-
மது ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொள்ள ஒருமுறை தஞ்சைக்கு வருகிறார் நம் மன்னவர்.
இடம் சாமியார் மடம் தெற்கு வீதியில்...திருவையாறு சாலை முதல் கொடி மரத்து மூலை வரை எங்கும் மக்கள் வெள்ளம்....தலைவரின் கார் கோனார் தோட்டம் வழியே வந்து கொண்டு இருக்க வீதி வெறிச்சோடி கிடக்க ஒரு வீட்டில் குழந்தை அழும் சத்தம் கேட்டு தலைவர் காரை நிறுத்த சொல்லி வீட்டின் உள்ளே நுழைகிறார்.
குழந்தை பிறந்து இருபது நாள் ஆன நிலையில் அந்த தாய் தன் வீட்டுக்குள் ஒரு தங்க விக்கிரகம் போல தலைவர் நுழைவதை பார்த்து வியந்து வாய் பேச முடியாமல் திகைக்க.
அம்மா அழும் குழந்தை உங்கள் குழந்தையா என்று கேட்டு அதை தூக்கி வாசலுக்கு வந்து இருந்த ஒரு மர இருக்கையில் அமர்ந்து குழந்தையை கொஞ்ச துவங்க....
ஐயா தெரு மொத்த சனமும் உங்களை பார்க்க அங்கே போய் இருக்காங்க...நான் பச்சை உடம்புகாரி என்று போகவில்லை என்று சொல்ல..
விஷயம் காட்டு தீயை போல பரவ மொத்த ஊரும் மீண்டும் இங்கே ஓடி வர அந்த குழந்தையின் தந்தை மாயவனும் வர.
அவரை அருகில் தலைவர் அழைக்க மாயவன் மருண்டு மறுக்க காரணம் அவர் குடி போதையில் இருந்தது....தெரிந்து தலைவர் அவரை முறைக்க....
அவர் காலில் விழுந்து ஐயா என்னை மன்னித்து விடுங்கள் என்று கதற...உங்க கையில் இருக்க என் மகன் கொடுத்து வைத்தவன் அவனுக்கு நீங்களே ஒரு பெயர் இப்போதே இங்கே வையுங்க என்று சொல்ல.
தலைவர் அண்ணாதுரை என்று பெயர் சொல்லி அழைத்து... மாயவா நான் வந்து இருப்பது மது ஒழிப்பு நிகழ்வில் பேச ஆனா நீ இப்படி இருக்கலாமா என்று கடிந்து கொள்ள.
தலைவரே இனி என் வாழ்நாளில் இந்த மதுவை தொட மாட்டேன் என்று கதறி அழ தலைவர் அருகில் அவரை அழைத்து நம்பலாமா என்று கேட்டு அவரின் வழிந்த கண்ணீரை தன் கை குட்டையால் துடைக்க.
அது தவறி கீழே விழ மாயவன் அதை எடுத்து தன் மடியில் செருகி கொள்ள வேண்டாம் அது பழசு என்று தலைவர் சொல்ல.
உங்கள் கரம் பட்ட இந்த கைக்குட்டை தான் என்னை திருத்தும் ஆயுதம் இது இனி எனக்கே என்று சொல்ல.
தலைவர் வழக்கம் போல பணத்தை அள்ளி அண்ணாதுரையின் தாயின் கையில் கொடுத்து கை கூப்பி விடை பெற சுற்றி நின்ற மொத்த கூட்டமும் வாய் அடைத்து நிற்க.
நிகழ்வின் தொடர்வதாக மாயவன் தன் குடி பழக்கத்தை நிறுத்தி 25 ஆண்டுகள் தாண்டி போகின்றன.
ஆரம்பத்தில் தலைவரை சந்தித்த மாயவன் திடீர் என்று மது அருந்தும் பழக்கம் நிறுத்த அவர் உடல் நிலை பாதிக்க பட மருத்துவர்கள் இப்படி திடீர் என்று நிறுத்துவது ஆபத்து என்று சொல்லியும்.
என் தலைவருக்கு நான் வாக்கு கொடுத்து விட்டேன்..நான் இறந்தாலும் பரவாயில்லை....இனி மதுவை தொட மாட்டேன் என்று சொல்ல...
நிகழ்வு தொடர்ச்சி..
இன்று மாயவனின் மகன் அண்ணாதுரை வாலிப பருவத்தில் இருக்க....தன்னை அண்ணாதுரை என்று அண்ணா அவர்களின் பெயர் சொல்லி அழைக்க விரும்பாமல்
தன் தந்தை திருந்த காரணம் ஆக இருந்த தலைவர் படத்தை பூஜை அறையில் வைத்து தனது பெயரை தங்க துரை என்று மாற்றி கொண்டு. தலைவர் அன்று விட்டு சென்ற கை குட்டை அதையும் வீட்டில் வைத்து வணங்கி மகிழ்வது நமக்கு மிகவும் மகிழ்ச்சி தரும் செய்திதானே?
மது ஒழிப்பு மாநாட்டு நிகழ்வுக்கு சென்ற நம் தலைவர் ஒருவரை ஆவது அன்று திருத்திய செயல் உண்மையில் வரலாற்று நிகழ்வே ஆகும்..
வாழ்க தலைவர் புகழ்.
தொடரும்..உங்களில் ஒருவன் நெல்லை மணி.
மன்னவன் என்றொரு மாயவன் தோன்றிய அடுத்த நிகழ்வில் சந்திப்போம்..நன்றி.
தரணி போற்ற வாழ்ந்த எங்கள் மன்னவரே இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..எங்கள் அனைத்து உண்மை உங்கள் நெஞ்சங்கள் சார்பாக...
-
என்றும் வெற்றித் தலைவர் புரட்சித்தலைவர் கலையுலகில் காலத்தால் அழியாத அற்புத காவியங்களை கொடுத்தவர் நம் புரட்சித்தலைவர். மக்களின் மனங்கவர்ந்த நாயகன் என்றும் புரட்சித்தலைவரே !
புரட்சித்தலைவரின் காலத்திற்குப் பிறகு இன்று வரை எத்தனையோ நடிகர்கள் வந்துவிட்டார்கள் ஆனால் எவரின் படங்களும் சொல்லிக் கொள்வது போல் இருப்பதில்லை ... 10 திரைப்படங்கள் வெளிவந்தால் அதில் ஒன்று இரண்டுதான் பார்ப்பது போல் இருக்கும். ஆனால் புரட்சித்தலைவரின் திரைப்படங்கள் அப்படி இருக்காது.
புரட்சித்தலைவரின் அனைத்து திரைப்படங்களுக்கு இன்று வரையில் நல்ல வரவேற்பு இருக்கின்றன. இன்றைய இளைய தலைமுறை புரட்சித்தலைவரின் ரசிகர்களாக இருக்கும் நாங்கள் விவரம் தெரிந்த நாள் முதல் இன்று வரையில் புரட்சித்தலைவரின் திரைப்படங்களை திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டே இருக்கின்றோம்.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரைப் போல சரித்திரம் போற்றும் நாயகனாக எவராலும் வரமுடியாது. அதேபோல் புரட்சித்தலைவரைப் போல அற்புதமான, அருமையான, அதிரடியான திரைப்படங்களுக்கு ஈடு இணை எந்த திரைப்படங்களும் கிடையாது.என்றும் என்றென்றும் அனைவராலும் போற்றப்படும் மாபெரும் சரித்திரநாயகர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க.......SSub.
-
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின்*104 வது*பிறந்த நாளை முன்னிட்டு**
ஞாயிறு* *அன்று* (17/01/2021)
தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் திரைக்காவியங்கள் விவரம்*
-----------------------------------------------------------------------------------------------------------------------
ஜெயா மூவிஸ் - காலை 7 மணி - ஒரு தாய் மக்கள்*
* * * * * * * * * * * * * * * *காலை 10 மணி - பணம் படைத்தவன்*
* * * * * * * * * * * * * * * மாலை 4 மணி - பட்டிக்காட்டு பொன்னையா*
** * * * * * * * * * * * * * * இரவு* 7 மணி - இதய வீணை*
ஜெயா டிவி* - பிற்பகல் 1.30 மணி - ஆயிரத்தில் ஒருவன்*
* * * * * * * * * * * * *இரவு 9* *மணி -* குமரிக்கோட்டம்*
சன் லைஃப் - காலை 11 மணி - என் கடமை*
மெகா டிவி -மதியம் 12 மணி - குடியிருந்த கோயில்*
ராஜ் டிவி* - பிற்பகல் 2.30 மணி -உலகம் சுற்றும் வாலிபன்*
மெகா 24 - பிற்பகல் 2.30 மணி- வேட்டைக்காரன்*
* * * * * * * * * * மாலை 6 மணி - நல்ல நேரம்*
பாலிமர் டிவி - இரவு 11 மணி - ராமன் தேடிய சீதை*
மேலும் சில சானல்களில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் படங்கள்*
ஒளிபரப்ப வாய்ப்புள்ளது .
-
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். திரைப்பட*மறுவெளியீடு*தொடர்ச்சி............... ....
------------------------------------------------------------------------------------------------------------------
15/01/21 முதல்* தாம்பரம் நேஷனல் , &* காஞ்சிபுரம் நாராயணமூர்த்தி*
* * * * * * * *அரங்குகளில் நினைத்ததை முடிப்பவன் -தினசரி 3 காட்சிகள்*
தகவல் உதவி :திரு.ராமு, மின்ட்.
17/01/21 முதல் தூத்துக்குடி மினிராஜ் அரங்கில் எங்க வீட்டு பிள்ளை*
தகவல் உதவி : திரு. ஜெயமணி , தூத்துக்குடி*
-
அவதார புருஷர் அவதரித்த தினம்..!
சைதை சா. துரைசாமி
சென்னை பெருநகர முன்னாள் மேயர்
-
’வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம்தனிலே நிற்கின்றார்’ – என்று ’மன்னாதி மன்னன்’ படத்தில் பாடியபடியே, புரட்சித்தலைவர், மரணத்துக்குப் பிறகும் மக்களின் மனதில் நிலையாக வாழ்ந்துகொண்டிருக்கிறார். இரட்டை இலையைத் தவிர வேறு சின்னத்தில் ஓட்டு போடத் தெரியாத ஒரு பரம்பரையைப் பெற்றிருக்கிறார். இன்றும் சமாதியில் காதுவைத்து, எம்.ஜி.ஆரின் கடிகாரச்சத்தம் கேட்கும் இளம் தலைமுறைகளின் ரத்தத்தில் கலந்துள்ளார். இன்றுவரை தியேட்டர்களில் புரட்சித்தலைவரின் பழைய படங்கள் வெளியாகும்போது, எந்த எதிர்பார்ப்புமின்றி ஃப்ளக்ஸ், பேனர் வைத்துக் கொண்டாடும் தொண்டர்களைப் பெற்றிருக்கிறார்.
எப்படி இவையெல்லாம் சாத்தியமானது என்பதை அவரது பிறந்த தினத்தில் அறிந்துகொள்வோம். திரையரங்குகளில் எல்லோரும் வணிகரீதியாக பொழுதுபோக்கு படங்களை வெளியிட்டு வந்த நேரத்தில், புரட்சித்தலைவர் மட்டும் மனிதநேயச் சிந்தனை, நேர்மை, வாய்மை, உழைப்பு, குடும்ப உறவு, முதியோருக்கு மதிப்பு என வாழ்வியல் பண்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களை வெளியிட்டார். அதனால்தான், எம்.ஜி.ஆரை இளைஞர்கள் இன்றும் வாத்தியார் என்று ஏற்றுக்கொண்டுள்ளனர்.
புரட்சியாளர்
எம்.ஜி.ஆர். நாடக நடிகர் என்பதால், பாடல்களின் முக்கியத்துவம் அறிந்தவர், அதாவது, சுதந்திரப் போராட்டத்துக்குப் பயன்பட்டது போன்று சமூக முன்னேற்றத்துக்கும் பாடல்கள் பயன்படும் என்று நம்பினார். தன்னுடைய படத்தின் பாடலில் இடம்பெறும் ஒவ்வொரு வார்த்தைக்கும் அக்கறை செலுத்தினார். 1954ம் ஆண்டு வெளியான ‘மலைக்கள்ளன்’ படத்தில் இருந்து, தன்னுடைய படத்தின் பாடல்களை தி.மு.க.வின் பிரசாரத்துக்குப் பயன்படுத்தினார்.
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார்
சமயம் பார்த்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார் – என்று அன்றைய ஆட்சியாளர்களைப் பார்த்து எம்.ஜி.ஆர். தைரியமாகப் பாடியதும், அவரை ஒரு சமூகப் புரட்சியாளராக மக்கள் கொண்டாடினார்கள். அடுத்து, ‘மதுரை வீரன்’ படத்தில் நடித்து, அருந்ததி இன மக்களின் குலதெய்வமாகவே மாறினார். அதனாலே இன்றும் பட்டியலின மக்கள் வீட்டுக்கு வீடு எம்.ஜி.ஆரின் போட்டோவை மதுரைவீரன் சாமியாக வைத்து கும்பிட்டு வருகிறார்கள்.
1958-ல் வெளியான, ‘நாடோடி மன்னன்’ படத்தில் திமுக கட்சிக் கொடி ஏந்திய ஆணும் பெண்ணும் நிற்பது போல 'எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ்' நிறுவனத்திற்கு சின்னம் அமைத்தார். அதனால் கிராமத்து மக்களும் ரசிகர்களும் தி.மு.க. கொடியை எம்.ஜி.ஆர். கொடியாகவே பார்த்தார்கள். புரட்சித்தலைவரும் தி.மு.க.வை தன்னுடைய கட்சியாகவே நினைத்து வளர்த்தார்.
ஏழைகளுக்கும் உழைப்பாளிகளுக்கும் மதிப்பு கொடுப்பதில் புரட்சித்தலைவருக்கு இணையாக வேறு எவரையும் சொல்லவே முடியாது. உழைக்கும் மக்கள் மீதான அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்தும் வகையில் உழைப்பாளி, தொழிலாளி, விவசாயி, ரிக்ஷாக்காரன், மீனவ நண்பன் என்று படங்களுக்கு பெயர் சூட்டி, தன்னை ஏழைகளில் ஒருவன் என்று அனைவரையும் உணரவைத்தார்.
தரை மேல் பிறக்க வைத்தான்
எங்களைத் தண்ணீரில் பிழைக்க வைத்தான்
கரை மேல் இருக்க வைத்தான்
பெண்களைக் கண்ணீரில் குளிக்க வைத்தான் – என்று ’படகோட்டி’ படத்தில் மீனவர்களின் துயரத்தைப் பாடியதன் மூலம் மீனவர்களின் தலைவராகவே மாறினார். பாடல் மட்டுமின்றி, வசனம், காட்சி அமைப்புகளிலும் மக்களின் மனதை தொட்டார். இந்த உலகிலேயே ஒரு தனி மனிதரின் கொள்கைக்காக திரைப்படம் எடுக்கப்பட்டு, அது வெற்றியும் அடைந்தது என்றால், அது புரட்சித்தலைவரின் படங்கள் மட்டும்தான்.
தெய்வப்பிறவி
தன்னுடைய ஒவ்வொரு சோதனையையும், சாதனையாக மாற்றிக் காட்டியவர் புரட்சித்தலைவர். அதனாலே, எம்.ஜி.ஆரை தெய்வப்பிறவியாக மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.
வெற்றிகரமான சினிமா நடிகராக இருந்தாலும், நாடகக்கலையிலும் தொடர்ந்து அக்கறை காட்டினார் புரட்சித்தலைவர். சீர்காழியில் நடைபெற்ற, ‘இன்பக்கனவு’ நாடகத்தில் நடித்த நேரத்தில், மிகப்பருமனான நடிகர் குண்டுமணியை அலேக்காக தூக்கினார். அந்த நேரத்தில் சற்றே சரிந்ததால் கால் எலும்பு முறிந்துவிட்டது. இதையடுத்து, இனிமேல் சண்டைக் காட்சிகளில் எம்.ஜி.ஆர். நடிக்கவே முடியாது என்று வதந்தி பரவியது. ஆனால், அடுத்தடுத்து வந்த ராஜா தேசிங்கு, மன்னாதி மன்னன் படங்களில் முன்னிலும் வேகமாக சண்டையிட்டு வதந்தியை பொய்யாக்கினார்.
அதேபோன்று எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்ட நேரத்தில், ‘எம்.ஜி.ஆர். பிழைக்கவே மாட்டார்’ என்றும், ‘பிழைத்தாலும் அவரால் பேசவே முடியாது’ என்று எதிரிகள் பேசினார்கள். ஆனால், அந்த சோதனையையும் எம்.ஜி.ஆர் சாதனையாக்கிக் காட்டினார். ஆம், துப்பாக்கியால் சுடப்பட்டு, கழுத்தில் கட்டுப்போட்டபடி எம்.ஜி.ஆர். சிகிச்சையில் இருக்கும் படம்தான் தமிழகம் முழுவதும் 1967ம் ஆண்டு தேர்தல் சமயத்தில் ஒட்டப்பட்டன. அந்த புகைப்படத்தைப் பார்த்து பதறிய மக்கள் உதயசூரியனுக்கு ஓட்டு போட்டு அண்ணாவை அரியணையில் ஏற்றினார்கள். தி.மு.க. ஆட்சிக்கு வரக்காரணம் எம்.ஜி.ஆர். மட்டும்தான் என்பதை அண்ணா உணர்ந்திருந்த காரணத்தால்தான், அவரை இதயக்கனியாக கடைசி வரை போற்றி பாதுகாத்தார்.
1984ம் ஆண்டு புரட்சித்தலைவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற நேரத்தில், ‘எம்.ஜி.ஆர். உயிருடன் இல்லை’, ‘அவரது உடல் ஐஸ் பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது’ என்றெல்லாம் வதந்தி பரப்பினார்கள். ஆனால், தமிழக மக்களின் அன்பான பிரார்த்தனைகள் மூலம் அந்த சோதனையையும் வென்று, மருத்துவமனையில் இருந்தபடியே ஆட்சியைப் பிடித்தார். இப்படி, ஒவ்வொரு தோல்வியின் போதும் எம்.ஜி.ஆர். வீழ்ந்துவிட்டார் என்று எதிரிகள் நினைக்க, முன்னிலும் வீரியமாக எழுந்து சாதனை படைத்தார்,
வெற்றி மேல் வெற்றி
அண்ணாவின் மறைவுக்குப் பிறகு கருணாநிதியை ஆட்சிக்கட்டிலில் அமர்த்தியவரும் புரட்சித்தலைவர்தான். சொத்துக்கணக்கு கேட்டதற்காக தி.மு.க.வில் இருந்து புரட்சித்தலைவர் வெளியேற்றப்பட்ட நேரத்தில், தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. நல்லவர்கள், நாணயமானவர்கள், நியாயம், தர்மத்துக்கு கட்டுப்பட்டவர்கள், நேர்மையாளர்கள், கடவுள் பக்தியும் மனசாட்சியும் உள்ள நடுநிலை மக்கள், அர்ப்பணிப்பு குணமிக்க தொண்டர்கள் அனைவரும் புரட்சித்தலைவரின் பக்கம் நின்றனர்.
அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். தோற்றுவித்த நேரத்தில் ஆளும் கட்சியான தி.மு.க., காமராஜர் தலைமையிலான காங்கிரஸை மீறி வெற்றி பெறமுடியுமா என்று பலரும் சந்தேகப்பட்டனர். ஆனால், மக்களின் பேராதரவுடன் தொடர்ந்து 10 ஆண்டுகள் தோல்வியே சந்திக்காமல் முதல் அமைச்சராக பதவி வகித்தார். அந்த மக்களும், தொண்டர்களும்தான் இன்றுவரை அ.தி.மு.க. என்ற மாளிகையின் கடகாலாகத் திகழ்கிறார்கள்.
நாடோடி மன்னன் படத்தில், ‘நாளை போடப்போறேன் சட்டம், மிக நன்மை புரிந்திடும் திட்டம்… நாடு நலம் பெறும் திட்டம்’ என்று பாடியதை நிஜமாக்கிக் காட்டும் ஆட்சி புரிந்த தீர்க்கதரிசி ஆயிரத்தில் ஒருவன் படத்தில், ‘நமது தேவையே பிறருடைய நன்மைதான். மக்களுக்காக நாம் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவர்கள். நமக்கு என சேமித்து வைக்கும் ஆசையை வளர்த்துக் கொண்டால் பிறருக்காக நாம் எதையுமே சாதிக்க முடியாது’ என்று சுயநலமற்ற மனிதநேய சிந்தனையை மக்கள் மனதில் பதியவைத்தார்.
ஏழை மக்களுக்காக எதையும் செய்வதற்கு புரட்சித்தலைவர் தயாராக இருந்தார். ரேசன் அரிசி விலையை புரட்சித்தலைவரின் அரசு ஏற்றவில்லை என்ற காரணத்தால், மத்திய தொகுப்பிலிருந்து அரிசி தருவதை மத்திய அரசு நிறுத்தியது. உடனே, பொங்கியெழுந்து அண்ணா சமாதியில் புரட்சித்தலைவர் உண்ணாவிரதம் இருந்தார். மத்திய அரசுக்கு எதிராக முதன்முதலாக உண்ணாவிரதம் இருந்த முதல்வர் எம்.ஜி.ஆர்.தான். உடனே மத்திய அமைச்சர் ஓடோடிவந்து உண்ணாவிரதத்தை முடித்துவைத்தது வரலாறு.
ஒருமுறை எம்.ஜி.ஆர். தூத்துக்குடி அருகே, கைக்குழந்தைகளுடன் சில பெண்களை சந்தித்தார். 'காலையில் சாப்பிட்டீர்களா' என்றார். இல்லை. காலையில் சமைக்க நேரமில்லை. மாலையில் சென்று ஒரே வேளையாக சமைத்துச் சாப்பிடுவோம் என்றனர். அதிர்ந்தார் எம்.ஜி.ஆர். சென்னை திரும்பியதும் அன்றே தலைமைச்செயலாளர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். சத்துணவுத் திட்டம் பிறந்தது. பெண்கள் தங்கள் குழந்தைகளை பட்டினி போடாமல் உண்ண வழிவகுத்தது
சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து, பணி பாதுகாப்பின்றி புறக்கணிக்கப்பட்ட தொழிலாளர் வர்க்கத்தின் மீது முதன்முதலாக அக்கறை காட்டிவர் புரட்சித்தலைவர். ஒழுங்குபடுத்தப்படாத தொழிலாளர்களாக இருந்த மீனவர், நெசவாளர், பனையேறுவோர், கட்டிடத் தொழிலாளர், கை வண்டி இழுப்போர், மாட்டுவண்டி ஓட்டுவோர், பீடி சுற்றுவோர், சுமை ஏற்றி இறக்குவோர், மண் பாண்டத் தொழிலாளர்கள் என 60 வகையான தொழில் செய்துவந்த லட்சக்கணக்கான தொழிலாளர்களை ஒன்றிணைத்து இந்தியாவிலேயே முதன்முதலாக நல வாரியங்கள் அமைத்து, குறைந்தபட்ச ஊதியம், குடும்ப ஓய்வூதியம், திருமண உதவி, கல்வி உதவி, விபத்து நிவாரணம்,சேமிப்பு பலன் போன்ற நல உதவிகளை வழங்கி, அவர்கள் வாழ்க்கையில் ஒளியேற்றினார் புரட்சித்தலைவர். முதன்முதலாக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுத்ததும், முதியோர்களுக்கு உதவித் தொகை கொடுக்கும் திட்டத்தைக் கொண்டுவந்ததும் புரட்சித்தலைவர்தான்.
ஜாதி, மதத்தின் பெயரால் மக்களுக்குக் கொடுமைகள் நடப்பதை அனுமதிக்கவே மாட்டார். ‘உரிமைக்குரல்’ படத்தில், ’தாழ்த்தப்பட்ட ஜாதி உயர்த்தப்பட்ட ஜாதிங்கிறது எல்லாம் இந்த கேடுகெட்ட சமுதாயம் செய்து வைத்த கொடுமை, என்னைப் பொறுத்தவரை எல்லோரும் ஒரே ஜாதிதான், அது மனித ஜாதி’ என்று வசனம் பேசுவார். மேலும், தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 49 சதவிகிதம் என்று இருந்த இடஒதுக்கீட்டை 68 சதவிகிதம் என உயர்த்தி சமூகநீதியை நிலைநாட்டியதும், புரட்சித்தலைவர்தான்.
திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர் என்றாலும், புரட்சித்தலைவர் தன்னை ஆன்மிக அரசியல்வாதியாகவே தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். அன்னை மூகாம்பிகையை தன்னுடைய அன்னை என்றார். அதேநேரம் அனைத்து மதங்களையும் சமமாகவே மதித்தார். நாகூர் தர்கா அருகே ஒரு கூட்டத்தில் பேசிய எம்.ஜி.ஆர்., ‘நான் கைலி கட் டாத முஸ்லிம், சிலுவை அணியாத கிறிஸ் துவன், திருநீறு அணியாத இந்து...’ என்று உணர்வுபூர்வமாகப் பேசினார்.
புரட்சித்தலைவர் நோய்வாய்ப்பட்ட தருணத்தில், கட்சி பேதமின்றி, ஜாதி, மத பேதமின்றி அனைத்து மத மக்களும் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
‘இறைவா உன் மாளிகையில்
எத்தனையோ மணி விளக்கு
தலைவா உன் காலடியில்
என் நம்பிக்கையின் ஒளி விளக்கு’ - என்ற பாடல் தமிழகம் முழுக்க எதிரொலித்தது. மக்களின் நம்பிக்கை ஜெயிக்கும் என்பதை நிரூபிக்கும் வகையில் நோயில் இருந்து புரட்சித்தலைவர் எழுந்துவந்த காரணத்தால், தமிழகத்தில் ஆன்மிகம் மீண்டும் புதிய எழுச்சி கண்டது.
’நாடோடி மன்னன்’ படத்தில், ’வேலை செய்ய முடியாத வயோதிகர்கள், கூன், குருடு, முடம் போன்றவர்களின் வாழ்வுக்காகவும் வேலை இல்லாத் திண்டாட்டத்தை ஒழிக்க தொழில் நிலையங்கள் அமைக்கவும், பள்ளிகள் கட்டுவதற்காகவும் என்னுடைய சொந்த சொத்தில் பாதியை அளிக்கிறேன் என்று சொன்னதுபோலவே தன்னுடைய சொத்துக்களை அனாதை ஆசிரமத்துக்கும் உயில் எழுதி வைத்தார்.
கொடுத்து சிவந்த கரம்
நடிகர், முதல்வர் என்பதைவிட, புரட்சித்தலைவர் என்றாலே ஞாபகத்துக்கு வருவது, அவரது வள்ளல் தன்மைதான்.
’இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்’ – என்று ‘பணம் படைத்தவன்’ படத்தில் பாடியது போலவே தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர். கண்டியில் பிறந்த எம்.ஜி.ஆர். தமிழகத்தின் கும்பகோணத்திற்கு வந்து வயிற்றுப்பிழைப்புக்காக நடிக்கத் தொடங்கிய காலத்திலேயே, சக கலைஞர்களுக்கு உதவி செய்யத் தொடங்கினார். கொடைத்தன்மை அவரது ரத்தத்திலே ஊறிப்போயிருந்தது.
இடது கை கொடுப்பது, வலது கைக்கு தெரியக்கூடாது என்று நினைக்கக்கூடியவர். அதேபோன்று நேரம், இடம் பார்க்காமல் மனதிற்குத் தோன்றியதும் அள்ளிக் கொடுப்பவர். அதனால்தான், ‘அடுப்பில் உலை வைத்துவிட்டு எம்.ஜி.ஆர். வீட்டுக்கு நம்பிக்கையுடன் செல்லலாம். உலை கொதிக்கும் முன்பு உதவி கிடைத்துவிடும்’ என்று பேசினார்கள். அது உண்மையும்தான்.
புரட்சித்தலைவரின் வள்ளல்தன்மைக்கு எத்தனையோ சான்றுகளை சொல்லமுடியும். அவை எல்லாவற்றையும் அடுக்குவதைவிட, 1961ம் ஆண்டு ரிக்ஷா தொழிலாளர்களுக்கு புரட்சித்தலைவர் மழைக்கோட்டு வழங்கும் விழாவில் பேரறிஞர் அண்ணா பேசியது மட்டுமே போதுமானது.
‘புயல் மழையால் – சேதம் வரும் இடங்களில் எல்லாம், எங்கள் புரட்சி நடிகர் உதவியினைக் காணலாம். தன்னைத் தேடி வருகிறவரின் கண்ணீரைத் துடைக்கிறவன் வள்ளல். தன்னைத் தேடி வருகிறவரின் துன்பத்தைப் போக்குகிறவன் வள்ளல். ஆனால், புரட்சிநடிகர் எம்.ஜி.ஆர். அப்படியல்ல, சமுதாயத்தில் துன்பப்படுபவன் எங்கே இருக்கிறான் என்று தேடிப் போய், அவன் கண்ணீரைத் துடைத்துக் கைகொடுக்கிற எம்.ஜி.ஆர். வள்ளலுக்கெல்லாம் வள்ளல்’ என்று பாராட்டினார் பேரறிஞர் அண்ணா.
இப்படியொரு தனிமனிதப் பண்பு, கலைத்திறன், நிர்வாகத்திறன், ஏழைகளிடம் கனிவு, ஊழல் இல்லாத மக்களாட்சி, தனக்கென சொத்து சேர்க்காத குணம், வள்ளல் தன்மை, அறம் சார்ந்த வாழ்க்கை, உழைத்து சம்பாதித்த சொத்தை மக்களுக்கு எழுதிக் கொடுத்தது போன்ற அரிய பண்புகளை ஒரு சாதாரண மனிதனிடம் காண இயலாது என்பதால்தான், புரட்சித்தலைவரை அவதார புருஷர் என்கிறேன்.
காவிய வள்ளல் கர்ணன், கடையெழு வள்ளல்கள் போன்று காலத்தை வென்ற கலியுக வள்ளல் புரட்சித்தலைவர் எனும் அவதார புருஷர் அவதரித்த தினம் இன்று. திருக்குறள் முக்காலத்துக்கும் ஏற்ற நூலாக எப்படி திகழ்கிறதோ, அதுபோன்று புரட்சித்தலைவரின் புகழ் எக்காலமும் இம்மண்ணில் வாழும்..........
-
இன்று காலை சென்னையில் புரட்சித் தலைவர் ராமவரம் வீட்டில் அவரைப்பற்றிய "காலத்தை வென்றவன்", ஆவணப் படம் வெளியீட்டு விழா நடக்கின்றது. தலைமை கமல ஹாசன். யாரா இருந்தாலும் அரசியலில் நம் தங்கத் தலைவன் பேர சொன்னாத்தான் வாழ்வு. அந்த அளவு இன்னும் ஜனங்கள் மனதில் புரட்சித் தலைவர் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். அதனால் ஓட்டு விழும் என்று ஆசையில் எல்லாரும் நம் தலைவரை சொந்தம் கொண்டாடுகிறார்கள். இது நமக்கு பெருமை... காலத்தை வென்று புகழோடு வாழும் ஏழைகளின் தெய்வம், எட்டாவது அதிசயம், பூமிக்கு வந்த மனிதக் கடவுள் புரட்சித் தலைவர் புகழ் வாழ்க....rrn...
-
நடிகராக இருந்த போதும் முதல்வரான பிறகும், எம்.ஜி.ஆர். விரும்பிக் கொண்டாடியது" பொங்கல்" பண்டிகையைத்தான். அன்று, தன்னிடம் வேலை பார்ப்பவர்களுக்கு அன்பளிப்புகள் வழங்கி, விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கி மகிழ்வார்.
அன்று தன்னைப் பார்க்க எத்தனை பேர் வந்தாலும் அத்தனை பேரையும் முகமலர்ச்சியுடன் சந்தித்து, பரிசுப்பணம் அளித்து சந்தோஷப்படுத்துவார். எம்.ஜி.ஆருடன் பொங்கல் பண்டிகை அனுபவம் பற்றி, அவரிடம் உதவியாளர்களாக இருந்த சாமிநாதன், மகாலிங்கம் ஆகியோர் நம்மிடம் பகிர்ந்து கொண்ட அனுபவங்கள் அலாதியானது.
அவர்கள் கூறியதாவது: புத்தாண்டு, தீபாவளியை மட்டும் அல்ல, தன் பிறந்த நாளைக்கூட கொண்டாடாதவர். தீபாவளிக்கு வாழ்த்து சொன்னால் சின்னதாய் சிரிப்பார்.
அதேபோல, ஜனவரி 17-ல் அவரது பிறந்த நாளை, அவர் இருந்தவரை கொண்டாடியது இல்லை. முதல்வரான பிறகு, புத்தாண்டில் அதிகாரிகளை சந்திப்பது மரபு என்பதால் சந்தித்து வாழ்த்துகளை பரிமாறிக் கொள்வார்.
ஆனால், பொங்கல் பண்டிகையை எப்போதுமே உற்சாகமாக கொண்டாடுவார். நடிகராக இருந்தபோது ராமாவரம் தோட்டம், சத்யா ஸ்டூடியோ, இப்போது அ.தி.மு.க., தலைமை அலுவலகமாக உள்ள சத்தியபாமா திருமண மண்டபம், திருநகர் கட்சி அலுவலகம் என எல்லா இடத்திலும், அனைத்து தரப்பினரையும் எம்.ஜி.ஆர். சந்திப்பார்.
அதற்கு முன் முதல் காரியமாக, தன்னிடம் வேலை பார்க்கும் ஊழியர்களை பொங்கலன்று காலையிலேயே சந்திப்பார். இதற்காக, ராமாவரம் தோட்டத்திற்கு குடும்பத்தோடு நாங்கள் போய்விடுவோம். எல்லாருக்கும் நல்ல துணிமணிகளுடன், நிறைய பணமும், உணவும் தந்து உபசரிப்பார்.
குடும்பத்தார் அனைவரிடமும் அன்பாக பேசுவார். எங்கள் குடும்பத்தில் பலரும், அவரது புண்ணியத்தில்தான் பட்டு வேட்டி, சேலையைப் பார்த்தோம். சத்தியபாமா திருமண மண்டபத்தில், இன்னும் உற்சாகமாக இருப்பார். ஊழியர்களுக்கு, சாக்கு போட்டி, ஸ்பூன் ரேஸ் போன்ற விளையாட்டுப் போட்டிகள் நடத்தி மகிழ்விப்பார்.
இதேபோல ஸ்டூடியோ, தி.நகர் கட்சி அலுவலகம் சென்று, அங்குள்ளவர்களையும் மகிழ்ச்சிக்குள்ளாக்குவார். எங்கே போனாலும், எம்.ஜி.ஆரை காண மக்கள் திரண்டுவிடுவர். அவர்களையும் அருகில் அழைத்துப் பேசுவார். அவரைப் பொறுத்தவரை கையில் பணம் இருந்தால், அதை பரிசளித்து செலவிடும் வரை துாங்கமாட்டார் என்றே சொல்லலாம்.
ஒரு முறை, ஒரு படத்தின் மூலம் சில லட்சம் ரூபாய் கூடுதலாக வந்தது. அந்தப் பணத்தை, வேண்டியவர்களுக்கு தேடித் தேடிக் கொடுத்து உதவினார். எம்.ஜி.ஆரிடம் உதவி கேட்டு, ஒரு நாளுக்கு நூற்றுக்கும் அதிகமான கடிதங்கள் வரும். பல கடிதங்களில் முழு முகவரி இருக்காது. 'எம்.ஜி.ஆர். சென்னை' என்று மட்டுமே இருக்கும்.
இன்னும் சில கடிதங்களில், முகவரி பகுதியில் அவர் படத்தை மட்டும் ஒட்டி அனுப்பியிருப்பர். எந்தக் கடிதத்தையும் புறக்கணிக்க மாட்டார். படிப்புச் செலவு கேட்டு யாராவது எழுதியிருந்தால், முதல் வேலையாக அதை கவனிப்பார். தன்னால் முடியாத காரியமாக இருந்தால், 'முடியாது' என, நிர்தாட்சண்யமாக மறுக்க மாட்டார். மனதைக் காயப்படுத்தாமல் பதில் எழுதுவார்.
ஒருவர், தனக்கு அரசு வேலை வேண்டும் என்று கேட்டு, அதற்கு வாய்ப்பில்லை என்றால், எம்.ஜி.ஆர். பதில் சொல்லும் பாணியே தனி. 'உங்கள் தகுதிக்கு வியாபாரம் செய்தால் நன்றாக வருவீர்கள். ஆரம்ப செலவிற்கு பணம் அனுப்புகிறேன். வியாபாரம் செய்யுங்கள்' என்று பதில் எழுதி பணமும் தருவார். அப்படி உதவி பெற்று, பின்னாளில் பெரும் வியாபாரிகளாக மாறி, எம்.ஜி.ஆரைச் சந்தித்து ஆசிபெற்றவர்கள் ஏராளம்.
அதேபோல எம்.ஜி.ஆர். என்றால், அவர் எதுவும் கேட்காமலே மக்கள் உதவிக்கரம் நீட்டியதும் உண்டு. அ.தி.மு.க.வை துவக்கியபோது, கட்சி செலவுக்கு, தங்களால் இயன்ற 1 ரூபாய், 2 ரூபாய் கூட கட்சி நிதியாக தபாலில் அனுப்பியவர்கள் ஏராளம்.
ஒரு முறை, ஒரு ஏழை உப்பளத் தொழிலாளி, "தலைவரே, என்னால் உங்களுக்கு கொடுக்க முடிந்தது இதுதான்" என்று சொல்லி, மடியில் இருந்த உப்புப் பொட்டலத்தைக் கொடுத்தார். அதையும் அன்புடன் வாங்கிக் கொண்டார். ஊழியர்களை, தன் குடும்பத்தில் ஒருவராகவே பார்ப்பார் எம்.ஜி.ஆர். அவரிடம் உதவியாளராக இருந்த எனக்கு திருமணத்தை நடத்தி வைத்ததே அவர்தான்.
எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்ரபாணியின் பெயரில்தான் அழைப்பிதழே அச்சிடப்பட்டது. ஊழியர்களின் திருமணத்தை முன்னின்று நடத்தி வைப்பார். தாலி எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தால், மூன்று முடிச்சு போடப்படும் வரை, மாங்கல்யத்தை கையில் பிடித்தபடி இருப்பது அவரது சுபாவம், என் திருமண படத்தைப் பார்த்தால் அது தெரியும்.
- நன்றி 'தினமலர்' நாளிதழ்..........
-
#எம்_ஜி_ஆர்_ஒரு_சகாப்தம்…
மக்கள் தலைவரின் கடைசி நாட்கள்…….
1987 டிசம்பர் 2…
ராமவரம் தோட்டம். ஆறு மாச ஆண் குழந்தையோடு நடிகர் ராஜேஷ் வந்தார். மலங்க மலங்க விழித்த மழலையைக் கொஞ்சுகிறார், எம்.ஜி.ஆர். மூன்று முத்தம் வரை உம்மென்று முறைத்த குழந்தை நான்காவது முத்தத்தில் பொக்கை வாய்திறந்து புன்னகைக்கிறது. அடுத்து கமகமக்கும் அமர்க்களமான விருந்தோம்பல்.
டிசம்பர் 5…
அம்பிகா, ராதா நடித்த திரைப்பட பூஜை ஏவி.எம். ஸ்டுடியோவில் நடந்தது. எம்.ஜி.ஆர். கலந்து கொள்கிறார் என்கிற செய்தியால் கோலிவுட்டில் குஷி. தலைவரை தரிசிக்க தமிழ்சினிமா உலகமே ஆஜர். கேரளாவில் இருந்து மோகன்லால் வந்திருந்தார். நட்சத்திரங்கள் எல்லாம் முண்டியடித்துக் கொண்டு (ராமச்) சந்திரனிடம் முகம்காட்டி நலம் விசாரித்தனர். எல்லோரையும் ஒன்றாகப் பார்த்த எம்.ஜி.ஆர் முகத்தில் நெகிழ்ச்சி ப்ளஸ் மகிழ்ச்சி.
டிசம்பர் 6…
சிவாஜி, சத்யராஜ் நடித்த ‘ஜல்லிக்கட்டு’ திரைப்படத்தின் நூறாவது நாள் விழா. சீஃப் கெஸ்ட் சி.எம். ‘‘உலகம் முழுக்கத் தேடிப்பார்க்கிறேன்… என் தம்பி சிவாஜிக்கு இணையாக ஒரு நடிகனும் இல்லை…’’ என்று சிவாஜி நடிப்புக்குப் புகழாரம் சூட்டுகிறார், எம்.ஜி.ஆர். கலங்கிய கண்களோடு ஷீல்டு வாங்கவந்த சிவாஜியை அரவணைத்து கன்னத்தில் பாசப்பெருக்குடன் ‘பஞ்ச்’ முத்தம் கொடுக்கிறார். ‘‘எனக்கும் முத்தம் வேண்டும்…’’ என்று அடம்பிடித்து எம்.ஜி.ஆர் முன்னால் கன்னத்தை நீட்டுகிறார், நம்பியார். ‘நோ’ சொல்லி மறுத்து விடுகிறார், எம்.ஜி.ஆர்.
டிசம்பர் 15..
எம்.ஜி.ஆர் மனசில் உயர்ந்த ஸ்தானத்தில் இருந்த, கம்யூனிஸ்ட் தலைவர் பி.ராமமூர்த்தி மறைந்தார். இருமல் தொல்லையால் அவதிப்பட்ட எம்.ஜி.ஆர்., இறப்புச் செய்தி கேட்டு துயரநெருப்பில் மெழுகாய் உருகினார். துக்கம் விசாரிக்கச் செல்ல வேண்டும் என்று துடித்த எம்.ஜி.ஆரை டாகடர்கள் தடுத்தனர்.
டிசம்பர் 20…
ராமாவரம் தோட்டம். ‘வேதம் புதிது’ படத்துக்கு ஏற்பட்ட சென்சார் சிக்கலை நீக்கிய எம்.ஜிஆருக்கு நன்றி சொல்ல பாரதிராஜா வந்தார். பிறந்த நாளில் ஆசீர்வாதம் பெற்றுவிட்டு எம்.ஜி.ஆருக்கு சாக்லேட் பாக்ஸ் கொடுத்தார், ராஜேஷ். டயாபெட்டீஸ் பேஷன்ட் என்பதை மறந்து குஷியோடு சாக்லேட்டை ருசித்தார். அப்படியே ஸ்வீட் பாக்ஸை காவல் காத்த காக்கிகளுக்கு கொடுக்கும்படி உதவி மாணிக்கத்திடம் ஒப்படைக்கிறார், எம்.ஜி.ஆர். திடீரென்று ஜேப்பியார் விசிட். மூவரையும் சேர்ந்து பார்த்ததும் எம்.ஜி.ஆருக்கு ஆனந்தம் தாங்கவில்லை வாய்கொள்ளாச் சிரிப்பு. கல்லூரி அனுமதி தொடர்பாக எம்.ஜி.ஆரிடம் விவாதிக்கிறார், ஜேப்பியார். அருகில் அமர்ந்திருந்த பாரதிராஜவிடம், ‘‘பாரதி நீயொரு காலேஜ் கட்டிக்கிறியா… நான் கையெழுத்துப் போட்டு அனுமதி தரேன்…’’ கேட்கிறார், எம்.ஜி.ஆர். ‘‘தலைவரே எனக்கு அதெல்லாம் சரிப்பட்டு வராது. ஆக்சுவலி ஐ யம் கிரியேட்டர்…’’ என்று கரகரகுரலில் பதில் சொல்லும் பாரதிராஜாவைப் பார்த்து, ரசித்துச் சிரிக்கிறார், எம்.ஜி.ஆர்.
டிசம்பர் 22…
சென்னை கிண்டியில் நேரு சிலை திறப்புவிழா. பிரதமர் ராஜீவ்காந்தி கலந்து கொள்கிறார். ராமாவரத்தில் இருந்து புறப்படும் போதே சுகவீனம். உடல் உபாதையால் சுவரைப் பிடித்தபடி நடக்கிறார். எப்போதும் மேடையில் அரபிக்குதிரையாகத் தாவிக் குதிக்கும் எம்.ஜி.ஆரின் கைகளை வலிந்து உயர்த்திப் பிடிக்கிறார், ராஜீவ் காந்தி. வலியால் துடிக்கிறார், எம்.ஜி.ஆர்.
டிசம்பர் 23…
மதியம் எம்.ஜி.ஆருக்கு உடல்நிலை கொலாப்ஸ். தடதடவென கார்கள் தோட்டத்தை நோக்கி தோட்டாவாய் சீறுகின்றன. மறுநாள் எம்.ஜி.ஆர் பெயரில் போரூரில் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனை திறப்புவிழா. ‘‘என் பெயரை வைக்காதே நான் கலந்து கொள்ள மாட்டேன்…’’ என்று உடையாரிடம் பல முறை சொன்னார், எம்.ஜி.ஆர். உடையாரோ எம்.ஜி.ஆர்மீது கொண்ட அபரிமிதமான அன்பால் விழாவை நடத்தத் திட்டமிட்டு இருந்தார். ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் திறப்பதாக ஏற்பாடு. அதனால் மாவிலை தோரணம்… கொடி என்று ராமாவரமே திருவிழாக் கோலம் பூண்டது.
டிசம்பர் 24…
அதிகாலை நேரம், ராமாவரம் தோட்டத்துக்கு வெளியே ஸ்பீக்கரில் ‘நீங்க நல்லாயிருக்கணும்…’ சீர்காழி வெண்கலக்குரலில் பாடிக்கொண்டு இருந்தார். வீட்டுக்குள் எம்.ஜி.ஆரை மரணதேவன் பறித்துக்கொண்டு சென்றான். சொன்னபடியே ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனை திறப்புவிழாவில் எம்.ஜி.ஆர் கலந்து கொள்ளவில்லை....ns...
-
மதுரையில் தலைவர் பிறந்தநாளை(Jan17) உலக தமிழ் சங்கம் ,அதனை நிறுவிய தலைவரை போற்றும் வகையில் விழா எடுக்கிறது.அதில் ஆள்பவர்கள் மறந்தாலும் இலக்கிய திறனாளர்கள் தனது கவிதைகளால் புகழாரம் சூட்டுகிறார்கள்.தலைவரை மறந்தவர்கள்,மறைத்தவர் கள் மத்தியிலே மறக்காதவர்கள் புகழாரம் சூட்டி மகிழ்கிறார்கள்.அதில் இரா. ரவி என்னும் இளம் திறனாளர் தனது கவிதையை இங்கு பகிர்கிறார்:
போற்றிப்பாடுவோம் பொன்மனச்செம்மலை
கவிஞர் இரா. இரவி
துயர்தனை துடைத்தல்!
உடலின் நிறம் மட்டுமல்ல வெள்ளை
உள்ளத்தின் நிறமும் வெள்ளை
ஏழைகளைச் சிரிக்க வைத்து மகிழ்ந்தவர்
இன்னலை நீக்கி மனம் மகிழ்ந்தவர்
மதிய உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்தவர்
மதியம் பசி நீக்கிய நவீன வள்ளலார்
உணவிற்காகவே பள்ளிக்கு வர வைத்தவர்
உணவோடு கல்வியைப் புகட்டியவர்
பொன்மனச் செம்மல் வெறும் பட்டமல்ல
பொன்மனம் படைத்த செம்மல் அவர்
பாட்டுக்கோட்டை பட்டுக்கோட்டையின்
பாடல் வரிகளுக்கு செயல் வடிவம் தந்தவர்
கவியரசு கண்ணதாசன் வைர வரிகளை
கையெழுத்திட்டு நடைமுறைப்படுத்தியவர்
ரத்தத்தின் ரத்தமே என்று சொல்லி
ரசிகர்களின் ரத்தத்தில் கலந்தவர்
தாய்குலங்களே என்று சொல்லி
தாய்குலங்களின் மனதில் நின்றவர்
கொடுத்துக் கொடுத்து சிவந்த கரங்கள்
கற்கண்டு சொற்களுக்குச் சொந்தக்காரர்
கடையேழு வள்ளல்களில் வரிசையில் நின்றவர்
கண்ணீரைத் துடைத்து மகிழ்ந்த மாமனிதர்
தந்தை பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்தியவர்
தந்தை பெரியாரின் சமூக நீதியை கட்டிக் காத்தவர்
பேரறிஞர் அண்ணாவின் கனவை நனவாக்கியவர்
பேரறிஞருக்குப் புகழ் பல சேர்த்த நல்லவர்
கடமை கண்ணியம் கட்டுப்பாடு காத்தவர்
கொண்ட கொள்கையில் குன்றென நின்றவர்
புன்னகையை எப்போதும் அணிந்தே இருந்தவர்
புன்னகையை ஏழைகளுக்கு வரவழைத்துப் பார்த்தவர்
எம் ஜி ஆர் என்ற மூன்று எழுத்து எப்போதும்
ஏழைகளின் இதயத்தில் மறையாத பொன்எழுத்து!
