A responsibility well done! And wishing for more such talk shows on Sivaji . Congrats to every hubber participated.
:notworthy:
Printable View
அடுத்த முறை நீயா நானாவில் சிவாஜி பற்றிய நிகழ்ச்சி நடைபெற்றால் பெண்களை ஆண்களுக்குச் சமமான எண்ணிக்கையில் அமரச் செய்யவும். சுவையான விஷயங்கள் வெளிவருகிறது அவர்களிடமிருந்து. சிவாஜி என்ற ஆளுமையின் அருமை பெருமைகளை பெரும்பான்மையாக ஆண்கள் மட்டுமே பேசிவந்ததை பார்த்து/வாசித்து வரும் எனக்கெல்லாம் இது புதிய அனுபவம்.
http://i1369.photobucket.com/albums/...ps72ee05eb.jpg
கலையுலக மாமன்னன் நடிகர்திலகத்தின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை சென்ட்ரல் திரையரங்கில் நடிப்பு சக்கரவர்த்தி சிவாஜி & சிவாஜி நடித்த வெள்ளைரோஜா வெற்றி விஜயம்.
இருக்கும் வரை உத்தமன் சிவாஜி புகழ் காப்போம்.
http://i1369.photobucket.com/albums/...psbb90c320.jpg
கலையுலக மாமன்னன் நடிகர்திலகத்தின் பிறந்த நாளை முன்னிட்டு 26.09.14 வெள்ளி
மதுரை சென்ட்ரல் திரையரங்கில் நடிப்பு சக்கரவர்த்தி சிவாஜி & சிவாஜி நடித்த
வெள்ளைரோஜா வெற்றி விஜயம்.
இருக்கும் வரை உத்தமன் சிவாஜி புகழ் காப்போம்.
RARE COLLECTION OF NT PHOTOS
http://www.thalaivansivaji.com/
நீயா நானா - என் பார்வையில்
சிவாஜி என்கிற அணு சக்தியை ஒன்றரை மணி துளி என்கிற மாத்திரையில் அடக்க முடியமா ?
ஆயிரம் பகுதி ஒளிபரப்பினாலும் முடியாது ...
இந்த நிகழ்ச்சியின் நோக்கம் நடிகர் திலகத்தில் புகழ் , திறமை, சாதனை - இதை வெளிச்சம் போட்டு காட்டுவதற்கு அல்ல. அது உள்ளங்கனி நெல்லிக்கனி போலே எல்லோருக்கும் தெரிந்தது தான்... ஆனால் இந்த நிகழ்ச்சியின் சாரம்சம் என்ன வென்றால் :
இந்திய சினிமாவின் பொற்காலம் என சொல்லப்படும் 1969 - க்கும் முந்திய கால கட்டத்தில் நடிப்புக்கு ஒரு அடிப்படை-யை , தளத்தை உருவாக்கி கொடுத்தது .
பின்னால் வந்த எல்லா நடிகர்களுக்கும் ஒரு reference -ஆக இருந்தது , எந்த விட நடிப்பாக இருந்தாலும் இவர் நடிப்பை மூலமாக அடிப்படையாக கொண்டு மற்ற மடிகர்கள் தன் திறமையை அதன் மேல் பரிச்சியம் செய்வது
இவர் நடித்து காட்டிய பிறகு தான் இந்த பாத்திரம் திரையில் இப்படிதான் நடிக்க வேண்டும் என்று ஒரு இலக்கணம் வகுத்து அதை மற்றவர்கள் பின் தொடர ஒரு வாய்ப்பு அமைந்தது..
நாடக அனுபவம், அந்த நடிப்பு, நவீன சினிமா நடிப்பு, மேற்க்கத்திய நடிப்பு என ஒரு கலவையை இங்கு அறிமுகம் செய்தது
ஒவ்வொரு பாத்திரங்களும் ஒரு முன் மாதிரியாக இருந்து சமூக மாற்றத்தை ஏற்படுத்தியது.
ஒரு பேராசிரியயர், டாக்டர், வக்கீல், அண்ணன், தம்பி, அப்பா என எல்லோரும் நிஜ வாழ்வில் இப்படி தான் இவர்கள் இருப்பர்களோ என எண்ணி அது போலே தங்களை மாற்றி கொண்டனர், இது ஒரு சமூக மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது ..
சிவாஜியை இன்றைய இளைய சமுதாயத்துக்கு கொண்டு செல்வது குறித்து பதிவு செய்தது ..
redicover சிவாஜி....
இன்றைய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியை வைத்து அனைத்து பரிமாணங்களை தொகுத்து ஆவணப் படுத்துவது , அதற்கான முயற்சியை இந்த தமிழ் சமூகம் செய்ய வேண்டும் என்பதை எடுத்து சொன்னது
சிவாஜிக்கும் அவரது ரசிகர்களுக்கும் நடிப்பு என்பதைத் தாண்டி அவர்கள் வாழ்க்கையில் சிவாஜி ஏற்படுத்திய பந்தம் பற்றி சொன்னது
என பல விஷயங்களை இந்த நிகழ்ச்சி கொண்டு வந்தது ....
அவன்தான் மனிதன் இறுதி காட்சி -யை அந்த பெண்மணி விவரிக்கும் போது தன்னாலே கண்ணீர் வந்தது ..
திரிசூலம் முதல் நாள் டிக்கெட் கிடைக்காமல் கதவை உடைத்தமைக்கு அடி வாங்கி பின் இலவசமாக படம் பார்த்து மகிழ்ந்த கிராமத்து நண்பர் சொன்னது , இப்படி வெறி கொண்ட ரசிகர்கள் மத்தியில் நாமெல்லாம் ஒன்றுமே இல்லை என்கிற எண்ணம் உருவானது ...
மீண்டும் மீண்டும் நினைவில் வந்தது ....
நடிகர் திலகத்தை எப்படி ஆவண படுத்தி அடுத்த தலை முறைக்கு கொண்டு செல்ல போகிறோம்... என்பதை ..
இந்த பிறந்த நாளில் அறிவிப்பு வருமா என ஏங்கவைத்துள்ளது..
கடைசியில்...
நிகழ்ச்சி முடிந்த பின்னர் கணினியில் சொர்க்கம் - பொன் மகள் வந்தாள் மற்றும் சுமதி என் சுந்தரி பொட்டுவைத்த முகமோ ..பாடல்களை பார்த்து விட்டு தான் தூங்கினேன்.
http://i1146.photobucket.com/albums/...psd228e381.jpg
அனைவருக்கும் உளம் கனிந்த நவராத்திரி நல்வாழ்த்துக்கள். இந்நாளில் துர்கையம்மன் அருளால் தங்கள் துன்பமெல்லாம் நீங்கி வளமோடு வாழ உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்
Vijay Television
NadigarThilagam!! Die hard fans of Sivaji Ganesan in #NeeyaNaana!! Tune in on Sunday @ 9 pm http://ow.ly/BFHoo — cùng với BM Joy, Selvaraj Prema và Romel Islam
Những bình luận hàng đầu
Sampath Kumar, Manalmedu Ramesh, Sheik Moh và 2.901 người khác thích điều này.
47 lượt chia sẻ
Rockfort Maddy awwwwwwwh sivaji.. i wanna see but neeya naana is worst.. bloody gopi hell off..
7 · 19 Tháng 9 lúc 1:16
Roman Riengs I like vijay
2 · 18 Tháng 9 lúc 22:23
Gokul Sundar ungala than ooru eppolam nambardhu illanu... eppadi show panna arambichitingala #vijaytvpublicityfreak
1 · 19 Tháng 9 lúc 10:15
Santhosa Kani Enna koduma sir
13 giờ trước
Sundar Rajini sivaji the boss
21 Tháng 9 lúc 4:34
Vasudeva Rao Ramamurthy We have to watch this programme
21 Tháng 9 lúc 2:50
Ranganathan Karate I wont miss it
21 Tháng 9 lúc 0:44
Arul Mozhi Varman nadika pirantha padaipu sivaji avara pathi pesurathu santhosam..
20 Tháng 9 lúc 22:58
Harini Shanthi neenga nalavara kettavara
20 Tháng 9 lúc 19:12
Karthikeyan Karthi சிவாஜி ஜயா நடிப்புக்கு நிகர் சிவாஜி ஜயா நடிப்புதான்
20 Tháng 9 lúc 7:48
Kosi Kmk Pappopm
20 Tháng 9 lúc 7:10
Ganesh Bala Subaramaniyan big legand topic ..any way i don't miss
20 Tháng 9 lúc 7:04
Radhi Sri pedikala
20 Tháng 9 lúc 4:17
Thomas Xavier Epdy ethathu un range ku program pannupa gopinath
20 Tháng 9 lúc 3:42
Jeyavelmurugan Annamalai No is Equal to Nadigar Thilagam Sivaji Ganesan. By his Profession he is placed in GOD's Position.
20 Tháng 9 lúc 2:01
Naga Naga Im always like Mr. Gopinath Speech. I never missed the Neeya Naana Program. I want to see and Talk to him one time.
19 Tháng 9 lúc 23:54
Sowndarya Chennai going to watch
19 Tháng 9 lúc 22:59
Prithiv Rock Great Actor of 20th Century!!
19 Tháng 9 lúc 22:48
Raj Raja welcome sivaji to a vijay tvshow thanks vijay tv ilike it vijay tv
19 Tháng 9 lúc 22:42
Sam G. Simmanandam Hello MR. Gopi Veetala Vela Inruntha Paruppu
19 Tháng 9 lúc 21:46
Vignesh Vadivel I am waiting Sunday
19 Tháng 9 lúc 19:56
Mohanarangan Muthu Welcome Siva....to a Mass TV show Thanks to Vijay TV , For selection opt speaker......
19 Tháng 9 lúc 19:22
Sathish Alagappan I waiting for Trichy Shiva speech....
19 Tháng 9 lúc 11:22
Sheela Jayakumar good change u can also have such kind of debate
19 Tháng 9 lúc 8:18
Yaso Jeyaratnam Super mr. Gobi nath
19 Tháng 9 lúc 8:12
TamilanWap Net visit http://tamilheartz.ucoz.net
19 Tháng 9 lúc 7:58
Kalai Vani i like shivaji
19 Tháng 9 lúc 7:22
Arjun Daliar Saravanan Murali
19 Tháng 9 lúc 6:38
Elumalai Gounder Meendom brappara ivar
19 Tháng 9 lúc 6:21
Noel Benjamin Meendum Pirappaaraa Ivar
19 Tháng 9 lúc 6:45
K. Lankesh Dilan woow super i am waiting
19 Tháng 9 lúc 6:20
Raji Lakshmi i like vijay tv always
19 Tháng 9 lúc 4:37
Kavitha Babu Super title Gopi Anna.
