-
சூடான பிசிபேளாவுடன்
குளிரக் குளிரத் தயிர்சாதம்
போதுமே அதான் சொர்க்கம்
என்று சப்புக்கொட்டிச் சாப்பிடுவார் மாமா..
வயதான பொழுதில்
பிபி சுகர் கொலஸ்ட்ரால் இன்னபிற ஆக்கிரமிக்க
டயட்டில்
வெறுமனே உப்புப்போடாமல் மோரிட்ட
கேப்பை கஞ்சிக் குடித்துக்கொண்டிருந்தவரிடம்
இப்போ எப்படிங்க எனக் கேட்டதில்
சொன்னார்
இப்பவும் முன்ன சாப்பிட்டது தான் சொர்க்கம்..
மாயை..
இப்ப சாப்பிடறேன் பாரு..
இது ரியாலிட்டி!”
-
இது ரியாலிட்டி - சமையல் என்றதும் பாய்ந்து வருபவரிடம்
பிசி பேளாபாத் பத்தி கவிதை சொன்னால் சும்மா இருப்பாரா
இதுதான் சுவர்க்கம் என்று போட்டாரே மினி பட்டியல்
குளிரான தயிர் சாதம் என்ன, கேப்பை கஞ்சி என்ன அப்பப்பா
இத்துடன் சொன்னாரே பாருங்கள் பிபி, சுகர், கொலஸ்ட்ரால் என்று
புரிந்து கொண்டோம் பிசி பேளாபாத் கொண்டு வருமே அத்தனையும்
இது நேடிவிடி விட்டு போனதால் கிடைத்த நரகம்
எச்சரிக்கைக்கு நன்றியன்றி யாதொன்று சொல்வது
-
சொல்வதைக் கேள்
அதைத் தொடாதே
ம்ம்
கண்ணை உருட்டி
அதட்டினேன் பக்கத்து வீட்டு
ஒன்றரை வயதுச் சிறுமியை..
ஒரே ஒரு கணம் முகம் வாடி
பின் கண் சிரிக்க
என்னைப் பார்த்துக் கொண்டே
தான் டேபிளில் பார்த்திருந்த
பொருளை எடுத்தபடி
என்னருகில் வந்து
சோபாவில் தாவி ஏறி அமர்ந்து
சிரித்தவளிடம் என்ன சோல்ல..
கையை உயர்த்தி
அடிப்பது போல் பாவலா பண்ண
கண்ணை அதுவும் இறுக்க மூடிக் கொள்ள
கொடுத்தேன் உச்சந்தலையில்
ஒரு குட்டி முத்தா...!
-
முத்தா பவழமா வைரமா
முப்போரில் வென்று திரும்புகையில்
அண்டை நாட்டிலிருந்து எதை
அபகரித்து எடுத்துவரவேண்டும்
அரசியிடம் ஆசை தூண்டினான் சோழன்
நவரத்னக்கற்கள் நமக்கேன் மன்னா
நலமுடம் நீ நாடு திரும்பிவந்தாலே போதும்
நல்லாசியுடன் அனுப்பிவைத்தாள்
-
நல்லாசியுடன் அனுப்பி வைத்தாள் பத்தினி
நல்லாயுளுடன் வென்று வந்தான் மன்னன்
யார் வந்திருக்கா பார் என்று பார்வேந்தன் காட்டிய
கூர்விழி மாது போரில் வென்று முத்து மரகத வைர
ஜொலிப்பில் மன்னனின் மற்றொரு பத்தினியாக
களிப்பில் மன்னனுக்கு மறுமுறை இரு பத்தினிகளின்
ஆசிகள் மன்னனுக்கு ஆசையுடன் ஆசியும் கூடுகிறது
ஜோசியன் கூற்று படியும் மன்னனுக்கு பலநூறு வெற்றிகள்.
-
வெற்றிகள் பலவற்றை தேடித்தர வல்ல
வெல்வதெப்படி என்ற சூட்சுமம் அறிந்த
வெளிச்சப் பாதையை காட்டிச் செல்ல
வெட்டொன்று துண்டு ரெண்டு வெளிப்படையான
அயற்சியால் முடங்கிப்போகும் அனைவரையும் தொடர்
முயற்சியால் முன்னேடுக்கவல்ல தேவையொரு பயிற்சியாளர்
-
பயிற்சியாளர் பலவிதம் பாரினிலே
ஒவ்வொன்றும் ஒரு விதம் மேதினிலே
பாடம் சொல்லியேக் கொடுப்பவர் ஒருவர்
பகுத்து கில்லியாய் விளக்குபவர் ஒருவர்
பாரினில் பயிற்சியாளர் சிறந்தவர் கேட்பின்
படபடவென்று பண்ணியே காட்டுபவரே
அவரினும் சிறந்தோர் எவரென கேட்பின்
அரிது அரிது அவர் போல் கிடைப்பது அரிது
பயில்வோனை புரிந்து அவன் திறன் அறிந்து
பரிவுடன் ஊக்குவித்து செய் திறன் பார்த்து
பாராட்டி ஆக்கம் பெறச்செய்வோரே ஆசான்
அருமை சிற்பி அவரே வாழி வாழியவே!
