"அந்த மேவும் அரவிந்த மாமலையில் வந்த வேதவல்லியாம்" - இது தான் ஞாபகத்திற்கு வருகிறது....
Printable View
வாசு சார்
அம்மன் அருள் படத்தை முழுதும் பார்த்த பொறுமைசாலிகளில் அடியேனும் ஒருவன். அந்தப் படத்தைப் பார்க்க வைத்த அந்த "ஒன்றே ஒன்று" - அதைப் பற்றித் தாங்கள் அவ்வளவு சிறப்பாக எழுதி விட்டீர்கள். அகிலமெல்லாம் விளங்கும் அம்மன் அருள் ... அதுவும் கொஞ்சம் தன் பங்கிற்கு படத்திற்கு சிறப்பு செய்தது.
மற்றபடி ஏதோ ஓவர் ஆக்டிங்... என்கிறார்களே... அதற்கு முழுத் தகுதியும் படைத்த ஏவிஎம் ராஜனின் நடிப்பைப் பற்றிப் பாராட்டி எழுதாத தங்களுக்கு ஈரேழு உலக ஏவிஎம்ராஜன் ரசிகர் மன்றங்களில் தலைமை ஒருங்கிணைப்பு ஒன்றிய அமைப்பு சார்பாக கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இதற்குத் தண்டனையாக திருவருள் படத்தை நூறு முறை தாங்கள் பார்க்கக் கடவது...!
வாசு சார்
பி.எஸ்.திவாகர் இசையமைத்த படங்களைப் பட்டியலிடலாமே என்ற எண்ணத்தில் 1951 முதல் 1980 வரையில் வெளிவந்த தமிழ்ப்படங்களில், திவாகர் இசையமைத்த படங்களின் பட்டியல் தரப்பட்டுள்ளது. ஆதாரம்... பிலிம் நியூஸ் அனந்தன் வெளியிட்ட திரைப்படப்பட்டியல் புத்தகம்.
1952 - பசியின் கொடுமை
1952 - புயல் - எஸ்.ஜி.கே. பிள்ளை என்பவருடன் இணைந்து
1953 - தந்தை
1964 - தெய்வத்திருமகள்
1965 - காட்டு ராணி
1965 - தாயும் மகளும்
1967 - தெய்வச் செயல்
1968 - நேர்வழி
1980க்குப் பிறகு இன்னும் பட்டியலெடுக்கவில்லை.
Vanakkam ji
கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்கள் “இறைவன் ஒரு நாள் உலகை காண தனியே வந்தாராம்” பாடலை மிகவும் விரும்புவார் போல
தான் இயக்கிய காவியத்தலைவனில் (விஜயகாந்த் பானுப்பிரியா நடித்தது)
தொலைக்காட்சி தொடர்களுக்கு இசையமைத்து வந்த அர்விந்த் சித்தார்த்தா (ஆபாவாணனின் துணையுடன்) இசையமைத்தார்
இறைவன் ஒரு நாள் போலவே ஒரு பாடல்
யேசுதாஸுடன் ஸ்வர்ணலதா
சந்தன மலர்களை பார்த்து வந்தது தென்றல் காற்று
https://www.youtube.com/watch?v=9pqsRyFRqWU
'உத்தரவின்றி உள்ளே வா' போனஸ் சிறப்புப் பதிவு.
http://i1087.photobucket.com/albums/..._000051912.jpghttp://i1087.photobucket.com/albums/..._000044416.jpg
மதுண்ணா!
'உத்தரவின்றி உள்ளே வா' படத்தின் கிளைமாக்ஸ் பாடல் பற்றிக் கேட்டிருந்தீர்கள். இன்றுதான் அப்லோட் செய்ய அதற்கு நேரம் கிடைத்தது. இறுதியில் ரவி, காஞ்சனா அலங்கரிக்கப்பட்ட பொண்ணு மாப்பிள்ளை காரிலும், அவர்களுக்கு முன்னால் ஆளுக்கொரு பக்கமாக மூர்த்தி, சச்சு ஜோடி ஸ்கூட்டரிலும், நாகேஷ், ரமாபிரபா ஜோடி இன்னொரு ஸ்கூட்டரிலும் சென்னை சாலைகளில் அம்சமாக நிஜமாகவே வர, ரோட்டின் இருமருங்கிலும் ஷூட்டிங் பார்க்க ஜனங்கள் திரண்டிருப்பதும், காரின் பின்னாலேயே சிலர் ஆர்வத்துடன் ஓடிவருவதும் ரசிக்க வைக்கிறது. நாகேஷ் சீரியஸாக ஸ்கூட்டர் ஓடி வருவார். அப்புறம் வலுக்கட்டாயமாக சிரிப்பார். முகம் காட்டிக் கொடுக்கும். மூர்த்தி சமாளித்து விடுவார். ரவி, காஞ்சனா காரின் பின்னால் அவர்களின் பாதுகாப்பிற்காக ஐந்தாறு கார்கள் தொடர்ந்து வருவதைப் பார்க்கலாம். மாலிக்கு ஜோடி இல்லாததால் பூ தூவும் வேலை. இப்போதும் பாவ'மாலி':)
வழக்கமான 'கள்ளம் இல்லாத' வரிகள் ரவிக்கு பாலா குரலில்.
'மஞ்சள் முகத்தை மெல்லப் பிடித்து என்னை ரசிக்கக் கூடாதோ'
என்று ரமாபிரபாவுக்கும்,
'வண்ணம் மலர்ந்து எண்ணம் கலந்து மின்னல் மயக்கம் கொள்ளாதோ'
என்று சச்சுவுக்கும் புதிதாக ஆளுக்கொரு வரி பாட இப்பாடலில் அடித்தது சான்ஸ்.
பாடலின் இடையிசையில் ஒரிஜினல் பாடலுடன் வேறுபடுத்திக் காட்ட இப்பாடலில் மாற்றம் தந்திருப்பார் எம்.எஸ்.வி. இடையிசை கேட்டீர்களானால் ஒரு இடத்தில் அதாவது மாலி பூ தூவும் போது 'வரவு எட்டணா....செலவு பத்தணா' 'பாமா விஜயம்' படப் பாடலின் இடையிசையை அப்படியே ஞாபகப்படுத்தும்.:) ('அடங்கா மனைவி அடிமைப் புருஷன் குடும்பத்துக்ககாது' என்று டி.எம்.எஸ் பாடும் முன்பு வரும் இடையிசை யில் நான் சொன்ன மியூசிக் பிட் 4 தரம் ஒலிக்கும். அதே போல இப்பாடலிலும் கொஞ்சம் வலுவாக அதே 4 தரம் ஒலிக்கும். டட்டடன் டடடடைன்... டட்டடன் டடடடைன்... டட்டடன் டடடடைன்... டட்டடன் டடடடைன்):)
http://i1087.photobucket.com/albums/..._000035889.jpghttp://i1087.photobucket.com/albums/..._000064857.jpg
பாடல் முடியும்போது இருவர் காரின் முன்னே ஓடி வந்து காஞ்சனா, ரவியை கழுத்தில் மாட்டியிருக்கும் கேமெரா மூலம் ஸ்டில் எடுப்பார்கள். அதில் பேன்ட் போட்டு படம் பிடிப்பவர் 'ஸ்டில்' சாரதி போலத் தெரிகிறது. ராகவேந்திரன் சாரும் இதை உறுதி செய்தார். (சாரதிதான் இந்தப் படத்திற்கு ஸ்டில் உதவி. லாங் ஷாட்டில் பார்த்தால் ஸ்ரீதர் போலவும் தெரியும்).
'உத்தரவின்றி உள்ளே.... வா' என்ற அனைவரின் உற்சாகக் கூக்குரல்களுடன் பாடல் முடியும்.
பட யூனிட்டே காமெடி படம் என்பதற்காக ஜாலியாக இப்பாடலை பொதுமக்கள் முன்னிலையில் ஜோவியலாக படமாக்கிருப்பார்கள். அதனால் இந்தப் பாடல் காட்சியும் ஒரு நிமிடங்கள் சில வினாடிகளே ஆனாலும் மனதில் பசுமையாகப் பதிந்து விட்டது. சரியான எண்ட்.
இன்னொன்று. இந்தக் காட்சியில் பாடல் ஆரம்பிக்கும்போது இரு பெண்குரல்கள் 'உத்தரவின்றி உள்ளே.... வா' என்று சேர்ந்து ஒலிக்கும். ஏற்கனவே இந்தப் பாடலை ஈஸ்வரி பாடியிருப்பதால் ஒரு குரல் அவருடையது. இன்னொரு பெண் குரல் சுசீலா அம்மாவா அல்லது டிராக் பாடும் வேறு பாடகியா என்பது தெரியவில்லை. சச்சுவும், ரமாபிரபாவும் பாடும்போது ஈஸ்வரியின் குரலிலேயே பாடுவார்கள். இரு பெண்குரல்கள் சேர்ந்து ஆரம்பத்தில் ஒலிக்கும்போதுதான் இன்னொருவர் யார் என்பதில் குழப்பம்.
இந்தப் பாடலை பாலா தொடரில் நான் சேர்க்கவில்லை. அதனால் இது நம் நண்பர்களுக்கு ஸ்பெஷல் போனஸ். குறிப்பாக மதுண்ணாவிற்கு. ஓ.கே.வா?
https://youtu.be/rePTD5ZeAZ8
Courtesy: Tamil HIndu
சினிமா எடுத்துப் பார் 35: ‘மயங்குகிறாள் ஒரு மாது’
ஒரு சிலரைத் தவிர பெரும்பாலான விநியோகஸ்தர்கள் ‘மயங்குகிறாள் ஒரு மாது’ படத்தை வாங்கத் தயங்கினார்கள். திருச்சியைச் சேர்ந்த விநியோ கஸ்தர் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டு களை அடுக்கி வைத்துக்கொண்டு ‘கிளை மாக்ஸில் கதாநாயகி இறப்பது போல மாற்றிக் கொடுங்கள். உடனே படத்தை வாங்கிக்கொள்கிறேன்’ என்றார். நானும், பஞ்சு அருணாசலமும் கிளைமாக்ஸ் காட்சியில் நாயகியைக் கொன்றுவிடக் கூடாது. தவறை மன்னித்து வாழ வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந் தோம். தயாரிப்பாளர் விஜயபாஸ்கரிடம் படம் தொடங்குவதற்கு முன்பே, இதை சொல்லியிருந்ததால் அவரும் அந்த முடிவில் இருந்து மாறவில்லை.
