https://scontent.fyzd1-1.fna.fbcdn.n...75&oe=5AC0F3A0
Printable View
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்
66 வது வெற்றிச்சித்திரம்
விடிவெள்ளி வெளியான நாள் இன்று
விடிவெள்ளி 31 டிசம்பர் 1960
https://scontent.fyzd1-1.fna.fbcdn.n...f6&oe=5AC1C470
https://scontent.fyzd1-1.fna.fbcdn.n...5c&oe=5AC9038B
https://scontent.fyzd1-1.fna.fbcdn.n...5e&oe=5AB7F77F
அனைத்து உள்ளங்களுக்கும் இனிய புதுவருட நல்வாழ்த்துக்கள்
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...cb&oe=5AB9E8B6
நடிகர் திலகத்தின் ஜனவரி மாத வெளியீடுகள்
1) அன்பளிப்பு 1 /01 / 1969
2) தங்கப்பபதுமை 10/01/ 1959
3) சாதனை 10/ 01 /1986
4) பராசக்தி (தெலுங்கு) 11/01/1957
5) பொம்மல பெள்ளி ( தெலுங்கு) 11/01/1958
6) மனிதனும் தெய்வமாகலாம் 11/01/1975
7) ஞானப்பறவை 11/01/1991
8) காவேரி 13 /01/1955
9) பரதேசி (தெலுங்கு) 14/01/1953
10) நான் பெற்ற செல்வம் 14 /01 /1956
11 ) நல்லவீடு 14/01 /1956
12) இரும்புத்திரை 14 /01/1960
13) பார்த்ததால் பசி தீரும் 14 /01/1962
14) கர்ணன் 14 /01/ 1964
15) பழநி 14/01/1965
16) கந்தன் கருணை 14/01/1967
17 ) எங்கமாமா 14/01/1970
18) இரு துருவம 14/01/1971
19) அவன் ஒரு சரித்திரம் 14/01/1977
20) மோகனப் புன்னகை 14/01/1981
21) பெஜவாடா பெப்புலி (தெலுங்கு) 14/01/1983
22) திருப்பம் 14/01/ 1984
23) ராஜமரியாதை 14/01/1987
24) மன்னவரு சின்னவரு 15/01/1999
25) நானே ராஜா 25/01/1956
26) மோட்டார் சுந்தரம் பிள்ளை 26/01/1966
27) ராஜா 26/01 /1972
28) சிவகாமியின் செல்வன் 26/01/1974
29) தீபம் 26/01/1977
30) அந்தமான் காதலி 26/01/1978
31) ரிஷிமூலம் 26/01/1980
32) ஹிட்லர் உமாநாத் 26 /01/1982
33) குடும்பம் ஒரு கோயில் 26/01/1987
34)திரிசூலம் 27/01/1979
35) பூங்கோதை 31/01 1953
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்
126 வது வெற்றிச்சித்திரம்
அன்பளிப்பு வெளியான நாள்
அன்பளிப்பு 1 ஜனவரி 1969
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...1d&oe=5AF0DCB7
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...90&oe=5AF8B022
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...66&oe=5AB92CA6
(nadigarthilagam visirikal)
paravasam nayagnr
பொம்மை சினிமா பத்திரிக்கை விருது வழங்கும் நிகழ்ச்சியில்...
எம்ஜிஆா்,
சிவாஜி கணேசன்
&
சாவித்திரி
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...dd&oe=5ABE1D3A
Edwin Prabhakaran Eddie
பால்கனி, பெஞ்சு டிக்கட் என்ற இரு பிரிவையும் கவர்ந்த சிவாஜிக்கு சாதி மதங்களை கடந்த ரசிகர்களே அதிகம்....சிவாஜிக்கு எந்த வர்க்க பின்னணியோ ,சாதி பின்னணியோ கிடையாது,அவரை சாதி மதம் கடந்து தமிழர்கள் நேசித்தார்கள்,(அரசியல் காரணமாக வெறுத்தவர்கள் தவிர)
தீந்தமிழை வளர்த்தவர்கள், பரப்பியவர்கள் என்ற வகையில் சான்றோர் பலரை நம்மால் சுட்டிக்காட்ட இயலும். ஆனால் அமிழ்தினும் இனிதான தமிழை, தமிழ் மக்களுக்கு உச்சரிக்க கற்றுத் தந்தவர் என்றால் அந்தப் பெருமை சிவாஜி கணேசன் ஒருவரையே சாரும். கலைஞர் க...ருணாநிதியின் கன்னல் தமிழ் வசனங்களை தனது சிம்மக் குரலால் சாஸ்வதமாக்கியவர் சிவாஜி. சராசரி தமிழனின் உயரம்தான் சிவாஜிக்கும். ஆனால் தனது அற்புதமான பாடி லாங்க்வேஜ் மூலம் 6 அடிக்கும் அதிகமாக விஸ்வரூபம் எடுக்கும் திறன் அவருக்கு இருந்தது. ..அதற்கு சிறந்த உதாரணம் .கவுரவம் படத்தில், கண்ணன் என்ற கதாபாத்திரம் நார்மலாக வடிவமைக்கப்பட்டது மாதிரி இருக்கும்.. .ஆனால் பாரிஸ்டர் ரஜினிகாந்த் ஆகவரும் சிவாஜியின் கதாபாத்திரம் பேசும் ஒவ்வொரு வார்த்தையும்.....நடக்கும் நடையும் . அசைவும் , திமிரும் பார்வையும் ..நிமிர்ந்து நிற்கும் கம்பீரமும் .ஆறடியை தாண்டியதாக உணர்வோம் நாம் , திரையில் பார்க்கும்போது .