19 Tháng 9 lúc 4:35
Nowshidha Hameed Hats of vijay tv
19 Tháng 9 lúc 4:12
Kalai Nagaraj Waiting...
19 Tháng 9 lúc 1:03
Sruthi Sruthi nice subject
18 Tháng 9 lúc 23:57
Mylai Bharath hats off vijay tv
18 Tháng 9 lúc 22:52
Mylai Bharath sivaji sivaji than
18 Tháng 9 lúc 22:52
Thanaraj Fernando Good subject to. Chat,,, waiting,,,,,
18 Tháng 9 lúc 22:30
Kamali Raju waiting fa dis sunday
1 · 18 Tháng 9 lúc 22:22
Ajith Kumar I'm better actor than Shivaji Ganesan sir!!!!
19 Tháng 9 lúc 2:02
Thirunavu Karasu nic titel
19 Tháng 9 lúc 0:42
Anjaan Mari No one replace him
19 Tháng 9 lúc 13:01
Pammalar rocks...
NT calendar 2015 ... simply great ....
We are not prepared to turn the first page... stunning cover page of Thiruvilaiyadal ...
IT'S SOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO .... DIVINE ................
YOU WOULD START WORSHIPPING IT....
SUPER PAMMALAR SIR
CONGRATS ...
YOU HAVE INCREASED OUR EXPECTATIONS FOR THE ................!!!!!!!!!!!!!!!!!!!!
Belated Birthday Wishes Pammalar Sir
Also enjoyed Neeya Naana Show Nadigar thilagam Special
நீயா நானா - என் பார்வையில்
by SSSQuote:
Quote:
சிவாஜி என்கிற அணு சக்தியை ஒன்றரை மணி துளி என்கிற மாத்திரையில் அடக்க முடியமா ?
ஆயிரம் பகுதி ஒளிபரப்பினாலும் முடியாது ...
சிவாஜியை இன்றைய இளைய சமுதாயத்துக்கு கொண்டு செல்வது குறித்து பதிவு செய்தது ..
redicover சிவாஜி....
இன்றைய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியை வைத்து அனைத்து பரிமாணங்களை தொகுத்து ஆவணப் படுத்துவது , அதற்கான முயற்சியை இந்த தமிழ் சமூகம் செய்ய வேண்டும் என்பதை எடுத்து சொன்னது
சிவாஜிக்கும் அவரது ரசிகர்களுக்கும் நடிப்பு என்பதைத் தாண்டி அவர்கள் வாழ்க்கையில் சிவாஜி ஏற்படுத்திய பந்தம் பற்றி சொன்னது .....
நடிகர் திலகத்தை எப்படி ஆவண படுத்தி அடுத்த தலை முறைக்கு கொண்டு செல்ல போகிறோம்... என்பதை ..
இந்த பிறந்த நாளில் அறிவிப்பு வருமா என ஏங்கவைத்துள்ளது..
Dear SSS. Your impressive posting is a reflection of the minds of millions of NT fans even as the birthday celebrations of the legend are getting geared up.
Ever since Paraasakthi was released, NT was a real star born to rule the arena of acting, became the legend by his inimitable acting traits and remains the Pole Star of World Cinema Galaxy for acting reference and guidance!
The Limelight thrown on many of his contemporaries like Marlon Brando and Charlton Heston or his predecessors like Charlie Chaplin, Ronald Coleman or Humphrey Bogart or any of the 'acting thirsty' present generation stars ....have been for a certain period only and there upon their memories got faded out but glimpses come and go only when some news about their era are published or telecast! Only very few stars continue to have the power of limelight even after their death, becoming legends forever and guiding the generations to come! NT remains the Pole Star and the guiding beacon forever, irrespective of the generation barriers....as established by such programmes like NEEEYA NAANAA a 'small step but a giant leap' kind of tribute to our legend at a right time. It is a good beginning, a potential seed sown and again a role model like the victorious KARNAN to be envied upon and be emulated by other fan bases too
நமது உலகத்திலேயே unique &Best product சரியாக marketing செய்ய படவில்லை.
அவருடைய வெவ்வேறு பாணியிலான,.நடிப்பு மற்றவர்களால் புரிந்து கொள்ள படாமல் ,பல குற்ற சாட்டுகள் சுமத்தி கொண்டிருந்தனர். அதை இந்த மாதிரி வெவ்வேறு school of Acting உலகம் தழுவிய அளவில் உள்ளது என்று சொல்லி, அவரை ,அவரது நடிப்பின் அளவற்ற எல்லைகளை கோட்பாடுகளின் படி விஞ்ஞான விளக்கம் கொடுத்தே ஆக வேண்டிய அவசியம்.Einstein கோட்பாட்டை அனைவரும் புரிந்து கொள்ள முடியாதே?
மற்ற நடிகர்களை ,sampling முறையில் ஒரே படத்தில் திறமையை அளந்து விடலாம்.ஆனால் நடிகர்திலகத்தை தொடருபவர்கள் மட்டுமே அவரை புரிந்து கொள்ள முடியும் .
அவ்வாறு தொடர நினைப்பவர்களுக்கு நமது shoddy way of movie making ஒரு தடை.அவருக்காக மட்டுமே படம் பார்க்கும் பொறுமை நமக்கு மட்டுமே இருக்கும்.
அவருடைய ஆற்றலுக்கு ஈடு கொடுக்கும் இயக்குனர்களோ,கதாசிரியர்களோ நம்மிடையே இல்லை.(தில்லானா தவிர) அவருடைய மிக சிறந்தவை பெங்காலி,கேரளா ,hollywood இலிருந்து வந்தவையே.
எந்தக் கோணத்தில் அணுகினாலும் சிறந்த பரிமாணத்தைக் கொடுக்கக் கூடிய படைப்பு...
எந்தக் கோணத்தில் பார்த்தாலும் சிறந்த தோற்றத்தை அளிக்கக் கூடிய அமைப்பு...
எந்தப் பாத்திரமானாலும் அதனுடைய தன்மையில் அணுகக் கூடிய நடிப்பு...
இலக்கணம் என்பதற்கே இலக்கணம் வகுத்தவர்..
கோபால் சொல்வது போல் நடிப்பிற்கென்று பல பள்ளிகள் பல நாடுகளில் இருந்தாலும் அவற்றில் ஏதாவத Orientation இருக்கும்... ஏதாவது ஒரு நாடு, மொழி, கலாச்சாரம் இவற்றின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட வகைக்கு மட்டும் பொருந்தும் வகையில் இருக்கும்..
ஒவ்வொரு School of Actingகும் unconditional, uniform என்று பரவலாக பொதுவாக எடுத்துக் கொள்ள முடியாது.
ஆனால்
Sivaji Ganesan School of Acting மட்டுமே பொதுவானது. அவருடைய நடிப்பு பாத்திரம் சார்ந்தது. ஏற்ற பாத்திரத்தின் கலாச்சாரம், சமூக நெறி, வாழ்க்கை முறை, பொருளாதார அடிப்படை என பல்வேறு செறிவுகள் நிறைந்த காரணத்தால் அது ஒரு இலக்கணமாகிறது. ஒவ்வொரு நடிகனும் ஏன் நடிகர் திலகத்தைப் பின்பற்ற வேண்டும் என்பதற்கான விடையும் அந்த நடிப்பிலேயே இருக்கிறது.
வேற்று மொழிக் கதையானாலும் வேற்று மொழிப் பாத்திரமானாலும் அதனை localise ஆக உருமாற்றி அந்தப் பாத்திரம் சார்ந்த பல்வேறு கூறுகளை அதனுள் புகுத்தி அதன் மூலம் அந்தப் பாத்திரத்தை ஆடியன்ஸுடன் ஒன்றிப் போக வைக்கும் சாத்தியத்தை அளிப்பது நடிகர் திலகத்தால் மட்டுமே முடிந்த ஒன்றாகும். இந்த இலக்கணத்தைப் பின்பற்றினாலே ஒரு நடிகன் தன்னுடைய நடிப்பில் வெற்றி பெற்று விடலாம்.
நடிகர் திலகம் ஒரு உளவியல் அதிசயம்
சிவாஜி கணேசன் ஒரு நடிப்புப் பள்ளி ... அதுவும் அவருடைய நடிப்பிலக்கணம் யூனிவெர்சல் எனப்படும் உலக அடிப்படையிலானது என்பதற்கு ஓர் உதாரணம் இதோ இந்த கட்டபொம்மன் காட்சி..
ஒரு சில நிபந்தனைகள் அல்லது அணுகுமுறைகளுடன் இக்காட்சியைப் பார்க்கவும்.
குறிப்பு- காட்சி 0.50 நிமிடத்திலிருந்து துவங்குகிறது.
1. இதில் நடித்திருப்பது சிவாஜி கணேசன் என்பதை முதலில் மறந்து விடவும். இது நிபந்தனை என்றாலும் இந்த நிபந்தனை தங்களுடைய முயற்சி இல்லாமலேயே தானாகவே நிறைவேறிவிடும்.
2. எந்த உணர்ச்சியையும் வலுக்கட்டாயமாக கொண்டு வரவேண்டாம். அதற்காக முயற்சிக்க வேண்டாம். ஒரு விமர்சகராக இருக்க வேண்டும் என்கிற பிரயத்தனத்தை நீங்கள் எடுத்தீர்களானால் தோற்றுப் போவீர்கள்.
இப்போது இக்காட்சியைப் பாருங்கள்.
http://www.youtube.com/watch?v=VXnqq1kq5KY
கட்டபொம்மன் வரும்போது அந்த நடையை கவனியுங்கள். ஒரு ஆணவம் இதில் வெளிப்படும். இதில் சராசரி மனித இயல்பு வெளிப்படுகிறது. இது உலகத்தில் அத்தனை மொழிகளுக்கும் பொருந்தும் அத்தனை கலைகளும் இதில் பிரதிபலிக்கும், சினிமா உள்பட.
அவருக்கு இருக்கையில்லை. வெள்ளைக்காரன் நிற்க வைத்துப் பேசுகிறான்.
இப்போது அவர் முகததை கவனியுங்கள். அங்கும் இங்கும் பார்க்கிறார். அவர் தேடுவது ஆசனத்தை மட்டுமல்ல. மனிதாபிமானத்தையும் தான். அதுவும் அந்தக் கண்களில் யாராவது பார்க்கிறார்களா என்கிற சுயமரியாதை கலந்த எச்சரிக்கை உணர்வும் வெளிப்படும்.
பரங்கியன் எழுந்திருக்கிறான். இது தான் சமயம் என சமயோசிதமாக அந்த நாற்காலியை இழுத்துப் போட்டு அவன் சொல்லும் வரையில் காத்திருக்காமல் அமர்கிறார்.
இந்த இடத்தில் அந்த மன்னனுடைய சுய கௌரவம் நிலை நிறுத்தப்படுகிறது. அவனுடைய ஆளுமை எடுத்தியம்பப் படுகிறது.
