http://i60.tinypic.com/jkzl7k.jpg
http://i58.tinypic.com/2i6gdpw.jpg
http://i62.tinypic.com/30n7wom.jpg
http://i57.tinypic.com/2dafy14.jpg
Printable View
http://i59.tinypic.com/spvotw.jpg
இயக்குனர் ஸ்ரீதர் வசனம் எழுதி திரையுலகுக்கு அறிமுகமான ரத்தபாசம் (1954)திரைப்படத்திற்கு இசைஅமைத்து 9 பாடல்களையும் எழுதி கவிஞராக
அறிமுகம் ஆனவர் திரு . எம்.கே. ஆத்மநாதன்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் " நாடோடி மன்னன் படத்திற்காக, "பாடுபட்டா தன்னாலே, பலனிருக்குது கைமேலே ", பாடலையும், சந்திரபாபு பாடிய
"தடுக்காதே, என்னை தடுக்காதே " என்கிற பாடலையும் ஆத்மநாதன் எழுதியுள்ளார். புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த " திருடாதே ", நல்லவன் வாழ்வான் -(ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் ), விக்கிரமாதித்தன் படத்தில் (வெண்முகிலே கொஞ்ச நேரம் நில்லு ) ஆகிய பாடல்களையும் எழுதி உள்ளார்.
பேரறிஞர் அண்ணா, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்., மு.கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய 4 முதல்வர்களுடன் இணைந்து பணியாற்றியதை தான் பெற்ற பேறாக கருதுவதாக கூறியுள்ளார்.
DR. NAMADHU MGR
http://i160.photobucket.com/albums/t...psjdmsaf7a.jpg
இனிய நண்பர் திரு குமார் சார்
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் தங்களின் தொடர் பங்களிப்பு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது . குறிப்பாக மலைக்கள்ளன் , குலேபகாவலி , மதுரை வீரன் படங்கள் பற்றிய பதிவுகள் சூப்பர் .
இனிய நண்பர்கள் திரு சைலேஷ் / திரு லோகநாதன் சார்
தின இதழ் கட்டுரைகள் , சினிமா எக்ஸ்பிரஸ் மற்றும் மக்கள் திலகம் வீடியோ பதிவுகள் அருமை .
அரசகட்டளை
19.5.1967
48 வது ஆண்டு நிறைவு .
மக்கள் திலகம் அவர்கள் குண்டடிபட்டபிறகு வந்த முதல் படம் .
ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் - இனிமையான பாடல்கள்
மக்கள் திலகம் - வீரப்பா
மக்கள் திலகம் - நம்பியார்
மக்கள் திலகம் - மனோகர்
மோதும் கத்தி சண்டைகள் அனைத்தும் பிரமாதம் .
மக்கள் திலகத்தின் நடிப்பு அபாரம் .
குறிப்பாக இந்த படத்தில் அவரின் ஸ்டைல் - படு அமர்க்களம் .
http://i40.tinypic.com/2wcmuxv.jpg
மக்கள் திலகத்தின் இந்த சூப்பர் ஸ்டில் ஆயிரம் கதை சொல்லுமே.
http://i62.tinypic.com/2eeisud.jpg
எம்.ஜி.ஆர். திரையில் செய்த பிரச்சாரங்கள்
முன்னதாக, 67 தேர்தலை மனதில் கொண்டு எம்.ஜி.ஆர் ' அரசகட்டளை ' என்ற படத்தை உருவாக்கியிருந்தார். 1966 துவக்கத்திலேயே ஆரம்பிக்கப்பட்ட இப்படம், ராஜா ராணி - புரட்சிக்காரன் கதை தான். இப்படத்தின் நோக்கமே மறைமுகமாக ஆட்சியாளர்களை கடுமையாக விமர்சிப்பதும் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாட்டில் ' தேனும் பாலும் ஓடும் ' என்று மக்களுக்கு சொல்வது தான். வசனங்களும்
பாடல்களுமாக படம் முழுக்க அரசியல் பிரச்சார நெடி.
குறிப்பாக, அனல் பறக்க " ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை. ஆணைகளிட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை. ஆடிவா.." என ஆரம்பிக்கும் பாடலை சொல்லலாம். இப்பாடலை வழக்கமான கவிஞர் வாலிக்குக் கொடுக்காமல் திராவிட இயக்க அபிமான கவிஞர் முத்துக்கூத்தன் என்பவரைக் கொண்டு எழுதி வாங்கினார் எம்.ஜி.ஆர்.
