்கோ
அலாவுதினின் தர்பாரில் ராகினி ஆட இடம் பெறும் பாடல்.
5.சிட்டு சிரித்தது போல
சிவாஜி -வைஜயந்தி டூயட் பாடல்
6. வானத்தில் மீன் ஒன்று
வைஜயந்தி வேறொரு அறையில் கண்ணாடி முன் நின்று ஆடும் போது வரும் பாடல்.
7. ஆடல் பாடல் காணும் போது
அலாவுதினின் அரண்மனைக்கு பீம்சிங் வரும் போது ஹெலன் ஆடும் நடனப் பாடல்.
எல்லாமே கேட்க இனிமையானவை.
நடிகர் திலகத்தின் அன்னையின் ஆணை போன்ற படங்களை இயக்கிய நாராயண மூர்த்தி இதை டைரக்ட் செய்திருக்கிறார். ஆனால் கதையும் திரைக்கதையும் பெரிய அளவில் அவருக்கு கை கொடுக்கவில்லை.
Curate's egg என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். முழுமையாக இல்லாமல் அங்கங்கே நன்றாக இருப்பது. இந்த படத்திற்கு அது பொருந்தும். தயாரிப்பில் ஏற்பட்ட தாமதம், சரித்திர கதைகள் கிட்டத்தட்ட வழக்கொழிந்து போன ஒரு காலக்கட்டத்தில் வெளியானது, நடிகர் திலகத்திற்கு ஏற்ற பாத்திரப் படைப்பு அமையாமல் போனது, இப்படிப்பட்ட காரணங்கள் இருக்கும் போது படம் வெற்றி வாய்ப்பை இழந்ததில் வியப்பொன்றுமில்லை.
அன்புடன்
Great review of a very seldom talked about movie, Murali-sar. Thank you.
How long was it delayed? I suppose in early sixties, NT's films mostly had MSV/TKR or Maamaa's music, as opposed to GR, who was more favoured in the fifties.
Plus, presence of Ilanggovan may be that he worked first, and Sridhar joined in after the re-commenced.
But by reading your fine review I can summarise to this: Watch it for NT.
Again, thanks for the review, sir.
Thanks Rakesh. Not much of info on the exact time delay but as you had said the stoppage must have brought Sridhar on board. I haven't read much about either the film or it's delay. That's why, I grabbed the DVD piece [Raj Video Vision], when I saw it in the shop.
As we discussed some time ago, there is new interest in the DVD market with respect to NT films and according to the shop owner, there are lot of enquiries for even lesser known films. On the day when the song Ponnaasai Kondorku Ullam illai was telecast in one of the satellite channels, there were lot of enquiries for the film and when the shop procured it, all the pices of that film - one of your favourite - Muradan Muthu had been taken.
Now coming back to the film, yes - it can be seen for NT. Seen with an open mind, it is ok kind of a film.
Regards
வியட்நாம் வீடு -விகடன் விமரிசனம்
புகழ்பெற்ற நாடகம் ஒன்று திரைப்படமாகும்போதெல்லாம், ஒரு கேள்வி எழுந்துதான் தீரும்: 'நாடகம் மாதிரி படம் இருக்கிறதா?'
'வியட்நாம் வீடு' திரைப்படம், நாடகம் மாதிரி இல்லை. நாடகத்தில் புலனாகாத சில விஷயங்கள் படத்தில் ஜொலிக்கின்றன. ஒன்றிரண்டு அம்சங்கள் சோபிக்கத் தவறியுமிருக்கின்றன.
நெருக்கக் காட்சிகளில் காணக் கிடைத்த 'பிரெஸ்டீஜ்' கணேசனின் முக பாவங்கள், திரையில் கிடைத்த அபூர்வ விருந்து. ஆடி ஓய்ந்து முதுமை எய்திவிட்ட தம்பதியரின் பிணைப் பையும் இழைவையும் பத்மனாபன் தம்பதியர் (சிவாஜி-பத்மினி) சித் திரித்திருக்கும் நேர்த்தி, திரையுல கிலேயே ஒரு புதிய சாதனை.