உடனே அந்த துரை தன் பணியாளிடம் ஆசனத்தை கொண்டு வரச் சொல்லி அமர்வதோடு, மறக்காமல் நன்றியும் சொல்கிறான். இந்த இடத்தில் அந்தப் பாத்திரத்தின் தன்மை வெளிக்காட்டப் படுகிறது. தன் பணியாளுக்கு நன்றி சொல்வதன் மூலம் அவனை மனிதாபிமானம் உள்ளவனாகக் காட்டுவதோடு கட்டபொம்மனை அவமானப் படுத்த வேண்டும் என்கிற அவன் நோக்கமும் இயக்குநரால் சொல்லப் படுகிறது.
இப்போது தான் இந்த உலகப் புகழ் பெற்ற உரையாடல் தொடங்குகிறது.
இந்த உரையாடல் ஏன் எதுகை மோனையுடன் இலக்கண சுத்தியாக சொல்லப் பட வேண்டும்... சாதாரணமாக சொல்லி விட வேண்டியது தானே என்ற கேள்வி உடனே எழும்.
இதற்கு விடை தான் இந்தப் படமே... கட்டபொம்மன் காலத்தில் நிலவிய மொழியில் colloquialism இருந்ததாகத் தெரியவில்லை. இருந்தாலும் ராஜ பரம்பரையில் வந்தவர்கள் மொழி சுத்தமாக பேசுவார்கள். கொச்சை மொழி வழக்கு அவர்களிடத்தில் இருக்காது என்பது தான் தமிழ் வரலாறு என பல நூல்களில் படித்திருக்கிறோம். அந்த அடிப்படையில் பார்த்தால் இது கலாச்சாரத்தின் பிரதிபலிப்பு எனக் கொள்ளலாம்.
வெறுமனே வந்து subtle ஆக விவாதம் இல்லாமல் சொல்லி விட்டுப் போய் விடலாம். ஆனால் அந்தப் பாத்திரம் மனதில் நிற்காது. அதனுடைய குணங்கள் வலியுறுத்தப் படாது.
கைகளை அந்த மொழிக்கேற்றவாறு நீட்டியும் மடக்கியும் தன் கருத்தை ஆழமாக வெளிப்படுத்தும் அந்த நேரத்தில் நீங்கள் உங்களை மறந்து விடுவீர்கள். உங்கள் சுற்றத்தை மறந்து விடுவீர்கள். உங்களைச் சுற்றி என்ன உள்ளது என்பது மறந்து விடும். மொத்தத்தில் தாங்கள் பயணிக்கும் உலகமே வேறாக இருக்கும்.
இந்த உளவியல் தாக்கமே நடிகர் திலகத்தின் வெற்றி...
இந்த தாக்கத்தின் வெளிப்பாடு தான் இந்தியாவிலேயே முதன் முதலாக வெளிநாட்டில் சிறந்த நடிகருக்கான விருதாக அமைந்தது.
ஆசிய ஆப்பிரிக்க நாடுகளுக்கான பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் திலகம் பெறக் காரணமாக அமைந்தது படம் மட்டுமல்ல.. அதனுள் நடிகர் திலகம் ஏற்படுத்திய ஒரு புதிய நெறி, பார்ப்பவர்களை தன்னிலை மறக்கச் செய்யும் உளவியல் தாக்கம், விமர்சகர் என்ற பார்வையை முற்றிலும் மறக்கச் செய்யும் Hypnotism.
இந்த ஹிப்னாடிஸத்தில் மூழ்காதவர்கள் யாருளர் இவ்வுலகில்..
This is why Sivaji Ganesan became a School of Acting in Himself
Ondra Iranda Eduthu Solla. In Each and every film he had changed his body language, modulation,the appearance. That itself enough to showcase
why our NT school of acing is relevent forever. If we showcase the same properly in the world forum they will definitely amazed and astonished by
our NT's performance the best example is Deiva Magan.
Regards
இராகவேந்தர் சார்,
வீரபாண்டிய கட்டபொம்மன் திரைக்காவியம் என்றாலே உடன்
மனத்திரையில் ஓடும் காட்சியினை விழித்திரைக்கு அளித்திட்டமைக்கு பல
கோடி நன்றிகள்.
கோபு.
மதர் நியூஸ் ( MOTHER NEWS ) என்ற மாத இதழில் உலக அளவில், மறைந்த சாதனைத் தலைவர்களைப் பற்றி, "வாழ்ந்து காட்டியவர்கள்" ( Achievers ) என்ற தலைப்பில் ஒரு தொடர் (மூன்று பக்கங்களுக்கு மிகாமல்) எழுதிவருகிறேன். செப்டம்பர் 2014 இதழில், நடிகர்திலகம் சிவாஜி அவர்களைப் பற்றி எழுதிய கட்டுரையை நண்பர்களின் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன். ( E & O .E )
http://www.mothernews.in/
http://i1234.photobucket.com/albums/...psa83e721b.jpg
http://i1234.photobucket.com/albums/...ps8857118a.jpg
http://i1234.photobucket.com/albums/...pse5297598.jpg
http://i1234.photobucket.com/albums/...psf6919808.jpg
மதுரை சென்ட்ரல் திரை அரங்கில் நமது தலைவர் சிவாஜி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 26.09.2014 வெள்ளி முதல் திரையிடும் வெள்ளைரோஜா படத்திற்கு ரசிகர்கள் வைத்துள்ள பேனர்கள்.
http://i1369.photobucket.com/albums/...ps33fdde26.jpg
இருக்கும் வரை உத்தமன் சிவாஜி புகழ் காப்போம்.
நடிகர் திலகம் அவர்கள் தனது நடிப்பில் ஒரு பகுதியாக வசன உச்சரிப்பில் அதன் காட்சியமைப்பில் இப்படி ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தினார் என்றால், அதே போல ஒவ்வொரு பாடகருக்கும் கூட இவர் வாயசைக்கும் விதம் இருக்கிறதே அது வசனத்தை விட ஒரு படி மேலாக இருக்கும்.
உதாரணமாக . நடிகர் திலகம் அவர்களின் ஆண்மை மிகுந்த குரல் கிட்டத்தட்ட TMS அவர்கள் குரலுடன் ஒப்பிடலாம்.
ஆகவே TMS என்ற தெய்வ பாடகரை விட்டுவிடுவோம்.
ஆனால் திரு SPB அவர்களின் பாடல்களை எடுத்துகொண்டோமே என்றால் ...அவர் நடிகர் திலகம் அவர்களுக்கு பாடிய முதல் பாடல் சிகரம் தொட்ட பாடல் போட்டு வைத்த முகமோ....!
அந்த பாடல் முதல் பல பாடல்கள் பாடியிருக்கிறார்...ஜல்லிக்கட்டு வரை ! வருடங்கள் ஆக ஆக நடிகர் திலகம் அவர்கள் திரு SPB அவர்கள் பாடலுக்கு வாயசைக்கும் விதம் SPB அவர்களின் குரல் மாற்றத்திற்கு ஏற்ப அமைந்திருக்கும்...!
கவனித்து பாருங்கள் ...அந்த அதிசய நடிப்பு புரியும் !
Sumathi En Sundari
http://www.youtube.com/watch?v=NaeKkH0hPus
RAJA
http://www.youtube.com/watch?v=LjD4VL33cnY
Gouravam
http://www.youtube.com/watch?v=Gra_9_lOTRc
Paatum Bharathamum
http://www.youtube.com/watch?v=PbTe22p2f6M
Thirisoolam
http://www.youtube.com/watch?v=UvKXtaN7Fb4
Naan Vaazha Vaippen
http://www.youtube.com/watch?v=NcDVqx9eH50
Pattaakaththi Bhairavan
http://www.youtube.com/watch?v=w-l5vYDIh8U
many more in between
VAAZHKAI
http://www.youtube.com/watch?v=1V6l1mOP35o
Anbulla Appa
http://www.youtube.com/watch?v=yXnbMxFpT7A
Jallikattu
http://www.youtube.com/watch?v=I5temOuRbNY
மதுரை சென்ட்ரல் திரை அரங்கில் நமது தலைவர் சிவாஜி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 26.09.2014 வெள்ளி முதல் திரையிடும் வெள்ளைரோஜா படத்திற்கு ரசிகர்கள் வைத்துள்ள பேனர்கள்.
http://i1369.photobucket.com/albums/...ps0059bfad.jpg
இருக்கும் வரை உத்தமன் சிவாஜி புகழ் காப்போம்.
மதுரை சென்ட்ரல் திரை அரங்கில் நமது தலைவர் சிவாஜி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 26.09.2014 வெள்ளி முதல் திரையிடும் வெள்ளைரோஜா படத்திற்கு ரசிகர்கள் வைத்துள்ள பேனர்கள்.
http://i1369.photobucket.com/albums/...ps775a5c39.jpg
இருக்கும் வரை உத்தமன் சிவாஜி புகழ் காப்போம்.
மதுரை சென்ட்ரல் திரை அரங்கில் நமது தலைவர் சிவாஜி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 26.09.2014 வெள்ளி முதல் திரையிடும் வெள்ளைரோஜா படத்திற்கு ரசிகர்கள் வைத்துள்ள பேனர்கள்.
http://i1369.photobucket.com/albums/...ps62cc00ce.jpg
இருக்கும் வரை உத்தமன் சிவாஜி புகழ் காப்போம்.
மதுரை சென்ட்ரல் திரை அரங்கில் நமது தலைவர் சிவாஜி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 26.09.2014 வெள்ளி முதல் திரையிடும் வெள்ளைரோஜா படத்திற்கு ரசிகர்கள் வைத்துள்ள பேனர்கள்.
http://i1369.photobucket.com/albums/...ps8a3769cf.jpg
இருக்கும் வரை உத்தமன் சிவாஜி புகழ் காப்போம்.
மதுரை சென்ட்ரல் திரை அரங்கில் நமது தலைவர் சிவாஜி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 26.09.2014 வெள்ளி முதல் திரையிடும் வெள்ளைரோஜா படத்திற்கு ரசிகர்கள் வைத்துள்ள பேனர்கள்.
http://i1369.photobucket.com/albums/...pse4d89dad.jpg
இருக்கும் வரை உத்தமன் சிவாஜி புகழ் காப்போம்.
It has become a routine to release Sivaji sir’s movie weekly in Coimbatore be it in Royal theatre or in Delite Theatre for the last few months
From this Friday In Delite Theatre Enga Mamma Daily 2 shows
This shows the steady increase of Nadigar Thilagam movies that are being released is gradually increasing .
