-
-
This is the youngest ம.பொ.சி I have ever seen ..Thanks Vasudevan!
-
டியர் வாசுதேவன் சார்,
ம.பொ.சி.யுடன் நடிகர் திலகம் உணவு விருந்தில் ... என்ன அபூர்வமான படம் ... என்ன தெளிவு.... நீங்களும் பம்மலாரும் கலக்குறீங்க சார்...சூப்பர்..
-
உலகம் இதிலே அடங்குது
உண்மையும் பொய்யும் விளங்குது
கலகம் வருது தீருது
..
நம் மய்யத்தை சொல்வதாக உள்ளதா...
குலமகள் ராதை படத்தில் இடம் பெற்ற இப்பாடலின் வரிகள் இன்றைக்கும் பொருந்துவதைப் பாருங்கள்...
கம்போஸிடராக நடிகர் திலகம் ...
http://youtu.be/ePriq_xpWLo
-
பாகவதர் பாட்டையே பாடி விட்டேன் .. உன் கோபம் தீரலையா எனக் கேட்கிறாரா நடிகர் திலகம்
http://youtu.be/TsypI_e1DQs
-
70களின் துவக்கத்தில் இப்படம் வெலிங்கடனில் திரையிடப் பட்டபோது அரங்கமே இப்பாடலில் அதிர்ந்தது உண்மை ... விண்ணை முட்டும் ஆரவாரம் ...அன்று ரசிகர்களின் அளப்பரை பசுமையாக இன்றும் நினைவில் உள்ளது.. இன்று திரையிட்டால் அ்தையும் மிஞ்சும் என்பது திண்ணம்...
என்றைக்கும் சோகப் பாடல்களுக்கு ரசிகர்கள் ஆர்ப்பரிக்கும் ஒரே நடிகர் உலகிலேயே நடிகர் திலகம் மட்டும் தான். அதற்கு மற்றொரு சான்று உன்னைச் சொல்லி குற்றமில்லை பாடல்.
http://youtu.be/g0YnV3Cg1xA
-
சந்தேக மேகம் சூழ்ந்திடும் போதிலே
சந்திரன் முகத்தையே அல்லி காண முடியுமா
படத்தில் சந்திரன் என்பது கதாநாயகன் பெயர்.. நாயகி நாயகனுக்காக காத்திருந்து வரவில்லை என்றதும் செல்லமாக கோபிக்கும் சூழ்நிலையைப் பாடலில் வர்ணிக்கும் கவியரசர் அல்லியை நாயகியுடன் ஒப்பிட்டு பாடலில் கருத்துக்களை வடித்திருப்பதை கவனியுங்கள்..
திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன் இசையில் என்றென்றும் இனிமையான பாடல் சந்திரனைக் காணாமல் அல்லி முகம் மலருமா
http://youtu.be/_0GPcRwig3k
-
சுசீலா என்றவுடன் உடனே நினைவுக்கு வரக்கூடிய பாடல்களில் இது முக்கியமானதாகும்.
அங்கும் இங்கும் அலை போலே - தினம்
ஆடிடும் மானிடர் வாழ்விலே
எங்கே நடக்கும் எது நடக்கும் - அது
எப்படி முடியும் யாரறிவார் ...
என்ன யதார்த்தமான வரிகள்... காலத்தை கடந்து நிற்கும் பாடல் வரிகளுக்கு கவியரசரை விட்டால் வேறு யார் ..
ஒரு சில கவிஞர்களைப் போல் தனி மனித துதியிலேயே காலத்தை ஓட்டிய கவிஞரல்ல கண்ணதாசன்... ஒவ்வொரு பாடல் வரியும் சமூகத்தில் நிலவும் குடும்ப பிரச்சினைகளை அலசுவதோடு அதன் காரணங்கள், தீர்வுகள் இவற்றையும் விவாதிக்கும்...
இரவுக்கு ஆயிரம் கண்கள் பாடல் ...
http://youtu.be/7-MeOefFKHs
-
அன்பு ஜோ சார்,
மிக்க நன்றி! தாங்கள் பதித்துள்ள 'மனோகரா' முழு தெலுங்கு மூவிக்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.
-
டியர் ராகவேந்திரன் சார்,
http://t1.gstatic.com/images?q=tbn:A...c0uQuNio3xVcDw
சந்திரனைக் காணாமல் அல்லி முகம் மலருமா!
ரசிக வேந்தரைக் காணாமல் மய்யம் மலருமா!
அற்புதமான குலமகள் ராதையின் பாடல்களின் வீடியோக்களுக்கும், தகவல்களுக்கும் நன்றி!