-
இன்றைய [ 10.03.2013 ] தினம் மறக்க முடியாத நாள். சென்னை நகரில் இப்படி ஓர் அளப்பரையை சமீப காலத்தில் எந்த நடிகரின் படமும் பெற்றிருக்காது என ஆணித்தரமாக அறுதியிட்டுச் சொல்ல வைத்த நாள். சென்னை ஆல்பர்ட்டில் எழுந்த ஆரவாரம் நம் தங்கத் தலைவனாம் நடிகர் திலகத்தை விண்ணுலகில் உசுப்பி எழுப்பி யிருக்கும். வந்திருந்த புதியவர்கள் தங்கள் அனுபவத்தை தாங்கள் பார்த்ததை சொல்ல வேண்டுமென்றால் அவர்கள் தேர்ந்தெடுக்கக் கூடிய ஒரே வார்த்தை
பிரமிப்பு
ஆட்சியில் இருந்தவரில்லை, அதிகாரம் படைத்தவரில்லை, உண்மையைத் தவிர வேறேதும் அறிந்தாரில்லை, இப்படிப் பட்ட ஓர் உன்னத மனிதரை, இறந்து 11 ஆண்டுகளாகியும் மக்கள் இந்த அளவிற்கு வெறித்தனமாக நேசிக்கிறார்கள் என்றால் அது உலகில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மட்டும் தான்.
இன்றைய தினம் ஜனத் திரளில் ஆல்பர்ட் திரையரங்கும் திக்கு முக்காடிப் போனது உண்மை. ஏதோ திருவிழாவிற்கு வருவது போல் மக்கள் வருகையைக் கண்டு பிரமித்துப் போனவர்களில் பலர் என்றாலும் குறிப்பிடத் தக்கவர்
http://www.kalyanamalaimagazine.com/...ndararajan.jpg
வெண்கலக் குரலோன் டி.எம்.சௌந்தர் ராஜன் அவர்கள்.
விரிவான இடுகை தொடரும் முன்,
நாமெல்லாம் இத்திரியில் இணையக் காரணமான முரளி சாரின் திரு முகத்தைப் பார்ப்போமா
http://i1146.photobucket.com/albums/...ps4106636c.jpg
Murali Srinivas எனக் குறிப்பிடப் பட்டிருப்பவர் தான் முரளி சார். அவரை இதுவரை பார்க்காதவர்களுக்காக இந்த அறிமுகம். நடிகர் திலகத்தின் புகழை இம் மய்யத்தின் மூலம் ஊரறியச் செய்யும் அத் திருக்கரங்களை நாம் உணர்ந்திருக்கிறோம். அத் திருமுகத்தைப் பார்க்க வேண்டாமா.
http://i1146.photobucket.com/albums/...ps29f42993.jpg
இன்று நம்முடைய மய்ய நண்பர்கள் திருவாளர்கள் நெய்வேலி வாசுதேவன், சித்தூர் வாசுதேவன், பம்மலார், பார்த்த சாரதி, கிருஷ்ணா ஜி, பால தண்டபாணி, திரு ராதா கிருஷ்ணன் என பெரும்பாலானோர் வந்திருந்தனர். நமது மற்றோர் ஹப்பர் திரு ராமஜெயம் அவர்களும் வந்திருந்தார்.
அளப்பரை கூட்டம் அலங்காரம் போன்ற அனைத்தையும் பற்றித் தொடரும் பதிவுகளில் பார்ப்போம். ஆனால் அதற்கெல்லாம் அடையாளச் சின்னமாக விளங்கும் இந் நிழற்படத்தைப் பார்ப்போமா .. பக்கம் பக்கமாய் நாம் எழுத எண்ணுவதை இப்படம் ஒன்றே விளக்கிடுமே.
http://i1146.photobucket.com/albums/...ps57e1f679.jpg
-
இன்று மாலை கிட்டத்தட்ட 1150 இருக்கைகள் அமைந்துள்ள ஆல்பர்ட் திரையரங்கம் அரங்கு நிறைந்து டிக்கெட்டுகள் ப்ளாக்கில் 200 ரூபாய்க்கு விற்கப்பட்டன என்றால் கூட்டத்தை புரிந்துக் கொள்ளலாம். மதியக்காட்சிக்கும் கிட்டத்தட்ட 1000 பேர் வருகை புரிந்திருக்கின்றனர். PVR அரங்கம் ஹவுஸ்புல். மாலைக் காட்சி ஓடிய னைத்து அரங்குகளிலுமே சரியான கூட்டம்.