மதுரை சென்ட்ரல் திரை அரங்கில் நமது தலைவர் சிவாஜி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 26.09.2014 வெள்ளி முதல் திரையிடும் வெள்ளைரோஜா படத்திற்கு ரசிகர்கள் வைத்துள்ள பேனர்.
http://i501.photobucket.com/albums/e...ps776503e6.jpg
NADIGAR THILAGAM BIRTHDAY SPECIAL -
TRICHY GAIETY - DAILY 4 SHOWS -
OCTOBER 1st ONWARDS -
1977 BLOCKBUSTER OF NADIGAR THILAGAM's SIVAJI PRODUCTIONS PRESENTS - ANNAN ORU KOVIL
http://i501.photobucket.com/albums/e...ps298df9f0.jpg
மலைக்கோட்டை மாநகரம் என்றுமே தலைவர் சிவாஜியின் கோட்டை என்று கூறும் அளவில் நகர் முழுவதும் சிவாஜி பிறந்தநாள் விழா சுவர் விளம்பரம் களை கட்டுகிறது. இப்போதே லித்தோஸில் பிறந்தநாள் போஸ்டர் பல டிசைனில் ஓடிக்கொண்டிருக்கிறது. தலைவரின் அவதாரங்களை பிரதிபலிக்கும் விதமாக திருச்சி மாவட்ட சிவாஜி பாசறையினர் வெளியிட்ட நான்கு பிட் பிறந்தநாள் போஸ்டர் உங்கள் பார்வைக்கு
ஆண்டவனே அனைத்து சிவாஜி ரசிகர்களுக்கு ஆரோக்யமான ஆயுளை மட்டும் கொடு
நாங்கள் இறுதி மூச்சு வரை எங்கள் சிவாஜி புகழ் பாடிக்கொண்டிருக்க
https://mail.google.com/mail/u/0/?ui...&sz=w1337-h450
dear friends-hubbers.
As my computer was totally out I could not do any postings. All the articles related to NT BIRTHDAY BY ALL THE MEMBERS MORE PARTICTULARLY RAVI KIRAN GOAL AND RAGHAVENDRAN WERE SUPERB AND VIJAY TV PROGRAMME WAS BETTER THAN EXPECTED. MORE PROGRAMMES ARE BEING EXPECTED. GOOD JOB DONE BY GOPINATH-VIJAY TV.
2015 ஆம் வருட காலண்டர் டிசைன்
URL=http://s1055.photobucket.com/user/senthilvel45/media/Mobile%20Uploads/IMG_16213665942485_zpseb17kb8e.jpeg.html][IMG]http://i1055.photobucket.com/albums/s509/senthilvel45/Mobile%20Uploads/IMG_16213665942485_zpseb17kb8e.jpeg
Review by Mr Murali - a Recap
பேசும் தெய்வம் Part I
தயாரிப்பு : ரவி புரொடக்ஷன்ஸ்
கதை வசனம் இயக்கம்: கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்.
வெளியான நாள்: 14.04.1967
சென்னையில் பெரிய செல்வந்தர் ரங்காராவ். மனைவி சுந்தரி பாய். ஒரு மகள் திருமணமாகி மதுரையில் வசிக்கிறாள். கணவர் கலெக்டர். ஒரே மகன் சந்துரு சட்டக் கல்லூரியில் படிக்கிறான். நாகர்கோவிலை சொந்த ஊராக கொண்ட அந்த பெற்றோர்கள் மகனுக்கு வேண்டியே சென்னையில் தங்கியிருக்கிறார்கள். தந்தையைப் பொறுத்த வரை திருப்பதி ஏழுமலையான் தான் எல்லாம். அவனிடம் உரிமையோடு எனக்கு இது இது வேண்டும் என்று லிஸ்ட் போட்டு கோரிக்கை வைப்பவர். தாயோ மகனுக்கு கல்யாணம் செய்து பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாள். கல்யாணமே வேண்டாம் என்று சொல்லும் சந்துரு ஒரு நாள் ஒரு பெண்ணை பார்க்கிறான். அவள் அழகில் கவரப்பட்டு அவளை திருமணம் செய்து கொள்ள நினைக்கிறான். அவளும் அவனை விரும்பவுதை உணர்கிறான். அவள் பெயர் லட்சுமி, அவள் யாருமற்ற அனாதை என்பதை தெரிந்து கொள்ளும் சந்துரு தன பெற்றோர்களை சம்மதிக்க வைக்க தன் அக்கா கணவரின் உதவியை நாடுகிறான். அவர் உதவியால் கல்யாணம் நடக்கிறது.
சில வருடங்கள் உருண்டோடுகின்றன. ஆனால் சந்துரு லட்சுமி தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. பெற்றோர்கள் மனது வருத்தப்படுவதை நினைத்து சந்துருவும் லட்சுமியும் அப்செட் ஆகிறார்கள். வீட்டு வேலைக்காரி வேலம்மாள் மளிகை சாமான்களை தெரியாமல் எடுத்து செல்வதை பார்த்து விடும் லட்சுமி அவளை ஏன் இப்படி செய்தாய் என்று கேட்க அவள் தன் குடும்ப கஷ்டத்தை கூறுகிறாள். அவளுக்கு ஏற்கனவே ஆறு குழந்தைகள். இப்போது ஏழாவது குழந்தையை வயிற்றில் சுமக்கிறாள். கணவன் சரியில்லை. குழந்தை இல்லை என்று கவலைப்படும் நீங்கள் என் குழந்தைகளில் ஒன்றை தத்தெடுத்துக் கொள்ளுங்கள் என்று அவள் சொல்ல இருப்பது வேண்டாம் பிறப்பதை எடுத்துக் கொள்ளலாம் என்று சந்துருவின் தந்தை சொல்ல அதன்படி செய்கிறார்கள். குழந்தை பிறந்ததும் அதை சீராட்டி வளர்க்கிறார்கள். ஆனால் டிப்திரியா காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தையை சரியான நேரத்தில் டாக்டரிடம் காண்பிக்காததால் (வேலைக்காரியின் பேச்சை கேட்டுக் கொண்டு) குழந்தை இறந்து விடுகிறது. அதே நேரத்தில் மயங்கி விழும் லட்சுமி கர்ப்பம் தரித்திருப்பதாக டாக்டர் கூற மீண்டும் மகிழ்ச்சி பொங்குகிறது. ஒரு ஆண் குழந்தை பிறந்து வளர்கிறது. அதற்கும் டிப்திரியா தாக்க ஆனால் இந்த தடவை தக்க சமயத்தில் சிகிச்சை கொடுக்கப்பட குழந்தை பிழைத்துக் கொள்கிறது.
ஒன்றிரண்டு வருடங்களுக்கு பிறகு இப்போது சந்துரு சென்னையில் ஒரு மூத்த வழக்கறிஜரிடம் பணியாற்றுகிறான். அவனது பெற்றோர்கள் இப்போது நாகர்கோவிலில் வசிக்கிறார்கள். குழந்தை பாபுவை அல்லும் பகலும் கவனித்துக் கொண்டு அவனைப் பற்றியே கவலைப்படுவதால் லட்சுமியின் உடல் நிலை பாதிக்கப்படுகிறது. பலவீனமான இதயமாக இருப்பதால் அதிர்ச்சி தரும் செய்திகளை அவளிடம் சொல்ல வேண்டாம் என்று டாக்டர் அறிவுறுத்துகிறார். இந்நிலையில் சந்துருவின் அக்கா மகளுக்கு திருமணம் முடிவு செய்யப்பட்டு கோட்டயம் நகரில் வைத்து நடக்கிறது. லட்சுமி உடல் நிலை காரணமாக போகாமல் இருக்க பாபுவை கூட்டிக் கொண்டு சந்துரு கல்யாணத்திற்கு போகிறான். அங்கே பழைய நண்பர்கள் கூட்டத்தை சந்திக்க அனைவரும் சீட்டு கச்சேரியில் மூழ்குகிறார்கள். குழந்தை பாபு அழ சந்துருவின் அம்மா சந்துருவிடம் விட்டு செல்கிறாள். குழந்தை வேறு சில குழந்தைகளை பார்த்து விட்டு அவர்களுடன் விளையாடப் போகிறான். ஆனால் ஆட்டத்தில் ஆழ்ந்திருக்கும் சந்துரு இதை கவனிக்கவில்லை. ஒரு பொம்மைக்கு சண்டை போடும் குழந்தை வீட்டின் முன் உள்ள ஏரிக்கரையில் நிறுத்தி வைத்துள்ள படகில் ஏறி பொம்மையை எடுக்க முயற்சிக்க கயிற்றால் கட்டாமல் நிறுத்தி வைத்துள்ள படகு நகர்ந்து ஏரியில் தானே செல்லுகிறது.
குழந்தையை காணாமல் அனைவரும் தேட ஏரிக்கரையில் குழந்தையின் ஒரு செருப்பு கிடக்கிறது. குழந்தை என்னவாயிற்று என்று தெரியாமல் சந்துரு தவிக்கும் போது லட்சுமி போன் செய்கிறாள். நிலைமையை சமாளிக்க குழந்தை தூங்குவதாக பொய் சொல்லுகிறான். அக்காள் கணவர் கலெக்டர் என்பதால் தன் செல்வாக்கை பயன்படுத்தி போலீஸ் துறையை வைத்து தேட செய்கிறார். ஆனால் தகவல் ஒன்றும் கிடைக்கவில்லை. அவரே சந்துருவிடம் சென்னைக்கு செல்லுமாறும் குழந்தையை தாத்தா பாட்டியிடம் விட்டு விட்டு வந்திருப்பதாகவும் லட்சுமியிடம் சொல்ல சொல்லுகிறார். சந்துருவும் அப்படியே செய்கிறான். ஆனால் அவனால் இயல்பாக இருக்க முடியவில்லை. ஏன் இப்படி இருக்கிறீர்கள் என்று கேட்கும் லட்சுமியிடம் குழந்தையை பிரிந்த ஏக்கம் என்று சொல்கிறான். ஆனால் அடுத்தடுத்து நடக்கும் சில சம்பவங்களினால் லட்சுமிக்கு சந்தேகம் வருகிறது.
இந்த நேரத்தில் பர்மாவிலிருந்து யுவான்சென் என்ற செல்வந்தர் தன் மனைவியுடன் இந்தியாவிற்கு வருகிறார். எல்லா வசதிகளும் இருந்தும் அவர்களுக்கு குழந்தை செல்வம் இல்லை. எனவே இந்திய குழந்தை ஒன்றை தத்தெடுக்க இந்தியாவிற்கு வந்திருப்பதாக பத்திரிக்கையாளர்களிடம் சொல்கிறார்கள். அவர்கள் பல அனாதை இல்லங்களுக்கு விஜயம் செய்கிறார்கள். ஆனால் அவர்கள் மனதுக்கு பிடித்த குழந்தை கிடைக்கவில்லை. இந்த சூழ்நிலையில் கேரள மாநிலத்திற்கு செல்லும் அவர்கள் கடற்கரையில் அழகான குழந்தையை பார்க்கிறார்கள். மீனவ குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருக்கும் பாபு அவர்களை பார்த்தும் ஒட்டிக் கொள்கிறான். ஏரியில் தானே பயணித்த படகை ஒரு மீனவன் பார்த்து அதிலிருக்கும் பாபுவை எடுத்து தன் குடும்பத்தோடு தங்க வைத்திருப்பதை தெரிந்து கொள்ளும் அவர்கள் அவனுக்கு பணம் கொடுத்து பாபுவை கூட்டி செல்கிறார்கள்.