அதே போல்
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் நடித்ததற்காக ஆசிய- ஆப்ரிக்க திரைப்பட விழாவில் இரண்டு கண்டங்களிலும் சிறந்த நடிகர் விருதுக்கு சிவாஜி தேர்வு செய்யப்பட்டார். விருதை வாங்க சிவாஜி மேடைக்குச் சென்றபோது, தேர்வுக்குழுவினர் ஆச்சர்யப்பட்டனர்.....இந்த உடலா இத்தனை உணர்ச்சிகளை ஆற்று வெள்ளமென வெளியே கொண்டுவந்தது என்று .அதுதான் நடிப்பின் இமயம்
தமிழ் சினிமாவில் யாருக்கும் கிடைக்காத ஒரு அரிய அமைப்பு சிவாஜிக்கு வாய்த்தது. அவர் பராசக்தியில் அறிமுகமாகியபோது கோலிவுட்டில் கதாநாயகர்கள் பஞ்சம். அதை சிவாஜியும், அவரை திரையுலகினரும் நன்கு பயன்படுத்திக் கொண்டனர்.
ஆக்ஷன் படம் என்றால் எம்ஜிஆர், காதல் படம் என்றால் ஜெமினி என்று இருந்த நிலையில், தன் மீது எந்த முத்திரையும் விழாமல் பார்த்துக் கொண்டார் சிவாஜி. அதன் காரணமாக சரித்திரம், புராணம், நகைச்சுவை, வில்லன், காதல், குடும்பம் என்று சகலவிதமான ரோல்களில் அவரால் பிரகாசிக்க முடிந்தது. அதனுடன் சேர்ந்த ஸ்டைல் அது சிவாஜி அவர்களுக்கே சொந்தம் சூரியன் போல் நடிகர் திலகம் எப்போதும் பிரகாசிப்பார் .
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...93&oe=5AEB0EA9
Vasu Devan
நடிகர் திலகத்தின் ஸ்டைல் சண்டைக் காட்சி
படம்: தங்கச் சுரங்கம்
வெளிவந்த ஆண்டு: 1969
... தயாரிப்பு: E.V.ராஜன் ('தங்கச்சுரங்கம்' காவியத்தில் கதாநாயகர் நடிகர் திலகத்தின் பெயரும் படத் தயாரிப்பாளர் பெயர் 'ராஜன்'தான்)
சண்டைப் பயிற்சி: திருவாரூர் M.S.தாஸ்
இயக்கம்: ராமண்ணா
சும்மா பொறி பறக்கும் சண்டைக்காட்சி. படு ஸ்லிம்மாக காலேஜ் மாணவன் போல் நடிகர் திலகம். பாரதியை விசாரணை செய்யும் இடத்தில் பேச்சுக் கொடுத்தபடியே ஒளிந்திருக்கும் எதிரிகளை கண்டு பிடித்து கொடுக்கும் "அட்டாக்"... ஸ்டைலாகவும், லாவகமாகவும் புகுந்து விளையாடும் நம் தங்க ராஜாவின் 'கும் கும்' குத்துக்கள்... சும்மா சுறுசுறுப்பும், விறுவிறுப்பும் நிறைந்த நெத்தியடி பைட். ஜேம்ஸ்பாண்டுக்கே உரிய ஜாக்கிரதை உணர்வு... புத்திசாலித்தன பிரதிபலிப்பு... வேகம்... விவேகம் என ஒருசேரக்கலந்து கலைக்குரிசில் கலக்கும் கலக்கல் பைட்.
என்ன ஒரு ஸ்டைலான கலக்கல் டிரஸ்! எதிரிகளை துவம்சம் புரிந்து விட்டு பாரதியிடம் வந்து "மேடம், இதெல்லாம் உங்க ஏற்பாடா?... இவங்கல்லாம் உங்க ஆட்களா?...எப்படி நம்ம விளையாட்டு! (இந்த இடத்தில் அவரது முகத்தில் பொங்கி வழியும் அந்தப் பெருமையைப் பார்க்க வேண்டுமே!) இப்பவாவது உண்மையை சொல்லுங்க,"... என்று கைகளில் உள்ள கிளவுசைக் கழற்றிய படியே ஷர்ட் பாக்கெட்டிலிருந்து 'தம்' மை எடுத்து, படு ஸ்டைலாக வாயில் வைத்து, மேட்ச் பாக்ஸை எடுத்து, பாரதி அணிந்துள்ள மேலாடையின் பின்புறமுள்ள கொக்கியில் வத்திக்குச்சியை உரசி சிகரெட்டை பற்ற வைக்கும் அந்த அட்டகாச அமர்க்கள ஸ்டைலை என்னவென்று சொல்வது! ஸ்டைலில் எல்லோருக்கும் 'அப்பன்' அல்லவா அவர்! அனைத்து நடிகர்களுக்கும், ஏன் அனைத்து மனிதர்களுக்கும் 'ரோல் மாடல்' நடிகர் திலகம் தானே!
