-
திரு. ஆதிராம்,
எங்கள் அனைவரின் சார்பாகவும் சகோதரர் பம்மலார் அவர்கள் உங்களுக்கு அளித்திருக்கும் பதில், எங்கள் மனநிலையை தெளிவுபடுத்தியிருக்கும் என்று நம்புகிறோம். வயல்வெளி, நான்கு காளைகள், ஒரு சிங்கம், ஒரு நரி கதையை நாங்கள் இரண்டாம் வகுப்பிலேயே படித்திருக்கிறோம்.
சரஸ்வதியிடமே சபதம் போட்ட நாரதரின் பரம ரசிகர்களான எங்களிடமே நாரதர் வேலைக்காண்பிக்க வேண்டாம். பம்மாலாரை தூக்குவது போல, ராகவேந்தர் சார அவர்களையும், வாசுதேவன் அவர்களையும் மட்டம் தட்ட முயலும் உங்கள் குள்ளநரித்தனம் புரியாமல் இல்லை. அதை நாங்கள் அனுமதிக்கப்போவதும் இல்லை. பம்மலார் சரியாகச்சொன்னது போல, இது பலபேர் வடம் பிடித்து இழுக்கும் திருத்தேர். இதில் பதிவுகளை இடும் ஒவ்வொருவரும் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவர்கள்.
சில பக்கங்களுக்கு முன்னால், இங்கு பதிவுகளை அளித்த திரு.தனுசு அவர்களை குறை சொன்னீர்கள். இதெல்லாம் நல்லதுக்கில்லை. நீங்கள் யாரென்பது எங்களால் ஊகிக்க முடிகிறது. உங்கள் அபிமான நடிகரின் திரி மாதக்கணக்கில் தூங்குகிறது. போய் அதை எதாவது செய்து உசுப்ப முடியுமா என்று பாருங்கள்.
-
அன்புள்ள பம்மலார், ராகவேந்தர், வாசுதேவன்.......
'எங்களைப்பொறுத்தவரை நடிகர்திலகத்தின் எல்லாப்படங்களுமே கொண்டாட்டத்துக்கு உரியவையே. எனவே பாலும் பழமும், புதிய பறவை போன்ற ஓகோ என்று ஓடிய படங்களுக்கு மட்டுமல்ல, சாதாரண படங்களுக்கும் கொண்டாட்டத்தில் குறை வைக்க மாட்டோம்' என்று நிரூபிக்கும் வண்ணமாக.......
'செந்தாமரை', 'இரத்தத்திலகம்' மற்றும் அவர் சிறப்பு வேடம் ஏற்றிருந்த 'தாவணிக்கனவுகள்' என்று அடுத்த கொண்டாட்ட வரிசையைத்துவக்கி விட்டீர்கள். வாசுதேவன் அளித்துள்ள இரத்தத்திலகம் நிழற்பட வரிசையும், பம்மலார் அளித்துள்ள செந்தாமரைக்கான பேசும்படம் சிறப்புப்பதிவும் வெகு அருமை.
ராகவேந்தர் சார்,
இங்கு பதியப்படும் அந்நாளைய செய்தித்தாள் விளம்பரங்கள் மற்றும் நிழற்பட வரிசையை வருங்காலத்தில் ஒரே இடத்தில் கிடைப்பதற்கான சேகரிப்பு முயற்சி சூப்பர் ஐடியா.
அங்கு விஸிட் செய்தேன். பம்மலார் மற்றும் வாசுதேவனின் சேகரிப்புகளில் மட்டும் அவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளீர்கள். உங்களது அபார சேமிப்புகளில் உங்கள் பெயரைக்காணோம். ஏன் இந்த அளவுக்கு மீறிய அடக்கம்?. உடனடியாக தங்கள் பெயரையும் பதிப்பிக்க வேண்டும். இது எங்கள் அன்பு வேண்டுகோள். (சில நேரங்களில் வேண்டுகோள்கள் நிராகரிக்கப்படலாம், எனவே இது எங்கள் அன்புக்கட்டளை).