இங்கே லட்சுமிக்கு சந்தேகம் வளர்ந்து குழந்தையை உடனே பார்க்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்க சந்துரு அவளை மதுரைக்கு கூட்டி செல்கிறான். அங்கே அக்காள் கணவர் குழந்தையை கொடைக்கானல் கான்வென்ட்- ல் சேர்த்திருப்பதாகவும் யாரும் பார்க்க முடியாது என்றும் சொல்ல லட்சுமியோ பாபுவை தூரத்திலிருந்தேனும் பார்க்க வேண்டும் என்று கெஞ்ச கான்வென்ட் சுவருக்கு வெளியே மலை சரிவில் நின்று வரிசையாக செல்லும் குழந்தைகளில் ஒன்றை காண்பித்து அதுதான் பாபு என்று சொல்ல, என் பாபுவை எனக்கு தெரியும். நீங்கள் பொய் சொல்லுகிறீர்கள் என்று கதறும் லட்சுமி மயங்கி விழ டாக்டர்கள் குழந்தை வந்தால் தான் அவள் நிலைமை சீராகும் என்று சொல்லி விடுகிறார்கள். எப்போதும் உங்கள் திருப்பதியானை பற்றி சொல்லுவீர்களே இப்போது அவன் எங்கே என்று மகனே கேள்வி கேட்க மனம் கலங்கி மன்றாடும் தந்தையின் கையில் நண்பர் கொடுத்து விட்ட திருப்பதி பிரசாதத்தை வேலைக்காரன் கொண்டு தருகிறான். பிரசாதம் சுற்றி வந்திருக்கும் பேப்பரில் தங்களுக்கு வேண்டிய குழந்தை கிடைத்து விட்டதாகவும் தாங்கள் பர்மா திரும்புவதாகவும் யுவான்சென் தம்பதிகளின் பேட்டியும் குழந்தை பாபுவுடன் நிற்கும் புகைப்படமும் வெளியாகியிருப்பதை பார்க்கிறார். அவர்கள் திருச்சியிலிருந்து சென்னைக்கு விமானத்தில் சென்று அங்கிருந்து பர்மா செல்வதையும் அறிந்து கொள்ளும் சந்துரு & லட்சுமி மதுரையிலிருந்து விமானத்தில் திருச்சி சென்று விமான நிலையத்தில் அந்த தம்பதிகளை சந்தித்து உண்மையை சொல்லி குழந்தையை வாங்கி கொள்கிறார்கள். ஆனால் யுவான்சென்னின் மனைவியோ குழந்தையை பிரிய மனமில்லாமல் தான் பர்மா வரவில்லை என்று கதறி அழ, அவளது நிலை கண்டு பொறுக்காமல் லட்சுமியே அவளிடம் குழந்தையை கொடுத்து விடுகிறாள். அவர்கள் விமானத்தில் சென்று விடுகின்றனர்.
சென்னை திரும்பும் சந்துரு லட்சுமி தம்பதியினர் குழந்தையை மறக்க முடியாமல் தவிக்க அப்போது யுவான்சென் தம்பதியினர் குழந்தை பாபுவுடன் வீட்டிற்கு வருகிறார்கள். மீண்டும் ஒரு மகிழ்ச்சியான திருப்பத்துடன் படம் நிறைவு பெறுகிறது.
(தொடரும்)
பேசும் தெய்வம் Part II
தமிழகத்தில் திராவிட இயக்கம் தன் கொள்கைகளை திரைப்படம் என்ற வலிமையான ஊடகம் மூலமாக பரப்பி வந்த காலத்தில் அதற்கு மாற்றாக அதே ஊடகத்தை பயன்படுத்த காங்கிரஸ் முயற்சிக்கவில்லை. ஆனால் கடவுள் மறுப்பு கொள்கையை மட்டும் எதிர்த்து அதற்கு மாற்றாக இறை நம்பிக்கையை ஊட்டும் கதைகளை திரைப்படம் வாயிலாக மக்களுக்கு சொன்னவர் ஏ.பி.என். என்றால் அதே பாதையில் பயணம் செய்தவர் கே.எஸ்.ஜி. அப்படி, அசைக்க முடியாத கடவுள் நம்பிக்கையும் உலகத்திலே மிகவும் உயர்ந்த செல்வமாக கருதப்படும் மழலை பாக்கியமும் சேர்ந்த ஒரு கதை கிடைத்த போது பேசும் தெய்வம் பிறந்தது. ரசிகர்களையும் மகிழ்ச்சிப் படுத்தக்கூடிய டைட்டில் என்ற வகையில் டபுள் ஓகே.
அறுபதுகளில் வந்த நடிகர் திலகத்தின் பெரும்பாலான படங்களை எடுத்துக் கொண்டால் அந்த கதாபாத்திரங்களை எல்லாம் நடிகர் திலகம் அனாயசமாக ஊதி தள்ளியிருப்பார். அந்த லிஸ்ட்-ல் பேசும் தெய்வம் சந்துருவிற்கும் இடம் உண்டு.
இந்த படத்தில் வெகு இளமையாக சிக்கென்று இருப்பார். முதல் பகுதியின் பாதி வரை ரொம்ப ஜாலியாக ரொமன்ஸ் பண்ணுவார். பத்மினியை பார்த்த பிறகு அந்த உணர்வை ஒரு தவிப்போடு நாகேஷிடம் சொல்லுவது, பத்மினியை அருகில் பார்த்தவுடன் சொல்ல நினைத்தது வார்த்தையாக வராமல் தடுமாறுவது, அத்தான் உதவியோடு கல்யாணத்தை முடிப்பது வரை அந்த மூட் நிலை கொள்ளும். திருமணத்திற்கு பிறகு குழந்தை பிறக்கவில்லையே என்று மூட் மாறும் போது ஒரு டல்னஸை பிரதிபலிப்பது, பிறக்கப் போகும் குழந்தையை தருகிறேன் என்றதும் வேலைக்காரிக்கு விழுந்து விழுந்து பணிவிடை செய்வது, குழந்தை இறந்து போனவுடன் மனம் கலங்கி பேசுவது, தனக்கே குழந்தை பிறந்தவுடன் வரும் அந்த சந்தோஷம், குழந்தையை கல்யாணத்திற்கு கூட்டிக் கொண்டு போகிறேன் என்று சொன்னவுடன் பத்மினி குழந்தையை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்று ஒவ்வொன்றாக சொல்ல சொல்ல அவரின் முக பாவம், சட்டென்று வரும் கோபம், உடனே மனைவியின் மன நிலயை புரிந்துக் கொண்டு இயல்பான பேச்சுக்கு திரும்புவது, கல்யாணத்தில் சீட்டு கச்சேரியில் மூழ்கியவர்கள் எப்படி இருப்பார்களோ அதை அப்படியே வெளிப்படுத்துவது, குழந்தையை காணோம் என்றதும் சாதாரணமாக இருக்கும் அந்த முகம், அந்த பேச்சு எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மாறுவது, ஊருக்கு வந்த பிறகு பத்மினியிடம் உண்மையையும் சொல்ல முடியாமல் பொய்யும் சொல்ல முடியாமல் தவிப்பது கொடைக்கானலில் பள்ளிகூடத்திற்கு வெளியிலிருந்து குழந்தையை பார்த்து விட்டு பத்மினி அது என் பாபு இல்லை என்று சொன்னவுடன் சும்மா சொல்லாதே என்று சத்தம் போட்டு விட்டு பத்மினியின் நேரடி பார்வையை தாங்க முடியாமல் மெல்லிய குரலில் நல்லாப் பாரு என்று திரும்பிக் கொள்வது - இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
பத்மினியை பொருத்த வரை முதலில் மாணவி என்பது சிறிது நெருடலாக இருந்தாலும், சிவாஜியை சந்திக்கும் முன்பும் அதற்கு பின்பும் அவர் காட்டும் அந்த பருவ ஏக்கங்கள் சிறிது ஓவராக இருந்தாலும் திருமணத்திற்கு பின் அந்த பாத்திரத்தின் முதிர்ச்சியை நன்றாக வெளிப்படுத்தியிருப்பார். குழந்தையை ஊருக்கு அனுப்பும் அந்த காட்சி அவர் நடிப்புக்கு ஒரு உரைகல். கணவனின் நடவடிக்கைகள் இயல்புக்கு மாறாக இருப்பதை எண்ணி குழந்தைக்கு என்னவோ என்று பதறுவதை நன்றாக செய்திருப்பார்.
படத்தில் ஸ்கோர் செய்பவர்கள் என்று இருவரை சொல்லலாம். முதலில் ரங்காராவ். அவரது காஷுவல் நடிப்பு பிரச்சிதி பெற்றது என்றாலும் இந்த படத்தில் அதை எடுத்து சொல்ல வேண்டும். ஏழுமலையானிடம் அவர் ஒன் டு ஒன் பேசுவதே அழகு. அதீத உரிமையோடு அவர் கோரிக்கைககளை வைப்பது, மனைவியிடமும், மகனிடமும், மருமகன் மற்றும் மருமகளிடமும் அவர் தன் தரப்பை எடுத்து சொல்வது எல்லாம் ரஸகரம்.
இன்னொருவர் சகஸ்ரநாமம். எந்த சூழ்நிலையிலும் அலட்டிக் கொள்ளாத அந்த காரக்டர், பிரச்சனைகளை அவர் எதிர்கொள்ளும் விதம், உணர்ச்சிவசப்படும் எல்லோரையும் அவர் சமாதானப்படுத்துவது, சூழ்நிலையை சமாளிக்க அவர் தரும் லாஜிக் ஐடியாக்கள், இப்படி ஒருவர் நம் பக்கத்தில் இருந்தால் நன்றாக இருக்குமே என்று பார்வையாளர்களுக்கு ஒரு எண்ணம் வரும்.
அம்மா வேடத்தில் சுந்தரி பாய் வழக்கம் போல். நாகேஷ் முதல் அரை மணி நேரத்தோடு சரி. படத்தின் இறுதிக் கட்டத்தில் சௌகார் மற்றும் சத்யன் என்ட்ரி. சத்யனின் திறமையை வெளிப்படுத்தக் கூடிய அளவுக்கு அந்த வேடம் இல்லையென்றால் கூட அந்த திருவனந்தபுரம் - நாகர்கோவில் வட்டார தமிழ் இனிமையாக இருக்கும். குழந்தையை பத்மினி எடுத்துக் கொண்டு விட ஏர்போர்ட்-ல் வைத்து கதறும் அந்த ஒரே சீன் மட்டுமே சௌகாருக்கு வாய்ப்பு என்றாலும் அதில் ஸ்கோர் செய்திருப்பார்.