பல வகையில் பணத்தை புரட்டி னோம். படப்பிடிப்பு முடிந்தது படத்தை சென்சாருக்கு அனுப்பினோம். படத்தை பார்த்துவிட்டு சென்சார் அதிகாரி எங்களை அழைத்து பாராட்டி, ‘யூ’ சான்றிதழ் கொடுப்பதாகக் கூறினார்.
பஞ்சு அவர்கள் என்னை அழைத்து, ‘‘ரிஸ்க் எடுக்க வேண்டாம். அதிகாரியிடம் அந்த பருவக் கோளாறு காட்சிகளைப் பற்றி கேட்டுவிடுங்கள்’’ என்றார். நான் சென்சார் அதிகாரியிடம் சென்று ‘‘படத் துக்கு ‘ஏ’ சான்றிதழ் கொடுத்து காதலர் கள் தனிமையில் இருக்கும் காட்சிகளைக் குறைப்பீர்கள் என்று நினைத்தோம்!’’ என்றேன். அதற்கு சென்சார் அதிகாரி, ‘‘படத்தில் திருப்புமுனையே அந்தக் காட்சிதான். இளம் வயதில் தவறு செய் தால் அதன் பின்விளைவு என்ன என் பதை உணர்த்துகிறது. அதனால்தான் அக் காட்சியை வெட்டவில்லை. எல்லோரும் இப்படத்தைப் பார்க்க வேண்டும் என் பதற்காக ‘யூ’ சான்று கொடுத்தோம்’’ என் றார். கதைக்கு சம்பந்தமில்லாமல் கவர்ச் சியாக, அசிங்கமாக வைத்தால்தான் சென்சாரில் கட் செய்வார்கள் என்பதை அன்று புரிந்துகொண்டோம்.
‘சினிமா எடுத்துப் பார்’ என்ற சவாலை ஏற்று பல சங்கடங்களுக்கு மத்தியில் படத்தை வெளியிட்டோம். தவறு செய்த பெண்ணை மன்னித்து வாழ வைத்ததை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். கிளை மாக்ஸை மாற்ற சொன்ன திருச்சி விநி யோகஸ்தரும் படத்தை பார்த்துவிட்டு ‘‘நீங்க ஜெயிச்சீட்டீங்க முத்துராமன் சார். உங்க கிளைமாக்ஸை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள்’’ என்றார்.
படத்தில் ‘சம்சாரம் என்பது வீணை’ என்ற பாடலை எழுதியிருந்த கண்ண தாசன் அவர்கள் படத்தை பார்த்துவிட்டு, படம் எனக்குப் பெரிய தாக்கத்தை கொடுக் கிறது. சுஜாதா கதாபாத்திரம் கண் முன் னேயே சுற்றி சுற்றி வருகிறது. வித்தி யாசமான படமாக எடுத்துவிட்டீர்கள்’’ என்று என்னையும் பஞ்சுவையும் பாராட்டி னார். தம்பிகளுக்கு அண்ணன் கொடுத்த ஆஸ்கர் விருதாக அதை எடுத்துக்கொண் டோம். பட்ட கஷ்டமெல்லாம் படத்தின் வெற்றியில் கரைந்து போனது. இளங்கோ கலை மன்றம் ‘மயங்குகிறாள் ஒரு மாது’ படத்தின் வெற்றிக்கு விழா எடுத்தது. கவியரசு கண்ணதாசன் அவர்கள் விருது கொடுத்தார். புதியவர்களை ஊக்குவித்த இளங்கோ கலை மன்றத் துக்கும், இளங்கோ வீரப்பனுக்கும் எங்கள் நன்றி என்றும் உரியது.
காவிய கவிஞர் வாலி என் பல படங்களுக்கு பாடல்கள் எழுதியிருக் கிறார். இரண்டு படங்களுக்கு வசனமும் எழுதியிருக்கிறார். அதில் ஒரு படம் ‘பெண்ணைச் சொல்லி குற்றமில்லை’ மணியனின் கதை. திரைக்கதை, வசனம், பாடல்கலை வாலி எழுதியிருந்தார்.
கணவன், மனைவியை கவனிக் காமல் இருந்தால் மனைவி தவறான வழிகளில் போக வாய்ப்பு இருக்கிறது என்பதை எடுத்துச் சொன்ன படம். கதாபாத்திரத்தின் விரகதாபத்தை அள வுக்கு அதிகமாக சொன்னதால் படத்தை பெண்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. எங் களுக்கு வருத்தம். அதைவிட வருத்தம் அந்தப் படத்தின் தயாரிப்பாளர் என் எல்லா படங்களுக்கும் எடிட்டரான ஆர்.விட்டல்.
எழுத்தாளர் பிலகிரி படம் எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, குடும்பப் பின்னணி கதையுடன் வந்து என்னைச் சந்தித்தார். அந்தக் கதைதான் ‘ஒரு கொடி யில் இரு மலர்கள்’. அந்தப் படத்துக்கு வசனம் வாலி சார்தான். அந்தப் படத்தின் வசனம் கவிதையாகவே இருந்ததைப் பலரும் பாராட்டினார்கள்.
இன்னொரு முக்கியமான விஷயத் தையும் இங்கே பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். ‘பெண்ணைச் சொல்லி குற்றமில்லை’ படத்தின் வேலைகள் சேலம் மாடர்ன் தியேட்டர் ஸ்டுடியோவில் நடந்துகொண்டிருந்தன. அதற்கு வசனம் எழுதுவதற்காக வாலி சார் சேலத்துக்கு வந்திருந்தார். என் குழுவினர் என்னிடம் வந்து ‘வாலி சார் இரவு நேரத்தில் அள வுக்கு அதிகமாக மது அருந்துகிறார்’’ என்றார்கள்.
அடுத்த நாள் அவரை சந்தித்து, அதைப் பற்றி கேட்டேன். ‘‘யார் சொன்னது, யார் சொன்னது?’’ என்று வியப்பாக கேட்டார். ‘‘நாம் இருப் பது சினிமா துறை. இங்கே ரகசியம் எல்லாம் எட்டுத் திக்குக்கும் தெரிந்து விடும்’’ என்று கூறினேன். நான் ‘கனிமுத்து பாப்பா’ படத்தை இயக்கும் நேரத்தில் வி.சி.குகநாதனின் அலுவலகத்துக்கு எதிர்வீடுதான் வாலி வீடு. மாலை நேரத்தில் வாலி சாரோடு பேசிவிட்டு, அவர் மனைவி ரமண திலகம் கொடுக் கும் காபியை குடித்துவிட்டு, அவர் மகன் பாலாஜியோடு விளையாடுவேன். இதனால் நான் வாலி சார் குடும்பத்தில் ஒருவனாகியிருந்தேன். அந்த உரிமை யோடு அவரிடம் பேசினேன்.
‘‘உங்கள் குடும்பத்தில் ஒருவ னாக சொல்கிறேன். நீங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த உயரத்தை அடைந் தீர்கள். உங்கள் கவிதைகளையும், பாடல் களையும் மக்கள் கொண்டாடுகிறார்கள். மக்கள் விழிப்புணர்வு அடையும் அள வுக்கு உங்கள் எழுத்துக்கள் இருக்கின் றன. நீங்கள் குடிக்கு அடிமையாக லாமா? உங்கள் மனைவி ரமண தில கத்தையும், மகன் பாலாஜியையும் நினைத்துப் பாருங்கள்’’ என்று மன அழுத்ததுடன் எடுத்துச் சொன்னேன்.
சில விநாடிகள் யோசித்தவர், ‘‘இனிமேல் எந்தச் சூழலிலும் குடிக்க மாட்டேன்’’ என்று என் கையில் அடித்து சத்தியம் செய்தார். அன்று முதல் வாலி குடிப்பதை விட்டுவிட்டார். இது எனக்குக் கிடைத்த வெற்றி இல்லை. வாலியின் மன உறுதிக்குக் கிடைத்த வெற்றி.
எம்.ஜி.ஆர் அவர்கள் ஒருமுறை வாலியைப் பார்த்தபோது, ‘‘என்னய்யா, நாங்க எவ்வளவோ சொல்லியும் குடிப்பதை நிறுத்தாத நீ, இப்போ எப்படி நிறுத்தினே?’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு அவர் நடந்ததை எடுத்து கூறி யிருக்கிறார். வாலி சார் கைகளில் இரண்டு சாக்லேட்டை கொடுத்த எம்.ஜி.ஆர் ‘ஒன்று உனக்கு. இன்னொன்று முத்துராமனுக்கு!’’ என் றாராம். இந்த சம்பவத்தை துக்ளக் பத்திரிகையில் வாலியே எழுதியிருந்தார்.
இன்றைக்கு உங்களோடு இதைப் பகிர்ந்துகொள்ள காரணம், தற்போது குடிப் பழக்கம் குடும்பத் தலைவர்களை, தொழிலாளர்களை, மாணவர்களை சீரழித்து வருகிறது. அதனால் தமிழ்க் குடும்பங்கள் படும் கஷ்டம் சொல்லி மாளாது. அடுத்த தலைமுறை முழுவதும் குடிக்கு அடிமையான தலைமுறையாக ஆகிவிடுமோ என்கிற பயம் வளர்ந்து வருகிறது. இப்படி ஒரு வருத்தமான மனநிலையில் என் கண்களில் கண்ணீர் வந்து, அந்த துக்கம் எழுதவிடாமல் தடுக்கிறது. அதனால் தொடர்ந்து உங்களோடு பகிர்ந்துகொள்ள முடியவில்லை. அடுத்த வாரம் சந்திப்போம்.
- இன்னும் படம் பார்ப்போம்…
Courtesy: Tamil Hindu
சூழல் ஒன்று பார்வை இரண்டு: முழுக்க நனைஞ்ச பிறகு முக்காடு எதற்கு?
ஐம்பெரும் இயற்கை சக்திகளாக நாம் போற்றுவது நிலம், நீர், காற்று, தீ மற்றும் ஆகாயம். இவற்றின் பௌதிக இயல்புகளையும் தாண்டி நமது செயல்கள் மற்றும் உணர்வுகளுடன் ஒப்பிட்டுப் பாடப்படுவது கவி மரபு. இந்த மரபை அடியொற்றி இரண்டு மழைப் பாடல்களைப் பார்ப்போம்.