*****மதுரை கண்ணன்!...
-
#புரட்சி_தலைவர்
#எம்_ஜி_ஆர் பிறந்த நாள் ஜனவரி 17
மக்கள் திலகமே...
நீங்கள் அறிமுகமான திரைப்படத்தில் இருந்து கடைசி படம் வரை ...
திரைப்படங்களில் கெட்டவன் கதா பாத்திரங்களை ஏற்காதவர்
திரைப்படங்களில் கெட்ட பழக்க வழக்கங்களை கற்பிக்காதவர்
உத்தமனாக -ஒழுக்க சீலனாக மட்டுமே திரைப்படங்களில் தோன்றியவர்
தாய் - தந்தை சொல்லை தட்டாமல் மதித்து நடக்க கற்று தந்தவர்
தீய சக்திகளை எதிர்த்து நம்நாடு முன்னேற நன்றாக பாடுபட்டவர்
குடியையும் - புகை பிடிப்பதையும் அறவே தவிர்த்தவர்
வரதட்சணை வாங்குபவரை மதிக்காதவர்
வசனங்களாலும் - பாடல்களாலும் உழைப்பின் மேன்மையை உயர்த்தியவர்
கொள்கை பாடல்களால் தொண்டர்கள் மனதில் உற்சாகத்தை விதைத்தவர்
தனக்கு நிகரான நடிகர்களுடன் சண்டை காட்சிகளில் மோதியவர்
உடன் நடித்த நடிகர்களுக்கு உடனே ஊதியம் கிடைத்திட செய்தவர்
தரக்குறைவான வசனங்களை பேசாதவர்
எதிரியை கூட ஏறிட்டு நோக்கி நண்பனாக்கி கொண்டவர்
இமாலய வெற்றிகள் தேடிவந்த போதும் இறுமாப்பு கொள்ளாதவர்
இப்படி நல்லவராக நடித்து நல்லவராக வாழ்ந்து ....
நல்லதொரு தலைவராய் ,நல்லதொரு முதல்வராய் மக்கள் மனதில் பதிந்து
எங்களையும் நல்வழிக்கு திருப்பிய நாடோடி மன்னனே - வாழ்க உங்கள் புகழ்
1.1947- 1977 வரை தமிழ் திரையுலகில் ஒரே முடிசூடா வசூல் சக்ரவர்த்தி
2.முதல் முதலில் நடிகர் ஒருவர் இயக்குனராக அரிதாரம்
3.முதல் முதலாக தான் சார்ந்த கட்சியினை ஆட்சி கட்டிலில் இருமுறை அமர்த்திய பெருமை - 1967, 1971
4. முதல் முதலில் நடிகர் ஒருவர் முதல்வர் ஆனது -1977 மற்றவர்களை போல் வார்த்தையில் சொல்லாமல் நிஜத்தில் தமிழ் நாட்டின் சக்கரவர்த்தி ஆனார் .
5.முதல் முதலில் தமிழகத்தில் முன்று முறை தொடர்ந்து ஆட்சி செய்தது
6.மறு வெளியிடு கள் மூலம் தனது படங்களை இன்று வரை தொடர்ந்து வலம் வந்து விநியோகஸ்தர்களை வாழவைக்கும் ஒரே நடிகர்
அ முதல் அஃகு வரை
நாளை அவரது பிறந்த தினம்..........ns...
-
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்
மன்னாதி மன்னன் எம்.ஜி.ஆர்
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.
#ஆசியோடு_நண்பர்கள்
#அனைவருக்கும்_இனிய_சனிக்கிழமை
#காலை_வணக்கம்_மற்றும்_காணும் #பொங்கல்_திருநாள்_வாழ்த்துக்கள்...
கவிஞர் கண்ணதாசன் வரிகளில் நம் புரட்சி தலைவர் கூறும் கருத்துக்களை பகிர்ந்து வரும் இந்த தொடர் பதிவில் இன்றைய பதிவு பற்றி காண்போம் சற்று நீண்ட பதிவு ...
1968 ஆம் ஆண்டில், புரட்சி தலைவர் நடித்த எட்டுப் படங்கள் வெளியாயின. இவற்றுள் கவியரசர் எழுதிய பாடல்கள் ‘ரகசிய போலீஸ் 115, புதிய பூமி ஆகிய இரண்டு படங்களில் இடம் பெற்றன.
ரகசிய போலீஸ் 115 திரைப்படம், பத்மினி பிக்சர்ஸ் தயாரிப்பில், பி.ஆர். பந்துலு இயக்கத்தில், எம்.எஸ். விசுவநாதன் இசையமைப்பில், கண்ணதாசனின் இனிமையான பாடல்களோடு, 11.1.1968 ஆன்று வெளியானது.
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா, வெண்ணிற ஆடை நிர்மலா, எம்.என். நம்பியார், நாகேஷ் ஆகியோர் நடித்த இப்படமும் பெரும் வெற்றியைப் பெற்றது.
இப்படத்தில் கவிஞர் எழுதிய ஆறு பாடல்களும் தேனாற்று வெள்ளத்தைப் பெருகச் செய்த பாடல்களே!
“கண்ணே! கனியே! முத்தே! மணியே!
அருகே வா!..”
என்று தொடங்கி, பி.சுசீலா, டி.எம்.எஸ். குரலில் மாறி மாறி ஒலிக்கும் கவிஞரின் பாடலில்;
“கரும்பினில் தேன் வைத்த கன்னம் மின்ன வா!
கனிதரும் வாழையின் கால்கள் பின்ன வா!
செம்மா துளையோ பனியோ மழையோ உன்
சிரித்த முகமென்ன?
சிறு தென்னம்பாளை மின்னல் காற்று வடித்த
சுகமென்ன?
ஒருகோடி முல்லைப்பூ விளையாடும் கலை
என்ன?”
என்றே தொடரும் வரிகளில் வந்து நிற்கும் வளமான சொற்கள் கூடி எழுப்பும் சுவையை என்னவென்று நாம் புகழ்வது….?
இனி…..!
“உன்னை எண்ணி
என்னை மறந்தேன்!….”
என்றே பி. சுசீலாவின் குரலில் எழுந்து வந்த பாடலும் சுவையானதே!
“பால் தமிழ்ப்பால் எனும்
நினைப்பால் இதழ் துடிப்பால்
அதன் தித்திப்பால்
சுவை அறிந்தேன்!”
என்று, டி.எம்.எஸ். பி. சுசீலாவின் குரல்களில் வலம் வரும் பாடல், நம்பால் வந்து, நம் இதயத்தின்பால் இடம் பெறவில்லையா?
இப்படி, மக்கள் திலகத்தின் மனமறிந்து பாடல் வரிகளை வாரி வாரி, வழங்கி, இன்றும் அப்பாடல்களை நம் மனதின்பால் நிற்க வைத்த, தமிழ்ப்பாற்கடலன்றோ கண்ணதாசன்.
இதே படத்தில் புரட்சி தலைவரும், வெண்ணிற ஆடை நிர்மலாவும் நடித்திட்ட பாடல் காட்சிக்காகக் கவிஞர். எழுதி, டி.எம்.எஸ். ஈஸ்வரி இருவரும் இணைந்து பாடிய இணையற்ற பாடலொன்றைப் பாருங்களேன்!
“கண்ணில் தெரிகின்ற வானம்
கைகளில் வாராதோ?
துள்ளித் திரிகின்ற மேகம்
தொட்டுத் தழுவாதோ?
கட்டியணைக்கின்ற மேனி
பட்டொளி கொள்ளாதோ?
பொன்னழகுப் பெண்முகத்தில்
கண் விழுந்தால் என்னாகும்?
பொன்னாகும்! பூவாகும்! தள்ளாடும்!
செங்கனி மங்கையின் மீது
செவ்வரி வண்டாடும்!….”
பார்தீர்களா?
இப்பாடலை முழுவதும் பாடிப் பாருங்களேன்! பாட முடியாவிட்டால், பாடலைக் கேட்டாவது பாருங்களேன்! இதயங்களை மகிழ்விக்கும் இனிய மெல்லிசையில் மலர்ந்த இதுபோன்ற மேன்மையான பாடல்களை, இன்றைய திரையுலகம் மறந்ததை எண்ணி நம் மனங்களே வேதனை கொள்ளும்.
காவிய வள்ளல்
“சந்தனம் குங்குமம் கொண்ட தாமரைப்பூ
தேனுண்ட போதையில் திண்டாடுது…..”
என்று தொடங்கும் பி. சுசீலாவின் குரலில் ஒலித்த பாடல்….பாடல் காட்சியில் நடித்தவரோ கலைச்செல்வி ஜெயலலிதா.
தொடரும் பாடலில், தவழ்ந்து வரும் கவிஞர் கண்ணதாசனின் வார்த்தைகளைப் பாருங்களேன்!
“பட்டுக் கன்னம் தத்தித் தத்தி தவிக்கின்றது!
பார்க்கவும் பேசவும் நினைக்கின்றது!”
சரிதானா?
எதிர்பார்த்த உள்ளம்…..
காவிய வள்ளலாம் எம்.ஜி.ஆரைக் கண்டுவிட்டதாம்! உள்ளம் மகிழ்ச்சியில் மகிழ்ந்தாடுதாம்.
இப்படி ஆடும் மங்கைக்கும் காவிய வள்ளலுக்கும் உள்ள பொருத்தம் எப்படியாம்?
கவியரசர் பாடலே சொல்லட்டுமே?
“என்ன பொருத்தம் நமக்குள்
இந்தப் பொருத்தம்!”
சரியான பொருத்தமா?
“என்ன பொருத்தம்?
ஆகா! என்ன பொருத்தம்!
ஆகா! என்ன பொருத்தம்!”
இவ்வாறு, திரும்பத் திரும்பக் கவியரஞர் சொன்ன பொருத்தமே….! புரட்சித்தலைவருக்கும், புரட்சித்தலைவிக்கும் அரசியல் பொருத்தத்தை ஏற்படுத்தி, உறுதிப்படுத்தியது எனலாம்.
சும்மாவா சொல்கிறார்கள்?
‘நல்லவர் நாவில் எழும் வார்த்தை!
நாட்டு நடப்பினில் நடக்கும் வார்த்தை!’
என்றே.
அதுவும் கவியரசர் வாக்கு, புவிமீது பொய்க்குமா? பொய்க்காது!….
இவற்றைச் சொல்லும்போது, சிலர் பத்தாம்சலித்தனம் என்பர்; இன்னும் சிலர் வலிந்து சொல்வது என்பர். எது எப்படியோ? கவியரசர் வாக்கு… புவியரசரால் பலிக்கும்… பலித்தது என்பது என் போன்றோர் நம்பிக்கை...
புரட்சி தலைவர் புகழ் ஓங்குக...
அன்புடன்
Shenthilbabu Manoharan.........
-
மறக்க முடியாத திரையிசை: எம்.ஜி.ஆரின் பிடிவாதம்!
உலகத்தில் எத்தனையோ தொழில்கள் இருந்தாலும் முதலிடம் விவசாயத்துக்குத்தான். உயிர் வாழ அத்தியாவசியத் தேவை உணவுதானே?
அந்தப் பெருமைக்குரிய தொழிலைச் செய்யும் விவசாயப் பெருமக்களின் உயர்வைச் சிறப்பாகப் பாடலில் வார்த்தெடுத்த பெருமை கவிஞர் மருதகாசியைச் சேரும். 1967 தீபாவளித் திருநாள் அன்று, தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான ‘விவசாயி’ படத்தில் இடம்பெற்ற பாடல்தான் அது. காதுக்கு ரம்மியமாகக் குறைந்த வாத்தியக் கருவிகளைப் பயன்படுத்தி (ஒரு டேப், தபலா, புல்லாங்குழல் - இவ்வளவுதான்) பாடலின் தரத்தையும் தனது பொறுப்பையும் உணர்ந்து, இந்தப் பாடலை அமைத்துத் தந்திருக்கிறார் ‘திரையிசைத் திலகம்’ கே.வி. மகாதேவன்.
பாடியிருப்பவர் டி.எம்.சௌந்தர்ராஜன் எனும்போது பாடலின் சிறப்பைப் பற்றிச் சொல்லவா வேண்டும்? கடவுள் உலகத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தொழிலைத் தந்திருக்கிறார். ஆண்டவனே இந்தத் தொழிலை யாரிடம் கொடுக்கலாம் என்று அலசி ஆராய்ந்து, தேடிக் கண்டெடுத்த தொழிலாளி ஒருவர் உண்டென்றால் அவர்தான் விவசாயி. உயர்வுநவிற்சி அணி நயம் அற்புதமாகப் பொங்கும் ஒற்றை வரியிலேயே விவசாயப் பெருமக்களின் மாண்பை உச்சத்தில் ஏற்றிவிடுகிறார் கவிஞர் மருதகாசி.
‘கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி’
கடவுளே கண்டெடுத்த தொழிலாளி எனும்போது அவருக்குப் பொறுப்பு அதிகம்தானே. ஆகவே அவர், ஒரு குறிக்கோளை வைத்துக்கொண்டு அதற்கான பாதையில் முழுமூச்சோடு நாள்தவறாமல் உழைக்கிறார். பொதுவாக, முத்து எடுக்க வேண்டும் என்றால் ஆழ்கடலில் இறங்கி மூச்சடக்கி உயிரைப் பணயம் வைத்துச் செயல்பட வேண்டும். அதற்குச் சற்றும் குறைந்ததல்ல; விவசாயப் பெருமக்களின் பணி. இவர்கள் சிரத்தை, கவனம், கடின உழைப்பு. ஆகியவற்றைச் செலுத்தி மண்ணிலே முத்தெடுக்கிறார்கள்! இவர்கள் கண்டெடுத்து அளிக்கும் நெல்மணி, கடல் முத்தைவிடச் சிறந்ததல்லவா? அதைக்கூட உலகத்தார் வாழ வழங்கி விடுகிறார்களே! எப்படி வந்தது இந்த வழங்கும் குணம்? காரணம், அவர்கள் கடவுளே தேடிக் கண்டெடுத்த தொழிலாளி அல்லவா! அவர்களுக்கு இல்லாமல் வேறு யாருக்கு வருமாம் இந்தக் குணம்.?
‘முன்னேற்றப் பாதையிலே மனதை வைத்து முழுமூச்சாய் அதற்காகத் தினம் உழைத்து மண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ வழங்கும் குணமுடையோன் விவசாயி’
அடுத்த சரணத்தில் உணவுக்காகத் தானிய இறக்குமதி செய்யும் நிலை ஏன் ஏற்பட்டது? இங்கு நிலவளம் இல்லையா, ஒழுங்காகப் பாடுபட்டு உற்பத்தியைப் பெருக்கினால் நமது மதிப்பை மேல்நாட்டில் உயர்த்திக்கொள்ளலாம் அல்லவா என்று ஆவேசமாகக் கேட்கிறார் கவிஞர்.
‘என்ன வளம் இல்லை இந்தத் திரு நாட்டில் ஏன் கையை எந்த வேண்டும் வெளிநாட்டில்? ஒழுங்காய்ப் பாடுபடு வயற்காட்டில் உயரும் உன் மதிப்பு அயல்நாட்டில்’
amp
எந்தப் பேதமும் பார்க்காமல் ஒற்றுமையாக உழைக்க வேண்டும். எப்படி உழைப்பது என்பதை அறிந்துகொள்வதொன்றும் சிரமமே இல்லை. அதைத்தான் பொறுப்புடன் முன்னோர்கள் சொல்லி வைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள். அனுபவமிக்கப் பெரியோரின் வழிமுறைகளைப் பின்பற்றி உழைத்தால் சாகுபடி பெருகாமல் போகுமா என்று கேட்டு, விவசாயத் தொழிலில் ஈடுபட நினைக்கும் இளைய தலைமுறைக்கு வழியும் காட்டுகிறார் மருதகாசி.
‘கறுப்பென்றும் சிவப்பென்றும் வேற்றுமையாய்க் கருதாமல் எல்லோரும் ஒற்றுமையாய்ப் பொறுப்புள்ள பெரியோர்கள் சொன்னபடி உழைத்தால் பெருகாதோ சாகுபடி’
இந்த நாட்டில் கட்சிகளுக்கும் கட்சிக்கொடிகளுக்கும் பஞ்சமே இல்லை. ஆனால், பட்டொளி வீசிப் பறக்க வேண்டிய கொடி எது தெரியுமா? அதுதான் நாட்டில் பஞ்சம் என்பதே இல்லை என்பதைப் பறைசாற்றக்கூடிய ‘அன்னம்’ என்னும் உணவுக் கொடி. அது மட்டும் பட்டொளி வீசிப் பறந்துவிட்டால் இரண்டாம் சரணத்தில் கேட்டதுபோல வெளிநாட்டில் உணவுக்காகக் கையேந்த வேண்டிய நிலையே ஏற்படாது என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார் கவிஞர்.
‘இருந்திடலாம் நாட்டில் பல வண்ணக்கொடி எத்தனையோ கட்சிகளின் எண்ணப்படி பறக்க வேண்டும் எங்கும் ஒரே சின்னக்கொடி - அது பஞ்சம் இல்லை என்னும் அன்னக்கொடி’
முதல் மூன்று சரணங்களின் கடைசி வரிகளை ஒரே ஒருமுறை டி.எம்.எஸ்ஸைப் பாடவைத்த கே.வி.மகாதேவன், இந்தக் கடைசி சரணத்தின் கடைசி வரியை மட்டும் வாத்தியங்களை நிசப்தமாக்கிவிட்டு ஒருமுறைக்கு இருமுறையாய்ப் பாடவைத்திருக்கும் நயம் – மக்களிடம் சென்று சேரவேண்டிய கருத்துக்குக் கொடுத்திருக்கும் முக்கியத்துவம். ஓர் இசை அமைப்பாளர் எப்படி ஒரு பாடலைக் கையாள வேண்டும் என்பதற்கு ஒரு பாடம். இந்தப் பாடலைப் படத்தில் டைட்டில் முடிந்தவுடனேயே கதாநாயகனின் அறிமுகக் காட்சியாக இடம்பெறச் செய்ய வேண்டும் என்று சின்னப்பாதேவர் விரும்பினார்.
ஆனால், எம்.ஜி.ஆரோ படம் தொடங்கி ஐந்து நிமிடங்கள் கடந்த பிறகு, இடம்பெற வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார். அதற்கு அவர் சொன்ன காரணம்: “படம் பாக்க வரவங்க எல்லாருமே முதல்லேயே வந்துடுவாங்கன்னு சொல்ல முடியாது. சில பல காரணங்களாலே ஐந்து, பத்து நிமிடங்கள் தாமதமா வாரவங்க கூட இருப்பாங்க. அருமையான கருத்தைச் சொல்லுற இந்தப் பாட்டு, எல்லாரையும் போய்ச் சேரணும். அதனாலே ரெண்டாம் காட்சியோட தொடக்கமா இந்தப் பாடல் காட்சி இருக்கணும்” அவரது விருப்பப்படியே செய்தார் சின்னப்பாத் தேவர். இதைவிடச் சிறந்த அங்கீகாரம் ஒரு பாடலுக்குக் கிடைக்க முடியுமா என்ன?............
-
SWEET MEMORIES....
#அன்பே_வா...
#மக்கள்_திலகத்தின்_பிறந்தநாள்_சிறப்புப்பதிவு.. !!!
ஐம்பத்து ஐந்து வருடங்கள் ((14-01-1966...பொங்கலன்று வெளியானது)) கடந்தும் மக்கள் மனதில இளமையாய் நிற்கிறது "அன்பே வா".
ஏழைப்பங்காளன், புரட்சி வீரன், மக்கள் தலைவன் இந்த வேடங்களுக்குத்தான் மக்கள் திலகம் நன்றாக பொருந்துவார் என்ற 60 களின் நிலமையை அப்படியே மாற்றி, மக்கள் திலகத்தால் "சாக்லட் ஹீரோ" போன்ற வேடங்களிலும் பட்டையை கிளப்ப முடியும் என்று நிரூபித்தபடம்.படத்தில் இடம் பெற்ற அத்துணை நடிகர்களுக்கும் இப்படம் ஒரு மாறுபட்ட பாத்திரத்தை கொடுத்த படம்..
அசோகன் அவர்களை கொடூரமான-நையாண்டி செய்யும் வில்லன் வேடத்தில் பல படங்களில் பார்த்து ரசித்திருப்போம். இந்த படத்தில் ஒரு விமானப்படை அதிகாரியாக, மிக மென்மையான-காதலை தன் நண்பனுக்காக தியாகம் செய்கின்ற பாத்திரத்தில் அசத்தலாக நடித்திருப்பார்.
மக்கள் திலகத்தின் நடன திறமையை அப்படியே வெளிக்கொணர்ந்த படம்." புலியைப்பார் நடையிலே" பாட்டு ஒன்று போதுமே...!!!
இந்தப்படத்தின் இன்னொரு கதாநாயகன் கண்டிப்பாக மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் தான். இந்த படத்தின் பாடல்களை நான் சொல்லித்தான் தெரியவேண்டுமா? அதெப்படி மெல்லிசை மன்னர் வெளிநாட்டில்-வெளி மாநிலங்களில் எடுக்கப்படும் படங்களுக்கென்று தனித்தனியாக இசையை கொடுக்கிறாரோ...!!! அற்புதம்...!!!
அன்பே வா படத்தின் புகழ்-மக்கள் திலகத்தின் புகழைப்போலவே என்றென்றும் நிலைத்திருக்கும்.........Sr.Babu...
-
தொடர் பதிவு உ...த்தமன் 13
----------------------------------------------
"உ...த்தமன்" வெளியான அன்று காரனேஷன் திரையரங்கின் முன்னே ஒரு தட்டுப் பந்தலும், தியேட்டரின் வாசலில் ஆர்ச்சும் போட்டு அமர்க்களப் படுத்தினர். மேலும் இரண்டு பெரிய ஒலிபெருக்கி பெட்டிகளை வைத்து
ஒரு பெரிய தட்டி போர்டும் வைத்தனர். தட்டி போர்டு எதற்கென்றால் தொடர் hf காட்சிகளை உடனுக்குடன் ரசிகர்களுக்கு தெரிவிக்கத்தான்
இந்த ஏற்பாடு.
ஏதோ சரஸ்வதி பூஜை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதைப் போல கூட்டம் கூட்டமாக கைஸ்கள் நின்றிருப்பதை பார்த்தவுடன் கைபிள்ளைகள் பெரிய சாதனைக்காக காத்திருப்பவர்கள் போல தோற்றமளித்தது. படம் எப்படியிருந்தாலும் நாங்கள் விடமாட்டோம் என்று கொக்கரித்தனர். 101 நாட்கள் ரத்தம் சிந்தி உழைத்து ஓட்டிய "சிவந்தமண்" தான் நினைவுக்கு வந்தது.
முதல் காட்சி ஆரம்பமாவதற்கு முன் "உ...த்தமன்" பாடலை போட்டு அந்த இடத்தையே கலவர பூமியாக மாற்றினர். 'நாளை நாளை என்றிருந்தேன் நல்ல நேரம் பார்த்திருந்தேன்' என்ற "உத்தமன்" பாடலை முதல் பாடலாக போட்டு தொடர்ச்சியாக அதே படத்தின் மற்ற பாடல்களை போட்டு கைஸ் ரசிகர்களை உற்சாகப் படுத்தினர். முதல் காட்சி முடிந்தவுடன் வெளியே வரும் முரட்டு கைஸ்களிடம் படம் எப்படியிருக்கு? என்று ஆவலோடு கேட்டதும் வெளியே வந்த முரட்டு கைஸ்கள் படம் பிரமாதம் என்றும் சாதா கைஸ்கள் நல்லா இருக்கு! என்றும் ஒரு சில பார்வையாளர்கள் படம் 'ரொம்ப சுமார்' என்றும் கூறியதை பற்றி கவலைப்படாமல் உற்சாகமாக அடுத்த காட்சிக்கு 'நாளை நாளை' பாடலை போட்டு சித்து விளையாட்டை தொடங்கினர்.
