திரு சத்யாவிற்கு, திரு.ஹண்டே எம்.ஜி.ஆர். சிலை வழங்குதல்.
அருகில் :திரு.முத்துலிங்கம்
http://i68.tinypic.com/spemx3.jpg
Printable View
திரு சத்யாவிற்கு, திரு.ஹண்டே எம்.ஜி.ஆர். சிலை வழங்குதல்.
அருகில் :திரு.முத்துலிங்கம்
http://i68.tinypic.com/spemx3.jpg
திரு.சத்யா அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க , அவரது தாய்க்கு , திரு. ஹண்டே எம்.ஜி.ஆர். சிலை வழங்குதல்.
http://i64.tinypic.com/1252nm9.jpg
திரு.சத்யா அவர்களுக்கு ஆளுயர மாலை அணிவிக்கிறார் திரு.லக்ஷ்மன் ஸ்ருதி
அருகில் திரு. மர்மயோகி மனோகர், திரு. ரவிச்சந்திரன், திரு.ஜெயக்குமார்.
http://i66.tinypic.com/2ik6vx1.jpg
முன்னாள் சுகாதார அமைச்சர் திரு. ஹண்டே பேசும்போது
அருகில் திரு. சத்யா.
http://i67.tinypic.com/5nkoqu.jpg
திரு.ஹண்டே பேசும்போது ,
திருவாளர்கள் : கலீல் பாட்சா, லக்ஷ்மன் ஸ்ருதி , முத்துலிங்கம்
பின்புறம், திருவாளர்கள்: பாண்டியன் , பாண்டியராஜ் , மேஜர் தாசன் , பழனி,
மதுரை எஸ். குமார், தமிழ் நேசன்
http://i66.tinypic.com/dvjymt.jpg
கவிஞர் திரு. முத்துலிங்கம் பேசும்போது .
அருகில் திரு. சத்யா.
http://i65.tinypic.com/1h8hu1.jpg
திரு.நெல்லை ஆறுமுகம் , திரு.சத்யாவிற்கு பொன்னாடை அணிவித்தல் .
அருகில் திரு. முத்துலிங்கம்.
http://i66.tinypic.com/2czat53.jpg
http://i64.tinypic.com/2ex7pcw.jpg
திரு.மதுரை எஸ்.குமார் , திரு.சத்யாவிற்கு பொன்னாடை அணிவித்தல் .
அருகில் திரு. முத்துலிங்கம்.
ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு நிர்வாகிகள் திரு.பாண்டியன் , திரு. பாண்டிராஜ் ஆகியோர் திரு. சத்யாவிற்கு பொன்னாடை
அணிவித்தல்.அருகில் திரு. முத்துலிங்கம்.
http://i67.tinypic.com/2wftmys.jpg
அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்க நிர்வாகிகள் திரு.கே.பாபு, திரு. மனோகரன் ஆகியோர் திரு.சத்யாவிற்கு பொன்னாடை அணிவித்தல்
அருகில் திரு.முத்துலிங்கம், திரு. மேஜர் தாசன் .திரு.ரவிச்சந்திரன் .
http://i66.tinypic.com/b4fa8i.jpg
திரு.லக்ஷ்மன் ஸ்ருதி பேசும்போது - அருகில் திரு. சத்யா.
http://i66.tinypic.com/1zlu592.jpg
திரு.முத்துலிங்கம் அவர்கள்,திரு.மதுரை குமாருக்கு நினைவு பரிசு வழங்குதல் .
http://i67.tinypic.com/59vjub.jpg
அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நல சங்க நிர்வாகி திரு. மனோகரனுக்கு திரு. முத்துலிங்கம்
நினைவுப்பரிசு வழங்குதல்.
http://i66.tinypic.com/n624g0.jpg
ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு நிர்வாகி திரு.பாண்டிராஜ் அவர்களுக்கு திரு. முத்துலிங்கம்
நினைவுப்பரிசு வழங்குதல்.
http://i67.tinypic.com/rs9zpe.jpg
திரு.முத்துலிங்கத்துடன் திரு.லோகநாதன்.