" தடை மீறி போராட சதிராடி வா
செந்தமிழே - நீ பகை வென்று
முடிசூட வா
மயிலாட வான்கோழி தடை செய்வதோ- மாங்
குயில் பாட கோட்டான்கள் குறை சொல்வதோ;
முயற்கூட்டம் சிங்கத்தின் எதிர் நிற்பதோ- அதன்
முறையற்ற செயலை நாம் வரவேற்பதோ. (ஆடி வா..)
உயிருக்கு நிகர் இந்த நாடல்லவோ - அதன்
உரிமைக்கு உரியவர்கள் நாமல்லவோ.
புயலுக்கும் நெருப்புக்கும் திரை போடவோ
மக்கள் தீர்ப்புக்கு எதிராக அரசாள்வதோ (ஆடி வா..) "
தொண்டர்களின் கட்சி உணர்வை தட்டியெழுப்புவதுமாக இப்பாடல் வரிகள் அமைந்தன.
*************
நன்றி - திண்ணை
super scene.
https://youtu.be/u5lXbykMdcs
வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன்-
அற்புத நாயகன்-மக்கள் திலகம்- தெய்வம் எம்.ஜி.ஆர்
http://i59.tinypic.com/xp3qer.jpg http://i59.tinypic.com/wanbqq.jpg
மக்கள் திலகத்தின் பெரும்பாலான திரைப்படங்கள் (99%) தற்பொழுது யூடியூபில் இடம் பெற்று இருக்கின்றன. மேலும் DVD வழியாகவும் விற்பனை ஆகி வருகின்றன. அதற்கு மேலும் தொலைக்காட்சி மூலமாகவும் தினம் தோரும் ஒளிபரப்பாகி வருகிறது. இவற்றை எல்லாம் மிஞ்சும் வண்ணம் தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும், கிராமங்களிலும் மக்கள் திலகத்தின்-மன்னாதி மன்னனின் திரைப்படங்கள் வசூலிலும் புதிய படங்களுக்கு இணையாக ஓடி வருகிறது. இவற்றை எல்லாம் காணும் பொழுது அவர் நம்மிடம் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பது உறுதியாகிறது. இதுதான் மக்கள் திலகத்தின் மாபெரும் சாதனை. இன்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளிலும், கருத்தரங்க மேடைகளிலும், அறிஞர்களாலும், கவிஞர்களாலும், ஆன்மீக சிந்தனையாளர்களாலும், எம்.ஜி.யார். எனும் மந்திர சொல் / திருநாமம் உலகின் எங்காவது ஒரு பகுதியில் உச்சரிக்கப்பட்டு / ஒலித்து கொண்டே இருக்கிறது.
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்கின்றார்.
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்
கடமை அது கடமை
கடமை அது கடமை
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும்
இவர் போல யாரென்று ஊர் சொல்லவேண்டும்.
இவ்வாறு அவர் பாடியது அவருக்கு மட்டுமே இலக்கணமாகி உண்மையாகி உயர்வானது. அவரின் வாழ்க்கை பயணம் மனித வாழ்க்கைக்கு ஒரு இதிகாசம் ஆகும். இயற்கை இச் சமுகத்திற்கு தந்த நற்கொடையாளன். மக்கள் திலகத்தின் புகழ் பாடுவது, மக்களுக்கும் தற்பொழுது இருக்கும் ஆட்சியாளர்களுக்கும் மிகுந்த நன்மை பயக்கும் என்பதை உணர்ந்து கொண்டால் அது அவர்களுக்கு நல்லதை நல்கும் நம்பிக்கை நாயகன்
வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன்-
அற்புத நாயகன்-மக்கள் திலகம்- தெய்வம் எம்.ஜி.ஆர்
http://i1273.photobucket.com/albums/...psba8f8a83.jpg
மாண்புமிகு முதல்வர்
உலகம் சுற்றும் வாலிபனில் ஜஸ்டின் சண்டைக்காட்சி குறித்து அடுத்து எழுதுவேன் என்று 4 நாட்களுக்கு முன் குறிப்பிட்டிருந்தேன். இன்றுதான் கொஞ்சம் ஓய்வு கிடைத்தது. அந்தக் காட்சியை நான் பார்த்து ரசித்த கோணத்தில் விளக்குகிறேன்.
