http://i68.tinypic.com/2ikqqtv.jpg
நான் நேத்து முன்தினம் போட்ட பதிவுக்கு அதிராம் என்பவர் நேத்து இங்கே வந்து பதில் சொல்லிருந்தார். டைப்பிங் செய்ய எனக்கு லேட் ஆகும் . நிதானமா டைப்பிங் செய்து பதில் போடலாம் என்ற பாத்தால் என் பதிவும் இல்லை. அவர் பதிவும் காணவில்லை.
பரவால்ல. இருந்தாலும் அவருக்கு என் பதில் இங்கே.
நான் பதிவு செய்த போஸ்டர் நீங்கள் சொன்னபடி 1967 தேர்தலில் ஒட்டப்பட்ட போஸ்டர்தான். ஆமாம்.
ராஜிவ் காந்தி ரத்த வெள்ளத்தில் கிடக்கும் போஸ்டர்களை ஒட்டித்தான் ஜெயலலிதாவும் ஆட்சியைப் பிடித்தார். ஆமாம். உண்மை.
ஜெயலலிதா பிணத்தை செட்டப் செய்து பன்னீர் கோஸ்டி ஓட்டுக் கேட்டது தப்பு. கேவலமானதுதான். என் பதிவில் சொல்லியிருக்கிறேனே. பார்க்கலீயா?
ஆனால், நான் சொல்வது இதே தவறை செய்த திமுகவுக்கும் ஸ்டாலினுக்கும், ஓபிஎஸ்சை பார்த்து பிண அரசியல் நடத்துவதாக சொல்ல தகுதி இல்லை என்பதுதான். (1984-ல் புரட்சித் தலைவர் உடல் நிலை சரியில்லாததை போஸ்டரில் போட்டு உடல் நலம் சரியாக வாழ்த்து சொல்லிவிட்டு ஆனால், உதயசூரியனுக்கு வாக்கு கேட்டு போஸ்டர் ஒட்டிய கேவலம் நடந்தது. மக்களை முட்டாளாக நினைத்துக் கொண்டு, புரட்சித் தலைவர் வந்தவுடன் ஆட்சியை ஒப்படைப்பதாகவும் கருணாநிதி சொன்னார்)
உடனே, அந்த தேர்தலில் எம்.ஜி.ஆர். சிகிச்சை பெறும் படத்தை அதிமுக போஸ்டர் அடிக்கவில்லையா? தியேட்டரில் விளம்பரப்படம் காட்டவில்லையா? என்று கேட்காதீர்கள். புரட்சித் தலைவரை ஐஸ் பெட்டியில் வைத்திருக்கிறார்கள் என்று திமுகவினர் செய்த பொய் பிரசாரத்தை முறியடிக்கத்தான் அது காட்டப்பட்டது.
தினகரன் பணத்தை கோடிக்கணக்காக அள்ளிவிட்டார். ஆமாம். ஆனால், இந்த மாதிரி அநீதிக்கெல்லாம் வழி வகுத்து அழகிரி புண்ணியத்தில் திருமங்கலம் தேர்தலில் வெற்றி பெற்று (அந்த அக்கிரம வெற்றிக்காக அறிவாலயத்தில் நடந்த விழாவில் அழகிரிக்கு கருணாநிதி தங்க சங்கிலி போட்டார்) அந்த அக்கிரமத்தை திருமங்கலம் பார்முலா என்று பெருமையடித்துக் கொண்ட திமுகவுக்கும் ஸ்டாலினுக்கும் தினகரன் பணத்தை அள்ளிவிடுவதாக சொல்லவும் தகுதி ஏது?