http://i63.tinypic.com/24odiqw.jpg
திரு.முத்துலிங்கத்துடன் . திரு.கா.நா. பழனி (பெங்களூரு )
http://i65.tinypic.com/2ekq52c.jpg
இன்று (17/08/2016) இரவு 7 மணி முதல் சன் லைப் தொலைக்காட்சியில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின் "வேட்டைக்காரன் " திரைப்படம் ஒளிபரப்பாகியது .
http://i65.tinypic.com/1zwklqs.jpg
மக்கள் குரல் -17/08/2016
http://i65.tinypic.com/2ciic76.jpg
http://i65.tinypic.com/3467wh0.jpg
இனிய நண்பர் திரு பம்மல் சுவாமிநாதன் அவர்களின் சீரிய முயற்சியினால் இந்திய திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக ஒரு நடிகரின் சோலோ ஆல்பத்தை மெகா சைஸில் பிரமாண்ட வடிவில் அமைத்து மக்கள் திலகம் மலர் மாலை -1 2013ல் வெளியிட்டு சாதனை புரிந்தார் ,அந்த சாதனைக்கு சொந்தக்காரர் நம் மக்கள் திலகம் எம்ஜிஆர் . 1000 பிரதிகளுக்கு மேல் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது ,
பின்னர் மக்கள் திலகத்தின் உரிமைக்குரல் மற்றும் இதயக்கனி பத்திரிகைகள் மக்கள் திலகத்தின் ஆல்பம் என்று சிறப்பு மலரை வெளியிட்டார்கள் . தற்போது திரு சத்யா அவர்கள் மக்கள் திலகம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு ஆல்பத்தை வெளியிட்டுள்ளார் .
4 மலர்களை காணும் வாய்ப்பை பெற்றவர்கள் நம் மக்கள் திலகத்தின் ரசிகர்கள் .இதுவும் மக்கள் திலகத்தின் புகழுக்கு கிடைத்த சாதனை . இந்த வாரம் ரகசிய போலீஸ் 115 - மதுரை மாவட்டத்தில் வெளியீடு . 21.8.2016 ல் ரிக் ஷாக்காரன்
முன்னோட்ட வெளியீட்டு விழா . நம்முடைய மக்கள் திலகம் ரசிகர்களுக்கு கிடைத்த பாக்கியம் .இன்னும் பல நல்ல செய்திகள் விரைவில் ............
மதுரை அலங்காரில் (QUBE/DTS/CINIMASCOPE) நாளை 19/08/2016 முதல் தென்னக
ஜேம்ஸ் பாண்டாக , நடிக பேரரசர் எம்.ஜி.ஆர். "ரகசிய போலீஸ் 115" தினசரி 4 காட்சிகளில் வெள்ளித்திரைக்கு முற்றிலும் புதிய தொழில்நுட்பம் மற்றும் பரிமாணத்தில் விஜயம் செய்கிறார்.
மதுரை மாநகரில் , ரசிகர்கள் / பக்தர்கள் கோலாகல வரவேற்பு .
சுவரொட்டிகளின் புகைப்படங்கள் செய்திகளுடன் திரியில் பதிவிட உதவிய
மதுரை பக்தர் திரு. எஸ். குமார் அவர்களுக்கு நன்றி.
http://i64.tinypic.com/30ayzya.jpg
திறனாய்வாளர் திரு திருநாவுக்கரசர் கூறுகிறார் .
எம்ஜிஆர் படங்கள் பற்றி ?
எம்ஜிஆர் சினிமா என்றால் 1947ல் துவங்கி 1977 ஜூன் வரை 115 படங்கள் அவர் நாயகனாக நடித்தவை ,ஏறத்தாழ 31 ஆண்டுகள் தென்னிந்திய திரை உலகில் அதிக சம்பளம் , அதிக வெள்ளிவிழா 100 நாட்கள் என்று வெற்றி விழாக்கள் கொண்டாடிய படங்கள் என்ற பெருமையை பெற்றார் என்றால் அது மிகை அல்ல .வியாபாரம் ரீதியாக,தயாரிப்பாளர்கள் வினியோகஸ்தர்கள் , திரை அரங்கு உரிமையாளர்கள் , மற்றும் திரைப்பட தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தி காட்டியவர் .