விஞ்ஞானி முருகனாக வரும் தலைவர், அணுசக்தி பற்றிய தனது ஆராய்ச்சிக் குறிப்பின் ஒரு பகுதியை ஒரு டாலரில் வைத்து, டாலருடன் சேர்ந்த செயினை காதலியான விமலாவாக வரும் மஞ்சுளாவின் கழுத்தில் அணிவித்திருப்பார். அதை மஞ்சுளா தனது பரிசாக (டாலர் உள்ளே ரகசியம் இருப்பது தெரியாமல்) சந்திரகலாவுக்கு கொடுத்து விட, அதை பெறுவதற்காக, போலீஸ் அதிகாரி ராஜூவாக வரும் தலைவர் நடன விடுதியில் நடனமாடிக் கொண்டிருக்கும் சந்திரகலாவை தேடி வருவதாக காட்சி. சந்திரகலா நல்ல டான்சர். அவரது அறிமுகமே அவரது நடனத்திறமையை விளக்கும் வகையில் பல்வேறு நடனங்களுடன் ஆரம்பம். சுமார் 10 நிமிடங்கள் வெவ்வேறு நடனங்கள் இருந்தாலும் அலுப்பு தட்டாது. மெல்லிசை மன்னரின் இசையமைப்பும் அமர்க்களம்.
அதே டாலரை திருடுவதற்காக அந்த விடுதிக்கு அசோகனும் தனக்கே உரிய ஸ்டைலில் கையாட்களுடன் வருவார். சந்திரகலா அணிந்திருக்கும் சங்கிலியில் டாலர் இருக்கிறதா? என்பதை பார்ப்பதற்காக பைனாகுலர் மூலம் பார்த்து அதை உறுதி செய்து கொண்டு மகிழ்ச்சியடையும் தலைவர் நாகேஷூம் அதை பார்க்கட்டும் என்று பைனாகுலரை கொடுக்க, அவர் தனது வழக்கம்போல கோட்டுக்குள் போட்டுக் கொள்வதும் தலைவர் அவரை தட்டி டாலரை பார்க்கச் சொல்வதும் கலகலப்பு.
நடனத்தின் உச்சகட்டமாக ஆடைகளை ஜஸ்டின் கிழிப்பதுபோலவும் அரைகுறை ஆடையுடன் சந்திரகலா ஆட வேண்டும் என்பது போலவும் காட்சி. ஆனால், இதற்கு மறுத்த சந்திரகலா மேடையில் இருந்து உள்ளே ஓடி உள்ளே ஓடி மேக் அப் ரூமுக்குள் ஓடுவார். அவரைத் துரத்திக் கொண்டு ஜஸ்டினும்.
இந்தக் காட்சியில் மேக்அப் ரூமில் நம்மை நோக்கி சந்திரகலாவும் ஜஸ்டினும் ஓடிவருவது போல இருக்கும். திடீரென கேமரா இடதுபுறம் திரும்பி அவர்களைக் காட்டும். அப்போதுதான் முதலில் அவர்கள் ஓடி வந்தது கண்ணாடியில் தெரிந்த அவர்களின் பிம்பம் என்பதை உணர்வோம். அதை நேரடியாக அவர்கள் ஓடி வருவது போலவே காட்டியிருக்கலாம். ஆனால், கண்ணாடியில் பிம்பத்தை காட்டியதன் மூலம் ஒவ்வொரு சின்ன ஷாட் ஆனாலும் அதில் எவ்வளவு கவனம் செலுத்தி செதுக்கியிருக்கிறார் தலைவர் என்பதை நினைக்கும்போது வியக்காமல் இருக்க முடியவில்லை.