(பம்மலார் அவர்களே, பெங்களூருவில் நடக்கவிருக்கும் 'வசந்த மாளிகை' கோலாகலத்திற்கு வாழ்த்துச்சொல்லியிருந்த தாங்கள், என் பெயரையும் சேர்த்திருந்தீர்கள். நான் இருப்பது கர்நாடக மாநிலத்திலேயே தவிர பெங்களூரில் அல்ல. ரெய்ச்சூர் மாவட்டத்திலுள்ள சிந்தனூர் என்ற நகரத்தில் ஒரு நிறுவனத்தில் இருக்கிறேன். அதனால் சென்னை, பெங்களுர் என எல்லா கொண்டாட்டங்களும் மிஸ்ஸிங்).
-
அன்பு கார்த்திக் சார்,
நன்றிகள் சார். தங்களுடய தூய்மையான பாசமும்,நம்மவர்களை ஒருபோதும் விட்டுக் கொடுக்காத பாங்கும், அபரிமிதமான அன்பும் நெஞ்சை நெகிழச் செய்கின்றன.மாபெரும் ஆலமரமான இந்தத் திரியத் தாங்கும் விழுதுகளாக பெருமைப் பட்டுக் கொண்டு அனைவரும் செவ்வனே அவரவர்கள் பங்கை தங்களால் முடிந்த வரையில் ஆத்ம திருப்தியுடன் செய்து கொண்டிருக்கிறோம். பம்மலார் அவர்கள் கூறுவது போல் நடிகர் திலகத்தைப் போல சிறந்த தலைவர் வேறெந்தத் தொண்டர்களுக்கும் அமைந்ததில்லை. நம்மைப் போல சிறந்த தொண்டர்கள் வேறெந்தத் தலைவருக்கும் அமைந்ததில்லை.இதுதான் உண்மை..இதுதான் நிதர்சனம். உங்கள் அன்புக்கு என் சிரம் தாழ்த்திய நன்றி!
மதிப்பிற்கும் ,மரியாதைக்கும் உரிய அன்பு ராகவேந்தர் சார் விஷயத்தில் உங்கள் அன்புக்கட்டளையை அப்படியே வழிமொழிகிறேன். தன்னடக்கத்தில் தலைசிறந்த பெருந்தகையார் அவர்.
அன்புடன்,
வாசுதேவன்.
-
முந்தானை முடிச்சு மெகா வெற்றிக்குப்பின் 'தாவணிக்கனவுகள்' படத்தின் ஆரமப கட்ட வேலைகளில் இருந்தார் பாக்யராஜ். இதனிடையே அவரது முதல் மனைவி பிரவீனா மறைந்து விட்டதால் அவர் பூர்ணிமாவைத் திருமணம் செய்துகொள்ளப்போகிறார் என்றும், செய்யமாட்டார் என்றும் இருவேறு செய்திகள் உலா வந்துகொண்டிருந்தன.
அந்நேரத்தில் ஒரு பொது விழாவில் கலந்துகொண்டு பேசிய பாக்யராஜ், 'நான் இப்போ இங்கே ஒரு முக்கியமான செய்தியை அறிவிக்கப்போகிறேன்' என்றதும், கூட்டத்தினர் 'பூர்ணிமா, பூர்ணிமா' என்று கத்தினார்கள். உட்னே பாக்கியராஜ், 'அதுவும் இருக்கு, ஆனா இது அதைவிட முக்கியமானது. நான் அடுத்து எடுக்கவிருக்கும் தாவணிக்கனவுகள் படத்தில் எனது பெரிய ஆசை நிறைவேறப்போகிறது. ஆம், அந்தப்படத்தில் நடிகர்திலகம் சிவாஜி சார் நடிக்கப்போகிறார்' என்று பாக்யராஜ் சொன்னதும், அரங்கமே அதிரும் வண்ணம் கைதட்டல் எழுந்தது.
