-
இனிய நண்பர் திரு ரவி சார்
இன்ப அதிர்ச்சி கொடுத்து விட்டீர்கள் . மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியின் பதிவாளர்கள் சார்பில் முதலில் எங்களின் அன்பான வாழ்த்துக்களையும் வரவேற்பையும் ஏற்று கொள்ளவும் . படகோட்டி பட பாடல் அலசல் மிகவும் பிரமாதம்
தொடர்ந்து உங்கள் பதிவுகளை வழங்கி அசத்துங்கள் . உங்கள பதிவில் எந்த பிழையும் இல்லை .தொடருங்கள் நண்பரே .
-
என்றும் என் மதிப்புக்குரிய திரு எஸ்வீ வினோத் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். ஊக்கமும் ஆக்கமும் தரும் நோக்கமே தங்களின் பதிவு என்னிடத்தில் ஏற்படுத்தும் தாக்கம். அலைகடலான தங்களின் ஆர்ப்பரிக்கும் மக்கள்திலகம் புகழார்வலப் பதிவின்முன் சக நடிகர்த்திலகப் புகழார்வலர்களின் சிந்தனை சீற்றங்களின் முன் என் பதிவுகள் அசைந்தாடும் சிறு தோணி அளவே. பதிவுத் திமிங்கிலங்களின் முன் நான் ஒரு சிறு மீனாகவே உணருகிறேன். நன்றிகள்.
வாழ்வின் அடிப்படையை ,வந்தவழி மறவாமல் நன்றியுடைமையை ,சோர்வடையாது மனம் தெளிந்திடும் நம்பிக்கை துளிர்த்திடும் ஆதார வரிகளை திரையுலக மூவேந்தர்களின் பங்களிப்பில்....
https://www.youtube.com/watch?v=lfSZQns0zgE
https://www.youtube.com/watch?v=DmhN74ky5Vs
https://www.youtube.com/watch?v=wmjEXNFNupM
-
இனிய நண்பர் திரு செந்தில்
உங்கள் பதில் மிகவும் மகிழ்ச்சி தந்தது . நீங்கள் அளித்துள்ள முக்கனி பாடல்கள் என்றென்றும்மறக்க முடியாத பாடல் . மிக்க நன்றி .
இனிய நண்பர் திரு லோகநாதன் சார்
சிரித்து வாழ வேண்டும் - மற்றும் நீதியரசரின் கட்டுரை பதிவுகள் அருமை .
இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் சார்
கோவை நகர மக்கள் திலகம் ரசிகர்கள் கொடுத்து வைத்தவர்கள் . 40 ஆண்டுகள் முன் வெளிவந்தசிரித்து வாழ வேண்டும் படத்தின் பாடலை நேற்றய வெளியான 40 வது நிறைவு நாளில் கோவையில் டிரைலெர் காண்பிக்கப்பட்டது மிக்க மகிழ்ச்சி . கொடுத்து வைத்தவர்கள் ..
-
டிசம்பர் மாதத்தில் வெளியான மக்கள் திலகத்தின் படங்கள் .
1. பிரஹலாதா 12.12.1939
2. ரத்னகுமார் 15.12.1949
3.தாய் மகளுக்கு கட்டிய தாலி - 31.12.1959.
4.தாயின் மடியில் 18.12.1964.
5. ஆசைமுகம் 10.12.1965
6.பெற்றால்தான் பிள்ளையா 9.12.1966.
7. ஒரு தாய் மக்கள் 9.12.1971.
-
Thanks to MGR Kamal Raj, Malaysia
http://i59.tinypic.com/15s2zpe.jpg
-
பெங்களூர் நகர எம்ஜிஆர் மன்றங்கள் சார்பாக முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் [ காந்தி நகர் தொகுதி ] திரு முனியப்பா அவர்கள் தலைமயில் கன்னட ராஜ்யோத்சவா விழா நேற்று மாலைகாந்தி பவனில் சிறப்பாக நடைபெற்றது .கன்னட இலக்கியவாதியும் சுதந்திர தியாகியுமான திரு ஸ்ரீனிவாசா , அவர்களை கவுரவித்து பாராட்டு விழா நடத்தப்பட்டது .விழாவில் பல்வேறு எம்ஜிஆர்மன்ற அமைப்பு நண்பர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள் .
-
-
-
-