இந்திப் பாட்டு.
படம்: ஷோர் (சத்தம்/ இரைச்சல்),
பாடலாசிரியர்: இந்திரஜித் சிங் துளசி,
பாடியவர்: முகேஷ், இசை: லட்சுமிகாந்த் பியாரிலால்:
பாடல்:
பானிரே பானி தேரா ரங்க் கைஸா,
ஜிஸ்மே மிலா தோ லகே உஸ் ஜைஸ்ஸா
பானிரே பானிரே ஓ பானிரே பானிரே பானிரே
பொருள்:
தண்ணீரே ஓ தண்ணீரே உன் வண்ணம் எப்படி
எதில் கலந்தாயோ அதுவாக நீ மாறுவாய் அப்படி
தண்ணீரே ஓ தண்ணீரே
இப்படியும் உள்ளது இவ்வுலகின் சிலரது வாழ்க்கை
உலர்ந்ததை உண்டு குளிர்ந்ததைக் குடிக்கும் செய்கை
நிறையும் உன் ஒரு சொட்டு நீரில் இந்நில மக்களின்
குறைகள் பலவும் அவர் கொள்வர் அமைதி - ஓ மழையே
(தண்ணீரே ஓ தண்ணீரே)
பசித்த மானிடனின் பசியும் அவன் தாகமும் போல
கங்கையில் விழும்போது நீ புனித கங்கை நீராகிறாய்
தங்கும் மேகத்துடன் கலந்து பொங்கு மழையாகிறாய்
(ஒருபுறம் மழையை ரசிக்கும்)
தீயில் விரிந்து தீயை அணிந்து தடுமாறும் இளமை
(மறுபுறம் அதே மழையினால்)
சாயும் மதில்கள் சரியும் சுவர்கள் ஓ மழையே
நீ வாழ்வை மாற்றுவாய் வீழும் சுமையாய் அங்கே
தண்ணீரே ஓ தண்ணீரே உன் வண்ணம் எப்படி தாம்
எண்ணியபடி இவ்வுலகைப் படைத்த இறைவன் அப்படி
ஒவ்வொரு காட்சியும் ஒளிபெறும் வண்ணம்
உள்ளது மழையே உன் கைவண்ணம்
(நீ நீராய்) கொட்டும்போது கிட்டாத இவ்வெழில் வண்ணம்
மொட்டுகள் மலர்ந்து வனங்கள் முகிழ்கும் செய்தி
மெட்டுகள் வந்து நமக்கு மெலிதாய் உணர்த்தும்
தண்ணீரே ஓ தண்ணீரே உன் வண்ணம் எப்படி - இந்த
மண்ணில் வாழ்வோம் ஆண்டுகள் நூறு என நம்பும்படி
மழையை இரு விதமான கோணங்களில் மனோஜ்குமார் காண்பதாக அமைந்த இப்பாடல் இன்றும் மழைக்காலங்களில் மும்பையில் ஒலிக்கப்படுகிறது. மிக அழுத்தமான கதையம்சம், முகேஷின் உருக்கமான குரல், தத்துவார்த்தமான வரிகள் ஆகியவற்றுடன் கூடிய பல பாடல்கள் நிறைந்த ஷோர் என்ற இந்தத் திரைப்படம் மனோஜ் குமாரை ஒரு லட்சிய நடிகராக ஆக்கியதில் பெரும் பங்கு வகித்தது.
சமூகத்தின் அவலங்களை எளிய வார்த்தைகள் மூலம் எல்லோரும் புரிந்துகொள்ளும் வண்ணம் பாடல் எழுதியவர் மருதகாசி. மழையைப் பற்றி அவரின் அழகான உவமேயங்கள் கொண்ட இந்த மழைப் பாடலைப் பாடி நடித்த வசீகரமான குரல் வளம் கொண்டவர் டி.ஆர். மகாலிங்கம்.
படம்: ஆடவந்த தெய்வம், பாடலாசிரியர்: ஏ. மருதகாசி,
பாடியவர்கள்: டி.ஆர். மகாலிங்கம், பி.சுசீலா, இசை: கே.வி. மகாதேவன்
பாடல்:
சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே- மழை
கொட்டு கொட்டுனு கொட்டுது பாரு அங்கே
கஷ்டப்படும் ஏழை சிந்தும் நெற்றி வேர்வை போலே-அவன்
கஞ்சிக்காகக் கலங்கிவிடும் கண்ணீர் துளி போலே
சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே
முட்டா பயலே மூளை இருக்கா என்று ஏழை மேலே
துட்டு படைச்ச சீமான் அள்ளி கொட்டுற வார்த்தை போலே
கொட்டு கொட்டுனு கொட்டுது பாரு அங்கே
முழுக்க முழுக்க நனைஞ்ச பிறகு முக்காடு எதற்கு
உன் முக்காட்டை நீக்கு தலை ஈரத்தைப் போக்கு
இருக்க இடம் கொடுத்தா என்னையே நீ தாக்குறே
குறுக்கு மூளை பாயுறே கோணல் புத்தியை காட்டுறே
பழுக்கப் பழுக்க உலையில் காய்ச்சும் இரும்பு போலவே
முகம் சிவக்குது இப்போ அது சிரிப்பது எப்போ
குளிச்சு முழுகிவிட்டு குளிர்ச்சியாய் ஓடி வா
செவந்து போன முகத்தில் சிரிப்பை நீயும் காணலாம்
Mr CK you can enjoy and get more details about Soundarya from Neyveliar
https://youtu.be/RTPaiGmQ8k8
One more melody from Karna.
https://youtu.be/HuPIrY3fyso
நேற்று பெளர்ணமி. முழு நிலவு. பால் வெள்ளை? ம்ஹூம்.. கொஞ்சம் சிறிதாக ஒருலிட்டர் பாலில் ஒரு இத்தினியூண்டு மஞ்சள் பொடி போடடுக் கலக்கினால் என்ன நிறமோ அது போன்ற வெளிர் மஞ்சள் நிறம்..ஆனால் ரின்போட்டு வெளுத்தாற்போல் பளீர் எனச் சிரிப்பு..
அதனுடைய வடிவம் எப்படி..
வட்டம்..என சுலபமாய்ச் சிறு குழந்தை சொல்லும்.. சரி..அந்த வட்ட முகம் எத்தனை பேருக்கு உண்டு..
எஸ் செளந்தர்யா தான்..
மெளன விழிகளால் மென்மைக் கவிசொல்லும்
செளந்தர்யம் கொண்டவர் தான்
பொன்னுமணியில் அறிமுகமாகி தமிழில் சோபிக்காமல் தெலுங்கு சென்று கிளாமரித்துப் பின் தமிழ் மறுபடி தெலுகு பின் அரசியல் எனப் போய்க் கொண்டிருந்தவர். வாழ்க்கையில் எதிர்பாரத திருப்பமாக விபத்தில் மரித்தும் விட்டார்.. வெகு சின்ன வயது..ம்ம்
போதுமா Mr. s.v.d sir :) நெய்வேலியார் வந்து அவர் பங்குக்குச் சுத்திச் சுத்தி வந்தாரு என அவர் பற்றிச் சொல்லட்டும்.. :)
'மரியாதை' குறைந்தாலும் மனதில் நிறைந்த மதுர கானங்கள் !
வாடா வாடி போடா போடி வாங்க போங்க வாங்கடா போங்கடா ....டா....டி.... பாடல்கள்!!
Quote:
மரியாதை என்பது மனதில் தோன்றுவது நம்மை விட வயதானவர்களைக் காணும் போதும் படிப்பிலும் பண்பிலும் பதவியிலும் உயர்ந்தவர்களுடன் உரையாட நேரும் போதும் ...இயல்பானதே!!
இந்த தகுதிகள் எல்லாமே இருந்தாலும் மரியாதைக்குரிய மனிதரும் மயங்குவது தன்னை காதலி (மனைவி அல்ல மக்களே!) மரியாதைக் குறைவாக வாடா போடா என்றழைக்கும் போதும் மழலைகள் வாப்பா போப்பா வா தாத்தா போ பாட்டி என்றெல்லாம் மரியாதையின்றி விளிக்கும்போதுமே !!
நண்பர்களுக்குள் எத்தனை வயதானாலும் வாடா போடா வாடி போடி இயல்பே !!
நாட்டிய பேரொளியின் மழலை செல்ல தாங்கல் !!
https://www.youtube.com/watch?v=uPdzO1jxXkM
நளின நடன நிலவு ரவிச்சந்திரனின் சூப்பர் டான்சேதான் ....... நெளிவுசுளிவு நடன நட்சத்திரம் நாகேஷுடன்!
https://www.youtube.com/watch?v=dnG9krdsYxM
நடிகர்திலகத்தின் தன்னம்பிக்கை .....
https://www.youtube.com/watch?v=gqIX9OQHxUU
மரியாதை பற்றி முன்பு திருப்பாவை - பூமாலை தொடுத்த பாமாலை - விளக்கவுரை எழுத முயற்சித்தபோது - எழுதியது நினைவுக்கு வருகிறது சி.செ.
//
மரியாதை என்பது என்ன?
ஒருவன் தான் செய்த செயல்கள் மூலம் நான்கு பேருக்கு நல்லது செய்தானென்றால் அவனுக்கு அனைவரும் மரியாதை காட்டுவார்கள் – அது அவனது குணத்திற்கு. மேற்பதவியில் இருப்பவர்க்கு கீழே உள்ளவர்கள் மரியாதை காட்டுவார்கள் – அது அவர்களின் பதவிக்கு.
சரி மரியாதையை எப்படிக் காட்ட வேண்டும்?
குழந்தை தந்தையிடம், ‘அப்பா ,நீ எங்க போயிட்டு வந்தே?” என ஒருமையில் கேட்கிறது. குழந்தைக்கு மரியாதை தெரியவில்லை என அர்த்தமில்லை. அன்பின் மிகுதியால் ஒருமையில் அழைக்கிறது. வளர்ந்தவுடன் அதே குழந்தை மரியாதையாகத் தந்தையிடம், ‘ அப்பா, நீங்கள் எனக்காக என்ன செய்து கிழித்தீர்கள்?” என்று கேட்கும்!