மதுரையில் மூன்று திரையரங்குகளிலும் சரியான கூட்டம் என்று தகவல். இதில் குறிப்பிடத்தக்க செய்தி என்னவென்றால் மதுரையின் வேறு எந்த திரையரங்குகளிலும் இன்று மாலை காட்சிக்கு ஆட்களே இல்லாத சூழலாம். ஓடுகின்ற படங்கள் சரியில்லை என்பதாலும் இன்றைய தினம் சிவராத்திரி என்பதாலும் இந்த நிலைமை. அரங்குகளில் மக்கள் வெள்ளம் அலைமோதியது மாளிகைக்கு மட்டுமே!
கோவை அர்ச்சனாவில் இன்று மாலையும் ஏராளமான மக்கள் வந்திருக்கிறார்கள் காவேரி திரையரங்கிற்கும் கணிசமான கூட்டம் வந்திருக்கிறது.
திருச்சி சோனா அரங்கில் மாலைக் காட்சிக்கு நல்ல response என்று தகவல்!
மொத்தத்தில் இன்றைய தினம் தமிழகமெங்கும் வசந்த மாளிகை தினமாக கழிந்தது என்றே சொல்லலாம்!
அன்புடன்
-
நடிகர்திலகம் படத்தில் அவர் திறமை பளிச்சென இருக்கும், ஆனால் வசூல் அவ்வளவு இல்லை என ஏகடியம் பேசுவோருக்குப் பதிலடிச் சான்றுகள் பரிமாறும் அன்பு ராகவேந்திரா, முரளி அவர்களுக்கும், ஆல்பர்ட் வாசலில் கூடிய அன்பு இதயங்கள் பம்மலார், நெய்வேலியார், சித்தூரார், ''பார்த்த'' சாரதி, கிருஷ்ணாஜி, ராமஜெயம், ராதாகிருஷ்ணன், பால தண்டபாணி அனைவருக்கும் என் அன்பு..
சூரியன் வெறும் பிரகாசமாய் மட்டுமே இருக்கும், சுடாது எனச் சொல்லும் வீணர் வாய்கள் இவ்வெற்றி வெப்பத்தில் வெந்து மௌனமாகட்டும்!
-
Vasantha Maligai re-released in Sydney too
-
Vasantha Maligai re-released in Sydney too
-
சதீஷ் சார்,
சிட்னியில் one man show வாக அட்டகாசமாக மாளிகையைத் திறந்து வைத்துக் கொண்டாடி விட்டீர்கள். ஆனால் நீங்கள் அங்கு இல்லையே... நீங்கள் இங்கு தானே இருந்தீர்கள் ... நீங்கள் திரும்பிய திசையெல்லாம் அவர் திருவுருவம் தானே காட்சியளித்தது ... உங்கள் உடல் மட்டும் அங்கே .. உள்ளமோ இங்கே ..
சென்னை ஆல்பர்ட் தியேட்டரின்
உள்ளே சென்று பாருங்கள் .. அங்கு தான் நீங்களும் இருக்கிறீர்கள் .. தங்கள் இதயமும் இருக்கிறது ...
-
Quote:
Originally Posted by
RAGHAVENDRA
சென்னை ஆல்பர்ட் தியேட்டரின்
உள்ளே சென்று பாருங்கள் .. அங்கு தான் நீங்களும் இருக்கிறீர்கள் .. தங்கள் இதயமும் இருக்கிறது ...