https://encrypted-tbn3.gstatic.com/i...eHV9pQO3cHZDt4
-
வாழியவே பல்லாண்டு காலம் இந்திய கதை கேட்க வந்த நீங்கள் வாழியவே
குறுக்கு வழியை தேடி தேடி நெடுஞ்சாலைகளை பாலையாக்கும் கதை கேட்க வந்தவர்
வாழிய வாழிய வாழிய வாழியவே ஆ ஆ ஆ ஹ அ ஆஹ ஹா
பிறக்கும் போது அழுது பிறப்பான் அடுத்த குழந்தையின் வளம் பார்த்து
முகம் பார்த்து சிரிப்பான் ரூபாய் நோட்டுக்களை காட்டினால் ,
காந்தி படம் என்பான்
தளிர் நடை பயில்வான் அடுத்தவர் பொருள் கவர
பள்ளி செல்வான் அடுத்து கெடுக்க கோள் சொல்லி கொடுக்க
மதிப்பெண் தேடி பிறர் அறிவை பிரதியெடுப்பான்
சமூக சலுகை நாடி சாதியிலும் பொய்யுரைப்பான் பிறர் இடம் கவர்வான்
சலுகை பெற்று வாழ்ந்தாலும் சமூக பொறுப்பற்று வீழ்வான்
பதவி சுகம் தேடல் ஊழல் லஞ்ச வாழ்வுக்காய் மனித சிலைகளுக்கு மாலை
சொச்ச நேரம் நடிகனுக்கு பாலபிஷேகம்
கடவுள் சிலைகளுக்கு மரியாதை களவாடி அந்நிய சந்தைகளில்
பகுத்தறிவு சுயநலவாதிகளுக்கு தேர் வடம் இழுப்பது
சகமனிதன் உயரம் தொட்டால் பொறாமையால் அவன் வீழ்ந்து தன்னிலை வர பிரார்த்தனை
சக மனிதனால் உயரம் கண்டு அவனையே வீழ்த்தும் திறன்
இருபதிலிருந்து அறுபது வரை ஒய்வூதியம் அறுபதிலிருந்து வீட்டிலிருந்து அதையே
ஓஸி என்பது கீதை அதுவே அவன் பாதை
நமது தேசிய தாவரம் புல்லுருவி கொடி
தேசிய மொழி தடுமாறும் கலப்பு மொழி
தேசிய மிருகமாய் சக இந்தியன்
தேசிய நோட்டு அயல்நாட்டு கள்ளம்
தேசிய விளையாட்டு சாதி சண்டை
தேசிய பொழுது போக்கு நதிகளை தடுத்தல்
தேசிய குணம் பல்லிளிப்பு பசப்பு
அன்னியனால் இணைக்க பட்ட ஒட்டு செடியாய் பாரதம்
இந்நாளில் இணைப்பு பெற மேற்சொன்ன அதிசயங்கள்
பாரத மணிக்கொடி வாழ்கவே, கதை கேட்ட நீங்களெல்லாம் வாழியவே
இதுக்கு பிறகும் ஆசையிருந்தால் மானம் துறந்தால் மரியாதை கெட்டு
வாழிய வாழிய வாழிய வாழியவே
-
வாழியவே என் சக மானிடன் வாழ்த்தும் பக்குவம் வந்து சேர்ந்ததே
தாழியை உடைத்தனர் சமூக வெண்ணை திரண்டு வருங்கால்
ஊழியை நோவதில் எப்பயன் கோழியையும் ஆட்டையும் பண்டமாற்றி
நாழிகை பார்க்காமல் நாளோட்டி வந்த உழைக்கும் வேட்டை விவசாயிகள்
பண்டமாற்றாய் மாறியது பணமென்னும் பிண பேய் தங்க மஞ்சள் மாயை
கண்டமாட்டில் பல தெய்வ தூதர்கள் வந்து சாதி மத பேய்களை கண்டு
தண்டமான வீண் போதனைகளால் பிரித்தனர் சக மானுடனை சகதியில் அமிழ்த்தனர்
மண்டையில் ஏற்றினர் மாபெரும் கொலை வெறியை இன மான உணர்வாக
கோயிலும் அரமணையும் அதிகார பூசலுக்காய் இணைய பிணங்க மக்களோ
நாயினும் நலிந்து மிராசுகளின் அடிமைகளாய் உழைப்பை பங்கிட்டது அரசு மதம் மிராசு
நோயினும் கொடிதான நன்னெறி போதனைகள் உண்டி காயினும் களவு ஆகாது
பாயினில் படுத்தால் தூங்கி வாழ்ந்தவன் மிராசுவின் வாயிலில் படுத்து காவலுமாயினர்