CREATOR & TREND SETTER IN INDIAN CINEMA .. THAT IS ONLY M.G.R
எம்ஜிஆர் தன்னுடைய கொள்கைக்கு உட்பட்டு , சமூக சிந்தனையோடு , மக்களின் ரசிகர்களின் நாடி துடிப்பை அறிந்து அதற்கேற்றாற் போல் தன்னுடைய படைப்புகளை வழங்கினார் .
நல்ல விஷயங்களை , அறிவுரைகளை நாட்டு மக்களுக்கு எம்ஜிஆர் கூறியது போல் வேறு எவரும் கூறியதில்லை .அதனாலதான் மேல் தட்டு , கீழ் தட்டு ,நடுத்தர வர்க்கம் என்று எல்லா தரப்பினரும் எம்ஜிஆரை நேசித்தார்கள் .
எம்ஜிஆர் படத்தின் தலைப்பு , பாடல் வரிகள் , பாடல் படமாக்கப்பட்ட காட்சிகள் , எம்ஜிஆரின் திறமையான நடிப்பு , இன்றளவும் மக்கள் மனங்களில் நிலைத்து விட்டது என்னுடைய ஆராய்ச்சில் நான் எடுத்து கொண்ட 25 எம்ஜிஆர் படங்கள்
http://i67.tinypic.com/30adtlf.jpg
ராஜகுமாரி
என்தங்கை
மலைக்கள்ளன்
குலேபகாவலி
மதுரை வீரன்
சக்கரவர்த்தி திருமகள்
நாடோடி மன்னன்
மன்னாதி மன்னன்
திருடாதே
பாசம்
பெரிய இடத்து பெண்
வேட்டைக்காரன்
எங்க வீட்டு பிள்ளை
பெற்றால்தான் பிள்ளையா
அரச கட்டளை
ஒளிவிளக்கு
நம்நாடு
மாட்டுக்கார வேலன்
நீரும் நெருப்பும்
நான் ஏன் பிறந்தேன்
உலகம் சுற்றும் வாலிபன்
சிரித்து வாழ வேண்டும்
நாளை நமதே
உழைக்கும் கரங்கள்
மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்
எம்ஜிஆருக்கு ஏன் இத்தனை புகழ்
எம்ஜிஆரை ஏன் ரசிகர்கள் இன்னமும் நேசிக்கிறார்கள்
மக்கள் எம்ஜிஆரை மக்கள் திலகமாக ஏன் அழைத்தார்கள்
எல்லா தரப்பு ரசிகர்கள் , பத்திரிகைகள் , ஊடகங்கள் , சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் இன்னமும் எம்ஜிஆரை அவருடைய படங்களை நினைவு கூறுகிறார்கள் என்றால் அதுதான்
எம்ஜிஆர் என்ற மந்திர சொல் .விருதுகள் எம்ஜிஆரை தேடி வந்தது . எம்ஜிஆர் ரசிகர்கள் என்றுமே எதற்குமே ஏங்கியதில்லை .இது தற்புகழ்ச்சி அல்ல . நிதர்சனமான உண்மை
.
ஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் எம்.ஜி.ஆர். நடித்து 100 நாட்கள் ஓடிய வெற்றிப் படம் ‘ரகசிய போலீஸ் 115’. எம்.ஜி.ஆரின் ஸ்டைலான நடிப்பில் பாடல், சண்டைக் காட்சிகள் ரசிகர் களுக்கு பெரும் விருந்தாக அமைந்தன. இந்தப் படத்தில் ஒரு காட்சியில் நடிகை ‘வெண்ணிற ஆடை’ நிர்மலாவுக்கு தங்க வளையலை எம்.ஜி.ஆர். பரிசளிப்பார். அது அவரது கைக்கு சரியாக பொருந்தும். ‘அளவு சரியாக இருக்கிறதே?’ என்று ‘வெண்ணிற ஆடை’ நிர்மலா ஆச்சரியப்படுவார்.
அதற்கு எம்.ஜி.ஆர். அளிக்கும் பதிலை கவனித்துக் கேட்டால்தான் புரியும். ஏனென்றால், ரசிகர்களின் கைதட்டலாலும் ஆரவாரத்தாலும் தியேட்டரே இடிந்து விழுவது போலிருக்கும். எம்.ஜி.ஆர். கூறுவார்...