எனது சகோதரி நாய் ஒன்று வளர்த்தார்கள். அது அழகாய் வேளாவேளைக்கு தயிர்சாதம், தொட்டுக் கொள்ள எலுமிச்சங்காய் ஊறுகாய், இட்லி, தோசை எல்லாம் சரியான நேரத்தில் சாப்பிட்டுவிடும். சகோதரி உணவருந்தும் போது வாயில் உமிழ் நீர் பெருக, அவர் சாப்பிடும் சாம்பார் சாதத்தையே பார்க்கும். சகோதரிக்குக் கோபம் வரும்., “ச்சீ, அந்தப் பக்கம் போ எருமை மாடே!” என்பார்கள். அது பரிதாபமாய் வைப்புத் தொகை இழந்த வேட்பாளர் போல முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு ஒதுங்கிவிடும். அவர் உண்டு முடித்ததும் எதிரே பாவமாய்ப்போய் நிற்கும். சகோதரிக்குச் சிரிப்பு வரும், “என் கன்னுக்குட்டியைத் திட்டிட்டேனாடா?” என்று அதைக் கொஞ்சுவார். நாய் எருமை மாடானதும் கன்றுக்குட்டியானதும் அன்பின் மிகுதியால் தான்!
*இருபது வருடங்களுக்கு முன்னால் பெயர் பெற்ற அம்மையார் ஒருவர் தலை நகரிலிருந்து மதுரை வந்திருந்தார்கள். சாலையில் இருபக்கமும் ஒரே கூட்டம். ஒருவரிடம் விசாரித்தேன், “யாருங்க வராங்க?” அவர், “உஷ், அந்த அம்மா வருது!” என்றார். இங்கு மரியாதை காரணமாக உயர் திணை அஃறிணையாகி விட்டது!
இன்றையபாடலில் கோபியர்கள் கண்ணனை, தவறிப் போய் உன்னை ஏக வசனத்தில் அழைத்திருந்தாலும் கோபங்கொள்ளாதே – எனச் சொல்கிறார்கள்.// :)
வாடியம்மா வாடி வண்டாட்டம் வாடி
வாடா வாடா பையா என் வாசம் தூண்டிப் போயா ?
ராஜா வாடா சிங்கக் குட்டி
வாடி ராசாத்தி..
கிட்ட வாடி ஆசை புள்ள
எனில் இங்கு போடப் போவது
https://youtu.be/45sjbjyko5I
ஹச்சோ இது வேற வாடா வோ :)
சரி.. ரியல் வாடியம்மா சின்னப் பொண்ணு கேட்கலாம் என்றால் முதல் பாட்டு கேட்டு இரண்டாவது பாட் கேட்கவேண்டும்..ஜெய்ஷங்கர் எல்.விஜயலஷ்மி..
https://youtu.be/O9Er6cW6vBo
vaNakkam from Los Angeles,CA. Will post beginning Sunday! :lol:
வெரி குட் சின்னா! இதுவரை போடவில்லை என்று நினைக்கிறேன். 'உயிர் மேல் ஆசை' நிறைய இருக்கிறது. நன்றி சிஷ்யரே!
அடா அடி போடா போடி பாடல் போடுமய்யா என்றால் வாடா மலரே பாட்டை அந்த லிஸ்ட்டில் சேர்த்து அடாவடி பண்ணி விட்டீரே!:) நல்ல வேளை. கடா பாட்டு போடாமல் தப்பிக வைத்தீரே! அதுமட்டும் சந்தோசம்.:)
Dear RajRaj Sir
Our fellow hubber SUBRAMANIAM RAMAJAYAM is now at Los Angeles only. If chance occurs, you can meet him there. I don't have his US mobile no. However u can contact him through pm and notify the pm here so he will come to know.
We were waiting in the airport for the connecting flight. I thought I should let all of you know that I would be back soon! :)
Thanks for the information. We have visited all tourist attractions in LA area. We might visit again when our grand children grow up. :)
Vasu: It was a family get together in Hawaii. My eldest son likes the place where we stayed( a rented house). He wanted the entire family to be there! :) A bit expensive. We went along for the sake of our sons,daughter in law and grand children! It was fun. :) Hope the rain stops and the floods recede soon.
vanakkam
நினைத்துப் பார்க்கிறேன்
http://www.moremp3.in/wp-content/upl...Mahadevan1.jpg
1960களில் ஒரு பக்கம் மெல்லிசை மன்னர்கள் அதகளம் பண்ணிக் கொண்டிருக்க, தன்னிகரில்லா இசைச் சக்கரவர்த்தியாக விளங்கிய திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன், இன்னொரு பக்கம் தன் ராஜ்ஜியத்தை நிலைநிறுத்திக்கொண்டேயிருந்தார். பல படங்களின் பெயர்கள் இன்றும் மக்கள் மத்தியில் நிலைகொண்டிருப்பதற்குக் காரணமே, கே.வி.எம். அவர்களின் பாடல்களால் தான். அப்படி ஒரு படம் தான் 1965ல் வெளிவந்த காக்கும் கரங்கள். சிவகுமார் அறிமுகமான படம் என்பதை ஓர் அடையாளமாக்க் கொண்டாலும், பாடல்களே இப்படத்தை இன்று வரை மக்களிடம் நினைவூட்டிக்கொண்டிருக்கின்றன. இசையரசியின் குரலில் இப்படத்தில் ஒலித்த பாடல்களனைத்துமே நெஞ்சை விட்டு அகலாதவை. அதே போல பாடகர் திலகம் இசையரசி பாடிய அல்லித்தண்டு காலெடுத்து மற்றும் ஞாயிறு என்பது கண்ணாக - இந்த இரு டூயட் பாடல்கள் இப்படத் மிகப் பெரும் அளவில் மக்களிடம் கொண்டு சேர்த்தன, சேர்க்கின்றன, சேர்க்கும்.
முதன்முறை கேட்டதிலிருந்து பல நாட்களுக்கு ஞாயிறு என்பது கண்ணாக பாடல் நடிகர் திலகம் நடித்தது என்றே எனக்குள் ஓர் எண்ணம் இருந்தது. பொதுவாக பொதுக்கூட்டம், கல்யாணங்கள் இந்த மாதிரி நிகழ்வுகளில் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டால் மைக் செட்காரரிடம் நட்பாகப் பழகி அந்த இசைத்தட்டை வாங்கிப் பார்ப்பதில் தனி பரவசம் ஏற்படும், அந்தப் பழக்கத்தில் தான் இந்தப்பாட்டின் இசைத்தட்டை ஒரு நிகழ்ச்சியில் வாங்கிப் பார்த்தபோது அது எஸ்.எஸ்.ஆர். என அந்த மைக் செட் காரர் சொன்னார். அவ்வளவு தான் புஸ்ஸென்று ஆகி விட்டது.
50 ஆண்டுகளாகியும் இன்னும் அந்த ஏக்கம் தீரவில்லை. மீண்டும் நடிகர் திலகம் பிறந்து வந்தால் நிச்சயமாக இந்தப் பாடலுக்கு நீங்கள் நடித்தே ஆக வேண்டும் என வேண்டுகோள் விடுப்பேன்.
https://www.youtube.com/watch?v=yGppVFnr-Vc
பாடலின் துவக்கத்தில் வரும் ஹம்மிங்கிற்கு...
நம் மனதில் தோன்றும் கதாநாயகி ...
வேறு யார்.. நம்ம...
https://i.ytimg.com/vi/zjAOJ9xOP-w/hqdefault.jpg
அண்ணி தேவிகா தான்.
அதே கண்ணாடி அதே உடையுடன் நடிகர் திலகம்... விஜயகுமாரியின் காஸ்ட்யூமில் தேவிகா..
ஆனால்...
தலைவர் எப்படி செய்திருப்பார்...
தேவிகா அந்தப் பாறை மேல் அமர்ந்திருப்பார்.. தலைவர் மெல்ல அருகில் வருவார். அப்படியே அமர்ந்திருக்கும் தேவிகாவை முதுகு வழியாக வளைத்து மெல்ல எழுப்புவார்.
மெல்ல முகவாய்க்கட்டையில் கைவைத்து முகத்தை சற்றே மேலே தூக்கியவாறு கண்களைப் பார்ப்பார். இப்போது காமிரா ஒரு விநாடி க்ளோஸப்பில் வரும்.
பல்லவி துவங்கும் போது இரு கைகளையும் தேவிகாவின் இரு தோள்களில் போட்டு பாடத்துவங்குவார். நீரோடும் வைகையிலே சௌகார் ஜானகியை நினைவுறுத்திக் கொள்ளுங்கள்..
ஞாயிறு என்பது கண்ணாக திங்கள் என்பது பெண்ணாக எனப் பாடும் போது தேவிகா முகத்தில் நாணம் தோன்ற மெல்ல நழுவி நடக்கத் தொடங்குவார். இந்த இடத்தைப் பொறுத்த வரையில் விஜயகுமாரியின் உடல் மொழி சிறப்பு. தலைவர் கூடவே மெல்ல இரு ஸ்டெப் வைத்து, சேர்ந்தே நடந்த்து அழகாக என பல்லவியை முடிப்பார்...
இதன் பிறகு அனுபல்லவி முடிய எஸ்.எஸ்.ஆருக்கு பதில் நடிகர் திலகத்தை நினைவுறுத்திக் கொள்ளலாம்.
நேற்றைய பொழுது கண்ணோடு எனச் சொல்லும் போது, தலைவரின் கண்கள் சற்றே மேல் நோக்கிப் பார்த்து கீழிறங்கும்.. ஆஹா.. இது இந்தப் பாட்டில் மிஸ்ஸாகிறதே...
நிழலாய் நடப்பேன் பின்னோடு வரியின் போது தலைவர் கூடவே நடத்தி வருவார். ஒரு ஸ்டெப் மற்றுமே முன்னால் செல்வார். தேவிகாவோ அவரை ஒட்டினாற்போல் பின் தொடர்வார்.