ஏதோ விபரீதம் என்பதை உணர்ந்த தலைவரும் அவர்களை பின்தொடர்ந்து செல்வார். உள்ளே சந்திரகலாவை ஜஸ்டின் துரத்துவதை பார்த்து கதவுக்கு வெளியே நின்றபடியே, கோபமாக மிஸ்டர், மிஸ்டர்.... என்று இரண்டு முறை தலைவர் கத்துவார். ரூமில் சுழன்று ஓடியபடியே தலைவர் இருக்கும் கதவு அருகே வரும் சந்திரகலா, என் மானத்த காப்பாத்துங்க.. என்று கதறுவார். அதற்கு ஜஸ்டின், ஏய், சிபாரிசு வேறயா? என்றபடியே ரூமுக்குள் அவரை துரத்திக் கொண்டு ஓட, இனியும் பொறுக்க முடியாது என்ற நிலையில், தலைவர் ஆத்திரத்தில் பல்லைக் கடித்தபடியே (அந்தக் காட்சியைப் பார்த்தால் பல்லைக் கடிப்பது தெரியும்) கதவைத் திறந்து புயலாய் ஓடிச் சென்று, சந்திரகலாவை பற்றியிருக்கும் ஜஸ்டின் கையை தட்டி விடுவார்.
கோபமடைந்த ஜஸ்டின் தலைவரின் தோளில் அடிப்பார். அடிவாங்கிய தலைவர், அந்த வேகத்தில் பின்னே சென்று கீழே விழுந்து விடாமல் இருக்க சுழல் நாற்காலியின் கைப்பிடியை பற்றிக் கொண்டு பேலன்ஸ் செய்வது அருமை. ஜஸ்டினின் அடுத்த அடி, தலைவர் லாவகமாக விலகிக் கொள்வதால் சேர் மீது விழும். சுதாரித்துக் கொள்ளும் தலைவர் ஜூடோ சண்டை முறையில் வலது காதில் ஒரு கையை பொத்தியது போல வைத்து, இடது கையை முன்னே நீட்டி ஸ்டைலாக உட்கார்ந்து எழுந்து சண்டைக்கு தயாராவார் பாருங்கள். தியேட்டரே இடிந்து விழுவது போல கைதட்டலும் விசில் சத்தமும் காதைப் பிளக்கும். அந்த ஆரவாரத்தையும் மீறி செத்தான்டா ஜஸ்டின்.. என்ற உற்சாக வெறிக் குரல்களை தியேட்டரில் கேட்டிருக்கிறேன். மெல்லிசை மன்னரின் இசையும், தலைவர் சண்டைக்கு தயாராகிவிட்டதற்கு ஏற்ற வகையில் போர்ப்பரணியாய் முழங்கும்.
முக்கியமாக இந்தக் காட்சியில் நாம் தவறவிடக்கூடாதது தலைவரின் உடையமைப்பும் சண்டையில் அவர் கையாளும் நுணுக்கங்களும். கிரே கலர் கோட்டும் பேண்ட்டும். ஸ்கை ப்ளூ ஷர்ட் பூப்போட்ட இளஞ்சிவப்பு நிற டை. கிரே மற்றும் கறுப்பு நிறத்தில் உடைக்கு மேட்சாக ஷூ. பேண்டின் கால் பகுதியில் பக்கவாட்டில் இப்போது இளைஞர்களிடம் பேஷனாக இருக்கிறதே? அதே போன்று லேசாக கத்தரித்து விடப்பட்டிருக்கும். இதை கூர்ந்து பார்த்தால் தெரியும். பாதாதி கேசம் என்பார்களே அப்படி அவரையே தலைமுதல் கால்வரை பார்த்துக் கொண்டிருக்கும் நாம் இதையும் திரையில் கவனித்திருப்போம்.
தாக்குவதற்காக ஜஸ்டின் ஓடி வரும்போது நின்ற இடத்திலேயே சடாரென உட்கார்ந்து லேசாக தரையில் சாய்ந்து கால்களால் ஜஸ்டினை தடுத்து தூக்கி எறியும் காட்சியில் தலைவரின் சுறுசுறுப்பு அபாரம். எழுந்து தாக்க வரும் ஜஸ்டினின் வயிற்றில் இடது கையை வைத்து வலது கையை முதுகில் கொடுத்து (அதாவது தலைவரின் கை அப்போது பெருக்கல் குறிபோல இருக்கும்) ஜஸ்டினை புரட்டித் தூக்கிப் போடும்போது ஜஸ்டினுக்கு ஏற்படும் உணர்வு நமக்கும் ஏற்படும். அப்போது, சற்று லாங் ஷாட்டில் கேமரா ஜஸ்டின் சுழன்று விழும் திசையில் சுழலும். நாமும் சுழன்று விழுவது போல உணர்வோம். எவ்வளவு நுணுக்கமாக காட்சிகளையும் கேமரா கோணங்களையும் தலைவர் அமைத்திருக்கிறார்.