இரண்டாவது காட்சியே, எதிர்பார்த்த கூட்டம் இல்லாததை சப்பை கட்டு கட்டி சமாளித்து கைஸ்களை உற்சாகப்படுத்தி தொடர்ந்து hf தட்டி போர்டை இறக்கி அதில் 2 என்று எழுதி ஒட்டியவுடன் கைஸ்கள் படபடவென கைதட்டி சரவெடி ஒன்றைப் போட்டு மகிழ்ந்தனர். தொடர்ந்து ஒவ்வொரு காட்சிக்கும் இதைப்போலவே நடந்தது. மற்றவர்கள் ஏளனமாகப் பார்ப்பார்களே என்ற அச்சம் நாணம் ஏதுமின்றி கைஸ்கள் பெருமையாக நடமாடினர்.
சில பணக்கார கைஸ்கள் காரிலே வந்து சிகரெட்டை பற்ற வைத்தபடி நிலமையை தெரிந்து கொண்டு சென்றனர்.
ஒரு ஷோ முடிந்து அடுத்த ஷோவுக்குள் இல்லம் சென்று திரும்பி விடுவார்கள். அவர்களுக்கு மாற்றாக வேறு சில கைஸ்கள் அங்கேயே இருந்து கொண்டு மதுரையிலிருந்து வந்த செய்தி என்று அங்கு செமையா போகுது என்று சொல்லி திருப்தி பட்டுக் கொள்வார்கள்.
நாங்கள் யாராவது போய் எட்டிப் பார்த்தால் போதும் அவர்கள் பேசுவதை நிறுத்தி விட்டு எங்களிடம் வந்து வம்பளப்பார்கள். கைஸ்களில் மீனவர் இனத்தை சேர்ந்த ஒருவர் பெயரிலே சாமியை வைத்துக்கொண்டு தீவிரவாதி போல நடந்து கொள்வார். அவர் திருமணத்துக்கு கூட அய்யன் கலந்து கொண்டதாக சொல்வார்கள்.
அவர் தலைமையில் தான் இந்த வடக்கயிறு மேட்டர் அனைத்தும் நடக்கும். அதே நேரத்தில் பாலகிருஷ்ணாவில் மே 23 ல் வெளியான "உழைக்கும் கரங்கள்" வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் அடுத்த பதிவில்.............ksr...
-
அவதார புருஷர் அவதரித்த தினம்..!.........
சைதை சா. துரைசாமி
சென்னை பெருநகர முன்னாள் மேயர்
-
’வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம்தனிலே நிற்கின்றார்’ – என்று ’மன்னாதி மன்னன்’ படத்தில் பாடியபடியே, புரட்சித்தலைவர், மரணத்துக்குப் பிறகும் மக்களின் மனதில் நிலையாக வாழ்ந்துகொண்டிருக்கிறார். இரட்டை இலையைத் தவிர வேறு சின்னத்தில் ஓட்டு போடத் தெரியாத ஒரு பரம்பரையைப் பெற்றிருக்கிறார். இன்றும் சமாதியில் காதுவைத்து, எம்.ஜி.ஆரின் கடிகாரச்சத்தம் கேட்கும் இளம் தலைமுறைகளின் ரத்தத்தில் கலந்துள்ளார். இன்றுவரை தியேட்டர்களில் புரட்சித்தலைவரின் பழைய படங்கள் வெளியாகும்போது, எந்த எதிர்பார்ப்புமின்றி ஃப்ளக்ஸ், பேனர் வைத்துக் கொண்டாடும் தொண்டர்களைப் பெற்றிருக்கிறார்.
எப்படி இவையெல்லாம் சாத்தியமானது என்பதை அவரது பிறந்த தினத்தில் அறிந்துகொள்வோம். திரையரங்குகளில் எல்லோரும் வணிகரீதியாக பொழுதுபோக்கு படங்களை வெளியிட்டு வந்த நேரத்தில், புரட்சித்தலைவர் மட்டும் மனிதநேயச் சிந்தனை, நேர்மை, வாய்மை, உழைப்பு, குடும்ப உறவு, முதியோருக்கு மதிப்பு என வாழ்வியல் பண்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களை வெளியிட்டார். அதனால்தான், எம்.ஜி.ஆரை இளைஞர்கள் இன்றும் வாத்தியார் என்று ஏற்றுக்கொண்டுள்ளனர்.
புரட்சியாளர்
எம்.ஜி.ஆர். நாடக நடிகர் என்பதால், பாடல்களின் முக்கியத்துவம் அறிந்தவர், அதாவது, சுதந்திரப் போராட்டத்துக்குப் பயன்பட்டது போன்று சமூக முன்னேற்றத்துக்கும் பாடல்கள் பயன்படும் என்று நம்பினார். தன்னுடைய படத்தின் பாடலில் இடம்பெறும் ஒவ்வொரு வார்த்தைக்கும் அக்கறை செலுத்தினார். 1954ம் ஆண்டு வெளியான ‘மலைக்கள்ளன்’ படத்தில் இருந்து, தன்னுடைய படத்தின் பாடல்களை தி.மு.க.வின் பிரசாரத்துக்குப் பயன்படுத்தினார்.
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார்
சமயம் பார்த்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார் – என்று அன்றைய ஆட்சியாளர்களைப் பார்த்து எம்.ஜி.ஆர். தைரியமாகப் பாடியதும், அவரை ஒரு சமூகப் புரட்சியாளராக மக்கள் கொண்டாடினார்கள். அடுத்து, ‘மதுரை வீரன்’ படத்தில் நடித்து, அருந்ததி இன மக்களின் குலதெய்வமாகவே மாறினார். அதனாலே இன்றும் பட்டியலின மக்கள் வீட்டுக்கு வீடு எம்.ஜி.ஆரின் போட்டோவை மதுரைவீரன் சாமியாக வைத்து கும்பிட்டு வருகிறார்கள்.
1958-ல் வெளியான, ‘நாடோடி மன்னன்’ படத்தில் திமுக கட்சிக் கொடி ஏந்திய ஆணும் பெண்ணும் நிற்பது போல 'எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ்' நிறுவனத்திற்கு சின்னம் அமைத்தார். அதனால் கிராமத்து மக்களும் ரசிகர்களும் தி.மு.க. கொடியை எம்.ஜி.ஆர். கொடியாகவே பார்த்தார்கள். புரட்சித்தலைவரும் தி.மு.க.வை தன்னுடைய கட்சியாகவே நினைத்து வளர்த்தார்.
ஏழைகளுக்கும் உழைப்பாளிகளுக்கும் மதிப்பு கொடுப்பதில் புரட்சித்தலைவருக்கு இணையாக வேறு எவரையும் சொல்லவே முடியாது. உழைக்கும் மக்கள் மீதான அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்தும் வகையில் உழைப்பாளி, தொழிலாளி, விவசாயி, ரிக்ஷாக்காரன், மீனவ நண்பன் என்று படங்களுக்கு பெயர் சூட்டி, தன்னை ஏழைகளில் ஒருவன் என்று அனைவரையும் உணரவைத்தார்.
தரை மேல் பிறக்க வைத்தான்
எங்களைத் தண்ணீரில் பிழைக்க வைத்தான்
கரை மேல் இருக்க வைத்தான்
பெண்களைக் கண்ணீரில் குளிக்க வைத்தான் – என்று ’படகோட்டி’ படத்தில் மீனவர்களின் துயரத்தைப் பாடியதன் மூலம் மீனவர்களின் தலைவராகவே மாறினார். பாடல் மட்டுமின்றி, வசனம், காட்சி அமைப்புகளிலும் மக்களின் மனதை தொட்டார். இந்த உலகிலேயே ஒரு தனி மனிதரின் கொள்கைக்காக திரைப்படம் எடுக்கப்பட்டு, அது வெற்றியும் அடைந்தது என்றால், அது புரட்சித்தலைவரின் படங்கள் மட்டும்தான்.
தெய்வப்பிறவி
தன்னுடைய ஒவ்வொரு சோதனையையும், சாதனையாக மாற்றிக் காட்டியவர் புரட்சித்தலைவர். அதனாலே, எம்.ஜி.ஆரை தெய்வப்பிறவியாக மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.
வெற்றிகரமான சினிமா நடிகராக இருந்தாலும், நாடகக்கலையிலும் தொடர்ந்து அக்கறை காட்டினார் புரட்சித்தலைவர். சீர்காழியில் நடைபெற்ற, ‘இன்பக்கனவு’ நாடகத்தில் நடித்த நேரத்தில், மிகப்பருமனான நடிகர் குண்டுமணியை அலேக்காக தூக்கினார். அந்த நேரத்தில் சற்றே சரிந்ததால் கால் எலும்பு முறிந்துவிட்டது. இதையடுத்து, இனிமேல் சண்டைக் காட்சிகளில் எம்.ஜி.ஆர். நடிக்கவே முடியாது என்று வதந்தி பரவியது. ஆனால், அடுத்தடுத்து வந்த ராஜா தேசிங்கு, மன்னாதி மன்னன் படங்களில் முன்னிலும் வேகமாக சண்டையிட்டு வதந்தியை பொய்யாக்கினார்.
அதேபோன்று எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்ட நேரத்தில், ‘எம்.ஜி.ஆர். பிழைக்கவே மாட்டார்’ என்றும், ‘பிழைத்தாலும் அவரால் பேசவே முடியாது’ என்று எதிரிகள் பேசினார்கள். ஆனால், அந்த சோதனையையும் எம்.ஜி.ஆர் சாதனையாக்கிக் காட்டினார். ஆம், துப்பாக்கியால் சுடப்பட்டு, கழுத்தில் கட்டுப்போட்டபடி எம்.ஜி.ஆர். சிகிச்சையில் இருக்கும் படம்தான் தமிழகம் முழுவதும் 1967ம் ஆண்டு தேர்தல் சமயத்தில் ஒட்டப்பட்டன. அந்த புகைப்படத்தைப் பார்த்து பதறிய மக்கள் உதயசூரியனுக்கு ஓட்டு போட்டு அண்ணாவை அரியணையில் ஏற்றினார்கள். தி.மு.க. ஆட்சிக்கு வரக்காரணம் எம்.ஜி.ஆர். மட்டும்தான் என்பதை அண்ணா உணர்ந்திருந்த காரணத்தால்தான், அவரை இதயக்கனியாக கடைசி வரை போற்றி பாதுகாத்தார்.
1984ம் ஆண்டு புரட்சித்தலைவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற நேரத்தில், ‘எம்.ஜி.ஆர். உயிருடன் இல்லை’, ‘அவரது உடல் ஐஸ் பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது’ என்றெல்லாம் வதந்தி பரப்பினார்கள். ஆனால், தமிழக மக்களின் அன்பான பிரார்த்தனைகள் மூலம் அந்த சோதனையையும் வென்று, மருத்துவமனையில் இருந்தபடியே ஆட்சியைப் பிடித்தார். இப்படி, ஒவ்வொரு தோல்வியின் போதும் எம்.ஜி.ஆர். வீழ்ந்துவிட்டார் என்று எதிரிகள் நினைக்க, முன்னிலும் வீரியமாக எழுந்து சாதனை படைத்தார்,
வெற்றி மேல் வெற்றி
அண்ணாவின் மறைவுக்குப் பிறகு கருணாநிதியை ஆட்சிக்கட்டிலில் அமர்த்தியவரும் புரட்சித்தலைவர்தான். சொத்துக்கணக்கு கேட்டதற்காக தி.மு.க.வில் இருந்து புரட்சித்தலைவர் வெளியேற்றப்பட்ட நேரத்தில், தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. நல்லவர்கள், நாணயமானவர்கள், நியாயம், தர்மத்துக்கு கட்டுப்பட்டவர்கள், நேர்மையாளர்கள், கடவுள் பக்தியும் மனசாட்சியும் உள்ள நடுநிலை மக்கள், அர்ப்பணிப்பு குணமிக்க தொண்டர்கள் அனைவரும் புரட்சித்தலைவரின் பக்கம் நின்றனர்.
அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். தோற்றுவித்த நேரத்தில் ஆளும் கட்சியான தி.மு.க., காமராஜர் தலைமையிலான காங்கிரஸை மீறி வெற்றி பெறமுடியுமா என்று பலரும் சந்தேகப்பட்டனர். ஆனால், மக்களின் பேராதரவுடன் தொடர்ந்து 10 ஆண்டுகள் தோல்வியே சந்திக்காமல் முதல் அமைச்சராக பதவி வகித்தார். அந்த மக்களும், தொண்டர்களும்தான் இன்றுவரை அ.தி.மு.க. என்ற மாளிகையின் கடகாலாகத் திகழ்கிறார்கள்.
நாடோடி மன்னன் படத்தில், ‘நாளை போடப்போறேன் சட்டம், மிக நன்மை புரிந்திடும் திட்டம்… நாடு நலம் பெறும் திட்டம்’ என்று பாடியதை நிஜமாக்கிக் காட்டும் ஆட்சி புரிந்த தீர்க்கதரிசி ஆயிரத்தில் ஒருவன் படத்தில், ‘நமது தேவையே பிறருடைய நன்மைதான். மக்களுக்காக நாம் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவர்கள். நமக்கு என சேமித்து வைக்கும் ஆசையை வளர்த்துக் கொண்டால் பிறருக்காக நாம் எதையுமே சாதிக்க முடியாது’ என்று சுயநலமற்ற மனிதநேய சிந்தனையை மக்கள் மனதில் பதியவைத்தார்.
ஏழை மக்களுக்காக எதையும் செய்வதற்கு புரட்சித்தலைவர் தயாராக இருந்தார். ரேசன் அரிசி விலையை புரட்சித்தலைவரின் அரசு ஏற்றவில்லை என்ற காரணத்தால், மத்திய தொகுப்பிலிருந்து அரிசி தருவதை மத்திய அரசு நிறுத்தியது. உடனே, பொங்கியெழுந்து அண்ணா சமாதியில் புரட்சித்தலைவர் உண்ணாவிரதம் இருந்தார். மத்திய அரசுக்கு எதிராக முதன்முதலாக உண்ணாவிரதம் இருந்த முதல்வர் எம்.ஜி.ஆர்.தான். உடனே மத்திய அமைச்சர் ஓடோடிவந்து உண்ணாவிரதத்தை முடித்துவைத்தது வரலாறு.
ஒருமுறை எம்.ஜி.ஆர். தூத்துக்குடி அருகே, கைக்குழந்தைகளுடன் சில பெண்களை சந்தித்தார். 'காலையில் சாப்பிட்டீர்களா' என்றார். இல்லை. காலையில் சமைக்க நேரமில்லை. மாலையில் சென்று ஒரே வேளையாக சமைத்துச் சாப்பிடுவோம் என்றனர். அதிர்ந்தார் எம்.ஜி.ஆர். சென்னை திரும்பியதும் அன்றே தலைமைச்செயலாளர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். சத்துணவுத் திட்டம் பிறந்தது. பெண்கள் தங்கள் குழந்தைகளை பட்டினி போடாமல் உண்ண வழிவகுத்தது
சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து, பணி பாதுகாப்பின்றி புறக்கணிக்கப்பட்ட தொழிலாளர் வர்க்கத்தின் மீது முதன்முதலாக அக்கறை காட்டிவர் புரட்சித்தலைவர். ஒழுங்குபடுத்தப்படாத தொழிலாளர்களாக இருந்த மீனவர், நெசவாளர், பனையேறுவோர், கட்டிடத் தொழிலாளர், கை வண்டி இழுப்போர், மாட்டுவண்டி ஓட்டுவோர், பீடி சுற்றுவோர், சுமை ஏற்றி இறக்குவோர், மண் பாண்டத் தொழிலாளர்கள் என 60 வகையான தொழில் செய்துவந்த லட்சக்கணக்கான தொழிலாளர்களை ஒன்றிணைத்து இந்தியாவிலேயே முதன்முதலாக நல வாரியங்கள் அமைத்து, குறைந்தபட்ச ஊதியம், குடும்ப ஓய்வூதியம், திருமண உதவி, கல்வி உதவி, விபத்து நிவாரணம்,சேமிப்பு பலன் போன்ற நல உதவிகளை வழங்கி, அவர்கள் வாழ்க்கையில் ஒளியேற்றினார் புரட்சித்தலைவர். முதன்முதலாக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுத்ததும், முதியோர்களுக்கு உதவித் தொகை கொடுக்கும் திட்டத்தைக் கொண்டுவந்ததும் புரட்சித்தலைவர்தான்.
ஜாதி, மதத்தின் பெயரால் மக்களுக்குக் கொடுமைகள் நடப்பதை அனுமதிக்கவே மாட்டார். ‘உரிமைக்குரல்’ படத்தில், ’தாழ்த்தப்பட்ட ஜாதி உயர்த்தப்பட்ட ஜாதிங்கிறது எல்லாம் இந்த கேடுகெட்ட சமுதாயம் செய்து வைத்த கொடுமை, என்னைப் பொறுத்தவரை எல்லோரும் ஒரே ஜாதிதான், அது மனித ஜாதி’ என்று வசனம் பேசுவார். மேலும், தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 49 சதவிகிதம் என்று இருந்த இடஒதுக்கீட்டை 68 சதவிகிதம் என உயர்த்தி சமூகநீதியை நிலைநாட்டியதும், புரட்சித்தலைவர்தான்.
திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர் என்றாலும், புரட்சித்தலைவர் தன்னை ஆன்மிக அரசியல்வாதியாகவே தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். அன்னை மூகாம்பிகையை தன்னுடைய அன்னை என்றார். அதேநேரம் அனைத்து மதங்களையும் சமமாகவே மதித்தார். நாகூர் தர்கா அருகே ஒரு கூட்டத்தில் பேசிய எம்.ஜி.ஆர்., ‘நான் கைலி கட் டாத முஸ்லிம், சிலுவை அணியாத கிறிஸ் துவன், திருநீறு அணியாத இந்து...’ என்று உணர்வுபூர்வமாகப் பேசினார்.
புரட்சித்தலைவர் நோய்வாய்ப்பட்ட தருணத்தில், கட்சி பேதமின்றி, ஜாதி, மத பேதமின்றி அனைத்து மத மக்களும் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
‘இறைவா உன் மாளிகையில்
எத்தனையோ மணி விளக்கு
தலைவா உன் காலடியில்
என் நம்பிக்கையின் ஒளி விளக்கு’ - என்ற பாடல் தமிழகம் முழுக்க எதிரொலித்தது. மக்களின் நம்பிக்கை ஜெயிக்கும் என்பதை நிரூபிக்கும் வகையில் நோயில் இருந்து புரட்சித்தலைவர் எழுந்துவந்த காரணத்தால், தமிழகத்தில் ஆன்மிகம் மீண்டும் புதிய எழுச்சி கண்டது.
’நாடோடி மன்னன்’ படத்தில், ’வேலை செய்ய முடியாத வயோதிகர்கள், கூன், குருடு, முடம் போன்றவர்களின் வாழ்வுக்காகவும் வேலை இல்லாத் திண்டாட்டத்தை ஒழிக்க தொழில் நிலையங்கள் அமைக்கவும், பள்ளிகள் கட்டுவதற்காகவும் என்னுடைய சொந்த சொத்தில் பாதியை அளிக்கிறேன் என்று சொன்னதுபோலவே தன்னுடைய சொத்துக்களை அனாதை ஆசிரமத்துக்கும் உயில் எழுதி வைத்தார்.
கொடுத்து சிவந்த கரம்
நடிகர், முதல்வர் என்பதைவிட, புரட்சித்தலைவர் என்றாலே ஞாபகத்துக்கு வருவது, அவரது வள்ளல் தன்மைதான்.
’இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்’ – என்று ‘பணம் படைத்தவன்’ படத்தில் பாடியது போலவே தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர். கண்டியில் பிறந்த எம்.ஜி.ஆர். தமிழகத்தின் கும்பகோணத்திற்கு வந்து வயிற்றுப்பிழைப்புக்காக நடிக்கத் தொடங்கிய காலத்திலேயே, சக கலைஞர்களுக்கு உதவி செய்யத் தொடங்கினார். கொடைத்தன்மை அவரது ரத்தத்திலே ஊறிப்போயிருந்தது.
இடது கை கொடுப்பது, வலது கைக்கு தெரியக்கூடாது என்று நினைக்கக்கூடியவர். அதேபோன்று நேரம், இடம் பார்க்காமல் மனதிற்குத் தோன்றியதும் அள்ளிக் கொடுப்பவர். அதனால்தான், ‘அடுப்பில் உலை வைத்துவிட்டு எம்.ஜி.ஆர். வீட்டுக்கு நம்பிக்கையுடன் செல்லலாம். உலை கொதிக்கும் முன்பு உதவி கிடைத்துவிடும்’ என்று பேசினார்கள். அது உண்மையும்தான்.
புரட்சித்தலைவரின் வள்ளல்தன்மைக்கு எத்தனையோ சான்றுகளை சொல்லமுடியும். அவை எல்லாவற்றையும் அடுக்குவதைவிட, 1961ம் ஆண்டு ரிக்ஷா தொழிலாளர்களுக்கு புரட்சித்தலைவர் மழைக்கோட்டு வழங்கும் விழாவில் பேரறிஞர் அண்ணா பேசியது மட்டுமே போதுமானது.
‘புயல் மழையால் – சேதம் வரும் இடங்களில் எல்லாம், எங்கள் புரட்சி நடிகர் உதவியினைக் காணலாம். தன்னைத் தேடி வருகிறவரின் கண்ணீரைத் துடைக்கிறவன் வள்ளல். தன்னைத் தேடி வருகிறவரின் துன்பத்தைப் போக்குகிறவன் வள்ளல். ஆனால், புரட்சிநடிகர் எம்.ஜி.ஆர். அப்படியல்ல, சமுதாயத்தில் துன்பப்படுபவன் எங்கே இருக்கிறான் என்று தேடிப் போய், அவன் கண்ணீரைத் துடைத்துக் கைகொடுக்கிற எம்.ஜி.ஆர். வள்ளலுக்கெல்லாம் வள்ளல்’ என்று பாராட்டினார் பேரறிஞர் அண்ணா.
இப்படியொரு தனிமனிதப் பண்பு, கலைத்திறன், நிர்வாகத்திறன், ஏழைகளிடம் கனிவு, ஊழல் இல்லாத மக்களாட்சி, தனக்கென சொத்து சேர்க்காத குணம், வள்ளல் தன்மை, அறம் சார்ந்த வாழ்க்கை, உழைத்து சம்பாதித்த சொத்தை மக்களுக்கு எழுதிக் கொடுத்தது போன்ற அரிய பண்புகளை ஒரு சாதாரண மனிதனிடம் காண இயலாது என்பதால்தான், புரட்சித்தலைவரை அவதார புருஷர் என்கிறேன்.
காவிய வள்ளல் கர்ணன், கடையெழு வள்ளல்கள் போன்று காலத்தை வென்ற கலியுக வள்ளல் புரட்சித்தலைவர் எனும் அவதார புருஷர் அவதரித்த தினம் இன்று. திருக்குறள் முக்காலத்துக்கும் ஏற்ற நூலாக எப்படி திகழ்கிறதோ, அதுபோன்று புரட்சித்தலைவரின் புகழ் எக்காலமும் இம்மண்ணில் வாழும்..........
-
பழைய குப்பை # 10.
*****************
என் நண்பர் என்ற தலைப்பில் 1960 ல் வெளியான இந்தக் கட்டுரை குப்பையல்ல. கோமேதகம்.தூக்கிப்போட்ட பழைய குப்பையிலிருந்து கிடைத்தது என்ற அர்த்தத்தில் விளைந்த தலைப்பிது.நமக்கு முக்கியம் இந்த உலகம் குப்பையில் போட்ட கட்டுரை தானே தவிர குப்பையல்ல.மீண்டும் சொல்கிறேன் வந்த வழியைக் குறிப்பிடவே இந்தத் தலைப்பு.இன்று மக்கள் திலகத்தின் பிறந்த தினம்.அவரைப் பற்றி அவரது நெருங்கிய நண்பரும் பக்கத்து வீட்டுக்காரருமான வி.பி.ராமன் தன் நட்சத்திர நடிகரைப் பற்றி எழுதிய கட்டுரை உங்களது பார்வைக்காக.இதோ ராமன் அந்த ராமச்சந்திரன் பற்றி...
