இன்றைய தின இதழ் தினசரியில் வெளியான செய்தி
http://i57.tinypic.com/24ezuj5.jpg
Printable View
இன்றைய தின இதழ் தினசரியில் வெளியான செய்தி
http://i57.tinypic.com/24ezuj5.jpg
http://i57.tinypic.com/2m5jsw7.jpg
சாதாரண மனிதர்களை இறைவன் 40 நாட்களில் படைக்கிறான். தீர்க்க தரிசிகளையும், மனித குல மாணிக்கங்களையும் படைக்க 400 ஆண்டுகள் எடுத்துகொள்கிறான். வேதம் சொல்லும் இந்த வார்த்தைப்படி பார்த்தால் இன்னொரு பொன்மனச்செம்மலைப் பார்க்க மனித குலம் 400 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.
அருமையான வேத வாக்கியம். பதிவிற்கு நன்றி திரு. லோகநாதன் சார்
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
தமிழை அழகாக உச்சரித்துப் பேசும் நடிகைகளில் எம்.என். இராஜமும் ஒருவர். இவரது தமிழ் உரையாடல் உச்சரிப்பு கணீரென்று மிகத் தெளிவாக இருக்கும். நீண்ட ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, சந்தித்த போது, எம்.ஜி.ஆர். இவரிடம், " படங்களில் இன்னும் நடிக்கிறயா?" என்று கேட்டதற்கு இவர், "இல்லை" என்று சொல்லியிருக்கிறார். உடனே எம்.ஜி.ஆர்., " நீ சும்மா இருக்கலாம்; ஆனால், உன்னோட தமிழ் சும்மா இருக்கக் கூடாது" என்று கூறிவிட்டு, தமிழ் நாடு அரசின் மண்டலச் செய்திப் பிரிவில் இவரது குரலுக்கு இடமளித்திருக்கிறார். அந்த அளவிற்கு இவரது தமிழ்ப் பேச்சுப் பிரசித்தம்! மகாதேவி படத்தில் இவருக்காகவே ஒரு காட்சியில் அருமையான உரைநடை எழுதினார், கண்ணதாசன். அந்தக் காட்சிதான் இங்கே!
https://www.youtube.com/watch?v=vFGks8N7Mxs
Mahaadevi -- M N Raajam dialogue scene
. [Disclaimer: This video clip is posted for viewing pleasure and as an archive for good old Tamil songs. By this I do not wish to violate any copyright owne...
YOUTUBE.COM
நம் இதய தெய்வம், உலகத்தமிழர்களின் உன்னதமான ஒரே உண்மைத்தலைவர் பாரத ரத்னா டாக்டர் புரட்சிதலைவர் எம். ஜி. ஆர். அவர்கள் நிறுவிய கட்சியின் ஆரம்ப காலத்து உறுப்பினரும், அவரது காலத்தில் சென்னை மாநகராட்சியின் அப்போதைய 110 வது வட்ட அமைப்பாளராக இருந்தவருமான திரு. ஏழுமலை அவர்கள் . அனைத்துலக எம் . ஜி. ஆர். பொது நல சங்கம் ஆற்றி வரும் பணிகளையும், செயல்பாடுகளையும் கேள்விப்பட்டு, இன்று, எனது இல்லம் தேடி வந்து பாராட்டுக்களையும் , வாழ்த்துக்களையும் தெரிவித்தார். அவரை நன்றியுடன் வணங்கினேன். கட்சி வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்து , பல அமைச்சர்களை வைத்து பிரம்மாண்டமான கூட்டம் நடத்தியவர். புரட்சித்தலைவரின் புகழ் பாடுவதை மட்டுமே தனது குறிக்கோளாக கொண்டு இன்றும் செயல் பட்டு வருகிறார்.
திரு. ச. ஏழுமலை அவர்கலின் சொந்த ஊர் திருக்கழுகுன்றம். நமது பொன்மனச்செம்மலின் காவியம் "சபாஷ் மாப்பிள்ளே" சென்னை ராம் திரையரங்கில் வெளியானபோது, திருக்கழுகுன்றத்திலிருந்து நடந்தே வந்து, பார்த்து விட்டு சென்றார்.
நம் மக்கள் திலகத்துடனான தனது இனிய அனு ப வங்களையும், நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார். சில சம்பவங்களை நெகிழ்ச்சியுடன் கூறி, கண் கலங்கினார். அவரது புகைப்பட சேகரிப்புகளிலிருந்து சில காட்சிகள், திரி அன்பர்கள் பார்வைக்கு :
,http://i58.tinypic.com/dms8yv.jpg