இணையத்தில் தரவேற்றி உங்களுக்காக இதோ
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...3b&oe=5AF95774
Selva Kumar
கேட்டவரெல்லாம் பாடலாம்...என்
பாட்டுக்குத்தாளம் போடலாம்...!!!
கே.பாலாஜி அவர்களின் தங்கை படத்துக்காக பாடல் எழுத அம்ர்ந்திருந்தார்கள் கவியரசர் கண்ணதாசன், மெல்லிசை மன்னர் எம்எஸ்வி, தயாரிப்பாளர் பாலாஜி, இயக்குனர் ஏ.சி. திருலோகசந்தர் இவர்களுடன் சுஜாதா சினி ஆர்ட்ஸ் நிர்வாகிகளும்.
திருலோக் சிச்சுவேஷனைச் சொன்னார். கதாநாயகி கே.ஆர்.விஜயாவின் பர்த்டே பார்ட்டியில் சிவாஜி பாடுவதாக சீன் என்று சொல்ல, இதற்கு பாட்டு எழுதி ட்யூன் போடுவதை விட முதலில் ட்யூன் பண்ணிக் கொண்டு பாடல் எழுதுவது நன்றாக இருக்கும் என்று பெரும்பாலோர் சொல்ல, அண்ணன் விஸ்வநாதன் அவர்களும் ஒன்று இரண்டு என நான்கு ட்யூன்களைப்போட்டு விட்டார். அப்போது வந்தது குழப்பம். நான்குமே நன்றக இருக்கிறதே இதில் எதை செலக்ட் பண்ணுவது என்பதுதான் குழப்பம்.
முதல் ட்யூன் கண்ணதாசனுக்குப் பிடித்திருக்கிறது. அடுத்த ட்யூன் மெல்லிசை மன்னருக்கு பிடித்துள்ளது. மூன்றாவது இயக்குனர் திருலோகசந்தருக்கு பிடித்துப்போக, நாலாவதுதான் பாலாஜிக்குப் பிடிக்கிறது. ஒவ்வொருவருமே தாங்கள் செலக்ட் பண்ணிய ட்யூன்தான் பாடலாக்கப்பட வேண்டும் என்று சாதிக்கிறார்கள்.
அப்போது கண்ணதாசன் கோபத்துடன் “விசு உன்னை யார் நாலு ட்யூன் போடச்சொன்னாங்க. ஒரேயொரு ட்யூன் போட்டுக் காட்டி இதுதான்னு சொல்லிட்டுப் போக வேண்டியதுதானே” என்று சொல்ல எம்எஸ்வி முதலில் போட்டியிலிருந்து பின் வாங்கினார்.
“சரிண்ணே நான் முதலில் விலகிக்கிறேன், நீங்க மூன்று பேரும் ஒரு முடிவுக்கு வாங்க” என்று உட்கார்ந்துவிட்டார். ஆனால் மற்ற மூவரும் விடுவதாக இல்லை.
அப்போது வாசலில் “சார்..போஸ்ட்” என்று குரல் கேட்டது. உடனே கவிஞர், ஆஃபீஸ் பாயை அழைத்து “யப்பா அந்த போஸ்ட்மேனை உள்ளே கூப்பிடு” என்றார். “அவனை எதுக்கு கூப்பிடுறீங்க?” என்று பாலாஜி கேட்க “பாலு, நீ கொஞ்சம் சும்மா இரு. நாம எல்லோரும் சினிமாவில் இருப்பவர்கள். இந்த துறைக்கு சம்மந்தமில்லாத போஸ்ட் மேனை செலக்ட் பண்ணச் சொல்வோம்” என்றார்.
போஸ்ட்மேனும் வந்தார். அவரிடம் “தம்பி எங்களுக்காக நீ ஒரு அரை மணி நேரம் ஒதுக்க முடியுமா?” என்று கேட்க “சரி, சொல்லுங்க சார்” என்றார்.
“இது ஒரு பர்த்டே பார்ட்டியில் பாடும் பாட்டு. இப்போ நாங்க நாலு மெட்டு போட்டுக் காட்டுவோம். அதுல உனக்கு எது பிடிக்கிறதுன்னு நீ சொல்லணும்” என்று சொல்லி விட்டு “விசு அந்த நாலு ட்யூன்களையும் வாசித்துக் காட்டு” என்று சொல்ல எம்எஸ்வியும் வாசித்தார். கண்ணை மூடிக் கொண்டு கேட்ட அந்த போஸ்ட்மேன் “சார், அந்த மூணாவது மெட்டு அருமையா இருக்கு சார்” என்று சொல்ல இயக்குனர் திருலோக் முகத்தில் வெற்றிப்புன்னகை. ஆம் அது அவர் தேர்ந்தெடுத்த மெட்டு.
“ரொம்ப நன்றிப்பா” என்று போஸ்ட்மேனை அனுப்பி வைத்தனர்.