அன்னியமானேன் எந்தன் நிலத்துக்காய் எந்தன் உழைப்புக்காய் எந்தன் செல்வத்துக்காய்
அன்னியனானேன் எந்தன் இனத்துக்காய் எந்தன் குலத்துக்காய் கோடரியானேன்
விண்ணிய வனத்துக்கு பெய்யும் வானத்துக்கு நெய்யூரும் ஊற்றுக்கு காற்றுக்கும்
தண்ணிக்கும் வரி போட அரசு துணையாய் நின்றன ஆலயம் ஆண்டவன் ஆக்கிரமிப்பு
புண்ணியத்துக்கும் பாவத்துக்குமே விலை வைத்து விற்பனை கையறு நிலை
பண்ணியதெல்லாம் நானல்ல வினையருப்பது நானே யாரிடம் சொல்ல கதவு பூட்டி
கண்ணியம் துறந்து சகமனித நேசம் துறந்து யந்திரங்களை சோதரமாக்கினேன்
எண்ணியும் காணாத விந்தையாய் மனிதனுக்கு மனிதனே போட்டி இனவழிப்பு
நாணுகிறேன் என்னை கண்டு நான் பூட்டிய ஆடை உண்ணும் உணவு வசிக்கும் இருப்பு
பேணுகிறேன் என்னாலல்ல சக மனித தெய்வ அரை வயிறு உண்ட உழைப்பால்தானே
வேணுமென்ற செல்வம் தந்தால் போகுமோ தெய்வங்களுக்கு சாத்தான்களுக்கே பங்கீடு
காணுகிறேன் கடவுளை கண்ணால் இன்றே அந்தோ அவனுக்கோ எதுவுமில்லை வெறுமை
-
வெறுமை பரவிய சூழல்
கைகூடாமல் போன காதல்
விரக்தி கவ்விய எண்ணம்
நிராகரித்துச் சென்ற காதலன்
கோபம் தெறிக்கும் நினைவு
கொஞ்சிப் பேசிய பொழுதுகள்
விவேகம் கொண்ட உள்ளம்
வீழ்ந்திடாமல் வாழ்ந்து காட்டு
தீர்க்கம் அடைந்த பார்வை
வெறுப்பைச் சுமக்கா வாழ்க்கை
-
வாழ்க்கை சுமக்கா வேட்கை
வழக்கை சுமக்கா மாட்சி
கிழக்கை காணா உறக்கம்
கிழத்தை சுமக்கா மனம்
வேட்கை காணா விவேகம்
மாட்சி வேண்டா சுழற்சி
காட்சி மாறா வேர்கள்
கட்சி மாறா மனத்தூய்மை
-
மனத்தூய்மை கிடைப்பதற்கு என்ன வேண்டும்
..மாறாத நல்லெண்ணம் கொள்ள வேண்டும்
கணப்பொழுதும் களங்கமிலாக் கண்கள் கொண்டு
..க்லகலப்பாய் நெஞ்சுகொளத் தெரிய வேண்டும்
பணவரவு அதிகரிக்கப் பக்கு வங்கள்
..ப்லவாறாய்ச் செலவுவரின் கலங்காத் தன்மை
சுணங்காமல் சிரித்தமுகம் அன்பாய் உள்ளம்
..துவளாமல் இருந்தாலே கிடைக்கும் தானே..
-
தானே முன்வந்து தளராமல் முன்னெடுத்து
தயக்கம் காட்டி பின்தங்கிய கூட்டத்திற்கு
தலைமை தாங்கும் தன்னலமில்லா மனிதன்
தலைமுறை தாண்டியும் போற்றப் படுவான்
வெட்டி வியாக்கியானம் வெளியில் பேசி
வீணே பொழுதுகளை நித்தமும் கழித்து
வெறுமையாய் வாழ்வை நகர்த்தும் மனிதன்
விட்டில் பூச்சாய் வீழ்ந்து மறைவான்
-
மறைவான் மந்திரவாதி மாயமாய்
தெரிவான் மீண்டும் அந்திரமாய் – அவன்
தேர்ந்த செயல்திறனை தந்திரமாய்
தெரிந்து கொள்ள கேட்டான் ஒருவன்
பறைவாய் இம்மன்றத்தில் தெளிவாய்
மறைந்த முறை மறைக்காது பகர்வாய்
சிந்தித்தான் மந்திரவாதி சிறிது நேரம்
செப்புவேன் ஆயின் அதில் சிக்கல் உண்டு
செத்து விடுவாய் நீ அதை கேட்டால் !
சிரித்தது கூட்டம் : சளைத்தானா நம் ஆள்?
சிரித்தான் அச்சமின்றி : சரி சொல்
சீக்கிரமாய் என் மனைவியிடம் மட்டும் !
அமர்ந்தோரின் ஆர்பரிப்பு அமர்க்களம்!