‘‘நான் எப்பவுமே, யாரையுமே சரியா அளவெடுத்து வெச்சிருப்பேன்!’’
courtesy - THE HINDU TAMIL.
எம்ஜிஆர்! மூன்றெழுத்தில் ஒரு மந்திரம்!
சாதிமத பேதம் கடந்த ஒரு மந்திரம்! மந்திரங்கள்கூட சமயத்தில் உச்சரிப்பை மட்டுமே ஆட்கொள்ளும்! இந்த மூன்றெழுத்து மந்திரமோ ‘அதுக்கும் மேலே’ என்றும் உள்ளத்தை ஆட்கொள்ளும். இதன் திறம், இறைவன் அளித்த வரம்!
எம்ஜிஆர் மனதில் நிறைந்தவர் மட்டுமா? பலர் மனதை வென்றவரும்கூட என்பதில் இருவேறு கருத்தில்லை! வரையறுக்க முயல்கிறேன் வரிகளில், வள்ளல் என வாழ்ந்த இப்பெருந்தகையை! எம்.ஜி.இராமச்சந்திரன் – நாடுவிட்டு நாடு வந்து நாட்கள் பல காத்திருந்து நாடகங்களில் கால் பதித்து இன்று நிலைத்து நிற்பதோ நம் அனைவரின் நெஞ்சங்களில்!
இவருடைய திரைப்படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பாடமாய் நற்கல்வியாய் பலருக்கு வழிகாட்டிக் கொண்டிருப்பது இன்றளவும் கண்கூடான உண்மை! அழகிய தமிழ்மகன் இவர்! அழகென்ற சொல்லுக்குப் பொருத்தமானவர்! பொதுவாக கவிஞர் கூட்டம் கதாநாயகிகளையே வர்ணித்து பாடல்கள் புனைந்து வந்த நிலையில், இவரது வரவால் கதாநாயகனை, இவரது தேக்குமர தேகத்தை, பொன் தந்த நிறத்தை விரும்பி,
‘தேக்குமரம் உடலைத் தந்தது,
சின்னயானை நடையைத் தந்தது,
பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது,
பொன்னல்லவோ நிறத்தைத் தந்தது என்று வர்ணித்துப் பாட வைத்தது.
புகழ்ந்து பலர் பாடினாலும் அதற்குப் பொருத்தமாய் வாழ்ந்து காட்டிய தோற்றம் மட்டுமா? அவரின் மன ஏற்றமும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது! இந்த வள்ளல் திருக்குறளை நிறையப் படித்திருப்பார் நிச்சயமாக! எவரெவர் எப்படியெப்படியெல்லாம் இருக்க வேண்டுமென வள்ளுவர் பெருமான் வரையறுத்துள்ளாரோ அப்படியெல்லாம் தன்னை நெறிப்படுத்தி நிஜத்தில் வாழ்ந்து காட்டிய நேர்த்தி சொல்லி மாளாது! சொற்களில் அடங்காது!
இவருக்காக எழுதிய பாடல்கள் வியப்பின் உச்சம்! திரைப்படத்தை மீறி உண்மையாகவே இவருக்கெனப் பிறந்த அந்த வார்த்தைகள் இவருக்கு மட்டுமே பொருத்தமான அவ்வரிகள் இவரால் வளம் பெற்றன, சாகாவரம் பெற்றன! கற்புக்கரசி பெய்யென்று சொன்னால் பெய்யுமாம் மழை! இலக்கியத்தில் படித்திருக்கிறோம். அப்படி இவருக்கு திரைப்படத்திற்கு எழுதிய வரிகள் நிஜமானது வியப்பின் உச்சம். ‘உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்’ பாடலில்,
மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு
மாலைகள் விழவேண்டும்! ஒரு
மாற்றுக் குறையாத மன்னவன் இவனென்று
போற்றிப் புகழவேண்டும்!
கவிஞரின் கற்பனையில் பிறந்த வரிகள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டது எப்படி?