புன்னகையுடன் பாலாஜியைப் பார்த்தார் இயக்குனர். “பாலு, உங்களையெல்லாம் விட மக்கள் ரசனையை நன்கு அறிந்தவன் நான் என்று அந்த போஸ்ட்மேன் தெளிவுபடுத்தி விட்டான்” என்றார்.
அப்போது கண்ணதாசன் “விசு, அந்த போஸ்ட்மேன் செலக்ட் பண்ணிய ட்யூனை வாசி. டேய் பஞ்சு (வேறு யார், பஞ்சு அருணாச்சலம்தான்) நான் சொல்ல சொல்ல எழுதிக்கிட்டே வா” என்று வழக்கம் போல வரிகளைக் கொட்டத் துவங்கினார்.
கேட்டவரெல்லாம் பாடலாம்
என்பாட்டுக்கு தாளம் போடலாம்
பாட்டினிலே சுவையிருக்கும்
பாவையரின் கதையிருக்கும்
மனமும் குளிரும் முகமும் மலரும்
ஓ….ஓ….ஓ….ஓ…ஓஓஓஓஓஓஓஓ
பாடல் அருமையாக அமைந்ததுடன், 1967 ல் டாப் டென் பாடல்களில் ஒன்றாக அமைந்தது.
ஒரு பொதுஜனப் பிரதிநிதி தேர்ந்தெடுத்த மெட்டு இது.
இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, இது போல நாலைந்து ட்யூன்களில் இருந்து ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் வரும்போது, எம்எஸ்வி அவர்களைப்பார்த்து கவிஞர் கண்ணதாசன் “விசு, வாசல்லே யாராவது போஸ்ட்மேன் வர்ரானா பார்” என்று கிண்டலடிப்பார்.
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...4c&oe=5AF22EBB
Balasubramanian bk
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...cc&oe=5AEF3D32
Paravasam nayagan
நடிகர் திலகமும், அவரது நாடகக்கலை ஆசான் சக்தி கிருஷ்ண சாமியும் கோயில்பட்டியில் ஒரு நாடகம் முடித்துக்கொண்டு திருநெல்வேலிக்கு காரில் சென்று கொண்டிருக்கிறாா்கள். வழியில் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட கயத்தாறு ஊா் வருகிறது.
சிவாஜியின் நினைவுகள் பல வருடங்கள் பின்னோக்கி போகிறது.
திருச்சியில் சிறுவயதில் தான் பாா்த்த கட்டபொம்மு தெருக்கூத்து. எந்த கூத்தை பாா்த்து நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டு நாடக உலகத்துக்குள் நுழைந்தோமோ அந்த கட்ட பொம்மனின் வரலாற்றை நாடகமாக செய்தால் என்ன எனும் எண்ணம் கொ...ப்பளிக்க தொடங்கியது.
தன் ஆசையை ஆசானிடம் சொன்னாா்.
சக்தியும் ஒப்புகொண்டாா்
ஒரே மாதத்தில் நாடக திரைக்கதையை தயாரித்து சிவாஜியிடம் ஒப்படைத்தாா்.
நாடகத்தில் இருந்த புதுமையான திரைக்கதை அமைப்பும், தரம் வாய்ந்த வசனங்களும் சிவாஜியை வெகுவாக கவா்ந்தன.
உடனடியாக சிவாஜி நாடக மன்றத்தை உருவாக்கினாா்.
மொத்தமாக ரூ.50,000 செலவானது.
1957ம் ஆண்டு ஆகஸ்டு 28ம்தேதி, சேலத்தில் பொருட்காட்சியில் வீர பாண்டிய கட்ட பொம்மன் நாடகம் அரங்கேறியது.
நாடகம் மாபெரும் வெற்றி.
அடுத்தடுத்து நாடகம் பல ஊா்களிலும் அரங்கேறியது.
நான்கே வருடங்களில் நூறுமுறை அரங்கேறும் அளவுக்கு புகழின் உச்சிக்கு சென்றது.
100 அரங்கேற்றங்கள் முடிந்த பின்பு வசூலித்த தொகையை கணக்கிட்டு பாா்த்த சிவாஜிக்கு நம்பவே முடியவில்லை.
மொத்த வசூல் ரூ.32 லட்சங்கள். மிகுந்த மகிழ்ச்சியடைந்தாா்.
அந்த முழுத்தொகையையும் தமிழகம் முழுவதிலுமுள்ள பல பள்ளிகளுக்கு நன்கொடையாக கொடுத்துவிட்டாா்.
வரி கட்ட மறுத்த கட்டபொம்மன்
வாரி வழங்கும் நடிகர் திலகமாக மாறினாா்....!
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...de&oe=5ABD7E01
Sekar Parasuram
விடுமுறை நாள் கொண்டாட்டம்,
HOLIDAY SPECIAL
தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பு செய்யப்படுவதில் வேறு எந்த ஒரு நடிகரின் திரைப்படங்களும் இத்தனை இடம் பிடிக்க முடியாத ஒன்று,
நடிகர் திலகத்தின் சரித்திர சாதனை நிகழ்த்திய காவியங்கள் இன்று
தங்கப் பதக்கம்,
திரிசூலம்,
கௌரவம்,
அவன் ஒரு சரித்திரம்,
புண்ணிய பூமி...