ஆயிரம் குரல் அங்கே அதிர்ந்தது அரங்கம்
என் மனைவிக்கும் ! என் மனைவிக்கும்!
அடாடாடா ! என்ன ஒரு அவசரம் ?
https://encrypted-tbn2.gstatic.com/i...n4vjlUr4Xl3ctA
-
அவசரமாய்ச் சாயம் வாங்கி
மீசை தலையில் பூசி
காய வைத்துச்
சமர்த்தாய்க் குளித்து
தலை துவட்டி
கண்ணாடி பார்த்தால்
சிரித்தது
கண்களின் கீழிருந்த சுருக்கம்..
-
கீழே சுருக்கம் மேலே பொலிவிழப்பு அழகு பெண்ணவள்
தாழே போட்ட கட்டில் துறந்து தொட்டிலின் தாதியானாள்
சூற் சுமந்து தானகன்ற இருள் நிறைந்த கருவறை
பாற் சுமந்து தானளிக்கும் பம்மி நின்ற திருமுலை
அணைப்பாலும் முத்தாடியும் திணறும் மூச்சு
பிணைப்பால் அன்னை ஒருத்தி உருவமே உண்ண உறங்க
தளிர் நடை பயின்று தத்தி தத்தி சம்ஹாரம் பொருட்களை
வெளிர் முக காரியோ சும்மா இருக்காயா என்று செல்ல கடிதல்
பேச்சு என்ற ஒன்று பிக்கா பிக்கா என்று இணையில்லா அமிர்து
காச்சு மூச்சென்ற நவீன கானங்களின் முன்னோடி நினைத்த
நேரம் கழிக்கும் உரிமை உலக சிறார்களுக்கு இந்தியர்களுக்கோ
தாரம் வந்தும் பேரன் கண்டும் பிரத்யேக உரிமை தனியுரிமை
பகுத்தறிந்தேன் பள்ளி கண்டு பல்பங்களில் பண்ட மாற்று
மிகுவியாபார உத்தி ஐஸ்வண்டி ஆளுடன் கடன் வாங்கி
திருப்பாத பிற்கால பாடம் விமலா மீரா கலா என்ற கனவுகள்
கருப்பாக எண்ணங்கள் சக மாணவர்களை அடுத்து கெடுத்து
ஆசானிடன் நற்பெயர் பிற்கால வேலைக்கு இன்றே அடித்தளம்
காசா பணமா வக்கிரங்களுக்கு சிறுநீர் கழிவிடங்களில் சிந்தை
தூண்டும் படம் வரைந்து பாகம் குறித்து பால பார்கலவி கல்வி
வேண்டும் அளவு கிசு கிசு சக மாணவ,மாணவி,ஆசிரிய ஆசிரியை
பிற்கால பத்திரிகையானாய் பரிணமிக்க காப்பி அடிக்கும் கலை
தற்கால உன்னதங்களின் உயர்வுக்கு உதவும் அடிப்படை வலை
மாங்காய் திருடி பெற்றோரின் பையில் களவாடி அரசியல் பயிற்சி
பாங்காய் பயிற்சி பெற்று பலரின் தயவில் வேலை பின்னென்ன
நானும் மணந்தேன் நானும் புணர்ந்தேன் நானும் பெற்றேன்
நானும் வளர்த்தேன் நானும் கண்டேன் வீடுவாசல் நானும் கண்டேன்
பெயரன் பெயர்த்தி நானும் கண்டேன் நாணும் உதாசீனம் முதியோர்
பெயரும் குடில் சாணத்துடன் தகனம் புரியா மொழியில் சொர்க்க விடை
வரும் பிறவியில் இறைவா இதயத்துக்கு எலும்பு கொடு மூளைக்கு
இரும்பில் வலிவு கொடு விசையுறு பந்தாக உளம் வேண்டிய உரம் கொடு
அலைவுகளை விட்டு செல்வேன் சுவடற்று மறையாமல் கனவின்
கலைவுகளை மீட்டு எடுப்பேன் தொலை வாழ்விலும் தொலையாமல்
-
தொலையாமல் இருந்திட்ட காலம் எப்போ
….தொக்கிநிற்கும் வாழ்வினிலே பிறக்கும் கேள்வி
கலைகின்ற கனவுகளும் காட்சி யுந்தான்
…காட்டியதே கூட்டியதே மாயை தன்னை
நிலையான நல்வாழ்வு ஈதா னென்றே
.. நித்தநித்தம் நின்றதுவும் போயே போச்சு
வலையாக வட்டமென இருக்கும் வாழ்வில்
…வாகாக முதுமையது வந்த தன்றோ
இனியொரு பிறவி வேண்டும்
..இறைவனே நானுங் கேட்பேன்
தனியிலை நானு மிங்கு
…தரம்பெறப் பலபேர் உண்டு
பணிவுடன் கனிவை ஏந்தி
…பாரிலே மேலும் நல்ல
பணிகளைச் செய்ய வேண்டும்
…பற்றினேன் உந்தன் பாதம்..