‘மனிதனென்பவன் தெய்வமாகலாம்
வாரி வாரி வழங்கும்போது வள்ளலாகலாம்’
என்கிற வரிகளுக்கேற்ப வாரி வாரி வழங்கி வள்ளலானார், பின் மக்கள் மனங்களில் தெய்வமானார்.
‘நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்
இங்கு ஏழைகள் வேதனைப்படமாட்டார்.
உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை
அவர் கண்ணீர் கடலிலே விழமாட்டார்’
என்று பாடியவர், ஆணையிட்டு ஏழைகளின் நல்வாழ்வுக்காகப் பாடுபட்டார். ஏழைகளை மனதில் தாங்கி அவர்களுக்கான திட்டங்கள் வகுத்தார்.
அதனால்தான், மக்கள் பாடி வாழ்த்தினர்,
‘நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற
இந்த நாட்டிலுள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற’ என்று!
இந்த வாழ்த்து அவர் நோய்வாய்ப்பட்டிருந்த போது வேண்டுதலாக மாறி,
‘ஆண்டவனே உன் பாதங்களை நான் கண்ணீரால் நீராட்டுவேன்
இந்த ஓருயிரை நீ வாழவிடு என்று உன்னிடம் கையேந்தினேன்’
என்னும் வேண்டுதலுடன் சேர்த்து ஒவ்வொரு திரையரங்கிலும் கூட்டுப் பிரார்த்தனையாய் தமிழ்நாட்டு மக்களின் எண்ணப் பிரதிபலிப்பாய் ஒலித்துக் கொண்டிருந்தது, அவர் நலம்பெற்று திரும்பி காலடி வைக்கும்வரை!
இவையனைத்துமே அவரே அறியாமல் அவருக்காகப் பாடப்பட்டு பின் உண்மையாய் மாறிய வரிகள்!
மக்கள் திலகம்! மகளிர் மனதில் மிக நெருக்கமான உறவுகளாய் பாசமிகு மகன், அன்பு அண்ணன், ஆசைத் தம்பி என பதிந்ததோடு உதாரணக் காதலனாகவும் இருந்திருப்பார் என்பதில் ஐயமில்லை. திரையுலகம் என்பது சக்திமிகுந்த ஊடகம், அதில் கதாநாயகன் என்பவன் மூன்று மணி நேரம் காண்போர் மதியை ஈர்ப்பவன் என்ற பொறுப்பை உணர்ந்து சமுதாயத்திற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து பாசம், வீரம், விடுதலை, வேட்கை, கடமை என நல்ல விஷயங்களையே கையாண்டு காண்போருக்குக் கருத்தில் பதிய வைத்தவர். பல கலைகளில் தேர்ந்த இந்த சகலகலா வல்லவர், படிப்பதைவிட பார்ப்பது மக்கள் மனதில் பதிந்துவிடும் என்ற மனோதத்துவத்தை அறிந்து, அதிலும் படிப்பறிவில்லா பாமர மக்களையும் மனதில் கொண்டு நன்மை விதையைத் தூவி அனைவரின் மனதிலும் வேரூன்றிய இந்த எம்ஜிஆர் எனும் பயிர் சற்று துறை மாறி அரசியலில் நுழைந்தது, தமிழ்நாட்டு வரலாற்றில் பொற்காலம் என்பது வியப்பேதுமில்லை.
வெற்றி இவரால் பேருவகை கொண்டது. தோல்வியோ தோல்வி கண்டே துவண்டது. தலைவன் என்ற சொல் தாழாமல் தனித்துவம் கண்டது. இவருடைய புதிய கட்சியின் கொடியும் பெயரும் இதயக்கனி என இவரை மனதில் தாங்கிய அண்ணாவை கொள்கைத் தலைவர் என ஏற்றுப் பெருமைப் படுத்தியது. இவருடைய மனதில் அண்ணாவிற்கு இருந்த பக்தியை ஒவ்வொரு மேடையிலும் ‘அண்ணா நாமம் வாழ்க!’ என்ற வாக்கியத்தால் பறைசாற்றியது. பிறருக்கு வாய்ப்பூட்டு போட்டது. அண்ணாவை மட்டுமே தலைவனாக ஏற்றதால், இவரது கட்சியில் அண்ணாவுக்கான தலைவர் நாற்காலி காலியாகவே வைக்கப்பட்டது. செயலாளராகவே இவரை செயல்பட வைத்தது.