முதலில் படங்களுக்கு கதை வசனம் எழுதிக் கொண்டிருந்த கே.எஸ்.ஜி பிறகு படங்களை இயக்க ஆரம்பித்தார். அந்த படங்கள் வெற்றி பெற்றவுடன் நடிகர் திலகத்தின் படத்தை இயக்கினார். முதலில் கை கொடுத்த தெய்வம். 1964-ல் வந்த அந்த படத்திற்கு பிறகு 1966-ல் நடிகர் திலகம் நடித்த வி.கே.ஆரின் சொந்த படமான செல்வம் படத்தை டைரக்ட் செய்தார். பிறகு தானே நடிகர் திலகத்தை வைத்து பேசும் தெய்வம் ஆரம்பித்தார். 1961-ல் திருமணம் செய்து கொண்டு அமெரிக்கா சென்ற பத்மினியை மீண்டும் தமிழ் திரையுலகிற்கு சித்தி மூலமாக கொண்டு வந்த கே.எஸ்.ஜி இதில் மீண்டும் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஜோடியான நடிகர் திலகத்தையும் நாட்டியப் பேரொளியையும் இணைத்தார். 1961-ல் வெளி வந்த ஸ்ரீவள்ளிக்கு பிறகு அவர்கள் இணைந்தது இந்த படத்தில் தான் [1962 -ல் வெளி வந்த செந்தாமரை படத்தில் இந்த ஜோடி இருந்தது. ஆனால் அது வெகு நாட்களாக படப்பிடிப்பில் இருந்த படம். பிறகு 1966-ம் ஆண்டு வெளியான சரஸ்வதி சபதம் படத்தில் சேர்ந்து நடித்தாலும் ஜோடியாக நடிக்கவில்லை. அதே வருடத்தில் வெளியான தாயே உனக்காக படத்தில் இருவருமே கௌரவ வேடத்தில் தோன்றியிருந்தனர்].
படத்தின் துவக்கத்தில் கே.எஸ்.ஜியின் குரல் ஒலிக்கும் போது ஒரு டாகுமெண்டரி பீல் வந்தாலும் கூட அதை மேற்கொண்டு கதை சொன்ன விதத்தில் சரி செய்திருப்பார். பெண்களின் நாடித்துடிப்பை நன்கு அறிந்திருந்த கே.எஸ்.ஜி அதற்கேற்றார் போல் காட்சிகள் அமைப்பார். திருப்பதி கோவிலில் துலாபாரம் கொடுக்கும் போது எல்லா நகையும் வைத்தும் தராசு முள் கீழ் நோக்கியே இருக்க பத்மினி தாலியை கழட்டி தராசில் வைக்கும் காட்சி அந்த வகையை சார்ந்தது.[அந்த காலக் கட்டங்களில் தியேட்டரில் பெண்களின் ஒட்டு மொத்த அனுதாபத்தை இந்த காட்சி அள்ளிக் கொள்வதை நான் நேரில் பார்த்திருக்கிறேன்]. பெண்களை நம்பி எடுத்த இந்த படமும் அவரை ஏமாற்றவில்லை.
நாம் இதுவரை பதிவு செய்த படங்களிலிருந்து பேசும் தெய்வம் வித்தியாசப்படுவது இசையமைப்பில். ஆம், இந்த படத்திற்கு இசை - திரை இசை திலகம் மாமா மகாதேவன். பாடல்கள் வாலி. இந்த படத்தில் இந்த கூட்டணி மிக பெரிய வெற்றி பெற்றது. இதற்கு முன் வாலி முதன் முறையாக நடிகர் திலகத்தின் அன்புக் கரங்கள் படத்திற்கு எழுதினார். பிறகு பேசும் தெய்வத்திற்கு முன் வெளியான நெஞ்சிருக்கும் வரை படத்தில் நெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை என்ற நாள் இருக்கு என்ற ஒரே பாடலை எழுதினார். ஆனால் அவருக்கு இந்த பட பாடல்கள் தான் பெரும் புகழ் தேடி தந்தது.
1.நான் அனுப்புவது கடிதம் அல்ல- டி.எம்.எஸ்.
வாலி எதுகை மோனைகளுக்கு பெயர் பெற்றவர். அது இந்த பாடலில் சிறப்பாக இருக்கும்.
நிலவுக்கு வான் எழுதும் கடிதம்
நீருக்கு மீன் எழுதும் கடிதம்
மலருக்கு தேன் எழுதும் கடிதம்
மங்கைக்கு நான் எழுதும் கடிதம்
இந்த பாடல் காட்சியில் நடிகர் திலகத்தின் தோற்றமும் வாயசைப்பும் அருமையாக இருக்கும்.
2. அழகு தெய்வம் மெல்ல மெல்ல- டி.எம்.எஸ்
இதில் ராஜ உடையில் வரும் நடிகர் திலகம் முதல் சரணத்தில்
"இளநீரை சுமந்து நிற்கும் தென்னை மரம் அல்ல" என்ற வரியின் போது ஒரு சின்ன நடை நடப்பார். நான் முதன் முதலில் இந்த படத்தை பார்த்தது ஒரு மறு வெளியீட்டின் முதல் நாள் (வெள்ளிகிழமை) மதியக் காட்சி. அதிகமாக பொது மக்களே வந்திருந்த அந்த காட்சிக்கே தியேட்டர் அதிர்ந்தது என்றால் ரசிகர்கள் அதிகமாக இருக்கும் காட்சிகளில் சொல்லவே வேண்டாம்.
3. இதய ஊஞ்சல் ஆடவா- டி.எம்.எஸ், சுசீலா.
இந்த டூயட் பாடல் முதலில் மெலடியாகவும் பிறகு கள்ளபார்ட் நடராஜன் அன் கோஷ்டி ஆடும் போது ஷோக்கா ஜொலிக்குதப்பா என்று குத்து ஸ்டைல்-க்கு மாறும். தியேட்டரில் ஆட்டம் கூடும்.
4. பத்து மாதம் சுமக்கவில்லை செல்லையா- டி.எம்.எஸ்,சுசீலா.
முந்தைய பாடல் போலவே இதுவும் ஸ்லோ பிறகு பாஸ்ட் என்று பீட்ஸ் மாறி மாறி வர ரசிகர்கள் ஆட்டம் அணை மீறும்.
5. நூறாண்டு காலம் வாழ்க- ஈஸ்வரி, சூலமங்கலம் ராஜலட்சுமி, சரளா.
குழந்தையை தொட்டிலிட்டு பாடும் பாடல்.
6. பிள்ளை செல்வமே பேசும் தெய்வமே- சுசீலா
குழந்தையை வைத்து கொண்டு சௌகார்,சத்யன் பாடும் பாடல்.
இந்த படத்தை பொறுத்தவரை தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றவுடன் வெளியான முதல் நடிகர் திலகம் படம். ஆனால் அரசியலில் என்ன மாற்றம் ஏற்பட்டாலும் தன் படங்களை அது எந்த விதத்திலும் பாதிக்காது என்பதை நடிகர் திலகம் நிரூபித்தார். படம் 100 நாட்கள் ஓடவில்லை என்றாலும் கூட அனைவருக்கும் லாபம் ஈட்டி தந்த படமாக அமைந்தது. படம் வெளியாகி 35 நாட்களுக்குள் (வழக்கம் போல்) அடுத்த படமான தங்கை வெளியானது. அடுத்த நான்கு வாரத்தில் கிட்டத்தட்ட இதே போன்ற கதையம்சம் கொண்ட பாலாடை வெளியானதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
படம் வெளியான போது சென்னை கெயிட்டி தியேட்டரில் திருப்பதி கோவில் போலவே அமைக்கப்பட்டு பொது மக்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது என்பது சிறப்பு செய்தி.
மொத்தத்தில் பார்க்கலாம், ரசிக்கலாம்.

a recap from Mr Murali old posting
சித்தூர் ராணி பத்மினி - Part I
தயாரிப்பு: உமா பிக்சர்ஸ்
இயக்கம்: Ch.நாராயண மூர்த்தி
வெளியான நாள்: 09.02.1963
சரித்திர பின்னணியில் அமைந்த கதை. தமிழக வரலாற்று பின்னணியைக் கொள்ளாமல் ராஜஸ்தானின் ரஜபுத்திர சாம்ராஜ்ஜியத்தில் நிகழும் கதையை தமிழில் எடுத்திருக்கிறார்கள்.
ரஜபுத்திர நாடான உதயபூர் (உதய்பூர்) தலைநகரில் இளவரசி பத்மினியின் பிறந்த நாள் கொண்டாட்டங்களோடு கதை தொடங்குகிறது. அன்றைய டெல்லி பாதுஷா அலாவுதின் கில்ஜியின் தூதுவனான மாலிக்காபூர் விருந்தினராக வந்திருக்கிறான். இளவரசியின் பிறந்த நாளை முன்னிட்டு நடத்தும் போட்டியில் மாலிக்காபூரை வெல்கிறான் சித்தூர் சிப்பாய் என்ற மாறு வேடத்தில் வரும் சித்தூர் மன்னன் பீம்சிங். இளவரசியின் கையிலிருந்து பரிசு பெறும் அவன், அவள் அழகில் கவரப்படுகிறான். தொடர்ந்து இரண்டு மூன்று முறை அவளை சந்திக்கும் பீம்சிங் தன் விருப்பத்தை வெளிப்படுத்துகிறான்.அவளுக்கும் அது சம்மதமே.
மன்னன் என்பதை காட்டிக் கொள்ளாமல் சிப்பாய் போன்றே நடிக்கிறான். ஒரு சமயம் அவன் பாட பத்மினி நடனம் ஆடுகிறாள். ஒரு போட்டி அங்கே அரேங்கேறுகிறது. யாருக்கு வெற்றி என்று தெரியும் முன்னரே மன்னரே போட்டியை நிறுத்தி விடுகிறார். பீம்சிங்கிடம் என்ன பரிசு வேண்டும் என்று கேட்க அவன் அவரது மகளையே பரிசாக கேட்க, அவன் அரசன் என்று தெரியாமலே அவனை கைது செய்து தண்டிக்க முற்படுகிறார்கள். அவர்களிடமிருந்து பீம்சிங் தப்பித்து செல்கிறான்.