-
பாதம் பற்றினேன் நின் சரண் புகுந்தேன்
பாமரன் பாவி நான் பவித்திரம் அறியேன்
கருமம் அறியேன் ஞானம் அறியேன்
கருணை இல்லேன் பக்தி இல்லேன்
எதுவுமற்றேன் நீயன்றி எவருமற்றேன்
என் கதி நீயே இறைவா !
https://encrypted-tbn2.gstatic.com/i...qQVqFY3co9XNrA
-
இறைவா
மனிதன் படைப்பிலேயே அதிஉன்னத படைப்பு நீ
நிச்சயமற்ற வசீகர வாழ்வில் மன அழுத்த மருந்து நீ
பயமற்றவனையும் அச்சமுற வைக்கும் அற உன்னத காவலன் நீ
பணக்கார வீட்டின் தலைமை காவலன் சேவகனும் நீயே
உன்னத இலக்கியங்கள் சிற்பங்கள் கட்டிடங்கள் உருவாக காரணகர்த்தா நீ
மனிதனை விலங்குகளை அடிமை கொள்ள மனிதனுக்கு நற்றுணை நீ.
மூட பழக்க வழக்கங்களில் நேரத்தை பொழுதாக்கிட போதை பாதை நீ
பாவங்களுக்கு பரிகாரம் எனும் அற மீறல்களுக்கு தலைவன் நீ
நீ படைத்ததாக சொல்லும் சொல்லில் உண்மையிருந்தால் குறை படைப்பாளி நீ
நான் படைத்தவைகளை எனக்கு அந்நியமாக்கும் அபின் நீ
உன்னை நம்புவதே நீ இருப்பினும் இல்லாதிருப்பினும் காப்பானது.
-
காப்பானது என்றேவொரு கவிதைபடித் தீரா
பூப்போலவே பொலிந்தேவிழும் சிரிப்பூவுடன் கேட்க
பேச்சானது புரியும்விதம் பெண்ணேஅறி வாயே
கேட்கும்படி அவரைச்செய வைத்ததும்நான் அறிவாய்
உண்டென்றால் உண்டென்பேன் பெண்ணே என்மேல்
..உளமில்லை என்றாலும் பேத மில்லை
கண்களிலே காண்பதுவும் உண்மை யல்ல
…காதுகளில் விழுவதுவும் உண்மையல்ல
எண்ணத்தில் மலர்வதுவும் உண்மை யல்ல
…ஏதேனும் அனுபவமும் உண்மை யல்ல
விண்ணுக்குள் மண்ணுக்குள் கரையும் வாழ்க்கை
..விசையதுவும் திசையதுவும் தெரியா தன்றோ
மாந்தரின் நெஞ்சி னுள்ளே
.. மாசினை நீக்க அங்கே
வேந்தரோ பிறரோ கொஞ்சம்
..வேட்கையும் கொண்டு என்னை
சேர்ந்துதான் படைத்தா ரென்றே
..தீர்க்கமாய் சிலர்சொல் லட்டும்
நேசமாய் நம்பிக் கைதான்
.. நிஜத்தினில் கடவு ளாகும்..
-
கடவுளாகும் பாத்திரத்தை நம் கருத்திலேற்றும் இதிகாசம்
அடவுகட்டி மேடையேறி கலைக் காட்சிதரும் அவதாரம்
அல்லல்படும் வாழ்க்கையில் அற்புதங்கள் நிகழ்த்து மென
அற்றதை போற்றவைக்கும் ஆத்திகச் சலவைக் கூட்டம்
-
கூட்டத்தில் இடித்துப் பிடித்து
முன்னேறி
கடைசியில் டிக்கட் கிடைத்து
சீட் தேடி அமர்ந்து
வியர்க்க விறுவிறுக்க
எந்த விமர்சனமும் படிக்காமல்
பார்த்து
பின் பத்திரிகையைப் பார்த்து
ஒப்பிட்டுக் கொள்வதன் சுகமே அலாதிதான்..
இதே போல இந்தக் கால இளைஞர்கள்
இன்னும் பல்வருடம் கழிந்தபின்
நினைக்க என்ன இருக்கிறது
என யோசித்தால்
கிடைப்பது கேள்விக்குறி..