-
Friends, Please Click the links below to view the Invitation of Nadigarthilagam's 84th Birthday function to be held at Trichy on 2nd October 2011
http://4.bp.blogspot.com/-TVcWkucgRQ...e+1%281%29.jpg
http://4.bp.blogspot.com/-XzhrISr6ER...e+2%282%29.jpg
With best regards,
-
thank you raghavendra sir for ur imagination for natraj
-
டியர் வாசுதேவன் சார்,
ரத்த திலகம் திரைக்காவியத்தின் ஒத்தெல்லோ நாடகத்தை பதிவிட்டு நடிகர் திலகத்தின் ரசிகர் திலகமாகி விட்டீர்கள். பாராட்டுக்கள். அதே போல் பல்வேறு பாவனைகளில் நடிகர் திலகத்தின் தோற்றங்கள், தாவணிக் கனவுகள் ஸ்டில்கள், என சூப்பரோ சூப்பர் அமர்க்களப் படுத்தியுள்ளீர்கள். நன்றிகளும் பாராட்டுக்களும்.
டியர் கார்த்திக்,
தங்களுடைய உள்ளன்பு மிக்க வார்த்தைகள் உள்ளத்தில் மகிழ்ச்சி வெள்ளம் பெருக்கெடுத்து வரும் வண்ணம் உள்ளன. நன்றிகள் பல.
தாங்கள் கூறியது போல் அந்தந்த மாத நினைவூட்டல் நெஞ்சிருக்கும் வரை தலைப்பில், விரும்பிய நேரத்தில் பார்க்கும் வண்ணம் அமைக்கப் பட்டது நம் அனைவரின் வசதிக்காகவும் தான். எனவே தங்களைப் போன்ற அனைத்து நண்பர்களுக்கும் அது சௌகரியமாகவும் பயனுள்ளதாகவும் இருந்தால் அதுவே எனக்கு மிகவும் மகிழ்ச்சியூட்டக் கூடியதாக இருக்கும். நண்பர்கள் வாசுதேவன், பம்மலார் மற்றும் அவர்களைப் போன்று எவருடைய படைப்பைப் பயன் படுத்தினாலும் அதனை அங்கே அங்கீகரிப்பது நமது கடமையல்லவா.
அதே போல் நம்முடைய இணைய தளம் சார்பாக இடப் படும் இணைப்புகளுக்கு தனியாக குறிப்பிடுதல் தேவையல்லவே. எனவே தான் அவ்வாறு அமைக்கப் பட்டுள்ளது.
தங்களுடைய அன்பிற்கு நான் என்றென்றும் நன்றி கூறுவதில் தயங்க மாட்டேன்.
டியர் சந்திர சேகர்,
நடிகர் திலகத்தின் புகழ் பாடும் தங்கள் முயற்சிகளுக்கு அடியேனுடைய வாழ்த்துக்கள் என்றுமே உண்டு (தங்களுடைய அணுகுமுறையில் நான் வேறுபட்டாலும்).
டியர் குமரேஷ்,
தங்களுடைய பாராட்டுக்களுக்கு என் உளமார்ந்த நன்றி.
அன்புடன்
-
அன்பு சகோதரி சக்தி பிரபா மற்றும் ராஜேஷ்,
தங்களுடைய வரவு மிகுந்த மன நிறைவையூட்டுகிறது. என்றாலும் எப்போதாவது தோன்றி விட்டு நீண்ட இடைவெளி விடுவது ஏமாற்றமாயுள்ளது. தங்களுடைய பதிவுகளை எதிர்நோக்கும் பலரில் நானும் ஒருவன். எனவே அடிக்கடி தாங்கள் தங்களுடைய கருத்துக்களைப் பகிரந்து கொள்ள வேண்டும் என்பது அடியேனுடைய தாழ்மையான வேண்டுகோள்.