It would have been a great treat to watch VM in Chennai Albert theatre or at Madurai Sugapriya theatre.
Cheers,
Sathish
-
ஆனந்த் கண்ட ஆல்பர்ட் அமர்க்களங்கள்
பிரம்மாண்ட பேனருக்கு பெங்களூரு ரசிகர்கள் கொண்டு வந்த மாலைகளை சாற்றப் பணியாற்றும் ரசிகர்கள்
http://i1146.photobucket.com/albums/...ps73b3afca.jpg
வந்திருந்த மக்கள் திரளில் ஒரு பகுதி
http://i1146.photobucket.com/albums/...ps712373a7.jpg
இன்னொரு பகுதி
http://i1146.photobucket.com/albums/...ps73fd062e.jpg
மாலைகளை சாற்றும் பணி - அருகாமைத் தோற்றம்
http://i1146.photobucket.com/albums/...ps0004a535.jpg
மாலைகளை சாற்றும் பணி - தொடர்ச்சி
http://i1146.photobucket.com/albums/...ps78c26bb3.jpg
மக்கள் திரளில் மற்றோர் பகுதி
http://i1146.photobucket.com/albums/...ps8c91cf4f.jpg
நாங்களென்ன சளைத்தவர்களா ... நடிகர் திலகம் படமென்றால் நாங்கள் வீட்டிலா கிடப்போம், எங்கள் அண்ணனின் படமாயிற்றே என சொல்லாமல் சொல்லும் மகளிர்
http://i1146.photobucket.com/albums/...ps8b81fe3d.jpg
சோனியா வாய்ஸ் வசந்த மாளிகை சிறப்பு மலர் வெளியீடு - உயர்த்திப் பிடிப்பவர்கள் சோனியா வாய்ஸ் ஆசிரியர் திரு நவாஸ் - கண்ணாடி அணிந்திருப்பவர் இடது புறம், மற்றும் திரு ரவீந்திரன், பெங்களூரு சிவாஜி ரசிகர் மன்ற நிர்வாகி, நடுவில் மலரைப் பிடித்திருப்பவர் திரு எம்.எல். கான், நவாஸூக்கு மேல் நிற்பவர் திரு சி.எஸ்.குமார், ஆரஞ்சு வண்ண சட்டை அணிந்து மைக்கில் பேசுபவர் அகில இந்திய சிவாஜி ரசிகர் மன்ற முன்னாள் நிர்வாகி திரு கொண்டல் தாசன்
http://i1146.photobucket.com/albums/...ps046101e2.jpg
http://i1146.photobucket.com/albums/...pscdb62ed8.jpg
-
ஆனந்த் கண்ட ஆல்பர்ட் அமர்க்களங்கள் .. தொடர்ச்சி
பெங்களூரு ரசிகர் ரவீந்திரன் மலரை உயர்த்திப் பிடித்து நிழற்படத்திற்காக போஸ் கொடுக்கும் காட்சி
http://i1146.photobucket.com/albums/...ps935bd752.jpg
மக்கள் திரளின் இன்னோர் பகுதி
http://i1146.photobucket.com/albums/...ps89aa1032.jpg
திருநெல்வேலி ரசிகர் முத்துக்குமார் பூசணிக்காயை வைத்து திருஷ்டி சுற்றக் காத்திருக்கிறார்
http://i1146.photobucket.com/albums/...ps9d174dae.jpg
வாசலில் ஒரு தோற்றம்
http://i1146.photobucket.com/albums/...ps2a93e221.jpg
மற்றோர் வாசலில் ஒரு தோற்றம்
http://i1146.photobucket.com/albums/...ps444d547f.jpg
சாத்துக்குடி மாலை சாற்றப் படும் தோற்றம்
http://i1146.photobucket.com/albums/...psfc960803.jpg
-
கட்-அவுட் கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தியது நடிகர் திலக ரசிகர்கள்தானா?