நீங்கள் சொன்னபடி மோடியின் கைப்பாவையான தேர்தல் ஆணையம் தேர்தலை ரத்து செய்துவிட்டது. ஏன்? தினகரன் வெற்றி பெறுவாரோ என்ற பயம்தான் காரணம். வளர்ந்துவிடுவார்களோ என்று திமுகவும் மற்ற கட்சிகளும் பயப்படும் இப்படியாப்பட்ட ஆள்தான் வேண்டும் என்கிறேன். அப்போதுதான் புரட்சித் தலைவரால் தொடங்கப்பட்ட அதிமுக பலமாக தொடரும். இதில் என்ன தப்பு?
நீங்கள் சொன்னபடி முதலமைச்சர் ஆகணும் என்று திட்டம்போட்ட தினகரன் வாயில் மண் விழுந்துதான் விட்டது.
ஆனால், பிப்ரவரி 18ம் தேதி முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது நடந்த நம்பிக்கைத் தீர்மானத்தின் போது திமுக எம்எல்ஏக்களை ஏவி விட்டு சபாநாயகரைத் தாக்கி, அவர் சட்டையைக் கிழித்து, கையைப் பிடித்து இழுத்து, அவர் நாற்காலியில் உட்கார்ந்து, மைக்கை உடைத்து அமளி செய்து, (இதெல்லாம் டிவியில் காட்டப்பட்டன. பேப்பரிலும் படங்கள் வந்தது. பார்த்திருப்பீர்கள்)சட்டசபையில் கலவரத்தை தூண்ட முயற்சி செய்து, (புரட்சித் தலைவர் மீதே சட்டசபையில் செருப்பு வீசியவர்களிடம் சட்டசபையில் ஜெயலலிதாவின் சீலையைப் பிடித்து இழுத்த கும்பலிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்)
தன் சட்டையை தானே கிழித்துக் கொண்டு (முதலில் வந்த போது ஸ்டாலின் சட்டைப் பையில் பேனா இருந்த படமும் மீண்டும் தன் அறைக்கு போய்விட்டு வந்தவுடன் சட்டைப் பை கிழிந்த மாதிரி இருந்த படங்களும் வெளியானது. நீங்களும் பார்த்திருப்பீர்கள்) சபையை விட்டு வெளிய வந்து, காரில் இருந்து இறங்கி, மக்களைப் பார்த்து தன் அருகில் கூப்பிட்டு தன் சட்டையைக் காட்டி வன்முறையை தூண்டிவிட முயற்சி செய்து,
கவர்னரிடம் ஓடிப்போய் கிழிந்த சட்டையை காட்டி, மெரினா பீச்சில் உட்கார்ந்து கூட்டத்தை சேர்த்து ஜல்லிக்கட்டு போராட்டம் மாதிரி கூட்டத்தை கூட்டி
குழப்பத்தை ஏற்படுத்தப் பார்த்து, எப்படியாச்சும் ஆட்ச்சியை கலைத்து விடலாம். தேர்தல் வரவழைத்து உடனே முதலமைச்சராகிவிடலாம் என்று மனப்பால் குடித்த ஸ்டாலின் வாயில் விழுந்த மண்ணைவிட தினகரன் வாயில் விழுந்த மண் அளவு குறைச்சல்தான்.
இறைவன் விருப்பப்படிதான் எல்லாம் நடக்கும். இறைவன் நாடினால் தினகரன் முதல்வராவதையோ அதிமுக பலமடைவதையோ யாரும் தடுக்க முடியாது. புரட்சித் தலைவர் தொடங்கிய கட்சி தொடர வேண்டும், இரட்டை இலை சின்னம் மீண்டும் கிடைக்க வேண்டும் திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க வேண்டும் என்பதே என் ஆசை. அல்லாவின் விருப்பம் அதுவாகவே இருக்க வேண்டும் என்று வேண்டுதல் செய்கிறேன்.
நீங்கள் இங்கே பதிவு போட்டதற்கு மன்னிப்பு எல்லாம் எதற்கு கேட்கிறீர்கள்? உங்கள் கருத்து உங்களுக்கு. என் கருத்து எனக்கு.