எழுந்து வரும் ஜஸ்டினை எதிர்ப்புறத்தில் இருந்து வேகமாக ஓடி வந்து மோதித்தள்ளுவார். ஜஸ்டின் கீழே விழுந்ததைப் பார்த்ததும் நடன விடுதியில் நடனமாடிக் கொண்டிருக்கும் இரண்டு பெண்கள் கட்டிப் பிடித்து மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்வார்கள். இதன் மூலம் ஜஸ்டினால் அவர்களும் கொடுமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பதும் அவரது வீழ்ச்சி இவர்களுக்கு மகிழ்ச்சி என்பதும் புரிய வரும்.
டைரக்க்ஷன் என்பது கதாநாயகனும் கதாநாயகியும் நெருக்கமாக இருக்கும்போது இரண்டு பூக்கள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து ஒட்டி ஆடுவது மட்டுமே அல்ல. இதுபோன்று வார்த்தைகளே இல்லாமல் பாத்திரங்கள் மூலமே, அவர்களது உடல் மொழிகள் மூலமே அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்த வைப்பதில் டைரக்டருக்கு பெரும்பங்கு உண்டு. படத்துக்கு தலைவரே டைரக்டர் என்பதும் தெரிந்ததுதானே.
பின்னர், கையை தரையில் ஊன்றி இரண்டு முறை பல்டியடித்தபடியே ஜஸ்டினுக்கு உதை. ஜஸ்டினின் எதிர்தாக்குதலில் தலைவரின் உதடு கிழிந்து ரத்தம் வரும். பிறகென்ன? எரிமலையாகும் தலைவரால் ஜஸ்டினுக்கு குத்து மழை (அப்போது தலைவர் என்ன ஸ்பீடு) ஜஸ்டின் கீழே விழ, தலைவரும் தரையில் படுத்து உருண்டு சென்றபடியே உதைப்பார். தலைவரின் தோற்றமும் சுறுசுறுப்பும் அவருக்கு அப்போது வயது 57 என்று திருப்பதியில் கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்தால் கூட யாரும் நம்பமாட்டார்கள்.
கடைசியாக, விழுந்து விட்ட ஜஸ்டின் எழுந்திருக்கட்டும் என்று தலைவர் பாக்ஸிங் போஸில் (என்ன ஒரு அட்டகாச போஸ்) நின்று கொண்டிருக்கும்போது அவரால் எழ முடியாது.
ஒருவழியாக ஜஸ்டின் எழுந்து, இனி தலைவரை மோதி ஜெயிக்க முடியாது என்பதை உணர்ந்து, சந்திரகலாவிடம் போய் இனிமேல் நீ என் கம்பெனிக்கு தேவையில்லை. என்கிட்ட வாங்கின பணத்தை கொடு என்றுகேட்பார்.
பின்னர் தலைவரை பார்த்து ஜஸ்டின், இந்தாய்யா, பெரிய மனுஷன் மாதிரி என்னப் போட்டு அடிச்சியே, பணத்தை கொடுக்கச் சொல்லு என்று சொல்லும்போது தியேட்டரில் சிரிப்பலை. ஜஸ்டின் பாத்திரத்தின் மனநிலையை நினைத்துப் பாருங்கள். தன்னைவிட பலமான வெல்ல முடியாத எதிரி. கம்பெனி ஊழியர்கள் முன்னிலையில் அடியும் வாங்கியாகிவிட்டது. அவமானம் வேறு.நாட்டாமை பண்ணுவது போல அடிச்சியே, பணத்தை வாங்கிக் கொடு என்பதை கூறுவது போல பெரிய மனுஷன் மாதிரி என்னப் போட்டு அடிச்சியே என்று நியாயம் கேட்கிறார்.
ஒரு வசனகர்த்தா ஒவ்வொரு பாத்திரத்துக்கும் வசனம் எழுதும்போது அந்தப்பாத்திரமாகவே மாறிவிட வேண்டும். அப்போதுதான் அந்தப் பாத்திரத்தின் உணர்வை வார்த்தையாக தனது எழுத்தில் வெளிப்படுத்த முடியும். அந்த வகையில் வசனகர்த்தா சொர்ணம் இந்த இடத்தில் சிறப்பாக நிற்கிறார்.