இதன் பின் வரும் பிஜிஎம் மில் தலைவரின் தனி நடை வரும். ஆனால் அது வேகமாக இருக்காது. மெஜஸ்டிக்காக மெதுவாக நடப்பார். தொடர்ந்து சரணம், ஊருக்குத் துணையாய் நானிருக்க.. வரியின் போது தான் மருத்துவர் என்பதை சித்தரிக்கும் விதமாக உடல் மொழி தருவார். எனக்கொரு துணையை எதிர்பார்த்தேன் என்ற வரியின் போது ஒரு புன்னகை புரிவார்.. இதழ்கள் முறுவலிக்க, சுட்டுவிரல் தேவிகாவின் இதயத்தை தொட்டுக் காட்டும். உள்ளத்தின் கைகளில் விளக்கேற்ற மைவிழிக் கிண்ணத்தில் நெய் வார்த்தேன்... இந்த வரிக்கு தேவிகாவும் தலவரும் டைட் க்ளோஸப்பில் ஒருவரை யொருவர் பார்த்தபடி ஃப்ரேம் கம்போஸிங் இருக்கும். திரை முழுதும் இந்தக் காட்சி பார்க்க ரம்மியமாக இருக்கும்..
இப்போது எஸ்.எஸ்.ஆர். இரு கைகளையும் நீட்டும் அதே உடல் மொழியைத் தலைவரும் உபயோகிக்கலாம். முகத்தை ஒரு பக்கம் சாய்த்தவாறு தேவிகவைப் பார்த்து சிரித்தவாறே தன் இரு கரங்களாலும் அவளை வளைத்து மார்போடு அணைத்துக் கொண்டு பாடுவார்.
இப்போது தலைவராயிருந்தால் பிஜிஎம்மில் இருவரும் சற்று தூரம் நடந்து வருவார்கள். முன்னொரு பிறவி எடுத்திருந்தேன் என்ற வரிக்கு கையை நன்கு மேலே உயர்த்தி அப்படியே அந்தக் கையை தேவிகாவின் மேல் கொண்டு வந்து வைத்து உன்னிடம் மனதைக் கொடுத்திருந்தேன் எனப் பாடுவார். ஆனால் சிரிக்க மாட்டார். கண்களில் ஒரு விதமான ஏக்கம் வரும். பெண்ணொரு பிறவி எடுக்க வந்தேன், பேசியபடியே கொடுக்க வந்தேன் என்ற அடுத்த வரியை தேவிகா பாடுவதாக இருந்தால், சற்றே நெருக்கமாக மீண்டும் காமிரா ஜூம் செய்து கொண்டே போய் பேசிய படியே கொடுக்க வந்தேன் என்ற வரியில் கொடுக்க வந்தேன் என்ற வரியின் போது முகம் நாணி கைகள் மூடிக்கொண்டு விடும்.
இப்போது பல்லவி தொடரும் போது தலைவராக இருந்தால் முகத்தில் ஓர் இனம் புரியாத உணர்வைக் கொண்டு வந்து தேவிகாவைப் பார்க்க, அவரும் தலைவரை அதே போன்ற உணர்வுடன் பார்க்க, காதல் உணர்வு அந்தக் காட்சியைப் பார்ப்பவர்களுக்கும் அப்படியே தொற்றிக்கொண்டு மூழ்கி விடுவார்கள்.
அப்படியே ஒருவரை ஒருவர் பார்த்தவாறே மெய்மறந்து கண்களை மூடி சாய்ந்து அமர, காமிரா ஜூம் அவுட் ஆகி அப்படியே டிசால்வ் ஆகி விடும்.
.....
ஹ்ம்.. இவ்வளவு அருமையான பாடல் தலைவருக்கு வாய்த்திருந்தால் நான் இப்படித்தான் எடுத்திருப்பேன்..
இந்தப் பாடலில் தலைவர் இருந்திருந்தால் இப்படித்தான் இருந்திருக்குமோ என அடிக்கடி
நினைத்துப் பார்க்கிறேன்
என்றாலும் ஒரு ஆறுதலுக்காக இதோ தலைவர் தேவிகா சூப்பர் ஸ்டில்...
https://i.ytimg.com/vi/xDev1jcbRN8/maxresdefault.jpg
Think NT in this song. What a composition. a fantastic melody from Poovum Pottum.
https://youtu.be/AH9Ga0rZpio
Courtesy:Tamil Hindu
காற்றில் கலந்த இசை 32 - சுகானுபவத்தின் ஒரு துளி!
ஹிட் ஆன படங்களின் பாடல்களைத் தவிர, பாடல்களுக்காகவென்றே நினைவுகூரப்படும் எண்ணற்ற படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் இளையராஜா. 1983-ல் சிறுமுகை ரவியின் இயக்கத்தில் பிரபு, அம்பிகா நடித்த ‘ராகங்கள் மாறுவதில்லை’ படமும் அதில் ஒன்று.
சில மாதங்களுக்கு முன்னர் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் எஸ்.பி.பி. முன்னிலையில் ஸ்பூர்த்தி எனும் சிறுமி பாடிய ‘விழிகள் மீனோ’ பாடலைக் கேட்ட 80-களின் ரசிகர்கள் பூரித்து நின்றார்கள். இப்படிப்பட்ட பாடல்களைக் கேட்காமலேயே வளர்கிறோமே என்று இளைய தலைமுறையினர் வருத்தப்பட்டிருக்கவும் வாய்ப்பு உண்டு. கல்யாணி ராகத்தின் சாயலில் அமைந்த அந்தப் பாடல், காதலியை வர்ணித்துக் காதலன் பாடும் சாதாரண ‘சிச்சுவேஷ’னுக்காக இசைக்கப்பட்டதுதான். எனினும், அப்பாடல் தரும் இசைச் சுவை, சுகானுபவம், சஞ்சரிக்க வைக்கும் கற்பனை உலகம் விவரணைகளுக்கு அப்பாற்பட்டவை.
அழகை ரசிக்கும் மனதின் ஆலாபனையாக எஸ்.பி.பி.யின் ஹம்மிங்குடன் தொடங்கும் இப்பாடல் இசையமைப்பாளருக்கும் பாடகருக்கும் இடையிலான பரஸ்பரப் புரிதலுக்கு மிகச் சிறந்த உதாரணம். தபேலா, மிருதங்கம் தாள வாத்தியங்கள் அமைத்துத் தரும் நடைமேடையில் புல்லாங்குழல் நடைபயில, பாடல் தொடங்கும். முதல் நிரவல் இசையில் வீணையின் நடைபாதையில் குறுக்கிடும் இரண்டு வயலின்கள் நெகிழ்ந்துருகியபடி உரையாடிச் செல்ல, துள்ளும் மானின் குதூகலத்துடன் புல்லாங்குழலும், அதை வியக்கும் வீணையின் சிலிர்ப்பும் அவற்றைத் தொடர்ந்து ஒலிக்கும்.
இசைஞானமும் கற்பனையின் வீச்சும் எல்லையற்று விரிந்து கிடக்கும் இளையராஜாவின் படைப்பாற்றலின் சிறு துளி அது. இரண்டாவது நிரவல் இசையில் எஸ்.பி.பி.யின் ஜதிக்கும், மிருதங்கத்தின் தாளத்துக்கும் இடையில் சின்ன உரையாடல். உரையாடலுக்கு நடுவே மிருதங்கத்துடன் சேர்ந்து ஒலிக்கும் பேஸ் கிட்டார் தரும் பியூஷன் என்று அற்புதமான இசைத் தருணங்கள் நிறைந்த பாடல் இது.
எஸ்பிபி பாடிய ‘தென்றலோ தீயோ’ எனும் தனித்தன்மை மிக்க பாடலும் இப்படத்தில் உண்டு. இரவின் மவுனத்தைக் கலைத்தபடி மெலிதாக ஒலிக்கும் கிட்டாருடன் பாடல் தொடங்கும். நினைவுகள் தரும் வலியைத் தாளாமல் புலம்பும் மனதின் மெல்லிய விசும்பலாக ஒலிக்கும் ஹம்மிங்குடன் பாடத் தொடங்குவார் எஸ்.பி.பி. மென்மையான தபேலா தாளக்கட்டில் நகரும் பாடல் இது.
‘தீண்டியது நானோ’ எனும் வரியில் குற்றவுணர்வில் பரிதவிக்கும் மனதின் ஊடாட்டத்தைப் பிரதிபலித்திருப்பார் எஸ்.பி.பி. நிரவல் இசையில் கிட்டார், வயலின், புல்லாங்குழல் என்று டூயட் பாடல்களுப் பயன்படுத்தும் இசைக் கருவிகளை வைத்து மென்சோகத்தை இசைத்திருப்பார் இளையராஜா. இரண்டாவது சரணத்தில் ‘இளமைக் காலம்… உறவுக் கோலம்’ எனும் வரியில், அலைக்கழிக்கப்படும் மனதின் ஏக்கத்தை வெளிப்படுத்தியிருப்பார் எஸ்பிபி.
இப்படத்தின் மற்றொரு பாடலான ‘என் காதல் தேவி நீ என்னில் பாதி’ எனும் பாடலை உற்சாகத்தின் உச்சத்தில் நின்று எஸ்பிபி பாடியிருக்க வேண்டும். அத்தனை குதூகலமான பாடல் இது. உண்மையில் 80-களின் ‘ஈவ்டீஸிங் சிச்சுவேஷன்’ பாடல்களில் ஒன்றுதான் இது. எனினும், நிரவல் இசையின் இனிமை அந்த வகைப்பாட்டைத் தாண்டிப் பாடலைத் தூக்கி நிறுத்தும். எஸ்.பி.பி., ஷைலஜா பாடிய ‘நாளெல்லாம் நல்ல நாளே’ எனும் பாடலும் இப்படத்தில் உண்டு.
இப்படத்தின் மிக முக்கியமான பாடல் எஸ். ஜானகி பாடிய ‘வான் மீதிலே அதிகாலை ’. பல ஆண்டுகளுக்கு முன்னர், அதிகாலை நேரத்தில் வானொலியில் கேட்ட பாடல் இது. உறக்கத்துக்கும் விழிப்புக்கும் இடையிலான மங்கலான உலகில் ஒலித்த அந்தப் பாடல் நினைவடுக்கின் ஏதோ ஒரு மூலையில் படிந்து கிடந்தது. 2000-களில் இணையத்தின் வழியாக இந்தப் பாடல் மீண்டும் கேட்கக் கிடைத்தது. இளையராஜாவின் இசையில் தனக்குப் பிடித்த பாடல்களாக, கிட்டார் இசைக் கலைஞர் பிரசன்னா எழுதியிருந்த பட்டியலில் இப்பாடலைக் கண்டதும் மனம் அடைந்த ஒளி வெள்ளத்தை இன்றும் உணர முடிகிறது.