இதனிடையே டெல்லி சென்றடையும் மாலிக்காபூர், அலாவுதினிடம் பத்மினியின் அழகை வர்ணிக்க, டெல்லி பாதுஷாவிற்கு அவளை அடைய வேண்டும் என்ற ஆசை வருகிறது. பத்மினியை மணந்து கொள்ள மன்னரிடம் மாலிக்காபூரையே தூது அனுப்புகிறான். செய்தி கேட்டவுடன் மன்னன் பெண் தர மறுத்து விடுகிறான். அந்நேரம் பீம்சிங் சித்தூர் நாட்டின் தூதனாக (மறுபடியும் மாறு வேடம்) வந்து தங்கள் மன்னனுக்கு பத்மினியை பெண் கேட்க, மாலிக்காபூர் முன்னிலையிலே மன்னன் சம்மதித்து விடுகிறான் . மிகுந்த கோவத்துடன் மன்னனை எச்சரிக்கும் மாலிக்காபூரை திருப்பி அனுப்பி விடுகிறார்கள்.
மன்னன் பீம்சிங்கும் தன் காதலன் சிப்பாயும் ஒன்றே என்றறியாத பத்மினி திருமணத்திற்கு மறுக்கிறாள். அவளை சந்திக்கும் சிப்பாய் கல்யாணத்தன்று தான் வந்து அவளை அழைத்து செல்வதாக கூறி சம்மதிக்க வைக்கிறான். கல்யாணத்திற்கு முதல் நாள் பரிவாரங்களோடு வரும் பீம்சிங் இரவு நேரத்தில் அந்தபுரத்தில் பத்மினியை சந்திக்கும் போது மன்னர் வந்து விடுகிறார். அவனை சிறைக்கு கொண்டு செல்ல முயற்சிக்கும் போது, சித்தூர் நகர பிரதானிகள் வந்து உண்மையை விளக்க அனைவரும் மகிழ்ந்து திருமணத்தை நடத்தி வைக்கின்றனர்.
பத்மினி தனக்கு கிடைக்கவில்லை என்றதும் மிகுந்த கோவம் அடையும் அலாவுதின் சித்தூர் நாட்டின் மீது படை எடுக்கிறான். கோட்டையை முற்றுகையிட்டும் அவர்களால் சித்தூரை பிடிக்க முடியவில்லை. படை பலம், ஆயுத பலம் பலன் தராது என்பதை உணரும் அலாவுதீன் மாலிக்காபூரை சமாதான பேச்சுக்கு அனுப்புகிறான். அதை ஏற்றுக் கொள்ளும் பீம்சிங் அலாவுதினை விருந்தினராக வரவேற்கிறான்.
பத்மினியின் நடனத்தை காண வேண்டும் என்று ஆவலை வெளிப்படுத்தும் அலாவுதினிடம் ரஜபுத்திர வம்சத்து பெண்கள் திருமணத்திற்கு பிறகு அந்நிய ஆடவர்கள் முன்னிலையில் ஆட மாட்டார்கள் என பீம்சிங் மறுத்து விடுகிறான். மீண்டும் மீண்டும் அலாவுதீன் வற்புறுத்தவே, வேறொரு அறையில் பத்மினியை நடனமாட செய்து அதை கண்ணாடி மூலம் அலாவுதின் காண ஏற்பாடு செய்கிறான். தன்னை அவமானப்படுத்தி விட்டதாக குமுறும் அலாவுதீன் அதை வெளி காட்டிக் கொள்ளாமல் திரும்பி செல்கிறான்.
தனக்கு நேர்ந்த அவமானத்திற்கு பழி வாங்க நினைக்கும் அலாவுதீன் தன் பிறந்த நாளுக்கு மனைவியுடன் வருமாறு பீம்சிங்கிற்கு ஓலை அனுப்புகிறான். போக வேண்டம் என்று பீம்சிங்கின் தாய் தடுக்க, தன்னை கோழை என்று நினைத்து விடுவான் என்று பீம்சிங் வாதிடுகிறான். அப்படியென்றால் பீம்சிங்கை மட்டும் போய் விட்டு வரும்படி தாய் சொல்ல, அவன் செல்கிறான்.
அங்கே நடக்கும் ஒரு நடன நிகழ்ச்சியிலே அவனை கொல்ல நடக்கும் சாதுர்யமான முயற்சியிலிருந்து தப்பிக்கும் பீம்சிங்கை அவன் இரவு உறங்கும் போது கட்டிலோடு சேர்ந்து கட்டி போட்டு சிறை பிடிக்கிறார்கள். அவன் மனைவியை வரச்சொல்லி ஓலை அனுப்புகிறார்கள். அவள் தங்கள் அரச சபையில் ஆடினால் அவளது கணவனை விடுதலை செய்வதாக சொல்கிறார்கள். நூறு சேடி பெண்களுடன் வருவதாக அவள் தகவல் கொடுத்து விட்டு வருகிறாள். பீம்சிங்கிற்கு இது அவமானமாக இருக்கிறது. சபைக்கு வரும் பத்மினி தன்னுடன் அழைத்து வந்தது எல்லாம் ஆண்கள். அரசவையில் அவர்கள் தீடீர் தாக்குதல் நடத்த, பீம்சிங்கும் பத்மினியும் தப்பித்து செல்கிறார்கள்.
பின் தொடர்ந்து வரும் அலாவுதீன் இம்முறை தாக்குதலை தீவிரப்படுத்துகிறான். தன்னை சிறைப் பிடித்ததனால் மனம் தளர்ந்த பீம்சிங் ஆரம்பத்தில் போருக்கு செல்லாமல் இருக்க, அவனது படைகள் பெரும் பின்னடைவை சந்திக்கின்றன. இறுதியில் களத்திற்கு செல்லும் பீம்சிங், எதிரி ஒருவன் எறியும் ஈட்டி கொண்டு மரணமடைகிறான். போரில் தன் கணவனுக்கு உதவியாக பங்கு பெறும் பத்மினியும் அதைக் கண்டு மரணத்தை தழுவ, படம் நிறைவு பெறுகிறது.
சித்தூர் ராணி பத்மினி - Part II
இந்தப் படத்தை இப்போதுதான் நான் முதன் முறையாக பார்க்கிறேன். ஏனென்றால் அவ்வளவாக மறு வெளியீடு காணாத திரைப்படம். படத்தைப் பற்றி செய்திகளும் குறைவாகவே கேள்விப்பட்டிருந்தேன். தயாரிப்பில் ஏற்பட்ட தாமதம் காரணமாக வெற்றிக் கோட்டை தொட முடியாமல் போன படம் என்பதும் அதில் ஒன்று.
எந்த வித முன் எதிர்பார்ப்புகளும் இல்லாமல் படம் பார்த்தேன்.டைட்டில் போடும் போது இரண்டு ஆச்சர்யங்கள். கதை வசனம் ஸ்ரீதர்- இளங்கோவன் என்பது ஒன்று. பின்னணி பாடியவர்கள் பட்டியலில் டி.எம்.எஸ். பெயர் இல்லை என்பது இரண்டாவது.
தூய தமிழில் அடுக்கு மொழி வசனம் எழுதி தனக்கென்று ஒரு இடம் பிடித்தவர் இளங்கோவன் என்றால் இயல்பான வசனம் மூலம் மக்களை கவர்ந்தவர் ஸ்ரீதர். இந்த இருவரும் இணைந்து எழுதியிருக்கிறார்கள் என்பது ஒரு புதுமையாக இருந்தது. ஜி.ராமநாதன் இசையில் படத்தில் நடிகர் திலகம் பாடும் அனைத்துப் பாடல்களுக்கும் பின்னணி பாடியிருக்கிறார் சீர்காழி. இது வரை இதைப் பற்றி கேள்விப்படாததால் இதுவும் எதிர்பார்க்காத ஒன்றாக அமைந்தது.
இனி படத்திற்கு வருவோம். மாற்றான் ஒருவன் தன் மீது ஆசைக் கொண்டு கணவனை சிறை செய்து தன் மானத்தை விலை பேசிய போது, தந்திரமாக செயல்பட்டு தன் கணவனை காப்பாற்றிய ரஜபுத்திர ராணியின் கதை சரித்திரத்தில் இருக்கிறது. அதை படமாக எடுக்க வேண்டும் என்ற ஆசையில் எடுக்கப்பட்ட படம். கதாநாயகியின் பாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையமைப்பு. இதற்கு ஒரு நடிகர் திலகம் தேவையில்லை. எப்பவும் போல் யாருக்கோ உதவி செய்ய நடிகர் திலகம் ஒப்புக் கொண்டிருக்க வேண்டும். கதையும் பாத்திரமும் எப்படி இருந்தாலும் தன் முழு பங்களிப்பையும் தருபவர் நடிகர் திலகம். இதிலும் அப்படியே.
சித்தூர் சிப்பாய் வேடத்தில் வந்து மாலிக்காபூரை வெற்றிக் கொண்டு இளவரசியிடம் இளமைக் குறும்போடு பேசும் அந்த முதல் காட்சியிலிருந்து இறுதிக் காட்சி வரை அவரது presence படத்திற்கு உதவியிருக்கிறது. தான் யார் என்பதை வெளிக்காட்டாமல் வைஜயந்தியிடம் அவர் சரசமாடும் காட்சிகள் எல்லாம் சுவை. மாறு வேடங்களில் அவர் வைஜயந்தியை ஏமாற்றும் காட்சிகளும் அப்படியே. வைஜயந்தி நடனமாட சிவாஜி பாடும் அந்த பாடல் காட்சி ["பார்த்துக் கொண்டு இருந்தாலே போதும்"] பிரமாதம். இதற்கு முன் எந்தப் படத்திலும் இவ்வளவு ஸ்வர பிரஸ்தாரங்கள் / ஜதிகள் ஒரு பாடலில் பயன் படுத்தப்பட்டு நான் கேட்டதில்லை. அதற்கு அவர் வாயசைப்பு அற்புதம். மாலிக்காப்பூரை வாதத்தில் அடக்குவது, சிறையில் அவனை எடுத்தெறிந்து பேசி விட்டு சிரிப்பது, தன்னை சூழ்ச்சியின் மூலமாக கட்டிப் போட்ட அலாவுதினிடம் அவர் காட்டும் பாவம், அவர்களை துச்சமென மதித்து அவர் பேசுவது எல்லாம் அக்மார்க் சிவாஜி முத்திரை. என்னதான் மனைவி சாதுரியமாக செயல்பட்டு தன்னை மீட்டாலும், தன் வீரத்தின் மூலமாக விடுதலை பெறாமல் இப்படி தப்பித்து வரும் படியாகி விட்டதே என்று மனம் தளர்ந்து அவர் ஒரே இடத்தில சலனமற்று உட்கார்ந்திருக்கும் காட்சி குறிப்பிட தகுந்த ஒன்று. அதே போல் நடனம் ஆடிக் கொண்டே தன் உடை வாள் கத்தியை எடுத்து குத்த வரும் நடன மங்கையை அவர் அலட்சியமாக சமாளிக்கும் இடம். இப்படி நடிகர் திலகம் என்ற யானைக்கு சோளப் பொறியாக சில காட்சிகள் அமைத்திருக்கிறார்கள்.