சந்திரகலாவைப் பார்த்து தலைவர், நீ இவரிடம் பணம் வாங்கியது உண்மையா? ஆடுவதற்கு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டாயா? என்று கேட்டு உறுதிப்படுத்திக் கொள்வார். பணம் வாங்கினாலும் அரைகுறையாக ஆட இஷ்டம் இல்லை என்று சந்திரகலா கூறியதும், சத்தம் வெளிவராமல் தோள்களை மட்டும் லேசாக குலுக்கிய சிரிப்புடன் பரிதாப உணர்வை நுணுக்கமாக தலைவர் வெளிப்படுத்துவது அற்புதம். சந்திரகலா தனது குடும்ப நிலைமையையும் வறுமையையும் சொல்லி, தெரியாத்தனமாக விடுதிக்கு வந்து மாட்டிக் கொண்டதை சொல்லும்போது, அவர் வாங்கிய பணத்தை, தானே கொடுக்க தலைவர் முடிவு செய்வார்.
நாமே யோசித்து ஒரு முடிவுக்கு வருகிறோம் என்றால் நம்மை அறியாமல் முகவாய்கட்டையை தேய்ப்போம், நெற்றியை தேய்ப்போம், தலையைக் கோதுவோம். அதேபோல, பணம் கொடுத்து சந்திரகலாவை மீட்க யோசித்து முடிவுக்கு வருவதை உதட்டை வலது பக்கமாக சுழித்து வலது கை மேல் இடது கையை வைத்து தேய்த்தபடி, எண்ண ஓட்டத்தை தலைவர் வெளிப்படுத்துவார். இதுபோன்று நுணுக்கமான நடிப்பை வெளிப்படுத்துவதில் அவருக்கு இணை அவர்தான்.
முடிவுக்கு வந்தவராய் ஜஸ்டினிடம் இந்த அம்மாவுக்கு எவ்வளவு பணம் கொடுத்தீங்க? என்று தலைவர் கேட்க, அவர் 1,000 டாலர் என்று கூறுவார். நஷ்ட ஈடும் சேர்த்து (அடி உதைக்கும்தான்) 2,000 டாலர் தருகிறேன் என்று தலைவர் செக் எழுதி கொடுப்பார். பிறகு அவர் ஜஸ்டினிடம் சொல்லும் வார்த்தைகள், பண்பின் உறைவிடம் தலைவர் என்பதைக் காட்டும். நடந்து போன காரியத்துக்காக நான் ரொம்ப வருத்தப்படறேன் என்று சொல்லி விட்டு செல்வார்.
இதையெல்லாம் விட இந்தக் காட்சியில் என்னை மிகவும் கவர்ந்த இடம். நம் எல்லாருமே ரசித்திருப்போம். ஜஸ்டினை அடித்து வீழ்த்தி விட்டு அப்படியே அவர் சென்றிருக்கலாம். ஜஸ்டினை வீழ்த்தியவுடன் அங்கு நடனமாடும் பெண்களும் தலைவரை சூழ்ந்துகொண்டு கங்கிராட்ஸ் என்று வாழ்த்தி மகிழ்ச்சியடைவார்கள்.
அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாத தலைவர், அவர்களைப் பார்த்து please, get some water என்று கூறி தண்ணீர் வந்ததும் அதை ஜஸ்டின் முகத்தில் அடித்து அவரை தெளியவைத்து எழ உதவுவார். என்னதான் ஒருவன் தவறு செய்தாலும் அவனை அடித்து வீழ்த்த வேண்டிய நிலை வந்தாலும், அவனை வீழ்த்திய பிறகு அப்படியே சென்று விடாமல் அவன் மீது அக்கறையை வெளிப்படுத்தும் தலைவரின் மனிதாபிமானத்தை வெளிப்படுத்தும் காட்சி இது.
திரைப்படத்துறையில் புகழ்க்கொடி நாட்டியதில் மட்டுமல்ல, அரசியல் உலகில் வெற்றிக் கொடியை பறக்கவிட்டதில் மட்டுமல்ல, மூன்று முறை தமிழகத்தின் ஆட்சி பீடத்தில் அமர்ந்து மாணவர்களுக்கு சத்துணவு வழங்கி பொற்கால ஆட்சியை தந்ததால் மட்டுமல்ல...