''சாமி பேரை ஏம்பா வச்சுக்கிறீங்க! வையக் கூட முடியலை!'' என்று வேலைக்காரனிடம் அலுத்துக் கொள்ளும் இடத்திலும் சரி, 'வெற்று மிஷினில் டைப் அடிக்கக் கூடாது!' என்று டைப்பிஸ்டை நாசூக்காகக் குத்திக் காட்டும் காட்சியிலும் சரி, 'நீ முந்தினால் உனக்கு, நான் முந்தினால் எனக்கு' என்று அத்தையிடம் விடைபெறும் காட்சியிலும் சரி... சிவாஜியின் நடிப்பில் நயம், முதிர்ச்சி, முழுமை அத்தனையும் பொலிகின்றன.
முழுக்க முழுக்க ஒரு வயோதிகரைக் கதாநாயகனாகக் கொண்டே, துளியும் சுவை குன்றாமல் குடும்ப மணம் கமழ ஒரு திரைப்படத்தைத் தயாரித்த சாமர்த்தியத்தை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.
பிரெஸ்டீஜ் தம்பதியருக்கு இரண்டு டூயட்! முதலிரவு காட்சியில் (பிளாஷ்பேக்) பாடலைவிட சிவாஜி-பத்மினி அபிநயம் பிரமாதம்.
'உன் கண்ணில் நீர் வழிந் தால்...' பாடல் இசையமைப்பாலும், படமாக்கியிருக்கும் விதத்தாலும் நன்கு சோபிக்கிறது.
பத்மினியின் தோற்றத்துக்கு முதுமையின் கம்பீரமும், அமைதியும் அவ்வளவாகப் பொருந்தவில்லை. இருந்தாலும் தாம்பத்திய இனிமை இழையோடும் பகுதிகளில் அவர் மின்னுகிறார்.
ஹிப்பியாக அறிமுகமாகும் நாகேஷ், நிறைய எதிர்பார்க்க வைத்து ஏமாற்றிவிடுகிறார். காந்த் அழகாக மனைவிக்குப் பயப்படுகிறார்.
ரமாபிரபாவுக்கு இப்படி மிரட்டி உருட்டவும் தெரியுமா என்று வியக்கிறோம். 'வில்லி' பாத்திரத்தைச் சாமர்த்தியமாகச் செய்கிறார்.
ரிட்டயராகக் கூடிய காலத்தை ஒரு ஜெனரல் மானேஜர் தெரிந்து கொள்ளாமல் இருப்பது ஆச்சர்யம் தான். அதைப் போலவே, வசதியான ஒரு பதவியிலிருந்து ரிட்டயராகும் அதிகாரி, அளவுக்கு அதிகமாக அலட்டிக்கொள்வது அந்தப் பாத்திரத்தின் 'பிரெஸ்டீஜு'க்குப் பொருத்தமாக இல்லை. மூலக் கதையிலுள்ள இந்த பலவீனமான அம்சம் திரையில் பெரிதாகத் தெரிகிறது.
படத்துக்கு 'பிரெஸ் டீஜ்' (கௌரவம்) சிவாஜி யின் நடிப்பு; அவருடைய நடிப்பின் பிரெஸ்டீஜ்... அப்பப்பா!
இந்த வார ராணி வார இதழில் அல்லி பதில்களிலிருந்து:
கேள்வி : இன்றைய நடிகர்களில் சிவாஜியைப்போல் நடிப்பவர் யார்?
பதில் : பலரும் முயற்சிக்கிறார்கள் ஆனால் யாரும் வெற்றி பெற முடியவில்லை
INAUGURAL FUNCTION OF SIVAJI PRODUCTIONS 'ASAL' PRODUCED BY PRABHU,STARRING AJITHKUMAR
http://www.indiaglitz.com/channels/t...nts/17995.html
நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
அன்புடன்