திரு எம்.ஜி.ஆரைப் பற்றி எழுதும்போது எனது நண்பர் என குறிப்பிட்டு என்னால் எழுத முடியவில்லை.அவரை எனது நண்பரென சொல்ல முடியாது.காரணம்?. அவர் எனக்கு அண்ணனைப் போன்றவர்.இருந்தாலும் நண்பர் என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டதால் அண்ணன் எம்.ஜி.ஆரைப் பற்றி இங்கு எழுதுகிறேன்.
ஏறத்தாழ பத்தாண்டுகளாக எனக்கு அவரோடு பழகும் நல் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.இந்த நட்பு பக்கத்து வீட்டுக்காரர் என்ற வகையில் ஏற்பட்டது.லாயிட்ஸ் ரோடு 160 ம் நம்பர் வீடு எங்களுக்குச் சொந்தமாக இருந்தது.ஒரு நாள் காலை எனது தந்தையார் காலஞ் சென்ற திரு ஏ.வி.ராமனும் நானும் எங்களது வீட்டில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம்.அப்போது ஒரு பச்சை வாக்ஸால் வண்டி வந்து எங்களது வீட்டு வாசலில் நின்றது.அதிலிருந்து இருவர் இறங்கினார்கள்.இருவரும் சகோதரர்கள் என்று தெரிந்தது.அவர்கள் தங்களை அறிமுகம் செய்துகொண்டார்கள்.அண்ணன் சக்கரபாணியும் எம்.ஜி.ஆரும் தான் அது.
திரு சக்கரபாணி தந்தையிடம் வந்து அறிமுகமாக எம்.ஜி.ஆர். தான் தந்தையிடம் பேசினார்.தங்களது வீடு காலியாக இருக்கிறது என கேள்விப்பட்டோம்.எங்களுக்கு வாடகைக்கு தர முடியுமா?. சினிமாத் துறையில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்களுக்கு வீட்டை வாடகைக்குக் கொடுக்க பலர் அஞ்சுவதுண்டு.காரணம் வாடகை ஒழுங்காக வருவது சிரமம் என்ற எண்ணம் அப்போது பரவியிருந்தது.எனது தந்தையார் யாரைப் பார்த்தாலும் உடனே ஒரு முடிவிற்கு வரும் சுபாவம் படைத்தவர்.அவர் சற்றும் தயங்காமல் அதற்கென்ன தாராளமாக எடுத்துக்கொள்ளுங்க என்று கூறினார்.எம்.ஜி.ஆர். சந்தோஷத்தோடு நாங்க வாடகையை ஒழுங்காக கட்டிவிடுவோம்.நடிகர்கள் ஆயிற்றே என்று நீங்க பயப்பட வேண்டாம் என்றார்.உடனே எனது தந்தையார் இதை நீங்க சொல்லத் தேவையேயில்லை உங்கள் இருவரைப் பார்த்ததுமே எனக்குப் பிடித்துவிட்டது.நன்றி சொல்லி அவர்கள் விடைபெற்றார்கள்.
அவர்கள் சென்றதும் எனது தந்தை என்னிடம் சொன்னது இன்றும் பசுமரத்தாணி போல் பதிந்திருக்கிறது.எம்.ஜி.ஆரின் முகத்தில் சத்தியத்தின் ஒளியைப் பார்க்கிறேன் என்றார்.தூய்மையான உள்ளம் முகத்தில் தெரிகிறது என்றார்.அவர் உன் வாழ்வில் முக்கியமான இடத்தைப் பெறுவார் அது உன் பாக்கியம் என்றார்.இந்த வாசகத்தை எனது தந்தை சொன்னபோது எனக்கு வயது இருபது கூட ஆகியிருக்கவில்லை.எவ்வளவு உண்மையான வார்த்தைகள் என்று பத்து வருடங்களுக்குப் பிறகு யோசிக்கிறேன்.
ஒரு மாதம் கூட தவறாமல் வாடகை செலுத்திவிடுவார் எம்.ஜி.ஆர்.ஒரு நேரத்தில் அந்த வீட்டை விற்றுவிட தந்தை தீர்மானித்தார்.ஆனால் அதை எம்.ஜி.ஆர்.தான் வாங்க வேண்டுமென ஆசைப்பட்டார்.அவரும் முழு மனதோடு ஒப்புக்கொள்ள வீடு கைமாறியது.சர்க்கார் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற்ற என் தந்தைக்கு தன் வாழ்க்கையின் கடைசி காலங்களில் உதவிய பணம் அந்த வீட்டின் கிரயம் தான்.எனது படிப்பை முடித்து நானும் வக்கீல் தொழிலில் சேர்ந்து என் வாழ்வை அமைத்துக்கொள்ள பயன்பட்டதும் அந்தப் பணம் தான்.
எம்.ஜி.ஆரின் சிறப்பு பற்றி எழுதிக்கொண்டே போகலாம்.அவரது குணங்களில் நான் நெருங்கிப் பார்த்தது அடுத்தவருக்கு தீங்கு நினைக்க அவர் எப்போதும் எண்ணியதே இல்லை.பிறர் துயரை சகித்துக்கொள்ளவும் அவரால் இயலாது.இளகிய மனது என்று கேள்விப்பட்டிருக்கிறோமே அதை அவரிடம் தான் கண்டிருக்கிறேன்.மற்றவருக்கு உதவும்போது அதில் எந்தவித பிரதிபலனும் இருக்காது.அவரிடமிருந்து பொருளுதவி பெற்றுக்கொண்ட பிறகு வெளியே போய் அவரையே தூற்றி எழுதும் பண்பாளர்கள் பலரை நான் பார்த்திருக்கிறேன்.அப்படிப்பட்டவர்களிடம் கூட எம்.ஜி.ஆர்.அன்பாக பழகக் கூடியவர்.
அவருக்கு புத்தர் ஏசுநாதர் போதனைகள் பிடிக்கும்.அவர்கள் சொல்லிய தூய்மையான வாழ்க்கையின் இன்றியமையாத அம்சங்களை தனது வாழ்க்கையிலும் கடைபிடிப்பவர்.Love thy enemies என்ற போதனையை முற்றிலும் பின்பற்றுபவர்.துவேஷம் அவரது அருகில் கூட வந்தது கிடையாது.தனது வாழ்க்கையில் சில லட்சியங்களை குறிக்கோள்களை அவர் இளமையிலேயே கடைபிடித்தவர்.அரசியல் சமூக பொருளாதார துறைகளில் ஆர்வத்துடன் தான் கடைபிடித்த கொள்கைகளை பரப்ப முயன்றவர்.நான் நடிகன் தானே எனக்கென்ன?. என்று இருந்துவிடுவது சுலபம்.ஆனால் தனக்கென சில கொள்கைகளை வகுத்துக்கொண்டு எத்தனையோ எதிர்ப்புகளையும் இன்னல்களையும் தாங்கிக்கொண்டு அவற்றை கடைபிடிப்பது மிகவும் சிரமம்.
எந்தத் துறையில் ஈடுபட்டாலும் சமூகத்தில் வாழும் ஒவ்வொரு மனிதனும் ஒரு அரசியல் பிராணி தான்.எல்லோரிடத்திலும் அரசியல் உண்டு.எம்.ஜி.ஆர் அரசியலைப் பயன்படுத்தி புகழேணியில் ஏறியவர் இல்லை.அதற்கு மாறாக ஒரு சிறந்த நடிப்புக் கலைஞர் என்ற பெயரை புகழை நாட்டிய பிறகு தான் தன்னை பொது வாழ்க்கையில் ஈடுபடுத்திக்கொண்டார்.ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் ஏற்றங்களும் இறக்கங்களும் ஏற்படுவது இயற்கை.பக்குவமான மனிதனின் அறிகுறி இரண்டையும் ஒன்றாக பாவித்து ஏழ்மையிலும் எளிமையிலும் உதவியவரை மறவாமல் வசதியிலும் நட்புறவை கொள்வது சாதாரண விஷயமல்ல.அந்த பரீட்சையில் பலர் தேர்வு பெறமாட்டார்கள்.ஏறிய ஏணியை உதைத்துத் தள்ளுவதும் உதவியவர்களை உதாசீனம் செய்வதும் வளமானவர்களின் குணாதியங்களில் ஒன்றாக ஆகிவிட்டது.ஆனால் எம்.ஜி.ஆர் இந்த விஷயத்தில் தன்னுடைய மேலான மனதைக் காட்டுகிறார்.தான் எளியவனாக இருந்தபோது உதவிய ஒருவரையும் அவர் மறக்கவில்லை.நன்றி மறவாமை ஒரு சிறந்த பண்பு.அது எம்.ஜி.ஆரிடம் நிறையவே இருக்கிறது.
எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் அதை தீர ஆராய்ந்த பிறகே ஒரு முடிவை எடுப்பார்.பல முறை அவருடன் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதித்திருக்கிறேன்.அப்போதெல்லாம் அவரது கேள்விகளும் சந்தேகங்களும் அவரது கூர்மையான அறிவுத் திறனையே காட்டியிருக்கிறது.பேசும் பட வாசகர்களுக்குப் போய் அவரது நடிப்புத் திறனை பேச வேண்டிய தேவையில்லை.தமிழ்த் திரையின் ஏர்ரால் ஃப்ளின் அவர்.பல்வேறு பாத்திரங்களில் ரசிகர்களை பரவசப்படுத்தியவர்.அவரது நடிப்பின் சிறப்பை நான் கூறாமல் இருக்க முடியாது.தான் ஏற்கும் பாத்திரம் ஒவ்வொன்றின் வாயிலாகவும் நல்ல கருத்து அதாவது நல்ல மாரல் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என எதிர்பார்ப்பார்.
எம்.ஜி.ஆரின் நண்பன் என்பதால் பலரும் அவரிடம் சிபாரிசு செய்ய என்னை அணுகுவது வழக்கம்.அப்படி வரும் நூறு பேரில் ஒன்றையோ இரண்டையோ தான் அவரிடம் தெரிவிப்பது வழக்கம்.உலகத்திலுள்ள எல்லா கஷ்டங்களையும் தனிப்பட்ட ஒருவரால் எப்படி நீக்க முடியும்?. மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய பெரும் வசதிகள் படைத்த அரசாங்கமே விழித்துக்கொண்டிருக்கும்போது தனி நபர் எவ்வளவு தான் செய்ய முடியும்?. எம்.ஜி.ஆரின் இளகிய மனதை பயன்படுத்திக்கொண்டு எப்போது பார்த்தாலும் பொருளுதவி கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.அவரும் இயன்றதற்கும் மேலாகவே உதவிக்கொண்டிருக்கிறார்.ஆனால் எனக்குத் தெரிந்து அவரிடம் உள்ள குறை பாத்திரம் அறிந்து பிச்சையிடுவது கிடையாது.தமிழ் இலக்கியத்தில் படித்த குமணனும் பாரியும் தான் எனது நினைவிற்கு வருகிறார்கள்.
இக் கட்டுரையை முடிப்பதற்கு முன்பு ஒரு சிறு விஷயத்தை மட்டும் குறிப்பிட்டு முடிக்க விரும்புகிறேன்.எனக்கும் எம்.ஜி.ஆருக்கும் உள்ள தொடர்பு நெடு நாட்களாக உள்ள தொழில் துறை அரசியல் துறை போன்ற பழக்கங்களால் மட்டும் ஏற்பட்ட உறவல்ல.இருவரின் மன ஒற்றுமையில் ஏற்பட்ட சகோதர பாசம்.ஒருவரை நண்பர் என ஏற்றால் அவரை முழு மனதுடன் நேசிப்பார்.பெரும் அறிவாளிகள் பெரும் செல்வந்தர்கள் திறமை படைத்தவர்கள் நாட்டில் தோன்றலாம்.ஆனால் நல்லவர்கள் மிகக் குறைவு.அகத்தில் அப்பழுக்கில்லாத ஆத்மாக்கள் அரிது.எம்.ஜி.ஆர். அப்படிப்பட்ட அதிசயப் பிறவி.தங்கமான இதயம்.தங்கம் போன்ற அவரது உடல் தங்கமாக ஜொலிக்க அவரது உயர்ந்த குணங்கள் தான் காரணம்.வாழ்க எம்.ஜி.ஆர். பல்லாண்டு.
ராமனின் இந்தக் கட்டுரை வெளியாகி அறுபது ஆண்டுகள் ஓடிவிட்டது.இப்போதும் இம்மி மாறாமல் இதே இவரது கருத்தை யாரும் ஒத்துக்கொள்வார்கள்.எல்லோருக்கும் மனிதப் பிறவி ஒரு முறை தான்.மரணம் இங்கே தவிர்க்க முடியாத ஒன்று.ஆனால் அதற்குப் பிறகும் சிலரால் இங்கே வாழ முடிகிறது என்றால் அவர்கள் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்கள் என்று அர்த்தம்.அப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்த மக்கள் திலகத்தின் வாழ்க்கை மகத்தானது.இந்த நாளில் அவரை நினைவு கூறுவோம். .அவரை வாழ்த்துவதில் பெருமை கொள்கிறது இந்தக் குழு.மீண்டும் கிளறுகிறேன் குப்பையை எந்தப் பொக்கிஷம் கிடைக்கப்போகிறது என்பதை காணலாம் நாளை.அது வரை குப்பைகளை கிளறிக்கொண்டே இருப்பேன்.நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்............
வளரும்............ Abdul Samad Fayaz.........
-
ஃபயஸ் ஸார். அந்த மாமனிதரைப் பற்றி எவ்வளவு தான் கேட்டாலும் படித்தாலும் அலுக்காது. உலகம் சுற்றும் வாலிபன் தொடர் எழுதிக் கொண்டிருந்தீர்களே அப்போதுதான் உங்கள் கட்டுரைகள் படிக்கத் தொடங்கினேன் அது ஒரு அற்புதமான தொடராக வந்து கொண்டிருந்தது. கடைசியில் அவசரமாகப் போட்டு மூடியது போல் ஆகிவிட்டது. ஏன் என்று தெரியவில்லை. அப்போதே அவரது குணங்கள் பற்றி நன்றாக விளக்கியிருந்தீர்கள். எதிர்பாராமல் இன்று இரண்டாவது பதிவு வந்தது. சர்ப்ரைஸ்.நடிக்க சான்ஸ் கேட்டு அலைந்த நாட்கள் பெரிய நடிகராக இருந்த நாட்கள் ஒரு மாநில முதல்வராக இருந்த நாட்கள். எல்லாமே அவரது பெருமைக்கு சான்று கூறுபவை. மக்கள் மனதில் என்றைன்றும் வாழும் மக்கள் திலகம். வாழ்க புகழ்...Gomathy S...
-
இனி யாரும் எம்ஜிஆர் ஆக முடியாது. கிட்னி ஆபரேசனுக்கு பயந்து அரசியலுக்கு வராம ஓடியவர்கள், மக்கள் பணின்னு வந்துட்டு தோத்துப்போனால் அரசியலுக்கே முழுக்கு போட்டவர்கள் மத்தியில் , கால் முறிஞ்சு மீண்டு எழுந்து, சினிமாவிலும் அரசியல்லயும் நிலைச்சு நின்று, தொண்டையில் குண்டு பாய்ஞ்சு பேச முடியாட்டியும் பயிற்சி செய்து பேசி, சினிமாவில் யாரும் நெருங்க முடியாதபடி ஜெயிச்சு, கிட்னி ஆபரேசன் பண்ணினாலும், வாதநோய் வந்தாலும் அதையும் தாங்கி மீண்டு நோயை விரட்டி மூணாவது பிறவி எடுத்து அரசியல்லயும் எவரும் நினச்சுபார்க்க முடியாதபடி படுத்தபடியே ஜெயித்து சாதனை செய்து, உடல் துன்பத்தையும் தீய சக்திகளின் நெருக்கடியையும் சமாளிச்சு வெற்றி பெற்று ஏழைங்கள பத்தியே சிந்திச்சு பொற்கால ஆட்சி தந்து ஏழைங்களை வாழவைத்த தங்கத் தலைவனே.. உனக்கு நிகர் நீயேதான். உன்னைப் போல சாதனை செய்ய நீயே திருப்பி பிறந்தால்தான் முடியும் அய்யா. உன் பக்தர்கள் என்பதில் தலை நிமிர்த்தி பெருமைப் படுகின்றோம்.பிறந்த நாள் வாழ்த்துக்கள் ... தலைவா....rrn...
-
தன் ஆசான் அண்ணாவை அரியணையில் ஏற்றிய சீடன். இந்தியாவில் தனி நபர் ஒருவரின் பெயரில் (அண்ணா) ஏற்படுத்தப்பட்டு தற்போதுவரை இயங்கும் ஒரு பெரிய கட்சியை தோற்றுவித்தவர். தமிழகத்தை அதிக ஆண்டுகள் ஆண்டு கொண்டிருக்கும் கட்சியின் அடித்தளமாக இருப்பவர்.
49% இருந்த இட ஒதுக்கீட்டை 68% என உயர்த்திக்கொடுத்தவர்.
பரம்பரை பரம்பரையாக ஆண்டைகளிடமிருந்த மணியக்காரர் பதவிகளை பிடுங்கி அனைத்து சாதியினரும் அரசு பணியுடன் கிராம நிர்வாக அதிகாரிகளாகலாம் (VAO) என்ற புரட்சியை செய்த தலைவர்.
தனியாரிடமிருந்த ரேஷன் கடைகளை பிடுங்கி அரசுடமையாக்கியவர்.
இந்தியாவில் முதன்முதலில் இலவச ஆம்புலன்ஸ் திட்டத்தை கொண்டு வந்தவர்.
'ஒரு குடிசை, ஒரு விளக்கு' திட்டத்தின் மூலம் ஏழை குடிசைகளுக்கெல்லாம் ஒளியூட்டிய ஒரிஜினல் சூரியன்.
தன் ஆசானின் ஆசான் பெரியாரின் நூற்றாண்டு விழாவை தன் ஆட்சிக்காலத்திலும், தன்னுடைய நூற்றாண்டு விழாவை தன் கட்சி ஆட்சியிலும் கொண்டாடும் அளவிற்கு புகழோடு இன்றும் திகழ்பவர்.
தமிழகத்தில் புதிதாக கட்சி தொடங்கும் யாராக இருந்தாலும் எம்.ஜி.ஆர் ஆட்சியை நாங்கள் தருவோம் என சொல்லும் அளவிற்கு இன்றும் தாக்கத்தை ஏற்படுத்தி வருபவர்.
தன் தொழிலான திரைத்துறையிலும், பிறகு அரசியலிலும் கடைசிவரை ' நம்பர் 1 ' இடத்திலேயே இருந்த ஒரு மக்கள் தலைவன் ஓர் எளிய குடும்பத்தில் தோன்றிய தினம் இன்று.
#MGR104
#hbd_mgr_104... Selva Bharath...
-
#எம்ஜிஆர் #இன் #தமிழ்நதி #மக்கள் #சங்கம்!!!
பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் அவதரித்த இந்நன்னாளில், அக்மார்க் எம்ஜிஆர் பக்தர்களுக்காக தோன்றியிருக்கும் ஒரு சங்கம்...
எம்ஜிஆர் கொள்கைகளை நிறைவேற்ற முயற்சிசெய்ய துடிப்புடன் செயல்படுத்த இருக்கும் ஒரு சங்கம்...
எந்தவித சுயலாபநோக்கின்றி அமைக்கப்பட்டிருக்கும் ஒரு சங்கம்...
அக்மார்க் எம்ஜிஆர் பக்தர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு எம்ஜிஆர் அவர்களின் பொற்கால ஆட்சியை மக்களோடு மக்களாக நின்று, தோள்கொடுத்து மீண்டும் அந்த நல்லாட்சியை நிறுவ முனைப்புடன் இருக்கும் ஒரு சங்கம்...
எம்ஜிஆர் இன் தமிழ்நதி மக்கள் சங்கம்!!!
புரட்சித்தலைவரின் புகழ் போல தழைத்தோங்க எல்லாம் வல்ல நம் குலதெய்வம் பொன்மனச்செம்மல் அருளாசி புரிவாராக!!!
அக்மார்க் எம்ஜிஆர் பக்தர்களின் நல்லாதரவை சிரமேற்கொண்டு வரவேற்கிறோம்!!!
புரட்சித்தலைவர் புகழ் வாழ்க!!!........
-
எம்.ஜி.ஆர் பிறந்தார்!
-----------------------------
எம்.ஜி.ஆரின் இத்தனையாவது பிறந்த நாள் என்று நான் கணக்கெல்லாம் வைத்துக் கொள்வதில்லை.
கிருஷ்ண ஜெயந்தி,,அனுமத் ஜெயயந்தி பிள்ளையார் சதுர்த்தி வரிசையில்--எம்.ஜி.ஆர் ஜெயந்தி! தட்ஸ் ஆல்!
இன்றைய எம்.ஜி.ஆர் ஜெயந்தியை நான் விளக்க வேண்டியதில்லை.
நாடு முழுதும் இப்போதும் அதன் கொண்டாட்டத்தைக் கொண்டாடிக் கொண்டிருப்பதே நீங்கள் தானே?
ஒரு நாள் எங்களுக்குள் ஒரு உரையாடல் ஓடியது--
எங்களுக்குள் என்றால்--
கனரா வங்கி சரவணன் ராஜகோபால்--எம்.ஜி.ஆரின் பேரன்--குமார் ராஜேந்திரன்,,மற்றும் அடியேன்!
பிரதமர் மோடி வெளியிட்ட எம்.ஜி.ஆர் உருவம் பொறித்த நாணயங்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தோம்!
தலைவரின் காய்ன் சூப்பரா இருக்கு என்று குமார் ராஜேந்திரன் சொல்லிக் கொண்டிருந்தபோதே மின்னலென சரவணன் ராஜகோபாலின் விழிகள் என்னை சந்தித்தன. ஒரு விஷயத்தை மின்னஞ்சலென அவர் கண்ணஞ்சல் செய்தார்
எம்.ஜி.ஆர் ஜெயந்தி அன்று எம்.ஜி.ஆர் அருங்காட்சியில் எம்.ஜி.ஆரின் புகைப்படத்துக்கு பக்கத்தில் இரு புறமும் இரு நாணயங்களை வைத்து அழகு பார்ப்பது என்பதே அந்த சேதி!
சொன்னால் யாரும் நம்ப மாட்டீர்கள்--
அன்றிலிருந்து சரவணன் ராஜகோபாலுக்கு அதே சிந்தனை.
ஆன் லைன் மூலம் இரண்டு நாணயங்களை,,நம் முகனூல் அண்ணன் ஜெயப்ரகாஷ் மூலம் தருவிக்கும் வரை அவர் சிந்தனை வேறெதையும் நாடவில்லை.
எம்.ஜி.ஆர் நினைவகத்தை நிர்வகித்து வரும் குமார் ராஜேந்திரனிடம்,,,, எம்.ஜி.ஆர் ஜெயந்தியன்று அதை வழங்க முடிவெடுத்தார்!
எம்.ஜி.ஆரை இன்றைய நிலையில்--
எம்.ஜி.ஆருக்காகவே விரும்பும்,,அவர் வழி தொடரும்-
ஜே.சி.டியார்,,எஸ்.வி.சேகர்,,எம்.ஜி.ஆர் லதா ஆகியோர் நம் சிந்தையில் இடறினார்கள்.
அவர்கள் கையால் அந்த நாணயஸ்தருக்கான நாணயத்தை வழங்க முடிவெடுத்தோம்!
அந்த நாணயத்தை அழகான ஸ்டாண்ட் ஒன்றில் பொறிக்கச் செய்யும் வேலையை சிவாஜிபாபு முருகேசன் மேற்கொள்ள,,விழா ஏற்பாட்டைக் கவனிப்பதாக இருந்தவர்--
நீண்டதொரு நித்திரையில் ஆழ்ந்திருக்கும்--
முக நூல் அண்ணன் கோபாலகிருஷ்ணன்!!
காலம் தான் சில நேரம் கடுமையாக விளையாடுமே?
நாணய அன்பளிப்புக்கு சொந்தக்காரர் சரவணன்ராஜகோபால் பெரியதொரு இதய அறுவை சிகிச்சைக்கு உட்பட்டு,,தற்போது வீட்டில் கட்டாய ஓய்வு?
இதயம் உள்ளவர்களுக்குத் தானே இதய நோவு?
கோபாலகிருஷ்ணனோ தலைவரிடம் செய்தியை சொல்வதற்காக அவரைத் தேடிக் கொண்டு அங்கேயே??
நிகழ்ச்சி பொறுப்பாளர் அல்லவா??
மிகவும் விமரிசையாக நாணயம் வழங்கு விழா நடந்தேறியது.