அன்புடன்
-
இரு மேதைகள் திரைக்காவியத்தில் நடிகர் திலகமும் இளைய திலகமும் தோன்றும் காட்சி
http://i872.photobucket.com/albums/a...LCollagefw.jpg
அன்புடன்
-
செல்லுலாய்ட் திலகத்தின் செப்டம்பர் சித்திரங்கள்
தேசிய திலகத்தின் "இரத்தத்திலகம்"
[14.9.1963 - 14.9.2011] : 49வது உதயதினம்
பொன்னுக்கு மேலான பொக்கிஷங்கள்
காவியக்காட்சிகள் : பேசும் படம் : ஜூலை 1963
http://i1094.photobucket.com/albums/.../GEDC4574a.jpg
http://i1094.photobucket.com/albums/.../GEDC4575a.jpg
http://i1094.photobucket.com/albums/.../GEDC4576a.jpg
http://i1094.photobucket.com/albums/.../GEDC4577a.jpg
தொடரும்...
அன்புடன்,
பம்மலார்.
-
அன்பு சகோதரர் ராஜேஷ் அவர்களுக்கும், அன்பு சகோதரி சக்தி பிரபா அவர்களுக்கும், என்னுடைய முதல் வணக்கங்கள். தாங்கள் இருவரும் இந்தத் திரிக்கு மூத்தவர்கள் என்ற முறையில் என்னுடைய பணிவான வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சற்று நீண்ட இடைவெளிக்குப் பிறகு நீங்கள் மறுபடியும் நமது திரிக்கு வந்துள்ளது மிகுந்த மன மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. நம்முடய senior members அனைவரும் தங்கள் இருவரையும் சொல்லொணா மகிழ்ச்சியுடன் வரவேற்பதில் இருந்தே நீங்கள் இத்திரிக்கு ஆற்றியுள்ள பங்கு நன்றாகப் புரிகிறது. நடிகர் திலகத்தின் பேராசியால் பாசமிக்க சகோதர சகோதரிகள் கிடைத்துக் கொண்டே இருப்பதை எண்ணி எண்ணி மனம் களிப்படைகிறது.
நமது' ரசிக வேந்தர்' திரு ராகவேந்திரன் சார் அவர்கள் சொன்னது போல உங்கள் கருத்துக்களின் பதிவுகளை அதிகமாக அதே சமயம் ஆர்வமாக எதிர்பார்க்கிறோம். தங்கள் மறு வருகைக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.
அன்புடன்,
நெய்வேலி வாசுதேவன்.
-
செல்லுலாய்ட் திலகத்தின் செப்டம்பர் சித்திரங்கள்
தேசிய திலகத்தின் "இரத்தத்திலகம்"
[14.9.1963 - 14.9.2011] : 49வது உதயதினம்
பொன்னுக்கு மேலான பொக்கிஷங்கள்
காவியக்காட்சிகள் : பேசும் படம் : ஜூலை 1963 [தொடர்ச்சி...]
http://i1094.photobucket.com/albums/.../GEDC4578a.jpg
http://i1094.photobucket.com/albums/.../GEDC4579a.jpg
http://i1094.photobucket.com/albums/.../GEDC4580a.jpg
http://i1094.photobucket.com/albums/.../GEDC4581a.jpg
தொடரும்...
அன்புடன்,
பம்மலார்.
-
-
-
-
-
நடிகர் திலகத்தின் திரிக்கு வராமல் இருக்கமுடியுமா . கார்த்திக் மற்றும் ராகவேந்தர்
நன்றிகள் பல. இனி அடிக்கடி வருகிறேன். நீங்கள் எல்லோரும் செய்யும் சேவை பாராட்டுக்கும் அப்பாற்பட்டது.
எத்தனை அறிய படங்கள் தகவல்கள் .. அடேயப்பபா .. சொல்லவும் வேண்டுமோ...