வலுக்கட்டாயமாக தமிழ்நாட்டை ஆண்டவர் இல்லை, இவர் வசந்த பூமியாய் தமிழ்நாட்டை மாற்றியவர். மத்தியில் என்றும் இணக்கம் காட்டி தன் மதியால் தமிழ்நாட்டுக்குப் பல நல்ல திட்டங்களைப் பெற்றுத் தந்தவர். பொங்கலுக்குப் பரிசு தந்து எல்லோர் வீட்டிலும் ‘எங்க வீட்டுப் பிள்ளை’ ஆனார். கல்வித்துறை, காவல்துறை, போக்குவரத்துத் துறை, வேலைவாய்ப்புகள் என்று இவரது ஆட்சிக்காலத்தில் வளர்ச்சி கண்ட துறைகள் பல. குறிப்பாக, 5ம் உலகத் தமிழ் மாநாடும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகமும், அன்னை தெரசா பல்கலைக்கழகம், தெலுங்கு கங்கை திட்டம் (கிருஷ்ணா நதிநீர்த் திட்டம்) ஆகியவை இவரது ஆட்சியின் அடையாளங்கள். மதுவுக்குத் தடை போட்டார். மகளிர் மட்டும் பேருந்துகளுக்கு விதையிட்டார். ஏழைக் குழந்தைகளின் கால்களுக்கு காலணி தந்து காத்திட்டார்.
அதேபோல், எத்தனையோ கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், கொள்கைகளில் மாறுபட்டிருந்தாலும், அரசவைக் கவிஞர் என்னும் புதிய பதவியை உருவாக்கி, அதில் முதல் நபராக கவியரசர் கண்ணதாசனை அமரவைத்து அழகு பார்த்த இவரது பெருந்தன்மை மறுக்கவோ, மறக்கவோ முடியாதது. கல்லூரிகளில் அதிக மாணவர்களைச் சேர்க்க அனுமதியளித்து பல மாணவர்களின் வாழ்வில் ஒளி விளக்கானவர்.
எண்ணமே வாழ்வு என்பார்கள், தேர்தல் களத்தில் அனுதினமும் அல்லலுற்று ஓட்டு வேட்டையாடும் அரசியல்வாதிகளுக்கிடையில் தேர்தல் நடந்து முடியும்வரை ஆளே வராமல் ஆண்டிப்பட்டியில் அதிக ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்தது மட்டுமின்றி, பெரும்பான்மையும் பெற்று முதல்வரானதிலிருந்தே இவர் மக்கள் மனதில் பதிந்த ஆழம் புரியும். நீள அகலங்கள் விரியும்.
தொண்டர்களை மதித்து அரவணைத்து ஒவ்வொருவரின் திறமையையும் உணர்ந்து பொறுப்பளித்து எண்ணித் துணிந்து செயலாக்கிய இவர் மின்னி மறையும் மின்னலல்ல, வான் உள்ளவரை தமிழ் உலகை ஆளும் பொன்மனச்செம்மல் ஆவார். அவரின் மனத்தைப் போலவே வெள்ளை உடையும், அவருடைய சுறுசுறுப்புக்கேற்ற கைக்கடிகாரமும், கதிர்வீச்சுக் கண்களைக் கட்டுக்குள் வைத்த கறுப்புக் கண்ணாடியும், அனைத்துக்கும் சிகரமாய் மெத்தென்ற தொப்பியும் நிலையாய்ப் பூண்டு வந்த இந்த இணையற்ற மக்கள் திலகம் மக்களின் மனங்களை விட்டு மறையவேயில்லை, நிறைந்தே இருக்கிறார். அதனால்தான் அவர் நடமாடிவந்த இந்தத் தனித்துவமான அற்புத அடையாளங்களோடு அவர் மெரீனா கடற்கரையில் ஆழ்ந்த நித்திரைக்கு அனுப்பப்பட்டார். அவரது பூவுடல்தான் அங்கே உறங்குகிறது. ஆனால் அவரது ஆன்மா என்றென்றும் தமிழ்மக்களின் இதயங்களிலேயே நிலைத்து நின்று வாழ்ந்துகொண்டிருக்கும்.