கட்சியின் அமைப்புச் செயலாளராக அங்கேக் கொண்டாடினாலும்,,தலைவர் வளைய வந்த இந்த இடத்தில் தலைவருக்கான நாணயத்தை வழங்குவது ரொம்பவேப் பெருமையாயிருக்கு என்று அண்ணன் ஜே.சி.டியார் பேசியபோது அவருடன் வார்த்தைகள் ஒத்துழைக்கவில்லை?
மிகவே உணர்ச்சி வசப்பட்டார்.
மத்திய அரசோ,,மா.நில அரசோ எவர் எம்.ஜி.ஆரை இருட்டடிப்பு செய்தாலும்--சின்னச் சின்னத் தெருக்களிலெல்லாம் அவர் போட்டோவை வைத்துக் கும்பிடும் தூய பக்தர்களை விடவா அரசியல்வாதிகள் எம்.ஜி.ஆரை உயர்த்திவிட முடியும்?
தான் எவ்வளவு கோடி சம்பாதித்தோமோ அதை அப்படியே அள்ளாமல் குறையாமல் மக்களுக்கேத் திருப்பித் தந்த தலைவர் எம்.ஜி.ஆர் ஒருவர் தான் என்று எஸ்.வி.சேகர் குறிப்பிட்டபோது அங்கேக் கூடியிருந்தவர்கள் அனைவருமே உணர்ச்சி வயப்பட்டார்கள்/
சிவாஜிபாபு முருகேசன் பம்பரமாய் சுழன்று ஏற்பாடுகளை கவனிக்க--
பெங்களூர்--சம்பங்கி,,அரியலூர் சுகுமாரன்,,ஹோசூர் சித்தார்த் இப்படி அசலூரிலிருந்து ஆயிரக்கணக்கானவர்கள் அதுவும் கொரொனா பாதிப்பு முற்றிலும் விலகாத நிலையிலும் வந்திருந்தது மிகப் பெரிய விஷயம் மட்டுமல்ல--எம்.ஜி.ஆர் ஒருவருக்கே சாத்தியமானது என்பதே சத்தியமானது!
எந்தக் கட்சியில் இப்போது இருக்கிறார் என்று தெரியாது-
ஆனால் ஆளுயர மாலையுடன் வந்திருந்து ஆழமான எம்.ஜி.ஆர் பக்தியை அங்கேக் கொட்டியது--
அண்ணன் திரு நாவுக்கரசர்!!!
மீண்டும் சொல்வேன்! வந்திருந்த அத்தனை உயிர்களும்-எம்.ஜி.ஆருக்காகவே எம்.ஜி.ஆரை ஏந்திப் பிடிப்பவர்கள்??
கொரோனா தொற்றா? அப்படியென்றால்?
சமூக இடைவெளியா?? எதற்காக?
இந்த இரண்டு கேள்விகளையும் மட்டும் தான் இன்றைய தினம் மக்கள் கேட்டிருக்கிறார்கள்?
அப்படி கேட்க வைத்தது??
எம்.ஜி.ஆர்!!!.......vtr
-
இதயதெய்வம் புரட்சிதலைவர் பிறந்தநாள் சிறப்பு பதிவு.....
உலகில் நம் தங்க தலைவருக்கு போல வேறு எந்த தலைவருக்கும் அதிகம் சிலைகள் இல்லை.
தமிழகத்தில் மட்டும் 12800 தாண்டி.
மாநகரங்கள்... நகரங்கள்...கிராமங்கள் சேர்த்து...
இவை தவிர மலேசியா சிங்கப்பூர் இலங்கை அந்தமான் பாண்டிசேரி மொரேசியஸ்..பாரிஸ் லண்டன் மாநகர் இவை போன்ற வெளிநாடுகள் யூனியன் பிரதேசங்கள்
இவை தாண்டி இந்திய திருநாட்டில் பெங்களூர் மும்பை கல்கத்தா இந்தியாவின் தலைநகர் டெல்லி மற்ற பிற மாநிலங்களில் நம் மன்னனுக்கு வைக்க பட்ட சிலைகள் சேர்த்தால் 13000 என்ற இலக்கை எட்டும்.
உலக அளவில் ஒரு நடிகரின் திரைப்படங்கள் அதிக அளவு மறு வெளியீடு செய்யப்பட்டவை நம் தலைவரின் படங்களே இந்த நொடி வரை.
உலக அளவில் அதிக நூல்கள் எழுத பட்ட ஒரே தலைவர் நம் மன்னாதி மன்னன் அவர்களை பற்றியே..
ஒரு அரசியல் தலைவர் மறைந்தும் அவரது பிறந்தநாளில் நினைவு நாளில் பொது மக்கள் வீதிகளில் ஒருவரை படத்தை வைத்து வணங்கி மகிழ்வது உலகில் நம் புரட்சிதலைவர் அவர் ஒருவருக்கு மட்டுமே.
இருக்கும் போதும் அவர் செய்த சாதனைகளை அவர் மறைந்த பிறகும் அவர் ஒருவரே நிலை நாட்டி கொண்டு இருக்கும் அதிசயம் பார்ப்போம் கண்ணிலே அது அப்படியே நிற்கும் நம் நெஞ்சிலே..
பதிவில் படத்தில் மின்னி கொண்டு இருக்கும் நம் தலைவர் சிலை தமிழகத்தில் அவர் மறைந்த பின் வாழப்பாடி ஒன்றியத்தில் உள்ள அத்தனூர்பட்டி என்னும் கிராமத்தில் முதன் முதலாக வைக்க பட்ட தலைவர் சிலை என்பது கூடுதல் தகவல்.
இன்று முதல் மீண்டும் தொடரும்...
புரட்சிதலைவர் புகழ் மாலை நினைவுகள்.
நன்றி..உங்களில் ஒருவன் ..நெல்லை மணி...
அன்பு தலைவர் இதயம் அரிமா அவர்கள் உடன்..........nmi
-
#மக்கள்_திலகம்_எம்_ஜி_ஆர்_பிறந்த_தினம் இன்று...
#m_g_r. எட்ட முடியாத உயரத்துக்குச் சென்றபோதும் பட்டங்களும் பதவிகளும் வந்து குவிந்து, நாடே அவரைக் கொண்டாடியபோதும் அந்தப் புகழையெல்லாம் அவர் தன் தலையில் தூக்கி வைத்துக் கொண்டதில்லை. ஏற்றத் தாழ்வுகளை சமமாகவே பாவித்தார்.
ஆரம்ப காலங்களில் நாடகங்களில் நடித்து, பின்னர் திரைப்படங்களில் சிறிய வேடங்களில் தலைகாட்டி வாய்ப்புகளுக்காக காத்திருந்தபோது எம்.ஜி.ஆர். துவண்டதுமில்லை. பின்னர், தமிழ் திரையுலகின் சக்கரவர்த்தியாக இருந்தபோது துள்ளியதும் இல்லை.
1968-ம் ஆண்டு ‘பொம்மை' இதழின் ஆண்டு மலருக்காக எம்.ஜி.ஆரை ஜெய லலிதா பேட்டி கண்டார். அப்போது, எம்.ஜி.ஆரிடம் ஜெயலலிதா கேட்ட கேள்வி இது: ‘‘சினிமா உலகில் நீங்கள் யாருமே அடையமுடியாத உச்ச நிலைக்குப் போய்விட்டீர்கள். விரும்பிய லட்சியத்தை அடைந்துவிட்டோம் என்ற பூரிப்பு உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறதா? ’’
இந்தக் கேள்விக்கு எம்.ஜி.ஆர். அளித்த பதில், அவர் எந்த அளவுக்கு வாழ்க்கையை தெளிவாக புரிந்து கொண்டிருக்கிறார் என்பதை உணர்த்தும். எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மை யார் கதாநாயகியாக நடித்த ‘ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி ’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தவர் புலிக்குட்டி பி.எஸ்.கோவிந்தன். அதே போல, நாடக மேடைகளிலும் திரைப் படங்களிலும் நடித்து ‘இந்திய மேடைப் புலி’ என்று பட்டம் பெற்றவர் கே.பி.கேசவன். இவர்களைப் போன்று பல நடிகர்கள் ஒருகாலத்தில் மிகுந்த புகழோடு இருந்தனர்.
‘இரு சகோதரர்கள்’ என்ற படத்தில் எம்.ஜி.ஆருக்கு சிறிய வேடம். அந்தப் படத்தின் கதாநாயகன் கே.பி.கேசவன். எம்.ஜி.ஆர். மீது மிகுந்த அன்பு கொண் டவர். ‘இரு சகோதரர்கள்’ திரைப்படம் சென்னையில் ‘நியூ எல்பின்ஸ்டன்’ திரை யரங்கில் வெளியானது. அந்த தியேட்டரெல்லாம் இப்போது இல்லை. படத்தைப் பார்க்க கே.பி.கேச வனும் எம்.ஜி.ஆரும் சென்றனர். இடைவேளையின்போது கே.பி.கேச வனைக் கண்டுகொண்ட ரசிகர்கள் எழுந்து நின்று அவரைப் பார்த்து உற்சாகமாகக் கூச்சலிட்டனர். இதைக் கண்டு திகைத்துப் போன எம்.ஜி.ஆர்., இவ்வளவு ஆதரவும் செல்வாக்கும் உள்ளவரின் பக்கத்தில் அமர்ந்திருக்கிறோமே என்று மனதுக்குள் பெருமைப்பட்டார்.
ரசிகர்களின் அன்புத் தொல்லையைத் தவிர்க்க, எம்.ஜி.ஆரும் கே.பி.கேச வனும் படம் முடிவதற்குள் எழுந்து வெளியே வந்தனர். அவர்கள் புறப் படுவதை அறிந்து மக்களும் வந்துவிட்டனர். அவர்களிடம் இருந்து கே.பி.கேசவனை எம்.ஜி.ஆர். பாதுகாப்பாக அழைத்துச் சென்று காரில் ஏற்றி அனுப்பி வைத்தார். அப்போது, அந்தப் படத்தில் சிறிய வேடத் தில் நடித்திருந்த தன்னை மக் களுக்கு அடையாளம் தெரிய வில்லை என்று எம்.ஜி.ஆர். குறிப்பிட்டுள்ளார்.
சில ஆண்டுகள் கழிந்தன. எம்.ஜி.ஆர். கதாநாயக னாகி புகழ் பெற்றிருந்தார். அவர் நடித்த ‘மர்மயோகி’ படம் சென்னையில் ‘நியூ குளோப்’ திரையரங்கில் திரை யிடப்பட்டது. படத்தைப் பார்க்க எம்.ஜி.ஆரும் கே.பி.கேசவனும் சென்றனர். எம்.ஜி.ஆர். வந்திருப்பதை அறிந்த ரசிகர்கள் அவரை வாழ்த்தி கோஷமிட்டனர். எம்.ஜி.ஆருக்கு பக்கத்திலேயே கே.பி.கேசவன் அமர்ந் திருந்தார். அவரை யார் என்று கூட மக்கள் அறிந்துகொள்ளவில்லை.
படம் முடிந்து வெளியே வந்தபோது, மக்கள் கூட்டம் எம்.ஜி.ஆரை சூழ்ந்து கொண்டது. கூட்டத்தை விலக்கி எம்.ஜி.ஆருக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்து காரில் அனுப்பி வைத்தார் கேசவன். காரில் எம்.ஜி.ஆர். புறப்பட்டுச் செல்லும்போது மக்களோடு ஒருவராக கேசவனும் நின்று கொண்டிருந்தார்.
இந்த சம்பவத்தை குறிப்பிட்டுவிட்டு எம்.ஜி.ஆர். தொடர்ந்து, ‘‘கே.பி.கேசவனின் நடிப்பாற்றல் ‘மர்மயோகி’ படம் வெளியானபோதும் எந்த வகையிலும் குறைந்துவிடவில்லை. கலைஞர்களுக்கு உச்ச நிலை, தாழ்ந்த நிலை என்பதெல்லாம் மக்களால் தரப்படும் ஒரு மயக்க நிலை. கலைஞனைப் பொறுத்த வரை அவனுக்கு வீழ்ச்சி கிடையாது. சூழ்நிலை அவனை உயர்த்தும், தாழ்த்தும்’’ என்று கூறியுள்ளார். இப்படி புகழைப்பற்றி தெளிவான மன நிலையில் எம்.ஜி.ஆர். இருந்தார்.
பேரறிஞர் அண்ணாவின் அமெரிக்க பயணத்தின்போது, திமுகவின் முக்கிய பிரமுகர்களில் ஒருவராக விளங்கியவரும் பல படங்களைத் தயாரித்தவருமான இராம. அரங்கண்ணலும் உடன் சென்றிருந்தார். பல அடுக்கு மாடிகளைக் கொண்ட உயரமான ஒரு கட்டிடத்தின் உச்சிக்கு இருவரும் சென்றனர். அங்கிருந்து காட்சிகளின் அழகை ரசித்துக் கொண்டே அண்ணாவிடம், ‘‘அடேயப்பா, எவ்வளவு உயரத்தில் இருக்கிறோம் அண்ணா? ’’ என்று அரங்கண்ணல் வியப்புடன் கூறினார்.
அதற்கு அண்ணா கூறிய பதிலை எல்லோரும், குறிப்பாக இன்றைய அரசியல் வாதிகள் மனதில் கொள்ள வேண்டும். சிரித்துக் கொண்டே அண்ணா சொன்னார்: ‘‘இன்னும் சிறிது நேரத்தில் கீழே இறங்கி தரையில் நடக்கப் போகிறோம் அரங்கண்ணல்.’’
அண்ணாவுக்கு இருந்த அதே மன நிலையோடு, உயர்வு வந்தாலும் தாழ்வு வந்தாலும் சமமாக பாவிக்கிற எண்ண ஓட்டத்தோடு எம்.ஜி.ஆர். இருந்தார். ‘உச்ச நிலை, தாழ்ந்த நிலை என்பதெல் லாம் ஒரு மயக்க நிலை’ என்று கருதி, அவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் மக்கள் மீது அன்பு செலுத்தி அவர்களின் நலனில் அக்கறை காட்டியதால்தான், மக்களின் மனங்களில் எம்.ஜி.ஆர். உச்ச நிலையிலேயே இருந்தார், இருக்கிறார், இருப்பார்!...ns...
-
Thanks @Sarva Bhouman
Well said...!!!
________________________________
அந்தக் காலத்துக்கு எம்ஜியார், இப்போது ரஜினி என்பதைப் போல பல நண்பர்கள் பேசி வருகிறார்கள்.
எம்ஜியாரின் ரசிகர்களை பிற நடிகர்களின் ரசிகர்கள் எண்ணிக்கையில் விஞ்சி விடும் சாத்தியம் நிச்சயம் இருக்கிறதுதான். ஜனத்தொகை பெருகி வருகிறது, இல்லையா?
ஆனால், திரையைத் தாண்டி பொதுவாழ்வு, அரசியல் - என்று எல்லா இடங்களிலும் முத்திரை பதித்து மக்கள் மனத்திலும் இடம் பிடித்தவர் இன்னொருவர் கிடையாது எங்குமே.
திரையிலும் வெறும் நடிப்பு என்று மட்டுமே தன்னை நிறுத்திக் கொள்ளாது - நடிப்பு, இயக்கம், தயாரிப்பு என்று வெளிப்படையாகவும் ஒரு படத்தின் திரைக்கதை, இசை, காமிரா கோணங்கள், ஒளிப்பதிவு, பாடல் வரிகள்,, படத்தொகுப்பு என்று பலவகைகளிலும் தன்னை முழுவதுமாகப் பதித்துக் கொண்டவர் அவர். ஓரளவிற்கேனும் அந்த அளவு ஈடுபாட்டுடன் உள்ள நடிகர் அவருக்குப் பின்னர் வந்த கமலஹாசன் மட்டுமே.
மேற்கூறிய அத்துணை திறமைகளோடும், அதை வெளிப்படுத்தும் உறுதி மற்றும் துணிவோடும் ஒருவர் எதிர்காலத்தில் வருவாரானால், அவரே எம்ஜியார் என்னும் திரை வல்லுனருடன் ஒப்பீடு செய்யப்படத் தகுதியானவர்.
அந்தக் காலத்துக்கு இந்தக் காலத்துக்கு என்றில்லை, எந்தக் காலத்திலுமே ஒரே சூப்பர் ஸ்டார் - MGR.
#ரீபோஸ்ட்
_________________________________
#இத்துடன்....ஒரு சினிமா நடிகருக்கும், அரசியல்வாதிக்கும் மிக மிக இன்றியமையாத குரல்வளம் அவரிடமிருந்து பிடுங்கப்பட்டபோதும்;நாடக நாட்களில் கால்கள் உடைந்து நடக்கமுடியாமல் தடுமாறிய போதும்; அவரது படங்களுக்கு ஒன்றன் பின் ஒன்றாக சோதனைகள் பல வந்தபோதும்;பின்னர் 1984 ல் அத்தனை உடல் நலக்குறைவுக்கு பிறகும் மீண்டு எழுந்து, அத்தனை பாதகங்களையும் தனக்கு சாதகமாக்கிய தன்னம்பிக்கையின் சின்னமாக, இனி எவரையும் நினைத்தாவது பார்க்கமுடியுமா?.........Sarva Bhouman...
-
#கட்சியின்_ஆணி_வோ்_யாா் ?
" தொண்டரென்றால் யாா் ?
ஒரு அரசியல் கட்சியின்
அஸ்திவாரமும்
அவன்தான் ...
மைய மண்டபமும்
அவன்தான் ;
மாளிகையின் முகப்பும்
அவன்தான் ....
படிகளும் அவன்தான் ;
படியேற்றி விடுபவனும்
அவன்தான் .....
படியிலிறக்குபவனும்
அவன்தான் ;
கொடிக் கம்பம் நடுபவனும் அவன்தான் ....
கொடியைக் காப்பவனும்
அவன்தான் ;
அடிபடுபவனும்
அவன்தான் ....
அடிமட்டத்திலிருப்பவனும்
அவன்தான் !
" உனக்காக என் உயிா் "
என்பதறிவான் ...
எனக்கென்ன தருவாய்
என்று கேட்டறியான் ; "
கொள்கையின் உயிா் மூச்சு
அவன் !
அவன் .... உயிா் ;
கட்சி ....... உடல் !
அவன் அசைந்தால்தான்
கட்சி இயங்கும் ...
அவன் அடங்கி விட்டால்
கட்சி முடங்கி விடும் "
----புரட்சித் தலைவா் எம்.ஜி.ஆா்
( தென்னகம் 18.10.1975 )...
-
பணம் பதவி சுக அரசியல் ஆதாயத்திற்காக அல்ல. வெறும் சினிமா மோகத்தில் நாயகனைத் துதி பாடும் ரசிகனாக அல்ல. கோடிக்கணக்கான மக்கள் கொண்டாடும் இன்றைய உலகப் பிரசித்தி பெற்ற ஆளுமையைப் புகழ்ந்து முகவரி தேட அல்ல. 60 ஆண்டுக்கு முன்பு எழுதிய தலைவரைப்பற்றிய கட்டுரை. அதற்கும் 10 ஆண்டுக்கு முன்பு கட்டுரையாளரின் தந்தை தலைவர் எம்ஜிஆரைப்பற்றிச் சொன்ன தீர்க்க தரிசனப் பெருமைகள். உண்மை. வெறும் புகழ்ச்சி இல்லை. காரணமில்லாமல் தமிழ்மக்கள் தலைவரை தலையில் வைத்துக் கொண்டாடவில்லை. பகைவரின் தூற்றல்கள் வெற்றுக் காழ்ப்புணர்வால் என்பதை இவரது கூற்று 100 க்கு 100 பறைசாற்றும்.... Tamilan Chinnasamy...
-
எங்கள் இறைவனை போல வந்துவிடலாம் என்று நம்பியவர் பலர் இங்கே உண்டு.
மன்றம் நாங்கள் கண்ட நேரத்தில் இவர் முதல்வர் ஆவார் என்று கனவு கண்டு துவங்கவில்லை அவர் ரசிக மன்றங்களை..
அது காலம் இழுத்து சென்ற கோலம்.
ஒரு பிரபல நடிகரின் ரசிகர் மன்ற 4 மாவட்ட செயலர்கள் கட்சி துவங்க இல்லை இன்று வேறு திசையில் ஓடி வேறு கட்சியில் சங்கமிக்கும் காட்சி இன்று பார்க்கிறோம்.
ஒரு இன்னும் ஒரு பிரபல நடிகர் இவ்வளவு நாள் இன்னொரு நடிகர் புகழ் பாடி.... கட்சி ஆரம்பித்தவுடன்
மடியில் தவழ்ந்தேன் அவர் கொடியில் பிறந்தேன் என்று இன்று தலைவர் வீடு தேடி செல்லும் நிகழ்வுகள்..
இந்த மடியில் தவழ்ந்த அவர் முதல் திருமணத்துக்கு மும்பை சென்று தாலியை தன் கையால் எடுத்து கொடுத்து வாழ்த்தியவர் நம் தலைவர் .
பின் பிரிவு வரும் போது அந்த வாணி தலைவரிடம் அண்ணா என்ன இப்படி செய்கிறார் அவர் என்று கதறிய போது
தலைவர் அழைத்து நியாயம் கேட்க வர மறுத்த நாயகனும் அவரே.
வரலாறு தெரியாதவர்கள் இடம் உங்கள் வியாபாரம் சிறக்கட்டும்..எங்களிடம் வேண்டாம்...தம்பி
அமைதியாக பார்த்து மனதுக்குள் ரசித்து சிரித்து கொண்டு இருக்கிறார்கள். தலைவர் மன்றம் கண்ட ரசிகர்கள்..
உண்மை வீதிக்கு வந்து தலைவர் புகழ் எந்நாளும் காக்கும் உண்மை தலைவர் ரசிகர்கள்.
யாருக்கும் வெட்கம் இல்லை...
ஓடி களைத்து மீண்டும் வாருங்கள் ஒரே தலைவர் நம் எம்ஜிஆர் அவர்கள் புகழ் என்றும் காப்போம்.
கட்சியை காரணம் காட்டி அவர் புகழை சிறுமை படுத்த முயற்சிக்கும் உங்கள் எண்ணம் ஒரு போதும் பலிக்காது.
வாழ்க எம்ஜிஆர் மன்றங்கள்..வாழ்க உண்மை ரசிகர்கள்.
பூமி பந்து சுழலும் வரை ஒரே இலக்கு எங்களுக்கு..
அவர் புகழ் காப்பது மட்டுமே எங்களுக்கு.
கானல் நீரை நம்பி பதிவுகள் வேண்டாம்
உங்களை தலைவர் காலத்தில் நாங்கள் ஒரு நொடி கூட சந்தித்தது இல்லை.......nmi
-
மனங்கவர் மக்கள்திலகம்;
மக்கள் உள்ளங்களில் தாழம்பூவாக தழைத்து
மணம் வீசிக்கொண்டிருக்கும் மக்கள்திலகம் ஒரு தனிப்பிறவி;‘’பெற்றால்தான் பிள்ளையா? எங்கள் வீட்டுப் பிள்ளையென
ஏகோபித்த எண்ணங்களின் ஏற்பில், எங்கள் தங்கம் எனப்
பாசத்தோடு போற்றும் பரிமளிப்பைப் பெற்றவர் புரட்சிநடிகர் mgr;
சுவைதரும் இதயக்கனியாக தன்னுடைய இதமான
ஈடற்ற உயர்ந்த உள்ளத்தால் மக்களின் இதயவீணையை
மீட்டிய ஈடில்லா மாமனிதர்; ‘’நம் நாடு பல்லாண்டு வாழ்க என்ற உயர்ந்த லட்சியத்தோடு,
திடமான சீரிய நோக்கத்தில் தன்னுடைய செயல்திறனை
செறிவாக செயல்படுத்திய பொன்மனச்செம்மல்;
தொழிலாளி, விவசாயி போன்ற உழைக்கும் கரங்களை
ஊக்குவித்து, அன்னமிட்ட கையாக அலங்காரங்கொண்ட அற்புத மனிதர்;
தாயைக் காத்த தனயனாக, நம் நாட்டின் பெருமை காக்க
பண்பான பதங்களை படங்களிலும், பாடல்களிலும் பகர்ந்தளித்த
பெருந்தன்மைப் பேராளர்;
நாடோடி, மன்னாதி மன்னன் என்ற பாகுபாட்டு நிலைமை கொள்ளாமல்,
நடுநிலைமைப் பேணி, நீதிக்குப் பின் தான் பாசம்,
நீதிக்குத் தலை வணங்கு என்ற பண்புடைமையே என் கடமை;
என்றும் நல்லவன் வாழ்வான் என்று வாழ்ந்துகாட்டிய வள்ளல்;
தர்மம் தலை காக்கும் என்று, தனக்கென வாழா தன்னிகரற்ற தலைவன்;
அழுகின்ற மழலைகூட அவரின் ஆசைமுகத்தைப் பார்த்தால்
வருகின்ற கண்ணீரும் நின்று குழந்தை குதூகலிக்கும் முகராசி மிக்க எங்கள் தங்கம்;
திக்கற்று திகைப்போர்க்கு வழிகாட்டும் ஆனந்தஜோதியாக, கலங்கரைவிளக்கமாய்த்
திகழ்ந்தவர்; குடியிருந்த கோயிலான தெய்வத்தாய்ப் பெற்றெடுத்த நவரத்தினநாயகன்;
பணக்கார குடும்பமாயினும், பணத்தோட்டத்தையே பகர்ந்தாலும் நியாயங்களுக்காக
உரிமைக் குரல் எழுப்பி, மக்களைக் காக்க களமிரங்கி நினைத்ததை முடிப்பவர் எங்கள்
மன்னாதி மன்னர் பொன்மனச்செல்வர், புரட்சித்தலைவர், ஏழைப்பங்காளர் mgr;
அணையா ஒளிவிளக்காய், குளிர்ச்சிமிகு சந்திரோதயமாய் சாதனையாளராய்
ஜொலித்துக்கொண்டிருக்கிறார்.