-
ஒரு சந்தேகம் . ஒத்தெல்லோ நாடகதில் ஆங்கில வசனம் பேசியது நடிகர் திலகம் அல்ல வேறு ஒரு குரல் என்று நினைக்கிறேன் .. அப்படி அது உண்மை என்றால் ஏன் அப்படி. அவரே நன்றாக ஆங்கிலம் பேசுவாரே.
-
Adiram
all the true fans are blessed by Nadigarthilagam, proud to be a fan of the greatest person
Raghavendra sir
please add janitha vanitha song from Avanthan manithan sir
regards
kumareshanprabhu
-
செல்லுலாய்ட் திலகத்தின் செப்டம்பர் சித்திரங்கள்
தேசிய திலகத்தின் "இரத்தத்திலகம்"
[14.9.1963 - 14.9.2011] : 49வது உதயதினம்
பொன்னுக்கு மேலான பொக்கிஷங்கள்
அரிய நிழற்படம்
http://i1094.photobucket.com/albums/...mmalar/RT2.jpg
முதல் வெளியீட்டு விளம்பரம் : சுதேசமித்ரன் : 14.9.1963
http://i1094.photobucket.com/albums/.../GEDC4582a.jpg
அன்புடன்,
பம்மலார்.
-
செல்லுலாய்ட் திலகத்தின் செப்டம்பர் சித்திரங்கள்
இரு மேதைகள்
[14.9.1984 - 14.9.2011] : 28வது உதயதினம்
பொக்கிஷப் புதையல்
வரலாற்று ஆவணம் : பொம்மை : நவம்பர் 1984
http://i1094.photobucket.com/albums/.../GEDC4585a.jpg
http://i1094.photobucket.com/albums/.../GEDC4587a.jpg
அன்புடன்,
பம்மலார்.
-
செல்லுலாய்ட் திலகத்தின் செப்டம்பர் சித்திரங்கள்
தாவணிக் கனவுகள்
[14.9.1984 - 14.9.2011] : 28வது உதயதினம்
பொக்கிஷப் புதையல்
முதல் வெளியீட்டு விளம்பரம் : Indian Express : 14.9.1984
http://i1094.photobucket.com/albums/.../GEDC4583a.jpg
101வது நாள் விளம்பரம் : தினத்தந்தி : 23.12.1984
http://i1094.photobucket.com/albums/.../GEDC4584a.jpg
அன்புடன்,
பம்மலார்.
-
-
-
-
-
-
டியர் ராகவேந்திரன் சார், உங்கள் வாழ்த்துக்கு நன்றி.
நதிகள் சேருமிடம் கடல் என்பதுபோல - எல்லாப் புகழும் இறைவனுக்கே என்பதுபோல - ஊர் கூடி தேர் இழுப்பது போல - வழிகள், முறைகள் வெவ்வேறாக இருந்தாலும், நாம் அனைவரும் சேர்ந்து நம் நடிகர்திலகத்தின் புகழ் பாடுவோம் - பெருமை சேர்ப்போம்.
இந்தப் பணியில் தங்களின் மேலான சேவையை வணங்கி, மீண்டும் என் நன்றியைக் தங்களுக்குக் காணிக்கையாக்குகிறேன்.
-
-
டியர் சந்திரசேகரன் சார்,
திருச்சியில் நடைபெற உள்ள நடிகர் திலகத்தின் 84-ஆவது பிறந்த நாள் விழா வரலாறு படைக்கும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
அன்புடன்,
வாசுதேவன்.
-
-
வாழ்த்துக்களுக்கு நன்றி திரு.வாசுதேவன் சார் & திரு. குமரேஷ்.
-
பாசமிகு பம்மலார் சார்,
'செந்தாமரை' பேசும் படம் இதழின் அரிய,அற்புதக் காவியக் காட்சிப் பகுதிகளைப் பதிவிட்டு நெஞ்சை கபளீகரம் செய்து விட்டீர்கள். இதுவரை நான் பார்த்திராத ஸ்டில்கள். படத்தின் cd,dvd க்கள் கூட இன்னும் கிடைக்க வில்லை. படம் பார்க்காத குறை மனதை வாட்டிக் கொண்டிருந்தாலும் தாங்கள் பதிவிட்ட ஸ்டில்ஸ் மூலம் அக்குறை ஓரளவிற்கு தீர்ந்தது. அதற்காக என் ஸ்பெஷல் நன்றிகள்.