பாடலின் தொடக்கத்தில் ஒலிக்கும் ஜானகியின் ஹம்மிங், விடிகாலை வேளையில் நாணல்கள் அடர்ந்த ஓடைக் கரையில் பாடியபடி செல்லும் பெண்ணை மனதுக்குள் உருவகப்படுத்தும். பெண் குரல்களின் கோரஸுடன் சேர்ந்து ஒலிக்கும் ஜானகியின் ‘பப்பப்பா…’ எனும் ஹம்மிங் தரும் உணர்வு மிக நுட்பமானது. சோகத்தை மறைத்துக்கொண்டு பிறருக்காகப் பாடும்போதும், தன்னையும் மீறி வெளிப்படும் துயரத்தை அதில் அத்தனை அழகாகப் பிரதிபலித்திருப்பார் ஜானகி.
பாடலின் தாளம் மிக வித்தியாசமானது. அடித்துக்கொள்ளும் மனதின் பிரதிபலிப்பாகப் பாடலின் டிரம்ஸ் தாளத்தை வடிவமைத்திருப்பார் இளையராஜா. முகப்பு இசையிலோ நிரவல் இசையிலோ இந்தத் தாளம் ஒலிக்காது. ஜானகி பாடும்போது மட்டும் இந்தச் சிறப்புத் தாளத்தை ஒலிக்க விட்டிருப்பார். வாழ்வில் எதிர்கொள்ளும் சங்கடங்கள், அவை ஏற்படுத்தும் பாதிப்புகள், ஏமாற்றங்கள் என்று பல்வேறு தருணங்களின் தொகுப்பாக இப்பாடலின் நிரவல் இசையை உருவாக்கியிருப்பார் இளையராஜா.
குறிப்பாக, இரண்டாவது நிரவல் இசையில் பெண் குரல்களின் கோரஸுடன் இணைந்து ஒலிக்கும் எலெக்ட்ரிக் கிட்டார் மூலம், பூடகமான எத்தனையோ விஷயங்களைச் சிதறவிட்டிருப்பார். பல்லவியில் ‘பாவை எந்தன் நெஞ்சம்தான் பாடும்’ எனும் வரியை ஜானகி சரியாக உச்சரிக்காததுபோல தோன்றும். ஆனால், புலம்பிக்கொண்டிருக்கும் மனதின் மொழி வார்த்தைகளுக்குள் அடங்கக்கூடியதா என்ன?
Courtesy: Tamil HIndu
சினிமா ரசனை 26: தமிழில் ஒரு படம்கூட இல்லை!
தமிழ் சினிமாவின் முதல் படத்தில் இருந்து இன்றுவரை கவனித்தால், ஒரு விஷயம் பளிச்சென்று தெரிகிறது. அது பொழுதுபோக்கு. அன்றைய கீசக வதமாக இருந்தாலும் சரி, இப்போதைய வேதாளமாக இருந்தாலும் சரி, வணிகப் படங்களே பெரும்பாலும் வசூலில் வெற்றி அடைந்திருக்கின்றன. இவற்றில் பாடல்கள், நகைச்சுவை, செண்டிமெண்ட், சண்டைக்காட்சிகள் முதலியவற்றோடு, கதாநாயகனைக் கடவுள் போல சித்தரிக்கும் காட்சிகளும் உண்டு. அண்டை மாநிலங்களில் தரமான திரைப்படங்கள் வரும் அளவுகூடத் தமிழில் படங்கள் இல்லை என்பதையும் சென்ற சில வாரங்களில் மேலோட்டமாகப் பார்த்தோம். அப்படியென்றால், ஒரு கேள்வி எழுகிறது. இப்படிப்பட்ட முற்றிலும் ‘கமர்ஷியல்’ அம்சங்கள் கொண்ட படங்கள் வரவே கூடாதா? வந்தால் என்ன தவறு?
கமர்ஷியல் படங்களின் முகம்
கமர்ஷியல் படங்கள் அவசியம் வர வேண்டும் என்பதே என் கருத்தும். ஆனால், நடிகர்களைக் கடவுள் போல சித்தரித்து, அவர்களுக்காகவே காட்சிகள் எழுதி, ஒவ்வொரு காட்சியிலும் பஞ்ச் வசனங்கள், ரசிகர்களை நோக்கிய நாயகனின் வசனங்கள் முதலியவைகளை விட்டுவிட்டு, தரமான, சுவாரஸ்யமான திரைக்கதைகளை மனதில் வைத்துக்கொண்டு எடுக்கப்படும் ‘கமர்ஷியல்’ படங்களே என் விருப்பம். அப்படிப்பட்ட படங்கள்தான் திரைப்படம் பார்க்க வரும் ஆடியன்ஸை முழுமையாகத் திருப்திப்படுத்தும்.
மாறாக அந்த நட்சத்திரத்தை மட்டுமே மையமாக வைத்து, அவருக்கென்றே காட்சிகள் எழுதி ஒரு படம் எடுத்தால், முதலில் சில நாட்கள் ரசிகர்களின் ஆரவாரத்தால் அரங்கங்கள் அதிர்ந்தாலும், சரக்கு இல்லாததால் படம் எளிதில் மறக்கப்பட்டுவிடும். யோசித்துப் பாருங்கள். இப்படிப்பட்ட படங்கள் ஆண்டுதோறும் வந்துகொண்டுதான் இருக்கின்றன. அவற்றில் எத்தனை படங்கள் நம் நினைவில் இருக்கின்றன?
இப்படிப்பட்ட படங்கள் எடுக்கப்படுவதற்கான மையநோக்கமாக, ‘ரசிகர்களின் விருப்பம்’ என்ற விஷயம் இயக்குநர்களாலும் தயாரிப்பாளர்களாலும் முன்நிறுத்தப்படுகிறது. அது போலவே பெரும்பாலான ரசிகர்களின் விருப்பமும், ‘திரைப்படம் பார்த்தால் பொழுது போக வேண்டும்’ என்பதாகவே இருப்பதும் தெரிகிறது. அதில் தவறும் இல்லைதான். என்றாலும், இந்தியாவிலேயே நாம் ஏற்கெனவே முந்தைய அத்தியாயங்களில் பார்த்திருக்கும் சில மாநிலங்களில் மட்டும் தொடர்ந்து தரமான படங்கள் எப்படி உற்பத்தி செய்யப்படுகின்றன? அங்கே மட்டும் ரசிகர்கள் பொழுதுபோக்குக்காகத் திரையரங்கு வருவதில்லையா?
எப்படிச் சாத்தியமானது?
யோசித்துப் பார்த்தால், மேற்கு வங்கம், கேரளம், கர்நாடகம் முதலிய மாநிலங்களில் ஆரம்ப காலம் தொட்டே மக்களின் மத்தியில் நல்ல ரசனை இருந்துவருகிறது என்பது புரிகிறது. இது எப்படிச் சாத்தியமென்றால், வணிகம் மற்றும் கலைக்கான வேறுபாட்டை நன்றாக அறிந்துகொண்டதன் மூலம் சாத்தியமாகியிருக்கிறது. அரசியல்வாதிகளும் நடிகர்களும் கடவுளர்க்கு நிகராகக் கருதப்படும் இடமாகத் தமிழகம் தொடர்கிறது. கேரளத்திலோ மேற்கு வங்கத்திலோ அரசியல்வாதிகள் இப்படிக் கருதப்படுவதில்லை.
நடிகர்களுக்கும் கடவுளுக்கு இருப்பதுபோன்ற ரசிகர் பட்டாளம் இல்லை. அங்கே மக்களுக்குத் தெளிவான புரிதல் உண்டு. இந்தப் புரிதல் அவர்களுக்கு மட்டும் எப்படி வந்தது என்பதை யோசித்தால், அந்த மாநிலங்களில் தரமான ரசனை சிறுவயதிலிருந்தே அறிமுகப்படுத்தப்பட்டுவருகிறது என்பது புரியும். இலக்கியத்துக்கே அங்கே முதலிடம். இதனாலேயே நல்ல திரைப்படங்கள் அங்கே இயல்பாகவே வரவேற்கப்பட்டுவருகின்றன. இதனால்தான் மேற்கு வங்கம் இன்று தரமான திரைப்படங்களுக்காக இந்தியாவில் முதலிடம் பெறுகிறது.
அப்படியே தமிழகத்தைக் கவனித்தால், இங்கே இலக்கியத்துக்கு என்ன இடம்? இலக்கியப் புத்தகங்கள் சில நூறு பிரதிகள் விற்றாலே அதிகம். ஜனரஞ்சகப் புத்தகங்களே இங்கே அதிகம் விற்கின்றன. சிறுவயது முதலே இங்கே ஜனரஞ்சகத்துக்கே முதலிடம். இதனால்தான் நடிகர்களையும் அரசியல்வாதிகளையும் இங்கே கடவுளைக் கண்டதுபோலக் காண வருகின்றனர்.
பொழுதுபோக்கு மட்டுமே அல்ல
திரைப்படங்கள் மூலம் நிகழ்த்தக்கூடிய சமூக மாற்றங்களைப் பற்றி இங்கே மிகச் சிலருக்கே தெரிகிறது. திரைப்படங்களைக் காணும் பலரும் இன்னும் அவை பொழுதுபோக்குக்காகவே எடுக்கப்படுகின்றன என்றே கருதி வளர்கிறோம்.
இந்த மனநிலை சமுதாயத்தில் அடித்தட்டு முதல் மேல்தட்டு வரை அனைவருக்குமே இருக்கிறது என்பதும் தெரிகிறது. மிகச் சமீபத்தில்தான் உலகப்படங்களைப் பற்றிய ஆர்வம் நமக்கு வந்துள்ளது. இதற்கு இணையம் ஒரு காரணம்.