புரட்சித்தலைவர் நாமம் வாழ்க! பொன்மனச்செம்மல் புகழ் ஓங்குக!
இவண் ... T.s.a.பாலன்.............
-
எங்கள் தலைவா (இறைவா ) உன்னை போல் மனித தெய்வம் இவ் உலகில் உண்டா தரணி போற்றும் தன்னிகர் இல்லா எங்கள் தங்க தலைவா ,மக்களுக்க்கவே வாழ்ந்த "மக்கள் திலகமே "
எங்களின் இதயமே நீ தானே.
================================================== =========
எம்.ஜி.ஆரின் ஆரம்ப நாட்களில் , அவர் மீது மிகப் பெரிய அவதூறு ஒன்று சொல்லப்பட்டது..!
ஒரு படத்தில் நடிக்கிறேன் என்று ஒப்புக் கொண்டு விட்டு , ஒப்பந்தத்தில் கையெழுத்தும் போட்டுக் கொடுத்து விட்டு , அதன் பிறகு நடிக்க மாட்டேன் என்று மறுத்தால்....அது குற்றம்தானே...?
ஏன் அந்தக் குற்றத்தை செய்தார் எம்.ஜி.ஆர்.?
இதோ.. அந்தக் குற்றச்சாட்டுக் கேள்வி....
“சில படங்களில் நடிக்க நீங்கள் மறுத்து விட்டதாகவும், சில படங்களில் நடிக்க செய்துகொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டதாகவும் பத்திரிகைகளில் வரும் செய்திகள் உண்மையா?”
இதற்கு எம்.ஜி.ஆர். கூறிய பதில் :
“இரண்டு படங்கள். ஒன்று காத்தவராயன். இன்னொன்று லலிதாங்கி. இரு படங்களில் இருந்து விலகினேன். ஆனால் பத்திரிகைகள் கூறும் காரணங்களால் அல்ல. சாமி கும்பிட மறுத்து விலகினேன் என்பது தவறு. கடவுள் வழிபாடு என்பது அவரவர் சொந்த விஷயம்.
காத்தவராயன் படத்தில் மாந்தரீக காட்சிகள் நிறைய. எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. என் மாமன் ஒருவர் மாந்தரீகனாக இருந்தார். எனவே எனக்கு நன்றாக தெரியும். மாந்தரீகம் ஒரு பித்தலாட்டம். மந்திரத்தில் மாங்காய் விழாது.
படித்தவர்கள் மட்டுமே பத்திரிகை வாசிக்கிறார்கள். ஆனால் படிக்காதவனும் சினிமா பார்க்கிறான். அந்த பாமரர்கள் என் படத்தில் நான் சொல்வதையும் செய்வதையும் நம்புகிறார்கள். அவர்களின் மனதில் தவறான கருத்துகளையும் பொய்களையும் புகுத்த நான் சம்மதிக்க மாட்டேன்.
நடிகன் என்ற முறையில் எனக்கு சமூக பொறுப்பு இருக்கிறது. அதை நிறைவேற்றும் கடமை இருக்கிறது. அதனால் ஒப்பந்தம் போடும்போதே அதையெல்லாம் மாற்றினால்தான் நடிப்பேன் என்று சொன்னேன். ஒப்புக் கொண்டார்கள். ஆனால் பிறகு பின்வாங்கினார்கள். கர்ண பரம்பரையாக சொல்லப்படும் கதையை மாற்றினால் மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று சொன்னார்கள். நான் விலகாமல் என்ன செய்வது?
அப்படித்தான் லலிதாங்கியும். அதில் கதாநாயகன் எல்லா பெண்களும் விபசாரிகள் என்கிறான். தாய்க்குலத்தை மதிக்க வேண்டும் என்று சொல்லி வரும் நான் எப்படி அதை உச்சரிக்க முடியும்? லட்சக்கணக்கான சிறுவர்கள் என்னை தங்கள் ஹீரோவாக மனதில் வைத்திருக்கிறார்கள். அவர்கள் மனதில் நஞ்சை விதைக்க முடியுமா? நாட்டின் எதிர்காலமே அவர்கள் கையில் அல்லவா இருக்கிறது? அதனால் அந்த படத்தை வேண்டாம் என சொல்லி விட்டேன். இதுதான் நடந்தது...”
# இதுதான் எம்.ஜி.ஆரின் ஒப்புதல் வாக்குமூலம்...! ஏற்றுக் கொள்ளக் கூடியதாகத்தானே இருக்கிறது..?
இதில் நாம் கற்றுக் கொள்ள இன்னும் சில விஷயங்களும் கூட இருக்கின்றன..!
#“நடிகன் என்ற முறையில் எனக்கு சமூக பொறுப்பு இருக்கிறது. அதை நிறைவேற்றும் கடமை இருக்கிறது.”
“லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான சிறுவர்கள் என்னை தங்கள் ஹீரோவாக மனதில் வைத்திருக்கிறார்கள். அவர்கள் மனதில் நஞ்சை விதைக்க முடியுமா?”#
# எம்.ஜி.ஆர். காட்டிய இந்த சமூக அக்கறையை ,
இன்றைய “பீப்” பாய்கள் [Beep Boys ] கொஞ்சம் புரிந்து கொள்வது நல்லது...!.........VRH...
-
#எப்போதும்,எப்பொழுதும்
#mgr .........
நெடுந்தொடர்...
தமிழ் சினிமாவில், சினிமா எனும் கலையைக் காக்கவும் மக்களை மகிழ்விக்கவும் ஆபத்பாந்தவனாக ஒருவர், ஒவ்வொரு தருணத்திலும் வந்துகொண்டே இருப்பார். தியாகராஜ பாகவதார், சின்னப்பா, கிட்டப்பா என்றெல்லாம் ஆரம்பித்த அந்தப் பட்டியலில்... இடம் பிடித்தார் அந்த நடிகர். ஆனால், அவரை சாதாரணராக, நடிகராக மட்டுமே பார்க்கவில்லை மக்கள். உண்மையிலேயே ஆபத்பாந்தனாகத்தான் பார்த்தார்கள்; பூரித்தார்கள்; புளகாங்கிதம் அடைந்தார்கள். தேவதூதனாகப் பார்த்தார்கள். தேவனாகவே கூட பார்த்தார்கள். அவர்... எம்ஜிஆர்.
எம்ஜிஆரைப் போல் ஒரு மாஸ் ஹீரோ எவருமில்லை. ஆனால் எம்ஜிஆர், எடுத்த எடுப்பிலேயே ஹீரோ இடத்துக்கு வந்துவிடவில்லை. சின்னச்சின்ன கேரக்டர்களில் தொடங்கிய திரைப்பயணம் அது. கொஞ்சம்கொஞ்சமாகத்தான் வளர்ந்தார். பின்னாளில், மொத்தத் திரையுலகையும் சின்னவர் என எல்லோரும் அழைக்கும் வகையில், பெரியவராக இருந்து தன் கைக்குள் வைத்துக்கொள்வோம் என்று எம்ஜிஆரே நினைத்திருக்கமாட்டார்.
பின்னாளில், கதையில் கவனம் செலுத்தினார். காட்சிகளைக் கவனித்தார். வசனங்களைத் திருத்தினார். பாடல்களின் முக்கியத்துவத்தை இவரளவுக்கு உணர்ந்தவர்கள் இல்லை. மக்களின் ரசனையை ‘பல்ஸ்’ பிடிப்பதில் முதன்மையானவராகவும் வல்லவராகவும் இருந்தார். தத்துவார்த்தங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். காதலுக்கும் வீரத்துக்கும் இன்னும் முக்கியத்துவம் கொடுத்தார். தத்துவமும் காதலும் வீரமும் எம்ஜிஆரின் அடையாளங்களாகப் பேசப்பட்டன. இந்த அடையாளங்கள்தான், எம்ஜிஆர் ஃபார்முலாவாயிற்று.
பெற்றவர்களை மதிப்பார். ஊரிலிருந்து வீட்டுக்கு வந்தகையுடன் அம்மாவின் காலில் விழுந்து வணங்குவார். தாய் சொல்லைத் தட்டமாட்டார். ஊரில் ஏதும் பிரச்சினை என்றால், தட்டிக்கேட்பது, பெண்களுக்கு ஏதேனும் பங்கமெனில், ஓடோடி வந்து உதவுவது, அநியாயத்தைக் கண்டு கொதிப்பது, வில்லனின் கூடாரத்தைக் கண்டறிவது, கெட்டவர்களை அழிப்பது என்று எம்ஜிஆர் செய்ததெல்லாம் எம்ஜிஆர் ஸ்டைலாயிற்று. எம்ஜிஆர் ஃபார்முலாயிற்று. அதுதான் சக்ஸஸ் ஃபார்முலாயிற்று.
படத்துக்கு ஒருபாடலாவது என்றைக்கும் நிலைத்திருக்கும் பாடலாக அமையவேண்டும் என்று சிலர் நினைப்பார்கள். ஆனால், ஒரு படத்தின் பாடல்கள் அனைத்தையும் நிலைத்திருக்கும் பாடல்களாகக் கொடுக்கவேண்டும் என்பதில் கவனமாக இருந்தார் எம்ஜிஆர். அதை சாதித்தும் காட்டினார்.
டபுள் ஆக்டிங் ரோலுக்கு ஓர் இலக்கணத்தை வைத்தவரும் எம்ஜிஆராகத்தான் இருப்பார். டபுள் ஆக்டிங்கில் வெரைட்டி காட்டுகிற அவசியமெல்லாம் இல்லாமல், அதற்கொரு ஸ்டைலீஷையும் உண்டுபண்ணினார்.
எம்ஜிஆரின் திரையுலகப் பயணத்தில் எம்ஜிஆரின் வெற்றி, இவற்றில் மட்டும்தானா என்ன? உடன் பணிபுரிவோரிடம் அன்பாகப் பழகியதும் ஆபத்துக்கு உதவியதும் அவரை சின்னவர் என்றும் வள்ளல் என்றும் கொண்டாட வைத்தது.
‘எம்ஜிஆர் வீட்டுக்கு யார் போனாலும் முதலில் அவர்களுக்கு வயிறாரச் சாப்பாடு போடுவதுதான் எம்ஜிஆரின் வழக்கம். எத்தனையோ பேர், எம்ஜிஆரிடம் உதவி கேட்க வந்து, சொல்லத் தயங்கி, அவர்களின் தயக்கத்தை அறிந்து உணர்ந்து உதவி செய்யும் அவரின் வள்ளல் குணம்தான் இன்றைக்கும் எல்லோரையும் கொண்டாடவைக்கிறது என்கிறார்கள் எம்ஜிஆரின் ரசிகர்கள்.
எம்ஜிஆர், மறைந்தாலும் இறந்து பல வருடங்களாகிவிட்டாலும் இன்றைக்கும் எம்ஜிஆரின் குணத்தைச் சொல்லவும் அவரின் கருணையையும் கனிவையும் சொல்லிச் சொல்லிப் புகழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
அதுதான் எம்ஜிஆர். அதுதான் வள்ளல் எம்ஜிஆர்.
இன்று எம்ஜிஆர் (17.01.2021) பிறந்தநாள். அந்த உன்னதத் தலைவரை, ஒப்பற்ற மனிதரைப் போற்றுவோம்!......
-
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின்*104 வது*பிறந்த நாளை முன்னிட்டு**
ஞாயிறு* *அன்று* (17/01/2021)
தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிய* திரைக்காவியங்கள் விவரம்*
-----------------------------------------------------------------------------------------------------------------------
ஜெயா மூவிஸ் - காலை 7 மணி - ஒரு தாய் மக்கள்*
* * * * * * * * * * * * * * * *காலை 10 மணி - பணம் படைத்தவன்*
* * * * * * * * * * * * * * * மாலை 4 மணி - பட்டிக்காட்டு பொன்னையா*
** * * * * * * * * * * * * * * இரவு* 7 மணி - இதய வீணை*
ஜெயா டிவி* - பிற்பகல் 1.30 மணி - ஆயிரத்தில் ஒருவன்*
* * * * * * * * * * * * *இரவு 9* *மணி -* குமரிக்கோட்டம்*
சன் லைஃப் - காலை 11 மணி - என் கடமை*
மெகா டிவி -மதியம் 12 மணி - குடியிருந்த கோயில்*
ராஜ் டிவி* - பிற்பகல் 2.30 மணி -உலகம் சுற்றும் வாலிபன்*
மெகா 24 - பிற்பகல் 2.30 மணி- வேட்டைக்காரன்*
* * * * * * * * * * மாலை 6 மணி - நல்ல நேரம்*
பாலிமர் டிவி - இரவு 11 மணி - ராமன் தேடிய சீதை*
மீனாட்சி டிவி*-மதியம் 12 மணி - நல்ல நேரம்* *(உள்ளூர் கேபிள்*)
டி*திரை.எஸ்.சி.வி.- பிற்பகல் 12.30 மணி -எங்க வீட்டு*பிள்ளை*
டி. டி.வி. (உள்ளூர் கேபிள்*) -மாலை 6 மணி - எங்க வீட்டு*பிள்ளை*
புது யுகம் டிவி*- இரவு 7 மணி - நல்ல நேரம்*
டி.திரை.எஸ்.சி.வி. - இரவு 8 மணி - அடிமைப்பெண்*
மொத்தம் 17 திரைப்படங்கள் பல்வேறு சானல்களில் ஒளிபரப்பாகின.
-
1956 அக்டோபர் மாதத்தில் மட்டும் ரூபாய் 11,000 நன்கொடை வழங்கிய வள்ளல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.
தியாகராய கல்லூரி நிதி : ரூ. 2500
மதுரைத் தமிழ்ச்சங்க நிதி : ரூ. 1500
அன்னபூரண உணவுச்சாலை நீதி : ரூ. 1000
தாழ்த்தப்பட்ட பள்ளிக்கூட நிதி : ரூ. 1000
சென்னை சிறுவர் பள்ளிக்கூட நீதி : ரூ. 500.
திருச்சி மழை நிவாரண நிதி : ரூ. 3000
சென்னை தீப்பிடித்த குடிசைகள் நீதி : ரூ. 1500
கொடுப்பதற்கென்றே அவதரித்த மகா உத்தமர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்...
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க....SSubn
-
33 / 43 / 104 / 74
காலத்தை வென்றவர் மக்கள் திலகம் எம்ஜிஆர்.... .
74 ஆண்டுகள் [ 1947 - 2021 ] தொடர்ந்து பயணித்து வரும் 7 தலைமுறை மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்கள் .
43 ஆண்டுகள் [ 1977-2021 ] கடந்த பின்னரும் திரை உலகில் இன்னமும் தொடர்ந்து வரும் எம்ஜிஆர் திரைப்பட தாக்கங்கள்
33 ஆண்டுகள் மறைந்தாலும் இன்னமும் மறையாமல் மக்கள் மனதில் வாழும் மக்கள் திலகம் எம்ஜிஆர் .
104வது பிறந்த நாள் நாடெங்கும் கொண்டாடப்பட்ட புரட்சித்தலைவரின் புகழுக்கு புகழ் சேர்த்த ரசிகர்கள் / மக்கள் / தொண்டர்கள் .
2021 தேர்தலை முன்னிட்டு எம்ஜிஆரின் பெயர் / கொடி / சின்னம் / முன்னிலையில் உள்ளது .
111 பட்டை நாமத்தின் அடையாளம் . எம்ஜிஆரை மறந்த , இருட்டடிப்பு செய்த அனைவருக்கும் வழங்குவோம் .
உண்மையான எம்ஜிஆர் பக்தர்களின் வேண்டுகோள்
************************************************** ************************ .
50வது ஆண்டு அதிமுக [ 2021] பொன் விழா நேரத்தில் நமது இயக்கத்தின் புகழ் கொடிகட்டி பறக்கட்டும் .தவறு செய்தவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட்டு இயக்கம் பரிசுத்தமாக பொன்விழாவை சிறப்பிக்கட்டும் ...
அதிமுக தலைமை நிலையம் - திருமதி ஜானகி எம்ஜிஆர் பெயர் சூட்டவேண்டும் .
திருமதி ஜானகி எம்ஜிஆர் திருவுருவப்படம் அமைக்க வேண்டும் .
1977- 1987 எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் நடந்த அரசு விழாக்கள் அனைத்து புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் .
அனைத்துலக எம்ஜிஆர் மன்ற மாநாடு ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக மாநிலம் முழுவதும் நடத்தப்பட வேண்டும் .
எம்ஜிஆரை பற்றி வார /மாத இதழ்கள் / எம்ஜிஆர் படத்தின் பெயரில் புத்தகம் வைத்தவர்கள் / சமூக ஊடகங்களில் தவறாக கட்டுரைகள் / செய்திகள் / ஆடியோ பேச்சுக்கள் / மிகைப்படுத்தி நடக்காத ஒன்றை எழுதியவர்கள் / பேசியவர்கள்
போலி வேடமிட்டவர்கள் / எம்ஜிஆரை களங்கப்படுத்தியவர்கள் ........அடியோடு ஒதுக்க வேண்டும் ..........vns...
-
ஊனமுற்றோர் வாழ்வில் பொன்மனச் செம்மலின் சேவை :
1980 புரட்சித் தலைவர் 2 வது முறையாக
பதவியேற்றபோது உடல் ஊனமுற்றோர் பலருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அவற்றில் சில மட்டும்:
2142 பேர்களுக்கு 3 சக்கர வண்டி.
1167 பேர்களுக்கு காது கேட்கும் கருவி.
2211 பேர்களுக்கு பெட்டிக்கடை வைக்க
நிதியுதவி.
1194 பேர்களுக்கு நிரந்தர வேலை பெறும்
அரசு தொழில்கள் மற்றும்
2353 பேர்களுக்கு கல்வி அறிவு அளித்தல்.
771 பேர்களுக்கு சொந்த தொழில் செய்ய
மானியம்.
1000 பேர்களுக்கு மேல் செயற்கை கை
கால் உடலுறுப்புகள் பெற்றனர்....Rnjt
✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨
-
எம்.ஜி.ஆர். அவர்கள் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கிய முதல் காவியம் முதல் கடைசி திரைப்படம் வரை ஒரே கொள்கையுடன் ஒரே லட்சியத்துடன் நடித்து மக்கள் மன்றத்தில் நிலையான புகழ் பெற்றார்.
கொள்கையில்லாத திரைப்படங்கள் எத்தனையோ எம்.ஜி.ஆரை நாடிவந்து ஒப்பந்தம் செய்தபோது திட்டவட்டமாக மறுத்தார். இதனால் பல படங்களில் வரும் லட்சக்கணக்கான,கோடிக்கணக்கான பணத்தை இழந்து, மக்களின் ஒரே குறிக்கோளின் எண்ணப்படி திரையில் நடித்த - நடிக மன்னர், ஒரே சக்கரவர்த்தி எம்.ஜி.ஆர். ஒருவரே.
புரட்சி என்பது மக்களின் உள்ளத்தின் தெளிவை வெளிப்படுத்துவது ஆகும். அந்த மக்களின் உள்ளத்தில் உறைந்து கிடக்கும் நல்ல பலப் புரட்சிகரமான எண்ணங்களைத் திரைப்படத்தில் தான் நடிக்கின்ற கதாபாத்திரத்தின் கருத்தாகவும், எழுத்தின் வடிவமாகவும், பேசும் பேச்சின் மூலமாகவும் இலக்கணமாக வாழ்ந்த ஒரே தலைவர் எம்.ஜி.ஆர். மட்டுமே.
மக்களின் சிந்தனைக்கும், நாட்டின் ஏற்றமிகு முன்னேற்றத்திற்கும் - மனித உழைப்பின் உன்னதக் கோட்பாட்டிற்கும் - சமுதாயச் சீர்திருத்தத்திற்கும், பல நல்ல கருத்துக்களைப் பல படங்கள் வாயிலாகச் சொல்லி அதை மக்கள் ஏற்றுக் கொள்ளும் பாடமாக மாற்றி அமைத்த ஒரே திரையுலகப் பேராசிரியர் பொன்மனச் செம்மல்! அதனால்தான் உலக வானில் மக்கள் மேதையின் காவியங்கள் மட்டுமே தனி முத்திரை பதிந்து உலா வந்தன, வருகின்றன.
திரைப்பட உலகில் ஒரு கதாநாயகன் எப்படி ஒழுக்கத்துடன் மக்கள் சமுதாயம் ஏற்றுக் கொள்ளும் விதம் இருந்தால் அந்தக் கதாநாயகன் உலக வானில் நிலையான புகழ்பெற முடியும் என்பதற்கு உதாரணமாகத் திழ்ந்தார் எம்.ஜி.ஆர். கலையுலகில் தன்னை ஒரு ஒழுக்கமுள்ள கதாநாயகனாக மற்ற நடிகர்கள் பின்பற்றும் அளவுக்கு உயர்ந்து நிற்கின்றார். சிகரெட் புகையின் மண்டலத்திலும், மதுவின் மயக்கத்திலும் மூழ்கி இருக்கும் சினிமா உலகில் மாறுபட்டு உலக அதிசயமாகத் தன்னை ஒருநிலைப்படுத்தி, மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்த மகத்தான மனிதர் மக்கள் திலகமே.
பாதுகாப்பு நிதியாக இருந்தாலும், குடிசைகள் தீப்பற்றி எரிந்தாலும், வெள்ள நிவாரணப் பிரச்சனையில் மக்கள் அவதியுற்றாலும், வறுமைக் கோட்டின் கீழ் ஏழை மக்கள் நொடிந்தாலும், திரைப்படக் கலைஞர்களின் கஷ்டமானாலும், நமது தமிழ் மாநிலம் மட்டுமின்றி அண்டை மாநில இயற்கைச் சீற்ற இழப்பானாலும் அங்கு எம்.ஜி.ஆரின் பங்கு முதலிடம் பெறும் என்பதே உண்மை. அங்கு ஏழைகளின் குறை தீர்க்க எந்த நேரத்திலும் பணஉதவி, பொருள் உதவி செய்து அவர்களின் குறைகளைத் தீர்க்க முன்னிலை வகித்த ஒரே திரையுலகக் கலைஞர் எம்.ஜி.ஆர். ஒருவரே....Sujeeth Kumar
-
கொஞ்சம் பாலிடிக்ஸ்!!!.........
-------------------------------------ர்
இது ஒரு அரசியல் பதிவு!
இது ஒரு அரசியல் பதிவு ஆனதாலேயே காரத்தை எதிர்பார்க்கலாம்!
அது ஒரு அரசியல் பதிவு என்றவுடனேயே இதில் விமர்சனத்துக்கும் குறைவிருக்காது என்று நம்பலாம்!
இது ஒரு---வேண்டாம்--போதும்-பதிவுக்குள் போகலாம்-
கமலஹாசன்!
தமிழ்த் திரையுலகின் தகுதியை சர்வ தேசத்துக்கு உயர்த்தக் கூடியவர் என்பதை,,எம்.ஜி.ஆருக்குப் பின்னரான தலைமுறையில் இவரைச் சொல்லலாம்!