நடனத்தில் தேர்ந்த ராணி என்றதும் பத்மினி அல்லது வைஜயந்தி தான் நினைவுக்கு வருவார்கள். இந்த படம் தயாரிக்க தொடங்கிய போது பத்மினி திருமணம் செய்துக் கொண்டு திரையுலகத்திலிருந்து விலகிய நேரம் என்பதால் வைஜயந்தி நாயகியாகி இருக்கிறார். அவரும் அந்த நேரம் இந்தி படவுலகில் பிசியாகி விட படம் தாமதமாகி இருக்கிறது.
அழகான வைஜயந்தி. நடனக் காட்சிகளில் தன் திறமையை வெளிப்படுத்தும் வைஜயந்தி மற்ற காட்சிகளிலும் சோடை போகவில்லை. ஆனால் அந்த பாடல் vs நடனம் போட்டி காட்சியில் பாடல் சிறப்புற்ற அளவுக்கு நடனம் அமையவில்லை. வஞ்சிக்கோட்டை வாலிபன் போட்டி நடனத்தை பார்த்த நமக்கு இது அந்த ரேஞ்சுக்கு வரவில்லை என்றே தோன்றுகிறது. காதல் காட்சிகளில் அவரிடம் நல்ல இளமை துள்ளல்.
மாலிக்காபூராக நம்பியார், அலாவுதினாக பாலையா. நம்பியார் எப்போதும் போல. பாலையா என்பதால் அலாவுதீன் பாத்திரம் அப்படி சித்தரிக்கப்பட்டிருக்கிறதா இல்லை சரித்திரத்திலேயே இப்படித்தானா என்று தெரியவில்லை. படம் முழுக்க மது மாது மயக்கத்திலே கேளிக்கை போகத்தில் திளைக்கும் அரசனாகவே அந்த பாத்திரம் அமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு சில இடங்களில் பாலையா பளிச்சிடுகிறார்.
மற்றவர்கள் யாருக்கும் பெரிதாக வேலை இல்லை. சித்தூர் நாட்டின் தளபதியாக கவர்ச்சி வில்லன் கண்ணனை அடையாளம் தெரிகிறது. ஒரே ஒரு பாடல் காட்சிக்கு ஹெலன் மற்றும் ராகினி வந்து போகிறார்கள்.
காதலனை சிப்பாய் என்றே குறும்போடு அழைக்கும் பாங்கு எல்லாம் ஸ்ரீதர் டச்.அரண்மனை ஆவேச வசனங்கள் எல்லாம் இளங்கோவனின் கைவண்ணம் என்று தோன்றுகிறது.
இசையமைப்பு ஜி.ராமநாதன் என்று சொல்லும் போதே கர்நாடக சங்கீத ராகங்களில் அமைக்கப்பட்ட மெட்டுகள் என்பது மட்டுமல்ல இனிமையான சுவையைக் கொண்டவையாய் இருக்கும் என்பது இதிலும் வெளிப்பட்டிருக்கிறது.
1.தேவி விஜய பவானி
வைஜயந்தியின் அறிமுக பாடல்
2. ஓஹோ நிலா ராணி
சிப்பாய் வேடத்தில்வரும் நடிகர் திலகம் நிலவை நாயகியோடு ஒப்பிட்டு பாடும் பாடல்.
3. பார்த்து கொண்டு இருந்தால் போதும்
போட்டி பாடல். சீர்காழி பிய்த்து உதறி விட்டார். Hats off to him.
4.ஹம் தேகே மேல பாருங்கோ
அலாவுதினின் தர்பாரில் ராகினி ஆட இடம் பெறும் பாடல்.
5.சிட்டு சிரித்தது போல
சிவாஜி -வைஜயந்தி டூயட் பாடல்
6. வானத்தில் மீன் ஒன்று
வைஜயந்தி வேறொரு அறையில் கண்ணாடி முன் நின்று ஆடும் போது வரும் பாடல்.
7. ஆடல் பாடல் காணும் போது
அலாவுதினின் அரண்மனைக்கு பீம்சிங் வரும் போது ஹெலன் ஆடும் நடனப் பாடல்.
எல்லாமே கேட்க இனிமையானவை.
நடிகர் திலகத்தின் அன்னையின் ஆணை போன்ற படங்களை இயக்கிய நாராயண மூர்த்தி இதை டைரக்ட் செய்திருக்கிறார். ஆனால் கதையும் திரைக்கதையும் பெரிய அளவில் அவருக்கு கை கொடுக்கவில்லை.
Curate's egg என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். முழுமையாக இல்லாமல் அங்கங்கே நன்றாக இருப்பது. இந்த படத்திற்கு அது பொருந்தும். தயாரிப்பில் ஏற்பட்ட தாமதம், சரித்திர கதைகள் கிட்டத்தட்ட வழக்கொழிந்து போன ஒரு காலக்கட்டத்தில் வெளியானது, நடிகர் திலகத்திற்கு ஏற்ற பாத்திரப் படைப்பு அமையாமல் போனது, இப்படிப்பட்ட காரணங்கள் இருக்கும் போது படம் வெற்றி வாய்ப்பை இழந்ததில் வியப்பொன்றுமில்லை.
அன்புடன்
20.07.1958 ஆனந்தவிகடன் விமர்சனம்
சினிமா விமர்சனம்: அன்னையின் ஆணை
சந்தர் - சேகர்
சந்தர்: ஹலோ சேகர், எங்கே இப்படி?
சேகர்: மார்லன் பிராண்டோ படம் ஒண்ணு ஓடுகிறதே, அதைப் பார்க்கப் போயிருந்தேன்!
சந்தர்: என்ன மிஸ்டர் அளக்கறே? எனக்குத் தெரிந்து அப்படி ஒரு படம் எங்கேயுமே ஓடலியே?
சேகர்: தமிழ்நாட்டு மார்லன் பிராண்டோ சிவாஜிகணேசன் நடித்த படம்!
சந்தர்: ஓ... சிவாஜியா? ஏன் அந்த மார்லன் பிராண்டோ தான் ஆங்கில நாட்டின் சிவாஜிகணேசனாக இருக் கட்டுமே! நீயா அவருக்குப் பட்டங்களெல்லாம் கொடுக்காதே!
சேகர்: நான் கொடுக்கலே. படத்திலேயே கொடுத்திருக்காங்க! 'சாம்ராட் அசோகன்' நாடகம் ஆன பிறகு, கணேசனை இப்படிப் புகழ்ந்து பாராட்டுகிறார் கருணாகரர்.
சந்தர்: சரி, ஸ்டோரி என்ன?
சேகர்: கொஞ்சம் புதுமை! பிளாஷ்பாக் கதையும் நேர்முறைக் கதையையும் மாற்றி மாற்றிக் காட்டுகிறார்கள்.
சந்தர்: 'அவுட்லைன்' சொல்லேன்?
சேகர்: பலரை வஞ்சித்து வாழுகிறார், பணக் கார பரோபகாரம். மானேஜர் சங்கர் இல்லாத சமயம் அவர் மனைவியிடம் தகாத முறையில் நடந்துகொள்ள முயல்கிறார். விஷயம் அறிந்த சங்கர், சண்டைக்குப் போகிறான். ஆனால், தந்திர மாக அவன் மீதே கொலைக் குற்றம் சாட்டி விடுகிறார் பரோபகாரம். சங்கர் சிறைப்படுகிறான்.பிரசவ வேதனையில் இருக்கும் தன் மனைவியை நினைத்துக்கொண்டு, ஒரு நாள் சிறையிலிருந்து தப்பித்துவிடுகிறான். ஆனால், போலீசாரால் சுடப் பட்டு இறந்துவிடுகிறான். அந்த இடத்தில் கணேசனின் நடிப்பு மெய்சிலிர்க்க வைக்கிறது!
சந்தர்: என்னது... வந்த உடனேயே இறந்துவிடுகிற வேஷமா அவருக்கு?
சேகர்: முழுக்கக் கேளேன்... இறந்தது தந்தை கணேஷ்! பிறகுதான் மைந்தன் கணேஷ் வருகிறார்.
சந்தர்: ஒரே கல்லில் இரண்டு மாங்காயா? டபிள் ரோலா?
சேகர்: டபிள் மட்டும் இல்லை இன்னும் அநேக ரோல்கள்! கல்லூரி மாணவனாக கலாட்டா செய்யும் போதும், சாம்ராட் அசோ கனாக நடிக்கும்போதும், பரோபகாரத்தைப் பழி வாங்கும்போதும் அவருடைய நடிப்பில் எவ்வளவு முகபாவங்கள், எவ்வளவு உணர்ச்சிகள், உள்ளப் போராட்டங்கள்! அநேக இடங்களில் இங்கிலீஷிலேயே வெளுத்துவாங்குகிறார். லவர்ஸ் அறிமுகமே பிரமாதம்! 'பூப்பறிக்கக் கூடாது என்ற போர்டு கண்ணுக்குத் தெரியவில்லையா?' என்று சாவித்திரியைப் பார்த்துக் கேட்கிற தோரணையே ஜோர்! அப்புறம் 'வெரி மிஸ்ச்சிவஸ் கேர்ள்'னு அலட்சியமாக...
சந்தர்: வில்லன் யார்?
சேகர்: பரோபகாரம் ரங்காராவ்தான் வில்லன். நம்பியார் அவருக்கு மேலே பெரிய வில்லன். எம்.என். ராஜத்தை மயக்கி, கடைசியில் வேறு வழியில்லாமல் மணந்துகொண்டு, பரோபகாரத்திற்கும் அவர் மகள் சாவித்திரிக்கும் தீங்கு செய்கிறார். இந்தப் படத்தில் எல்லோர் நடிப்புமே அற்புதம். ஆனால், அன்னையின் ஆணையை நிறைவேற்ற பரோபகாரத்தைப் பழிவாங்கும் படலம்தான் கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கு. இருந்தாலும் நாராயண மூர்த்தியின் டைரக்ஷனும், மாறனின் வசனங்களும் பிரமாதம். எல்லாவற்றையும்விட சிவாஜி நடிப்புதான்...
சந்தர்: சிகரமா..?
சேகர்: சாதாரண சிகரமல்ல; எவரெஸ்ட்!
Hello!
senthilvel45 shared an album with you.
View Album, http://s1055.photobucket.com/user/senthilvel45/library/
the use of appropriate english in the appropriate sequence is certainly to be appreciated.
Though the dialogue writer needs equal appreciation, the respect the english language itself grows multifolds...when nadigar thilagam speaks it....!
Even though there were other actors both graduated or otherwise in the film industry those days.....when nadigar thilagam speaks english.....it is always "britain" !!! Such is his command over the language when it comes to dialogues in english !!!!
Rks !!!