-
கேள்விக்குறி
ஏன் ஆச்சர்யக்குறிபோல
திமிராக
நிமிர்ந்து நிற்கவில்லையென
நினைத்தததுண்டு
எதையுமே
யார்மனதும் புண்படாவண்ணம்
ஆழம் அகலம் புரிந்து
விவரமாகக் கேட்டு
விடைக்காக காத்திருக்க
உணர்த்துவதே
அவ்வளைவும் பணிவும்
http://www.yourwebgraphics.com/galle...uestion-01.png
-
பணிவும் துணிவும் துணை நிற்பின்
பதவிகள் பாராட்டுகள் வந்தடையும்
அன்பும் அறனும் துணை நிற்பின்
அகம் புற வாழ்க்கை மேலோங்கும்
விவேகமும் விடாமுயற்சியும் துணை நிற்பின்
வாய்ப்புகள் அனைத்தும் வாகைசூடும்
வாய்மையும் தூய்மையும் துணை நிற்பின்
காய்மையில்லா வார்த்தை வசப்படும்
https://www.quotespick.com/ta/images...%8D-395-75.jpg
-
வசப்படும் வானமே எண்ணத்தில் மட்டும்
கசந்துபோகும் முயற்சிகள் தோல்விகள் கண்டு
வசந்தங்கள் வருமே காலத்திலும் அதுபோன்று
பசுமைகள் திரும்பும் வாழ்விலும் ஆங்கு
நிசத்திலும் வசப்படும் வானம் மனிதனுக்கு.
-
வானம் மனிதனுக்கு சொர்க்க லோகம் அங்கல்லவா
காணும் உறவெல்லாம் கசந்த நாட்களில் நாடும் வீடு
பேணும் கனவெல்லாம் தீர்ந்து மக்கள் சுற்றத்திடம் இரவல்
நாணும் வரை இக்கடன்கள் தீர்க்கவே பெறாமல் சுமை
என்ன வைத்திருக்கிறது பூமியில் மண் பொன் பெண் ஆக்கிரமிப்பு
மண்ணும் பொன்னும் மனிதனுக்கு இதயம் தொடா சேமிப்பு
பெண்ணும் சிக்கலானதில் சக ஆண்களிடத்தும் மோகம்
இன்னும் ஆக்கிரமித்தால் இருக்கவே இருக்கிறது அமெரிக்கா
-
”அமெரிக்கா”
கண்கள் முழுக்கக் கனவோடு
வேலை கிடைத்துச் சென்ற பெண்
கல்யாணமும் கட்டிப்
பின் நான்கு வருடம் கழித்து
திரும்பினாள்..
விவாகரத்தாம்
மனமொன்றவில்லையாம்
என்னடி
என்றால்
கண்ணீருடன் கட்டிப் பிடித்தாள்
யாருமில்லாத நேரத்தில்..
“அம்மா..
உனக்கு முப்பது வருஷமாச்சா
கல்யாணமாகி
எத்தனை கஷ்டம் எத்தனை அவஸ்தை
உன்னை அப்பாவும்
அப்பாவை நீயும்
பரஸ்பரப் படுத்தல்
அழுகை கோபம் துக்கம் இன்பம்
சுவாரஸ்யம் போர்
எல்லாவற்றிலும் சமமாக
இருந்து
ஸ்டில் இட் இஸ் கோயிங்க் ஆன்..
பட் ஆனால்
மேஜர் சுந்தர்ராஜ த் தடுமாற்றம் குரலில்
”வரவே வராதும்மா
இந்தியா போல்..”
-
இந்தியா போல் எங்கும் காணோம்
ஏழை நாட்டில் நடக்காது எதுவும்
எக்கச்சக்க சட்டம் எதற்கும் திட்டம்
ஏமாற்று வேலை பம்மாத்து எல்லாம்
கருப்பு பணம் கையூட்டு கூடவே குப்பை
கொடிய நச்சு சூழல் குடிநீரில் சாக்கடை
கூடும் பணவீக்கம் விவசாயி வேதனை
குண்டும் குழியுமாய் நெடுஞ்சாலை
கொள்ளையர் ஆளும் நொள்ளை நாடிதே
குறை ஒன்றும் இல்லை அவர் பாடுகிறார்
கூசாமல் பொய் கூடையாய் சொல்கிறார்
கோபம் ஆத்திரம் பொத்து கிட்டு வருதே
காரோட்டியின் மனைவி
-----------------------------
எல்லாம் போகட்டும் கதை தேவையில்லை
என்ன சொல்லியும் ஒன்னும் ஆவதில்லை
எதானாலும் சரி! நமக்கு ஒன்னும் பெரிதில்லை
எனது பிரச்னை இப்போ அதுவுமில்லை !
இத்தனை கார் எதுக்கு எங்கு நோக்கினும்?
எப்படி இந்த ஏழை நாடு உருப்படும்?
என்ன கொடுமை இது ? என்ன செய்வோம் ?
இந்த ரோட்டிலே இல்லியே இடம்!
எங்கே காரை நாம் பார்க் பண்ணுவோம்?
ஏதேனும் செய் ! ஆச்சு பார்ட்டிக்கு நேரம் !
http://laugh18.com/wp-content/upload...or-parking.jpg
-
நேரம் நெருங்கிக் கொண்டெ இருக்கு
விடப்போகும் கடைசி மூச்சினை
வீடே நெடுநாட்களாய் எதிர்பார்த்து நிக்குது
தொண்டையிலிருந்து இறங்கவா வேணாமா
போராட்டம் நடத்துது காய்ச்சிய பசும்பால்
கால்மாட்டில் கொள்ளுப்பேரன் பேத்திகள்
தலைமாட்டில் கணவன் மகன் மகள்
வெறிக்குது பார்வை விட்டத்தை நோக்கி
கடைசியாய்...கடைசியாய்..