அந்த விதத்தில் கமலுக்கு அந்தத் தகுதி நிறையவே உண்டு.
அரசியல் கமலஹாசன்!
கருத்து சொல்வது கொஞ்சம் கஷ்டம் தான்!
காரணம்??
பொது வாழ்க்கைக்கு வரும் எந்த ஒரு நபரின் தனிப்பட்ட வாழ்க்கையும் பொது அரங்கத்தில் நிச்சயமாக ஆராயப்படும். அலசப்படும்!
நடிப்புத் துறை--அல்லது வேறு எந்தக் கலைத்துறை--அல்லது தொழில் சார்ந்த வியாபாரம்--இப்படி எதை எடுத்துக் கொண்டாலும் அதில் ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கையை ஆராய்வது அவஸ்யமில்லை.
அரசியல்--ஆன்மீகம்--இந்த இரண்டில் மட்டும் அது தான் அடிப்படை என்றாகிறது! பிகாஸ்??
இவை இரண்டு மட்டுமே சேவை ஆற்றுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது இல்லையா?
மருத்துவர்,,சட்டம்--ஆசிரியர்--காவல்துறை--ராணுவம் போன்ற பிற சேவைகளை விட மக்கள் இந்த அரசியல் ஆன்மிகம் இவற்றாளேயே முக்கியப் பயனடைவதால் இவை இரண்டும் முக்கியமாகிறது!
அப்படி கமலின் தனிப்பட்ட வாழ்க்கையை எடுத்துக் கொண்டால் மன்னிக்கவும்--நமக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது?
ஓகே! கமலின் தனிப்பட்ட வாழ்க்கையை இங்கே ஆராய்வது நமக்குத் தேவையில்லாத ஒன்று என்பதால் அதை விட்டு விடுவோம்!
அண்மையில் அரசியல் வாதியாகக் கமல்??
நேற்று எம்.ஜி.ஆர் பிறந்த நாளில் ராமாவரம் தோட்டத்துக்குச் சென்று ஸீன் போட்டு எம்.ஜி.ஆரை மிக உயர்த்திப் பேசியது அரசியல் ஆதாயத்துக்காகவே என்று அ.தி.மு.க கட்சியினர் வாதாடினாலும்--
பொது மக்களில் ஒருவன் என்ற முறையில் கமலின் இத்தகைய செயல்பாடுகள் நமக்கு வருத்தத்தை தரவில்லை என்பதுடன்,,அதை நாம் வரவேற்கிறோம் என்பதையும் அழுத்தமாக இங்கேப் பதிவு செய்கிறோம்??
இந்த இடத்தில் எம்.ஜி.ஆரைப் பற்றி இங்கேக் குறிப்பிட வேண்டியிருக்கிறது
கட்சி ஆரம்பித்து புரட்சித் தலைவர் என்னும் விருதை அவர் அன்றைக்குப் பெற்றிருந்தாலும்,,அதை விட வலுவான புரட்சித் தலைவராக இப்போது தான் வலம் வருகிறார்--
உலக சரித்திரத்தில் மாற்றுக் கட்சியினரையும் மதிக்கச் செய்த ஒரே தலைவன் எம்.ஜி.ஆர் தான் என்பது--
உலக புரட்சியாகத் தானே உச்சரிக்கப்படுகிறது?
காந்தியைக் கொண்டாடுபவர்கள்--சுதந்திரம்--விடுதலை போன்றவற்றை முன்னெடுக்கும் காங்கிரஸில் மட்டும் தானே?
அண்ணாவை ஆராதிப்பது தென்னகத்தில் அதுவும் தமிழ் நாட்டில்--அதுவும் திராவிடம் பேசுபவர்கள் மத்தியில் மட்டும் தானே??
சவாலாகவே ஒன்றை சொல்லுவேன்--
ஒரு தி.மு.க நிர்வாகியுடன் ஒரு ஐந்து நிமிடங்கள் பேசிப்[ பாருங்கள்--
எம்.ஜி.ஆர விடுங்க,,அவர விட்டுட்டுப் பேசுங்க--இப்படித் தான் குறிப்பிடுவார்கள். எவர் வேண்டுமானாலும் முயன்று பார்க்கலாம்.
மெகா ஸ்டாராக ஆந்திராவில் சிரஞ்சீவி!
சூப்பர் ஸ்டாராக தமிழகத்தில் ரஜினி!
மெகா சூப்பர் ஸ்டாராக எப்போதுமே இந்தியாவுக்கே எம்.ஜி.ஆர் ஒருவர் தானே?
சொல்லப் போனால் ஜாதி இன--மத-சமயம் கடந்து அனைவருக்குமே அவர் ஆண்டவனாகத் தானே தோன்றுகிறார்?-
ரஜினி என்ற சவாலும் இல்லை
ஆளுமையான--கவர்ச்சியான தலைமையும் அ.தி.மு.கவில் இல்லை என்னும் போது--
எம்.ஜி.ஆர் என்னும் ட்ரம்ப் கார்டை கமல் உபயோகிப்பதில் என்ன தவறு?
அ.தி.மு.க தலைமையே--
நீங்கள் எம்.ஜி.ஆரை உணர மறுப்பது எவ்வளவு பேர்களுக்கு உபயோகமாகிறது பார்த்தீர்களா?
உங்கள் கட்சியின் அனுதாபி என்ற விதத்தில் ஒன்று சொல்வேன்--
இப்போது கமலைத் தேவையில்லாமல் தூற்ற வேண்டாம்?
அப்படியாவது பறங்கி மலையான் சிறப்பு பவனி வரட்டும். சொல்ல முடியாது?
நாளையத் தேர்தலில் அதுவே இரட்டை இலையின் மகிமை இன்னும் பரவி உங்களுக்கு வாக்குகளைக் குவிக்கலாம்?
எம்.ஜி.ஆர் தொண்டர்களே--
எங்கள் எம்.ஜி.ஆருக்கு மறைவு என்பதே இல்லை என்பீர்களே?
இதோ,,ஒரு கமல்,,ஒரு மோடி இப்படிப் பலர் மூலம் மறுபடியும் ஒரு பயணத்தைத் தொடங்கி விட்டார் நம் பாரத புத்திரன்!!!.........vtr...
-
மக்கள் திலகத்துக்கு ஒரு படத்திற்கு சம்பளம் எவ்வளவு தரப்படுகிறது?
என்பதில் பலரும் பலவிதமான கருத்துகள் கொண்டிருந்தாலும்
ஒன்று மட்டும் அனைவரும் ஒத்துக்கொள்கிறார்கள் யாரும் நெருங்க முடியாத அளவு சம்பளம். ஆனால் ஒரே சம்பளத்தை அவர் எல்லா படத்துக்கும் வாங்கியதில்லை. ஒவ்வொரு படத்துக்கும் அவரது சம்பளம் மாறுபடும். அவருடைய சம்பளம் இந்தியாவிலேயே அதிகபட்சம் சம்பளம் பெறும் இந்தி நடிகர்களை காட்டிலும் அதிகமானது.
கண்ணதாசன் தனது சுயசரிதையில் மற்றவர்களை பற்றி எழுதும்போது தான் எந்த மனநிலையில் இருக்கிறாரோ அதன் வெளிப்பாடகவே அது இருக்கும். அவருக்கு ஒரு பாதிப்பு ஏற்பட்டு விட்டால் போதும் அதற்கு யார் காரணம் என்பதை அவரே தீர்மானித்து அவர்களை சாட ஆரம்பித்து விடுவார். பூனை கண்ணை மூடினால் உலகமே இருண்டு விடும் என்பதைப் போல, அது சரியா தவறா என்பது கூட அவருக்கே தெரியாது. எம்ஜிஆருக்கு எழுதிய பல பாடல்களில் திருத்தம் செய்ய முடியாது என்று பிடிவாதம் பிடிக்க வாலியை ஏற்றுக் கொள்ள வேண்டிய சூழலையை அவரே உருவாக்கினார்.
அதன்பின் தன்னை எம்ஜிஆர் ஒதுக்க ஆரம்பித்து விட்டார் என்று அவரே முடிவு செய்து தலைவரை கண்மண் தெரியாமல் தாக்க ஆரம்பித்தார். இவர் இல்லையெனறால் எம்ஜிஆரால் ஒன்றும் செய்ய முடியாது என்று நினைத்திருந்த அவருக்கு வாலியின் வரவு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. அப்போது அவர் எழுதிய 'அகமும் புறமும்' என்ற காழ்புணர்ச்சி சாடல் பதிவில் எம்ஜிஆர் வாங்கும் சம்பளத்தை பற்றி அவர் குறிப்பிடும் போது எம்ஜிஆர் கணக்கில் வருவதை காட்டிலும் 6 மடங்கு கணக்கில் இல்லாமல் வாங்குகிறார் என்று பொறாமையால் பொங்கி இருந்தார்.
அதன்படி கணக்கு பார்த்தால் எம்ஜிஆர் "அன்பே வா" படத்துக்கு கணக்கில் 3.25 லட்சமும் கணக்கில் இல்லாமல் 19.5 லட்சமும் மொத்தம் 22.75 லட்சமும் வாங்கியதாக சொல்கிறார் என்றால் தலைவரின் வியாபார விஸ்தீரணம் என்ன என்பதை யாரும் கற்பனை செய்ய முடியாதது. கண்ணதாசன் மாற்று நடிகரின் அணியில் இருந்து கொண்டே அவர் ஒரு செல்லாக்காசு என்பதை தலைவர் மீது கொண்ட பொறாமையில் ஒத்துக்கொண்டது
தெரிகிறதா? கைஸ்களே. இனியாவது தங்களின் தகுதிக்கு தக்கவர்களோடு மோதுங்கள். தலைவர் படத்துக்காக பெற்ற பணத்தின் பெரும் பகுதி ஏழை மக்களின் நல்வாழ்வுக்காகவே பயன்படுத்தினார்.
பின்னர் எம்ஜிஆரால் அரசவை கவிஞர் பதவியும் அவரது கடனும் தலைவரால் அடைக்கப்பட்ட பின்னர் எம்ஜிஆர் மீது கனிவும் பரிவும் அதிகமாக, வானளாவ புகழ ஆரம்பித்தது அனைவரும் அறிந்ததே. ஏன் கண்ணதாசன் சந்திரபாபுவால் பட்ட பாடு நாடறியும். "கவலை இல்லாத மனிதன்" படத்தை எடுத்து ஒரு குடிகாரனை அழைத்து வர சந்திரபாபு வீட்டில் தவம் கிடந்ததையும் அவர் இவர் இருக்கிறார் என்று தெரிந்து பின்வாசல் வழியாக தப்பி ஓடி கவிஞரை தவிக்க விட்ட கதையை கண்ணதாசனே விவரித்தது நாடறியும்.
அப்படியிருக்க எளியவர்கள் மற்றும் புதியவர்கள் எப்படி புரட்சி நடிகரை வைத்து படமெடுக்க முடியும் என்ற
கேள்வி எழுவதில் வியப்பில்லை.
எம்ஜிஆரின் ஒப்புதல் கிடைத்து விட்டால் போதும் எவ்வளவு பணம் வேண்டுமென்றாலும் விநியோகஸ்தர்கள் தர தயாராக இருந்தார்கள்.
அப்படித்தான் ஒரு 100 ரூ கூட அட்வான்ஸ் கொடுக்க முடியாத பந்துலு தலைவரை வைத்து "ஆயிரத்தில் ஒருவனை" லட்சக்கணக்கில் செலவழித்து பிரமாண்டமாக எடுக்கவில்லையா?
ஸ்ரீதரைக் கண்டாலே ஓடி ஒளியும் விநியோகஸ்தர்கள் எம்ஜிஆரின் கடைக்கண் பார்வை கிடைத்ததும் உரிமைக்குரலை எழுப்ப ஓடி வரவில்லையா! இது எம்ஜிஆர் தனக்கு செய்யும் உதவி என்று அடக்கத்துடன் நின்று அவர் வழியில் படத்தை தயாரிக்கும் சூட்சுமத்தை புரிந்தவர்கள் வென்றார்கள்.
அதை விடுத்து மமதை கொண்டு தானே அந்தப் படத்தின் தயாரிப்பாளர் என்று கொக்கரித்த தயாரிப்பாளர்களுக்கு தன்நிலை புரிய வைத்தபின் அவர்களை கரை சேர்ப்பார். அப்படியும் பிரமாண்ட தயாரிப்பாளர்கள் தயாரிக்கும் படத்தில் எம்ஜிஆர் கமிட் ஆக விரும்புவதில்லை. ஒரு காலத்தில் பிரமாண்ட தயாரிப்பு நிறுவனங்கள் தயாரித்த படத்தில் மக்கள் திலகம் நடித்ததில்லை, ஓரிரண்டு படங்களை தவிர.
ஆனால் மாற்று நடிகரோ பெரிய தயாரிப்பு நிறுவனங்களை அண்டியே பிழைத்து வந்தார். அவர்கள் தரும் சம்பளத்தை சிந்தாமல் சிதறாமல் அள்ளி விடுவதிலேயே குறியாக இருப்பார். அவர்களிடம் அதிக பட்சமாக ஒரு லட்சத்தை பெற்றுக் கொண்டு வேலையை முடித்து கொடுத்து விடுவார். ஆனால் எம்ஜிஆர் நட்பின் அடிப்படையில் தேவரின் படங்களில் மட்டும் தொடர்ந்து நடித்தார். யாரும் நினைத்து பார்க்க முடியாத இடத்தில் இருந்தாலும் பரமஏழைகளும் நெருங்கும் விதத்தில் எளிமையாக வாழ்ந்த ஒரு மாபெரும் மனிதர் என்பதே உண்மை...........ksr...
-
தேசிய தலைவர்கள் பெயர்கள்
மட்டுமே இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள சாலைகளுக்கு (அந்தந்த மாநில தலைவர் பெயர்கள் தவிர்த்து) வைக்கப்படும்...
உதாரணமாக:-
மகாத்மா காந்தி சாலை
அம்பேத்கர் சாலை
நேரு சாலை
இந்திரா காந்தி சாலை
ராஜிவ்காந்தி சாலை
என்று ஆனால்
வேறொரு மாநில முதல்வரின்
பெயரை வேறொரு மாநில சாலைகளுக்கு சூட்ட பட்டது என்றால்
அது நம்
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.
அவர்களின் பெயர் மட்டுமே ஆகும்...
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் புகழ் ஓங்குக...
இனிய வணக்கம்... Sen.bu
-
கொஞ்சம் பாலிடிக்ஸ்!!
--------------------------------
நேற்றைய --கொஞ்சம் பாலிடிக்ஸ்-பதிவு இப்படி நீளும் என்று நானே எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் இந்தப் பதிவிலும் உங்களுக்கு ஒரு முக்கிய சேதி இருக்கிறது
நேற்றையப் பதிவைக் கொஞ்சம் நினைவு கூர்வோம்--
வலுவான--மக்களை ஈர்க்கக் கூடிய தலைமை அ.தி.மு.கவில் இல்லாத இந்தச் சூழ் நிலையை,,கமல் தனக்கு சாதகமாக்கிக் கொள்ள முயல்கிறார் என்பது--அ.தி.மு.க கட்சிக்கு விடப்பட்ட எச்சரிக்கையாகவும்-
அரசியல் கடந்த எம்.ஜி.ஆர் அபிமானிகளுக்கு ஒரு மகிழ்ச்சிகரமான விஷயம் என்றே நான் சொல்லியிருந்தேன்
இதில் எந்த இடத்தில் கமலை நான் புகழ்ந்திருக்கிறேன் என்றே எனக்குப் புரியவில்லை
எம்.ஜி.ஆர் சக்தி என்பது இருட்டடிப்பு செய்யப்பட முடியாத சக்தி என்பதை இன்றைய அ.தி.மு.க உணர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பு என்று தானே கருத வேண்டும்.
சொல்லப் போனால் பதிவின் ஆரம்பத்திலேயே பொது சேவைக்குக் கமல் லாயக்கற்றவர் என்று தானேக் குறிப்பிட்டிருக்கிறேன்?
கமலின் பிரம்மாண்ட சினிமா இமேஜ்--
ரஜினியின் ஒதுங்கலால் அவருக்கு உண்டாகியிருக்கும் சௌகர்யம் இவற்றையெல்லாம் விட--
இன்று அருவமாக அருள் ரூபமாக ஆட்சி செய்யும்-
சினிமாவை விட்டு45 வருடங்கள் கடந்தவருமான எம்.ஜி.ஆர் தான் கமலுக்கும் தேவைப்படுகிறார் என்பது நமக்குத் தானே பெருமை?
கமல் என்ன எம்.ஜி.ஆரைக் கொண்டாடுவது? என்ற வாதம் நகைப்புக்கு உரியது எப்போதுமே--
இருப்பவன் ஏதும் செய்யாத நிலையில்--
இல்லாதவன் முனைவதில் என்ன தவறு?
எம்.ஜி.ஆர் என்பவர் இந்திய தேச தலைவராகிவிட்டார். இந்திய அரங்கில்--சில காலத்துக்குப் பின் உலக அளவில் பேசப்படப் போகும் ஒரு சக்தியை அ.தி.மு.க என்னும் சிறு பிடிக்குள்ளேயே வைத்திருக்க எண்ணுவதும் தவறல்லவா?
இதில் ஒரு வேடிக்கை?
நான் ஐயராம்? அதனால் கமலை ஆதரிக்கிறேனாம்?
அவர் கருணா நிதியிடம் பாடம் படித்திருப்பார் போலும்?
முக நூலுக்குப் பூணூல் போடுகிறார்??
சரி,,இன்றைய விஷயத்துக்கு வருவோம்--
ஆங்காங்கே அ.தி.மு.க சார்பில் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் வழக்கத்தை விட வெகு விமரிசையாகக் கொண்டாடப் பட்டிருக்கிறது?
அந்தக் கட்சியின் மேல் மட்ட நிர்வாகி ஒருவருடன் பேசிய போது ஆச்சரியமான தகவல் ஒன்று கிடைத்தது?
ஒன்றிய--ஊரக--வட்ட--சதுர அமைப்புகள் யாவும் வெகு விமரிசையாக எம்.ஜி.ஆரைக் கொண்டாட வேண்டும் என்பது--முதல்வரிடமிருந்து வந்திருக்கும் முக்கிய ஓலையாம்??
மகிழ்ச்சியான இந்த செய்திக்காக நாம் முதல்வரைப் பாராட்டும் அதே நேரத்தில்--
இரண்டொரு ஐயங்கள்??
அம்மாவுக்கு எதிராக வாய் திறக்கவே முடியலீங்க என்று அன்று ஒப்பாரி வைத்தவர்கள் தானே இவர்கள்?
ஜெ மறைந்து,,நான்கு வருடங்கள் கழிந்து இந்த வருடம் மட்டும் எம்.ஜி.ஆர் பிறந்த நாளை தடபுடல் செய்வது ஏன்?
கொரோனாவின் பாதிப்பு இன்னும் முற்றிலும் அகலாத சூழல் இது என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்?
இதற்கு என்ன காரணம்??
சில மாதங்களில் வரப் போகும் தேர்தல்???
சரி,,,,எம்.ஜி.ஆரை வேறு யாரும் சொந்தம் கொண்டாடக் கூடாது என்பது சரி என்றே வைத்துக் கொள்வோம்--
சரி,,அந்தக் கட்சியின் போஸ்டர்கள் என்ன சொல்கிறது?
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்!!
இதய தெய்வம் அம்மா??
இது இவர்கள் எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்தும் லட்சணம்??
எம்.ஜி.ஆரின் பேரன் குமார் ராஜேந்திரனிடம் ஒரு நிகழ்ச்சியில் கமல் சொல்லியிருக்கிறார்--
என் மீட்டிங்குக்கு வருபவர்களில் பெரும்பாலானவர்கள் இறுதியில் என்னிடம் இரட்டை இலையை இரட்டை விரல்களால் காட்டியே விடை தருகிறார்கள்???
மீண்டும் சொல்வேன்--
நீங்கள் உங்கள் கட்டுக்குள் எம்.ஜி.ஆர் என்னும் வீட்டை பத்திரமாக பாதுகாத்து வைத்துக் கொள்வது அவசியம்
வீட்டைத் திறந்து வைத்திருப்பது தவறில்லை
திருடன் உள்ளே வந்து திருடுவது தான் குற்றம்?? என்றால்??????...vtr
-
புரட்சித்தலைவர்
மன்னாதி மன்னன்
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.
அவர்களின் ஆசியோடு நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்..
கவிஞர் கண்ணதாசன் பாடல் வரிகள் மூலம் நம் மக்கள் திலகம் மக்களுக்கு
கூறும் பாடல்கள் பற்றிய இந்த தொடர் பதிவை புரட்சி தலைவர் பிறந்த நாள் கொண்டாடும் வேளையில் இருந்ததால் பதிவை இரு நாட்கள் தொடர முடியாமல் போனது மன்னிக்கவும்..
வாருங்கள் தொடரை தொடருவோம்..
1975 – ஆம் ஆண்டு, துக்ளக் சோவின் கதை வசனத்தில், இயக்கத்தில் வெளிவந்த படமே, ‘யாருக்கும் வெட்கமில்லை!’ என்ற படம்.
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் செல்வாக்கு, கொடி கட்டிப் பறக்க ஆரம்பித்த காலம். துக்ளக் சோவோ தி.மு.க, எம்.ஜி.ஆர். தொடங்கிய அண்ணா தி.மு.க, இரண்டும் தமிழகத்தில் வளர்ந்து விடாது, பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி வரவேண்டும் என்று வரிந்து கட்டிக்கொண்டு மேடைகளில் பேசியும், எழுதியும் வந்தவர். இதே வேகத்தில் நின்றவரே கண்ணதாசன்.
அதனால், ‘யாருக்கும் வெட்கமில்லை’, படத்தில் எம்.ஜி.ஆரைக் கேலி செய்து ஒரு பாடல் காட்சி.
அப்பாடல் காட்சிக்கான பாடலைப் பார்ப்போமே!
“சினிமாவில் வருவது போலே – நீ
சிரித்துக் கொண்டு டூயட் பாடடி!….”
என்று தொடங்கும் பாடலில்,
ஆண்: “அழகிய தமிழ் மகளே!
பெண்: என் அன்பே! கொடை வள்ளலே!
ஆண்: புரட்சித் தலைவி நீயே!
பெண்: என் புதுமைக் கலைஞன் நீயே!
நீ இல்லை என்றால் நான் இல்லை!
ஆண்: அடி நீ அல்லை என்றால் நான் இல்லை!”
என்றெல்லாம் வரிகள் வளர்ந்து வரும்.
எம்.ஜி.ஆரைக் கேலி செய்து கவிஞர் எழுதிய பாடல் வரிகளில் கூட,
‘கொடை வள்ளல்!’ ‘புதுமைக் கலைஞன்!’ என்ற சொற்கள் வந்துதானே நிற்கின்றன.
1990 – ஆம் ஆண்டு ஆட்சிக் கட்டிலில் ஏறிய ஜெயலலிதாவை, 1975 – ஆம் ஆண்டே கவிஞரின் பாடல் வரி,
‘புரட்சித்தலைவி நீயே!’
என்று சுட்டுவதைச் சற்று சிந்தித்துப் பாருங்கள்! அப்போது புரியும் அவரது வாக்கின் வலிமை.
ஜெயலலிதா அரசியலுக்கு வராத அக்காலகட்டத்தில், கவியரசரின் எண்ணத்தில் எழுந்து வந்த வார்த்தை, இன்று தமிழகமெங்கும் ஒலிக்கப் பெறுவதை எண்ணிப் பாருங்கள்!
பின்னர், ‘நீ இல்லை என்றால் நான் இல்லை!’ என்ற தொடருக்கு, நீங்களே பதில் சொல்லிப் பார்த்துக் கொள்ளுங்கள்!
எம்.ஜி.ஆர். தொடங்கிய இயக்கத்திற்கு, ‘புரட்சித்தலைவராய்’ அவர் நின்று காத்த இயக்கத்திற்கு, ‘புரட்சித்தலைவியாய்’ ஜெயலலிதா இறக்கும் வரை இருந்து காத்த அதிசயம், உங்கள் இதயங்களுக்குள் கவி வாக்கின் பெருமைதனைப் பேசிட வைக்கும் என்பதும் உண்மைதானே...
அன்புடன Shenthilbabu Manoharan