என நம்மை திகப்பில் மூழ்கடிக்கிறது!!
பிற்பகல் 1:30 க்கு கேப்டன் டிவியில்- புண்ணிய பூமி,
பிற்பகல் 1:30 க்கு ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்-- அவன் ஒரு சரித்திரம்,
பிற்பகல் 2:00 மணிக்கு ஜெயா டிவியில்-- தங்கப் பதக்கம்,
இரவு 7:00 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில்-- திரிசூலம்,
இரவு 10:00 மணிக்கு ஜெயா மூவியில்-- கௌரவம்,
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...f5&oe=5AEAA727
Sundar rajan
மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே,
தேசியம், தேசத்திற்காக, தேசத்தின் விடுதலைக்காக பாடுபட்டவர்களை நம் முன் நிறுத்தி இன்றளவும் அவர்களின் பெருமையை இன்றைய தலைமுறையினரும் உணர வைத்துக் கொண்டிருப்பவர் நமது நடிகர்திலகம் அவர்கள்,
சுதந்திரதினம் மற்றும் குடியரசு தினம் ஆகியவற்றைக் கொண்டாட தகுதி பெற்றவர்கள் நடிகர்திலகத்தின் அன்பு இதயங்கள், மற்ற இயக்கத்தினர் இந்த நாட்களைக் கொண்டாட மறந்தாலும், நம் நடிகர்திலகத்தின் அன்பு இதயங்கள் எந்த இயக்கத்தில் இருந்தாலும், சுதந்திரதினம் மற்றும் குடியரசுத...ினத்தன்று நிகழ்ச்சி நடத்திக் கொண்டாடுவார்கள்.
இந்தக் குடியரசுதின விழா மதுரை மற்றும் மதுரையைச் சுற்றியுள்ள மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் அன்பு இதயங்களுக்கு சிறப்பு வாய்ந்ததாக அமைகிறது.
ஆம், அன்பு இதயங்களே
வரும் 26.01.2018,வெள்ளி முதல் குடியரசுதினத்தை முன்னிட்டு, மதுரை சென்ட்ரல் திரையரங்கில் நடிகர்திலகத்தின் மாபெரும் வெற்றிக் காவியம் பாவமன்னிப்பு வெளியாகிறது.
இந்த ஆண்டின் மதுரையில் வெளியாகும் நடிகர்திலகத்தின் முதல் திரைப்படம் என்ற பெருமையை பெறுகிறது பாவமன்னிப்பு,
அன்பு இதயங்களே, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்திற்கு தயாராவீர்.......
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...8d&oe=5AE9EE01
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்
53 வது வெற்றிச்சித்திரம்
தங்கப்பதுமை வெளியான நாள் இன்று
தங்கப்பதுமை 10 ஜனவரி 1959
https://upload.wikimedia.org/wikiped...mai_poster.jpg
https://i.ytimg.com/vi/F2cIi1Q1CPg/hqdefault.jpg
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...53&oe=5AFDE59B
நடராஜன்.P
தி இந்து
நடிப்புக்கு சிவாஜி!
பூ. கொ. சரவணன்
சிவாஜி கணேசன் - சந்தேகமே இல்லாமல் ஒரு மகத்தான கலைஞன். தமிழ்நாட்டின் தமிழ் அவர் வருவதற்கு முன் சினிமாவில் எப்படி இருந்தது என்று நீங்கள் அன்றைய படங்களை பார்த்து இருந்தால் நொந்து போவீர்கள். அந்த சிம்மக்குரல் அதை புரட்டிப்போட்டது. உச்சரிப்பு என்பதையும்,வெளிப்படுத்தல் என்பதிலும் பலரும் அவரைத்தான் திருட்டுத்தனமாக பிரதி எடுத்தார்கள்.
பானர்மன் வீரபாண்டிய கட்டபொம்மன் எப்படி நடந்தார் என்று விவரித்து இருந்தாரோ அப்படியே இருந்தது சிவாஜியின் நடை . சிவாஜியிடம் அதை தாங்கள் படித்து இருக்கிறீர்களா என்று பிற்காலத்தில் கேட்ட பொழுது ,"நானெங்கே அதெல்லாம் படிச்சேன். ஒரு வீரன் அப்படினா அப்படித்தான் நடப்பான் !" என்றாராம் கம்பீரமாக
அண்ணாவின் ‘சிவாஜி கண்ட ஹிந்து சாம்ராஜ்யம்’ நாடகத்தில் இவரின் நடிப்பை பார்த்து மெச்சிய பெரியார், ‘ சிவாஜி’ என்று பட்டம் தர வி.சி.கணேசன் ‘சிவாஜி’ கணேசன் ஆனார்.
திமுகவை விட்டு சிவாஜி விலகியதும்,"நம்மால் அடையாளம் காட்டப்பட்டவர் அவர்!" என்று கட்சியினர் சொல்ல ,"என்ன பேசறீங்க? அமெரிக்காவை கொலம்பஸ் அடையாளம் காட்டித்தான் அதுக்கு பெருமை அப்படிங்கற மாதிரி இருக்கே இது. " என்று அண்ணா வேகமாக மறுத்திருக்கிறார். சிவாஜி அவர்களுக்கு பெரியாராக நடிக்க வேண்டும் என்கிற ஆசை இறுதிக்காலம் வரை இருந்தது. நிறைவேறத்தான் இல்லை.