நடிகர் திலகத்தின் "இரத்தத்திலகம்" காவியத்தின் பேசும் படம் இதழின் காவியக் காட்சிகள் அனைத்தும் காந்தங்கள். எத்தனை விதமான ஸ்டில்கள்! அதி அற்புதம். தேசியக் கொடியை ஒரு கையிலும், துப்பாக்கியை ஒரு கையிலுமாக 'சிக்' கென்ற ராணுவப் போர் உடையில் நம் இதயவேந்தர் வீரத்துடன் நிற்கும் அந்த நிழற் பட போஸ் கோடிப் பொன் கொட்டிக் கொடுத்தாலும் ஈடு இணை ஆகாதது. ஆஹா!.. வைத்த கண் வாங்காமல், இமை கொட்டாமல் வாழ்நாள் முழுதும் பார்த்து பார்த்து ரசித்துக் கொண்டே இருக்கலாம். அதை அள்ளி வழங்கிய உங்களுக்கு காலம் முழுதும் நன்றி சொல்லிக் கொண்டே இருக்கலாம். நன்றி! நன்றி!நன்றி!
'இரு மேதைகள்' பொம்மை ஆவணப் பொக்கிஷம் அருமை. அயன்புரம் சத்திய நாராயணன் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் அளித்திருக்கும் (நான் பார்த்த படம்) இருமேதைகள் விமர்சனம் நடுநிலையானது. இந்தியன் எக்ஸ்பிரஸ் 'தாவணிக் கனவுகள்' முதல் வெளியீட்டு விளம்பரம்,தினத்தந்தி 101வது நாள் விளம்பரம் அனைத்தும் அருமை. ஆதாரங்களை அற்புதமாய் அள்ளித் தரும் அருமைச் சகோதரரே! நீவிர் ஆல் போல் தழைத்து வாழ்க! வாழ்க!
அன்புடன் வாழ்த்தும்,
வாசுதேவன்.
-
vasudevan sir
waiting for some more mails
regards
kumareshanprabhu
-
அன்புள்ள பம்மலார், கிடைத்தற்கரிய ரத்தத்திலகம் பொக்கிஷங்களை வாரி வழங்கிய உங்களுக்கு பாராட்டுக்கள், நன்றிகள் பல.
-
kumaresan sir,
definitely. which date vasantha maligai releasing on ? very eager to know about it.
vasudevan.
-
அன்பு ராகவேந்திரன் சார்,
தங்கள் அன்பு உள்ளத்தித்திற்கும்,பாசப் பாராட்டுக்களுக்கும் பணிவான நன்றிகள் சார்.
இருமேதைகள் collage வடிவிலான நிழற்படம் நெஞ்சில் நிழலாடுகிறது. thank you sir!
உங்கள்
வாசுதேவன்.
-
டியர் சந்திரசேகர்,
நடிகர்திலகம் சிவாஜி சமூக நலப்பேரவை சார்பில், மலைக்கோட்டை மாநகரில் நடைபெற இருக்கும் 'நடிகர்திலகம் பிறந்தநாள் விழா மற்றும் மாணவ மாணவியருக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா' பரிபூரண வெற்றியடைய இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்.
எண்ணத்தாலும் செயலாலும் நடிகர்திலகத்தின் புகழ் பரப்பும் பணியில் நீங்கள் மேற்கொள்ளும் இதுபோன்ற நற்காரியங்கள் அனைத்துக்கும் இறைவனின் அருளும் ஆசியும் பேருதவியும் கிடைக்கப் பிரார்த்திக்கிறோம்.
-
Dear Vasudevan sir
i will defentely tell u the date
-