நினைவுகளில் நிழலாடுகிறான்
கல்லூரிக் காதலன்
-
காதலன் வர காத்திருந்தேன்
கண்ணிமையாமல் பூத்திருந்தேன்
கண்ணன் வந்தான் கண் பொத்தினான்
கை மங் கை பற்றினான் தொற்றினேன்
காணமல் போன கோபம் தேடினேன்
கடிந்தேன் கால தாமதம் ஏனென்றேன்
கண்ணே கடிதாய் காற்றாய் வந்தேன்
காதல் கைகூட பரிசும் கைகூட என்றான்
கள்ளனே பரிசென்ன காட்டு என்றேன்
கபடமாய் சிரித்தான் காட்டேன் என்றான்
கன்னி உன் பெற்றோருக்கு பரிசு முன்னே
கண்டிப்பாய் காதலி உனக்குண்டு பின்னே
காட்டுவேன் பரிசாய் மாப்பிள்ளை நானே
கொண்டு செல் என்னை அவரிடம் தேனே !
குறும்பாய் சிரித்தான் கொஞ்சலாய் தானே
கொள்ளை போனேன் நொடியில் நானே !
https://encrypted-tbn0.gstatic.com/i...LUKwSb3zjZXUXg
* Perhaps this guy will be a parents-in-law pet ! I bet :)
-
Very nice, thanks for sharing!
backgammon live
-
என்னை அலைகழிக்கும்
எல்லா நினைவுகளும்
என்னுள்ளிருந்தெ
எழுகின்றன
அதிர்வுகளாய் நீ
http://www.nasa.gov/centers/jpl/imag...ell-browse.jpg
-
வீணாகும் வெட்டிப் பேச்சுக்கள்
விழலுக்கு இறைத்த நீர்
எதிர்மறை மிகு எண்ணங்கள்
ஏற்றத்தை தடுக்கும் சுவர்
நம்பிக்கை தரும் ஊக்கங்கள்
நலம் பயக்கும் நெம்புகோல்
விடியலை நோக்கும் வேள்விகள்
முடியாததை முடிக்கும் முயற்சி
http://psytreasure.com/wp-content/up...e-thinking.jpg
-
முயற்சிக்கு தடையாய் சகுனங்கள் வாஸ்து பென்சுயி
அயர்ச்சிக்கு விடையும் அறிந்தான் விரைவில் கண்டாங்கு
காலை விரைந்தான் கடமைகள் ஆற்றிட பணி நேர்த்தியுடன்
வேலை முடித்தான் விரைவாக சகுனம் தோன்றிய மூலவர்
மூலையில் தூணில் மறைவில் துரிதம் ஒதுங்கிப் பின்
சாலையில் விரைந்தோடி காணாது இருப்பார் கரந்து
நேர்ந்த நியமம் நிறைவேற்ற மூட தொண்டர்களும்
தேர்ந்தே அலைந்தார் தெருமுழுதும் சோர்ந்தொருவர்
காணா வகையில் கலங்கினார் தன் விரதம் அனுஷ்டம்
கோணா நிறைவு காணா குமைச்சலுடன் வஞ்சமுறு
திட்டங்கள் வகுத்தவனும் முற்றாக வேறே புது கோலம்
சட்டங்கள் காணாமல் முற்றாக வேறு நாடக கோலம் தரித்தான்
கொட்டங்கள் கொண்டாட்டங்கள் இம்முறை வீடு கட்டுவோருக்கு
கட்டடங்கள் ஆப்பிரிக்க பழங்குடி நம்பிக்கை நொட்டங்களுடன்
-
நம்பிக்கை நொட்டங்கள் சொலவடைநிறைந்த நன்னாட்டில்
தும்பிக்கையான் பாதம் தொழுதே துவங்குவோம் நற்செயலை
சம்பளமே சதம் என்று மூட மத்தியவர்க்கமாக வாழாமல்
தம்பலத்தில் இறுதிவரை வாழ இரண்டாம் வழி தேடி முதலிடு
வேண்டாததை வாங்கி குவித்தால் வெட்டி செலவில் திளைத்தால்
வேண்டிய அனைத்தையும் விற்று திங்கும் நிலை செல்வாய்
செலவு போக மீதத்தை சேமிப்பது பண்டைய புராதன சிந்தனை
செலவு செய்ய சேமித்த பின் மிஞ்சியதை அணுகல் புதுமரபு
ஆற்றிலே ஊற்றிலே இறங்கி சுகம் காண ஆழம் காண கால்கள்
மாற்றியே ஒரு காலை மட்டிலும் இறக்கி ஆழம் கண்டு இறங்கு
புரதம் வேண்டி கோழி முட்டை வாங்கி உண்ண வேண்டி வரினும்
விரதம் கொள் அனைத்து முட்டைகளையும் ஒரு சேர வைக்காதே
நேர்மை என்னும் பண்டம் விலை மதிப்பற்ற பரிசாம் அதனையே
ஓர்மையிலும் செல்வமில்லா கடையரிடம் பெற இயலாதே
(முரளி ,warren buffet சம்பாதிப்பது,செலவழிப்பது,சேமிப்பது,அபாய முதலீட்டில் இறங்குவது,முதலீடு செய்வது,எதிர்பார்ப்பு பற்றி வெவ்வேறு காலகட்டங்களில் வெளியிட்ட சிந்தனைகள் தொகுப்பு)
-
இயலாதே கஷ்டம் எனச் சொன்னாலும்
விடமாட்டார் தமிழய்யா
விழுந்து விழுந்து சொல்லித் தருவார்
அப்படியும் ஏறவில்லை
இதனால் என்ன உபயோகம்
என்ற கேள்வி மட்டும் கேலியாய்
எழுந்ததே அன்றி
கற்கவில்லை...