என்றைக்கும் அவர் படப்பிடிப்புக்கு தாமதமாக போக மாட்டார். ஒருமுறை மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ் மற்றும் இவர் நடித்த ‘ஜல்லிக்கட்டு’ படத்தில் அதிகாலை மூன்று மணிக்கு சூட்டிங் என்றார்கள், இவர் மேக்கப் உடன் வந்து நின்றிருந்தார். யாரும் வந்திருக்கவில்லை. லேட்டாக வந்து தலை சொரிந்தவர்களை பார்த்து “நாளைக்கு மூன்று மணிக்கு சூட்டிங் வைத்துக்கொள்ளலாம்" என்றாராம் கூலாக.
ஒரு வசனத்தை ஒரு முறை அல்லது இருமுறை படித்து காட்டினால் போதும் அப்படியே சொல்லி நடித்து விடுவார் "நீயும் நானுமா.. கண்ணா நீயும் நானுமா ? " பாடலை டி.எம்.எஸ் அவர்களை பலமுறை பாடச்சொல்லி நடித்திருக்கிறார். "ஏன் ?" என்று கேட்டதற்கு "ஒவ்வொரு சரணத்துக்கும் ஒவ்வொரு உணர்ச்சி காட்டியிருக்கார் டி.எம்.எஸ். அவர் பாடின பாட்டுக்கு நான் நியாயம் பண்ணனும் இல்லையா ?" என்று கேட்டாராம்.
யாருக்கும் வாழ்த்து சொல்ல போகாத காமராஜர் கொட்டும் மழையில் இவரைத்தேடி வந்து மாலை போட்டுவிட்டு போகிற அளவுக்கு இருவரும் நெருக்கம். நயாகரா நகரத்தந்தையாக பண்டித நேருவுக்கு பின்னர் பொறுப்பேற்க வைக்கப்பட்ட இந்தியர் இவர் தான்.
திலீப் குமார் ஹிந்தி திரைப்பட விழாவில் சிவாஜியை அவரின் மகனுக்கு அறிமுகம் செய்து வைத்தார். "உங்க அளவுக்கு பெரிய நடிகரா ?" என்று அவரின் மகன் கேட்க அவர் அவசர அவசரமாக தலையசைத்து மறுத்து ,"எங்களுக்கெல்லாம் பல மடங்கு மேலே !" என்று சொல்லி கைகளை மேலே உயர்த்தி காண்பித்து இருக்கிறார்.
சிறந்த நடிகருக்கான விருது எப்பொழுதும் அவருக்கு வழங்கப்பட்டதில்லை. ‘தேவர் மகன்’ படத்துக்கு ஸ்பெஷல் ஜூரியின் விருது தரப்பட்ட பொழுது கம்பீரமாக அதை ஏற்க மறுத்துவிட்டார். ‘செவாலியே’ விருதுக்கு பிறகு, தமிழகத்துக்கான முதல் தாதா சாகேப் பால்கே விருது இந்த மகத்தான கலைஞனுக்கு வழங்கப்பட்டது. அறுபதில் கெய்ரோ நகருக்கு சிவாஜி ஆசிய ஆப்ரிக்க நடிகர்களின் விழாவுக்கு போயிருந்தார். இவரை ஏதோ தொழில்நுட்ப கலைஞர் என்று அனைவரும் எண்ணிக்கொண்டு இருந்தார்கள். சிறந்த நடிகருக்கான விருது ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்துக்காக சிவாஜி கணேசனுக்கு என்று அறிவிக்கப்பட்ட பொழுது உணர்ச்சிவேகத்தில் விழப்போன இவரை நடிகை பத்மினி தான் தாங்கிப்பிடித்தார்.
நடிப்பின் பால நூல்களில் ஒன்றான ஸ்டெனிஸ் லாவோஸ்கி தியரி நூலில் ‘அறுபத்தி நான்கு முகபாவங்களை காட்டும் கலைஞர்’ என்று குறிப்பிடப்படுவது சிவாஜி தான்.
"நடிப்பு என்பது புலி வேட்டைக்கு போகிற மாதிரி,நெத்தியில் குறி பார்த்து சுடணும். இல்லைனா புலி உன்னை சாப்பிட்டுடும். அந்த பயம் இந்த நாற்பது வருசமும் என் அடி வயித்தில் இருக்கு. அதான் இன்னமும் முன்னாடி ஒத்திகை பார்த்துட்டு போறேன். " என்ற அவரின் வரிகளை அவர் எப்படி தன் கலையை மதித்தார் என்பதற்கு சாட்சி.
சிவாஜியின் மரண ஊர்வலம் . மரத்தில் அமர்ந்திருந்த ஒரு ரசிகர் ஆவேசத்துடன் " இருந்தது ஒரே நடிகன். அவனையும் கொன்னுட்டீங்களேடா!" என்று கதறினார்.