மனத்தில் நிறைந்த மக்கள் திலகம் வாழ்க.
Courtesy -நர்கிஸ் ஜியா. Vallamai
திருநின்றவூர் -அருள்மிகு எம்.ஜி.ஆர். ஆலய 6ம் ஆண்டு திருவிழா
-----------------------------------------------------------------------------------------------------------------
கடந்த 15/08/2016 -சுதந்திர தினத்தன்று , திருநின்றவூரில் எழுந்தருளியுள்ள
அருள்மிகு எம்.ஜி.ஆர். ஆலய 6ம் ஆண்டு திருவிழா வெகு விமரிசையாக
கொண்டாடப்பட்டது.
காலை முதல் பக்தர்கள் பெருந்திரளாக வந்திருந்து அபிஷேகங்கள், ஆராதனைகள்,
பூஜைகள் போன்றவற்றில் கலந்து கொண்டு , இறைவன் எம்.ஜி.ஆர். அருள் பெற்ற
வண்ணம் இருந்தனர். அதிகாலை பூஜை, உச்சிகால பூஜை, மாலை வேளை பூஜை,
இரவுக்கால பூஜைகள் சிறப்பாக நடைபெற்றன.
பிற்பகல் கோயிலுக்கு பின்புறம் உள்ள அன்னதான கூடத்தில் சுமார் 1000 பேருக்கு
அன்னதானம் வழங்கப்பட்டது. சென்னை மற்றும் புறநகர், வெளி மாவட்டங்களில்
இருந்தும் பக்தர்கள் திரண்டு வந்து கலந்து கொண்டனர் .
திருநின்றவூரில் இருந்து நத்தம் மேடு கோயில் வளாகம் வரையில் வழியெங்கும் இதய தெய்வத்தின் உருவங்கள் அடங்கிய பேனர்கள் , பதாகைகள் அமைத்து இருந்தனர் .
நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சியில் , நமது இதய தெய்வத்தின் பாடல்கள்
இசைக்கப்பட்டன. பின்னர் மிமிக்ரி நிகழ்ச்சியும் நடைபெற்றது .
மாலையில் , இதய தெய்வம் எம்.ஜி.ஆர். அவர்கள் தெய்வ நிலையை அடைந்ததற்கு திரைப்பட புகழ் காரணமா, அல்லது அரசியல் மற்றும் ஆட்சி கால
புகழ் காரணமா என்கிற வகையில் சிறப்பு பட்டி மன்றம் நடைபெற்றது .
பெங்களூரில் இருந்து திரு.எம்.ஜி.ஆர். .லாரன்ஸ் அவர்கள் , பக்தர்களுடன் வேனில் சிறப்பாக தொடுக்கப்பட்ட மலர்மாலையுடன் வந்திருந்து இறைவன் எம்.ஜி.ஆரை தரிசித்தனர்.
இரவு 7.30 மணியளவில் உற்சவ சுவாமிகள் அலங்காரத்திற்கு பிறகு சுற்று வட்டார கிராமங்களுக்கு புறப்பட்ட வாகனம் , ஆலயத்திற்கு திரும்பி வந்த
நேரம் நள்ளிரவு 1.30 மணி என இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு நிர்வாகி
திரு. பாண்டியன் தெரிவித்தார் . வழியெங்கும் , குடும்பத்துடனும், கூட்டம் கூட்டமாகவும் வந்திருந்து உற்சவ சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்து
வரவேற்றது மெய் சிலிர்க்க வைத்தது என்றும் தெரிவித்தார் .
இறுதியில் கோயில் நிர்வாகி திரு. கலைவாணன் பூஜைகள், நிகழ்ச்சிகள்
சிறப்பாக நடைபெற்றதற்கு பக்தர்களின் ஒருங்கிணைந்த ஒத்துழைப்பும்,
பேராதரவுமே பெரும் காரணம் என்று கூறியதாக திரு. பாண்டியன் தெரிவித்தார் .