பின்னர் வயதாக ஆக
அயல் நாடு வேலை, தாய்மொழிப் பற்றில்
மற்றவர் வைத்திருக்கும் பற்றில்
வந்த ஆவல்..
ஓரளவு கற்க முடிந்தது ஆர்வத்தால்
ஆனால் வேலையில்
தமிழய்யாவிடம் சொன்னது போல்
இயலாதே சொல்ல முடியவில்லை
செய்யத்தான் வேண்டும்
செய்யவும் செய்தேன்..
காரணம்... வயிறு..
-
வயிறு குலுங்க வெடித்துச் சிரித்தால்
வாழ்நாள் நீடிக்க வாய்ப்புண்டாம்
தொலைக்காட்சியில் தாத்தா ஒருவர்
சிரித்துக்கொண்டே சொன்னார்
சுவற்றில் தொங்கும் தாத்தா
சிரித்து நான் பார்த்ததில்லை
கவலையில் கடைசிவரை நிம்மதியில்லாமல்
உழைப்பு உழைப்பேன ஓடாய்
உழன்றுகொண்டே வாழ்ந்தார்
ஆயுளை நீட்டிக்க உதவும் ஆலோசனையை
அவர் உழைப்பில் வாங்கியதொன்றின் வழி
அவரே பார்த்து உணர நேரமில்லாமல்
அமரராகிவிட்டார்
http://beamingnotes.com/wp-content/u...5f0a50-s51.jpg
-
அமரராகி விட்டார்
நமது இனிய முதலாளி
அவரது ஆன்மா
சாந்தியடைவதாக
இரண்டு நிமிஷம் மெளனமாய்
இருக்கலாம்..
அந்தவெட்டவெளியில்
எல்லா தொழிலாளிகளும்
கூடியிருக்க
மெளனம் மெல்ல மெல்ல
வளர்கையில்
எங்கிருந்தோ காற்று சீறி
மரத்தடிகளின் கீழிருந்த
பழுத்த இலைகளைத் தள்ளி...
கண் திறந்த போது புன்சிரித்து
புதிய ஆரம்பத்திற்கு
சொன்னது “ஹாய்”
-
ஹாய்யாக ஈசிசேரில்
அமர்ந்தபடி நான் விளையாடுவதைப்
பார்த்துக் கொண்டிருப்பார் தாத்தா
என்ன நினைப்பார் எனத் தெரியாது
கண்கள் மட்டும் விழித்திருக்கும்..
பின்
அவர் மரிக்க
ஈஸி சேர் உள்ளே போனது..
கொஞ்ச நாள் அப்பா
பின் அம்மா
ஞாயிறு மதியத்தில் நான்..
முன்னால் ஒரு ஸ்டூல் போட்டு
கால் நீட்டி உறங்கினால்
அப்படி இருக்கும்...
பின் பின்பின்
கொஞ்சம் கொஞ்சமாய்த் தேய
எலாஸ்டிக் முழுவதும் பிய்ந்துவிழ
வேற மாத்தலாமா
வேண்டாம்
மரத்துல வாங்கிடலாம்
இதைத்தூக்கிப்பரணில் போடு
தூரப்போட்டுடலாமாம்மா
வேணாம் தாத்தா நினைவாய்
இருக்கட்டும்..
நல்ல வெய்ட்
எடுத்து மேலே போட
அது விழுந்த இடம் அங்கு
ஒதுங்கி இருந்த
தாத்தாவின் பழைய படம்....
-
படம் எடுத்து களிக்கிறேன்
பூவெல்லாம் புதுசு பாராதது
பகிர்ந்தேன் பார்த்த அழகை
பதிவிட்டேன் உடனே முகநூலில்
பரவசம் நட்புலகமதை ரசிக்கையில்
பாசமகள் வீட்டில் இனிய பொழுது