நடிகர்களுக்கு நிறைய ரசிகர்கள் இருப்பார்கள். நிறைய நடிகர்கள் சிவாஜிக்கு ரசிகர்களாக இருந்தார்கள், இருக்கிறார்கள் என்பதே சிவாஜி என்னும் மகாக் கலைஞனின் பெருமைக்குச் சான்று.
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...83&oe=5AF53F75
Sundar Rajan
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...49&oe=5AB097FE
அன்பிற்குரிய சிவாஜியவாதிகளே,
பராசக்தியிலிருந்து
பூப்பறிக்கவருகிறோம் வரை
அனைத்துப் படங்களிலும்,
... நடிகர்திலகத்தின் ஸ்டைலான போஸ் இருக்கும். அதிலும் சில படங்களில் அவர் கொடுக்கும் ஸ்டைலான போஸ், இனி யாரும் அப்படிப்பட்ட போஸ் கொடுக்க முடியாது.
ஆனால் படத்தின் சுவரொட்டிகளில் பார்த்தோமென்றால் அந்த ஸ்டைலான போஸ் இடம் பெறாது. ஏன் என்று தெரியவில்லை.
ஆனால்,
இன்று நமது இதயங்கள் வெளியிடும் போட்டோவில் தலைவரின் ஸ்டைலைப் பார்க்கும் போது, நமக்கு மட்டுமல்ல அனைவருக்கும் வியப்பளிக்கிறது,
இதோ இந்தப் போட்டோ,
இன்பா அவர்கள் எழுதிய கலைமகள் கைப்பொருள் சிவாஜி ஆளுமை என்ற நுாலிலிருந்து,
சிறிய மாற்றத்துடன்,
Vasudevan
இன்று ரொம்ப ஸ்பெஷலான ஸ்டில்.
. இந்த ஸ்டில்லை பார்த்துப் பார்த்து வியந்து கொண்டே பதிகிறேன். ஆச்சரியம் தீர்ந்தபாடில்லை. குறைந்தபாடில்லை. என்ன ஒரு ஸ்டைல்! பேண்ட் பாக்கெட்டுக்குள் கை விட்டுக் கொண்டு, லேசாக தலை சாய்த்து ,படுஸ்டைலாக ஸைட் லுக் விட்டுக் கொண்டு, அம்சமான உடையில் இந்த 'ஸ்டைல் சக்கரவர்த்தி' நடக்கும் அழகை எவரேனும் வர்ணித்துவிட முடியுமா? திரு ரஜினிகாந்த் அவர்கள் இந்தக் காட்சியை பலமுறை கண்டிப்பாகப் பார்த்திருக்க வேண்டும். அவர் அப்படியே நம் தலைவரைப் பின்பற்...றி இந்த நடையை பல படங்களில் நடப்பார்.
இந்த புதிர் முடிவில் அந்த நடையை மட்டும் வீடியோ காட்சியாக அளிக்க முயல்கிறேன். இப்படி ஒரு ஸ்டைலை அப்போதே செய்து காட்டிய நம் இதய தெய்வத்தின் மகிமையை என்னெவென்று புகழ்வது?
எப்படித்தான் இதையெல்லாம் செய்தார்? எங்குதான் கற்றுக் கொண்டார்? இல்லை ..இல்லை...இறைவன் எதையும் கற்பதில்லை. எல்லோருக்கும் கற்றுக் கொடுப்பான் தானே! அந்த இறைவனுக்கும் கற்றுக் கொடுப்பவர் நம் இறைவன் ஆயிற்றே!
. இந்த ஸ்டைலில் மயங்கி வீழ்ந்தவன்தான். இன்னும் மூர்ச்சை தெளியவில்லை.
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...18&oe=5AFBB056
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்
257 வது வெற்றிச்சித்திரம்
சாதனை வெளியான நாள் இன்று
சாதனை 10 ஜனவரி 1986
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...c1&oe=5AF7A644
நடிகர்திலகம்அவர்கள் நடித்த
257வது படம் -சாதனை -வெளியான நாள்=10/1/1986.
சாதனை படமானது தேவி பாரடைஸில் பகல் காட்சி 133 நாட்கள் ஓடியது. நாகேஷ் திரையரங்கில் 112 நாட்கள் ஓடிய ஓரே திரைப்படம்.32ஆண்டுகளுக்கு முன்பாக அன்றய காலத்திலேயே தயாரிப்பாளர் A S பிரகாசம் அவர்களுக்கு பத்து இலட்சம் இலாபம் கொடுத்த படம் என்று தினமனி கதிரில் செய்தி வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.(தகவல் net)
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்
35 வது வெற்றிச்சித்திரம்
பராசக்தி (தெலுங்கு) வெளியான நாள் இன்று
https://i.ytimg.com/vi/SdnOlP94x2g/maxresdefault.jpg
பராசக்தி (தெலுங்கு) 11 ஜனவரி 1957
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்
44 வது வெற்றிச்சித்திரம்
பொம்மல பெள்ளி ( தெலுங்கு) வெளியான நாள் இன்று
பொம்மல பெள்ளி ( தெலுங்கு) 11 ஜனவரி 1958
https://i.ytimg.com/vi/WfaEBGyze5Y/maxresdefault.jpg
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்
174 வது வெற்றிச்சித்திரம்
மனிதனும் தெய்வமாகலாம் வெளியான நாள் இன்று
மனிதனும் தெய்வமாகலாம் 11 ஜனவரி 1975
http://3.bp.blogspot.com/-CeRCUSrJdC...vamagalam1.JPG
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்
276 வது வெற்றிச்சித்திரம்
ஞானப்பறவை வெளியான நாள் இன்று
ஞானப்பறவை 11 ஜனவரி 1991
https://upload.wikimedia.org/wikiped..._DVD_cover.jpg
vetrivel vetri
அமெரிக்கா அரசு முறை சுற்று பயணத்தின் ஒரு கட்டமாக பிரபல அமெரிக்க நடிகர் மார்லன் பிராண்டோ அவர்களிடம் நடிகர்திலகம் உரையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது சத்யஜித் ரே அவரின் படங்களை குறிப்பிட்டு இந்தியா முழுவதும் பஞ்சை பராரிகள் என்ற பொருள் பட பேசினார் பிராண்டோ.