கர்நாடகத்தைப் பற்றி மேலே பார்த்தோம். இங்கு இலக்கியத்துக்கான வரவேற்பு கண்கூடாகத் தெரிந்த விஷயம். நான் பல வருடங்களாக இங்கே இருப்பதால் இது நன்றாகவே புரிகிறது. இங்கும் ஜனரஞ்சகக் கமர்ஷியல் படங்களூக்கான வரவேற்பு அதிகம் என்றாலும், அதே சமயம் நல்ல படங்களும் அவசியம் ஓடவே செய்கின்றன. இலக்கியப் புத்தகங்கள் ஆயிரக்கணக்கில் விற்கின்றன. மக்களுக்கும் தெளிவான புரிதல் இருக்கிறது. இது என் அனுபவம்.
தமிழ் மக்களாகிய நாம், தமிழில் இதுவரை வந்திருக்கும் தரமான இலக்கியங்கள் எவை என்று தேடித்தேடிப் படிக்க வேண்டும். இலக்கியம் ஒருபுறம், ஜனரஞ்சக எழுத்து மறுபுறம் என்று இரண்டுக்குமே சம அளவு இங்கே வரவேற்பு வேண்டும். வாழ்ந்து மறைந்த எத்தனையோ இலக்கியவாதிகள் இங்கே அங்கீகாரமே இதுவரை இன்றியே இருந்திருக்கின்றனர்; இன்னும் இருந்துகொண்டிருக்கின்றனர். இவர்களது புத்தகங்களை நாம் அனைவரும் தேடிச்சென்று படிக்க வேண்டும் என்பது என் ஆசை. ஏனெனில், தரமான எழுத்துகள் நமது வாழ்க்கையை மாற்றும் சக்தி படைத்தவை. இலக்கியத்தை உள்ளபடி புரிந்துகொண்டால் வாழ்க்கையில் பக்குவம் கூடும். அந்தப் பக்குவத்தால் எளிதில் நம்முன் இருக்கும் விஷயங்களைத் தரம் பிரித்து அறிந்துகொள்ள முடியும். அப்படி அறிந்துகொண்டால், எவற்றுக்கெல்லாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று புரிந்துகொள்வோம். யார் பின்னாலும் ஓட மாட்டோம். நல்லவற்றை வரவேற்போம்.
இலக்கியம் எழ வேண்டும்
இப்படி எல்லாவற்றுக்கும் அடிப்படையாக இருப்பது இலக்கியம். இது மட்டும் நடந்துவிட்டால், பின்னர் தாமாகவே உலக அளவில் பேசப்படும் பல படங்கள் இங்கும் அவசியம் எடுக்கப்படும் என்பதில் சந்தேகம் இல்லை. முதலில் நமது தாய்மொழியில் இருந்து மறைந்த/எழுதிக்கொண்டிருக்கும் இலக்கியவாதிகள் யார் என்பது நமக்குத் தெரிய வேண்டும். அவர்களின் எழுத்துகளை நாம் அனைவரும் படித்துப் புரிந்துகொள்ள வேண்டும். இதற்கு இதுதான் சிறந்த காலகட்டம். இப்போது இலவசமாகவே பல இலக்கியக் கூட்டங்களும் உலக சினிமாத் திரையிடல்களும் பரவலாகத் தமிழகமெங்கும் நடைபெற ஆரம்பித்துள்ளன. இதனை நாம் அனைவரும் தவறாமல் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதனால் நமது ரசனை மாறும். ரசனை மாறினால் வாழ்க்கை மாறும். வாழ்க்கை மாறினால், தமிழகத்திலிருந்து அவசியம் பிரமாதமான உலகப்படங்கள் வெளியாகி, தமிழுக்கு நீங்காத பெருமையை அளிக்கும்.
நன்றாக யோசித்துப் பார்த்தால், யாருக்காக அழுதான், சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், பதினாறு வயதினிலே, அவள் அப்படித்தான், முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், ஏழாவது மனிதன், அக்ரஹாரத்தில் கழுதை, வீடு, சந்தியா ராகம், காக்கா முட்டை, குற்றம் கடிதல், விசாரணை போன்ற பல படங்கள் இங்கே நம்மால் கொண்டாடப்படுகின்றன என்பதில் சந்தேகம் இல்லைதான். ஆனால், இவற்றைத் தமிழே தெரியாத ஒரு உலகப்பட ரசிகர் வேறொரு நாட்டில் இருந்துகொண்டு பார்க்கிறார் என்றால், ஒரு ‘பதேர் பாஞ்சாலி’யை அவர் ரசிப்பது போலவோ, ஒரு ‘மேகே தக்க தாரா’வை அவர் உணர்ந்து புரிந்துகொள்ளுவதைப் போலவோ இவற்றை அவரால் ஏற்றுக்கொள்ள முடியுமா என்று கவனித்தால், அது கொஞ்சம் கடினமே என்று புரியும்.
இப்படங்கள் தமிழகத்திலும் இந்தியாவிலும் விருதுகள் வாங்கியிருப்பது போதாது. மாறாக, ஒரு சத்யஜித் ராய் படம் போல உலகெங்கும் பாராட்டுகளைக் குவிக்க வேண்டும். காக்காமுட்டை, குற்றம் கடிதல், விசாரணை ஆகியவை உலகில் சில திரைவிழாக்களில் வலம்வருகின்றன. அது அவசியம் பாராட்டத் தக்கதே. ஆனால், அதுவும் போதாது. வெனிஸ் பட விழாவிலோ, கான் பட விழாவிலோ அல்லது இவற்றைப் போன்ற மதிப்புக்குரிய உலகப் படவிழாக்களிலோ ஒரு தமிழ்ப் படம் அனைவராலும் பாராட்டப்பட்டு தங்கச்சிங்கம் போன்றதொரு விருதை வாங்கினால் நமக்கு எவ்வளவு பெருமை? இன்றுவரை தமிழில் உலகத் திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த ஒரு படம்கூட இல்லை என்பது வருத்தம்தானே?
Mr CK Karna song for you. Arjun with your favourite actress Ranjitha. Any update pls share.
https://youtu.be/o32O5g_Kack
பஞ்சினும் மெல்லிய பாவையின் கண்களில்
ரஞ்சிதம் பூத்திடும் ரம்யமாய் - நெஞ்சினில்
நேரிழை நல்லெழில் நேர்பட நின்றுதான்
தூறிடும் சாரலாய்த் தான்..
கொஞ்சுமெழில் விஞ்சிவரக் கோலமெழில் கொண்டவளாய்
…கோதையிவள் வந்ததுவோர் வரலாற்றுப் படமென்றால்
விஞ்சுகிற நடிப்பில்லை விந்தையெனக் கொள்ளைகொளும்
..வித்தையிலை இருந்தாலும் பலவிதமாய்ப் பாத்திரங்கள்
கெஞ்சினரா கேட்டுத்தான் பெற்றனரா யாரறிவர்
….கேள்விகளும் எழும்புகின்ற நேரத்திலே எழிலான
வஞ்சியிவர் மணம்புரிந்தார் சிலகாலம் சென்றபின்னர்
..வாகாக முனிவரையே பணீந்தகதை ஊரறியும்..!
எஸ்.வாசுதேவன் சார்.. இது ரொம்ப அநியாயம்.. ராகவேந்தர் அழகாக தேவிகையை ந.தியைப் பற்றி ஞாயிறு பாட்டுடன் எழுத நீரென்றால் ரஞ்சிதத்தைப் பற்றிக் கேட்டுவெனைத் தூண்டுகிறீர்..
நாடோடித் தென்றலில் கொஞ்சம் நிறம்மட்டாய் வாத்துக்கூட்டத்துடன் கருப்பு மயிலாய் கொய்ங்க் கொய்ங்க் கென்று வந்து கார்த்திக்குடன் கொஞ்சிப் பாடியவர் அன்றோ இந்த ரஞ்சிதை..
அதன் பின்னர் நடித்த படங்கள் கணக்கில..ஊர்,உலகம், தமிழ் சினிமாவுலகம் மறந்திருந்த போழ்தில் – பாவம் பொண்ணு கல்யாணமாயிப் போய்டுச்சு – என இருந்த போதில்- ரீ எண்ட்ரியாக நித்தி ஸ்வாமிகளின் செய்திகளில் தலைப்புச் செய்தியானார்.. இப்போது என்ன செய்கிறார் எனத் தெரியவில்லை..இல்லியோ..?
அர்ஜூன் படங்களில் நிறைய நடித்திருப்பார் என நினைவு.. ஜெய்ஹிந்த் திடீரென வந்த விறுவிறுப்பான படம்.. அது ரிலீஸான போது துபாயில் இருந்த நினைவு. ஆனால் பாடல் எனது உறவுகாரப் பையனின் காரில் தான் முதன்முதல் கேட்டேன். என்னமோ வித்தியாசமாக கொஞ்சம் குறும்பு கலந்து கொஞ்சம் வல்கராகவும் இருந்த பாடல்..முத்தமிட ஏற்ற இடம்.. அவன் இது தமிழ் பாப் ஸாங்க் அங்கிள் என்றதையும் நம்பினேன்..படம் பார்த்த பிறகு தான் தெரிந்தது அது திரைப்பாடல் என. அதே படத்தில் கட்டெறும்பு கடிக்க விடும் பாடலும் உண்டு!
இந்தப் பதிவுக்காக நான் முழுக்கக் கேட்காத நீதானா நாள் தோறும் நான் பாடக் காரணம்..பாட்டுவாத்தியார் ரமேஷ் அர்விந்த் ரன்ச்சு..!
https://youtu.be/6YfNXGqwvuY
நெய்வேலியார் ஏற்கெனவே நாடோடித்தென்றல் பாட் போட்டுவிட்டா.ர்…
*
வாஸ்ஸூ.. உயிர்மேல் ஆசை பாடல்கள் போடவில்லை எனச் சொல்லிப் பாராட்டியதற்கு நன்றி..வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி.. நீங்கள் போடாத பாடல்கள் ஏதாவது உண்டு என்று பார்த்தால் – நானே ஏதாவது புதிய “பழைய படம்” எடுத்தால் தான் உண்டு என நினைத்திருந்தேன்! ஆக்சுவலா பாத்தீங்கன்னா நான் தேடியது பழைய ‘உயிர்’ படப் பாடல்களை..ம்ம் இதுவரை சிக்கவில்லை..இப்போது சிக்கிவிடும்!
ராகவேந்தர் சார்.. வழக்கம் போல நி.பா அருமை.. நன்றி..