எதிரிகளிடமும் கருணை காட்டும் மனிதாபிமானத்திலும் தலைவர் என்றுமே மாண்புமிகு முதல்வர்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
குமார் சார், லோகநாதன் சார், எஸ்.வி.சார், சைலேஷ் சார், தெனாலிராஜன் சார் ஆகியோரின் பங்களிப்புகள் அற்புதம். இணையதளத்தில் இருந்து குமார் சார் பதிவிட்டுள்ள ஆவணங்கள் அருமை. நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ்
கோடை விடுமுறையில் உள்ளேன். அதனால் எனது பதிவுகள் தாமதமாகின்றது..
http://i58.tinypic.com/1468p0.jpg
பொதுவாக, கிருஷ்ணன் -பஞ்சு இயக்கும் படத்தின்
'செட்' இல் நுழைபவர்கள், இயக்குனர்கள் இல்லாமல், அவர்களுக்காக காத்திருப்பர். ஆனால் அவர்கள் "செட்' க்குள் நுழைவதை கண்டால் எழுந்து நின்று அந்தஇயக்குனர்களுக்கு மரியாதை செய்யும் பழக்கம் உண்டு
ஆனால் "பெற்றால்தான் பிள்ளையா " படத்தின் "செட்'இல் இரடை இயக்குனர்களில் ஒருவரான கிருஷ்ணனுக்கு வித்தியாசமான அனுபவம் ஏற்பட்டது . இயக்குனர் கிருஷ்ணன் வந்து படப்பிடிப்பை கவனித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் மக்கள்திலகம் எம்ஜிஆர் உள்ளே நுழைந்தார்
எல்லோரும் எழுந்து நின்று மரியாதை செலுத்திவிட்டனர் !
இயக்குனர் கிருஷ்ணன் ? அவருக்கு நிற்பதா அல்லது உட்கார்ந்து கொண்டே இருப்பதா என்று குழப்பம் ! என்ன பண்றது......ஒன்றும் தோன்றாமல் மெதுவாக எழுந்து நின்றார் !
எம்ஜிஆர், கிருஷ்னன் எழுந்து அவருக்கு மரியாதை செலுத்துவதைக்
கொண்டு , பெரும் சினம் கொண்டார் ![
நேராக, அவர் கிருஷ்ணனை நோக்கி வந்து
" நீங்கள் செய்த காரியம் உங்களுக்கே நன்றக இருக்கிறதா ? "
என்று கோபமாக கேட்டார் !
எல்லோருக்கும் எம்ஜிஆர் கோபம் கொண்டு பேசியதைப் பார்த்து
" டென்ஷன்" ஆயினர் !
" என்ன நடக்குமோ ! "
என்கிற அச்சம் அங்கே நிலவியது !
உடனே கிருஷ்ணன் , எம்ஜிஆரிடம் ஏதோ காதில் கூறினார் அதனைக் கேட்டு
எம் ஜிஆர் பலமாக சிரித்து விட்டார்......மீண்டும் சிரித்தார் !
எல்லோருக்கும் குழப்பம் !
என்ன சொன்னார் கிருஷ்னன், எம்ஜிஆர் இடம் ?
இதுதான் :
" எனக்கு நானே மரியாதை கொடுக்கத்தான் எழுந்து
நின்றேன் ! "
( இந்த அளவு இயக்குனர் கிருஷ்ணன் மீது மக்கள் திலகம்
எம்ஜியார் பெரு மதிப்பு வைக்கக் கரணம் , மக்கள் திலகத்தில்
முதல் படமான ' சதி லீலாவதி ' யில் துணை இயக்குனராகப்
பணியாற்றிவர் கிருஷ்ணன் )
Party of the masses
1972 Anna Dravida Munnetra Kazhagam founded by MG Ramachandran as a breakaway faction of the DMK. Later ‘All India’ prefixed to ADMK.
1977 Party comes to power in the State for the first time. MGR made Chief Minister, remains CM for a decade.
1979 AIADMK becomes the first regional party to be part of the Union Cabinet.
December 24, 1987 MGR or “puratchi thalaivar” (“revolutionary leader”) dies. Tamil Nadu plunges into grief and chaos. Looting and rioting take place, followers commit suicide.
http://www.thehindu.com/sunday-ancho...cle7214804.ece