கொதித்து போன நடிகர் திலகம் மிஷ்டர் பிராண்டோ நீங்கள் அணிந்துள்ள உடைக்கும் என்னுடைய உடைக்கும் ஏதாவது வித்தியாசம் உள்ளதா ரே அவர்கள் படமெடுத்தது உங்களுக்கல்ல எங்கள் நாட்டு அரசியல் வாதிகளுக்கு ஏழ்மைபட்ட மக்களை அடையாளம் காட்ட அவர்களின் வாழ்க்கை தரம் உயர பாடுபட வேண்டவே என்று பதிலழிக்க பிராண்டோ வெலவெலத்து விட்டாராம்
எந்த சூழ்நிஸையிலும் தாய்நாட்டை விட்டு கொடுக்காத தேசபக்தனல்லவா
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...25&oe=5AFF4466
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...64&oe=5AFAFAB5
vetrivel vetri
திரை வரலாற்றை கூறும் ஸ்டானி லாவோஸ்கி தியரி என்ற புத்தகத்தில் ஒரே நேரத்தில் இருபத்தி நான்கு வகையான உணர்ச்சிகளை வெளிகாட்டும் முகம் என்று நடிகர் திலகத்தின் படம்மட்டுமே முதல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...0b&oe=5AF12B45
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்
20 வது வெற்றிச்சித்திரம்
காவேரி வெளியான நாள் இன்று
காவேரி 13 ஜனவரி 1955
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...e1&oe=5AFC497F
https://i.ytimg.com/vi/pRuG1Nr0LCo/mqdefault.jpg
பொங்கல் திருநாளில் வெளிவந்த
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்
வெற்றிச்சித்திரங்கள்
பரதேசி (தெலுங்கு) 14/01/1953
நான் பெற்ற செல்வம் 14 /01 /1956
நல்லவீடு 14/01 /1956
இரும்புத்திரை 14 /01/1960
பார்த்ததால் பசி தீரும் 14 /01/1962
கர்ணன் 14 /01/ 1964
பழநி 14/01/1965
கந்தன் கருணை 14/01/1967
எங்கமாமா 14/01/1970
இரு துருவம 14/01/1971
அவன் ஒரு சரித்திரம் 14/01/1977
மோகனப் புன்னகை 14/01/1981
பெஜவாடா பெப்புலி (தெலுங்கு) 14/01/1983
திருப்பம் 14/01/1984
ராஜமரியாதை 14/01/1987
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...0f&oe=5AE57350
Sundar Rajan
அன்பிற்குரிய சிவாஜியவாதிகளே,
சமீபத்தில் இன்பா அவர்கள் எழுதிய
கலையில் எரிந்த கலைஞன் சந்திரபாபு என்ற புத்தகம் படித்தேன்,
... அதில் நமது நடிகர்திலகம் அவர்கள் சொன்னதைச் செய்வதில் உறுதியாய் இருப்பார், வாக்கு கொடுத்துவிட்டால் அதை நிறைவேற்றியே தீருவார் என்பதற்கு உதாரணமாக ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிட்டு இருந்தார்,
அதாவது, ஆந்திர மாநிலம் நகரியில் பெருந்தலைவரின் சிலை திறக்க தான் வருவதாக உறுதி அளித்திருந்தார்,
ஆனால் அன்று தமிழகம் மற்றும் ஆந்திரமாநிலத்தில் கனத்த மழை காரணமாக சாலை முழுவதும் வெள்ளக்காடாக இருந்தது,
சிலை திறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் தலைவர் வருவாரா மாட்டாரா என்று தெரியாமல் இருக்க,
காலை 4.30 மணிக்கே கிளம்பி ரெடியாகி விட்டார். உடன் வரும் மன்றத்து மறவர்கள் காலதாமதாக வர தலைவர் கிளம்பியிருப்பதைப் பார்த்து வியந்தனர்.
சென்னையில் இருந்து கிளம்பி தான் சொன்ன நேரத்திற்கு நகரிக்கு வந்துவிட்டார் சிவாஜி அவர்கள்.
அன்பு இதயங்களே,
நமது தலைவரைப் போல் நாமும் சொன்ன சொல் காப்பாற்றுவோம்.
நேரந்தவறாமையைக் கடைபிடிப்போம்,