**
எஸ்.வாசுதேவன் சார்.. ரஞ்சிதை என்னோட ஃபேவரிட் ஆக்ட்ரஸா.. யார் சொன்னா ஒரு சின்ன ரப்பர் எடுத்து அழிக்கவும் :)
Mr C K Sir,
தவறுக்கு மன்னிக்கவும். அந்த நட்சத்திரத்தை நீங்களே கூறிவிட்டால் இந்த தவறு இனிமேல் நடக்காது.
//நான் தேடியது பழைய ‘உயிர்’ படப் பாடல்களை..ம்ம் இதுவரை சிக்கவில்லை..//
ம்ஹூம்....இப்போதைக்கு சான்ஸ் இல்லை.:)
//ம்ஹூம்....இப்போதைக்கு சான்ஸ் இல்லை//அப்படி எல்லாம் விட்டுட ஏலாது :)
எதையோ தேடப் போய் சிக்கியது மு.மேத்தா எழுதிய முதல் பாடல்..காத்து வீசுதே இளங்க் காத்து வீசுதே இங்கே கதிர்கள் கூட காதல் பேசுதே..அபபடியே தொடர்ந்திருந்தால் இன்னுமொரு இனிய பாட்லகிடைத்திருக்கும்..செல்லமமா சின்னம்மா என ம்ம்ம்
அதிலும் கவி வன்மை.. ஆத்தங்கரையில் மஞ்சக்குளிச்சு உன் ஆசையை உடம்பில் பூசிக் குளீச்சேன்.. நைஸ்
https://youtu.be/eqXlUEtjtTM
மலையோரம் மயக்கிய கானங்கள்
*
இளமை. அழகு. வாலிபன், வாலிபி.. புதிதாக மணம் புரிந்தவர்கள்..புதிதாக மனதைப் புரிந்து கொள்ள விரும்புபவர்கள்..
பசுமை.. இயற்கைக் காட்சிகள். பனி. அழகு. உடன் அழகிய நங்கை.. இளமை. சொர்க்கம் வாலிபனுக்கு.. திரும்புகையில் ஒருவழியில் சத்தம்..
என்ன சத்தம்ங்க..
இந்த மலைஜாதிக்காரங்க பாட் பாடறாங்க திருவிழாவோ என்னவோ
போய்ப் பார்க்கலாமா.. தோகை மயிலின் மையிட்ட மையலிட்ட கண்கள் பேசுவதை இதழ்களும் திறந்து கேட்க வாலிபனால் மறுக்கவா முடியும்..
போகிறான்..கிறாள்.. கிறார்கள்..
ஏலேல்லாலா ஏலேலலா.. தோட்டம் கொண்ட ராசாவே சூடிக்கொண்ட ராசாத்தி..
இந்த மலைஜாதி மக்கள் பார்த்ததில்லை..ஆனால் தமிழ் சினிமாப் பாடல்களில் – அந்தக்கால- கட்டாயம் இடம்பெற்றுவிடுவார்கள்.. கோரஸிற்காகவும் பாக்ஸ் ஆஃபீஸிற்காகவும்..
இந்த தோட்டம் கொண்ட ராசாவே – பகலில் ஒரு இரவு – இளையராஜா. விஜயகுமார்… ஸ்ரீதேவி..
https://youtu.be/jwjBz06kAlg
மலையில் மயக்கிய கானங்கள் – 3
ஹீரோ குடும்பம் பணக்காரர் எனக் காட்ட வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்.. அவர்களுக்கு மலை வாசஸ்தலத்தில் எஸ்டேட் இருக்க வேண்டும்.
ஆப்வியஸ்லி.. ஒரு திருவிழா வரும்.. ஹீரோ பாடுவார் முடிந்தால் ஹீரோயின் கும்பலோடு கும்பலாக.. அப்படி இல்லை எனில் ஹீரோவின் சகோதரன் பாடுவார்.. என்பதான விதி உண்டில்லையா தமிழ் சினிமாவில்..
மலைஜாதி மக்களின் பாடல்களில் கோரஸ் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்.. எத்தனை பாடல்கள் வந்தாலும் இந்த – இப்போது கேட்கப் போகும் பாட் இருக்கே.. ஹோ ஹோ ஹோஹோ ஹோஹோ ஹோ ஹொய்னா ஹொய்னா ஹொய்னா ஹோ ஹோ…
மென்மையாய்ப் பி.பி.ஸ்ரீனிவாஸ் ஆரம்பிப்பார்
நல்லவன் எனக்கு நானே நல்லவன்ன்ன்ன் என இழுத்து சொல்லிலும் செயலிலும் வல்லவன் ( தம்பிக்குப் பார்க்க ப் போன பொண் தனக்கே பிடித்துவிட உண்மையைச் சொல்லாமல் லெட்டர் எழுதி – ஸிம்ப்பிள் மேட்டரை காம்ப்ளிகேட் ஆக்கிய கள்ளத்தனம் கொண்டவர்..பாத்திரத்தில் பாலாஜி.. கண்ணாடிக்குப் பின்னால் உள்ள கண்களில் அது மின்னும்)
அடுத்து வரும் சரணத்தில் ந.தி – அப்பாவி- படிக்காதவர் – முரடர்- ஆனால்வெகுளி.. முகத்தில் அவ்வளவு பாவங்கள்..ரசித்துப் பாடலில் இறங்குவார்..
உள்ளம் சொன்னதை மறைப்பவனில்லை
ஊருக்குத் தீங்கு செய்தவனில்லை
வல்லவன் ஆயினும் நல்லவன்..
அங்கே பி.பி.எஸ் மென்மை என்றால் கொஞ்சம் ஸ்ட்ராங்க்கான வாய்ஸில் டி.எம்.எஸ் பச்சக்கென்று பாடல் காட்சி மனசுக்குள் ஒட்டிக் கொள்ளும்
பள்ளம் மேடு சென்றால் பார்த்துச் செல்லும் பிள்ளை
நான் பாசம் என்ற நூலில் சேர்த்துக் கட்டிய முல்லை..
என அவர் சொல்ல
இல்லை இல்லை என்றே என்றும் சொன்னவன் இல்லை
என் கண்ணை நானே கண்டேன் அதில் என்னை நானே கண்டேன் என பாலாஜி சாவித்ரியைப் பார்த்துப் பாட சூடு பிடிக்கும் பாடல்..
வெள்ளை மனது கொண்ட, வேட்டையில் வீரம் மிக்க, அண்ணன் மீது பாசம் மிகக் கொண்ட முரட்டுப் பிள்ளை ( ந.தி) என்ன சொல்கிறது
சிட்டு போல வானில்
துள்ளிச் செல்ல வேண்டும்
கீரிப் பிள்ளை போலே
ஊர்ந்து செல்ல வேண்டும்
எனச் சொல்ல பாலாஜி – ஸ்மார்ட் அண்ட் கோழை..
தொல்லை என்ற பாம்பை
கவ்விக் கொல்ல வேண்டும்
தூய உள்ளம் வேண்டும் என்றும்
சேவை செய்ய வேண்டும்
எனச் சொல்லும் பதில்- எனக்குப்பிடிச்ச பொண் நான் கைபிடிக்க பொய் சொல்லிட்டேன்.. என்று முதல் வரியிலும் இதிலெல்லாம் பெரியவர்களுக்கோ மற்றவர் மீதோ பாசமெல்லாம் குறையாது என இரண்டாவது வரியிலும் சொல்வது அவரது பாத்திரத்தையும் பளிச்சிட வைத்து பார்ப்பவருக்கும் புரிய வைக்கும்..
கோரஸ் நடனமும் வெகு அழகு பாடல் முடிந்தபின் தொடரும் ஆட்டமும் அழகு.. முழுக்க முழுக்க உற்சாக டானிக் அருந்தி முகம் முழுக்க குஷியுடன் வெள்ளந்தி மனசை வெளிக்காட்டும் ந.தி,,, கொஞ்சம் கள்ளப்பார்வையை மறைத்த நல்ல பார்வை கொண்ட பாலாஜி என வெகு எழிலாய்க் காட்சி..ஒவ்வொரு தடவை கேட்கும் போதும் அட சட்னு முடிஞ்சுடுச்சே என எண்ண வைக்கும் பாடல்..
படித்தால் மட்டும் போதுமா.. ஸ்ரீ தேவியில் பார்த்த படம்.. ரீ ரன்னில்.. க்ளைமாக்ஸ் மட்டும் செதுக்கியிருந்தால் – அனாவசியமாக பாலாஜியைச் சாகடிக்காமல்- இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.ம்ம்
இப்போ பாட்..
https://youtu.be/-Bk08LHMcok
Vanakkam
ஒரு நல்ல பாடல்
ஒண்ணா இருக்க கத்துக்கனும் திரையில் ராஜாவின் இசையில் மனோவின் குரலில் அழகான பாடல்
https://www.youtube.com/watch?v=TxBZrCm52dI
வாசு ஜி....
உ.இ.உ.வா வுக்கு நன்றியோ நன்றி...
ராகவ்ஜி...
இன்னைக்கு ஞாயிறு என்பதால் கண்ணுக்குள்ளே ஒரு பாடல் காட்சியே போட்டுக் காண்பித்து விட்டீர்கள்,.... சூப்பர் சூப்பர் சூப்பரே..
வாத்தியாரையா...
ஹவாயில் ஹாயாக இருந்து விட்டு திரும்பியாச்சா ? கடல் பார்த்தாச்சு... எப்போ ஏரி பார்க்க வரீங்க ? சென்னை முழுக்க எல்லா ஏரியாவும் ஏரியாதான் இருக்கு..
வாசுதேவன் ஜி..
தமிழிலும் உலகத் தரம் வாய்ந்த படங்கள் எடுக்கும் திறமை உள்ளவர்கள் உண்டு. ஆனால் அந்த வைரங்களைப் பட்டை தீட்டி ஜொலிக்க வைக்க தயங்கும் திரைப்பட உலகம் இங்கிருப்பதால்தான் இன்னும் மங்கியே இருக்கிறது. விரைவில் நாமும் மின்னுவோம்.
சிக்கா...
என்ன புரியலை ? வாசுஜி கேட்டது மதுதான் அரவிந்த கார்த்திக்கா என்று !! அட.. ஆமாம்பா ஆமாம்.